அத்தியாயம்-40
அன்று இரவு மொட்டை மாடியில் அமர்ந்து பேசினார்கள், சகோதர்கள் மூவரும்..பொதுவாய் பேசிக் கொண்டிருக்கும் போது,திருச்சியில் கார்மெண்ட்ஸ் ஆரம்பிக்க, ஆகாஷின் தந்தை இவனிடம் கேட்டது பற்றி கூறினான் பார்த்தி..
"நல்ல விஷயம் டா பார்த்தி..நீயும் திருச்சிக்கு வந்துடு.."
"ஹ்ம்ம்..அதுக்கு, கொஞ்சம் ஏற்பாடு பண்ணனும்.தாத்தாவோட நிலம் கொஞ்சம் ஊர்ல இருக்கு..குத்தகைக்கு எடுத்து இருக்கவர் கிட்ட, நிலத்தை வாங்கிகிறாரான்னு கேட்கனும்.. இல்லைன்னா, வேற ஆள் பார்த்து கொடுக்கணும்..கொஞ்சம் சேமிப்பு இருக்கு..அதோட, பேங்க்ல லோன் எடுக்கணும்..நெறைய வேலை இருக்கு.."
"செய் டா, ஏதும் உதவி வேணுமுன்னா, தயங்காம கேளு.."
கூறிய ஆதவ்விடம்,ஆரவ்,
"அப்படியே கேட்டுற போறான்..நீ வேற,நானும் பல தடவை சொல்லிட்டேன்..எதுவும், அவனா கேட்க மாட்டான். நாம செஞ்சா தான் உண்டு..ஏதோ, கல்யாணத்துக்கு அப்புறம் தான், கொஞ்சம் பேசவே ஆரம்பிச்சு இருக்கான்.."
அவன் பேச்சில் சிரித்த பார்த்தி,
"எதுவும் தேவை படல,தேவை பட்டா கேட்குறேன்..இப்போ, லோன்க்கு சூரிட்டி கூட, ஆகாஷ் அப்பா போடுறேன்னு சொல்லிட்டார்."
"அவனை குறை சொல்லாதே ஆரவ்,நாம ஒட்டலை அவன் கூட .அப்புறம், அவன் என்ன செய்வான்.."
வெகு நேரம் பேசி விட்டு, மூவரும் கீழே வந்தனர்..அகிலாண்டம், தன் தம்பி வீட்டுக்கு செல்வதாய் கூறி விட்டு, மாலையே கிளம்பி இருந்தார்..
ஒரு படுக்கை அறையில், சம்யுவும் ஆர்த்தியும், தன் பிள்ளைகளோடு படுத்து தூங்கி விட்டார்கள்..இன்னொரு படுக்கை அறையில், கீர்த்தியும் மீனாட்சியும், குழந்தைகளோடு தூங்கினர்.
சகோதரர்கள் மூவரும், ஹாலில் தூங்கினர்..கேசவன்,மாதுவோடு, பரமேஷ்சின் வீட்டிற்கு சென்று விட்டார் உறங்க..
விடிய விடிய கதை பேசி விட்டு உறங்கினார்கள் சகோதரர்கள்..இத்தனை வருடமாய் பேசாத கதைகள் எல்லாம்..
மறுநாள், ஆரவ் குடும்பமும் ஆதவ் குடும்பமும் கிளம்பினார்கள்..தன் மாமா வீட்டிற்கு சென்று, அன்னையை கூட்டி செல்வதாய் கூறி விட்டு, ஆரவ் சென்றான்..ஆதவ் குடும்பம், பெங்களுர் சென்றார்கள்..
ஒரு வாரம் கடந்தது..
"மாப்பிள்ளை.."
"சொல்லுங்க மாமா.."
"ஊருக்கு கிளம்பணும்."
"அதுக்குள்ளேயா மாமா..??"
"ஆமா மாப்பிள்ளை.கடையை, சொந்தக்காரர் கிட்ட பாத்துக்க சொல்லிட்டு வந்தேன்..ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு..நாளைக்கு கிளம்பலாம்னு இருக்கோம்.."
