அத்தியாயம்-32
அவனை நெருங்கிய கீர்த்தியை பார்த்தவன்,
'முத்தமிட போகிறாளோ??ஆனால், அப்பொழுது கேட்டதற்கு,அப்படி சொல்லவில்லையே..கையிலும், எந்த பரிசும் இல்லை..'
"என்ன டா பொம்மு..??கிப்ட் எங்க??கிப்ட் உள்ள இருக்கா..??"
"ஆமா மாமா.."
"போய் எடுத்துட்டு வந்து தா..சீக்கிரம்.."
"இப்போ தர முடியாது..கொஞ்சம் வெயிட் பண்ணனும் நீங்க.."
"இன்னிக்கு பிறந்த நாள்,கிப்ட் இன்னிக்கு தான் வேணும்..இன்னிக்கு தராம, எப்போ தருவ??அடுத்த பிறந்த நாளுக்கா??"
"இந்த கிப்ட்க்கு நீங்க வெயிட் பண்ணி தான் ஆகனும் மாமா.."
"அவ்ளோ ப்ரெசியஸ் கிப்ட் அஹ்..உடனே கிடைக்காத அளவு..ஒரு வேளை, வளருதோ..??"
கிண்டலாய் கேட்டான்..
புன்னகையுடன்,
"ஆமாம் மாமா,வளருது.."
"எங்க??"
"இங்க.."
அவன் கைகளை எடுத்து,தன் வயிற்றில் வைத்துக் கூறினாள்..
இதை எதிர் பார்க்காத பார்த்தி,ஒரு நிமிடம் வாய் அடைத்து நின்றான்..
இவ்வளவு நேரம் கிண்டல் செய்தவன்,கிப்ட் கேட்டு கலாய்த்தவன்,இப்பொழுது, பேசும் மொழி மறந்து,பேச்சற்று,வாய் அடைத்து நின்றான்..
அவன் முகம் பார்த்து, அவன் உணர்வு புரிந்து,அவனை அணைத்து, அவன் மார்பில் முகம் புதைத்தாள்..
"பொ.. பொம்மு..நிஜமாவா டா.. கன்போர்ம் பண்ணிட்டியா?? டாக்டர் கிட்ட போய்.."
திக்கி,திணறி,பதட்டத்துடன்,இது கனவாய் இருக்கக் கூடாது என்ற வேண்டுதலுடன்,நிஜத்தை நம்ப பயந்த மனநிலையுடன், கேட்டான்..
"மெடிக்கல்ஸ்ல, கிட் வாங்கி செக் பண்ணிட்டேன் மாமா..உங்க பேபிக்கு, 50 டேஸ்.."
"இருந்தாலும்,டாக்டர் கிட்ட போகணும் டா.. போய் காண்பிச்சு, அவங்க சொன்னா தான் எனக்கு திருப்தி.பாப்பா எப்படி இருக்கு..??என்னன்னு தெரிஞ்சுக்கணும்.."
"போவோம் மாமா..நாளைக்கு போவோம்..உங்க கிட்ட தான் முதல்ல சொல்லனும், உங்க கூட டாக்டர் கிட்ட போணுமுன்னு தான், வெயிட் பண்ணேன்.."
"முன்னவே சொல்லி இருந்தா, அப்போவே போய் இருக்கலாம் தானே டா.."
"உங்களுக்கு, பிறந்த நாள் பரிசா சொல்லணுமுன்னு தோணுச்சு..உங்களுக்கு மட்டும் இல்ல..எனக்கும்,பரிசு.."
தன் வயிற்றில் கை வைத்து சொன்னாள்..
"இது தான் டா, என் வாழ்க்கையிலேயே சிறந்த பிறந்த நாள் பரிசு..மறக்க முடியாத பிறந்த நாள்.."
கண் கலங்க சொன்னான்..
அவன், உணர்ச்சி வசப்பட்டிருக்கிறான் என்று புரிந்து,
அவனை படுக்கையில் அமர வைத்து,
அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
"மனையாளின் சுமை யாவும் தாங்கிடுவான்!!
