அத்தியாயம்-22
தன் அறையின், ஜன்னலின் அருகே நின்று, வானில் இருக்கும் நிலவை, பார்த்துக்கொண்டிருந்தாள் கீர்த்தி.
பார்த்தியுடன் ரசித்த, பௌர்ணமி நிலவு நினைவுக்கு வந்தது.
கிரிஷ்ணஜெயந்தி நாளும்..
என்றோ கேட்ட, கண்ணன் பாடல் ஞாபகம் வந்தது.
"கண்ணன் முகம் கண்ட கண்கள்,
மன்னர் முகம் காண்பதில்லை..!!
கண்ணனுக்கு தந்த உள்ளம்,
இன்னொருவர் கொள்ளவதில்லை!!
கண்ணன் வரும் நாளில்,
கன்னி இருப்பேனோ,
காற்றில் மறைவேனோ…!!"
மனம் பாடியது..
மௌனமாய், கண்ணில் வழிந்த கண்ணீரை, துடைத்து கொண்டாள்.
குழந்தை மனம் கொண்டவளை, இரும்பாக்கி கொண்டிருந்தார்கள்.
மறுநாள், அவள் அறைக்கு வரும், பைப் லைனில், கசிவு உண்டாகவும்.. அந்த லைன் மட்டும், தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டது.
எனவே குளிப்பதற்காக,அவள் அறையை விட்டு, வெளியே வந்தாள்.
வீட்டின் பின் புறம் உள்ள, குளியல் அறை நோக்கி செல்லயில்,பின் முற்றத்தில், கேசவனும்,அவர்கள் அடுத்த வீட்டு ஈஸ்வரனும், பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஈஸ்வரன், அவர்களுக்கு தூரத்து உறவு.கேசவனின் மளிகை கடை பக்கத்தில்,மெடிக்கல்ஸ் வைத்திருந்தார்.
அவரின் வீடு சிறியது.எனவே, கடையின் ஸ்டாக் எல்லாம், பல ஆண்டுகளாக, இவர்கள் வீட்டின் ஒரு அறையில் போட்டு வைத்துக் கொள்வார்.
அது விஷயமாய், அடிக்கடி இங்கு வந்து, கேசவனுடன் பேசி விட்டு செல்வார்.
இவளை பார்த்து விட்டு கேசவன்.
"என்ன..??"
என்று உறுமினார்.
"மாடிக்கு தண்ணி வரல..அதான் குளிக்க.."
நிலம் பார்த்து பதில் சொன்னாள்.
அவளை பார்த்த ஈஸ்வரன்.
"அடடே..கீர்த்துமா..எப்போ வந்த..??படிப்பெல்லாம் முடிஞ்சுதா..??"
அவள் பதில் சொல்வதற்குள்,
"இப்போ லீவு .அதான், போய் கூட்டிட்டு வந்தேன்.."
அவரிடம் உரைத்து விட்டு,
"போ..போய் குளி.."
அவளை, அங்கிருந்து சீக்கிரம் செல்ல சொல்லி உத்தரவிட்டார்.
அவளும் அங்கு நிற்கவில்லை..குளிக்க சென்று விட்டாள்.
"கீர்த்தி, ரொம்ப அமைதி ஆயிட்டா.. வாய் ஓயாம பேசும்..இப்போ அமைதியா போகுது.."
ஈஸ்வரன் வியப்பது, அவள் காதில் விழுந்தாலும், நிற்கவில்லை.
அவள் குளித்து விட்டு, திரும்பி வருகையில்,உள் அறையில், அவள் தந்தையும்,ஈஸ்வரனும், பேசி கொள்வது கேட்டது..
முதலில், வேகமாய் செல்ல போனவள்,சட்டென்று, பிரேக் போட்டது போல நின்றாள்..அவள் காதில் விழுந்த செய்தியில்,அந்த செய்தியை, முழுதாக கேட்டு விட்டு,பின், அந்த யோசனையோடு, அங்கிருந்து சென்றாள்.
அன்று முழுவதும், அந்த யோசனையை மனதினுள் ஓடியது..
ஆர்த்தி வரும் வரை.. ஆம்.. ஆர்த்தியும் ஆரவும் வந்தார்கள்..
