கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே..அத்தியாயம்-4

Nilasubramanian

Moderator
Staff member
அத்தியாயம்-4

ஆர்திக்கு படபடப்பாய் இருந்தது.
'இவள் செய்த வேலை, யாருக்கு தெரிந்தாலும் கஷ்டம் தான். கேசவனுக்கு தெரிந்தால், தோலை உரித்து விட்டு தான் மறுவேலை, அந்த பக்கம் அகிலாண்டதுக்கு தெரிந்தால்,ஏற்கனவே அவர்கள் உயர்வு,இவர்கள் தாழ்வு என்பது போல பேசிவிட்டு,பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது பிடிக்காது என்று, வெளிப்படையாகவே சொல்லிய பிறகு ,இது தெரிந்தால்,அவர் என்ன நினைப்பார். இவளுக்கு எதுவுமே புரிய மாட்டேங்குது.'

மனதிற்குள் புலம்பி விட்டு அவளிடம்,

"கீர்த்துமா,நீ இப்டி பண்ணது யாருக்காச்சும் தெரிஞ்சா என்னாகும்,யோசிச்சியா??இன்னும் குழந்தையாவே நடந்துக்குற.உனக்கு இன்னும் ஆறு மாசத்துல, 21 வயசு ஆக போகுது.புரிஞ்சு நடந்துக்கோடி."

தங்கையிடம் பொறுமையாகவே எடுத்து சொன்னாள்.

"எனக்கு எல்லாம் புரியுது.நீயும் சொல்ல போறதில்லை,நானும் சொல்ல மாட்டேன்.அந்த வெள்ளை காக்காய், அம்மாவுக்கு தெரியக்கூடாதுன்னு உஷாரா தான் இருக்கும்.ஸோ, யாருக்கும் தெரியபோறதில்லை. நீ எப்போ அறைக்குள்ள இருப்பியோ, அந்த நேரத்துல பேச சொல்லு.அப்போ ஒரு வேளை கீழ இருந்தா, மொபைல் அஹ் சைலெண்ட்ல போடு.அம்புட்டு தான்."

"எம்புட்டு கிரிமினலா யோசிக்குற டி"

"வேற வழி ,கேஸுக்கு பொண்ணா பொறந்தா இப்டி தான் யோசிச்சாகனும்.அதோட ,நீங்க ஒன்னும் தப்பு பண்ணலை.கல்யாணம் பண்ணிக்க போறீங்க.பேசுனா, என்ன தப்பு.முன்ன பின்ன தெரியாதவங்களை எப்படி கல்யாணம் பண்ணுறது??அவங்களுக்கு தான் அது புரியலை,உனக்குமா புரியல??"

"அதெல்லாம் புரியுது.இவர் தான்னு முடிவாயுடுச்சு,இனி பேசி,சரி வந்தாலும்,வர்லைன்னாலும் இவர் தான்.கல்யாணத்துக்கு அப்புறம் காலமெல்லாம் பேச தானே போறோம்."

"அதுக்கு கூட அந்த பூசணி,இத்தனை வார்த்தை தான் பேசனும்,இவ்ளோ நேரம் தான் பேசனும்னு ரூல்ஸ் போடாம இருந்தா சரி."

"நீங்க அதை பத்தி கவலை படாதீங்க ,பெரிய மனுஷி.நான் பார்த்துக்குறேன்."

அவள் தலையை செல்லமாய் களைத்துவிட்டாள்.

"நம்ம அப்பா,நான் வேலைக்கு போறதுக்கு முன்ன என்ன சொன்னார் தெரியுமா?? காதல்,அது இதுன்னு என் காதுல விழுந்துச்சு,இந்த ராகவனோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி வரும்.பார்த்து நடத்துக்கம்மா.நம்ம குடும்ப கௌரவம், உன் கையில தான் இருக்குன்னு சொன்னாரு."

"நீயேண்டி அதை கையில எடுத்துக்கிட்டு போன??"