அவரது பன்மையில்,
"அத்தையும் வர்றாங்களா மாமா..??"
"ஆமா மாப்பிள்ளை..கீர்த்தியையும் குழந்தைங்களையும் கூட்டிட்டு கிளம்புறோம் மாப்பிள்ளை.."
"என்ன…??"
அதிர்ந்து எழுந்தவன்,
"பொம்முவுமா..??"
"ஆமா மாப்பிள்ளை..பிரசவத்துக்கே, கூட்டிட்டு போய் இருக்கனும்..சூழ்நிலை..அவ சின்ன பொண்ணு,இரண்டு குழந்தைங்க வேற,அவளால எப்படி பார்த்துக்க முடியும்..தனியா..அதான்.."
"நான் பார்த்துக்குறேன் மாமா..அவ, இங்கயே இருக்கட்டும்.."
சங்கடமாய், மனைவியை பார்த்த கேசவன்,
"நீங்க வேலைக்கு போக வேண்டாமா மாப்பிள்ளை..எவ்ளோ நாள் லீவு போடுவீங்க.. அதோட, குழந்தைகளுக்கு கீர்திக்கு எல்லாம், பத்தியம்,மருந்து..இன்னும் நிறைய இருக்கு.."
தயக்கத்துடன் இழுத்தார் கேசவன்..
"உங்க மாமனார்க்கு, சுடு தண்ணி கூட வைக்க தெரியாது மாப்பிள்ளை..அவரையும் அங்க தனியா விட முடியாது..நீங்க கவலை படாதீங்க மாப்பிள்ளை..நான், அவளையும் குழந்தைகளையும், ஜாக்கிரதையா பார்த்துக்குறேன்.."
அரை மனதாய், தலை அசைத்த பார்த்தி,அறைக்குள் வந்தான்..கீர்த்தியும், சோகமாய் தான் அமர்ந்திருந்தாள்..
அவள் அருகில் அமர்ந்தான் பார்த்தி,எதுவும் பேசாமல்..குழந்தைகள் இருவரும், தொட்டிலில் தூங்கினார்கள்..
அவன் முகம் பார்த்த கீர்த்தி,மெதுவாய், அவன் கைகளை தொட்டாள்..
ஒரு வேகத்துடன், அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் பார்த்தி,அவள் எலும்புகள் நொறுங்கும் அளவு இறுக்கத்துடன்..
வலித்தாலும்,
அவன் மனம் புரிந்து,அவன் முதுகை வருடிக் கொடுத்தாள் கீர்த்தி..
சில நிமிடங்களில், அவள் நிலை உணர்ந்து,
அவளை விடுவித்தவன்..
"சாரி டா பொம்மு..வலிக்குதா..??"
"இல்ல மாமா..நான் இங்கயே இருக்கவா.. ??மரகதம் அம்மா கிட்ட கேட்டு, குழந்தைங்களை பார்த்துக்கலாம்.."
"இல்ல டா பொம்மு..நீ போய்ட்டு வா.. நான், அடிக்கடி வந்து பார்க்குறேன்..மரகதம் அம்மா நமக்கு ரொம்ப உதவி செஞ்சுருக்காங்க..இன்னும் கஷ்டப்படுத்த கூடாது..ஆகாஷ் அப்பா,அங்க திருச்சி கிட்ட, ஒரு கார்மெண்ட்ஸ் ஆரம்பிக்க போறாராம்..
நம்மளையும் பார்ட்னர் அஹ் சேர்ந்துக்க சொன்னார்..அதுக்கு கொஞ்சம் பைனான்ஸ் ஏற்பாடு பண்ணிட்டு,நாம, அங்கேயே ஒரு வீடு பார்த்து இருந்துக்கலாம் டா.."
"நிஜமாவா மாமா.."
மகிழ்ச்சியுடன் கேட்டவள்,
"பணத்துக்கு, என்ன பண்ண போறீங்க மாமா..??"