அன்று தான், ஆர்த்தி மூலம் விஷயம் கேள்விப்பட்டான் ஆரவ்..
அகிலாண்டமும்,கீர்திக்கு துணையாக அவள் நிச்சயம் வரை கூட இரு, என்று சொல்லி, ஆர்தியை அனுப்பி வைத்தார்.
ஆரவையும், அவள் துணைக்கு அனுப்பி வைத்தார்.அவளை விட்டு விட்டு, மறுநாள் வருமாறு கூறி..
எனவே,கீர்த்தியின் உடமைகளை எடுத்து கொண்டு,ஆர்த்தியும் ஆரவும் அன்று மாலை கீர்த்தியின் வீட்டிற்கு வந்தார்கள்.
வந்தவர்களை, கேசவன் மீனாட்சி முறைப்படி வரவேற்றார்கள்.
மாப்பிள்ளைக்கு உரிய மரியாதை கொடுத்து.
ஆர்த்தி ,மாடியில் இருக்கும் அறைக்கு, கீர்த்தியை பார்க்க சென்றாள்.
சிறிது நேரத்தில் ,ஆரவும் மாடிக்கு சென்றான்.
அங்கே, ஆர்த்தி பேசிக்கொண்டிருப்பது, கேட்டது.
"நீ அங்க,முன்னுக்கு பின் முரணா நடக்கையிலேயே, சந்தேகம் வந்துச்சு,கொஞ்சம் சுதாரிக்காம போய்ட்டேன்..இல்ல..அப்போவே, உன்னை பேக் பண்ணி இருப்பேன்..உனக்கு எப்படி டி.. இவ்ளோ தையிரியம் வந்துச்சு..??.உன் துடுக்கு தனத்தை, இதுலெல்லாமா காட்டுறது..??இன்னும் விளையாட்டு பிள்ளையாவே இருக்க.."
இவனை கண்டதும், ஆர்தியின் பேச்சு நின்றது.
கீர்த்தி,இவனை நிமிர்ந்து பார்த்து விட்டு, மறுபடியும் சுவற்றை வெறிக்க ஆரம்பித்தாள்.
கீழே,ஆர்தியை ,மீனாட்சி அழைக்கும் ஒலி கேட்டது..
"இதோ வரேன் ம்மா.."
குரல் கொடுத்துவிட்டு,கீழே சென்றாள்.
கீர்த்தியை பார்க்கவே, கஷ்டமாய் இருந்தது ஆரவ்க்கு..
'எப்படி?? துறுதுறு என வாய் பேசும் பெண்..'
அவள் அருகில் சென்று,
"கீர்த்தி.."
என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் பார்வையில், சலிப்பு இருந்தது.
'நீயுமா??நீயும் உன் பங்குக்கு அறிவுரை சொல்ல போகிறாயா..??இதெல்லாம் கேட்க வேண்டி இருக்கிறது..என் தலையெழுத்து..சொல்லிவிட்டு போ..'
என்னும் பாவத்தோடு பார்த்தாள்.
அது புரிந்ததோ, இல்லையோ.. ஆரவுக்கு.. அவன் கூற வந்ததை, கூறினான்.
தன் கையில் இருந்த, அவனது அலைபேசியை, அவள் புறம் நீட்டி,
"இந்தா, பார்த்தி கிட்ட பேசு.."
அவன் பேச்சில் ,அவனை வியந்து பார்த்தாள்.
"என் தோழன் ஒருத்தனுக்கு, ரிஜிஸ்டர் ஆபீஸ்ல ஆள் தெரியும் .அவன் கிட்ட சொல்லி,உங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுறேன்..என்னால, நேரடியா உதவ முடியாது. ஆனா, என் தோழன் மூலம் செய்ய முடியும்..பார்த்தி கிட்ட பேசு..முடிவு பண்ணுங்க சீக்கிரம்..
இன்னும் ரெண்டு மூணு நாளுக்குள்ள, முடிக்கனும்.. நமக்கு அவகாசம் ரொம்ப இல்ல.. உன்னை பொண்ணு பார்க்க வாரத்துக்குள்ள நம்ம முந்திக்கனும்..
