கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே...அத்தியாயம்-36

Nilasubramanian

Moderator
Staff member
அத்தியாயம்-36

அன்று அவர்களோடு இருந்து விட்டு, மறுநாள் காலையில் கிளம்பினார் மீனாட்சி..

"என்ன ம்மா.. அதுக்குள்ள போற.."
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் கீர்த்தி..

"தங்கிட்டு போங்க அத்தை.."

"இல்ல மாப்பிள்ளை..இவ அப்பாக்கு தெரியாது..விசேஷத்துக்கு போறேன்னு சொல்லிட்டு வந்தேன்..இந்த தம்பி கூட வந்ததால..நேத்து ரெண்டு தடவை, இந்த தம்பி நம்பர்க்கு போன் பண்ணி, போயாச்சானு கேட்டுட்டார்..நான், விஷேச வீட்டுல இருக்கேன்னு நெனச்சுக்கிட்டு இருப்பார்..இன்னிக்கு நைட் பஸ்க்கு வரேன்னு சொல்லிட்டேன்..பாவம், தனியா கஷ்டப்படுவார்.. வெந்நீர் கூட வச்சுக்க தெரியாது..ஹோட்டல் சாப்பாடும் ரொம்ப ஒத்துக்காது அவர்க்கு..இவளுக்கு வளைகாப்பு அப்போ, ரெண்டு பேரும் வரோம்.."

ஒருவழியாய் கீர்த்தியை சமாளித்து,அவரை அனுப்பி வைத்தான்..அவருக்கு சென்னை புதிது என்பதாலும்,அவரை ஊருக்கு சென்று சேர்க்க வேண்டிய கடமை இருப்பதாலும், மாதுவும் அவரோடு கிளம்பினான்..

"பார்த்தி,இவங்கள விஷேச வீட்டுல விட்டுட்டு.. பரமேஷ் வீட்டுக்கு போய்ட்டு, நைட் இவங்கள கூட்டிட்டு, திருச்சி கிளம்புறேன்..வரேன் டா.. வரேன் கீர்த்தி.."

அவர்கள் சென்றதும் சோர்ந்து போன கீர்த்தியை, வேறு பேசி மனதை மாற்றி விட்டு, கம்பெனிக்கு வந்து சேர்ந்தான் பார்த்தி..

மதியத்துக்கு மேலே வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது,அவன் வாட்ஸ் ஆப்க்கு, ப்ளட் டொனேஷன் குரூப்பில் இருந்து மெசேஜ் வந்தது..அவன், அந்த குரூபில் நிறைய வருடங்களாய் இருக்கிறான்..

திருச்சியில் இருந்தே..அவன் பிளட், அதிகமாய் கிடைக்க கூடியது.எனவே, அவசர தேவை அதிகம் வராது.. இவனாகவே, வருடத்திற்கு இரு முறை கொடுத்து விட்டு வருவான்..

இன்று, இவன் குரூப் பிளட்க்கு அவசர தேவை என்று மெசேஜ் வந்திருந்தது..
சென்னை மருத்துவமனை தான், இவன் கம்பெனியில் இருந்து பக்கம் தான்..

உடனே கிளம்பினான் பார்த்தி,ஆகாஷிடம் சொல்லி விட்டு,மருத்துவமனைக்கு விரைந்தான்..

வரவேற்பில் விசாரித்து,உள்ளே சென்று, ரத்தம் கொடுத்து விட்டு வெளியே வருகையில், ஒரு நர்ஸ்,

"இவரு தான் மா..உங்க பொண்ணுக்கு ரத்தம் கொடுத்தது..பார்க்கனும், பார்க்கனுமுன்னு சொன்னிங்க இல்ல.."
கூறிவிட்டு விரைந்தார்..

அந்த பேச்சில் நிமிர்ந்து பார்த்தான் பார்த்தி..அங்கே, மாதவி கண்ணில் கண்ணீரோடு நின்றாள்..இவனை பார்த்து திகைத்தவள், பின் கை கூப்பினாள்..

"உங்க பொண்ணுக்கா விபத்து..??"

"ஆமா சார்..கடைக்கு போய்ட்டு வரும் போது..தெரிஞ்சவங்க வந்தாங்க..பேச்சு கவனத்தில, இவளை பார்க்கல..சட்டுனு வண்டி வரும் போது, ரோட்டை கிராஸ் பண்ணிட்டா..பைக்காரன் வந்த வேகத்துல, அடிச்சுட்டு, நிக்காம போய்ட்டான்.."

