அத்தியாயம்-24
அகிலாண்டத்தின் தங்கை ராஜேஸ்வரி,அவர் கணவர் விநாயகம்,அவர்கள் மைந்தன் விஷ்ணு என்று, மூன்று பேர் மட்டுமே வந்திருந்தார்கள்.
ராஜேஸ்வரி,அகிலாண்டத்தை போல நிறம்,உருவம், ஜாடை எல்லாம் கொண்டிருந்தார்.
விநாயகம், சற்று கருப்பாய், உயரமாய் இருந்தார்.விஷ்ணு, ஆர்த்தி சொன்னது போல, ஹிந்தி பட ஹீரோ போல, உயரம் நிறம் எல்லாம் கொண்டிருந்தான்.
அவன் கண்ணில், ஒரு கர்வம் மின்னியது.எந்த பெண்ணும் தன்னை நிராகரிக்க முடியாது என்னும் கர்வம்.
மூவரையும், மாடி அறையில் இருந்து பார்த்து கொண்டிருந்த ஆர்த்தி..
"கீர்த்தி,இங்க வந்து பாரேன்..சின்ன அத்தையும், அத்தை மாதிரியே இருக்காங்க.."
அவள் இடத்தை விட்டு அசையவில்லை கீர்த்தி,
'இன்னொரு பூசணி..தர்பூசணி..போல..'
"மாப்பிள்ளை சூப்பர் அஹ் இருக்கார்..வந்து பாரேன்.."
"உனக்கு ரொம்ப பிடிச்சுருக்கா..??"
"ஆமாம் டி.."
"சரி..அப்போ..அத்தான் கிட்டயும்,பூசணி கிட்டயும் பேசட்டா??"
அவளை புரியாமல் பார்த்த ஆர்த்தி,
"என்ன பேச போற??"
"ஹ்ம்ம்..நீ தான், அவனை ரொம்ப பிடிச்சுருக்குன்னு சொன்னியே..அதான், அவங்க கிட்ட பேசி..உனக்கும் அவனுக்கும், கல்யாணம் பண்ணலாம்னு.."
அவளை முறைத்த ஆர்த்தி,
"அறிவுகெட்ட தனமா பேசாத டி.."
"நீ தானே மா, பிடிச்சுருக்குன்னு சொன்ன.."
"பாக்க நல்லா இருக்குறார்னு சொன்னேன்..அதுக்காக..எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு..உனக்கு ஞாபகம் இருக்கா..??"
"அதே, நானும் கேட்குறேன்..எனக்கும், ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு..நீங்களும், கல்யாணம் ஆனவளுக்கு தான் மாப்பிள்ளை பார்க்குறிங்க.."
"அதுக்கு பேர் கல்யாணமா..??"
"உனக்கு நடந்தது கல்யாணம்னா, எனக்கு நடந்ததும் கல்யாணம் தான்.."
இதற்கு மேல் என்ன பேசினாலும், இவள் இப்படி தான் பேசுவாள் என்று, அமைதியாய் இருந்தாள் ஆர்த்தி.
மீனாட்சி மாடிக்கு பரபரப்பாய் வந்தார்.
"எல்லாம் ரெடியா..??கூப்பிடையில..இவளை கூட்டிட்டு வா.."
ஆர்தியிடம் கூறி விட்டு,
"இங்க பாரு டி.. அங்க வர்ற.. அவங்க கேக்குற கேள்விக்கு, ஒழுங்கா பதில் சொல்லுற..திரும்பி வர்ற.. இதை தவிர, ஏதாவது ஏடாகூடமா பண்ண,உங்க அப்பாவோட அடி மறந்துருக்காது..இந்த குடும்பத்தோட, மானம், மரியாதை, எல்லாம் மனசுல வச்சு நடந்துக்க..புரியும்னு நெனைக்குறேன்.."
எச்சரித்து விட்டு,கீழே சென்றார்.
உதட்டை சுளித்து விட்டு, திரும்பிக் கொண்டாள் கீர்த்தி.
ஆர்திக்கு தான், படபடவென இருந்தது.
'என்ன செய்து வைப்பாளோ' என்று.
சிறிது நேரத்தில், பெண்ணை அழைத்து வர சொல்லி,அகிலாண்டம் சொல்லவும்..
மீனாட்சி மாடிக்கு வந்து,ஆர்தியிடம் சொல்லி,கீர்த்தியை ,கீழே அழைத்து வர சொன்னார்.
