அத்தியாயம்-39
ஹாலில் அனைவரும் குழுமி இருந்தார்கள்..மீனாட்சியும் கேசவனும், அனைவரையும் வரவேற்று,அமர செய்தனர்..
அகிலாண்டம், வேண்டா வெறுப்பாய் வந்து அமர்ந்தார்..
ஹாலுக்கு வந்த பார்த்திபன், ஒரு நிமிடம் திகைத்தான். அனைவரும் வருவார்கள் என்று எதிர் பார்க்க வில்லை. முக்கியமாய் அகிலாண்டம்..பின் சுதாரித்து,
"வாங்க எல்லாரும்.."
பொதுவாய் வரவேற்றான்..
முன்பு இருந்ததை விட அழகாய், கம்பிரமாய் இருந்தான் பார்த்தி..மனம் நிறைந்த வாழ்க்கை,அருமையான வேலை, முத்து முத்தாய் இரு குழந்தை செல்வங்கள், எல்லாம் அவன் முகத்தில் பொலிவு ஏற்படுத்தி,கம்பிரத்தை கூட்டி இருந்தது..
வரும் வழியில் தான், பார்த்திக்கு குழந்தை பிறந்திருப்பதை கூறினான், ஆரவ்..
ஆதவ்க்கு, கீர்த்தி கர்ப்பமாய் இருந்தது தெரியும்..கீர்த்திக்கு குழந்தை பிறந்த அன்று தான், மாலையில் இருந்து பிரியங்காவை காணாததால்,டென்சன்னில் இருந்தான்..அதனால், ஆரவ்வும் எதுவும் கூறவில்லை..
சம்யுக்தா, பிரியங்காவை அணைத்து, கண்ணீர் வழிய கொஞ்சிக் கொண்டிருந்தாள்..
"ஏன்மா அழற..பாப்பா,எந்த சேட்டையும் பண்ண மாட்டேன் மா..குட் பேபியா இருப்பேன்.."
ஏன் தாய் அழுகிறாள் என்று புரியாமல், கூறினாள் குழந்தை..
"நீ குட் தான் டா.. அம்மா தான் உன்னை கவனிக்காம, பேட் ஆயிட்டேன்.."
கண்ணில் நீர் வழிய, கூறினாள்..
ஆதவ்வின் கண்களும் கலங்கி இருந்தது..
பார்த்தியை அணைத்துக் கொண்டான்,பேச்சு மறந்தவனாய்..
சிறிது தயங்கிய பார்த்தியும், அவன் முதுகில் தட்டி,ஆறுதல் படுத்தினான்..
குழந்தையின் அருகில் இருந்து எழுந்த சம்யு,பார்த்தி அருகில் வந்து, யாரும் எதிர் பார்க்காத நேரத்தில், அவன் காலில் விழுந்தாள்..
பதறிய பார்த்தி,விலகினான்..
"அச்சோ,என்ன பண்ணுறீங்க..??எழுந்திரிங்க.."
சற்று சங்கடமாய் கூறினான்..
மண்டியிட்டு அமர்ந்து படி, அவனை பார்த்து கை கூப்பியவள்,
"உங்க உதவியை, உயிர் இருக்க வரை மறக்க மாட்டேன்..என் உயிரையே திருப்பி கொடுத்து இருக்கீங்க..இதுக்கு பதிலா, எதை கொடுத்தாலும், சர்வ சாதாரணம்.."
"இது அவ்வளவு பெரிய உதவி இல்ல..சாதாரண உதவி தான்.. எழுந்திரிங்க ப்ளீஸ்.."
"இது உங்க பெருந்தன்மையை காட்டுது..உங்களுக்கு சின்ன வயசுல இருந்து நடந்த கொடுமை எல்லாம் மனசுல வச்சு கிட்டு, இவளை கண்டுக்காம, யாருன்னு தெரியாத மாதிரி போய் இருக்கலாம்..எங்களுக்கு தெரிய போறது கூட இல்ல..ஆனா, நீங்க அதை மனசுல வச்சுக்காம,இவளை காப்பாத்தி,வீட்டுக்கு கூட்டிட்டு வந்து,எங்களுக்கு தகவல் சொல்லி..நிச்சயம், இது பெரிய உதவி தான்.."
சம்யு காலில் விழுந்த போதே,அகிலாண்டதுக்கு பெரிய அதிர்ச்சி தான்...
