அத்தியாயம்-7
டைனிங் ஹாலில் நடந்த களேபரத்தில், பங்கஜம் மாமி சமையல் அறையில் இருந்து வந்திருந்தார்.அவரை பார்த்ததும் அகிலாண்டம்,
"இதெல்லாம் சுத்தம் பண்ணுங்க…"
"சரி மா"
"தறுதலை, தறுதலை பணத்தோட அருமை தெரியுதா??"மாசத்துக்கு நாலு வேலைன்னு,ஒரு வேலையிலும் நிலையா இருக்குறதில்லை. சம்பாதிச்சா தானே தெரியும்."
திட்டி முடித்துவிட்டு கீர்த்தியை பார்த்து,
"நீ ஏன் நிக்குற??உக்காந்து சாப்பிடு.அவன் எப்போவும் இப்படி தான்.உதவாக்கரை.அவன் கிட்ட எந்த பேச்சுவார்த்தையும் வச்சுக்காதே.அவனை எல்லாம் மதிக்க தேவை இல்லை.அவனை கண்டுக்காம உன் வேலையை மட்டும் பாரு.புரிஞ்சுதா??"
கீர்த்தியின் தலை தன்னிச்சையாக, சரி என்று ஆமோதித்தது.
அதன் பிறகு ,தட்டில் இருந்ததை கஷ்டப்பட்டு விழுங்கிவிட்டு, தட்டை எடுத்துக்கொண்டு சமையலறை சிங்க்கில், போடப்போனாள்,
அங்கே பங்கஜம் மாமி, யாரும் வர மாட்டார்கள் என்ற தைரியத்தில், மனதில் உள்ளதை புலம்பி கொண்டிருந்தார்.
"அந்த பிள்ளையே, இன்னிக்கு தான் சாப்பிட வருது.இந்தம்மாக்கு, கழுகுக்கு மூக்கு வேர்த்த மாதிரி, வேர்த்துடுச்சு.சாப்பிட்ட பிள்ளையை, இப்படி பாதிலேயே எழுந்து போக வச்சுடுச்சு."
பேசிக்கொண்டே திரும்பியவர்,கீர்த்தியை பார்த்து விட்டு, சட்டென்று பேச்சை நிறுத்திக்கொண்டார்.
அவளை பார்த்து சங்கடமாய் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு,
"அந்த பிள்ளையை தப்பா நினைக்காத மா.தங்கமான பிள்ளை.கொஞ்சம் முன் கோபம் மட்டும் வரும்."
என்று கூறினார்.
'இதான் கொஞ்சம் கோவமா??'
அவரிடம் எந்த பதிலும் கூறாமல்,தலையை மட்டும் அசைத்துவிட்டு வந்தாள். மதியம் கிளாஸ்க்கு சென்றுவிட்டு, மாலை பேருந்து நிறுத்தத்தில் நிற்கையில்,அவளை கடந்து வேகமாய் பைக்கில் சென்றான் அவன்,மற்றவர்களுக்கு பார்த்தி, இவளுக்கு பீம் பாய்.
'இவன் என்ன தான் பண்ணுறான்??.வேலைக்கு போற மாதிரி தெரியலை.வீட்டுலயும் இருக்குற மாதிரி தெரில.எங்க தான் இருப்பான்.??
அம்மா,அப்பா கூட வந்தபோவும் வீட்டுல இல்ல.நேத்து நைட் நானும் பார்க்கல. இன்னிக்கு தான் வந்தான்,பூசணி திட்டுனதும், தட்டை ஒடச்சுட்டு கிளம்பிட்டான். அப்புறம் வரவே இல்லை.இப்போ இங்க இருந்து போறான்.
என்ன தான் பண்ணுவான்?? பொழுதன்னைக்கும்.
அச்சோ கீர்த்தி,உன்னையே புலம்ப வச்சுட்டானே.
இந்த பீம் பாய் பத்தி தெரிஞ்சுக்கணுமே, யாரை கேக்குறது.முழு பேர் கூட தெரியலை.ஆர்தியை தான் பிடிக்கணும்.'
