கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே..அத்தியாயம்-2

Nilasubramanian

Moderator
Staff member
அத்தியாயம்-2

முறைத்த அக்காவை பார்த்து, ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்த கீர்த்தி.

"எதுக்கு இம்புட்டு காண்டாகுற??நீயே கல்யாணம் பண்ணிக்கோ இந்த அமுல் பேபியை"

"உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா??"

"ஏன், உனக்கு வேணுமா??"

"இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை.நீ நெறைய நாவல் படிச்சு,சினிமா பார்த்து கெட்டுப்போய்ட்ட"

"ஏனாம்??"

"பின்ன என்ன??அப்படி நான் ஓடுனா,ஓடுனா என்னையும், கூட்டிட்டு ஓடுனா அவனையும்,என்னை இப்படி வளர்த்த அம்மாவையும், மொத்தமா தேடி வெட்டிப்புடுவாரு அப்பா,அதோட, ஓடிப்போன பொண்ணுக்கு தங்கச்சியை, எதை நம்பி மாப்பிள்ளை வீட்டுல கட்டுவாங்க.அப்படி பட்ட குடும்பத்துல பொண்ணு எடுப்பாங்களா??லூசு மாதிரி உளராத"

"ஓ..இவ்ளோ இருக்கா??சரி,சரி நீ டென்சன் ஆகாத. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.அந்த அமுல்பேபியை எனக்கு பிடிக்கலை. நீயே கட்டிக்கோ"

'இவளை என்ன தான் செய்வது.இப்போ தான் ஹாண்ட்ஸம், கலர் ,அது,இதுன்னா.இப்போ இப்படி சொல்லுறா. இவளை எதுல சேர்க்குறது.'

இப்படி ஆர்த்தி சிந்தித்து கொண்டிருக்கையில் இவர்கள் இருந்த அறைக்கு மீனாட்சி வந்தார்.

"ரெடி ஆகிட்டில்ல??"

"ஹ்ம்ம்…."

"ஏண்டி, இப்படி உம்முன்னு இருக்க??சிரிச்ச முகமா வா"

"இவ பண்ணுற டென்சன்ல சிரிச்சுட்டாலும்"

"என்ன பண்ணா??"

"நான் ஒன்னும் பண்ணல மம்மி"

அவளை சந்தேகமாய் பார்த்த மீனாக்ஷியிடம்,

"பிலீவ் மீ(Beleive me) பேபி மா" என்றாள்.

"ஒழுங்கா அம்மானு கூப்பிட மாட்டியா??மம்மி,பேபி மான்னுக்கிட்டு"

"சரி, இனி ஒழுங்கா கூப்பிடுறேன்"

'இவ இப்படி சட்டுன்னு ஒத்துக்குற ஆள் இல்லியே!!இதுக்குள்ள உள்குத்து இருக்குமோ'
ஆர்த்தியின் மைண்ட் வாய்ஸ் (mindvoice).

"எனக்கு ஒரே ஒரு சந்தேகம்,தீர்த்து வச்சுட்டு போ"

"என்னடி??"

"முன்ன பின்ன தெரியாதவங்களை பார்த்தா, ஈ…னு பல்லைகாட்டதைன்னு, நீ தானே சொன்ன, இப்போ, அக்காவை சிரிச்சிட்டே வர சொல்லுற. அப்போ, அவங்களை இவளுக்கு முன்னவே தெரியுமா??"

"பெருமாளே"
என்று தலையில் அடித்துக்கொண்டு சென்றார் மீனாட்சி.

"ஏண்டி,அம்மாவே டென்சன்ல இருக்காங்க. நீ வேற படுத்துற"

"அம்மா ஒன்னும் டென்சன் ஆகலை.சந்தடி சாக்குல, அப்பா பேரை சொல்லிட்டு போறாங்க பாரு."

"அப்பா பேரையா??"

"ஆமா,ஹிட்லர் பேர் என்ன??,கேசவன்.பெருமாளுக்கு இன்னொரு பேர் கேசவன்"

"ஆண்டவா,உன்னை தவிர யாராலயும் இப்படி சிந்திக்க முடியாதுடி"

"ரெம்ப புகழாத"

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மறுபடியும் வந்த மீனாட்சி.

"வா, உன்னையா அழைச்சுட்டு வர சொல்லுறாங்க. வந்து எல்லோருக்கும் வணக்கம் சொல்லு.காபி,பலகாரம் எல்லாம் நான் குடுத்துக்குறேன்.அவங்க கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு.இந்த அருந்தவால் பேச்சை எல்லாம் மனசுல போட்டுக்காத"

"அம்மா,இது அநியாயம்"

"உன் கூட பேச நேரமில்லை.கொஞ்ச நேரம் அமைதியா இரு."