அவள் கண நேரம் பிரிந்தாலும், ஏங்கிடுவன்.!!
உப்புக்கல்லை வைரமாய்..
செப்புச்சிலை மாற்றினாள்!!
நாளெல்லாம் சொர்க்கமே,
நேரில் வந்து இங்கு தோன்றும்!!
வேறு என்ன இன்னும் வேண்டும்.!!
கூட வரும் நிழல் வேறு எது,
கொண்டவளை போல இங்கே!!
இந்த நிழல் இருட்டினிலும்,
பின் தொடர்ந்து ஓடி வரும்!!
கன்னி பெண்கள் பல பேர்களுக்கு,
நல்ல துணை வாய்ப்பதில்லை!!
அந்த குறை எனக்கு இல்லை,
மாமன் மனம் அன்பின் எல்லை.!!
ஒரு தாயை இழந்தாலும் வாழ்க்கையிலே!!
இங்கு மறுதாயோ, மனையாளின் உருவத்திலே!!
துன்பம் என்ற வார்த்தையை,
என்றுமில்லை வாழ்விலே!!
நாளெல்லாம் சொர்க்கமே!!"
அவள் முகம் நிமிர்த்தி,முகம் முழுவதும் முத்தமிட்டான், ஒரு வேகத்தில்..
அதன் பின், அவள் மடி சாய்ந்து,அவள் வயிற்றில் முகம் பதித்து, முத்தமிட்டான்..
அவன் தலை கோதினாள் பெண்..
"எங்க அம்மாவை, இப்போவே பார்க்கனும் போல இருக்கு..சீக்கிரமே பெத்துக் கொடு எங்க அம்மாவை.."
"எனக்கு முதல்ல,என் மாமனார் தான் வேணும்..அவர் தான், தன் போட்டோ மூலமா, இந்த பீம் பாயை அறிமுக படுத்தினார்.."
"ச்சு.. எனக்கு, என் அம்மா தான் வேணும்.."
"எனக்கு, பெரிய பீம் பாய் தான் வேணும்..அவர் பிறந்ததும்,அவர் காது திருகி,ஏன் இப்படி, என் மாமாவை, அன்பு காட்டாம, பூசணி பேச்சை கேட்டு,திட்டி வளர்த்திங்க..வெறுதிங்கன்னு கேட்டு,காதை பிடிச்சு திருகனும்.."
அவள் முக பாவத்தில், செய்கையில்,சத்தமாய் சிரித்தான்..
"முன்னவே, இந்த நல்ல விஷயம் தெரிஞ்சு இருந்தா,ஸ்வீட் வாங்கிட்டு வந்துருப்பேன்.."
"எது,என் மாமனாரை காது திருகுற விஷயமா..??"
"ச்சு.. பொம்மு..நீ கர்ப்பமா இருக்குற விஷயம்..இப்ப, கேக் தான் இருக்கு..இந்தா, இதை சாப்பிடு.."
"ம்ஹம்ம்..வேணாம் மாமா.."
"ஏன்டா பொம்மு..??"
"உங்க பிள்ளைக்கு, இதெல்லாம் பிடிக்கல..சாப்பிட்டா உமட்டுது..வாமிட் வர்ற மாதிரி இருக்கு.."
"ரொம்ப கஷ்டமா இருக்கா டா.."
அவள் கைகளை அழுத்தி பிடித்துக் கொண்டு கேட்டான்..
"இல்ல மாமா..சந்தோசமா இருக்கு.."
அவன் தோள் சாய்ந்தாள் பாவை..
அவர்கள் மோனா நிலை கலைந்த பிறகு,
"தூங்குவோமா டா.. நாளைக்கு செக் அப் போனும் காலையில.."
"ஹ்ம்ம்.."
கூறியவள்,படுத்துக் கொண்டாள்..
அவள் அருகே, அவளை அணைத்த படி படுத்துக் கொண்டான் பார்த்தி..
சிறிது நேரத்தில் தூங்கினார்கள்..