"ஓ..பார்த்துக்கோங்க..ஒன்னும் ஆகாது..துணைக்கு யாரும் இருக்காங்களா..??"

"என் வீட்டுக்காரர் இருக்கார் சார்..மருந்து வாங்க போய் இருக்கார்.."

"சரி பார்த்துக்கோங்க..கிளம்புறேன்.."

"ரொம்ப நன்றி சார்.."

"பரவால்ல..யாருக்கோ, சின்ன பொண்ணுக்குன்னு நினைச்சு வந்தேன்..வாட்ஸ் ஆப்ல பார்த்துட்டு..உங்க பொண்ணுன்னு தெரியாது..கவனமா பார்த்துக்கோங்க.."

அப்பொழுது, சண்முகமும் மருந்து வாங்கிக் கொண்டு வந்தான்..இவனை பார்த்து, பேச்சற்று நின்றான்..

நர்ஸ் வந்து மருந்தை வாங்கிச் சென்றார்..

"நம்ம பொண்ணுக்கு ரத்தம் கொடுத்தது, சார் தான்ங்க.."

அவன், என்ன கூறுவது என்று தெரியாமல் நின்றான்..

மேலும் அங்கு இருந்து, அவர்களை சங்கட படுத்தாமல், விடை பெறுவதாய் தலை அசைத்து விட்டு கிளம்பினான்..

அவர்கள் பெண்ணுக்கு, பத்து வயது இருக்கும்..அடிக்கடி, குவார்ட்ஸ் வளாகத்தில் விளையாடும் போது பார்த்திருக்கிறான்..ஒரே பெண் குழந்தை..சின்ன பெண்..கடவுள் காப்பாற்றட்டும் என வேண்டிக் கொண்டு, கம்பெனிக்கு வந்தான்..

இரவு வீட்டுக்கு வந்தவன், சோர்ந்து காணப்பட்டான்..

"என்னாச்சு மாமா..??"
அவனுக்கு காபி கொடுத்துக் கொண்டே, கீர்த்தி கேட்டாள்..

"அந்த யூனியன் லீடர் பொண்ணுக்கு விபத்து பொம்மு.."

"அச்சோ..என்னாச்சு..??"

"ரத்தம் தேவை பட்டதுன்னு மெசேஜ் வந்தது..கொடுத்துட்டு வெளியே வந்தேன்..அப்புறம் பார்த்தா, அவங்க பொண்ணு.."

"ஓ..இப்போ எப்படி இருக்கா..??"

"கம்பெனில விசாரிச்சேன்..இப்போ பரவாயில்லைன்னு சொன்னாங்க.."

"ஹ்ம்ம்..சரி மாமா..வாங்க சாப்பிட,ரத்தம் கொடுத்தது சோர்வா இருக்கும்.."
கூறிவிட்டு எழ போனவள்,

மீண்டும் அமர்ந்து,
"மாமா,உங்க பிள்ளைங்க கிட்ட இன்னிக்கு, நீங்க வந்ததும் பேசலையாம், அதான் ஞாபக படுத்துறாங்க.."

அவன் கையை எடுத்து, தன் வயிற்றில் வைத்துக் கொண்டே கூறினாள்.. அவள் வயிற்றில், குழந்தைகளின் அசைவு தெரிந்தது..

முகம் மகிழ்ச்சியில் மின்ன,அவள் வயிற்றில் முத்தமிட்டு,
"அப்பா மறக்கலை டா செல்லங்களா.. என்ன பண்ணுறீங்க ரெண்டு பேரும்.."

அவன் பேச ஆரம்பித்ததும்,அவள் வயிற்றில் அசைவு அதிகம் ஆனது..

"ஹப்பா.. வயித்துக்குள்ள புட் பால் விளையாடுத்துங்க ரெண்டும்.."
அவள் முக பாவனையில் புன்னகைத்தவன்..

"செல்லங்களா, அம்மாக்கு வலிக்கும்..மெதுவா.."
அதன் பிறகு, அசைவு மிதமானது..

"சரியான அப்பா பிள்ளைங்க ரெண்டும்.."
சலித்துக் கொள்வது போல சொன்னாள்..

