கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே...அத்தியாயம்-31

Nilasubramanian

Moderator
Staff member
அத்தியாயம்-31

கீர்த்தி வீட்டிற்கு வரும் போது, பார்த்தி வந்திருந்தான்..இருவரிடமும் சாவி இருந்தது..

"வந்துட்டீங்களா..??சீக்கிரம் வந்துடலாம்னு தான் போனேன்..ஆட்டோவே கிடைக்கல..அப்புறம், பஸ் பிடிச்சு வரேன்.."

"பரவால்ல டா…இந்தா காபி.."

"நீங்க போட்டீங்களா மாமா..சூப்பர்..உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா..??"

"கத்துக்க வேண்டிய நிலைமை..என்ன பண்ண..??தன் கையே, தனக்கு உதவி.."

"மாமா.."

"சரி சரி, மலை ஏறிடாத..??"

"கொஞ்சம் கூட பயம் இல்ல, உங்களுக்கு.."

"எல்லாம் என் நேரம்,திருச்சில எல்லோரும், என்னை பார்த்து பயப்படுவாங்க.. இங்க..எலி குட்டி எல்லாம், நாட்டாமை பண்ணுது.."

"நான் எலியா??"

"ஆமா..ஜெர்ரி எலி,அழகான எலி.."

"சரி சரி, ஐஸ் வைக்காதிங்க.."

என்று கூறினாலும்,அவள் முகம், மகிழ்ச்சியில் மின்னியது..

அவன் கொடுத்த காபியை, ரசித்து,ருசித்து, குடித்தவள்,

"மாமா, காபி சூப்பர்.."

"நன்றி மகாராணி.."

"மாமா,இன்னிக்கு..அந்த வெள்ளை பன்னியை பார்த்தேன்.."

"அது யாருடா பொம்மு..??"

"அந்த பக்கி,என்னை பொண்ணு பார்க்க வந்துச்சுல்ல, விஷ்ணு..பூசணி தங்கச்சி, தர்பூசணி பையன்..இங்க, சென்னைல தான் இருக்கு போல.."

அவள் நீண்ட விளக்கத்தில்,வழக்கம் போல வந்த சிரிப்பை அடக்கி,
"கடைல பார்த்தியா..??"

"இல்ல மாமா..பஸ்க்கு நிக்கையில,அது கார்ல வந்துச்சு..காரை நிறுத்தி, வா ட்ராப் பண்ணுறேன்னு கூப்பிடுது..எவ்ளோ கொழுப்பு, பாருங்க மாமா.."

"என்ன பொம்மு,அது,இதுன்னுட்டு..ஒழுங்கா பேசு,தெரிஞ்ச பொண்ணு,அதுனால, உதவி செய்யலாம்னு கூப்பிட்டிருப்பார்.."

"அதுக்கு, இந்த மரியாதை போதும்.அது உதவி பண்ணவா கூப்பிட்டுது,என்னை பார், என் காரை பாருன்னு, பிலிம் காட்ட கூப்பிட்டுது, பக்கி…பூசணி சொந்தம் எல்லாம் அரை வேக்காடா தான் இருக்கும் போல மாமா...."

"உன் அக்காவும், அவங்க சொந்தம் தான்.."

"அவளும் தான், ஹாப் பாயில்..அவளையும் சேர்த்து தான் சொன்னேன்.."

"நீ இருக்கியே..
சரி, அவர் கிட்ட, மரியாதையா பேசுனியா??,இல்ல, இப்படி தான் பேசுனியா??.."

"அது கிட்ட இப்படி பேசுவனா.. ஒழுங்கா, மரியாதையா,டேய் மங்கூஸ் மண்டையா, ஒழுங்கா போறியா, இல்ல, ஈவ்டீஸிங்ன்னு போலீஸ்ல பிடிச்சு கொடுக்கவான்னு கேட்டேன்..ஓடியே போய்ட்டான்.."

"என்ன பொம்மு..இப்படியா பேசுவ..அவர் அப்பா, எவ்ளோ நல்லவர்.அவரால தான், நமக்கு நல்லது நடந்துச்சு..அவரை போய், இப்படி பேசிட்டு வந்துருக்க.அவங்க அப்பாக்கு தெரிஞ்சா, எவ்ளோ வருத்த படுவாரு.."