பேருந்து வரவும்,அதில் ஏறி வீடு வந்து சேர்ந்தாள்.
'இவன் அறை எது??மாடியில இவன் இருக்குற மாதிரி தெரியலை.'
அவள் யோசனையை தடை செய்வது போல்,அகிலாண்டம்,
"கிளாஸ் எல்லாம் எப்படி போகுது…"
'அதுப்பாட்டுக்கு ஒரு பக்கட்டு போகுது,நான் பாட்டுக்கு ஒரு பக்கட்டுக்கு போறேன்.'
"நல்ல போகுது அத்தை.."
"சரி டிரஸ் மாத்திக்கிட்டு வா.. காபி குடிக்கலாம்."
"சரி அத்தை.."
அதன் பிறகு அவள், மாலை சிற்றுண்டி முடித்து, காபி குடித்து ,தொலைக்காட்சி பார்த்து, பொழுதை நெட்டித்தள்ளி கொண்டிருக்கும் போது,அவள் பொறுமையெல்லாம் சோதித்து விட்டு, ஆர்த்தியும் ஆரவும் வந்தார்கள்.
ஆர்தியை பார்த்ததும், அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு, தன் அறைக்கு சென்றாள்.
"ஏய்!!மெதுவாடி.ஏன் இவ்ளோ அவசரம்."
"உன்கிட்ட ஒன்னு கேட்கணும்"
"கேளு,அதுக்கு முன்ன, அப்பாவும் அம்மாவும் உன்கிட்ட பேசனுமாம். நான் வீட்டுக்கு போய்ட்டு, அவளை பேச சொல்லுறேன்னு சொன்னேன்.இந்தா பேசு"
என்று மொபைலை நீட்டினாள்.
அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு,இல்லை,இல்லை அவர்கள் அறிவுரைகளை கேட்டு விட்டு,சில, நல விசாரிப்புகளுக்கு பின் மொபைலை கட் செய்தாள்.
"சரி, இப்போ நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு."
"இருடி, நான் இன்னும் டிரஸ் மாத்தலை,ரெபிரேஷ் கூட பண்ணலை, எல்லாம் முடிச்சுட்டு வரேன்."
"அதெல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம். எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்."
"சினிமா டயலாக் எல்லாம் விடாம,கொஞ்ச நேரம் இரு வரேன்."
"அதெல்லாம் முடியாது.."
என்று அவள் கையை பிடித்து இழுத்தாள்.அவள் இழுத்த வேகத்தை பார்த்து,
"ஏய்,இருடி..இன்னும் எட்டு மாசம் கழிச்சு வர வேண்டிய என் பிள்ளையை, இப்போவே வர வச்சுடாத.."
அப்பொழுது தான் அக்காவின் நிலைமை நியாபகம் வந்து,
"சாரி,சாரி அரூ.. நான்..எனக்கு..தோணலை.."
என்ன சொல்லுவது என்று தெரியாமல் தலையில் அடித்துக் கொண்டு பேசினாள்.
"ஏய்,டென்சன் ஆகாத, அவ்ளோ வேகமா எல்லாம் இழுக்கலை நீ.. உன் பிள்ளைக்கு பசிக்கும்,நான் போய் டிரஸ் மாத்திட்டு,உன் பிள்ளைக்கு ஏதாவது குடுத்துட்டு வரேன்.அப்போல இருந்து பசிக்குதுன்னு உள்ள பிராண்டிட்டு இருக்குது."
தன் வயிறை ஆசையோடு வருடிய படி கூறினாள்.
"சரி நீ போய்ட்டு, மெதுவா சாப்பிட்டு வா.. நான் இங்க இருக்கேன்."
என்று படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அவள் சென்றதும்,தன் தலையில் கொட்டி கொண்டு,
'அப்படி என்ன அவசரம் உனக்கு, பீம் பாய் பத்தி தெரிஞ்சுக்க,
பார்த்தாலே தெரியுது ,சரியான முரட்டு பீஸ்.அவன் தட்டை ஒடைச்ச வேகத்தை பார்த்தியில்ல,அவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு.இல்லைனா, உன் மண்டையையும் சேர்த்து ஒடைச்சுடுவான்.'