"ஏற்பாடு பண்ணிடலாம் டா.. லோன் போட்டுக்கலாம்..தாத்தாவோட நிலம் இருக்கு, வித்துட்டு,கையில கொஞ்சம் பணம் இருக்கு, சமாளிச்சுடலாம் டா.."
"ஹ்ம்ம்.."
அவன் தோள் சாய்ந்து கொண்டாள், பாவை..
சிறிது நேரம், ஒரு மோன நிலையில் இருந்தார்கள் இருவரும்..
அவர்கள் மனநிலை புரிந்து, அவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தனர்,கேசவன் தம்பதியர்..
மறுநாள், பார்த்தியின் காரில் கிளம்பினர் அனைவரும்,பரமேஷ் வண்டி ஓட்ட,கேசவன், முன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்..மீனாட்சி,கீர்த்தி பார்த்தி மூவரும், பின் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்..குழந்தைகளை, மாற்றி மாற்றி வைத்து கொண்டு,துறையூர் வந்து சேர்ந்தார்கள்..
வீட்டு வாசலில், இருவரையும் குழந்தைகளோடு நிற்க வைத்து, ஆரத்தி சுற்றினார் மீனாட்சி..
பரமேஷுக்கு நன்றி உரைத்து விட்டு,அன்றைய இரவுப் பேருந்தில் அவனை அனுப்பி வைத்தான் பார்த்தி..
இரண்டு நாள் தங்கி விட்டு,அவனும் கிளம்பினான்..
இருவர் கண்களும் கலங்கின..குழந்தைகளை பிரிய மனம் இல்லாமல்,அன்று முழுவதும், அவர்கள் அருகிலேயே இருந்தான் பார்த்தி..
திருமணத்திற்கு பின், முதல் பிரிவு,பார்த்தியை அணைத்து, மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் கீர்த்தி..அவள் கூந்தலில் முகம் புதைத்தான் பார்த்தி..
சிறிது நேரத்தில் இருவரும், தங்கள் மனதை தேற்றி கொண்டனர்.,விடை கொடுத்தாள், விடை பெற்றுக் கிளம்பினான்..
இரண்டு மாதங்கள் கடந்தது..
நேரம் கிடைக்கும் போதெல்லாம், இங்கு வந்து சென்றான் பார்த்தி..அவனுக்கு, வேலை பளு அதிகம் இருந்தது..புது கம்பெனி ஆரம்பிக்க, பண ஏற்பாடு செய்வதற்கு, லோன் எடுப்பது,நிலம் விற்க ஏற்பாடு,ஆகாஷின் கம்பெனிக்கு, நம்பிக்கையான மேனேஜர், குவாலிட்டி அனலிஸ்ட் தேர்ந்தெடுப்பது..என்று, நேரம் கிடைக்காமல், காலில் சக்கரம் கட்டாத குறையாய் சுற்றினான்..
ஊரில் உள்ள நிலம் விற்க, ஆரவ் உதவினான்..தெரிந்தவர் மூலம்..அதை விற்று, பணம் உடனடியாய் கிடைக்க ஏற்பாடு செய்தான்..
அன்று,கீர்தியையும் குழந்தைகளையும் பார்க்க, கேசவனின் இல்லத்திற்கு வந்திருந்தான்,பார்த்தி.
அறையில் அமர்ந்து, குழந்தைகளோடு பேசிக் கொண்டிருந்தான்..
"அப்பா தெரியுதா..பட்டுஸ்சுக்கு..அப்பா,சொல்லுங்க,அப்பா.."
அவன் அருகில் அமர்ந்து,அவன் பேசுவதை ரசித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி..
குழந்தைகளுக்கு,வருண்,தருண் என்று பெயர் வைத்திருந்தார்கள்.
அப்பொழுது மீனாட்சி வந்து,
"கீர்த்தி,மாப்பிள்ளையோட அண்ணனும் அண்ணியும் வந்துருக்காங்க.."