கல்யாணத்தன்று தவிர, இது வரை, மாமியார் காலில் கூட விழாத, கெத்தான ஆள் அவள்..பணிவது போல தெரிந்தாலும், அவள் விரும்பியதை செய்ய கூடியவள்..
அதனாலேயே, இரண்டாவது மருமகளை மிடில் கிளாஸ் குடும்பத்தில் எடுத்தார், அகிலாண்டம்..
சொல் பேச்சு கேட்காதவர்கள், இரண்டு வகை.ஒன்று, நேரடியாய், முடியாது என்று கூறி விட்டு, செய்யாதவர்கள்..இரண்டாவது, நாம் சொல்வதற்கு, தலை அசைத்து விட்டு, அவர்கள் நினைத்ததை செய்பவர்கள்..
இவள், இரண்டாவது வகை..அதனாலேயே, இவளிடம் அதிகம் வைத்துக் கொள்ள மாட்டார், அகிலாண்டம்..இன்று, பேத்தியை காணும் என்ற கடுப்பில்,மனதில் உள்ளதை திட்டி விட்டார்..
இப்பொழுது, இவள் பேச்சும்,அகிலாண்டத்தை குத்தி காட்டி பேசியதும், கடுப்பை கிளப்பினாலும், எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தார், அகிலாண்டம்..
"ப்ளீஸ் எழுந்திரிங்க.."
"எழுந்துக்கோ சம்யு.."
சம்யுக்தாவிடம் கூறிய ஆதவ்..
"தேங்க்ஸ் டா.. நாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு சம்பாதிக்குறதே, எங்க பொண்ணுக்கு தான்.. அவளை கவனிக்காம, பணம் பின்னாடி ஓடுனது, எவ்ளோ முட்டாள் தனம்னு, இப்போ புரியுது.."
"விடு ஆதவ்..இப்போ தான் எல்லாம் சரி ஆகிடுச்சே..இனி, கவனமா இருந்தா, சரி ஆகிடும்.."
"நிச்சயம் பார்த்தி..அவ எங்களுக்கு ஒரு பொண்ணு,ஒரே பொண்ணு..அவ மட்டும் தான் எங்க பொண்ணு..அப்போ, இன்னும் கூடுதல் கவனத்தோட இருக்கனும்.."
அவனை, புரியாமல் பார்த்தான் பார்த்தி..
"ஆமாங்க,என் முதல் பிரசவத்துல ஏற்பட்ட சிக்கல்ல, இனி, குழந்தை பிறக்குறது கஷ்டம்னு சொல்லிட்டாங்க..இவ மட்டும் போதும்னு,நாங்க மனசை தேத்தி கிட்டோம்..யாருக்கும் இதை சொல்லல, அப்போ.."
அகிலாண்டத்திற்கு அதிர்ச்சி,
'இவ்வளவு நாள், என் கிட்ட கூட சொல்லலியே..இதை..'
அவரால், ஜீரணிக்கவே முடியவில்லை..
மகன்கள் இருவரும், கை பிடியில் என்று இருந்தவருக்கு, முதல் அதிர்ச்சி..அவருக்கு தெரியாமல், மகன் வாழ்வில் ரகசியம் உண்டு என்று..
பேச்சை மாற்றும் விதமாய்,
"ஆதவ்,நீங்க வந்ததும்,போலீஸ் ஸ்டேஷன் வந்து ஒரு கம்பிளைன்ட் கொடுக்க சொன்னார், இன்ஸ்பெக்டர்..உங்க வீட்டு டிரைவரும் உடந்தையாம் இதுல.."
"ஹ்ம்ம்..தெரியும் டா.. சம்யு அப்பாக்கு, பெங்களுர் கமிஷனர் பிரெண்ட்,இவ கிடைச்சதும்,இங்கிருந்து அங்க தகவல் போய், அவர் கால் பண்ணி சொன்னார்..நாங்க போய் புகார் கொடுக்குறோம் டா.. அஞ்சு வருசமா டிரைவரா இருக்கான்..நம்பிக்கையானவன்னு இருந்துட்டோம்..பணத்துக்கு விலை போவான்னு எதிர் பார்க்கல.."
"இனி, நீங்க யாராவது, பாப்பா கூட எங்க போனாலும் கூட போங்க.."
"நிச்சயம் டா.."
பேசிவிட்டு, அனைவரும் அறைக்குள் சென்றனர், கீர்த்தியையும் குழந்தைகளையும் பார்க்க..
வேறு வழி இல்லாமல், அகிலாண்டமும் சென்றார்..