'ஆண்டவா,இன்னிக்கு முழுசும் வேற எதை பத்தியும் யோசிக்க முடியல…ஏண்டா, பீம் பாய் இந்த பாடுபடுத்துற…அரூ சீக்கிரம் வாடி..இல்ல என் மண்டையே வெடிச்சுடும் போல..'
இரு கைகளிலும், தலையை தாங்கி கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
அவள் அமர்ந்திருந்த கோலத்தை பார்த்தபடி வந்த ஆர்த்தி,
"ஏண்டி இப்டி உக்காந்துருக்க??"
"அரூ வந்துட்டியா??வா.. வா.."
தெய்வத்தை கண்ட பக்தை போல பரவசத்துடன் அழைத்தாள்.
"என்ன கேட்கணும்??ஏன் இவ்ளோ ரெஸ்லேஸ் அஹ் இருக்க??"
"அதெல்லாம் இல்ல..நான் நார்மல் அஹ் தான் இருக்கேன்.இன்னிக்கு காலையில உன் சின்ன கொழுந்தனை பார்த்தேன்.ஹப்பா…எவ்ளோ கோவம் வருது அவருக்கு…"
"என்ன பார்த்தியை,பார்த்தியா??"
"ஆமா..அவரு முழு பேர் என்ன??"
"பார்த்தீபன்.அவரை எப்போ பார்த்த..??"
"காலையில சாப்பிடும் போது.அவரும் வந்து என் எதிர்ல உக்காந்து சாப்பிட்டார்."
"என்ன??அவர் டைன்னிங் ஹால்க்கு வந்து, டைன்னிங் டேபிள்ல உக்காந்து சாப்பிட்டாரா??"
'இதுக்கு ஏன், இவ இவ்ளோ ஆச்சர்ய படுறா...இத்தனை என்ன, என்ன போட்டு...'
"இல்ல..என் மடில உக்காந்து சாப்பிட்டார்."
அவளை முறைத்த ஆர்தியிடம்,
"பின்ன டைன்னிங் ஹாலில், டைனிங் டேபிள்ல தானே உட்கார்ந்து சாப்பிடுவாங்க. அதுக்கு எதுக்கு இம்புட்டு ஷாக்."
"நான் வந்து இத்தனை மாசத்துல,அவர் அங்க வந்ததையும் பார்ததில்லை.அங்க உக்காந்தும் அவர் சாப்பிட்டதில்லை."
"பின்ன எங்க சாப்பிடுவார்.?."
"யாருக்கு தெரியும்??அவரை நான் வீட்டுல பார்க்குற நேரமே கம்மி. வந்த புதுசுல, அவரை நான் கொஞ்ச நாள் பார்த்ததே இல்ல.அப்புறம் திடீருன்னு ஒரு நாள், ஹால்ல பார்த்தேன்.முதல்ல யாரோனு பயந்துட்டேன்.
அப்போ ஆரவ் என் கூட இருந்தார்.அவர் தான், இவன், என் தம்பின்னு அறிமுகபடுத்தி வச்சார்.
அப்போ கூட அவர் எதுவும் பேசலை, லேசா என்னை பார்த்து தலை ஆட்டிட்டு போய்ட்டார்.
எனக்கு ரொம்ப ஆச்சார்யம். அப்புறம் இவர் தான் சொன்னாரு,அவன் யார்கிட்டயும் பேச மாட்டான். நாங்க அவன் கிட்ட பேசினாலும் அம்மாக்கு பிடிக்காது.அதுனால, நாங்களும் அம்மா இருக்கையில பேச மாட்டோம், அப்டினார்."
"ஏனாம்??"
"வேற என்ன, அவர் மூத்த தாரத்தோட பிள்ளைன்னு தான்.. அத்தைக்கு அவரை பிடிக்காது.அதுனால, பிள்ளைங்களையும் பேச கூடாதுன்னு சொல்லி வளர்த்துட்டாங்க.இவங்க ஒதுங்குறதை பார்த்து, அவரும் தானே ஒதுங்கிட்டார்."
அவன் நிலையை நினைத்து இவளுக்கு உருகியது.
