அத்தியாயம் -1
நிலவுக்காதலனை பிரிய முடியாமல், பூமி தத்தளித்து கொண்டிருந்த, அதிகாலை வேளை.தன் ஒளி கிரகணங்களை பாய்ச்சி, இருளை விரட்ட, போராடி கொண்டிருந்தான் கதிரவன்.பனியில் குளித்து, சிலிர்த்திருந்த பறவைகள், உணவு தேடி,தன் குஞ்சுகளுக்கு இரை தேடி உற்சாகத்துடன் பறக்க ஆரம்பித்தன.
அவை எழுப்பிய ஒலி, கேட்பவருக்கு, உற்சாகம் தருவதாய் இருந்தது.
எங்கு நோக்கிலும், பச்சை பசேல் என்று காணப்படும், வயல்வெளிகளும்,வெள்ளேந்தி மனிதர்களையும் கொண்ட துறையூர்.
கிராமம் என்றும், நகரம் என்றும் பிரித்தறிய முடியாத, வளர்ந்து வரும் நகரம் என்று கூறப்படும் நகரம்.திருச்சி மாவட்டத்தில் இருக்கும் நகரம்.திருச்சியில் இருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
அங்கு உள்ள ஒரு வீட்டில் இந்த நேரத்திலும் பரபரப்பு காணப்பட்டது.அந்த வீட்டின் தலைவி மீனாட்சி அடுப்பங்கரைக்கும்,வீட்டின் வாசலுக்கும், பின் புறதுக்கும் அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்தார்.அவ்வப்பொழுது தங்கள் மகளின் படுக்கையறையையும் பார்த்து கட்டளை பிறப்பிக்க தவறவில்லை.
இன்று அவர்கள் மகளை பெண் பார்க்க வருகிறார்கள்.யாராயிருந்தாலும் தோன்றும் பதட்டம் அவரையும் விட்டு வைக்கவில்லை.எல்லாம் நல்ல படியாக முடிய வேண்டுமே என்ற வேண்டுதலுடன்,சமையலறையில் பலகாரங்கள் தயாராகி விட்டதா என்று பார்க்க சென்றார்.வாசலை அடைத்து கோலமிட்டு, வீட்டிற்கு வெள்ளை அடித்து, அலங்கார தோரணங்களுடன், மங்களகரமாக காட்சி அளித்தது வீடு.
அவர்கள் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். மீனாட்சியின் கணவர் கேசவன்.ஒரு மளிகை கடை வைத்திருந்கிறார்.அந்த ஊருக்கு சற்று பெரிய கடையே.பெரும்பாலானோர் அங்கு தான் பொருள் வாங்குவார்கள்.தரமும்,விலையும் நியாயமாக இருக்கும்.அதனாலேயே சிறிய கடையாய் ஆரம்பித்தது, இன்று பெரியகடையாய் வளர்ந்திருந்தது.அவரது முப்பது வருட உழைப்பு அந்த கடை.அவர் தந்தை விவசாயம் தான் பார்த்து வந்தார்.இவருக்கு அதில் சற்று நாட்டம் இல்லாததால், அங்கே விளைவிக்கும் பொருள் கொண்டு ,மளிகை கடை ஆரம்பித்து ஈடுபாட்டுடன் உழைத்து முன்னேறினார். தந்தையின் மறைவுக்கு பிறகு தற்போது நிலத்தை குத்தகைக்கு விட்டுவிட்டு கடையை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
அவருக்கு மிக பெரிய குறை, ஒரு ஆண் மகவு இல்லாதது தான். பெரும்பான்மையானவர்கள் போல ஆண் மகவுக்கு தவமிருந்து கிடைக்க பெறாத வரமாய் போனதால் மனதை தேற்றிக்கொண்டு தன் இரு பெண்களையும் வளர்த்து வருகிறார்.
மூத்தவள் பிறந்த போது கூட மனதை தேற்றிக்கொண்டார்.அடுத்ததும் பெண்ணாய் பிறக்கவே மனம் நொந்தவரை அவர் அன்னை தான் தேற்றினார்.இளையவள் அவர் அம்மா மாதிரி.முகத்தில் சற்று தெய்விக களை பொருந்திய அழகிய முகம்.மனதை தேற்றினாலும் அவ்வப்போது அந்த குறை எட்டி பார்க்கும்.மீனாட்சி அவருக்கு அடங்கிய மனைவி.கணவன் சொல்லே மந்திரம் என்று வாழ்பவர்.கணவன் கிழித்த கோட்டை தாண்ட மாட்டார்.சுருக்கமாக சொன்னால் கலியுக வாசுகி.
அவரின் மூத்த மகளை தான் தற்போது பெண் பார்க்க வருகிறார்கள்.
மூத்தவள் ஆர்த்தி,இளையவள் திவ்யகீர்த்தி. மூத்தவள் அவர் சொல்படி என்ஜினியரிங் முடித்து விட்டு திருச்சியில் ஒரு கார்பொரேட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறாள்.இளையவளுக்கு படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை.அதற்காக மக்கு இல்லை.பாஸ் செய்து விடுவாள்.அதனால் பேருக்கு ஒரு டிகிரி வாங்கிவிட்டு,படிப்பு முடிந்த, இந்த மூன்று மாத காலத்தில் வேலை தேடுகிறேன் என்று பொழுதுபோக்கி கொண்டிருக்கிறாள்.