அவர் சொல்லும் முறையில் இருந்தே, அவர், ஆதவ் சம்யுவை குறிப்பிடுகிறார் என்று புரிந்தது..
இப்பொழுதெல்லாம், சகோதரர்களுக்கு இடையில் சுமூகமான பேச்சு வார்த்தை இருந்தது..அடிக்கடி பேசிக் கொண்டார்கள்..
"என்ன திடீர்னு, சொல்லவே இல்லையே.."
கூறி கொண்டே கீழே வந்தான் பார்த்தி..
மீனாட்சியை, குழந்தைகளை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு,கீர்த்தியும் வந்தாள்..
"வாங்க,வாங்க.."
"எப்படி இருக்க மா..??"
"நல்லா இருக்கேன் அத்தான்..பிரியா குட்டி எங்க??"
"ஆர்த்தி கிட்ட விட்டுட்டு வந்துருக்கோம்.."
"இருங்க, காபி கொண்டு வரேன்.."
"இருக்கட்டும் மா..ஒரு முக்கியமான விஷயமா வந்துருக்கோம்..பேசிட்டு,சாப்பாடே சாப்பிட்டு போறோம்.."
ஆதவின் பேச்சில்,
கணவனும் மனைவியும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
"என்ன விஷயம் ஆதவ்..??"
"எங்களுக்கு, பிஸ்னெஸ், செட்டில் எல்லாம், பெங்களுர்ன்னு ஆயிடுச்சு..இவங்க அப்பாவோட பிசினஸ் பாத்துக்கவே, எங்க ரெண்டு பேரால முடியலை.. இதுல, இங்க வந்து, அப்பாவோட துணி கடை எல்லாம் பார்த்துக்க, வாய்ப்பே இல்லை..அதான், அதை.."
"அதை..??"
" அந்த ஷேர்ஸ் அஹ், உங்க பேர்ல மாத்தி இருக்கோம்.."
"என்ன??"
அதிர்ச்சியோடு கேட்டான், பார்த்தி.
"ஏன்டா இவ்ளோ அதிர்ச்சி.??அப்பாவே உனக்கு கொடுக்க ஆசை பட்டது..அம்மாவால....அதெல்லாம் விடு,இந்த ஷேர்ஸ் அஹ் நாங்க வச்சு என்ன பண்ண போறோம்..ஒரு பயனும் இல்லாம இருக்குறதுக்கு, உங்களுக்கு ஆச்சும் உதவட்டும்.."
"அதெல்லாம் சரியா வராது ஆதவ்..இந்த பேச்சை இதோட விட்டுடு.."
இது வரை பேசாமல் இருந்த சம்யு..
"கீர்த்தி,நீயாவது சொல்லு, இவர் கிட்ட..நீயும் பேசாம இருந்தா, என்ன பண்ணுறது..ஒத்துக்க சொல்லு..நாங்க ஒன்னும் பெருசா செய்யலை.. உங்களுக்கு சேர வேண்டியது தான்.."
"இல்ல..அக்கா..மாமாக்கு பிடிக்கலைனா.."
"ஹ்ம்ம்..ஹ்ம்ம்..சரியான ஜாடிக்கு ஏத்த மூடி போ..இங்க பாருங்க கொழுந்தனாரே..உங்க பேர்ல ஒன்னும் எழுதலை இதை.. உங்க மனைவி பேர்லயும், குழந்தைங்க பேர்லயும், எழுதி இருக்கோம்..குழந்தைகள் பேர்ல இருக்குற ஷார்ஸ்க்கு, நீங்க கார்டியன், அவ்ளோ தான்..
பேசாம வாங்கிக்கோங்க.. உங்க அப்பா ஆசையை நிறைவேத்துறதா நினைச்சு.."
"இல்லைங்க..அது.."
"முதல்ல.. ங்க..போடாம..அண்ணினு கூப்பிடுங்க..உரிமை தானா வரும்..என்னமோ,யார் வீட்டு சொத்தோன்னு, தள்ளி நிக்குறிங்க..உங்க சொத்து,உரிமையா, சண்டை போட்டு தான் வாங்கலை, கொடுக்குறதையாவது வாங்குங்க.."