அவன் கிட்ட பேசி, எப்போ எங்கன்னு முடிவு பண்ணி சொல்லுங்க..மத்ததை, என் பிரெண்ட் பார்த்துக்குவான்.."
"அத்தான்.."
ஆச்சரியத்தோடு, அவனை பார்த்தாள்.
அவளை கண்டு புன்னகைத்தவன்.
"எனக்கு,உங்க விஷயம் எப்படி தெரியும்னு நெனைக்குறியா..??நம்ம வீட்டு கிருஷ்ண ஜெயந்தி அப்போவே, உங்க ரெண்டு பேர் ஜாடை பேச்சை பார்த்தேன்..கொஞ்சம் சந்தேகம் வந்துருச்சு..
அப்புறம் ஒரு நாள்,ஒரு வெளிநாட்டு வாடிக்கையாளர் கிட்ட பேச,ஆர்த்தி தூக்கம் கலையக்கூடாதுன்னு, நைட்ல, மொட்டை மாடி வந்தேன்..அங்க, உங்க ரெண்டு பேரையும் பார்த்தேன்..சத்தமில்லாம, திரும்பிட்டேன்..அப்போவே, உங்க விஷயம் தெரிஞ்சா,பிரச்சனை வரும்னு தோணுச்சு..அதான், என் பிரெண்ட் கிட்ட, சொல்லி வச்சேன்.."
அவனை, கை எடுத்து கும்பிட்டாள், கீர்த்தி..
"ஏய்..!!"
அவள் கை பிடித்து, கீழே இறக்கி விட்டான், ஆரவ்.
"ஏன், இப்படி எல்லாம் பண்ணுற?? கீர்த்தி..பார்த்தி, என் தம்பி தான், வாழ்க்கையில, சந்தோஷம்னா என்னன்னு தெரியாம வளர்ந்தவன்..உன் மூலம் அவனுக்கு, அது கிடைக்குதுன்னா, என்னை விட யாரும் அதிகம் சந்தோஷ பட முடியாது..ஆதவ்க்கு கூட, அவனை பிடிக்கும்..காட்டிக்க முடியாது, அவ்ளோ தான்..
நேரடியா உதவ முடியாட்டியும்,நிச்சயம், நான் உங்களுக்கு உதவுறேன்..இந்தா, அவன் கிட்ட பேசு.."
கண் கலங்க, அவனை பார்த்தவள்..
"உங்களுக்கு, வெறும் நன்றி மட்டும் சொல்லி, என் நன்றியை காட்ட முடியாது, அத்தான்..இந்த அஞ்சு நாளும், ஆதரவான ஒரு வார்த்தைக்காக, ஏங்கி இருக்கேன்..
எங்க வீட்டுல இருந்து, அது கிடைக்கல..நான், எதிர் பார்க்காத இடத்துல இருந்து கிடைச்சுருக்கு..உங்க உதவியை மறக்க மாட்டேன் அத்தான்.."
"அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்..இப்போ, பார்த்தி கிட்ட பேசு.."
மறுப்பாய் தலை அசைத்தாள்.
"வேண்டாம் அத்தான்.. அவருக்கு, போலியான நம்பிக்கையை என்னால கொடுக்க முடியாது..
அவரும், உங்கள மாதிரியே, கிளம்பி வான்னு சொன்னா, என்னால மறுக்க முடியாது.."
"ஏன் மா..இப்போ, உங்க கல்யாணம் தானே முக்கியம்.."
"கல்யாணம் முக்கியம் தான் அத்தான்.. ஆனா, நான் ஓடி போய் கல்யாணம் செய்ய மாட்டேன்..எங்க வீட்டுல, சம்மதிச்சு நடக்குதோ,சம்மதிக்காம நடக்குதோ..ஆனா, அவங்க சொல்லாம, கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..நான் தப்பு செய்யல, மறைச்சு செய்ய..
என் ஆசை நியாயமானது..அதை, நேர் வழில தான், நிறைவேத்திக்குவேன்.."