அதே போல ஆர்த்தியும், கீர்த்தியை அழைத்துக் கொண்டு கீழே சென்றாள்.
கீழே சென்றவள், யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
அவள் தோளை, ஆர்த்தி லேசாக இடித்தாள்.
அந்த சமிக்ஞை புரிந்து,துணி கடை பொம்மை போல கரம் குவித்தாள் கீர்த்தி.
ராஜேஸ்வரி,கீர்த்தியை பார்த்தார்.அவருக்கு பரம திருப்தி.ஆரவ் ஆர்த்தி திருமணத்திலேயே, அவருக்கு கீர்த்தியை பிடித்திருந்தது..கல்யாணத்துக்கு, அவர் மட்டுமே வந்திருந்தார்..அவர் கணவரும் மகனும், விடுமுறை கிடைக்காததால் வரவில்லை.
அவர்கள் தான், இப்பொழுது முதல் முறையாக, கீர்த்தியை பார்க்கிறார்கள்.அவர் திரும்பி, அவர் கணவரை பார்த்தார்.அவரும், கண்களால் தன் சம்மதத்தை தெரிவித்தார்.
அடுத்ததாக ,மகனிடம் அவர் பார்வை சென்றது...
இவர் பார்வையை கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.. பார்த்த விழி பார்த்த படி என்பது போல..கீர்த்தியிடமே அவன் பார்வை நிலைத்து இருந்தது..
அதிலேயே, மகனின் மனம் புரிந்து,புன்னகைத்து கொண்ட ராஜேஸ்வரி..
கீர்தியிடம்,
"உன் பேர் என்ன மா..??"
"திவ்யகீர்த்தி.. வீட்டுல, கீர்த்தின்னு கூப்பிடுவோம்.."
பதில், மீனாட்சியிடம் இருந்து வந்தது.
அவர் புறம் பார்த்த, ராஜீ..
இவள் புறம் திரும்பி,
"என்ன படிச்சுருக்க..??"
அதற்கும் பதில், மீனாட்சியிடம் இருந்தே வந்தது.
ராஜீயின் முகத்தில், லேசாய் அதிருப்தி..
"வேலைக்கு போறியா..??"
"நான் தான் சொன்னேன்ல ராஜீ.. எங்க வீட்டுல தங்கி தான், கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சா..முடிச்சிருந்தா, நல்ல வேலை கிடைக்கும்..நீ தான் ,பொண்ணு வேலைக்கு போக வேண்டாம்னு சொன்ன, அதான்.. படிச்சது போதுமுன்னு, விட சொல்லியாச்சு.."
இப்பொழுது பதில், அகிலாண்டத்திடம் இருந்து வந்தது..
ராஜீக்கு, எரிச்சலாய் வந்தது.
'பொண்ணு கிட்ட பேசி பார்க்கலாம்னு பார்த்தா, இங்குட்டு, இந்தம்மா கேட் போடுது..அங்குட்டு அந்தம்மா..ஊப்ஸ்..'
அவர் முகத்தில், எரிச்சல் அப்பட்டமாய் தெரிந்தது.
அதை கவனித்த ஆர்த்தி..
'இந்த அம்மாவும், அத்தையும்.. இன்னிக்கு ரணகளம் ஆக்க போறாங்க..'
"உனக்கு சமைக்க தெரியுமா..??"
இப்பொழுது பேச போன மீனாட்சியை, கையில் அழுத்தம் கொடுத்து தடுத்த ஆர்த்தி..
அதே போல, கீர்த்தியின் கையில் அழுத்தம் கொடுத்து,அவளை பேச சொன்னாள்.
"தெரியாது.."
'சுத்தம்..இதுக்கு, இவ அமைதியாவே இருந்துருக்கலாம்..'
"என்ன தெரியாதா..??ஏன் தெரியாது..??"
"ஏன்னா.. கத்துக்கலை."
இதே ரீதியில் பேசினால்,எங்கோ போய் முடியும் என்று…மீனாட்சியை பாவமாய் பார்த்தாள் ஆர்த்தி..
'இதுக்கு தான் சொன்னேன்...'.
என்னும் பதில் பார்வையோடு..
"ஓரளவு சமைப்பா..படிச்சுட்டு இருந்ததால..சரியா சொல்லி கொடுக்கல.. இனி சொல்லி கொடுத்துறேன்.."