மறுநாள் அலுவலகத்துக்கு, அரை நாள் விடுப்பு போட்டவன்..அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்..
அங்கு மருத்துவரை சந்தித்து,அவர், கர்ப்பம் தான் என உறுதி செய்து கூறும் வரை, ஒரு பதட்டத்துடனேயே இருந்தான், பார்த்தி..
அவர் உறுதி செய்ததும்,நிம்மதி பெரு மூச்சு விட்டான்..
பொதுவான, சில ஆலோசனைகளுக்கு பிறகு,அவர்கள், எப்பொழுது பரிசோதனைக்கு வர வேண்டும் என்று கூறி அனுப்பினார்..
மகிழ்ச்சியுடன் இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்..
அன்று அவள், பள்ளிக்கு விடுப்பு எடுத்து இருந்தாள்..
அவளை ஒய்வெடுக்குமாறு கூறி விட்டு,ஸ்வீட் பாக்ஸ்சுடன் கம்பெனிக்கு வந்தான்..
ஆகாஷிற்கு விஷயம் சொல்லி, இனிப்பு கொடுத்தவன்,மற்றவர்களுக்கும் கொடுக்க சொல்லி,பியூன்னிடம் கொடுத்து விட்டான்..
ஆகாஷ், அவனை வாழ்த்தி விட்டு சென்றான்..
அன்றைய நாள், மகிழ்ச்சியுடன் சென்றது..மாலையில், அவள் எடுத்து கொடுத்த, பேண்ட் ஷர்ட்டை போட்டுக் கொண்டான்.இருவரும், கோவிலுக்கு சென்று வந்தார்கள்...
அவளின் மசக்கை உணர்ந்து, அதிகம் சுற்றாமல், வெளியே உண்ணாமல், வீட்டிற்கு வந்தனர்..
காலையில் மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டாள், கீர்த்தி..
எழும் போது.எனவே, காலை உணவை பார்த்தியே செய்தான்..
மதியம், அவளுக்கு மட்டும் ஏதாவது செய்து வைத்து விட்டு,இவன் கேன்டீனில் உண்டான்..
மறுபடியும் ஒரு நாள் ரௌண்ட்ஸ் போகும் போது,பவித்ரா அழுது கொண்டு இருப்பதை பார்த்தான்..
"பவித்ரா.."
இவன் குரல் கேட்டதும்,வேகமாய் கண்களை துடைத்துக் கொண்டாள்..
"ஏன் அழுதுட்டு இருக்க..??"
"ஒண்ணும் இல்ல சார்.."
அங்கே, சுற்றிலும் ஆட்கள் போய் வந்து கொண்டிருந்த படியால்,ஏதும் கேட்க முடியாமல்..
"எங்கூட வா.."
அவன் அறைக்கு அழைத்து சென்றான்.
"உட்காரு…"
"பரவால்ல சார்.."
"உட்காருன்னு சொன்னேன்.."
அவன் குரலின் அழுத்தத்தில் அமர்ந்தாள்..
"என்ன பிரச்சனை.. இப்போ சொல்லு.."
"ஒன்…னு..."
அவன் பார்வையில்,
"அந்த சூப்பர்வைசர் கொஞ்ச நாளா, இங்க, முறைச்சுட்டே சுத்துனார்..மத்தபடி, முன்ன மாதிரி பேசல..அதுவே போதும்னு,நானும் அமைதியா இருந்தேன்..நேத்து நைட் குடிச்சுட்டு வந்து,என் வீட்டு முன்னாடி கலாட்டா பண்ணிட்டார்..
ஏரியால, ஒரே அவமானமா போச்சு..
மூணு பொண்ணுங்களை வச்சுட்டு,எங்க அம்மாக்கு, இந்த பேச்செல்லாம் சகிக்கலை..
என்னை பயங்கரமா திட்டிட்டாங்க..வேலைக்கே போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க..
திடீருன்னு நிக்க முடியாதுன்னு சொல்லி,இன்னிக்கு வந்தேன்..