"உன்னை…எவ்ளோ சீரியஸ் அஹ் பேசிட்டு இருக்கேன்.மொக்கை போடுற."

"இது எனக்கு தெரியாதா??உனக்காவது, வேலைக்கு போகையுல தான், இந்த அறிவுரை.நான் ஸ்கூல் போகையிலேயே சொல்லிட்டாரு ஹிட்லர்.சேம் டயலாக்,சேம் மாடுலேஷன்.ஒரு முகமே சகிக்கலை, இதுல இன்னொரு முகமானு, நான் ஜெர்க் ஆகிட்டேன்."

"ஏண்டி,கொஞ்சமாச்சும் அப்பான்னு மரியாதையை இருக்கா??"

"அவருக்கு கொஞ்சமாச்சும் ,பொண்ணுங்கன்னு நம்பிக்கை இருக்கா??"

"உங்கிட்ட பேசி வேலைக்கு ஆகாது.நான் கீழ போறேன்.நீ என்னவோ பண்ணு."

"கீழ கேஸு போய்டுச்சானு பார்த்து,சிக்னல் கொடு, வந்துடுறேன்."

"ஏதாவது செய்ய வேண்டியது,அப்புறம் மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியது."

என்று சொல்லி விட்டு, கீழே சென்றாள் ஆர்த்தி.

நாட்கள் அதன் போக்கில் சென்றது.
தொலைபேசியின் வழியாகவே ஆரவ்,ஆர்த்தி திருமண வேலைகள்,தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

மூன்று மாதம் கழித்து, திருமணம் வைத்து கொள்ளலாம் என்று அகிலாண்டம் கூறி விட்டார்.நிச்சயம், அதற்கு முதல் நாள் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.திருமண தேதி ,மாப்பிள்ளையின் வீட்டிலேயே பார்க்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இடையில் ஒரு நாள் கேசவன்,சில சொந்தங்களை கூட்டிக்கொண்டு, மாப்பிள்ளையின் வீட்டிற்கு சென்று பார்த்துவந்தார்.
அவர்களுக்கு திருச்சியில் மூன்று ஜவுளிக்கடை உள்ளது.ஒரு பெரிய கடை,ரெண்டு கிளைக்கடை.
அனைத்தும், அகிலாண்டத்தின் மாமனார் காலத்தில் இருந்தே ,வழிவழியாக வருவது.

பெரிய மகன், மனைவியின் சொத்துக்களை பார்த்துக்கொள்ள, பெங்களுரில் தங்கி, மாமனார் வீட்டோடு மாப்பிள்ளை ஆகி விட்டதால்,இங்கு உள்ளதை ,ஆரவ் தான் பார்த்துக்கொள்ளுகிறான்.இதில் கேசவனுக்கு பரம திருப்தி.

ஆர்த்தி மற்றும் ஆரவின் உறவு, அலைபேசியின் மூலம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது,யாருக்கும் தெரியாமல்,கீர்த்திக்கு மட்டும் தெரிந்து.

சில நேரம் இவளே கடுப்பாகி,
"மொபைல வைக்குரியா? இல்ல உடைக்கட்டுமான்னு??"
கத்தும் அளவு.

அகிலாண்டம் ஒரு நாள் போன் செய்து,
ஆர்திக்கு, ஒரு லட்சம் ரூபாயில் பட்டு புடவை எடுத்திருப்பதாக கூறினார்.இவர்களுக்காகவே, நெய்து தருப்பவர்களிடம், ஸ்பெஷல்லாக நெய்து தர சொன்னதாக ,சொன்னார்.பின் மாப்பிள்ளையின் ஆடைகளுக்கு, ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்துவிட்டு வைத்தார்.அது ஒரு லட்சத்தையும் தாண்டியது.