'ஒரே வீட்டில் இருந்து கொண்டு, யாரும் பேசவில்லை என்றால், எவ்ளோ கொடுமையாக இருக்கும்'.
அவளால் ஒரு நிமிடம் கூட ,யாரோடும் பேசாமல் இருக்க முடியாது.சண்டை போட்டாலும், முடிந்ததும் பேசும் முதல் ஆள், இவளாக தான் இருப்பாள்.
'ஒரே வீட்டில் இருந்து கொண்டு, சகோதரர்களுடன் வாழ்ந்து கொண்டு, அனாதை மாதிரி இருப்பதென்றால்',நினைக்கும் போதே நெஞ்சம் கசிந்தது.
"சே..பாவமில்லை…"
"ஆமாம்.. பாவம் தான்.. என்ன பண்ணுறது..??"
"இவரும் ,அத்தை சொல்லுறதை கேட்டு, கொஞ்சம் ஒழுங்கா படிச்சு,வேலைக்கு போய் இருந்தா, அவங்க கொஞ்சமாச்சும், ஏத்துகிட்டு இருப்பாங்க."
அவளை ஒரு மாதிரி பார்த்த அரூ,
"அவர் என்ன படிச்சுருக்கார் தெரியுமா??"
அவளை புரியாமல் பார்த்து, உதட்டை பிதுக்கினாள்.
"M. Tech.. கோல்ட் மெடலிஸ்ட்…"
ஆ…வென வாயை பிளந்தவளிடம்,
"அதுவும் டெல்லி IIT ல…எல்லோரையும் உன்னை மாதிரி நெனச்சுக்காத படிப்புல.."
அவளை முறைத்து விட்டு,
"அப்புறம் ஏன் இந்த பூசணி, உதவாக்கரை,தறுதலைன்னு திட்டுது."
"அவங்க பிள்ளைங்களை விட மூத்த தாரத்தோட பிள்ளை உயர்வா இருந்தா, மட்டம் தட்ட தான் தோணும்."
"ஓ…."
"ஹ்ம்ம்…அவரு போகாத கிளாஸ் இல்லையாம்.கராத்தே,கும்ஃபூ, பாட்டு, டான்ஸ்ன்னு ஒன்னு விடாம போய் இருக்காராம். எல்லாத்துக்கும், அத்தை தடை போட்டு பாதியிலேயே நிறுத்தி இருக்காங்க. அந்த, அந்த கிளாஸ் டீச்சர்ஸே வந்து, நல்லா கத்துக்குற பிள்ளையை ஏன் நிறுத்துறீங்கன்னு கேட்டு, கூட்டிட்டு போய் இருக்காங்க."
"ஓ..சகலகலா வல்லவனா.."
"கிட்ட தட்ட, அப்படி தான்…சின்ன வயசுல இருந்தே அத்தை இவர் செய்யுற எல்லா விஷயத்தையும், மாமா கிட்ட தப்பாவே சொல்லி, இவரையும் மாமாவையும் நெருங்க விடாம செய்துருக்காங்க.
இவங்க பேச்சை கேட்டு மாமாவும்..இவரை எப்போ பாரு அடி, உதை திட்டுன்னு வெளுத்து வாங்கி இருக்கார்.
இவரும் வேற என்ன பண்ணுவார்.தானா ஒதுங்க அரம்பிச்சுட்டார்.
இவங்க தடுக்க தடுக்க, அதை ஒரு வேகத்தோடு செய்து பழகிட்டார்."
"ஹ்ம்ம்..ரொம்ப கஷ்டமில்ல இப்படி இருக்குறது."
"ஆமா..என்ன பண்ண..??இவரு படிப்புக்கு, சென்னைல எல்லாம் நல்ல வேலை கிடைக்கும்.ஏனோ, இங்க உள்ள கம்பெனிக்கு வேலைக்கு போய்ட்டு, அப்புறம் ஒத்து வர்லைனு விட்டுடுறாராம்.
