அத்தியாயம்-35
ஆகாஷை பார்த்து அதிர்ந்து நின்றான்,சண்முகம்..
"சொல்லுங்க சண்முகம், இங்க என்ன நடக்குது..??"
"…."
"நம்ம கம்பெனி கூட்ஸ், யாரு வண்டியிலோ போகுது..ஏதோ ஒரு வண்டில இருந்து, இங்க சரக்கு இறங்குது..நான் எதுவும் இப்போ இம்போர்ட் பண்ணலியே.."
பேசிக்கொண்டே, அந்த பார்ஸலை ஓபன் செய்தான் ஆகாஷ்..
பார்த்தவன் அதிர்ந்தான்..
"வாட்ஸ் திஸ் சண்முகம்..??எல்லாம் ஸ்டிச்செட் மெட்டிரியல்..நாம கார்மெண்ட்ஸ் நடத்துறோமா..??இல்ல..ரெடி மேட் ஷாப் அஹ்.??.இங்க இருந்து தைச்சு கொடுக்குறோம்..இது, எங்க இருந்து தைச்சு வருது..சொல்லுங்க..ஸ்பீக் அவுட் மேன்.."
அவன் அருகில் சென்று,அந்த துணிகளை வாங்கி சோதித்த பார்த்தி,
"நௌ கிளியர் ஆகாஷ்..இது எல்லாம், குவாலிட்டி கம்மியான தைத்த துணி..நம்ம நல்ல குவாலிட்டி துணியை, வேற எங்கோ ஏத்தி விட்டு, இந்த துணியை, நம்ம கஷ்டமர்ஸ்க்கு தர்றாங்க..அதான், இவ்ளோ நாள் குவாலிட்டி பிரோப்ளேம் ஆகி இருக்கு…"
இதை கேட்டு கொந்தளித்த ஆகாஷ்,யூனியன் லீடேரின் சட்டையை பிடித்தான்..
அவனை விலகி விட்டான் பார்த்தி..
"எத்தனை வருஷமா இங்க வேலை பார்க்குற..கிட்ட தட்ட பதினைஞ்சு வருசமா இருக்கியா..??எங்க உப்பை சாப்பிட்டு, எங்களுக்கே துரோகம் பண்ணுற..எவ்ளோ தைரியம் உனக்கு..??"
"யூ ஆர் சஸ்பெண்ட்டெட்.. உன் கிட்ட விசாரணை முடிச்ச அப்புறம் முடிவு எடுக்க படும், உன் தண்டனை,டிஸ்மிஸ் பத்தி…இவ்ளோ நாள் இங்க வேலை பார்த்ததால..உன்னை, போலீஸ்ல பிடிச்சு கொடுக்காம விடுறேன்.."
அங்கிருந்த அனைவரையும் பார்த்தான் ஆகாஷ்,பத்து பேர் இருந்தார்கள்..
"ஆல் ஆர் சஸ்பெண்டெட்.."
சத்தமாக கூறியவன்..அடுத்த வார்த்தையை,
வாய்க்குள் முணுமுணுத்தான் ஆகாஷ்.அது நிச்சயம் கேட்க கூடிய வார்த்தை அல்ல..
அனைவரும், தலை குனிந்த படி வெளியேறினார்கள்..
கடைசியாய் வெளியேற போன சண்முகத்திடம், பார்த்தி,
"ஒரு நிமிஷம்.."
அவனை முறைத்த படி நின்றான், சண்முகம்..
"இதெல்லாம், நீங்க யார் சொல்லி செஞ்சிங்க..??"
அவன் கேள்வியில் திகைத்தவன்,பதில் சொல்லாமல் நின்றான்..
"சொல்லுங்க..உண்மையை சொல்லிட்டா,உங்க தண்டனை குறையும்.."
இப்பொழுது,சற்று சுதாரித்திருந்த சண்முகம்,
"நானா தான் செஞ்சேன்.."
"பொய் சொல்லாதீங்க.."
"இதான் உண்மை..நம்புறதும் நம்பாததும் உங்க விருப்பம்.."
கூறிவிட்டு, திரும்பி பார்க்காமல், வேகமாய் வெளியேறினான்..
"பார்த்தி..??"
ஆகாஷின் அழைப்பில் உள்ள கேள்வி புரிந்து,
"எஸ் ஆகாஷ்..இவன் அம்பு தான், எய்தவன் வேற.."