"இவங்க ஜவுளி கடை வச்சுருக்காங்க, அதுல இருந்து, ஒரு புடவையை குடுத்துட்டு,அந்த விலைக்கு மேல ,நமக்கு செலவு வைக்குது பூசணி.இது கடையிலேயே துணி இல்லியா??நாமா வாங்கி கொடுத்து தான், அந்த வெள்ளை காக்காய் புதுசே கட்ட போகுது போல.பேசாம இது கடைக்கே போய், ஆடி தள்ளுபடி ஆபர் (offer) ஏதும் இருக்கான்னு கேட்டு எடுத்துடலாமா??"

"சும்மா இருடி… அப்பா காதுல விழப்போகுது"

"இந்த கேஸு ,இப்படி ஒரு ஆப்பை, தேடி,தேடி உக்காருது."

வழக்கம் போல், யார் தடுத்தாலும், என் கருத்தை கூறியே தீருவேன், என்று கூறிவிட்டு சென்றாள் கீர்த்தி.
புடவை எடுக்கவெல்லாம், பெண்ணை அழைத்து செல்லும் வழக்கமில்லை ,என்று அதற்கும் ஆர்தியை கூப்பிடவில்லை.

கேசவனும், தன் நிலங்களில் கொஞ்சத்தை விற்று, கல்யாணச்செலவுக்கு ஏற்பாடு செய்யும் வேலையில் ,வீட்டில் இருக்கும் நேரம் குறைந்தது.
கல்யாண செலவு பற்றிய கவலையில், கீர்த்தியின் விஷயம் மறக்கபட்டது.மறக்க வைக்கபட்டது கீர்தியால்.

கீர்த்தி எப்பொழுதும் இப்படி தான், கேசவன் கூறுவதை மறுக்க மாட்டாள், எதிர்க்க மாட்டாள் நேரடியாக.அவரே, இவள் போக்கிற்கு வரும்படி செய்து விடுவாள்.படிப்பு கூட என்ஜினீயர் தான் என்ற முடிவில் இருந்தவரை,

''நீ, ஒழுங்கா ஒரு டிகிரி வாங்கு போதும்''
என்று சொல்லும் அளவு மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தவள்.

ஆர்திக்கு வாங்கிய நகையோடு, கீர்த்திக்கு சேர்த்துவைத்ததையும் சேர்த்து, இவளுக்கே கொடுக்க முடிவு செய்யபட்டது.

எப்படியும் இவள் திருமணத்திற்கு, இரண்டு,மூன்று ஆண்டு ஆகும். அதற்குள் சேர்த்துவிடலாம் என்று கூறி, கேசவன் மீனாட்சியிடம் ஒப்புதல் பெற்றார்.

ஆர்திக்கு தான் இதில் வருத்தம்,

"என்னால, உன் நகையும் உனக்கு கொடுக்கமுடியலை."

"ச்சு.. விடு…அதை வச்சு நான் என்ன பண்ண போறேன்.பான்ஸி(fancy) நகை, வித விதமா இருக்கு.தங்கம் போட்டா, ஒரே நகை திரும்ப திரும்ப போடனும். இது, புதுசு புதுசா போடலாம்"

"அதை போட்டு, உன்னை கல்யாணம் பண்ண முடியாது."

"வராதட்சணை வாங்காதவனை தான், நான் கல்யாணம் செஞ்சுக்குவேன்."

"ஹ்ம்ம்..கனவுலயா…"

அவளை பார்த்து அலகு காட்டி விட்டு,

"நிஜத்துல…"

"அப்போ..நீ ஔவையார் தான்…"

"போடி..உன் மாமியார் மாறி ஒரு பூசணி கிட்ட மாட்டுறதுக்கு,அவ்வையார் தேவலாம்."

நாட்கள் ஓடி, திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கையில்,ஆர்திக்கு தேவையானதை, பெட்டியில் அடுக்கி கொண்டிருந்தார்கள், மீனாட்சி,ஆர்த்தி, அத்தோடு கீர்த்தியும்.

"அம்மா,இந்த புடவை நல்லா இருக்குமா.. இதை கட்டுறேன் கல்யாணத்துக்கு,இது நிச்சயத்துக்கு,இது வரவேற்புக்கு."