இது வரை ஒரு பத்து, பதினைஞ்சு கம்பெனி மாறிட்டார் போல..பாதி இவர் பிடிக்கலைன்னு விட்டா, மீதி அத்தை, அங்க உள்ளவங்க கிட்ட, ஏதோ இவரை பத்தி சொல்லி, பிரோப்ளேம் வர வச்சு, வெளிய வர வைக்குறாங்க. ஆக மொத்தம் ,ஒரு வேலையும் இவரை பார்க்க விடாம தடை பண்ணிட்டு இருக்காங்க."
"இந்த பூசணி,சரியான வில்லியா இருக்கும் போல.."
"மெதுவா பேசுடி,அவங்க சொல்லுறதை கேட்கலைனா..அவங்க வில்லி தான்."
"ச்செய்.. ஏன் இவ்ளோ மோசமா இருக்காங்களோ??"
சிறிது நேரம் இருவரும் பேசவில்லை.
"ஆமா..உங்க கடைக்கு அவரும் வரலாமில்லை. அவருக்கும் ,அது சொந்த கடை தானே..தாத்தா காலத்துல இருந்து இருக்குல்ல…"
"ஏண்டி,அவரு வெளில வேலைக்கு போனாலே, அத்தை தடுக்குறாங்க, ஒரு வேலைலயும் நிலையா இருக்க விடலைன்னு சொல்லுறேன்.இதுல, எங்க கடைக்குள்ள எப்படி விடுவாங்க??"
"தாத்தா கடை ,பேரனுக்கு உரிமை இல்லியா??"
"உரிமை எல்லாம் இருக்கு..ஆனா, அத்தை, மாமா உயிரோட இருக்கும் போதே,இவருக்கும், கடைக்கும் ,சம்பந்தம் இல்லைன்னு எழுதி வாங்கிட்டாங்களாம்.இவரும், எனக்கு தேவை இல்லைன்னு ,கையெழுத்து போட்டு கொடுத்துட்டாராம்."
"இவருக்கென்ன லூஸா??"
"அதை, தன்மானம்ன்னு கூட சொல்லலாம்.இப்படி நடத்துறவங்க, சொத்து தேவை இல்லைன்னு நெனச்சுருக்கலாம்."
"என்ன தன்மானம் இதுல?? போ…"
"தன்மானம் தாண்டி…அவரு தங்குறது மட்டும் தான் இங்க..அவர் செலவுக்கு, சாப்பாட்டுக்கு, எதுக்கும், அவர் இங்க ஒரு பைசா வாங்குறதில்லியாம்.படிப்பு முடிச்சதுல இருந்து அவர் செலவை, அவரே பார்த்துக்குறாராம். அவங்க அம்மா வழி தாத்தாவோட, நிலத்தை குத்தகைக்கு விட்டு ,அதுல வர்ற பணம்,இவர் வேலைக்கு போகும் போது, அதுல வர்ற சம்பளம், இதெல்லாம் வச்சு மேனேஜ் பண்ணுராறுன்னு நெனைக்குறேன்."
"ஹ்ம்ம்…இதெல்லாம் உனக்கு யார் சொன்னா??"
"ஆரவ் தாண்டி.. அவருக்கு, தம்பின்னா ரொம்ப பிடிக்கும்.அம்மாவுக்கு பயந்து, பேசுறதில்லை.மத்தபடி, அவர் தம்பியை பார்த்து, அவருக்கு ஒரு பிரமிப்பு இருக்குனே சொல்லலாம்.அவரு தான், இதெல்லாம் என் கிட்ட சொன்னாரு.நான் எதுவுமே கேட்கலை."
"அதானே ,நீ கேட்டுட்டாலும்…"
"எதுக்கு கேட்கணும்…??அவரை பத்தி தெரிஞ்சு, நான் என்ன பண்ண போறேன்."
"ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தான்.."
"ஆமா..டிஎன்பிஎஸ்சி(Tnpsc) எக்ஸாம்க்கு வரும் பாரு."
"போடி…"
என்று கூறிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தவளை பார்த்து,
"என்னடி யோசிக்குற…??"
"அரூ.. நீ ஒன்னு கவனிச்சியா??உன் வீட்டுக்காரர்,அப்புறம் அவர் அண்ணா ரெண்டு பேரும் ,பூசணி மாதிரியே இருகாங்க.இவரு அப்படியே ,உன் மாமனார் மாதிரியே இருக்காரு.."