"அதெல்லாம், அந்த பக்கி சொல்லாது..அது பண்ண வேலையை சொன்னா, அவன் அப்பாவே, அவனை பிச்சுடுவார்.. அவருக்காக தான், சும்மா விட்டுட்டு வந்தேன், அவனை..
உதவி பண்ண வந்துருந்தா, நாசூக்கா மறுத்திருப்பேன்.. இது, பவுசு காட்ட வந்துச்சு..அதான்.. டார் டார் அஹ் கிழிச்சு அனுப்பிட்டேன்.."

"இவ்ளோ எல்லாம் சிரம பட்டு இருக்க வேண்டாம் நீ.அவர் கார்ல வீட்டுக்கு வந்து,அவருக்கு சமைச்சு,வேணாம், வேணாம், ஒரு காபி போட்டு கொடுத்திருந்தா,ஓடியே போய் இருப்பார்..
இதுக்கு போய், மூச்சு வாங்க திட்டிட்டு வந்துருக்க.."

நமட்டு சிரிப்போடு கூறினான் பார்த்தி..

"மாமா..எங்க அந்த பூரி கட்டை.."

"எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் பொம்மு..நோ வயலென்ஸ்.."

"அந்த பயம் இருக்கட்டும்..சரி, பூரி கட்டையை எங்க வச்சீங்க..??"

"அதான்.. பேசலாம்னு சொன்னேனே டா.."

"ஆண்டவா,சப்பாத்தி செய்யனும், கட்டையை எடுத்து தாங்க.. உங்க கூட ரோதனையா போச்சு.."

தலையில் அடித்துக் கொண்டு,சமையல் அறைக்கு சென்றாள்.

"கொஞ்சமாச்சும், புருஷன்னு மரியாதை இருக்கா..??"

"என்ன முணுமுணுப்பு அங்க..??"
சமையல் அறையில் இருந்து, குரல் கொடுத்தாள்..

"சும்மா பேசிக்கிட்டு இருந்தேன் மா.."

"லூசு மாதிரி தனியா பேசாம,சீக்கிரம் வாங்க..சப்பாத்தி தேய்க்கனும்.."

'இதுக்கு மேல இங்க நின்னா, மரியாதை இல்ல..உள்ள போய்டு பார்த்தி..'

சில நாட்கள் கழிந்தது..
அன்று, கம்பெனியில் பேக்கிங் மெஷின் ரிப்பேர் என்றும், வேலை செய்ய முடியாது என்றும், யூனியன் லீடர் சண்முக வேல், பிரச்சனை செய்து கொண்டிருந்தான்..

தணிகாசலமும் ஆகாஷும், அவனிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்,தணிகா, அவனிடம் கோபமாய் பேசிக் கொண்டிருந்தார்..

"என்ன, நீ பாட்டுக்கு ரிப்பேர்ன்னு, சாதாரணமா சொல்லுற..அது வெளிநாட்டுல இருந்து வர வச்ச மெஷின்.எவ்ளோ விலை தெரியுமா..??அதை, பொறுப்பா பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு..இப்படி சாதாரணமா, ரிப்பேர்ன்னு சொல்ல, உங்களுக்கு சம்பளம் கொடுக்கல.."

"அதுக்கு, என்ன செய்ய முடியும்??,மெஷின்னா, ரிப்பேர் ஆக தான் செய்யும்.இதுக்கெல்லாம், நாங்க பொறுப்பேத்துக்க முடியுமா..??"
அவன் பதில், தெனாவெட்டாய் வந்தது..

விஷயம் கேள்விப்பட்டு, அங்கு வந்தான் பார்த்தி,
அது, கொஞ்சம் விலை அதிகமான மெஷின்.அதற்கு, எந்த பார்ட் ரிப்பேர் ஆனாலும்,வெளிநாட்டில் இருந்து வர வைக்க வேண்டும்.அதனால், மிகவும் டென்சன்னில்
இருந்தார், தணிகா.

இவனை பார்த்ததும்,
"சம்பளம் வாங்குறவங்க எல்லாம், தண்டத்துக்கு இருக்காங்க, எல்லாம், நாமே பார்க்க வேண்டி இருக்கு..பொறுப்பில்லாதவங்களை வேலைக்கு வைச்சா, இப்படி தான்.."

யார் மேலோ உள்ள கோபத்தை, இவனிடம் காட்டினார்..யூனியன் லீடரிடம் காட்ட முடியாமல்..