"யாரு..??"
"உங்க ஜெனரல் மேனேஜர், சிதம்பரம்.."
"வாட்..??"
அதிர்ந்து நின்றான் ஆகாஷ்..
"உனக்கு நிச்சயம் தெரியுமா??"
"தெரியும்.ஆனா ஆதாரம் தான் இவ்ளோ நாளா சிக்கலை..இன்னிக்கு, இவனை அப்ருவர் ஆக்கலாம்னு பார்த்தா, முடியல.."
"அவர் அப்பாக்கு கல்லூரி கால தோழர் டா.. அப்பா நம்ப மாட்டார்..அப்பா தூங்குறார், பிரஷர் மாத்திரை போட்டுட்டு.அதான், அவரை எழுப்பாம, நான் மட்டும் வந்தேன்.."
"ஹ்ம்ம்.."
தலை அசைத்த பார்த்தி..
"மைக்கேல்.."
அவன் அழைப்பில், ஒரு மரத்தின் பின் புறம் இருந்து ஒருவன் வந்தான்..
"இவர் மைக்கேல்..என் தோழன் பரமேஷ்சோட மெக்கானிக் ஷெட்ல வேலை பார்க்குறார்..இங்க நடக்குற குற்றத்தை கண்டு பிடிக்க, இவரை கொஞ்ச நாள் இங்க வேலை பார்க்க சொல்லி சேர்த்தேன்..
இவ்ளோ நாள் அடக்கி வாசிச்சவனுங்க, இன்னிக்கு மாட்டிக் கிட்டானுங்க.. இவர் சொல்லி தான், ஜிஎம்க்கும் இதுல தொடர்பு இருக்குன்னு தெரியும்..அப்போ ஆதாரம் கலெக்ட் பண்ண முடியல..அதான், இன்னிக்கு முயற்சி பண்ணேன்..பட்..பிய்ச்.."
உதடு பிதுக்கினான்.. பார்த்தி..
"அந்த போன் எங்க மைக்கேல்..??"
அவன் கொடுத்த போனை வாங்கி, ஆகாஷிடம் கொடுத்தான் பார்த்தி.
"இதுல, யூனியன் லீடர் பேசுனது,சரக்கு ஏத்த முயற்சி பண்ணது..இப்போ கொடுத்த வாக்கு மூலம் வரை வீடியோ இருக்கு..உங்க அப்பா கேட்ட ஆதாரம்.."
அதை வாங்கிக் கொண்ட ஆகாஷ்..
"ஓகே பார்த்தி..பட்..முக்கியமான ஆள்.."
"யோசிப்போம்..இதை பத்திரமா வச்சுக்கோ..நாளைக்கு, இந்த சண்முகம், தன் பதவியை வச்சு மத்த தொழிலாளர்களை தூண்டி விட்டு பிரச்சனை பண்ணலாம்..அப்போ, இது யூஸ் ஆகும்.."
தலை அசைத்தான், ஆகாஷ்..
"இதோட இன்னொரு காப்பி என்கிட்ட இருக்கு..மைக்கேல் எனக்கு அனுப்பிச்சுட்டார்..தேவைனா கேளு..இப்போ கிளம்புறோம்.."
மைக்கேல்லின் புறம் திரும்பி,
"தேங்க்ஸ் மைக்கேல், இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கீங்க.."
"இதுல என்ன சார் இருக்கு..மனுசருக்கு மனுஷர் உதவி.."
"இருந்தாலும், இது பெரிய உதவி, மாட்டி இருந்தா, இவங்க என்ன வேணாலும் பண்ணுவாங்க..பெரிய ரிஸ்க் தான் எடுத்துருக்கிங்க..தேங்க்ஸ் மைக்கேல்.."
ஆகாஷும், தன் பங்குக்கு கூறினான்..
பின்பு, பார்த்தியின் பைக்கில் ஏறிச் சென்றான் மைக்கேல்..அவனை, அவன் வீட்டில் விட்டு விட்டு, தன் வீடு வந்து சேர்ந்தான் பார்த்தி..
கீர்த்தி, உறங்கிக் கொண்டிருந்தாள்..நேரம், நள்ளிரவை தாண்டி இருந்தது..