"இது, உங்க பொண்ணை காப்பாத்துனத்துக்கு செய்யுற பதில் உதவியா..??"
"அதுக்கு, பதில் உதவி செய்யணுமுன்னா, எங்க ரெண்டு பேர் உயிர் கூட ஈடு இல்ல,அதுக்கு..அப்புறம் எப்படி, பதிலா இருக்க முடியும்..அதோட, அவ உங்களுக்கும் பொண்ணு,உங்க பொண்ணை காப்பாத்துனதுக்கு, எதுக்கு உங்களுக்கு உதவி..??"
அதன் பின், என்ன பேச என்று தெரியாமல், அமைதி ஆனான்..
"ஆரவ்வும் ஆர்த்தியும், இப்போ, மூணு கடையும் மாத்தி மாத்தி பார்க்குறாங்க..அம்மா தலைமையில்.இனி, கீர்த்தியும் பார்த்துக்கட்டும்.நீ, உன் கார்மெண்ட்ஸ் ஆரம்பிக்கிற வேலையை பாரு..உனக்கு விருப்பம் இல்லைன்னா.. இங்க நிர்வாகத்துக்கு வர வேண்டாம்..குழந்தைங்க, கொஞ்சம் பெருசா ஆனதும்.. கீர்த்தி கடைக்கு போகட்டும்.."
"இதுக்கு, உங்க அம்மா ஒத்துகிட்டாங்களா?? அத்தான்.."
இவ்ளோ நேரம் அமைதியாய் இருந்த கீர்த்தி கேட்டாள்..
"நேத்து தான், பெங்களுர்ல இருந்து வந்தோம்..லீகல் போர்மலிட்டிஸ் எல்லாம், அங்கேயே, எங்க பேமிலி லாயர் வச்சு முடிச்சுட்டோம்..நேத்து தான் விஷயம் சொன்னோம்..வழக்கம் போல,எதிர்ப்பு தெரிவிச்சாங்க..
அப்புறம் சம்யு,எங்க பங்கு,யாருக்கு வேணா கொடுப்போம்..மறுத்திங்கன்னா,இனி, இங்க வரவே மாட்டோம்..பங்கையும், வெளியே வித்துடுவோம்..அப்புறம், வெளி ஆளுக்கு பதில் சொல்லி, நிர்வாகம் பார்க்கனும் நீங்கன்னு.. ஒரே போடா போட்டுட்டா..
அப்புறம், ஒரு வார்த்தை பேசல,அவங்க..முறைச்சுட்டு சுத்துறாங்க..இங்க கிளம்புற வரை.. அவங்கள விடு மா..சிலத்துக்கு விலை, பணம் இல்லன்னு புரியல அவங்களுக்கு..எல்லாத்துக்கும், பணத்தை அளவு கோலா வச்சுருக்காங்க..புரிய வைக்க முடியலைனா..விட்டுட்டு, நம்ம வேலையை பார்க்கனும்.."
இன்னும் பார்த்தியிடம் அமைதி..
"உன் கார்மெண்ட்ஸ் ஆரம்பிக்கும் வேலை, எந்த நிலையில இருக்கு..??"
"இன்னும் ஒரு மாசத்துல, இங்க வந்துடுவேன்..பில்டிங் வேலை ஆரம்பிச்சா, எல்லாம் முடிஞ்சு,அரசாங்க உரிமம் வாங்கி ஆரம்பிக்க, ஆறு மாசம் ஆகும்..கார்மெண்ட்ஸ் பக்கத்திலேயே, எங்களுக்கு வீடு கட்டுறதுக்கும் ஏற்பாடு செஞ்சு இருக்கேன்.."
"அதுவரை, எங்க தங்குவ??"
"திருச்சில வீடு பார்க்கனும், வாடகைக்கு.மாது கிட்ட சொல்லி வச்சிருக்கேன்.."