"என்னாச்சு ஆகாஷ்..??"

"ஹ்ம்ம்..காஸ்டலி மெஷின் அஹ், ரிப்பேர்ன்னு சொல்லுறான் இவன்.. என்ன மேனேஜர் நீங்க..??இதெல்லாம் பார்க்காம.."
அவனிடம் பாய்ந்தார், தணிகா..

அவருக்கு பதில் கூறாமல்,ஆகாஷ்சை பார்த்தான்..அவன் பதட்டத்துடன் நின்றான், என்ன செய்வது என்று அறியாமல்,யூனியன் லீடரின் முகம் பார்த்தான்,

அவனை, திட்டு வாங்க வைத்த சந்தோசம் தெரிந்தது..திமிரோடு பார்த்தான்..

ஒரு நிமிடம் ,அனைவரையும் பார்த்தவன்,பின், மெஷின் அருகில் சென்று,என்ன பிரச்சனை என்று ஆராய்ந்தான்..

"என்ன பண்ண போற பார்த்தி..??"

"என்ன ரிப்பேர்ன்னு பார்க்கிறேன்.."

'கண்டுபிடித்து விடுவாயா…??'
என்னும் அலட்சிய பார்வையோடு,யூனியன் லீடர்..

"விலை உயர்ந்த மெஷின்,நீ எதுவும் செஞ்சு,இன்னும் மோசம் ஆக்கிடாத..உனக்கென்ன தெரியும்,இதை பத்தி..??"

தணிகாவின் கோபத்தை கண்டு கொள்ளாமல்,மெஷினில், சில பல வேலைகள் செய்து முடித்தான்..

"இப்போ ஆன் பண்ணுங்க.."

அங்கு இருந்த ஒரு தொழிலாளியிடம் கூறினான்..

'ஆன் ஆகுதா பார்ப்போம்..'
அதே அலட்சிய பார்வை, யூனியன் லீடரிடம்..

அந்த தொழிலாளி, ஆன் செய்ததும்,மெஷின், சரியாக வேலை செய்ய ஆரம்பித்தது..

அனைவர்க்கும் ஆச்சர்யம்..
கடந்த ஆறு மாதங்களில்,பார்த்தியின் திறமையை நேரடியாய் கண்டு, அவன் மேல் சிறிது நல்ல மதிப்பு வர பெற்றவராய் இருந்தார் தணிகா,இருந்தாலும், காட்டிக் கொள்ள மாட்டார்..

குவாலிட்டி பிரச்சனை, பெரும்பாலும் குறைந்திருந்தது..கம்பிளைன்ட்,ரிட்டன் மெட்டீரில், எதுவும் இல்லை..நல்ல ஆர்டர்கள் கூட, மறுபடியும் கிடைத்தது..

இன்று இருந்த கோபத்தில், அவனை கடிந்து கொண்டார்..இப்பொழுது, அவன் எல்லாம் சரி செய்ததும்,அவர் கண்களில் பாராட்டு..அவன் தோளை தட்டி விட்டு சென்றார்..

"எப்படி டா சரி பண்ண??"

ஆகாஷின் கேள்வியில்,

"சில, விட்டு போன ஒயர்களை கனெக்ட் பண்ணேன்..சரி ஆகிடுச்சு, மெஷின்..மனுசங்களை தான் இனி சரி பண்ணனும்...."

யூனியன் லீடரை பார்த்துக் கொண்டே சொன்னான்..

கோபமாய், இவனை முறைத்து விட்டு சென்றான், அவன்..

"ரொம்ப தேங்க்ஸ் டா.. மார்னிங் வந்ததும், இந்த டென்சன்…எவ்ளோ செலவு வைக்குமோன்னு பயந்துட்டேன்.."

"அதுவா ரிப்பேர் ஆனா தான் கஷ்டம்,வேணுமுன்னு ரிப்பேர் பண்ணி வச்சா,ஈஸி அஹ் கண்டு பிடிச்சுடலாம்.."

"பார்த்தி..??"

"எனக்கு, இந்த சண்முக வேல் மேல தான் சந்தேகமா இருக்கு..இவன் தான், இவ்ளோ நாள் நடந்த பிரச்சனைக்கும் காரணமுன்னு தோணுது.."

"நீ சொல்லுறது நிஜமா..??அப்பா நம்பனுமுன்னா, ஆதாரம் வேணும் டா.."

"அதுக்கு தான் வெயிட் பண்ணுறேன்..ஒரு நாள் மாட்டுவான்.."
கூறிவிட்டு, அங்கிருந்து சென்றான்..

ஸ்டிசிங் செக்ஸ்ன் போகும் போது, அங்கு இருக்கும் சுப்பர்வைசர் கோபால், ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தான்..அந்த பெண், அழுது கொண்டிருந்தாள்..

அவன் முகம், கோபத்தை காட்டியது..தூரத்தில் நின்று பேசியதால்,அவர்கள் என்ன பேசினார்கள் என்று கேட்கவில்லை..

அந்த சூப்பர்வைசேர் போன பிறகு,அந்த பெண், அழுது கொண்டே வந்தாள்..

இது முதல் முறை அல்ல, பல முறை,அந்த பெண்ணிடம், அவன் கோபமாய் பேசி பார்த்திருக்கிறான், பார்த்தி..

அவள் வேலைக்கு புதிது..எனவே, வேலையில் தவறு போல,அதனால் திட்டுகிறான் என்று நினைத்தவன்,இதுவே தொடரவும்,

'தினமுமா தப்பு செய்யும், வேலையில.. இல்ல, வேணுமுன்னு திட்டுறானா..??'

அந்த பெண்ணை நெருங்கியவன்,
"உன் பேர் என்ன..??"

திடீரென்ற அவன் கேள்வியிலும் வருகையிலும் அதிர்ந்தவள்,ஒரு நிமிடம் முழித்து விட்டு,
"ப.. பவித்.. பவித்ரா.. சார்.."

அவள் பேரை கேட்டதும்,ஒரு நொடி கண் மூடி திறந்தவன்,
"கம் டு மை ரூம்.."
கூறிவிட்டு சென்றான்..

அவன் பின்னால், அவன் அறைக்குள், தயக்கத்துடன் நுழைந்தாள்.
கணிணியில்,அவளை பற்றிய விபரங்களை, ஒரு நிமிடம் பார்வையிட்டான்..பத்தொன்பது வயது தான் ஆகி இருந்தது, அவளுக்கு.

"ஏன், பிளஸ் டூ வோட நிறுத்திட்ட..??"

"வீட்டு நிலைமை சரி இல்ல..சார்.."

"அப்பா..??"

"ரெண்டு வருஷம் முன்ன…ஆக்சிட்டேன்ட்ல…"

"ஹ்ம்ம்..புரியுது.."

"ஏன் அழுத்துட்டு இருந்த..??"

ஒரு நொடி திகைத்தவள்..
"அழல சார்.."

"ஓ…
அப்போ ஏன்?? அந்த சூப்பர்வைசேர் உன்னை திட்டிட்டு இருந்தார்..??"

"அது…அது…"

"இப்போ நீ சொல்லுறியா.. இல்ல.. அவனை கூப்பிட்டு கேட்கவா..??"

"வேண்டாம் சார்..அவரு,அவரு..என் கிட்ட தப்பா பேசுறார் சார்..அவர் கூட வான்னு கூப்பிடுறார்.. நான், வரமாட்டேன்னு சொன்னேன்..அதுக்கு திட்டுறார்.. தினமும் இப்படி தான், டார்ச்சர் பண்ணுறார்..என்னால, எதுவும் பண்ண முடியல.."

ஒரு நொடி, கோபத்தில் பல்லை கடித்தவன்,
"ராஸ்கல்…உங்க யூனியன்ல
கம்பிளைன்ட் பண்ண வேண்டியது தானே..??"

"நான் வேலைக்கு புதுசு சார்..இன்னும் பெர்மனேன்ட் ஆகலை.. யூனியன் மெம்பெர் இல்ல..

அதோட, அவர், இங்க ரொம்ப வருசமா இருக்காரு..நான் போய் சொல்லி,பிரச்சனை பெருசாகி, என்னை வேலையை விட்டு அனுப்பிட்டா,
என் குடும்பமே, என் வருமானத்தை நம்பி தான், இருக்கு சார்..என் ரெண்டு தங்கச்சியும், ஸ்கூல் படிக்குறாங்க..அம்மாக்கு ஆஸ்துமா.அதுனால, ரொம்ப வேலை பார்க்க முடியாது..வீட்டுலேயே தைச்சு கொடுகிறாங்க..