இவர்கள் பின் வந்த கீர்த்தியை,
"நீ எங்க வர்ற??உன்னை வெளியே வர கூடாதுனு சொன்னேன் இல்லியா??உன் அப்பா பார்த்தா, எனக்கு தான் திட்டு விழும்.பேசாம உக்காரு."

"அம்மா..ப்ளீஸ் மா..செல்ல அம்மால..எனக்கு இங்க போர் அடிக்கும்.அங்க வந்து, எந்த சேட்டையும் பண்ண மாட்டேன்.சமத்தா நின்னுப்பேன்."

"நீ செல்லம்னாலும் சரி, தங்கம்னாலும் சரி..இங்க தான் இருக்க"

அவளிடம் கூறி விட்டு, ஆர்தியை அழைத்து கொண்டு சென்றார்.

அமர்ந்திருந்த அனைவரையும் பார்த்து, பொதுவில் ஒரு வணக்கம் வைத்தாள் ஆர்த்தி.

மாப்பிள்ளையை நிமிர்ந்து பார்க்க மனம் விளைந்தாலும் ,கூச்சமும்,கேசவனின் அக்கினி பார்வையையும் நினைத்து, தலைகவிழ்ந்தே நின்றாள்.

"பொண்ணுக்கு ஒரு சேர்(chair) போடுங்க,அவ உக்காரட்டும்"
என்ற கணீர் குரலில் நிமிர்ந்து, எதிரில் இருப்பவரை பார்த்தாள் ஆர்த்தி.

கீர்த்தி சொன்னது போல, கொஞ்சம் பெரிய உருவில் ,எலுமிச்சம்பழ நிறத்தில்,இள வயதில் வெகு அழகாய் இருந்திருப்பார் என்னும் தோற்றத்தில், ஒரு பெண்மணி இருந்தார்.

அவர் சொன்னதும்,கேசவனின் பார்வை உத்தரவில், மீனாட்சி ஒரு நாற்காலி எடுத்து போட்டார்.

பொதுவான சில விசாரிப்புகளுக்கு பின் ,
"என் பெயர் அகிலாண்டேஸ்வரி,இவன் என் மூத்த பையன் ஆதவ், இவ, அவன் மனைவி சம்யுக்தா,இது என் பேத்தி பிரியங்கா.அப்புறம், இவன் என் சின்ன மகன்,உன்னை பார்க்க வந்திருப்பவன் ஆரவ்."

அனைவரையும் அவர் அறிமுகப்படுத்தும் போது, ஒரு புன்னகையுடன் கரம் குவித்தவள்.குழந்தையிடம் புன்னகையை கொடுத்தாள். கடைசியாய் மாப்பிள்ளையிடன் நிலைத்த பார்வை, சில நொடி தமாதித்தது.

அவனும், இவளை ஆர்வத்துடன் நோக்கி புன்னகை சிந்தினான்,சில நொடி தான், இவள் பார்வையை திருப்பும் முன்னவே, அவன் பார்வை திரும்பி விட்டது, அம்மாவை நோக்கி.

இவர்கள் கீழே சென்றதும், சில நொடி தாமதித்த கீர்த்தி, மெதுவாக நடந்து, மாடி வராண்டாவில் ஒரு மூலையில் நின்று கொண்டாள்.அங்கிருந்து பார்த்தாள், ஹாலில் இருப்பவர்கள் ஓரளவுக்கு தெரிவார்கள்.பேசுவது தெளிவாக கேட்கும்.

இவ்ளோ நேரம் நடந்ததை கவனித்த கீர்த்தி,
'பரவால்ல உக்கார வச்சு பேசுறாங்க,நல்ல மாமியார் போல',
என்று ஆர்தியை உக்கார வைத்த போது நினைத்தாள்.

பின் அவர்கள் உரையாடலை கவனமாக கேட்க ஆரம்பித்தாள்.கடைசியில் மாப்பிள்ளை, அக்காவை பார்த்துவிட்டு உடனே அன்னையை நோக்கவும்,

'சரியான அம்மா பிள்ளை போல,கீர்த்தி, இவன் உனக்கு செட் ஆக மாட்டான்.ஆள் அழகா இருந்து என்ன ப்ரியோஜனம்,மண்டையில சொந்த சரக்கு இல்ல போல.இவன் எல்லாத்துக்கும் பெர்மிஸ்ஸின் வாங்கி…ஹ்ம்ம்…இவனை லூஸ்ல விடு'

என்று நினைத்துவிட்டு, தன் தலையில் தானே கொட்டிக்கொண்டு,

'ஆர்த்தி சொல்லுறது சரி தான்,உனக்கு அறிவே இல்ல.இவன் என்னமோ உன்னை பொண்ணு பார்க்க வந்த மாதிரி யோசிக்குற'

இவள் சிந்தனை ஓட்டத்தை தடை செய்வது போல, அகிலாண்டேசுவரியின் குரல் கேட்டது.