"ஓஹோ..சீக்கிரம் சொல்லி கொடுங்க..இது தான் முக்கியம், படிப்பை விட..என் மகனுக்கு, வீட்டு சாப்பாடு தான் பிடிக்கும்.."
'அப்போ..உன் மகனுக்கு சமையல் சொல்லி கொடு..'
"அப்புறம், வேற என்ன தெரியும்..??"
கீர்த்தி,ஏடாகூடமாய் பதில் அளிக்கும் முன்,
"ஈஸ்வரி..பொண்ணு பயந்துட போகுது..நம்ம வீட்டுக்கு தானே வர போகுது..மெதுவா பேசிக்கலாம்..இப்போ, நாம வாங்கிட்டு வந்ததை கொடு.."
விநாயகத்தின் கூற்றில்,
அவளுக்கென்று வாங்கி வந்திருந்த, பட்டு புடவையை எடுத்து, ஒரு தாம்பாளத்தில் வைத்து,அதன் மேல், ஒரு ஆரம் வைத்து, கீர்தியிடம் நீட்டினார்.
"இந்தாம்மா.. இதை மாத்திக்கிட்டு வா.. நிச்சய பட்டு இது.."
அந்த புடவையை வெறித்தாள், கீர்த்தி..அவள் முகம் மாறுவது கண்டு, வேகமாய் அதை வாங்கிய ஆர்த்தி,
"இதை, மாத்தி கூட்டிட்டு வரேன் அத்தை.."
"ஹ்ம்ம்..சீக்கிரம் கூட்டிட்டு வா.. நல்ல நேரம் ஆரம்பிக்க போகுது..நிச்சய பத்திரிகை வாசிச்சு.. ஒப்பு தாம்பூலம் மாத்திக்கனும்.."
கூறிவிட்டு, தன் பார்வையை, கேசவன் புறம் திருப்பினார் ராஜீ..
"மேற்கொண்டு, பேச வேண்டியது பேசலாமா..??"
"அதான் சொன்னனே ராஜீ.. ஆர்திக்கு செஞ்சது மாதிரியே, செய்வாரு சம்பந்தி..இப்போ தான் ஆர்த்தி கல்யாணம் முடிஞ்சுது..அதுனால..ஒரு ஆறு மாசம் டைம் கொடு..சிறப்பா செய்வாரு.."
அகிலாண்டம், இடையிட்டு பேசினார்.
"நீ சொன்ன..இருந்தாலும்..நேரடியா பேசிக்கிறது நல்லது தானே..நீங்க சொல்லுங்க.."
கேசவன் புறம் திரும்பி, தன் பேரத்தை ஆரம்பித்தார் ராஜீ.
தான், அகிலாண்டத்திற்கு சலித்தவர் இல்லை என்று நிரூபித்தார்.
"சம்பந்தி சொன்ன படி..எல்லாம் செய்யுறேன் மா..ஊர்ல,கொஞ்சம் நிலம் இருக்கு..விற்க ஏற்பாடு பண்ணி இருக்கேன்..வித்து வந்ததும், நீங்க கேட்டது எல்லாம் செய்யுறேன்.."
அனைத்தும் காதில் வாங்கி கொண்டு, மாடிக்கு சென்றாள் கீர்த்தி,அவள் பின்னோடு, ஆர்த்தியும்..
அறைக்குள் நுழைந்தவள், கதவை சாத்த போனாள்.. ஆர்த்தி வருவதை பார்த்து,
"நீ எதுக்கு வர்ற??"
"புடவை மாத்த.. ஹெல்ப் பண்ண தான் டி.."
"எனக்கு மாத்த தெரியும், நீ கீழ போ.."
"இல்லடி..நான்…"
"உன்னை.. போன்னு.. சொன்னேன்.."
கூறிவிட்டு, கதவை வேகமாய் சாற்றி, தாழிட்டாள்.
செய்வதறியாது,கையை பிசைந்து கொண்டு, அங்கேயே நின்றாள் ஆர்த்தி.
அறைக்குள் சென்ற கீர்த்தி, தன் கையில் இருந்த புடவை தட்டை தூக்கி, படுக்கையில் எறிந்தாள்.