"புரியாம பேசுற கீர்த்தி..உங்க வீட்டுல சம்மதிச்சு..உங்க கல்யாணம், இந்த ஜென்மத்துல நடக்காது..உன் அப்பா சம்மதிச்சா கூட, என் அம்மா விட மாட்டாங்க..அவங்களை பத்தி, எனக்கு நல்லா தெரியும்..புரிஞ்சுக்கோமா.. கல்யாணம் முடிஞ்சா, அப்புறம் ஏத்துகிட்டு தான், ஆகனும்.."
ஒரு உறுதியுடன், மறுத்தாள் கீர்த்தி..
"இல்ல..அத்தான்.. என் அம்மாக்கு, வாக்கு கொடுத்துருக்கேன்..ஓடி போக மாட்டேன்னு..அதை மீற மாட்டேன்.."
"அப்போ..என் தம்பி நிலைமை..??"
"அவரை தவிர யாரும் என்னை நெருங்க முடியாது அத்தான்.."
"ச்சு.. என்னம்மா.. இன்னும் நாலு நாளுல நிச்சயம் வச்சுக்கிட்டு, இப்படி பேசுற..கட்டாயப்படுத்தி, உன்னை ஒத்துக்க வச்சுருவாங்க ம்மா.. அதுக்கு முன்ன, நாம முந்திக்கனும்..இல்ல..எல்லோருக்கும் பிரச்சனை.."
"கவலை படாதீங்க அத்தான்.. நான் உங்க தம்பிக்கு மட்டும் தான் மிஸ்ஸர்ஸ் ஆவேன்.. இல்லைனா..மிஸ் ஆகிடுவேன்.."
ஒரு நிமிடம் முழித்தவன்,
"என்ன..??"
"இல்ல அத்தான்.. கடைசி வரை, மிஸ் அஹ், இங்கயே, என் அம்மா வீட்டுலேயே, இருந்துருவேன்னு சொன்னேன்.."
"அதுக்கு, உன்னை விட மாட்டாங்க கீர்த்தி.."
"தீபனை கல்யாணம் பண்ண மட்டும் தான், அனுமதி எதிர்பார்ப்பேன் அத்தான்.. மத்த எதுக்கும், யார் அனுமதியும் தேவை இல்லை, எனக்கு..என்னை கட்டுப்படுத்த, யாராலும் முடியாது.."
கண்ணில் உறுதியுடன், கூறினாள்.
அவள் பேச்சில், ஏதோ புதிர் இருப்பது போல தோன்றியது அவனுக்கு.
ஒரு பெரு மூச்சுடன்,
"சரி மா..கீர்த்தி..உன் முடிவு மாறுச்சுன்னா..எனக்கு ஒரு போன்..இல்ல..இல்ல.. மிஸ்ஸட் கால் மட்டும் கொடு,உங்க கல்யாணத்தை, நான் நடத்தி வைக்குறேன்..உனக்கு எப்போவும் என் சப்போர்ட் இருக்கும், மறக்காத.."
சரி என்று, மென்னகையோடு தலை அசைத்தாள்.
மறுநாள், ஆரவ் கிளம்பி, திருச்சி சென்றான்.
மீனாட்சி,ஆர்தியிடம் பேசி,அவளை தூது அனுப்பினார்..கீர்த்தியிடம் பேச..
காலை உணவை உண்டு விட்டு,தன் சிந்தனையில் ஆழ்ந்திருந்த கீர்தியிடம்,ஆர்த்தி சென்று அமர்ந்தாள்.
அவளை நிமிர்ந்து பார்த்து விட்டு,மறுபடியும் தன் சிந்தனையில் மூழ்கினாள், கீர்த்தி..
"கீர்த்தி..சாப்பிட்டியா..??"
அவள் சிந்தனையை கலைத்த கடுப்பில்,
"என்ன வேணும் உனக்கு..??"
"ஏண்டி, சிடு சிடுன்னு இருக்க..நம்ம அம்மா அப்பா நமக்கு கெடுதல் செய்வாங்களா..??நல்லது தான் செய்வாங்க..அவங்க சொல்லுறதை கேளுடி.."
"இதை சொல்ல தான் வந்தியா..??அப்போ கிளம்பு..இம்சை பண்ணாம.."