அப்பொழுது தான் அதை யோசித்த ஆர்த்தி.
"ஆமாண்டி..இவ்ளோ நாள் இருக்கேன்.இது எனக்கு தோணவே இல்லை பாரு."
"அதுக்கெல்லாம் கிட்னி யூஸ் பண்ணனும்"
என்று தலையில் தட்டி காமித்தாள்.
அவளை முறைத்து விட்டு,
"இதுக்கெல்லாம் உன் கிட்னி, நல்லா யூஸ் ஆகும்"
என்று அவள் பாணியிலேயே கூறி விட்டு,
"அதிருக்கட்டும்,இவங்க ரெண்டு பேரும் அத்தை ஜாடை, அதை நானே கண்டு பிடிச்சுட்டேன்.நீயும் இவங்களை ரெண்டு,மூணு தடவை பார்த்துருக்க, அதுனாலே கண்டு பிடிச்சுட்டன்னு வச்சுக்கிட்டாலும்,இவரை இன்னிக்கு தான் பார்த்த, அதுவும் ஒரு தடவை.இவரை அடிக்கடி பார்த்த எனக்கே, இது தோணலை. உனக்கு எப்படி தோணுச்சு?? இது."
'அதானே, எப்படி தோணுச்சு'
என்று யோசித்த கீர்த்தி விடை கிடைக்காமல்,
"உன் மாமனார் படம் ஹால்ல இருக்குல்ல, அதை பார்த்து தோணி இருக்கும்.சும்மா சிபிஐ மாதிரி கேள்வி கேட்காமல் கிளம்பு.."
"ஏண்டி,இம்புட்டு நேரமா, துருவி துருவி கேள்வி கேட்டுட்டு, இப்போ வேலை முடிஞ்சதும் துரத்துறியா??"
"ஆமா..போ..போ..அங்க உன் வீட்டுக்காரர்..உன்னை காணும்னு, பிழிய பிழிய அழுதுட்டு இருப்பார்.போய், குச்சி மிட்டாயும்,குருவி ரொட்டியும் வாங்கி கொடுத்து சமாதானபடுத்து."
"என்னடி நக்கலா??"
"ஆமா..கிளம்பு,கிளம்பு காத்து வரட்டும்…"
"உன்னை....அடுத்த தடவை எதுக்காவது வருவ இல்லை. அப்போ இருக்கு.."
என்று கூறிவிட்டு, அங்கிருந்து சென்றாள்.
கீர்திக்கு தனியாக யோசிக்க வேண்டி இருந்தது.ஆர்த்தி கேட்பது போல, எப்படி அவன் முகம், சட்டென்று என் மனதில் பதிந்தது.
யோசித்து,யோசித்து விடை கிடைக்காமல்,இரவு உணவை கடமைக்கு உண்டு விட்டு, வந்து படுத்தாள்.
நடுஇரவில் விழிப்பு வந்தது.மணி பார்த்தாள், மணி ஒன்று.
நாக்கு வறண்டு போய் இருந்தது.பக்கத்தில் இருந்த வாட்டர் பாட்டிலில் பார்த்தாள், காலியாக இருந்தது.
'சேய்.. தண்ணி கொண்டு வராம வந்துட்டனா.. இப்போ இவ்ளோ படி, ஏறி இறங்கனும்.'
மனதில் சலித்துக்கொண்டு, அறையை விட்டு வெளியே வந்து படிகளில் இறங்கினாள்.
ஹாலில், சிறிய இரவு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.
கடைசி படியில் கால் வைத்தவள், தூக்க கலக்கத்தில் நிமிர்ந்த போது, ஹால் ஷோபாவில் ஒரு உருவம்,ஆடாமல், அசையாமல் சிலை போல அமர்ந்திருந்தது.அய்யனார் சிலை போல.
'ஆத்தி…பேய்…'
கீர்த்தி நெஞ்சில் கை வைத்துக் கொண்டு அதிர்ச்சியில் நின்றாள்.
….தொடரும்.