'அடுத்த பேரம் ஆரம்பிச்சுடுச்சுங்க.. இப்படி கூவி கூவி விற்பாங்க..ஆனா...பிடிச்சவங்க மட்டும், கல்யாணம் செய்ஞ்சுற கூடாது..நல்ல எண்ணம்..பொருள் இருந்தா தானே, விற்பனை எல்லாம்..'
கண்கள் சிவக்க எண்ணியவள்.
அறையின் மூலையில் இருந்த, மேஜையின் அருகே சென்றாள்.
அதன் இழுப்பறையில், இவ்ளோ நாள் செயலற்று இருந்த பொருளை, எடுத்தாள்.
அதன் மேலுறையை பிரித்தாள்.
மேஜையின் மீதிருந்த, தண்ணீர் பாட்டிலை எடுத்தாள்..
அதை, வாயின் அருகே கொண்டு செல்லும் போது,கதவு தட்டப்பட்டது..
'ச்சு.. அதுக்குள்ள என்ன??'
"இன்னும் புடவை மாத்தலை..கொஞ்சம் வெயிட் பண்ணு.."
உள்ளிருந்தே குரல் கொடுத்தாள்.
"அதெல்லாம் அப்புறம் மாத்திக்கலாம்..இப்போ, கதவை திற.."
மீனாட்சியின் குரல் கேட்டது..ஆர்தியின் குரலுக்கு பதில்..
'இவங்க ஏன், இப்போ வந்தாங்க..??'
அவள் யோசனையை தடை செய்வது போல..கதவு பலமாய் தட்டபட்டது.
"சீக்கிரம் திற.."
யோசனையின் பிடியில் இருந்தவள்..கைக்குள் இருக்கும் பொருளின் நினைவு இல்லாமல், அதை கைக்குள் அடக்கி கொண்டு,நடந்து சென்று கதவை திறந்தாள்.
சற்று நேரத்திற்கு முன், கீழே..
கேசவன்,அகிலாண்டம், ராஜேஸ்வரிக்கு, நடுவில் பேரம் நடந்து கொண்டிருந்தது.
விநாயகம், அதில் தலையிட்டு கொள்ளவில்லை.
அப்பொழுது, வாசலில் கார் வந்து நிற்கும் ஒலி கேட்டது.
அனைவரின் கவனமும், வாசலின் புறம் திரும்பியது.
அங்கே பார்த்தி,உள்ளே வந்து கொண்டிருந்தான்.
கேசவனுக்கும் மீனாட்சிக்கும், அவன் யாரென்றே தெரியவில்லை.
ஆரவ்,மகிழ்ச்சி மின்ன,அதை முகத்தில் தெரியாமல் மறைத்து, அவனை பார்த்தான்.
அகிலாண்டம், எரிச்சலோடு அவனை பார்த்தார்.
ராஜீ விநாயகம் இருவரும், அவனை அடையாளம் கண்டு கொண்டு, கேள்வியுடன் பார்த்தனர்.
உள்ளே வந்தவன்,அங்கிருந்த அனைவரையும், ஒரு நிமிடம் பார்த்தான்.பிறகு பொதுவாக, அனைவரையும் பார்த்து கரம் குவித்து,வணக்கம் தெரிவித்தவன்.
"என் பேர் பார்த்திபன்..ஏகாம்பரத்தோட பிள்ளை..என் அம்மா பேர் பவித்ரா.."
இப்பொழுது, கேசவனுக்கும் மீனாட்சிக்கும், அவன் யார் என்று புரிந்தது.
அவர்களுக்கு, பதற்றம் தொற்றிக் கொண்டது.
"வாங்க தம்பி..வந்து உட்காருங்க.. ஏன் நின்னுகிட்டே பேசுறீங்க..??இந்த விசேஷத்துக்கு தானே வந்துருக்கிங்க..??"
விநாயகம் மட்டுமே, அவனை வரவேற்றார்.
"பரவால்லைங்க..நான் வந்த விஷயம் சொன்னதுக்கு அப்புறம்,உட்காருரத்தை பத்தி யோசிக்கலாம்..நான் எதுக்கு வந்துருக்கேன்னா..
நீங்க, இப்ப பார்க்க வந்துருக்குற,இவங்க ரெண்டாவது பொண்ணு கீர்த்தியும் நானும், விரும்புறோம்..கல்யாணம் பண்ணிக்குறதா இருக்குறோம்..அதுக்கு முன்ன,இங்க சில விஷயம் நடந்து,இந்த சங்கடங்கள் எல்லாம் நடந்துடுச்சு.."