பிறகு, அவர்கள் பொழுது,குழந்தைகளோடு, உற்சாகத்துடன் சென்றது..

மறுநாள் இவன் கம்பெனிக்கு சென்ற பொழுது,உடனே வர சொல்லி, தணிகாவிடம் இருந்து அழைப்பு வந்தது..
அங்கு சென்றான்..

அங்கே, சண்முகம் இருந்தான்..
இவனை பார்த்ததும், இவன் காலில் விழுந்தான்..

"அச்சோ..என்ன இது..எழுந்திரீங்க.. வயசுல பெரியவர் நீங்க..ப்ளீஸ் எழுந்துக்கோங்க.."

கண்ணில் கண்ணீரோடு எழுந்தவன்..

"என்னை மன்னிச்சுடுங்க சார்..வயசுல சின்னவரா இருந்தாலும், மனசுல பெரியவர் நீங்க.."

சொன்னவன், தணிகாவின் புறம் திரும்பி,

"இவ்வளவு நாள் நான் பண்ண தப்புக்கு எல்லாம் மூல காரணம், நம்ம ஜி எம் சிதம்பரம் சார் தான் சார்..எனக்கு பணத்தாசை காட்டுனதாலை,நானும் பணத்துக்கு ஆசைப்பட்டு,மட்டமான துணிகளை இங்க இறக்கி, நல்ல துணிகளை, அவர் சொல்லுற கம்பெனிக்கு அனுப்பிச்சுடுவேன்..

இவர் வேலைக்கு வந்த பிறகு கெடுபிடி பண்ணதால, அந்த மாதிரி செய்ய முடியல..அந்த கடுப்புல, இங்க, கொஞ்சம் பிரச்சனை எல்லாம் தூண்டி விட்டேன்..அதையும் இவர் சரி பண்ணிட்டார்..

என்ன பண்ணுறதுன்னு யோசிச்சப்போ..
ஜி எம் தான், அவர் குடும்பத்துல ஏதாவது பிரச்சனை ஏற்படுத்திட்டு, இங்க மறுபடியும் இப்படி பண்ண சொன்னார்.. அப்படி செஞ்சப்போ தான், மாட்டிக்கிட்டோம்..

இதெல்லாம், என் பொண்ணுக்காக தான் செஞ்சேன்..இப்போ, அவளே அடி பட்டு கிடக்கும் போது, தீய வழில வந்த பணம், அதை விட அதிகமா, அதே வழில போய்டும்னு புரிஞ்சுது..மன்னிச்சுடுங்க சார்..என் மேல போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்தாலும் ஏத்துக்குறேன்.. எங்க வேணாலும் வந்து உண்மையை சொல்லுறேன்.."
கூறிவிட்டு நின்றான்..

ஆகாஷுக்கு ,அப்பாடா என்று இருந்தது..
ஜி எம்..வரவழைக்க பட்டார்..

முதலில் மறுத்தவர், பின்,
தனக்கு அவசர தேவை ஏற்பட்ட போது பணம் கேட்டதற்கு,தணிகா உதவ வில்லை,எனவே, இதை செய்ததாக கூறினார்..

முகம் இறுகிய தணிகா,அவரை வேலையை விட்டு அனுப்பினார்..

சண்முகத்திடம், மூன்று மாத சஸ்பென்ஸன்க்கு பிறகு வேலைக்கு வர சொன்னார்..

இங்கு கீர்தியிடம், மாதவியும் வந்து மன்னிப்பு கேட்டாள்..

"குழந்தை எப்படி இருக்கா.. ??அக்கா.."

"பரவால்ல மா..எல்லாம், உன் புருஷனால தான்.. ரொம்ப நன்றி மா..இதை மறக்க மாட்டோம்..தேவையானது எடுக்க வந்தேன்..என் தங்கச்சியை ,குழந்தைக்கு துணைக்கு வச்சுட்டு..கிளம்புறேன் மா.."
கூறிவிட்டு கிளம்பினாள்..

பார்த்திப்பனுக்கு பதவி உயர்வு வழங்க முடிவெடுத்தார் தணிகா..

ஜி எம்..போஸ்ட் அளிக்க முடிவெடுத்தவர், அதை கம்பனி ஆண்டு விழாவில் அறிவிக்க முடிவெடுத்தார்..

ஆண்டு விழா தினத்தன்று காலையில், அவனை, தன் அறைக்கு அழைத்த தணிகா,அவன் கையில் கார் சாவியை கொடுத்தார்.அருகில் ஆகாஷ்..