சத்தம் எழுப்பாமல் உடை மாற்றியவன்,அவள் அருகில் சென்று படுத்தான்..
அருகில் அசைவு உணர்ந்து திரும்பி படுத்த கீர்த்தி,
"வந்துட்டீங்களா மாமா.."
தூக்க கலக்கத்தில்
கேட்டுக்கொண்டே, அவன் புறம் திரும்பிப் படுத்து, அவன் மேல் கை போட்டுக் கொண்டு, மீண்டும் உறங்கிப் போனாள்..
உதட்டில் தோன்றிய மென் நகையோடு,அவள் நெற்றியில் முத்தமிட்டவன், அவளை அணைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்..
மறுநாள் கம்பெனிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான், பார்த்தி..
அவன் அருகில் வந்த கீர்த்தி,
"மாமா…"
"சொல்லுடா பொம்மு.."
"எனக்கு ஒரு டவுட்.."
"என்ன??"
"நீங்க காலேஜ் படிக்கும் போது,
எந்த பெண்ணையும் சைட் அடிச்சதில்லையா??"
இதுவரை, கிளம்பிக் கொண்டே சாதாரணமாய் பேசிக் கொண்டிருந்தவன், ஜெர்க் ஆகி நின்றான்..
"ஏன்டா பொம்மு..??"
"இல்ல..நீங்க டெல்லில படிச்சீங்க…வடக்கத்து பொண்ணுங்க எல்லாம்
அழகா இருப்பாங்க தானே.."
'டேய் பார்த்தி,இவ வலை போடுறா, மாட்டிக்காத..உஷார்..'
"ச்சே,ச்சே..நான் யாரையும் பார்த்ததில்லை மா.."
அவனை சந்தேகமாய் பார்த்தவள்,
"உண்மையா??"
"நிஜமா டா.."
"அப்புறம், என்னை மட்டும் எப்படி பார்த்ததும் பிடிச்சுது,முதல் தடவையே பிடிச்சுதுன்னு சொன்னிங்கல்ல..முதல் தடவையே சைட் அடிச்சீங்க தானே??"
'விட மாட்டா போலியே..'
"உன்னை போன்ற பெண்ணை,
கண்ணால் பார்த்ததில்லை..!!
உன்னையன்றி யாரும்,
பெண்ணை தோன்றவில்லை..!!"
"சரி சரி பொழைச்சு போங்க.."
புன்முறுவலோடு சொல்லி விட்டு சென்றாள்..
'ஹப்பா தப்பிச்சேன்..நேத்துல இருந்து,நித்திய கண்டம் பூர்ண ஆயுசா இருக்கு..'
ஒரு வழியாய், கம்பெனியை வந்தடைந்தான்..
தணிகா,தன் அறைக்கு அவனை கூப்பிட்டு அனுப்பினார்..
அவர் அறைக்கு சென்றவனை
அமர சொன்னவர்..
"ஆகாஷ் சொன்னான்..வீடியோவும் பார்த்தேன்..பத்து பதினைஞ்சு வருசமா வேலை பார்க்குறான்..விஸ்வாசமானவன்னு
நெனச்சுட்டேன்..அதான் தப்பா போச்சு.."
தலை அசைத்துக் கொண்டான்..
சிதம்பரத்தின் பெயரை கூறவில்லை..கூறினாலும் நம்ப மாட்டார் என்று தெரியும்..அந்த சிதம்பரம் தான் முக்கியமான ஆள்.. அவர் மாட்டினால் தான் முழு பிரச்னையும் சரி ஆகும்..
அதற்கு ஏதாவது செய்ய வேண்டும். அதுவரை, அமைதி காப்பது சிறந்தது..
அந்த சண்முகம் வரவழைக்கப் பட்டான் விசாரணைக்காக.இவனை முறைத்துக் கொண்டே நுழைந்தான்.
"உன் மேல சுமத்த பட்ட குற்றத்துக்கு, என்ன பதில் சொல்லுற சண்முகம்..??"
"என்னங்க சொல்லுறது,எல்லாரும் தான் தப்பு பண்ணுறாங்க, நான் மாட்டிக்கிட்டேன்..சிலர் மாட்டலை.."
"என்ன சொல்ல வர்ற சண்முகம்..??"