நான்,இங்க தைக்குறேன்..எங்க ஏரியா அக்கா சொல்லி தான், இங்க வேலைக்கு வந்தேன்..அப்போல இருந்து, இவர் இப்படி தான் பேசுறார்..வீட்டு நிலைமை நினைச்சு, பொறுத்து போறேன்..என் கிட்ட மட்டும் இல்ல.

இன்னும் சில பேர் கிட்டயும், இப்படி தான் நடக்குறார்..அவங்க வீட்டுல ஆண் துணை இருக்கறதால..அவங்க கிட்ட, அதிகமா கட்டாய படுத்த முடியல..எனக்கு யாரும் இல்லைன்னு தெரிஞ்சு.."
சொல்லி விட்டு,அழ ஆரம்பித்தாள்..

கண்கள் சிவக்க கேட்டவன்,
"உனக்கு, இனி அவனால என்ன பிரச்சனை வந்தாலும், என் கிட்ட சொல்லு,நான் பார்த்துக்குறேன்.."
ஆச்சர்யமாய், அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

"என்னை, உன் அண்ணனா நினைச்சுக்கோ.."

சரி என்று தலை அசைத்தவள்,கண்களை துடைத்துக் கொண்டு,அங்கிருந்து சென்றாள்..

அவன் அறையில் இருந்து, கண்களை துடைத்துக் கொண்டு அவள் வெளியேறியதை, யூனியன் லீடர் சண்முக வேல் பார்த்தான்..

'இந்த பொண்ணுக்கு, இங்க என்ன வேலை..??இந்தாள் அறையில இருந்து அழுது கிட்டு போகுது..எதுவும் விஷயம் இருக்குமோ..??
பொண்ணுங்க விஷயத்துல, இவன், அப்படி இப்படியோ..??கண்டு பிடிப்போம்..'

அவள் சென்றதும்,அந்த சுப்பர்வைசரை கூப்பிட்டு, கடுமையாய் கண்டித்து அனுப்பினான்.
அவன், கோபத்துடன் அங்கிருந்து சென்றான்..

அன்று மாலை, அதே மனநிலையில் வீட்டிற்கு வந்தான்..

அவன் முகம் பார்த்து,அவன் மனம் சரி இல்லை என்று புரிந்த கீர்த்தி,
ஒன்றும் கேட்காமல்,அவனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்..

அதையும், ஒரு சிந்தனையோடு குடித்தான் பார்த்தி..

அவன் அருகில் அமர்ந்து,
"என்னாச்சு மாமா..??ஏதும் பிரச்சனையா..??"

அதில் கலைந்தவன்,
"ஒன்னும் இல்ல..பொம்மு..ஆபிஸ் டென்சன்.."

"ஆபிஸ் டென்சன் எல்லாம்,ஆபிஸோட விட்டுடனும்..இங்க..என் மாமாவா மட்டும் இருங்க..டென்சன் பறந்து போய்டும்.."
அவள் பதிலில்,புன்னகைத்தவன்..

"ஹ்ம்ம்…சொல்லு பொம்மு..இப்போ, உன் மாமாவா ஆயிட்டேன்.."

"க்கும்..போங்க மாமா..இப்போ..நானும் வேலைக்கு போறேன்..ரெண்டு பேருக்கும்,பேசுற நேரமே குறைஞ்சு போச்சு..இன்னிக்கு,விடிய,விடிய, கதை பேசுறோம்.."

அவளை பார்த்து கண் அடித்து,
"பேசிடுவோம்…"
என்று அவள் கை பிடித்து முத்தமிட்டான்..

"மாமா..நான் பேச மட்டும் தான் சொன்னேன்…"

"நானும், அதை தான் சொன்னேன் பொம்மு.."
அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கூறினான்..

அவன் பதிலில்,
"போங்க மாமா..நீங்க மோசம்.."

"நான் ஏதும் பண்ணலியே பொம்மு.."

"ஆஹா..அப்பாவி நீங்க.."
அவர்களின் ஸ்வீட் நத்திங்ஸ், வெகு நேரம் தொடர்ந்தது..

உணவு வேளை வரை..
இரவு உணவு உண்டார்கள்..

இரவு உணவு வேளை முடிந்ததும்,படுக்கை அறையில் தொடர்ந்தது பேச்சு..

வெகு நேரம் பேசிய பிறகு,
"சரி பொம்மு தூங்குவோமா..ரொம்ப நேரம் ஆச்சு.."
கொட்டாவியை வெளியேற்றிய படி கூறினான்..பார்த்தி..