"ஏண்டி,இப்படி பேசுற..என் மாமியார், எவ்ளோ நல்லவங்க பார்த்தியா??அவங்க தங்கச்சி பையனையே, உனக்கு பார்த்திருக்காங்க..நீ, அவங்களுக்கு பேதி மாத்திரை எல்லாம் கொடுத்த,அவங்க உனக்கு நல்லது செய்யுறாங்க பார்த்தியா..இனியாச்சும் அவங்களை புரிஞ்சுக்கோ.."
"ஆமா..தப்பு பண்ணிட்டேன்..பேதி மாத்திரை கொடுத்திருக்க கூடாது..எலி பாஷாணம் கொடுத்திருக்கணும்.. கொடுத்திருந்தா.. இன்னிக்கு, இவ்ளோ உபத்திரவம் பண்ணாது.. நான் புரிஞ்சுகிட்டேன்..நீ புரிஞ்சுக்கோ..உன் மாமியார் பத்தி..வந்துட்டா, கொடி பிடிச்சிட்டு.. கொள்கை பரப்பு செயலாளர் மாதிரி.."
"புரியாம பேசாதடி.. அப்பா எப்படி ஒத்துக்குவார்..?? இந்த கல்யாணத்துக்கு. அவர் எவ்ளோ கௌரவம் பார்ப்பார்..அவர் போய், வேலை இல்லாம,முரடா இருக்குறவர்க்கு, பொண்ணு கொடுப்பாரா..??"
"நீ ரொம்ப, புரிஞ்சவ தானே..நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு..உன் மாமனார், முதல் மனைவி இருக்கையிலேயே, ரெண்டாவது கல்யாணம் பண்ணார்.. அந்த கல்யாணம், சட்டப்படி செல்லாது..
ஸோ.. உன் மாமியார்..இல்லீகல் வைப்..அவரு பிள்ளைக்கு, பொண்ணை கொடுப்பாரு.. லீகல் மனைவிக்கு, முறைப்படி பிறந்த, என் தீபன்க்கு கொடுக்க மாட்டாரோ..ரொம்ப கௌரவம் பார்க்குறவர் தான், உங்க அப்பா.."
"ஏய்..அதான்.. அவங்க இப்போ உயிரோட இல்லைல..அப்புறம் என்ன..??"
"அவங்க இருக்குற அப்போ தான்..உன் மாமியார், இரண்டாம் தாரமா வந்தாங்க..ரெண்டு குழந்தை பெத்தாங்க.. தப்பு செஞ்சவர், உயிரோட இல்லைனா..தப்பு இல்லைன்னு ஆயிடாது..
முறைப்படி வராத உன் மாமியார்க்கே, இவ்ளோ சப்போர்ட் பண்ணுவேன்னா,என் மாமியார்…முழு உரிமையோட வந்தவங்க..அவங்களுக்கு, நான் சப்போர்ட் பண்ண மாட்டேனா..??"
"என்னடி..உன் மாமியார்..என் மாமியார்ன்னு பிரிச்சு பேசுற..??"
"நீ தான் பேச வைக்குற.."
"சரி, அதெல்லாம் விடு..இந்த போட்டோவை பாரு..இந்த பையன்..செவசெவனு, ஹிந்தி பட ஹீரோ மாதிரி இருக்கார்..உனக்கு தான், செவப்பா இருந்தா பிடிக்குமே.. எவ்ளோ அழகு தெரியுமா..ஒரு தடவை பாரேன்..நீயே மயங்கி போய்டுவே.."
அவளிடம், புகைபடத்தை நீட்டினாள்.
உதட்டை சுளித்து, முகத்தை திருப்பி கொண்டாள், கீர்த்தி..அந்த புகை படத்தை, திரும்பி கூட பார்க்கவில்லை.
அவளை, பார்க்க வைத்தே தீருவேன் என்னும் நோக்கோடு..அவள் கண் முன், அந்த படத்தை உயர்த்தி ,நேராய் பிடித்து காட்டினாள் ஆர்த்தி..
அதை கண்ட கீர்த்தி,அந்த புகைப்படத்தை, ஒரு நொடி பார்த்து விட்டு,
"உவ்வே..வெள்ளை பன்னி மாதிரி, இருக்கான்.."என்றாள்.