உள்ளே சென்றவர்,கீர்த்தியின் அருகே இரு குழந்தைகளை பார்த்து, திகைத்தார்..
ஆரவ், குழந்தை என்று கூறினான்,இரட்டை குழந்தை என்று கூறவில்லை..
அனைவரையும் பார்த்து புன்னகைத்த கீர்த்தி,
"வாங்க…"
"நல்லா இருக்கியா மா.."
ஆதவின் கேள்விக்கு,
"ஹ்ம்ம்…நல்லா இருக்கேன்…"
அவனை, என்ன வென்று அழைப்பது என புரியாமல், நிறுத்தினாள்..
"ஆரவ் மாதிரி தான் நானும், அத்தான்னு கூப்பிடு மா.."
புன்னகை முகமாய் கூறினான்..
"ஆமா,கீர்த்தி.நானும், ஆர்த்தி மாதிரி தான்..அதுனால, அக்கான்னு கூப்பிடு.."
சம்யுவின் பேச்சுக்கு,
"ஆனா, நான் அவளை அக்கான்னு கூப்பிட மாட்டேனே.. வாடி போடி தான்.. உங்களை…"
இழுத்த கீர்த்தியை பார்த்து,
"அம்மா தாயே,நான் கூட, நீ அமைதின்னு, முதல் தடவை பார்த்தப்போ நினைச்சேன்.."
அனைவரும் சிரித்தனர்..
"ம்மா, பேபிஸ் இவ்ளோ நாள், சித்தி வயித்துக்குள்ள இருந்துச்சாம்,தெரியுமா??"
"அப்படியா டா.."
அனைவரும் கலகலப்பாய் பேசிக் கொண்டிருந்தார்கள்..அகிலாண்டத்தை தவிர.
மதியம், அனைவர்க்கும் விருந்து சமைத்தனர், மீனாட்சியும் மரகதமும்.ஆர்த்தி, குழந்தை மலர்விழியை வைத்துக் கொண்டு, இன்னோரு அறையில் இருந்தாள், கூட பிரியங்காவும்..
அவளுக்கு, தத்தி தத்தி நடந்து வரும் மலரை பிடித்து விட்டது.எனவே, ட்வின் பேபிஸ்க்கு ஓய்வு கொடுத்து விட்டு,இவளுடன் விளையாட ஆரம்பித்தாள்.
பார்த்தி,ஆரவ்,ஆதவ், சம்யு, அனைவரும் காவல் நிலையத்துக்கு சென்றிருந்தனர்.
மாதவனும் பரமேஷும், வெளி வேலையாய் சென்றிருந்தார்கள்.கேசவன், வெளி வராண்டாவில் அமர்ந்திருந்தார்.
அகிலாண்டம் மட்டும் ஹாலில் இருந்தார்.
"அம்மா.."
கீர்த்தியின் அழைப்பில்,மீனாட்சி, வேகமாய் அவள் அறைக்குள் சென்றார்.
வேர்வையை முந்தானையில் துடைத்து கொண்டு,
"என்ன டி வேணும்..??"
"வேலையா இருக்கியா??"
"ஆமா டி.. சமையல் செஞ்சுட்டு இருக்கேன்..சொல்லு..என்ன வேணும்..??"
"சரி, நீ போ.."
"விளையாடுறியா??வேலை செஞ்சுட்டு இருந்தவளை கூப்பிட்டு, இப்போ ஒன்னும் இல்ல..போன்னு சொல்லுற.."
"நீ போ..போய்ட்டு, உன் சம்பந்தியை அனுப்பு.."
"ஏய்,உன் சேட்டை எல்லாம் உன்னோட வச்சுக்கோ..பேசாம இரு..என்ன வேணும் சொல்லு.."
"அவங்களை அனுப்பு,சும்மா தானே உட்கார்ந்து இருக்காங்க.. வர சொல்லு..இப்போ நீ சொல்லுரியா, இல்ல நான் கூப்பிடவா??"
படுக்கையை விட்டு எழப் போனாள்..
"ஏய் இருடி..பச்சை உடம்புக்காரி மாதிரியா நடந்துக்குற..இரு,அவங்கள கூப்பிடுறேன்.."
'அது…'
என்னும் பார்வையோடு அமர்ந்திருந்தாள் கீர்த்தி..
வெளியே வந்த மீனாட்சி,சற்று தயங்கி,
"அண்ணி.."
நிமிர்ந்து பார்த்தார் அகிலாண்டம்.
"கீர்த்தி,உங்களை உள்ள கூப்பிடுறா.."