"ஏன்டா, கடல் மாதிரி நம்ம வீடு இருக்கு..அங்க இருக்காம.."
"இல்லடா,அதெல்லாம் சரி படாது.. உங்க அம்மாக்கு.. பிடிக்காது.."
"அவங்களுக்கு எது தான் பிடிச்சது..அவங்க விருப்பம் பார்த்தா, எதுவும் வேலைக்கு ஆகாது..நானும், எல்லாத்துக்கும் தலை ஆட்டிட்டு தான் இருந்தேன்..கல்யாணத்துக்கு அப்புறம் தான், சுயமா சிந்திக்க கத்துக்கிட்டேன்..அதுனால, அவங்கள விடு,கார்மெண்ட்ஸ் ஆரம்பிச்சு,வீடு கட்டி முடிக்குற வரை, நம்ம வீட்டுல இருங்க..அப்புறம், கடைக்கு கீர்த்தி வந்து போகட்டும்..நீ கார்மெண்ட்ஸ் பார்த்துக்கோ.."
குழப்பத்தில் இருந்த பார்த்தி,கீர்த்தியின் முகம் பார்த்தான்..
அவள் புன்முறுவலோடு,கண்கள் மூடி, தலை அசைத்தாள்..
சற்று தெளிவு வர பெற்றவனாய்..
"சரி ஆதவ்..சென்னைல இருந்து ஒரு மாசத்துல வந்துடுவேன்..அப்புறம், கீர்த்தியை கூட்டிட்டு, அங்க வரேன்..கடை பத்தின முடிவு, கீர்த்தி கிட்ட கேட்டுக்கோ.."
"ஹப்பா.. இதுக்காவது ஒத்து கிட்டியே.. நீ என்னமா சொல்லுற..??"
மனதுள் சில கணக்குகள் போட்ட கீர்த்தி,
"சம்மதம் அத்தான்.. தம்பி பாப்பாக்களுக்கு ஆறு மாசம் ஆனதும், நான் கடைக்கு வந்து பார்த்துக்குறேன்..கொஞ்ச
கொஞ்ச நேரம்..அப்புறம், அவனுங்க வளர வளர,நேரத்தை அதிக படுத்திக்கிறேன்.."
"சந்தோசம் மா....
சம்யு.."
அவன் சொல்வது புரிந்து,
தாங்கள் கொண்டு வந்த டாக்குமெண்ட்ஸ்களை எடுத்தாள் சம்யு.இருவரும், கீர்த்தியின் கையில் கொடுத்தார்கள்..
புன்முறுவலோடு பெற்றுக்கொண்டாள், கீர்த்தி..
'பூசணி,மை கேம் ஸ்டார்ட்ஸ்..வரேன். காத்திரு, ஒரு மாசத்துல..'
இருவரும், உணவு உண்டு விட்டு, மனநிறைவோடு கிளம்பினர்..
ஒரு மாதம் கழித்து,பார்த்தியும் கீர்த்தியும், அகிலாண்டத்தின் இல்லத்திற்கு, சென்றார்கள்..கேசவனும் மீனாட்சியும், உடன் சென்றார்கள்..
அவர்களை, வாசலில் நிற்க வைத்து,ஆர்த்தியும் சம்யுவும், ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்துக் கொண்டார்கள்..
அகிலாண்டம், வெளியே வரவில்லை..அறைக்குள்ளேயே இருந்தார்..
மாமி மகிழ்ச்சியோடு, இவர்களை வரவேற்று, இனிப்பு கொடுத்தார்..குழந்தைகளை அவரிடம் காட்டினாள் கீர்த்தி..
"பார்த்தி மாதிரியே இருக்குதுகள் ரெண்டும்.."
குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார் மாமி..
மாடியில், தான் முன்பு இருந்த அறைக்கு சென்றாள் கீர்த்தி..
"அத்தான், இந்த அறையில நாங்க இருந்துக்குறோம்..கீழ, இவர் இருந்த அறை, என் அத்தையோட அறை.. அதை, என் அலுவலக அறையா மாத்திக்குறேன்..இவருக்கு, அந்த அறை சென்டிமெண்ட், அதுனால அதுவும் வேணும்.."
"தாராளமா எடுத்துக்கோமா.."
"தேங்க்ஸ் அத்தான்.."
அவள் அறைக்கு பக்கத்து அறையில், மீனாட்சி தங்கி கொண்டார்..இரண்டு நாட்கள் மகளுடன் இருந்து விட்டு வருமாறு கூறிவிட்டு, கேசவன் உடனே திரும்பி விட்டார்..
அன்று இரவு, மீனாட்சியின் அறையில் குழந்தைகளை தூங்க வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் கீர்த்தி..
"பார்த்து இருந்துக்கோ டி.. சம்பந்தி எதுவும் பேசுனா, எதிர்த்து பேசாத..பேசாம போய்டு..பொறுமையா இரு..வம்பு இழுத்து, சேட்டை பண்ணாத, முன்ன மாதிரி.."
அலட்சியமாய் உதடு சுளித்து,
"நான் ஏன் பொறுமையா போனும்..??அவங்க தான் இனி பொறுத்து போனும்..எங்களை படுத்துனதுக்கு எல்லாம், இருக்கு அவங்களுக்கு.."
"வீண் வம்பு பண்ணாத, கீர்த்தி..பேசாம இருந்துட்டு, கிளம்பு இங்க இருந்து.உங்க அப்பா மாறின மாதிரி,இவங்களுக்கு மாறுவங்க, ஒரு நாள்.."
"பேர பிள்ளைங்களை பார்த்ததும், ஹிட்லர் மாறிட்டார்.. பேத்தியா இருந்திருந்தா, திரும்ப முறுக்கிட்டு, போய் இருப்பார்.."
"ஏண்டி,உன் வாய் கொழுப்பு அடங்காதா..அவரு, உன்னை பார்க்கணுமுன்னு துடிச்சுட்டு இருந்தார்..உனக்கு, வலி எடுத்து கத்தினதை பார்த்து, பதறி போய்ட்டார்..நீ திமிர் பேசுற.."
"க்கும்.."
"அப்போ மட்டும், மன்னிச்சுடுங்க ப்பான்னு கதறுன"
"அது, ஹோச்பிடல் வாஸ்து சரி இல்ல போல..அதான், அப்படி எல்லாம் சொல்லி இருப்பேன்..என்னையும் அறியாம.."
"பேசுவடி பேசுவ..திமிர் எடுத்த கழுதை.."
"சரி சரி, ரொம்ப புகழாத..அதோட, பூசணியை திருத்த வரல நான்..அதுக்கா, என்னை கஷ்டப்பட்டு, பெத்து வளர்த்திருக்க.."
"அதான், ஒதுங்கி போன்னு சொல்லுறேன்.."
"வாய்ப்பில்லை ராஜா..வாய்ப்பில்லை.."
"பின்ன, என்னடி பண்ண போற..??"
"வெயிட் அண்ட் ஸீ.."
"ஏதாவது, ஏடக்கூடமா பண்ணி தொலையாத.."
"சும்மா புலம்பாத.. குழந்தைங்க தூங்கிட்டாங்க.. பார்த்துக்கோ..வரேன்.."
"எங்கடி போற??"
"போகையிலேயே கேட்குறியே, விளங்குமா..??"
"ஆமா,வேட்பு மனு தாக்கல் பண்ண போற..சொல்லிட்டு போடி.."
"என் மாமாவை பார்க்க போறேன்.."
"இந்த நேரத்துல எதுக்குடி போற..இப்போ தான் மூணு மாசம் ஆகி இருக்கு, குழந்தை பிறந்து..பேசாம தூங்கு.."
"அதான், மூணு மாசம் ஆகிடுச்சுல்ல.. நீ,பேசாம தூங்கு.."
கூறிவிட்டு, எழுந்து சென்றாள்..
"ஏய்,இருடி.."
தாயின் பேச்சு காதில் விழாதது போல,வெளியே சென்றாள்..
பக்கத்துக்கு அறைக்குள் நுழைந்தாள்..
லேப்டாப் பார்த்துக் கொண்டு, அமர்ந்திருந்தான் பார்த்தி,இவளை பார்த்ததும்,
"தூங்கலையா பொம்மு.."
"இல்ல..மாமா..தூக்கம் வரல..இங்க வந்ததும், நம்ம மலரும் நினைவுகள் நியாபகம் வந்துடுச்சு..வாங்க மாமா.."
"எங்க பொம்மு..??"
"நம்ம இடத்துக்கு.."
கண் அடித்து, அவன் கைகளை பிடித்து அழைத்து சென்றாள்..
அவள் பின்னோடு சென்றான், பார்த்தி..
மொட்டை மாடியில், அவன் தோள் சாய்ந்து அமர்ந்தவள்..நிலவை ரசித்துக் கொண்டே,
"அப்படியே கண்ணை மூடி..நம்ம லவ் பண்ண நாட்களுக்கு போய் பாருங்க மாமா..செம்மையா இருக்கும்.."
புன்னகையுடன், அவள் கூறிய படி செய்தான்.. அவளும் கண் மூடி, அந்நாட்களுக்கு சென்றாள்..
"பறவைகள் பறந்து செல்ல,
பள்ளம் மேடு வானில் இல்லை.!!
நீயும் நானும் பறவை ஜாதியே!!
நிம்மதிக்கு தடைகள் இல்லையே..!!
சொல்லுக்குள்ளே இருக்கும் பொருள்,
சொல்லை விட்டு பிரிவதில்லை..!!
சோகம் இனி வருவதில்லையே!!
சூரியனில் இரவு இல்லையே..!!
கன்னி எந்தன் பேரிலே, கவி அரங்கம்!!
காதல் பற்றி பாடினால், தமிழ் வணங்கும்.!!."
அவர்கள் மோனநிலையை கலைக்கும் பொருட்டு,ஒரு கனைப்பு சத்தம் கேட்டது..
எரிச்சலோடு, கண் திறந்தாள் கீர்த்தி..
ஆர்த்தி நின்று கொண்டிருந்தாள்..
"என்னடி..??"
"நீ எங்க இருக்கன்னு, அம்மா பார்க்க சொன்னாங்க..உங்க அறையிலே இல்லை..ஆரவ் தான் சொன்னார்..நீங்க, மொட்டை மாடில இருப்பிங்கன்னு..இப்போ தான் குழந்தை பிறந்து இருக்கு..ரொம்ப நேரம் பனில இருக்க கூடாது, கூட்டிட்டு வான்னு, அம்மா சொன்னாங்க..அதான்…"
"கடங்காரி.. கடங்காரி.."
"நான் என்னடி பண்ணேன்??.."
"லவ் பண்ணும் போது தான் பிரிச்ச..இப்போவும், குடும்பம் மொத்தமும் சதி பண்ணுங்க.."
"இல்லடி, அம்மா தான்.."
"பேசாத..அவங்களுக்காகவே, இன்னும் பத்து மாசத்துல, இன்னொன்னு இறக்குமதி பண்ணுறேன் பாரு.."
புரியாமல் விழித்தாள், ஆர்த்தி..
"எதை டி..??"
"ஹ்ம்ம்..உங்க ஜவுளி கடை துணியை தான் சொன்னேன்..போய் தொலை.."
"நீ??"
"வந்து தொலையுறேன்.."
கூறிவிட்டு எழுந்தாள்..புன்னகையுடன், பார்த்தியும் அவளை பின் தொடர்ந்து வந்தான்..
அறைக்குள் நுழையும் முன், பார்த்தியை, ஏக்கமாய்
ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள்..
'எம்மா,என்ன பார்வை..??இன்னிக்கு நீ தூங்குன மாதிரி தான் டா..'
நினைத்துக் கொண்டே, பக்கத்து அறைக்குள் நுழைந்தான் பார்த்தி..