"லட்சணமா பொண்டாட்டி வீட்டுல இருக்கையிலேயே, வெளில தேடுறாங்க சிலர்..அவங்க எல்லாம் மாட்டிக்கிறது இல்ல..நான், என்னோட பணகஷ்டத்துக்காக செஞ்சா, மாட்டிக்கிட்டேன்.."
அவனை முறைத்தான் பார்த்தி.
'இவன் தான், இவன் பொண்டாட்டி கிட்ட சொல்லி,அந்தம்மா, பொம்மு கிட்ட இல்லாதது எல்லாம் சொல்லி,பிரச்சனை உண்டு பண்ணிடுச்சு..'
"தேவை இல்லாம பேசாதிங்க சண்முகம்..துணிகளை கடத்துனது ,வேற மலிவான துணிகளை இங்க இறக்கினது,எல்லாம் நீங்க தானா??இது உண்மையா??"
"ஆமாம்.. நான் தான் செஞ்சேன்.."
"இதுக்கு பின்னாடி யாராச்சும் இருக்காங்களா??"
இவ்வளவு நேரம் தணிகா கேட்டுக்கொண்டிருந்தார்..பார்த்தியும் ஆகாஷும் எதுவும் பேசவில்லை..
இப்பொழுது ஆகாஷ் கேட்டான்..
அவனை பார்த்த சண்முகம்,
"இல்ல..நான் தான் செஞ்சேன்..முழுக்க முழுக்க நான் தான் செஞ்சேன்..பணத்துக்காக.."
மிகவும் தெனாவெட்டாய் பதில் சொன்னான்..
பல்லை கடித்த தணிகா,
"உன்னை, மூணு மாசம் சஸ்பெண்ட் பண்ணுறேன்.. இடையில,எப்போ கூப்பிட்டாலும் விசாரணைக்கு வரணும்..இவ்ளோ நாள் வேலை பார்த்தேன்னு, போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்கலை..
இந்த மூணு மாச முடிவுல, உன்னை, வேலையை விட்டு அனுப்புறதை பத்தி முடிவு எடுக்க படும்..இடையில, யூனியன் மூலம் ஏதாவது பிரச்னை பண்ணலாம்னு நெனச்சா, போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்துடுவோம்..எங்க கிட்ட ஆதாரம் இருக்கு..இப்போ நீ போலாம்.."
அனைவரையும் முறைத்து விட்டு,அங்கிருந்து சென்றான்,சண்முகம்..
பார்த்தியை, அவன் அறையில் சந்தித்த ஆகாஷ்,
"என்னடா, உண்மையை ஒத்துக்க மாட்டான் போலயே..அந்த மேனேஜர் பேரை சொல்ல கூட இல்ல.."
"அதான் நானும் யோசிக்கிறேன்..எப்படி உண்மையை வர வைக்கலாம்னு..அவன் மனைவி கிட்ட பேசலாம்னு நெனச்சேன்..அவங்க, இவனுக்கு மேல இருப்பாங்க போல…"
"என்னாச்சு டா..??"
"பொம்மு கிட்ட ஏதோ சொல்லி,வீட்டுல பிரச்சனை உண்டாக்கிட்டாங்க.."
"ஓ..பெரிய பிரச்சனையா, நான் பேசட்டுமா??, உன் வைஃப் கிட்ட.."
"அதெல்லாம் தேவை இல்லை..சரி ஆகிடுச்சு..இந்த பிரச்சனை தான்.."
"சரி, பாத்துக்குவோம் டா.. மாட்டாமலா போய்டுவார்.."
சில நாட்கள் சென்றது..
கீர்க்திக்கு சம்மர் விடுமுறை ஆரம்பித்திருந்தது..
வீட்டில் இருந்தாள்..
அன்று, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே காய் வெட்டிக் கொண்டிருந்தாள்..
காலிங் பெல் ஒலியில், சென்று கதவு திறந்தாள்..
வெளியே, மாது நின்றிருந்தான்..
"மாது அண்ணா.."
மகிழ்ச்சியுடன் அழைத்தாள்..
அவன் பின்னே, அவள் அன்னை மீனாட்சி..
ஒரு நிமிடம், ஆனந்த அதிர்ச்சியில், கண்ணில் நீர் பொங்க நின்றவள்,மறு நிமிடம்,
"யார் அண்ணா இவங்க,உங்களுக்கு தெரிஞ்சவங்களா??"