"என்னையா??"
ஆச்சர்யமாய் கேட்டார்.
"ஆமாம்.."
"எதுக்கு??"
"தெரியல அண்ணி.."
சங்கடமாய் கூறினார்.
"சரி போறேன்.."
உள்ளே சென்றவரை பார்த்த கீர்த்தி,
"என்ன அத்தை, வந்ததுல இருந்து,எதுவும் பேச மாட்டேங்குறீங்க.. உங்க பேர பிள்ளைங்களை, பக்கத்துல வந்து கூட பார்க்கல..தூக்கி கொஞ்சல..ரொம்ப மோசம் அத்தை நீங்க.."
சிணுங்கினாள் கீர்த்தி.
'இவ, நம்மள வச்சு காமெடி பண்ணுறாளோ??'
"யாருக்கு,யார் பேரன்..??"
"இவனுங்க தான் அத்தை, உங்க பேர பிள்ளைங்க..போங்க அத்தை, எப்போவுமே விளையாட்டு தான், உங்களுக்கு.."
'ஏது, விளையாடுறனா..??'
"சரி அத்தை, அந்த கப் போர்டுல, தம்பி பாப்பாக்களோட துணி இருக்கும். எடுங்க அத்தை. சுச்சு போய்ட்டான், மாத்தனும்.."
திகைத்த அகிலாண்டம்,
"நானா??"
"ஆமா அத்தை.. உங்களை தான்.. இங்க, நாம ரெண்டு பேர் தானே இருக்கோம்..எடுத்துக் கொடுங்க அத்தை.."
எரிச்சலோடு சென்று, எடுத்து வந்தார்..
"என்ன அத்தை, ஒன்னு கொண்டு வரிங்க..உங்களுக்கு, ரெண்டு பேரப் பசங்க..என்ன செஞ்சாலும், ரெண்டு பேரும், ஒன்னா தான் செய்வானுங்க..சொ, இனி, ரெண்டு எடுத்துட்டு வாங்க.."
இனி, அவர் தான் எல்லாம் செய்ய போவது போல, கூறினாள்.. பல்லை கடித்தவர், இன்னொரு துணி கொண்டு வந்தார்.
குழந்தைகளுக்கு மாற்றினாள்.
வெளியே செல்ல போனவரை,
"அத்தை எங்க போறீங்க..??இருங்க..இங்கயே..எல்லோரும் வேலையா இருக்காங்க.. நீங்க சும்மா,வெ.. வேடிக்கை பார்த்துட்டு தானே இருக்கீங்க..இங்கயே இருங்க.."
"ஏய்,என்னை என்ன, உன் வீட்டு வேலைக்காரின்னு நெனச்சியா??.உனக்கு வேலை பார்க்க.."
"ஏன் அத்தை, இவ்ளோ கோபம்,உங்க பேர பசங்களுக்கு, நீங்க செய்யுறீங்க..இதை போய் யாராவது, வேலைக்காரி வேலைன்னு சொல்லுவாங்களா??"
"யாருக்கு, யாரு டி பேரன்..உன் புருசனையே, வீட்டுல சேர்த்துகிட்டதில்லை நான்..இதுல, இவனுங்க, என் பேர பசங்களா??"
"என் புருஷனை நீங்க ஏத்துகாட்டி என்ன??உங்க பிள்ளைங்க ஏத்துகிட்டாங்க..அதோட, நீங்க ஏத்து கிட்டாலும், ஏத்துகாட்டியும், அவர், என் மாமனார்க்கு பிறந்தவர்..அவரையே உரிச்சு வச்ச மாதிரி..என் மாமியார் விட்டுக் கொடுக்காட்டி, உங்களுக்கு, இந்த வாழ்க்கையே இல்ல..
அதை, கொஞ்சமாச்சும் மனசுல வச்சு..இவ்ளோ நாள், என் புருஷனை, ஒழுங்கா நடத்தி இருக்கனும்..சரி, அது போகுது..இப்போ, உங்க பேத்தியை காப்பாத்தி இருக்கார்..இப்போ கூட திருந்தாட்டி..
நல்ல மாட்டுக்கு, ஒரு சூடு..மாட்டுக்கே அப்படின்னா..
மனுசனா இருந்தா, இந்நேரம் புத்தி வந்திருக்கும்.."
"யாரை டி.. மனுஷி இல்லைங்குற..??"
"திருந்தாதவங்களை சொன்னேன் அத்தை.. நீங்க அப்படியா என்ன??"