ஏரியால, எல்லோரும் பார்க்குறது,வித்தியாசமா தெரியுது..ஜாடையா பேசுறாங்க.."
பல்லை கடித்து, கோபத்தை அடக்கிய பார்த்தி,
"நான் அவ்ளோ கண்டிச்சும்.. இப்படி பண்ணுறானா, ராஸ்கல்..
என்ன பேசுனான்.??."
"…."
"உன் கிட்ட தான், கேட்குறேன்.."
அவன் அதட்டலில்,
"உங்களையும் என்னையும் சம்பந்த படுத்தி..தப்பா பேசிட்டான்.."
மெல்லிய குரலில்,தயங்கியவாறு கூறி விட்டு,
அழ ஆரம்பித்தாள்..
கை முஷ்டி மடக்கி,கோபத்தை கட்டு படுத்திய பார்த்திக்கு,அவனை இப்பொழுதே சென்று மூக்கை உடைக்க வேண்டும் போல இருந்தது..
அப்படி செய்தால்,அவன் கூறியது உண்மை போல ஆகி விடும் என்று உணர்ந்து,
"நீ போ..நான் பார்த்துகிறேன்.."
"சார்..முன்ன மாதிரி..நீங்க..கண்டிச்சு,அவன் திரும்ப கலாட்டா பண்ணா..???"
"அதெல்லாம் பண்ண மாட்டான்..நீ போ..இனி, இது பத்தி, கவலை படாத.. வேலையை விடாத,சீக்கிரம் சரி பண்ணுறேன்..எல்லாத்தையும்.."
அவன் குரலின் உறுதியில், தலை அசைத்து விட்டு எழுந்து சென்றாள்..
கண்ணை துடைத்துக் கொண்டு, அவன் அறையில் இருந்து வெளியே வந்தாள்.
மறுபடியும்,இந்த காட்சி, யூனியன் லீடரின் கண்ணில் பட்டது..
'கன்பார்ம்..இந்தாளூ சரி இல்லை..'
அதன் பின், சிறிது யோசனையில் ஆழ்ந்த பார்த்தி,பியூனை அழைத்து,பொதுவாய் விசாரிப்பது போல,சில தகவல்கள் சேகரித்தான்..
அதன் அடிப்படையில் திட்டமிட்டவன்,பிறகு, மாலையில் வழக்கம் போல வேலை முடிந்து,வீடு திரும்பினான்..
வீட்டிலும் சிந்தனையோடு இருந்தவனை கண்டு,
"என்ன மாமா..??யோசனையாவே இருக்கீங்க.."
"ஒண்ணும் இல்ல டா.."
அதற்கு மேல், அவனுக்கு தொந்தரவு தராமல்,தன் பள்ளி குழந்தைகளின் குறும்பு,சேட்டை பற்றி, சிறிது நேரம் பேசினாள். அவளுக்கு காது கொடுத்திருந்தாலும், அவன் மனம் இங்கு இல்லை..அதை, சில நிமிடங்களில் புரிந்து கொண்ட கீர்த்தி..
அவனுக்கு உணவு தயாரிக்க சமையல் அறைக்குள் போனாள்..
அவள் சமையல் அறையில் இருக்கும் போது,அறை வாசலுக்கு வந்த பார்த்தி,
"கொஞ்சம் வேலை இருக்கு,வெளிய போய்ட்டு வரேன்.."
அவனை திரும்பி பார்த்தவள்,
"இந்த நேரத்துலயா..??"
"ஹ்ம்ம்..ஆமா.."
எங்கே போகிறாய் என்று?? கிளம்பும் போது கேட்க கூடாது என, அவள் தயங்கி நிற்கும் போது,
"கதவை லாக் பண்ணிக்கோ..திவ்யா.. கிளம்புறேன்.."
கூறிவிட்டு, வேகமாய் வெளியேறினான்..
'திவ்யா வா..??..'
திகைத்து நின்றவள்,உணர்வுக்கு வரும் முன் அவன் சென்றிருந்தான்..
அதன் பின்,கதவை பூட்டி விட்டு ஹாலில் அமர்ந்தவள்,
'என்னாச்சு இவருக்கு.??.அடிக்கடி..ரொம்ப யோசிக்குறார்..மூட் அவுட் அஹ் இருக்கார்..கேட்டாலும், ஒன்னும் சொல்ல மாட்டேங்குறார்..ஆபீஸ் டென்சன்னு ,ரொம்ப கேள்வி கேட்க கூடாதுன்னு பார்த்தா, வர வர எதுவும் சரி இல்லை..'
சிந்தனையில் ஆழ்ந்தவள், பிறகு, இரவு உணவு தயாரித்து விட்டு,அவனுக்காக காத்திருந்தாள்.அவன் வர வெகு நேரம் ஆகியது..
அவள், சரியான நேரத்துக்கு சாப்பிட்டு விட வேண்டும் என்பது, அவன் அன்பு கட்டளை.எனவே, தன் உணவை அவள் முடித்த பிறகும், அவன் வரவில்லை..
அந்த ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத சாலையில், முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு காத்திருந்தான் பார்த்தி.
அந்த வழியே, தன் டூ வீலரில், குடி போதையில் வந்தான்,சூப்பர்வைசர் கோபால்..
தாறுமராய் ஓட்டி வந்தான், வண்டியை..
அவன்,பார்த்தியை நெருங்கும் நேரத்தில்,சரியாய், ஒரு நீள கம்பை, அவன் வண்டி சக்கரத்துக்குள் விட்டான்.. வண்டி தடுமாறி, சரிந்தது. கோபாலும் சரிந்தான்..
"டேய்..எவன் டா.. என்னை தள்ளி விட்டது..தைரியம் இருந்தா முன்ன வாடா.."
குடி போதையில், எழுந்து கொள்ள முடியாமல் படுத்திருந்த படியே உளறினான் கோபால்..
அவன் முன்னே போய் நின்று,
"நான் தான் டா, பரதேசி..என்ன டா பண்ணுவ..??"
தன் கண்களை கசக்கி, அவன் யார் என்று பார்க்க முயன்றான் கோபால்..
இவன் முகம் துணியால் மறைக்க பட்டிருந்ததாலும்,அவனின் போதையாலும், இவன் யார் என்று அவனுக்கு புலப்படவில்லை..
"ஏய்,யார் டா நீ??எதுக்குடா தள்ளி விட்ட.."
"பொண்ணுங்கன்னா உனக்கு அவ்ளோ சீப் அஹ் தெரியுதா??இனி, எந்த பொண்ணு கிட்டயாச்சும் வம்பு பண்ண,மகனே, உயிரை மட்டும் விட்டுட்டு, ஏன்டா, உயிரோட இருக்கோம்னு நினைக்க வைச்சுடுவேன்.."
கூறிவிட்டு, அவனை அடிக்கத் தொடங்கினான்..
அவனின் அலறல்,அந்த நிசப்த பூமி எங்கும் எதிரொலித்தது..
கடைசியில்,அவன் வலது கையை பிடித்து திருப்பி, முழங்கையை உடைத்தான்..
"அ..…ம்மா…."
"இப்போ தான், உன் அம்மா ஞாபகம் வருதோ,அவங்க மாதிரி தானே மத்த பொண்ணுங்களும்..ஒழுங்கா,ஒழுக்கமா இரு.."
கூறிவிட்டு,அங்கிருந்து கிளம்பினான், பார்த்தி..
வீட்டிற்கு வந்து கதவை தட்டினான்..
அவனுக்காக விழித்திருந்த கீர்த்தி,வந்து கதவை திறந்தாள்..
"எங்க மாமா போய்ட்டீங்க..??"
கேட்டுக்கொண்டே அவனை பார்த்தவள்,அவன் தோற்றத்தில் திகைத்து,
"என்னாச்சு மாமா..??கண் எல்லாம் சிவந்து, முகம் வேர்த்து,தலை முடி கலைஞ்சு, எப்படியோ இருக்கீங்க.."
"ஒண்ணும் இல்லை.."
"அப்புறம்,ஏன் இப்படி.??."
கேட்டுக்கொண்டே அவன் வலது கையை பிடித்தாள்..
"ஆ…"
என்று அலறி, கையை எடுத்துக் கொண்டான்..
"என்ன மாமா..கை சிவந்து,வீங்கி இருக்கு..அடி பட்டுடுச்சா..??எங்கேயாவது இடிச்சுக்கிட்டீங்களா..??"
"அதெல்லாம் இல்ல.."
அவள் பதட்டம் பார்த்து,
"லைட் அஹ் பைக் ஸ்கிட் ஆகிடுச்சு..பாலன்ஸ் பண்ணும் போது,கொஞ்சம்..இப்படி..ஒன்னும் இல்ல..சரி ஆகிடும்.."
சொல்லிவிட்டு, உள்ளே சென்றான்..
அவன் பின்னே சென்றவள்,அவன் குளியல் அறையில் இருந்து வந்ததும்,வெந்நீர் ஒத்தடம் கொடுத்து,ஆய்ன்மெண்ட் தடவி விட்டாள்..
"பார்த்து போய்ட்டு வாங்க மாமா.."
அவள் கண்களில் கண்ணீர்..
"ச்சு.. ஒன்னும் இல்ல டா.. இதுக்கு போய் அழாத.."
அவள் கண்ணீரை துடைத்து விட்டு கூறினான்..
அதன் பின், இரவு உணவு எடுத்து வந்து அவனுக்கு ஊட்டி விட்டாள்..
மறுநாள்,கம்பனிக்கு சென்றான் பார்த்தி..
அந்த சூப்பர்வைசர் வேலைக்கு வர வில்லை..
"என்னாச்சு மணி..??"
பியூனிடம் விசாரித்தான்..
"ஊர் வம்பு எல்லாம் இழுத்தா, அப்படி தான்..எவன் கூடவோ வம்பு இழுத்துருப்பான் போல..அவன் கையை உடைச்சு விட்டுட்டான்..கையில ஃபாக்ரச்சர் (fracture) ஆம்.. இன்னும் பல இடத்துல பயங்கர அடியாம்..
ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்கான். இப்போதைக்கு, மூணு மாசம் மெடிக்கல் லீவு போட்டுருக்கான்.."
கூறிவிட்டு சென்றான், மணி..
அவன் போனதும், புன்னகைத்துக் கொண்டான் பார்த்தி..
சிறிது நேரத்தில், பவித்ரா வந்தாள்..
"சார்.."
"சொல்லு.."
"அந்த சூப்பர்வைசருக்கு பயங்கர அடியாம்..ஹாஸ்பிடல்ல இருக்காராம்.."
"ஹ்ம்ம்..இப்போ தான் மணி சொன்னான்.."
"சார்.."
அவளை நிமிர்ந்து பார்த்தான், பார்த்தி..
அவனை கை எடுத்து கும்பிட்டு,
"தேங்க்ஸ் சார்..இதை நான், எப்போவும் மறக்க மாட்டேன்.."
"ஏய்,எனக்கு எதுக்கு நன்றி..நான் என்ன பண்ணேன்..??"
"எனக்கு தெரியும் சார்..இல்ல, இல்ல.. அண்ணா..அப்படி கூப்பிடலாம் தானே.."
"தாராளமா கூப்பிடு..ஆனா நான்…"
"தெரியும் அண்ணா..வேற ஒன்னும் சொல்லாதீங்க..தேங்க்ஸ்..தேங்க்ஸ் எ லாட்..அண்ணா.."
கூறிவிட்டு, புன்னகையுடன் வெளியே சென்றாள்.
அவன் அறை வாசலில் நின்ற சண்முக வேல்,
'உஷார் பண்ணிட்டான் போலேயே..'
வழக்கம் போல,யூனியன் லீடர் மைண்ட் வாய்ஸ் தான், வேறு எது??..