"அடி கழுதை, பிச்சுடுவேன்
பிச்சு..திமிர் பிடிச்சவளே.."
கூறிக்கொண்டு, அவள் காதை திருக்கியவர்,அவளின் மேடிட்ட வயிற்றை பார்த்து,
"எத்தனை மாசம் டி..??"
அவரிடம் உதடு சுளித்து காட்டி விட்டு,முகம் திருப்பிக் கொண்டாள்..
"ஹ்ம்ம்..ரோசகாரி தான் நீ.. ஒத்துக்குறேன்.. மாசமா இருக்குறதை தான் ஒரு போன் பண்ணி சொல்லல,எத்தனை மாசம்னுனாச்சும் சொல்லு.."
"எதுக்கு சொல்லனும், என் மேல அக்கறை இல்லாதவங்க கிட்ட.."
"அப்படியே வாயில போட்டுடுவேன்..அக்கறை இல்லாம தான் வந்தனா..??"
"அஹஹாஹா..எவ்ளோ மாசம் கழிச்சு..??"
"நான், இவ்ளோ நாள் கழிச்சாவது வந்தேன்..நீ, அது கூட செய்யலையே.."
"நான் ஏன் செய்யனும்..நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்..??எல்லாம் பண்ணது நீங்க..நான், மாமாவை விரும்புறேன்னு தெரிஞ்சும், வேற மாப்பிள்ளை பார்த்தது,என்னை கட்டாய படுத்துனது, எல்லாம் நீங்க..இப்போ, நான் வரனுமா..??"
"சரி, பழச்செல்லாம் எதுக்கு??விடு..எத்தனை மாசம் சொல்லு..??"
"அதெல்லாம் விட முடியாது.."
கூறிவிட்டு, சமையல் அறைக்குள் சென்று விட்டாள்..
இவ்வளவு நேரம், தாய் மகளுக்கு இடையில் வரக்கூடாது என அமைதி காத்த மாது..
சமையல் அறைக்கு சென்று,
"கீர்த்தி மா.."
"நீங்க பேசாதிங்க ண்ணா.. இவ்வளவு நாள், எத்தனை தடவை கூப்பிட்டு இருப்பேன்..அப்போ வராம..இன்னிக்கு, இவங்கள கூட்டிட்டு வந்துருக்கிங்க..அதுவும், என் கிட்ட சொல்லாம.."
"இல்ல மா..உங்க அம்மா..உன்னை பார்க்கணுமுன்னு சொல்லி,உங்க அத்தான் கிட்ட சொல்லி இருக்காங்க, அவரு, என் கிட்ட வந்து,இவங்களை கூட்டிட்டு போக சொன்னார்.."
"ஓ..எல்லோரும் கூட்டு களவானிகளா..??"
மாதுவின் பின்னே சமையல் அறைக்கு வந்த மீனாட்சி,
"ஏய்,என்னடி ரொம்ப பேசுற..??அந்த தம்பி கிட்ட எகிறாத, உன்னை ஹாஸ்பிடல்ல பார்த்தேன்னு அரூ சொன்னா, அதுல இருந்து, உன்னை பார்க்க வரணும்னு ஆசை பட்டேன்..இப்போ தான், உங்க பெரியப்பா பேத்திக்கு இங்க சடங்கு வச்சாங்க.அதை சாக்கு வச்சு உன்னை பார்க்கலாம்னு வந்தா.. சும்மா எகிருற.."
"ஓஹோ..அப்போ, ஹிட்லர்க்கு தெரியாம வந்தியா??"
"ஆமாம் டி.. அதுகென்ன..??"
"நீ,கலியுக வாசுகி ஆச்சே..எப்படி கணவனை மீறி வந்த??"
"அடி பின்னிடுவேன்.. மாசமா இருக்குற பிள்ளைன்னு பார்க்குறேன்..உன் அப்பாக்கு கூட ஆசை தான்,அவர் காட்டிக்கல..அரூ வாழ்க்கையை நினைச்சு,சம்பந்தியை நினைச்சு,யோசிக்குறார்.."
"ஓ..உங்களுக்கு நான் முக்கியம் இல்ல..என்னை தவிர,இத்தனை காரணம் இருக்கு..அப்படி கஷ்டப்பட்டு, நீங்க ஒன்னும் வர வேண்டாம், கிளம்புங்க.."