எந்த பீடிகையும் இன்றி, நேரடியாய் விசயத்திற்கு வந்தான்.
அவன் பேச்சில், அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
அகிலாண்டம், அவனை முறைத்துக் கொண்டு இருந்தார்.
ஆரவ்..மனதுக்குள் அவனுக்கு, 'சபாஷ்' போட்டான்.
கேசவனும் மீனாட்சியும், வேர்த்து போய் நின்றார்கள்.
விஷ்ணு,கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட விடாமல் செய்து விடுவானோ என்று, கோபத்துடன், இவனை முறைத்துக் கொண்டிருந்தான்.
முதலில் தெளிந்த விநாயகம்,
"தம்பி,என்ன திடு திப்புன்னு..இப்படி சொல்லுறிங்க.. உங்க வீட்டுல, இது தெரியுமா..??முன்னவே, இதை பேசி இருக்கலாமே..உங்களுக்கு, கல்யாணம் பண்ணுற முறை தானே.."
பார்த்தி பதில் சொல்வதற்குள்,
"அவன் சொல்லுறது பொய்..கீர்திக்கு, இவனை யாருனே தெரியாது..நல்ல விஷயம் நடக்கையில், அதை கெடுக்கவே இப்படி எல்லாம் பண்ணுறான்.."
அகிலாண்டத்திடம் இருந்து பதில் வந்தது.
"நான் சொல்லுறது,உண்மையா பொய்யான்னு, கீர்த்தியை கேட்டா, அவளே சொல்லிடுவா.. அவளை கூப்பிடுங்க.."
"சின்ன பொண்ணை என்ன கேக்குறது..நான் சொல்லுறேன்..அவளுக்கு, உங்களை தெரியாது..நாங்களே, இன்னிக்கு தான் உங்களை பார்க்குறோம்.."
கேசவன், அவசரமாய் இடையிட்டு பதில் சொன்னார்.
"உங்களுக்கு என்னை தெரியாம இருக்கலாம்..அவளுக்கு நல்லாவே தெரியும்..அவ, எங்க வீட்டுல தான் தங்கி படிச்சா..எதுக்கு விவாதம், அவளை கூப்பிட்டா தெரிஞ்சுடும்.."
"அவளையெல்லாம் கூப்பிட முடியாது..நீ, அவளை விரும்பி இருக்கலாம்..என் வீட்டுல தங்கி படிச்சதாலை, அவளும், உன்னை பார்த்திருக்கலாம்..அதுக்காக, வேலை வெட்டி இல்லாதவனை போய், அவ விரும்பி இருக்க மாட்டா.. அவ புத்திசாலி பொண்ணு.."
"இப்போ தான், என்னை அவளுக்கு தெரியாதுன்னு சொன்னிங்க..இப்போ, தெரிஞ்சு இருக்கலாம்,விரும்பி இருக்க மாட்டான்னு, ஜோசியம் சொல்லுறீங்க..எதுக்கு வீண் குழப்பம்..அவளை கூப்பிட்டா, தெரிஞ்சுடும்..கூப்பிடுங்க.."
"கண்டவன் முன்னாடி எல்லாம்…"
அகிலாண்டம் பேச்சை இடையிட்ட விநாயகம்,
"அந்த தம்பி சொல்லுற மாதிரி..பொண்ணை கூப்பிட்டு கேட்டா, தெரிஞ்சுடும்..எதுக்கு வீண் விவாதம்..அந்த தம்பியும், வெளி ஆள் இல்லியே..அவரு முன்ன, பொண்ணை கூப்பிட முடியாதுன்னு சொல்ல..அவர், உங்க வீட்டு பிள்ளை தானே..அதுனால..பொண்ணை கூப்பிட்டு கேட்டுடுவோம்..விளக்கமும் தெரிஞ்சுடும்.."
"அது..அவன்..வேணுமுன்னே.."
"அதை தான், விசாரிச்சா தெரிஞ்சுடும்..கூப்பிடுங்க உங்க பொண்ணை.."
கேசவன் புறம் திரும்பி கூறினார்.
"இவரு சொல்லுறதை நம்புறீங்க..எங்களை நம்ப மாட்டீங்களா..??அவ சின்ன பொண்ணு..விவரம் பத்தாது.. இவரு, ஏதேதோ சொல்லுறதை நம்பி..அவ கிட்ட கேட்டு,அவ மனசு ஒடஞ்சு போய்டும்.."