இரண்டும் பெண் என்பதால் கேசவன் மகள்களிடம் கடுமையாகவே இருப்பார்.தாவணி,சேலை,சுடிதார் தவிர வேறு உடை அணிய கூடாது.இரவில், அதுவும் அவர்கள் அறையில் மட்டுமே நையிட்டி அணிய வேண்டும்.காலை அறையை விட்டு வருகையில் வேறு உடை மாற்றி இருக்க வேண்டும்.வீட்டிற்கு உறவினர் வந்தால்,வரவேற்று விட்டு உள்ளே சென்று விட வேண்டும்.அந்நியர் வந்தால் சொல்லவே வேண்டாம், வெளியே அனாவசியமாய் வர கூடாது.வந்தால் அவர் பார்வையே இவர்களை பொசுக்கி விடும்.இரண்டு பெண்களும் அம்மாவிடம் மட்டுமே வாயாடுவார்கள்.அப்பாவை பார்த்தால் மூச்சு சத்தம் கூட மெதுவாய் தான் கேட்கும்.இவ்ளோ கட்டுக்கோப்பாய் இருப்பவர் மூத்தவள் வேலைக்கு செல்ல சம்மதித்ததே பெருமைக்கு தான். என்ஜினீயர் படித்திருக்கிறாள் என் பெண் என்று உறவினரிடம் பெருமை பாராட்ட. இளையவளுக்கு படிப்பு சுமார் என்றாலும் வேலைக்கு சென்றால்,.அதை வைத்து பெருமை பட்டு கொள்ளலாம் என்று தான் அவள் வேலை தேட அனுமதித்ததே.ஆனால் அவள் படிப்புக்கு சொல்லிக்கொள்ளும் அளவு வேலை கிடைக்கவில்லை.
அவரது இளைய மகள் அவருக்கு வைத்த பெயர் ஹிட்லர்.இதுவரை அவருக்கு மட்டும் தெரியாது.
தன் அறையில் தயாராகி கொண்டிருந்த ஆர்த்திக்கு,உதவி கொண்டிருந்தாள் கீர்த்தி.அப்படியே அவளும் கொஞ்சம் பட்டி, டிங்கரிங் எல்லாம் தனக்கும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"ஏய்,பொண்ணு பார்க்க வாரது என்னையா, உன்னையா??எதுக்குடி இவ்ளோ மேக்கப்"
"ஒரு வேளை மாப்பிள்ளைக்கு, என்னை பிடிச்சுட்டா? அதான். இந்த புலி கூண்டுல இருந்து தப்பிச்சுடலாம் பாரு."
"ஹ்ம்ம்…ஆசை தான்.."
"ஆசை யாரை விட்டது.இந்த அம்மா வேற உன்னை பொண்ணு பார்த்துட்டு போற வரை வெளிய வரகூடாதாம்.யாரு கண்ணுலயும் பட கூடாதாம் ஏகப்பட்ட கண்டிஷன்.ஹிட்லர் கூட சேர்ந்து,சேர்ந்து அதுவும் மாறிட்டே வருது."
மீனாட்சிக்கு இளையமகளின் அழகை நினைத்து பயம்.மூத்தவளும் அழகென்றாலும் அவளுக்கு நீள் வட்ட முகம்.சுருட்டை முடி.சற்று ஒல்லியான உடல்வாகு.மூத்தவள் அவரை போல.இளையவள் தன் மாமியார் போல, உருண்டை முகம்,இடை தாண்டிய கூந்தல்,துறுதுறு கண்கள்,ஓயாமல் பேசும் வாய். ஏதும் வம்பை இழுத்து வந்துவிடுவாளோ என்று அஞ்சி அவளை பள்ளியில் இருந்து கல்லூரி வரை பெண்கள் மட்டும் படிக்கும் இடத்திலேயே சேர்த்தார்கள்.மூத்தவள் பொறுப்பானவள், சொல் பேச்சு கேட்டு அதன் படி நடப்பாள். இவளும் அப்படி தான், சில நேரம் இவள் செய்வதை யூகிக்க முடியாது.இருவருக்கும் மூன்று ஆண்டு இடைவெளி.முத்தவளுக்கு படித்ததும் வேலை கிடைத்து, இரண்டு வருடங்களாக வேலைக்கு சென்று வருகிறாள்.வெளியூர் என்றால், கேசவன் அனுமதித்திருக்கவே மாட்டார்.திருச்சியில் என்றதும் தினமும் பேருந்தில் போய் வரட்டும் என்று அனுமதி கொடுத்திருக்கிறார்.ஒன்னே கால் மணி நேர பயணம் தான் இங்கிருந்து.
இப்பொழுது பெண் பார்க்க வருபவர்கள் சற்று பெரிய இடம்.இவர்களை விட.அப்பர் மிடில் கிளாஸ்.ஜாதக பொருத்தம் இருப்பதால் மட்டுமே, இங்கு பெண் எடுக்க வருகிறார்கள்.அதனால் இவ்விடம் அமைந்து விட வேண்டுமென்று முனைப்பாய் இருந்தார் கேசவன்.
மாடியில் இருந்த தங்கள் அறையின் ஜன்னலில், நிமிடத்திற்கு ஒரு முறை எட்டி பார்த்து கொண்டிருந்தாள் கீர்த்தி.அது, வாசலில் யார் வருகிறார்கள் என்று பார்க்கும் அமைப்போடு இருக்கும்.
"ஏண்டி, குட்டி போட்ட பூனை மாறி அலையுற??"
"குட்டி போட்ட பூனை அசதில படுத்துருக்குமா, அலையுமா??எல்லாரும் சொல்லுறாங்கன்னு சொல்லாத.எனக்கே மாப்பிள்ளை எப்படி இருப்பாரோனு படபடங்குது.போட்டோல இருந்த மாறி இருந்தா ஓகே .இல்லைனா, என்ன பண்ணுறதுன்னு டென்சன்ல இருக்கேன்.நீ வேற"
"அடிக்கடி நீ ஒன்னை மறந்துடுற.பொண்ணு பார்க்க வாரது என்னைய. நானே கவலை பாடலை நீ ஏண்டி ஓவர் சீன் போடுற"
"ச்சு…"
என்று ஒரு உச்சுக்கொட்டலில் அவளை அலட்சியம் செய்த கீர்த்தி.
ஜன்னலுக்கும், ஆர்த்தி இருக்கும் இடத்திற்கு அலைவதை விடவில்லை.
அலங்காரம் முடித்த ஆர்த்தி,கையில் ஒரு கதை புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.
"உனக்கு கொஞ்சம் கூட பதட்டம் இல்லியா??இவ்ளோ கூல் அஹ் புக் படிக்குற"
"எதுக்கு பதட்டம் அவரு எனக்குன்னு இருந்தா, எனக்கு தான்"
"சும்மா தத்துவம் எல்லாம் பேசாத.எனக்கு செம்ம பசி.ஒரு பலகாரத்தையும் மம்மி கண்ணுல காட்ட மாட்டேங்குது.இந்த மாப்பிள்ளையும் காணும்"
நகத்தை கடித்து துப்பினாள் கீர்த்தி.
"நகம் கடிக்காதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.பசிச்சா போய் சாப்பிட்டு வா. அம்மா ஏதும் சொல்ல மாட்டாங்க."
"இல்ல,இல்ல நான் போகலை.மாப்பிள்ளையை மிஸ் பண்ணிட கூடாது."
தலையில் அடித்துக்கொண்டு தன் படிக்கும் வேலையை தொடர்ந்தாள் ஆர்த்தி.
சிறிது நேரத்தில்,
"ஏய்,கார் வந்துடுச்சு.."
கீர்த்தியின் உற்சாக குரலில், ஆர்த்தியும் எழுந்து ஜன்னல் அருகே சென்றாள். அவளுக்கு வழி விடாமல் இவளே மறைத்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.அவள் பின்புறம் இருந்து எட்டி,எட்டி பார்த்தாள் ஆர்த்தி.
"நம்ம வீட்டு கதவை உடைச்சு,சுவரை இடிச்சு பெருசா கட்ட சொல்லணும் அப்பாவை",
திடீரென சம்மந்தம் இல்லாமல் கூறியவளை புரியாமல் பார்த்தாள் ஆர்த்தி.
"உன் மாமியார் சைஸ்க்கு உள்ள வர முடியுமா?? தெரில"
இவளை… என்று பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது.
"இவங்க யாரு.ஓவர் அல்டாப்பா இருக்கு.உன் ஓரகத்தி போல.ஒரு கியூட் குட்டி பொண்ணு இறங்குது.ஓரு ரெமண்ட் மாடல் ஒன்னு இறங்குது.இன்னும் மெயின் ஆளை காணும்."
சிறிது நேரம் பேச்சற்று, வியந்து பார்திருந்தாள் கீர்த்தி.
"என்னடி"
"நீ யாரையாவது லவ் பண்ணி, கல்யாணத்தன்னைக்கு லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடி போய்டு"
திடீரென்று இப்படி கூறுபவளை பார்த்து பகீரென்றது.
"என்னடி உளர்ற.."
"மாப்பிள்ளை போட்டோல பார்த்ததை விட செம்ம கலர் அஹ்,அழகா, ஹாண்ட்ஸோமா இருக்கார்.நீ ஓடிட்டினா. மேடையில் வேற வழி இல்லாம, என்னை கல்யாண பொண்ணாக்கி உக்கார வச்சுடுவாங்கல்ல??"
என்று கூறி கண்ணடித்தவளை வெட்டவா?? குத்தவா ??என்று கொலை வெறியுடன் முறைத்தாள் ஆர்த்தி.
….தொடரும்.