அவளை முறைத்தார்.
"சரி, நீங்க போங்க அத்தை.. இந்த சின்ன உதவி கூட செய்ய மாட்டேங்குறீங்க.. உங்க பிள்ளைங்க வரட்டும்..கேட்குறேன்..இதுல என்ன தப்புன்னு??.."
முகத்தை ,பாவமாய் வைத்துக் கொண்டு கூறினாள்..
செய்த உதவியை, சொல்லிக் காட்ட கூடாது தான்..
அது, நியாயமான மனிதர்க்கு..இவருக்கு சொல்லலாம் என்று, சொல்லிக் காட்டினாள் கீர்த்தி..
பிள்ளைகள், இப்பொழுது இவர்கள் பக்கம் என்று புரிந்த அகிலாண்டம்..
"இருந்து தொலைக்குறேன்.."
கூறி விட்டு, அங்குள்ள ஷோபாவில் அமர்ந்து கொண்டார்..
குழந்தைகள் அழ ஆரம்பித்தார்கள்..
"அழ கூடாது தங்கங்களா.. இது பூதம் இல்ல..நம்ம பாட்டி தான்.. வெள்ளையா இருக்கதால, பூதம்னு நினைச்சுட்டீங்களா.. பயப்பட கூடாது..சரியா??"
'இவளை…இப்போ, என்னை ஏன்?? இப்படி சொல்லுறேன்னு கேட்டா.. அதுக்கு ஒரு கதை சொல்லுவா..'
"அத்தை, என் பிள்ளைங்க, யார் மாதிரி இருக்காங்க..??"
"தெரியல.."
"என்ன அத்தை, இது கூட தெரியலையா, உங்களுக்கு..உங்க புருஷன்,என் மாமனார்,அவரை மாதிரியே இருக்காங்க பாருங்க..என்ன, அவர் மாநிறம்..இவனுங்க, ரோஸ் கலர் அஹ், இருக்கானுங்க..போக போக, நிறம் மாறுமோ என்னவோ..என் புருஷனும், என் மாமனார் மாதிரியே தானே..இவனுங்களும், அப்படியே இருக்கானுங்க..இங்க வந்து பாருங்களேன்..அதே கண்ணு,அதே மூக்கு, குட்டி வாய்.. பக்கத்துல வாங்களேன்.."
'படுத்துறாளே..,
வராட்டி விட மாட்டா..'
எழுந்து சென்றார்..
"ஏன் அத்தை, உண்டாகி இருக்கும் போது, யாரை அதிகமா நினைக்குறமோ, அப்படியே குழந்தை பிறக்குமாம்..அப்படியா..??என் மாமியாருக்கு, என் மாமனார் மேல எவ்ளோ லவ் பார்த்தீங்களா?? அத்தை.."
உனக்கு, அப்படி எதுவும் இல்லை என்று சொல்லாமல் சொன்னாள்..
"நான் கூட, தீபன் மாமா மாதிரியே வேணுமுன்னு நினைச்சேன்..அதே மாதிரியே இருக்கானுங்க.."
பல்லை, கடிக்க மட்டுமே முடிந்தது, அவரால்..
"அச்சோ,கக்கா போய்ட்டீங்களா டா.. பாட்டிக்கு ரொம்ப வேலை வைக்குறீங்க..அத்தை, அந்த வெட் டிஸ்ஸு எடுங்களேன்.."
'கொடுமை, கொடுமை..'
அதை துடைத்து சுத்தம் செய்தவள்..
"இந்தாங்க அத்தை, இதை, ரெஸ்ட் ரூம்க்கு உள்ள போடுங்க.."
அந்த கக்கா துணிகளை, அவரிடம் கொடுத்தாள்.
"என்ன??"
"எதுக்கு, இவ்ளோ அதிர்ச்சி அத்தை..?? உங்களை, துவைக்க சொல்லல அத்தை.. ரெஸ்ட் ரூம்குள்ள போடுங்க..அம்மா துவைச்சுடுவாங்க..நீங்க பார்க்குறதை பார்த்தா, நீங்களே துவைக்குறேன்னு சொல்லுற மாதிரி இருக்கு.."
துவைக்க வச்சுடுவாளோ என்னும் பயத்தில், அதை, நுனி விரலில் வாங்கி, ரெஸ்ட் ரூம்க்குள் போட்டு விட்டு,கையை, டெட்டால் போட்டு கழுவி விட்டு வந்தார்..