"என்ன சார் இது..??"

"எங்க கம்பெனிக்கு, நீ செஞ்ச பெரிய உதவிக்கு, சின்ன உபகாரம்.."

"அதெல்லாம் வேண்டாம் சார்..அது என் கடமை.."

"வாங்கிக்கோ பார்த்தி.."
ஆகாஷும் கூறினான்..

"இல்ல..ஆகாஷ்..இது சரி வராது.."

"அப்பா..அவன் பிரீயா கொடுக்குறோம்னு, வாங்க யோசிக்குறேன்..தன்மான சிங்கம்.."

அவனை முறைத்தான் பார்த்தி..

"சரி பா..இன்ஸ்டால்மெண்ட்ல வண்டி எடுத்தா, மாசாமாசம் இ எம் ஐ கட்டுவ தானே, அது போல..உன் சம்பளத்துல இருந்து, மாசாமாசம் பணம் பிடிச்சுக்குறோம்..இப்போ ஓகே வா..."

"சார்.."

அப்போதும் தயங்கியவனை கண்டு,
"டேய்..சிஸ்டர் கர்ப்பமா இருக்காங்க.. இப்போ அவசர தேவைக்கு வண்டி தேவைப்படும்..பேசாம வாங்கிக்கோ.."

அதன் பிறகு வாங்கிக் கொண்டான் பார்த்தி..

காரில் வீட்டிற்கு வந்து இறங்கியவனை பார்த்து,
"யார் கார் மாமா..??"

கண்கள் விரிய கேட்டாள், கீர்த்தி..

"நம்ம கார் பொம்மு.."

"நிஜமாவா??"

"நிஜமா..ஆகாஷ் அப்பா கொடுத்தார்..சம்பளத்துல பிடிச்சுக்க சொல்லி இருக்கேன்.."

"சூப்பர் மாமா..இதுல போய் இறங்கி..அந்த பூசணி மூக்குல ஓங்கி குத்து விடனும்.."

"பொம்மு.."

"சரி சரி..ஒன்னும் சொல்லல.."

அன்று மாலை விழாவுக்கு, அவனோடு காரில் சென்று இறங்கினாள்..

அவளை, இடம் பார்த்து அமர வைத்து விட்டு,இவன், விழா ஏற்பாட்டை கவனிக்க சென்றான்..

விழா ஆரம்பித்ததும்,மேடை ஏறிய தணிகா..

"நம்ம குவாலிட்டி அனலிஸ்ட் மேனேஜர் பார்த்திபனின் பணி, பல முன்னேற்றங்களை கம்பனிக்கு தந்துள்ளது..போன ஆண்டை விட,இந்த ஆண்டு, கம்பெனியின் லாபம் அதிகரித்துள்ளது..நிறைய ஆர்டர்களும் கிடைத்துள்ளது..இன்னும் பல செயற்கரிய பணியை செய்துள்ளார் பார்த்திபன்..அதை பாராட்டி,அவருக்கு பதவி உயர்வு தர முடிவெடுத்துள்ளது நிர்வாகம்..இன்றிலிருந்து, பார்த்திபன்,உங்கள் அனைவர்க்கும் ஜெனரல் மேனேஜர்..

இந்த செய்தியை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.."

அனைவரும் கரகோஷம் எழுப்பி, தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்..

கீர்த்தியும், கண்களில் நீர் வர, கை தட்டி, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்..

பார்த்திப்பனுக்கு ஆனந்த அதிர்ச்சி..

"வாழ்த்துக்கள் டா.."

ஆகாஷ் கை கொடுத்து, வாழ்த்து தெரிவித்தான்..
அதன் பின், அனைவரும் வாழ்த்து தெரிவித்தார்கள்..

மேடை ஏறிய ஆகாஷ்..

"உங்க எல்லாருக்கும், இன்னோரு விஷயம் தெரியுமா??உங்க ஜி எம் பார்த்திபன், அருமையா பாடுவார்.. கல்லூரியில், இவர் பாட்டுக்கு, ஒரு ரசிகர்,இல்ல இல்ல ரசிகையர் கூட்டமே இருக்கும்..இப்போ நமக்காக, ஒரு பாட்டு பாடுவார்.."

பார்த்திபனை பார்த்து, கண் அடித்த படி கூறினான்..