கூறிவிட்டு, துளிர்த்த கண்ணீரை மறைக்க, திரும்பிக் கொண்டாள்..
அதை கவனித்து விட்ட மீனாட்சி,
"அழாதடி..எங்களுக்கு மட்டும் உன்னை பார்க்க கூடாதுன்னு ஆசையா.. ஏதோ நேரம்..மாப்பிள்ளையை பத்தி முன்னவே தெரியாம..அந்த சம்பந்தி அம்மா பேச்சை கேட்டு, முட்டாள் தனமா அப்படி முடிவெடுத்துட்டோம்.."
பார்த்தியை, மாப்பிள்ளை என்றதில் சிறிது கோபம் குறைந்து,
"இப்போவாவது, அந்த பூசணி பத்தி தெரிஞ்சுதே.."
"அரூ சொன்னா, அவ பார்த்தப்போ மூணு மாசம்னு.. இப்போ, ரெண்டு மூணு மாசம் ஆச்சு..அஞ்சா, ஆறா??"
"ஆறு.."
"இரட்டை பிள்ளைங்களாமே..??"
"ஹ்ம்ம்..ஆமா.."
அதன் பிறகு, அவர்கள் பேச்சு சகஜமானது..
"அம்மா..புளிக் குழம்பு வச்சு கொடும்மா..உன் கை பக்குவம், எனக்கு வரவே மாட்டேங்குது.."
சமைத்து உண்டு, பல நாள் கதைகளையும் பேசினார்கள்..
மாதுவும் சாப்பிட்டு விட்டு,
அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியே வந்தவன்..
பார்த்திக்கு கால் செய்தான்..
"சொல்லுடா மாது.."
"என்ன பண்ணிக்கிட்டு இருக்க??"
"கம்பெனில இருக்கேன்..சொல்லு..திருச்சில எல்லோரும் நல்லா இருக்காங்களா??.அங்க வெயில் எப்படி இருக்கு.??"
"காலையில பார்க்கையில, வெயில் கம்மி தான்....இப்போ தெரியல.."
"என்ன டா சொல்லுற??"
"ஏன்னா, இப்ப நான் சென்னைல இருக்கேன்.."
"ஏய்,எப்போ டா வந்த, சொல்லவே இல்லை..வர்றதா..இப்போ எங்க இருக்க..??பரமேஷ் வீட்டுலேயா??"
"இல்ல..உன் வீட்டுல தான்.."
"என்னடா, ஷாக் மேல ஷாக் கொடுக்குற..வீடு கண்டுபிடிச்சுட்டியா..??சொல்லி இருந்தா, கூட்டிட்டு போக வந்துருப்பேன் இல்ல??"
"அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல..பரமேஷ், கேப் புக் பண்ணி கொடுத்துட்டான்.. அவர், சரியா கொண்டு வந்து விட்டுட்டார்.."
"சரி,சாப்டியா??"
"ஹ்ம்ம்..இப்போ தான்,உன் வீட்டுல சாப்பிட்டேன்.."
"ஏன்டா, வரும் போதே நல்ல ஹோட்டல் அஹ் பார்த்து சாப்பிட்டு வர மாட்டியா??"
"என்னே உன் விருந்தோம்பல் பண்பு டா.. இப்படி நாலு நண்பன், வேண்டாம் வேண்டாம், நீ மட்டும் போதும்..ஊர் முன்னேறிடும்.."
"உன் நல்லத்துக்கு தான் சொன்னேன்..பொம்மு சமையல்
சாப்பிட்டு இருக்க..நைட், என்ன ஆக போகுதோ.."
"டேய்,எப்படி டா இவ்ளோ பேசுற..கீர்த்தி கூட சேர்ந்து மாறி போய்ட்டே..ஆனா, நான் சாப்பிட்டது கீர்த்தி சமையல் இல்ல..உன் மாமியார் சமையல்.."
"என்னடா, அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குற.."
"ஆமா..உன் அண்ணா ஆரவ், போன வாரம் வந்து,உன் மாமியார்,கீர்த்தியை பார்க்கணுமுன்னு சொல்லுறாங்க..அடுத்த வாரம் அவங்க சொந்தக்காரங்க விசேஷம் வருது..அதுக்கு முதல் நாள் அவங்கள கூட்டிட்டு போய் பார்த்தி வீட்டுல விட்டுடு, அப்படின்னு சொன்னார்..