மணி பார்த்த கீர்த்தி..
"இன்னும் பைவ் மினிட்ஸ் மாமா,எனக்கு தூக்கம் வரல.."

பார்த்தியின் பார்வை மாறியது,
"தூக்கம் வரலியா..அப்போ…"
கூறிக்கொண்டே அவளை அணைத்தவன் கைகளை, மெதுவாய் விலக்கியவள்,
"சும்மா இருங்க மாமா.."

"தூக்கமும் வரலைன்னு சொல்லுற..தொடவும் விட மாட்டேங்குற..போ....பொம்மு.."

"ப்ளீஸ் மாமா..நீங்க பேசலைனா.. நான் பேசுறதை கேளுங்க.."

"அதை தானே, உன்னை பார்த்தா நாளா பண்ணுறேன்.."

"மாமா…."

"சும்மா..விளையாட்டுக்கு சொன்னேன் டா.. பேசு..பேசு..நீ பேசுனா, தாலாட்டு மாதிரி செம்மையா இருக்கும்..பேசு.."

"மாமா…ரொம்ப கலாய்காதிங்க.."
சிணுங்கினாள் கீர்த்தி..

அப்பொழுது,அவள் மொபைலில் அலாரம் அடித்தது..
'இப்போ ஏன் அலாரம் வச்சுருக்கா..??'
அவன் யோசனையை தடை செய்வது போல,
அவன் கன்னத்தில் முத்தமிட்டு,
"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா.."

அவள் வாழ்த்தில், ஆச்சர்யப் பட்டவன்..
"என் பிறந்த நாள், எனக்கே மறந்து போச்சு..நீ, சரியா ஞாபகம் வச்சுருக்கியே, பொம்மு.."

"என் பிறந்த நாள் அன்னைக்கு,நீங்க சொன்னது, இன்னும் ஞாபகம் இருக்கு மாமா..உங்க பிறந்த நாளை, யாரும் ஞாபகம் வச்சுக்க மாட்டாங்க..வாழ்த்து சொல்ல மாட்டாங்கன்னு சொன்னிங்க..

அப்போவே..எங்க இருந்தாலும், உங்களுக்கு விஷ் பண்ணி,உங்க ஸ்பெஷல் டேயை, இன்னும் ஸ்பெஷல் ஆக்கனுமுன்னு முடிவு பண்ணிட்டேன்.

உடனே கல்யாணம் ஆகி,உங்க கூடவே இந்த பிறந்த நாளுக்கு இருப்பேன்னு, நினைச்சு கூட பார்க்கல மாமா.."
சந்தோசத்துடன் கூறியவள்,

"வாங்க..கேக் கட் பண்ணலாம்.."

"சூப்பர் பொம்மு..உன் பிறந்த நாளுக்கு நான் செஞ்ச மாதிரி, எல்லாம் ரெடி பண்ணிட்டியா.."

"ஆமா..மாமா.."
புன்னகைத்தவளை பார்த்து,

"அப்போ, கிஸ்சும் கிடைக்கும்னு சொல்லு.."

"அஹ்ஹா.. ஆசை தான்..ஒழுங்கா, கேக் கட் பண்ணுங்க.."
கூறிவிட்டு,கேக்கை எடுத்து வந்து,டேபிளில் வைத்தாள்..

அதை கட் செய்தவன்..முதல் துண்டை அவளுக்கு ஊட்டினான்..

அதை லேசாக கடித்தவள், அதையே அவனுக்கு திரும்ப ஊட்டினாள்..

"என்ன பொம்மு..உப்பு, உரைப்பு சரியா பார்க்காம, எனக்கே திரும்ப கொடுத்துட்ட,என் பொம்முவா இது..??"
அவனுக்கு பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்..

"பட், நான் கரெக்ட் அஹ், முதல்ல உனக்கு ஊட்டிட்டேன் பாரு..உப்பு பார்க்காம.."

அவன் கேலிக்கு பதில் சொல்லவில்லை அவள்..

"சரி, என் கிப்ட் எங்க..??எடு,எடு.."

"தரேன் மாமா.."
சொன்னவள், அவனை நெருங்கி வந்தாள்..






 

Sundarji

Active member
இதனால் என்ன தீமைகள் விளையும். பிரச்சினை வரும்?
 
Top