"எங்களுக்கு பொண்ணை பிடிச்சிருக்கு.உங்களுக்கு மாப்பிள்ளையை பிடிச்சுருக்கானு,பொண்ணை கலந்து பேசிட்டு சொல்லுங்க."

'என்ன இந்தம்மா ??மாப்பிள்ளை கிட்ட ஒரு வார்த்தை கேட்காம சொல்லுது'

இதே கேள்வி மீனாட்சிக்கும் தோன்றியது போல,

"மாப்பிள்ளை கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லுங்க"

"அதெல்லாம் நான் சொன்னா, அவனுக்கு பிடிச்ச மாதிரி தான்.அதோட, எனக்கு இந்த பொண்ணு,மாப்பிள்ளை தனியா பேசிக்கிறது. போன்ல பேசுறதெல்லாம் பிடிக்காது.நீங்க, உங்க பொண்ணு கிட்ட கேக்குறதுன்னா, கேளுங்க"

'சுத்தம்,உள்ளதே கேஸு ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸ்ர். இதுல இந்தம்மா வேற ,என் பையன் நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டான்.உன் பொண்ணு எப்படிங்குற ??மாறி ஏத்திவிடுது.இனி கேஸு கவுன்ட்டௌன் ஸ்டார்ட்ஸ்'

"என் பொண்ணும், என் பேச்சை மீற மாட்டா. நாமா மேற்கொண்டு பேசுவோம் மா"

'முடிஞ்சுது கதை.ஆர்த்தி, உனக்கு இந்த வெள்ளை காக்காய் தான்'

அடுத்த கட்ட பேரத்தை ஆரம்பித்தார் அகிலாண்டம்.

"என் பையனுக்கு, பெரிய,பெரிய கோடீஸ்வர வீட்டுலெல்லாம் பொண்ணு கொடுக்க தயாரா இருந்தாங்க.ஜாதக பொருத்தத்துக்காக தான் இங்க வந்தோம்.இவனுக்கு செவ்வாய் ஜாதகம்.இல்லைனா, இந்நேரம் பெரிய இடத்து மாப்பிள்ளை ஆகி இருப்பான்."

கேசவனின் முகம் சற்று சுருங்கி போனது.

'ஆமா, இந்தம்மா பில்கேட்ஸ் பேத்தி, நாங்க இது வீட்டு குதிரை லாயத்துல கூட்டி பெருக்குறோம்.ஓவர் அஹ் பில்ட் அப் (buildup) விடுது. வெள்ளை யானை.'

"நாங்க உங்க அளவுக்கு இல்லைனாலும்,எங்க பொண்ணுக்கு நெறைய நகை,பணம் சேர்த்து வச்சுருக்கோம் மா.நல்லாவே செய்து அனுப்புவோம்"

"எனக்கா கேக்குறேன்??.உங்க பொண்ணு தான் அதை வச்சுக்கிட்டு சந்தோசமா இருக்க போறா. என் மூத்த பையனுக்கு பொண்ணு எடுத்த இடம், ரெம்ப பெரிய இடம்.பெங்களுரில ஹோட்டல்,எக்ஸ்போர்ட், இம்போர்ட்,கன்ஸ்டருக்ஷன் கம்பெனினு, அவன் மாமனாருக்கு ஏகப்பட்ட சொத்து.

என் மருமக தான் அங்க ஒரே வாரிசு.இப்போ அதெல்லாம் ,அவன் தான் பார்த்துக்குறான்.கல்யாணத்துக்கு அவங்க மாமனார், ஆடி கார் வாங்கி கொடுத்து, மாப்பிள்ளைக்கே வைர செயின்,ப்ரஸ்ட்லெட்,மோதிரம்னு எல்லாம் போட்டார்."

அவர் சொல்வதை கேட்கும் போது, மீனாட்சிக்கு தலையே சுற்றியது.
கேசவன், என்ன சொல்லுவது என்று தெரியாமல் நின்றார்.

'அது சரி,இந்தம்மா மூத்த புள்ள வீட்டோட மாப்பிள்ளை போல,அதை, எம்புட்டு பெருமையா சொல்லுது.'