'வெள்ளை யானை.. இது தான் ஆரம்பம்..போக போக தெரிச்சு ஓட வைக்குறேன்..'
அப்பொழுது ,அவள் அம்மா, சூப் எடுத்துக் கொண்டு, அறைக்குள் வந்தார்..
அகிலாண்டத்திடம் கொடுக்க போனார்..வேகமாய், அதை எடுத்த கீர்த்தி, அதை குடித்து விட்டு,
"நல்லா இருக்கு ம்மா.."
"ஏய்,இது அவங்களுக்கு டி.. உனக்கு பத்தியமா, வேற செஞ்சுருக்கேன்..இது, காரமா இருக்கும்..எதுக்குடி, அதை குடிச்ச.."
"ஓ..நான் எனக்குன்னு நெனச்சேன் ம்மா.. இந்தாங்க அத்தை.."
தான் குடித்ததை, அவரிடம் நீட்டினாள்..
"நீ குடிச்சத்தை கொடுக்குற.."
"ஏன்மா??ஓ..எச்சிலா.. ஏன் அத்தை, நீங்க, எச்சில் சாப்பிட மாட்டீங்களோ..??"
அப்பாவியாய், விழி விரித்து கேட்டு விட்டு,
நக்கலாய் சிரித்து விட்டு, மிச்ச சூப்பை, ரசித்து ருசித்து குடித்தாள்..
என் மாமியாரின் எச்சில் தான், நீ வாழும் வாழ்க்கை என, சொல்லாமல் சொல்லி விட்டு,ஒன்றும் அறியாதவள் மாதிரி இருந்தாள்..
"இருங்க அண்ணி..உங்களுக்கு, வேற கொண்டு வரேன்.."
"வேண்டாம் ம்மா.. சூப்ல, எண்ணை ஜாஸ்தி..கொழுப்பு கூடிடும் அத்தைக்கு..ஏற்கனவே ஜாஸ்தி.."
"என்ன..??"
முறைத்த அகிலாண்டத்திடம்,சிரித்தபடி,
"கொலேஸ்ட்ரால் அத்தை, தமிழ்ல சொன்னேன்., நான் அங்க இருக்கும் போது,உங்க ரிப்போர்ட் பார்த்திருக்கேன்..ஜாஸ்தி இருந்துச்சு..அதை சொன்னேன்"
இவ ஏதோ வம்பு பண்ணுறா, என புரிந்த மீனாட்சி, ஒன்றும் கூறாமல் சென்றார்.
அகிலாண்டத்தை, அதை எடு,இதை எடு என, ஒரு வழி செய்தாள், பார்த்தியும் மற்றவர்களும், வீடு திரும்புவதற்குள்..
வீட்டிற்கு வந்ததும்,குழந்தைகளை பார்க்க, விரைந்து, அறைக்குள் வந்த பார்த்தி,அகிலாண்டத்தை பார்த்து திகைத்தான்..
"வந்துட்டீங்களா மாமா..அத்தை தான், குழந்தைங்களை விட்டு இருக்க முடியாம, இங்க, எனக்கு உதவியா இருக்காங்க.. அப்படி தானே அத்தை.."
அவளை முறைத்து விட்டு, அறையை விட்டு சென்றார்..
"என்ன வம்பு பண்ண பொம்மு, அவங்க கிட்ட..??"
"ஒன்னும் இல்ல மாமா...அவங்க தான், ஹால்ல இருக்க போர் அடிக்கிதுன்னு, இங்க வந்தாங்க.."
உன்னை நம்ப மாட்டேன், எனும் பார்வை பார்த்தான்..
"கால் ரெண்டும் வலிக்குது மாமா..உங்க பிள்ளைங்க, தூங்க விட மாட்டேங்குறாங்க.."
பாவமாய் முகத்தை வைத்து கொண்டு, சொன்னாள்..
இவனுக்கு உருகி விட்டது..
"நான் கால் பிடிச்சு விடுறேன்..தூங்கு டா பொம்மு..பாப்பாங்க அழுதா எழுப்புறேன்.."
பேச்சை மாற்றிய திருப்தியில்,
"சரி மாமா தூங்குறேன்..ரொம்ப வலிச்சா சொல்லுறேன்..இப்போ பிடிக்க வேண்டாம்.. இங்கயே இருங்க..போய்டாதீங்க.."
கூறிவிட்டு, படுத்தாள்.
குழந்தைகளை வருடிக் கொண்டு, அவர்கள் பூ முகம் பார்த்த படி அமர்ந்திருந்தான் பார்த்தி.