என்னை, அவர் பிரெண்ட்ன்னு சொல்லி, கீர்த்தி அப்பா கிட்ட அறிமுக படுத்தினார்.. கீர்த்தி அப்பாவும், உன் மாமியாரை என் கூட அனுப்பி வச்சுட்டார்..அதுனால நானும், உடனே கூட்டிட்டு வந்துட்டேன்..உனக்கு சர்ப்ரைஸ் அஹ் இருக்கட்டும்னு, முன்னவே சொல்லல.."
"அவங்க..பொம்முவை எதுவும் சொல்லல இல்ல..??"
அன்று, அவளை மீனாட்சி அடித்ததை மனதில் வைத்து கேட்டான்..
"அவங்க எங்க பேசுறது??அதான் கீர்த்தி..அவங்கள பேசவே விடலியே..சரவெடி தான் போ.."
மெதுவாய் சிரித்தவன்..
"அவளை, டென்சன் ஆகாம பார்த்துக்கோ..நான் பெர்மிஷன் போட்டு உடனே வரேன்.."
"அதெல்லாம் ஒன்னும் அவசரம் இல்ல..மெதுவா வா.. அம்மாவும் பொண்ணும், கொஞ்சி கிட்டு தான் இருக்காங்க.. இப்போ யாரும்
கண்ணுக்கு தெரிய மாட்டாங்க.."
மனதில் நிம்மதி பிறக்க,
"வரேன் டா.."
அலைபேசியை வைத்தவன்,பெர்மிஷன் போட்டு, வீட்டிற்கு வந்தான்..
வாசலில் நின்றிருந்தான் மாது.
அவனை அணைத்து வரவேற்றவன்,
"ஏன்டா, உள்ள போக வேண்டியது தானே..??"
"உன் மாமியார், நான் இருக்கேன்னு, பேச கூச்ச பட்டாலும் படுவாங்க..அதான், அவங்க பிரீ அஹ் பேசட்டும்னு..இங்க நிக்குறேன்.."
பெருமிதமாய் அவனை பார்த்து புன்னகைத்தவன்,
"உள்ள வா.."
அவனை கூட்டிக்கொண்டு உள்ளே சென்றான்..
ஹாலில், கீர்த்தியும் மீனாட்சியும் பேசிக் கொண்டிருந்தார்கள்..
இவன் வந்ததை கூட கவனிக்காமல்.
'அம்மாவை பார்த்ததும் புருஷனை மறந்துட்டா..'
மனதில், லேசான பொறாமை எட்டி பார்க்க நின்றான்..அவனை முதலில் கண்ட மீனாட்சி,எழுந்து நின்றார்..
அதன் பின் திரும்பி பார்த்த கீர்த்தி,
"மாமா..என்ன, இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க..??அம்மா வந்துருக்காங்க மாமா.."
சந்தோசமாய் கூறினாள்..
"வாங்க…."
அத்தை என்று கூப்பிட தயங்கி, நிறுத்தினான்..
"நல்லா இருக்கீங்களா மாப்பிள்ளை.??."
அதை புரிந்து கொண்ட மீனாட்சி,கேட்டார்..
"நல்லா இருக்கேன் அத்தை.."
புன்னகை முகமாய் பதில் அளித்தான்..
"சாப்டிங்களா..??"
"சாப்பிட்டேன் மாப்பிள்ளை.."
"மாமா..வாங்க சாப்பிட..அம்மா, புளி குழம்பு செஞ்சிருக்காங்க.. செம்மையா இருக்கும்.."
"அப்போ, ரொம்ப நாள் கழிச்சு, இன்னைக்கு நல்ல சாப்பாடுன்னு சொல்லு.."
"மாமா.."
அவனை செல்லமாய் முறைத்தாள்..
அவர்கள் அந்நியோனியம் பார்த்து சந்தோசப்பட்ட மீனாட்சிக்கு,கண்கள் நனைந்தது, ஆனந்தத்தில்..
அதன் பின், அவன் பின்னாலே சுற்றினாள் கீர்த்தி,
அதில், பார்த்தியின் மனதில் துளிர்த்த பொறாமை,முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது..