கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே...அத்தியாயம்-12

Nilasubramanian

Moderator
Staff member
அத்தியாயம்-12

அவள் பயந்த முகம் பார்த்து,அவள் கைகளை பிடித்து, அழுத்தம் கொடுத்து கொண்டே,

"ஏன்டா ,பொம்மு இவ்ளோ பயம்..??"

"சேச்சே..பயம் எல்லாம் இல்ல.."

சிறு புன்னகையுடன்,

"பயம் இல்லைன்னா சரி தான்.காலையில ஒன்பது மணியில இருந்து மதியம் ஒரு மணி வரை, ஒரு டுடோரியல்ல கிளாஸ் எடுக்குறேன்.அப்புறம் நீ பார்த்தியே மாது,அவனோட மெக்கானிக் ஷெட்ல இருப்பேன்.சின்ன,சின்ன ரிப்பேர் எல்லாம் பார்த்துகிட்டு,சாயங்காலம் நம்ம வீட்டு கிட்ட இருக்க கம்ப்யூட்டர் சென்டர்ல வேலை பார்க்குறேன்."

"ஓ..ஆனா, ஏன் இத்தனை வேலை??நீங்க படிச்ச படிப்புக்கு பெரிய வேலையே கிடைக்குமே.."

அவளை ஒரு நிமிடம் கூர்ந்தவன்,

"நான் என்ன படிச்சிருக்கேன்னு தெரியுமா..??"

ஒரு நிமிடம் அவன் கேள்வியில், தவறு செய்தவள் போல முழித்து,பின்

"தெரியும்."

"எப்படி தெரியும்??யார் சொன்னா..??"

"அக்கா..கொஞ்சம்..மாமி கொஞ்சம்.."

"ஓ..அவங்களா சொன்னாங்களா..??"

"இல்லை..நான் தான் கேட்டேன்.."

"ஏன்..??"

அவன் கேள்வி, ஒரு அழுத்ததோடு வந்தது.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்து,
"சும்மா..தான்.. தெரிஞ்சுக்கலாம்னு.."

"அதான்.. ஏன் தெரிஞ்சுக்கணும்..??"

"தெரிஞ்சுக்கணுமுன்னு தோணுச்சு.."

"ஏன் தோணுச்சு..??"

'இவன் என்ன வடிவேலு கணக்கா, என்ன கையை பிடிச்சு இழுத்தியா, ரேஞ்சுக்கு ஏன்,ஏன் போடுறான்..'

"தெரியலை.."

"நிஜமா..தெரியலையா..??"

அவள் கண்களை பார்த்து கேட்டான்.

"அது..பூசணிக்கு உங்களை பிடிக்காது..அதான், உங்களை பத்தி தெரிஞ்சுக்கணுமுன்னு தோணுச்சு.."

"பூசணி….??"
கண்ணில் கேள்வியுடன் அவளை பார்த்தான்.

"அதான், அந்த வெள்ளை பூசணி,உங்க சித்தி..கும்கி.."

அவள் தீவிரமாக விளக்கம் அளித்த முறையில், அவன் முகத்தில் புன்னகை தோன்றி,சிரிப்பாய் மாறியது.

"இப்படி தான் எல்லோருக்கும் பேர் வைப்பியா..??"

"இல்ல..இல்ல..அது சும்மா.."
என்ன சொல்வது என்று தெரியாமல்,எல்லா பக்கமும் தலை ஆட்டினாள்.

அவள் தலையில் கை வைத்து ஆட்டி விட்டு,
"அப்போ அவங்களுக்கு பிடிக்காததால.. என்னை பத்தி தெரிஞ்சுகிட்ட. அப்டி தானே..??"

இதற்கு என்ன பதில் கூறுவது..அவள் கூறும் பதில், அவளுக்கு பாதகமாய் முடியும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
வார்த்தைகள் கவனமாய் வெளிவர வேண்டிய நேரமிது.

"ஆரம்பத்துல உங்களை பார்க்கும் முன்ன, அப்படி தான்.பார்த்த பின்ன.."

"ஹ்ம்ம்..பின்ன..??"

"உங்களுக்காக மட்டும் தான் தெரிஞ்சுக்கிட்டேன்.."

"அதான் ஏன்..??"

'ச்சு.. ஏன்டா நொய்.. நொய்ங்குற..இப்போ என்ன தான் வேணுமாம் இவனுக்கு..??நானே இவனை பார்த்து..லவ் யூ சொல்லனுமாமாம்.இவரு சொல்ல மாட்டாராமாம்.எனக்கு வெட்கமா இருக்காதா..??'