'ஏன்டா..'
என்பது போல, ஆகாஷை நோக்கி கை நீட்டிய பார்த்தி,கீர்த்தியின் புறம் திரும்பினான்..

"ரசிகையர் வேறயா..வீட்டுக்கு வாங்க.."
வாய் அசைத்தாள் கீர்த்தி,அவளை பார்த்து அசடு வழிந்த பார்த்தி,மேடை ஏறினான்..

மைக்கை வாங்கியவன், கீர்த்தியை பார்த்து விட்டு பாட ஆரம்பித்தான்..

"அகரம் இப்போ,
சிகரம் ஆச்சு!!
தகரம்இப்போ
தங்கம் ஆச்சு!!
காட்டு மூங்கில்,
பாட்டுபாடும் ,
புல்லாங்குழல்
ஆச்சு !!

சங்கீதமே
சந்நிதி, சந்தோசம்
சொல்லும் சங்கதி !!

கார்காலம்
வந்தால் என்ன ,
கடும்
கோடை வந்தால் என்ன,
மழை வெள்ளம் போகும்!!
கரை ரெண்டும் வாழும்!!
காலங்கள் போனால் என்ன,
கோலங்கள் போனால் என்ன,
பொய் அன்பு போகும்,
மெய் அன்பு வாழும்!!

அன்புக்கு
உருவம் இல்லை!!
பாசத்தில் பருவம்
இல்லை!!
வானோடு
முடிவும் இல்லை,
வாழ்வோடு விடையும்
இல்லை!!

இன்றென்பது
உண்மையே, நம்பிக்கை
உங்கள் கையிலே!!

அகரம் இப்போ,
சிகரம் ஆச்சு!!,
தகரம்
இப்போ தங்கம் ஆச்சு!!
காட்டு மூங்கில்,
பாட்டு
பாடும்,
புல்லாங்குழல்
ஆச்சு!!

தண்ணீரில்
மீன்கள் வாழும்,
கண்ணீரில் காதல்
வாழும்,
ஊடல்கள்
எல்லாம், தேடல்கள்
தானே !!பசியாற பார்வை
போதும்,
பரிமாற வார்த்தை
போதும் ,
கண்ணீரில் பாதி
காயங்கள் ஆறும்!!

தலை சாய்க்க
இடமா இல்லை!!
தலை
கோத விரலா இல்லை!!
இளங்காற்று வரவா
இல்லை!!
இளைப்பாறு
பரவா இல்லை!!

நம்பிக்கையே
நல்லது,
எறும்புக்கும்
வாழ்க்கை உள்ளது!!

அகரம் இப்போ
சிகரம் ஆச்சு!!
தகரம்இப்போ,
தங்கம் ஆச்சு!!
காட்டு மூங்கில்,
பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு!!

சங்கீதமே
சந்நிதி,
சந்தோசம்
சொல்லும் சங்கதி!!
அகரம் இப்போ
சிகரம் ஆச்சு, தகரம்
இப்போ தங்கம் ஆச்சு!!
காட்டு மூங்கில்,
பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு!!"

அவன் பாடி முடித்ததும், கரகோஷம் அடங்க வெகு நேரமாகியது..

அதன் பின்பு, விழா முடிந்து அனைவரும் உணவு உண்ண சென்றார்கள்..கீர்த்தியை ஒரு இடத்தில் அமர செய்த பார்த்தி, அவளுக்கு உணவு வாங்கி வர சென்றான்..

அவள் அமர்ந்திருக்கும் போது, அவள் அருகில் தயங்கிய படி வந்த பவித்ரா..

"அண்ணி.."

அவள் விளித்த விதத்தில்,ஆச்சர்யமாய் அவளை திரும்பி பார்த்தாள் கீர்த்தி..

"என் பேர் பவித்ரா..சார் எனக்கு அண்ணா மாதிரி.அதான், உங்களை.. அண்ணின்னு கூப்பிடலாம் தானே..??"

அப்பொழுது தான், அவள் யார் என்று புரிந்தது..

"தாராளமாய் கூப்பிடுங்கள், நாத்தனாரே.."

அவள் பேச்சில் கூச்ச பட்ட பவித்ரா..

"அண்ணி, வா போனே கூப்பிடுங்க..ங்க எல்லாம் வேண்டாம்.."