கேசவன், தட்டு தடுமாறி விளக்கம் கூறினார்.
"இதுல நம்பிக்கையை விட..தீர விசாரிக்கிறது, எல்லோருக்கும் நல்லது.."
அவரிடம் கூறிய விநாயகம்..
மீனாட்சியின் புறம் திரும்பி,
"இதுல, மனசு உடைய என்ன இருக்கு??..இவர் பக்கத்தை இவர் சொன்னார்..பொண்ணு பக்கமும் தெரிஞ்சா..முடிவெடுக்க சரியா இருக்கும்..இவர் சொல்லுறது பொய்யுன்னா..
இவரை இங்கிருந்து அனுப்பிச்சுட்டு, நிச்சயம் பண்ண போறோம்..இதுல, பொண்ணுக்கு எந்த பிரச்னையும் வராது.. அதுக்கு, நான் பொறுப்பு…பொண்ணை கூப்பிடுங்க.."
அதற்கு மேல் அதை மறுத்தால், இவர்கள் புறம் தவறு போல தெரியும்.மீனாட்சி, திரும்பி கேசவனை பார்த்தார்.
அவர், கண்ணசைத்து அனுமதி கொடுத்தார்.
மாடிக்கு வந்தவர், வாசலில் ஆர்த்தி நிற்பதை பார்த்தார்.அவளின் பதட்டத்தில்,அவளும் நடந்ததை கேட்டிருக்கிறாள் என்று புரிந்தது.
"கீர்த்தி எங்க..??"
"உள்ள..புடவை மாத்தறா.."
அதன் பிறகு, அவள், அறை கதவை தட்டினார்.
வெளியே வந்த கீர்த்தி, கேள்வியுடன் அன்னையை பார்த்தாள்.
அவளை, அறைக்குள் கூட்டி சென்ற மீனாட்சி,
"இங்க பாருடி..நான் சொல்லுறதை கவனமா கேளு..அங்க, அந்த பையன் வந்துருக்கான்..நீயும் அவனும், விரும்புறதா சொல்லுறான்.."
கீர்த்தியின் முகம் மலர்ந்தது.அவனை காண, கண்கள் பரபரத்தது..கால்கள், அவனை நோக்கி செல்ல துடித்தது..
அவள் முக மாற்றத்தை கண்ட மீனாட்சி..
"ரொம்ப சந்தோஷ படாத.. அங்க வந்து..அந்த பையன் யாருனே தெரியாதுன்னு சொல்லுற..அங்க தானே மா படிச்ச, பார்த்ததில்லையானு கேட்டா, ஒன்னு ரெண்டு தடவை பார்த்துருக்கேன்..பேசுனாதில்லைன்னு சொல்லுற..
அவரு, நீங்க ரெண்டு பேரும் விரும்புறதா சொல்லுறாரேனு கேட்டா.. அதெல்லாம் இல்ல..அவர் பொய் சொல்லுறார்..
ஏன்னு தெரியலன்னு, சொல்லுற..
எத்தனை தடவை கேட்டாலும்,எப்படி, மாத்தி கேட்டாலும், இதை தான் சொல்லுற..மீறி, வேற ஏதாவது சொல்லணும், செய்யணுமுன்னு நினைச்ச.. என்னை, உயிரோடையே பார்க்க முடியாது..உனக்கு, என்னை பத்தி தெரியும், பார்த்து நடந்துக்க.."
கீர்த்தியின் முகம், மறுபடியும் உற்சாகம் வடிந்து,உணர்ச்சி துடைத்து, வெறுமையை சுமந்தது.
அறையை விட்டு, வெளியே அழைத்து வந்த மீனாட்சி,
"சொன்னது ஞாபகம் இருக்குல்ல??,நான் சொன்ன படி நடந்துக்க..இல்ல..நான், என்ன பண்ணுவேணு, எனக்கே தெரியாது..நட.."
அவளை அழைத்துக் கொண்டு, கீழே வந்தார்..அவர்கள் பின்னோடு, ஆர்த்தியும் வந்தாள்.
கீழே அனைவரும், அவள் முகம் பார்த்தார்கள்.
"சொல்லுமா..இந்த தம்பி சொல்லுறது, உண்மையா..??"
விநாயகம், கீர்த்தியை பார்த்துக் கேட்டார்..