அகிலாண்டேஸ்வரி ஒரு பெரிய லிஸ்ட் எஹ் கொடுத்தார்.சீர்வரிசையில்,சிறிது நேரம் அவருக்கும் கேசவனுக்கும் பேரம் நடந்து, ஒரு வழியாய் முடிவிற்கு வந்தது.

'செம்ம,நல்ல விலைக்கு பிள்ளையை வித்துடுச்சு.ஆனா, வித்த பொருளை இங்க விட்டுட்டு போகாது. கடைசி வரை அது கூடவே வச்சுக்கும். நல்ல வியாபாரம் தான்'

அது வரை சற்று பொறுமை காத்த சம்யுக்தா,

"ஆன்ட்டி, எனக்கு இங்க உக்கார முடியலை,ரெம்ப அன் ஈஸியா இருக்கு.காத்தே இல்லை.நான் கார்ல ஏசி (ac) போட்டு உக்காருறேன். நீங்க முடிச்சுட்டு வாங்க"

என்று கூறி விட்டு, பதிலை கூட எதிர்பாராமல் சென்று விட்டாள்.

"அவ பெரிய இடத்து பொண்ணு,அதான் ஏசி (ac) இல்லாம இங்க இருக்க முடியலை"
என்று பேசி சமாளித்தார் அகிலாண்டம்.

'அதானே, இந்த அல்டாப்பு,இம்புட்டு நேரம் அமைதியாய் இருந்துச்சேன்னு பார்த்தேன்.அது வேலையை காட்டிடுச்சு'

அப்பொழுது, இவள் எட்டி பார்ப்பதை கவனித்து விட்ட அகிலாண்டத்தின் பேத்தி பிரியங்கா.இவளும், மேலே எட்டி பார்க்க ஆரம்பித்தாள்.தந்தையின் மடியில் இருந்து இவ்வாறு செய்ததால்,அவள் தந்தை,

"என்ன பிரியா மா??"என்றான்.

"அங்க ஒரு ஆன்ட்டி ஹைட் அண்ட் சீக்(hide and seek) விளையாடுறாங்க"என்றாள்.

அனைவரும் மாடியை பார்க்க,வேறு வழியில்லாமல், மீனாட்சி சிரித்து சமாளித்து,
"அவ, எங்க சின்ன பொண்ணு கீர்த்தி" என்றார்.

"அவ மட்டும் ஏன் அங்க இருக்கா??இங்க வர சொல்லுங்க"
என்றார் அகிலாண்டம்.
கேசவனின் முறைப்பில், தலைகுனிந்து கொண்டு, மாடியேறி சென்றார் மீனாட்சி, அவளை அழைத்து வர.

'போச்சு,கேஸு இன்னிக்கு கிளோஸ் பண்ண போகுது.இந்த குட்டி பிசாசு போட்டு குடுத்துருச்சே'
என்று, தலையில் கை வைத்து நின்றாள் கீர்த்தி.

மாடிக்கு வந்த மீனாட்சி, அவளை முறைத்து விட்டு,
,"அவங்க போகட்டும், உனக்கு இருக்கு."
என்று மெல்லிய குரலில் முணுமுணுத்து விட்டு, கீழே அழைத்து சென்றார்.

அனைவரையும் பார்த்து ஒரு சிரிப்பை உதிர்த்து, வணக்கம் சொன்னாள். அனைவரை சுற்றியும் தன் பார்வையை ஓட்டினாள்.

அகிலாண்டத்தின் மூத்த மகன் கோட்,சூட் போட்டு தன் கைபேசியில் ஏதோ செய்துகொண்டிருந்தான்.அவன் மகள், இவள் மேல் ஒரு பார்வையை பதித்து புன்னகை சிந்தி விட்டு, தந்தையின் கைபேசியை பறிப்பதும், இழுப்பதுமாக இருந்தாள்.

மாப்பிள்ளை, தன் தாய் அறியாமல், ஆர்தியை வஞ்சனை இல்லாமல் சைட் அடித்துக்கொண்டிருந்தான்.

'கில்லாடி தான், திருட்டு பூனை'
கடைசியாய் அவள் பார்வை அகிலாண்டத்திடம் முடிந்தது.அவர், இவளை அளவிடும் பார்வை பார்த்துக்கொண்டிருந்தார்.

'பணம் இல்லைனாலும்,பொண்ணுங்க ரெண்டும் மூக்கும்,முழியுமா களையா தான் இருக்குதுங்க.இந்த சம்யுதா எல்லாம், மேக்கப் இல்லாம பார்க்க முடியாது'
மனதுக்குள் அளவிட்ட அகிலாண்டம்,

"உன் பேர் என்னமா??"