'கீர்த்தி நீ வெட்க படுறியா..??பூமி தாங்குமா..??'
அவள் மனமே அவளை கலாய்க்க..

'அதெல்லாம் தாங்கும்..எதை எதையோ தாங்குது.. என் வெட்கத்தை தாங்காதா..??'

யோசித்து கொண்டே மொட்டை மாடி தரையில், விரலால் கோலம் வரைந்தால்,
அதை கவனித்த பார்த்தி,

"தரையை ஓட்டை போட்டுடாத.. அப்புறம் உன் பூசணி, ருத்ர காளி ஆகிடுவாங்க.."

அவனை முறைத்து விட்டு,
மீண்டும் காலியான ஸ்வீட் டப்பாவை, நோண்ட ஆரம்பித்தாள்.

"நான் கேட்டதுக்கு பதில் வரல.."

"என்ன கேட்டிங்க..??"

"காந்தி தாத்தா உயிரோட இருக்காரானு கேட்டேன்.."

அவனை மீண்டும் முறைத்து விட்டு,
"நீங்க கேட்ட கேள்விக்கு உங்களுக்கே பதில் தெரியும். அப்புறம் ஏன் கேட்குறீங்க..??"

"எதுக்கு..??காந்தி தாத்தா கேள்விக்கா..??"

பல்லை கடித்து கொண்டு,
"நீங்க முன்ன கேட்ட கேள்விக்கு…"

"அப்போ உனக்கு அந்த கேள்வி ஞாபகம் இருக்கு.."

"ஹ்ம்ம்.."

"அப்போ,அதுக்கு பதில் சொல்லு.எனக்கு, அதை உன் வாயால கேட்கனும்.. நானே எதையும் யூகிச்சுக்க முடியாது.."

சிறிது நேரம் சங்கடமான மௌனத்தில் கழிய,
"உங்களை பிடிச்சிருக்கு..அதுனால தெரிஞ்சுக்கிட்டேன்.."

"பிடிச்சுருக்குன்னா..??"

அவனை இப்பொழுது, கொலை வெறியோடு முறைத்தாள்.

"கோவப்படாத டா.. எனக்கு இது வரை எந்த உறவும் கிடைச்சதில்லை,கிடைச்சாலும் நிலைச்சதில்லை.அதான், உன் கிட்ட பல முறை கேட்டு, தெளிவு படுத்திக்கிட்டு,எனக்குள்ளேயே பதிய வச்சுக்கிறேன்..
உனக்கு புரியுதா..??"

கண்ணில் கேள்வியுடன்,ஒரு கெஞ்சல் கலந்து கேட்டான்.
அவனுக்கு ஆமோதிப்பாய் தலை அசைத்தாள்.

"இப்போ சொல்லு..உன் பிடித்ததை பத்தி.."

"பிடிச்சிருக்கு..உங்களை கல்யாணம் பண்ணிக்குற அளவு..உங்க கூடவே இருந்து இம்சை பண்ணுற அளவு..போதும்,போதும் உன் அன்பு தொல்லைன்னு, என்னை நீங்க கெஞ்சுர அளவு..இப்படி நெறைய சொல்லிட்டே போலாம்.."

வானத்தை,பூமியை இப்படி பல திசைகளை பார்த்து,தன் வெட்கத்தோடு போராடி, முகசிவப்பை மறைத்து சொல்லி முடித்தாள்.

சில நொடி அவனிடம் பதிலில்லை.நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

மறு நொடி, அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள். அவனின் இறுக்கத்தில் இவளுக்கு மூச்சு முட்டியது.. அவன் முதுகில் கை வைத்து ஆறுதலாய் வருடி கொடுத்தாள்.

சிறிது நேரம் கழித்து அவனே அவளை விடுவித்தான். அவன் கண்கள் கலங்கி இருந்தது.

"ஓய்…பீம் பாய்..எதுக்கு இப்போ கண்ணு கலங்குது..??"

"என்ன கூப்பிட்ட…??"

"பீம் பாய்ன்னு..நல்லா இருக்குல்ல பேரு..??"

"அப்போ, எனக்கும் பேர் வச்சுருக்க..??"

"அப்புறம், கீர்த்தி கிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது."

தன் சுடிதாரில் இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள்.

மென்னகையுடன்,
"ஏன் அந்த பேரு..??"

"அதுவா..??ஹால்ல உங்க அப்பா போட்டோ பார்த்தேன்..அவரு உயரமா, வாட்ட சாட்டமா, கமல் பட பீம் பாய் மாறி இருந்தாரா.. நீங்க அப்படியே, உங்க அப்பாவை ஜெராக்ஸ் எடுத்தது போல இருந்திங்களா..அதான்.."

பெருமையாய் சொல்லி விட்டு, அவன் முகம் பார்த்தாள்.
அவன் முகம் மாறி இருந்தது.சற்று கடுமையாய்.

'ஆத்தி.. திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறுதே.. என்ன உளறி வச்சேன் தெரியலையே..'

அவன் மனநிலையை மற்றும் பொருட்டு,
"என்னை மட்டும் சொல்லு சொல்லு சொன்னிங்கல்ல..இப்போ சொல்லுங்க..நீங்க..??"

"என்ன சொல்லணும்..??"

"காந்தி தாத்தா உயிரோட இருக்காரானு.."

அவன் கேள்வியை அவனுக்கே திருப்பி போட்டாள்.
ஒரு மென்னகையுடன்,

"இருக்காருன்னு தான் நெனைக்குறேன்.."

ஒரு முறைப்புடன்,

"என்னை மட்டும் அத்தனை, ஏன் கேட்டீங்கல்ல,இப்போ நீங்க சொல்லுங்க.. வீட்டுல யாரோடையும் சரியா பேசாத நீங்க,என் கிட்ட மட்டும் எப்படி பேசறீங்க??
ஏன், என்னைய உங்க வண்டில வர சொல்லி கூப்பிட்டிங்க..??
ஏன், மொட்டை மாடி வர சொன்னிங்க..??
சொல்லுங்க..சொல்லுங்க.."

பட பட பட்டாசாய் கேள்விகள் அடுக்கினாள்.

"ஏன்னா.. என் பொம்மு முகத்துல, என் அம்மாவை பார்த்ததுனால..என் அம்மா இருந்தா, என் மேல இப்படி தான் அன்பு காட்டுவாங்கன்னு, தோணுனதாலை.."

அவள் பதிலில் வாய் அடைத்து நின்றாள்.

அவளை உலுக்கி,
"ஏய்,பொம்மு..என்ன திகைச்சு போய் நிக்குற.."

பதில் சொல்ல முடியாமல் தலை அசைத்தாள்.
கொஞ்ச நேரம் மௌனத்தில் கழிந்தது.

"நான் ஏன், படிப்புக்கு தகுந்த வேலை பார்கலைன்னு கேட்டில்ல..??நான் படிச்சது
M. Tech, டெக்ஸ்ட்டைல் டெக்னாலஜி.டெல்லில படிச்சேன்.அதுக்கு வெளிநாட்டுல எல்லாம் நல்ல வேலைவாய்ப்பு உண்டு.

ஆனா, எனக்கு அங்க போக மனசில்ல. இங்கேயே, சென்னை,பெங்களூர் மாதிரி இடத்துல வேலை பார்காலமுன்னு தான் வந்தேன்.
ஆனா, இங்க உள்ள ஜவுளி கடையை பார்க்க தான், உன்னை இந்த பிரிவு எடுத்து படிக்க வச்சேன்னு சொன்னாங்க.."

"யாரு..??"

ஒரு பெரு மூச்சுடன்,
"என் அப்பா.."

"அப்புறம் ஏன், கடை வேண்டாம்னு எழுதி கொடுத்திங்க.??."

சட்டென்று நிமிர்ந்த அவன் பார்வையில்,

"அரூ சொன்னா.."

"உனக்கு இதுல வருத்தமா..??"

"இதுல எனக்கென்ன வருத்தம்..??"
புரியாமல் கேட்டாள்.

"இப்படி ஒன்னும் இல்லாதவனை காதலிச்சுட்டோமேன்னு தான்.."

"ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க.. ??இதெல்லாம் பார்த்து தான் காதல் வருமா..??"

"சாரி,எனக்கு தெரிஞ்சுக்க வேண்டி இருந்துச்சு..மனிதர்கள் மேல் நம்பிக்கை இல்லாத நிலையில் இருக்கேன்..அதான் என்னை மீறி, அப்படி உன்னை கஷ்டப்படுத்தி இருந்தா..சாரி.
உண்மை காதல் இதெல்லாம் பார்த்து வராது. மனசுக்கு புரியுது.என் மூளை அதை ஏத்துக்காம, பட்ட அனுபவத்துல இப்படி கேள்வி கேட்குது.."

அவன் கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்து,
"புரியுது.."
என்று கண்களை மூடித்திறந்தாள்.

"தேங்க்ஸ்"
என்று புன்னகைத்தான்.

அவனை முறைத்து,
"நான், சாயங்காலம் தேங்க்ஸ் சொன்னதுக்கு முகம் மாறுச்சு.. இப்போ சாரி, தேங்க்ஸ் எல்லாம் வருது..என்ன உங்களுக்கு ஒரு ரூல்ஸ் அஹ்..??"

அவள் கேள்வியில் தோன்றிய புன்னகையில்,
இரு கைகளும் உயர்த்தி,
"ஓகே..வாபஸ்.."
என்றான்.

"அது…"
என்றவள்.

"ஏன் எழுதி கொடுத்திங்க.??சும்மா தெரிஞ்சுக்க தான் கேட்குறேன்.."

"அப்பா தான் எழுதிக்கொடுக்க சொன்னாரு.."

"என்ன..??அவரு தானே அதுக்காக படிக்கவச்சேன்னாரு..??"

"ஹ்ம்ம்..அவர் ,அதுக்காக தான் படிக்க வச்சார்.அதை, அவர் மனைவி கிட்ட கேட்டுட்டு செய்துருக்கலாம்.இவர் திட்டம் அது.அது தெரிஞ்ச ஒடனே, இவங்க சும்மா இருப்பாங்களா??அவங்க ஆடுன தாண்டவத்துல..இவரு, இங்க பத்திரம் எடுத்துட்டு வந்துட்டார்.

பெத்த கடமைக்கு, படிக்க வச்சார்.அதுக்கு மேல, அவர் பணம்,சொத்து எதுவும் தேவை இல்லைன்னு நெனச்சு,நானும் கையெழுத்து போட்டு கொடுத்துட்டேன்."

"ஓ..சரி.அப்புறம் ஏன்?? இந்த மாறி பார்ட் டைம் வேலையா பார்குறிங்க.."

"அவங்க கடுப்பு அதோட தீரலை..நான் வேலை பார்க்குற இடம் எல்லாம், ஏதாவது ஒரு ஆளை பிடிச்சு,என் சொந்த வாழ்க்கை பத்தி பேசவச்சு.என் கோவத்தை கிளறி விட்டாங்க.நமக்கு வாய்க்கு முன்ன, கை தான் பேசும்.

அதான், அந்த வேலையெல்லாம் ஒத்து வராம, நானே எல்லாத்தையும் விட்டுட்டேன்.
அப்புறம் புரிஞ்சுது,இவங்களுக்கு, நான் படிப்புக்கு தகுந்த வேலை பார்க்க கூடாது,அப்படின்னு.

அதான், பார்ட் டைம் அஹ், நான் படிச்ச கம்ப்யூட்டர் கோர்ஸ்,இன்னும் சில கோர்ஸ் எல்லாம் வச்சு,பார்ட் டைம் ஜாப் பார்க்க ஆரம்பிச்சேன்.

இந்த வேலையெல்லாம், கால் தூசு மாதிரி அவங்களுக்கு, அதான், பேசாம, இளக்காரமா ஒரு பார்வை பார்த்துட்டு,அமைதியா இருக்காங்க.."

"இவ்ளோ கஷ்ட பட்டு, இங்க ஏன் இருக்கனும்.பேசாம, நீங்க சொன்ன மாதிரி, சென்னை,பெங்களூர், அப்படி பெரிய சிட்டிக்கு போயிடலாம் இல்ல.."

"அப்படி போனா, என் பொம்முவை எப்படி பார்த்திருப்பேன்??."
சிறு புன்னகையுடன் சொன்னான்.

அவனை செல்லமாய் முறைத்து விட்டு,
"அதான் காரணமா…??"

"இல்ல..அப்பா கடைசியா, என்னை பார்த்த பார்வை,இங்க இருந்து போயிடாத டா.. அப்டின்னு கெஞ்சுன மாதிரி தோணுச்சு..

அவர் இறக்குறதுக்கு சில மாசம் முன் இருந்து,அவர் ,என் கிட்ட கொஞ்சம் அன்பா பழகுன மாதிரி இருந்துச்சு.சரியாய் சொல்லணுமுன்னா, அவர் என் கிட்ட பத்திரத்துல கையெழுத்து வாங்குனதுல இருந்து."

சில நொடி மௌனதுக்கு பிறகு,
"அவர் போகையில,அவர் மனைவி கிட்ட,என்னை வீட்டை விட்டு அனுப்பக்கூடாதுன்னு, சத்தியம் வாங்குனார். அப்புறம், என்னை ஒரு கெஞ்சல் பார்வை பார்த்தார்.அதுக்கப்புறம்…"

ஒரு பெரு மூச்சுடன்,
"அதான், இங்க இருக்கேன்.அதோட..நானா போகணுமுன்னு, இவங்க என்னை இத்தனை அவமான படுத்துறாங்க.

ஒரு வீம்பு எனக்குள்ள..இது என் அப்பா வீடு,நான் போக மாட்டேன்னு..என்னால போக முடியாது.உங்களால முடிஞ்சதை பாருங்கன்னு.அதுக்காகவும் இங்க இருக்கேன்..

எனக்குன்னு யாரு இருக்கா??, நான் சம்பாரிச்சு, சேர்த்து வச்சு, யாருக்கு என்ன செய்ய போறேன்.??இப்போ வர்ற பணமே, எனக்கு, என் தேவைக்கு அதிகம்.அதான்.. வேற எங்கேயும் போகலை.இப்படி பல காரணம்."

அவன் பேசுவதை, அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு, அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தாள்.

"இப்போ,என் பொம்மு வந்துட்டா,என்னை நம்பி,அவ யார்கிட்டயும் அவமான பட நான் விட மாட்டேன்.அவளுக்காக,அவ விருப்பப்பட்ட இடத்துக்கு போகணும்.அவ விரும்புறத வாங்கி கொடுக்கணும்.அவளை நல்லா பார்த்துக்கணும்."

இவ்ளோ நேரம் வேதனை,மற்றும் விரக்தியாய் பேசியவன்,இப்பொழுது கண்ணில் கனவோடு பேச ஆரம்பித்தான்.
அவன் மனநிலை மாற்றத்தில்,புன்னகை தோன்ற,

"என் பீம் பாய் விருப்பம் தான் என் விருப்பம்."

என்று கூறி அவன் கன்னத்தில், தன் முதல் முத்திரையை பதித்தாள்.

அவள் பேச்சில் மகிழ்ந்து, அவள் முத்தத்தில் கரைந்து ,அவளை அணைத்தவன்.பின் நேரமாகியதை உணர்ந்து,

"சரி,தூங்க போ.நேரமாச்சு" என்றான்.

"ஹ்ம்ம்.."
என்று எழுந்தவள்.

"ஹான்…ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.நாளைக்கு அரூ கூட ஹாஸ்பிடல் போறேன்.நாளைக்கு ஈவினிங் உங்க கூட வர முடியாது.சென்டர் போய்ட்டு, அப்படியே அவ கூட ஹாஸ்பிடல் போயிடுவேன்.எனக்காக வெயிட் பண்ணாதீங்க.."

"ஏன்,உனக்கு உடம்பு சரி இல்லியா..??"

"எனக்கு ஒண்ணுமில்ல.."

"அப்போ உங்க அக்காவுக்கா..??"

"அவளுக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லை,மாசமா இருக்கா.."

"ஓ…"

"ஹ்ம்ம்..செக் அப்க்கு போனும்,நீ வான்னு கூப்பிட்டா.. அந்த வெள்ளை காக்காய்க்கு வேலை இருக்காம்."

"யார் வெள்ளை காக்காய்.."

ஒரு நமட்டு சிரிப்போடு,தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்டான்.

ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்து,
"ஆரவ் அத்தான் தான்.."

சத்தமாக சிரித்தான், அவள் பதிலில்.
அவசரமாய் அவன் வாய் மூடி,

"எதுக்கு இப்படி சிரிகுறிங்க.. ??மரத்துல இருக்க பறவை எல்லாம்,பீதியாகி பறக்குது பாருங்க.."

அவள் பேச்சில் மீண்டும் வந்த சிரிப்பை அடக்கி,
"ஒருத்தர் விடாம பேர் வச்சுடு.."

"ஆமா..நீங்க மட்டும்,எனக்கு பொம்முன்னு பேர் வச்சுருக்கிங்கல்ல .அப்படி தான் இது."

"அதுவும், இதுவும் ஒன்னா??"

"ஆமா.பின்ன இல்லியா..??"

"சரி,போ..நாளைக்கு மறக்காம மொட்டைமாடிக்கு வா.."

"ஹ்ம்ம்..வரேன்.."
என்று கூறிவிட்டு, கீழே இறங்கி சென்றாள்.

அவள் சென்ற பின்பு, அவ்விடம் வெறுமை சூழ்ந்தது போல தோன்றியது அவனுக்கு.

அவள் பேச்சுக்களை அசை போட்ட வண்ணம்,இவனும் கீழே இறங்கி, அவன் அறை நோக்கி சென்றான்.
புதிதாக பரிமாறிய நேசபூக்கள், மனதெல்லாம் வீசி மணம் பரப்ப.

…..தொடரும்…
 
Top