"நானே எப்போவாச்சும் தான் மரியாதை கொடுப்பேன்..நீயே வேண்டாம்ங்குற. ஓகே விடு..மரியாதை கான்செல்.."

"அண்ணி, நீங்க நல்லா பேசுறீங்க.."

"பொதுவா, நான் ரொம்ப அமைதி..இன்னைக்கு தான் பேசுறேன்.."

அவள் பேச்சில் விழித்தாள் பவி.

"என்ன, உன் பார்வையை பார்த்தா, நம்பாத மாதிரி இருக்கு..நம்புனா தான் இங்க சோறு போடுவாங்க..நம்புறியா..இல்ல, சோறு வேண்டாமா..??"

வாய் விட்டு, கண்ணில் நீர் வர சிரித்த பவி,
"அண்ணி, நீங்க சான்சே இல்ல..போங்க.."

அப்பொழுது, இரண்டு தட்டுகளோடு அங்கு வந்த பார்த்தி,
"என்ன பொம்மு,ஒரு அடிமை சிக்கிடுச்சுன்னு, வச்சு செய்யுறியா..??"

"அண்ணா..அண்ணி சூப்பர்.."
விரலில், சூப்பர் முத்திரை காட்டி சொன்னாள்..

இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்ட கீர்த்தி,

"இனிமே எவனாச்சும் வம்பு பண்ணா, அழுதுட்டு நிற்க கூடாது,பெப்பர் ஸ்பிரே, மிளகாய் தூள், கத்தி, இப்படி நிறைய கையில வச்சுக்கோ..தனியா மாட்டும் போது, அவன் கதற கதற அடிச்சு விட்டுடு..
சரியா..??"

"உனக்கு இதுல ஏதும் சந்தேகம்னா, இவ கிட்ட ரெண்டு நாள் டியூசன் வா.. பல வித்தைகள் கையில வச்சுருக்கா.. பேதி மாத்திரை,பாலிடால்,எலி மருந்து, இப்படி..செம்மையா ட்ரைனிங் கொடுப்பா.."

"மாமா.."
அவள் முறைப்பை கண்டு கொள்ளாமல்,

"இல்லைனா..ரெண்டு நாள் இவ கிட்ட சமைக்க கத்துக்கோ.."

"எனக்கு சமைக்க தெரியுமே ண்ணா.."

"அது, வீட்டுல உள்ளவங்க சாப்பிடுறதுக்கு,இது, வம்பு பண்ணுறவங்க சாப்பிட..ஸ்பெஷல் ட்ரைனிங்.."

"மாமா.."
பல்லை கடித்தாள், கீர்த்தி.

"அண்ணா,இன்னிக்கு நீங்க காலி.."

"உனக்கு கூட தெரியுது என் நிலைமை.."

முகத்தை, பாவமாய் வைத்துக் கொண்டு சொன்னான்..

"இன்னைக்கு பாட சொன்னதும்,அண்ணியை நினைச்சு ஒரு டூயட் படாம..போங்க ண்ணா.."
புன்னகைத்து கொண்டான் பார்த்தி..

இன்று அவன் பாடியதும், அவளை நினைத்து தான், அது புரிந்த கீர்த்தியும்,மென்னகையோடு,

"விடு பவி.. பொழைச்சு போறார்.."

சிறிது நேரம் பேசிவிட்டு சென்றாள், பவி..

"ஸ்வீட் கேர்ள்.."

"அதுல கூட சாப்பாடு தானா??"

"மாமா..இன்னிக்கு ரொம்ப பேசுறீங்க..வீட்டுக்கு வாங்க..இருக்கு உங்களுக்கு, யார் அந்த ரசிகையர் கூட்டம்.??."

'அடப்பாவி ஆகாஷ், கொளுத்தி போட்டுட்டியே'

"அது சும்மா..மா.."

"ஓஹோ.."

அது, அவனை நம்பவில்லை என்று சொன்னது..

அதன் பின், சாப்பிட்டு விட்டு,இருவரும் காரில் வீடு சென்று சேர்ந்தார்கள்..


 

Padma

Active member
சான்ஸே இல்லைன்னு கீர்த்தியை பார்த்து 36 வது அத்தியாயத்திலே சொல்றியே பவி. Too late நாங்க 1st எபியிலேயே கண்டுபிடிச்சுட்டோமே 😂 😂 😂 😂
 
Top