அவள் கையில் இருந்த புடவையை தட்டி விட்டார் மீனாட்சி.

"அவளுக்கு பெட்டி அடுக்க வந்துட்டு,அவ புடவை எல்லாம் தூக்கிகிட்டு இருக்க.வந்ததுல இருந்து எந்த உதவியும் செய்யல ,உபத்திரவமாவது செய்யாம இரு."

முகத்தை தூக்கி வைத்து கொண்டாள் கீர்த்தி.
ஆர்திக்கு பாவமாக இருந்தது.

"இந்த புடவையெல்லாம் வச்சு, நான் என்ன செய்யப்போறேன் மா.அவ விருப்பபட்டதை கட்டிக்கட்டுமே.அவ நகையெல்லாம் கூட, எனக்கு குடுத்திட்டிங்க."

"நீ சும்மா இரு.இவ பாவாடை, தாவணி தான் போடணும்னு அப்பா சொல்லிட்டார்.உனக்கே இந்த புடவையெல்லாம் போதுமா,இல்ல போய் இன்னும் கொஞ்சம் எடுப்பமானு பேசிட்டு இருக்கோம்.இதுல, இருக்குற புடவையில் இவ நால தூக்குறா."

"என்ன தாவணி போடனுமா?? இது கூட ஹிட்லர் தான் முடிவு பண்ணுவரா??என்ன அநியாயம்.??"

"உனக்கு திமிரு கூடிடுச்சு டி, அதான் இப்படி பேசுற.அவரை என் முன்னாடியே, ஹிட்லர்ன்னு சொல்லுற.பல்லை ஒடச்சுப்புடுவேன் பார்த்துக்கோ."

"நீ எப்போ என் பக்கம் பேசி இருக்க.எப்போ பாரு, அவர் பக்கம் தான். க்கும்.."
என்று நொடித்துக்கொண்டாள் கீர்த்தி.

"இப்டி நெல்லு குதிரு மாதிரி வளர்ந்து நிக்குற,நாளைக்கு இவ கல்யாணத்துல, உன்னை பார்த்துட்டு, உன்னை பொண்ணு கேட்டா, உடனே செய்யுற நிலைமையிலயா இருக்குறோம், இப்போ.

உங்க அப்பா, எல்லாம் யோசிச்சு தான் சொல்லுவார்.அவர் சொல்லுறதை, கேட்குறது தான் ,எல்லாருக்கும் நல்லது.தாவணி போட்டா, சின்ன பொண்ணா தெரிவ. நாங்களும், படிப்பு,வேலைன்னு சொல்லி சமாளிச்சுக்குவோம்."

"அப்படி யாரு,இப்படி இடம் பார்க்க சொன்னா??"

அதற்கு மேல் பேச்சு வளர்ந்தால், மீனாட்சி டென்சன் ஆகி விடுவார் என்று தெரிந்தே,ஆர்த்தி,

"கீர்த்து,என் வளையல் செட், ஏதோ வேணும்முனு சொன்னியே கல்யாணத்துக்கு, வந்து பாரு"
என்று அவ்விடம் விட்டு அழைத்து சென்றாள்.

அவளை மாடியில், அவர்கள் அறையில் விட்டுவிட்டு, கீழே வந்தாள் ஆர்த்தி.
அங்கு மீனாட்சி ,கவலையில் அமர்ந்திருந்தார்.இவளை பார்த்ததும்,

"பார்த்தியா அரூ, இவ பேசுரதை,உங்க நல்லத்துக்கு தானே அவரும் கஷ்டப்படுறார்.இப்படி பேசுறா பாரு."

"சின்ன பொண்ணு தானே மா,போக போக புரிஞ்சுக்குவா."

அவரை தேற்றி ஒரு வழியாக, அவ்வீட்டை விட்டு செல்வதற்கு தயாரானாள் ஆர்த்தி.
அங்கிருந்து செல்வதை நினைத்தால், மனதில் பாரமேறியது போல் கனத்தது.எல்லா பெண்களுக்கும் இருப்பது தான், என்று மனதை தேற்றிக்கொண்டாள்.