"கீர்த்தி"

"நீயும் உங்க அக்கா மாதிரி, என்ஜினீயர் அஹ்??"

"இல்லைங்க"
என்று விட்டு தன் படிப்பை சொன்னாள்.

ஓர பார்வையில், தன் தந்தையை பார்த்துக்கொண்டாள்.அவர் கண் அக்கினி பிழம்பை கக்கிக்கொண்டிருந்தது.

"வேலைக்கு போறியா??"

"இல்ல, தேடிக்கிட்டு இருக்கேன்"

'இன்னிக்கு நம்ம சோலிய முடிக்காம போகாது போல'

"இன்னும் கொஞ்சம் நல்ல படிப்பா படிச்சுருந்தா, சீக்கிரம், நல்ல வேலை கிடைக்கும்."

'ஆமா,உங்க தாத்தா, நான் எப்போ படிச்சுட்டு வருவேன் ,வேலை குடுப்போம்னு ஆபீஸ் கட்டிட்டு உக்காந்துருக்காரு.இந்தம்மா வேற.நானே வேலைக்கு போக இஷ்டமில்லாம, கேசுவை சமாளிக்குறேன். இது வேற இம்சை பண்ணுது'

இன்னும் சில கேள்வி கேட்டு,அறிவுரை கொடுத்து, தன் சிற்றுரையை முடித்தார் அகிலாண்டம்.

'ஹப்பா, ஒருவழியா பேசிமுடிச்சுருச்சு'

அவர் முடித்ததும் கேசவன் சிறிது தயங்கி,

"உங்களுக்கு, இன்னொரு பையன் இருக்குறதா சொன்னாங்களே மா"

அகிலாண்டத்தின் முகம், ஒரு நொடி மாறியது.

"அவனை பத்தி இப்போ என்ன??அவன் ஒரு தறுதலை.நிச்சயத்துக்கு,கல்யாணத்துக்கெல்லாம் நாள் பார்த்து சொல்லுறேன்.எங்க குடும்ப ஜோசியரை கேட்டு தான் சொல்லணும்.எல்லாத்துக்கும் உங்களுக்கு போன் பண்ணுறேன்.இப்போ கிளம்புறோம்.போய்ட்டு வரோம்"
என்று எழுந்து கை கூப்பினார்.

அவர் பின்னயே அவர் இரு மகன்களும் எழுந்தனர்.குழந்தையின் கையில் இருந்து மிட்டாயை பிடுங்கியது போல, பரிதாபமான முகத்தோடு ஆரவ் எழுந்தான்.

அனைவரையும் வழி அனுப்ப கேசவனும்,மீனாட்சியும் வாசல் வரை சென்றார்கள்.மின்னல் வேகத்தில் மாடி ஏறிய கீர்த்தி, ஒரு பேப்பரில் கல்லை சுருட்டி, ஆரவின் முதுகில் வீசினாள்.

அவன் திரும்பி பார்த்துவிட்டு, அந்த பேப்பரை கையில் எடுத்தான்.அதை பிரித்து பார்த்தான்.அதில், ஆர்தியின் கைபேசி எண். அவன் முகம் ஆயிரம் வால்ட் விளக்கு போல் பிரகாசம் ஆனது.

அண்ணாந்து மேலே பார்த்தான்.அங்கே யாருமில்லை.கீர்த்தி தான், இவன் பேப்பரை எடுத்து பார்த்ததும் ஒளிந்து கொண்டாளே.

அப்பொழுது தான், மேலேறி வந்த ஆர்த்தி.

"என்னடி பண்ணிட்டு இருக்க"

"யோசிச்சுட்டு இருக்கேன்"

அவளை சந்தேகமாய் பார்த்து, ஒரு வித முகபாவனையோடு கேட்டாள்,

"என்ன யோசிக்குற"

"இன்னொரு மகனை பத்தி கேட்டதும்,அந்தம்மா இப்படி தலை தெறிக்க ஓடுதே, யார் அந்த டெர்ரோர் பீஸ்னு.இன்னொன்னு கவனிச்சியா??பெத்த புள்ளையை போய் யாராவது, தறுதலைன்னு சொல்லுவாங்களா??திஸ் லேடி இஸ் வெறி ஸ்டரேஞ்சு"

அவளுக்கு பதில் மீனாட்சியிடம் கிடைத்தது மறுநாள்.

…..தொடரும்.
 

Sundarji

Active member
இது என்ன தாயோ?... பெத்த புள்ளைய இப்படி பேசுது...
 
Top