திருமணம் திருச்சியில் தான்,அகிலாண்டேஸ்வரி கூறிய மண்டபத்தில் தான்.
முதல் நாள் காலையில், பெண்ணை அழைத்து கொண்டு, அங்கு சென்று விட்டார்கள்.அன்று மாலையில் நிச்சயம்.
கல்யாண வேலைகள், பரபரப்பாய் நடந்து கொண்டிருந்தது.

ஆரவ் நல்ல பிள்ளையாய், ஆர்தியை நிமிர்ந்து பார்க்காமல் சுற்றிக்கொண்டிருந்தான்.

'உலக மகா நடிப்புடா சாமி'

வேற யாரு, கீர்த்தி மைன்டு வாய்ஸ் தான்.

ஆர்தியை, உறவு பெண்கள், ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்து சென்றார்கள்.
கேசவனும்,மீனாட்சியும் மண்டபத்தில், பரபரப்பாய் கல்யாண வேலை, பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இது தான் சமயம் என்று, அவர்கள் கண்ணில் படாமல், மண்டபத்தை சுற்றி பார்த்துவிட்டு,வெளியே ரெகார்டில் பாட்டு போடுபவரிடம்,என்ன, என்ன பாட்டு, எப்பொழுது போட வேண்டும், என்று லிஸ்ட் கொடுத்துவிட்டு, சத்தமில்லாமல் மணமகள் அறைக்கு வந்தாள் கீர்த்தி.

"எங்கடி போய்ட்டே?? என்ன தனியா விட்டுட்டு.நல்ல வேளை, யாரும் வந்து நீ எங்கன்னு கேட்கலை."

"சில, பல வேலை இருந்துது.முடிச்சுட்டு வந்தேன்."

"இங்க என்னடி ,உனக்கு வேலை.??"

"அதெல்லாம் சஸ்பென்ஸ்."

"ஏதும், வம்பு வளக்காமா இருந்தா சரி தான்."

"உன் கொழுந்தனுக்கு வேர்க்கவே வேர்காதா,இந்த வெயிலுலயும் கோட் போட்டு சுத்துறார்.நம்ம வீட்டுக்கும், கோட்டு போட்டு வந்தார்.அவருக்கே வேர்க்கலை ,அவர் பொண்டாட்டிக்கு வேர்த்துடுச்சு.இங்க என்ன சீன் போட போகுதோ"

ஆர்தியும், திருமண பதட்டத்தில் பதில் பேசாமல் இருந்தாள்.

"ஆமா,உன் இன்னொரு கொழுந்தன் கண்ணுலயே படலியே."

"எனக்கென்னடி தெரியும்."

"டெய்லி கடலை வறுக்குர..உன் ஆளு கிட்ட இதெல்லாம் கேட்க மாட்டியா??"

"அவரை பத்தி தெரிஞ்சு, நான் என்ன பண்ண போறேன்."

"உனக்கு ஒண்ணுமில்லை,உன் தங்கச்சியை நெனச்சாச்சும் கேட்டுருக்கலாம்."

"உனக்கு தான், அவங்க குடும்பத்தை பிடிக்காதே,அப்புறம் என்ன??"

"பிடிக்காது தான், ஆனா, உன் மாமியாருக்கு அவரை பிடிக்காதே,அதான், ஒரு ஆர்வம், அவரை பார்க்க."

"பார்த்து,உன் ஆர்வம்,ஆர்வகோளாராகிடாம பார்த்துக்க.அப்புறம், அப்பா மந்திரிச்சுருவார்."

"போடி,போடி..பார்த்துக்கலாம்.எவ்வளவோ பார்த்துட்டோம், இத பார்க்க மாட்டோமா"

என்று, சுடிதார் காலரை தூக்கிவிட்டு கொண்டாள்.

….தொடரும்.
 
Top