"ஏய்..ரொம்ப பண்ணாத டி.. நேத்து வரை வெள்ளை பிடிச்சுது..இன்னிக்கு, வாந்தி வருதோ..உன், பார்த்தி முகம் பார்த்தா மட்டும், வாந்தி வராதோ..?? பெரிய மன்மதனோ.??."
பார்த்திபன் மாநிறம்.. அது தான்,ஆர்தியின் கேள்விக்கு காரணம்.
அவள், உன் பார்த்தி என்றதில் சிலிர்த்து,அவள் கேள்வியில், அவளை நிமிர்ந்து பார்த்த கீர்த்தி..
"ச்சே..ச்சே..அவரை பார்த்தா, வாந்தி வராது.. அவரால வரும்.."
வெட்கப்பட்டு, மெத்தை உறையில் கோலமிட்டு கொண்டே ,சொன்னாள் கீர்த்தி..
அதில் அதிர்ந்த ஆர்த்தி,
"ஏய்,என்னடி உளருற.. ??ஒழுங்கா பேசு..வேற ஒருத்தரை, கல்யாணம் பண்ண வேண்டிய பொண்ணு..இப்படி ,யாரோ ஒருத்தனுக்காக, இப்படி பேசாத.."
"அவரு ஒன்னும், யாரோ ஒருத்தர் இல்ல.. என் புருஷன்.."
"என்னமோ, தொங்க தொங்க, தாலி கட்டிக்கிட்டவ மாதிரி பேசுற.."
"தாலி கட்டுனா மட்டும் தானா..??நாங்க, மோதிரம் மாத்தி ,கல்யாணம் பண்ணி கிட்டோம்..இதோ பாரு..இந்த மோதிரம் பத்தி..துருவி துருவி கேட்டில்ல..இது, அவர் போட்டது தான்.. இப்ப சொல்லு, அவரு என் புருஷன் தானே..??"
"நிஜமா தான் சொல்லுறியா..??"
நாக்கு உலர்ந்து போக, கேட்டாள் ஆர்த்தி..
"உன் மேல சத்தியமா, அவரு போட்ட மோதிரம் தான்.. இது..அதான், அன்னிக்கு நீ கேட்டபோ, கொடுக்க முடியாதுன்னு, சொன்னேன்..
இன்னொரு விஷயம் சொல்லுறேன்..கிட்ட வா.."
இன்னும் என்ன, குண்டு தூக்கி போடப்போறாளோ என்று?? அவள் அருகில் சென்றாள் ஆர்த்தி.
"அன்னைக்கு, நான் கத்தி, என் பெட் ரூம் வந்தியே,என் பிறந்த நாளுக்கு முதல் நாள்..ஞாபகம் இருக்கா..??"
ஆமாம் என்று, தலை அசைத்தாள் ஆர்த்தி.
"அன்னைக்கு, அவரும் அங்கே தான் இருந்தார்.என் பெட்ல..எனக்கு கீழ.."
சொல்லி விட்டு, நகம் கடித்து வெட்க பட்டவள்.
"அன்னைக்கு தான் ,எங்க ஃபர்ஸ்ட் நைட்.."
அதிர்ந்து எழுந்த ஆர்த்தி..
"என்னடி சொல்லுற..??"
"ஆமாம் டி.. அரூ..எனக்கு வேற, இந்த ஒரு வாரமா, தலை சுத்துது.. வாந்தி வர்ற மாதிரி இருக்கு..நாளைக்கு, டாக்டர் கிட்ட போவோம் வர்றியா..??இங்க காட்டுவோமா??இல்ல, திருச்சில, உனக்கு காட்டுற ஹாஸ்பிடல்ல, காட்டுவோமா..??
அது பெரிய ஹாஸ்பிடல், நல்லா பார்ப்பாங்க தானே..அங்கேயே காட்டுவோம்.. நீ, எப்போ திருச்சி போற சொல்லு..போவோம்.."
முகம் முழுதும் வேர்க்க,
"விளையாடாத டி.."
"இதுல போய் யாராவது விளையாடுவாங்களா??நாங்க, குடும்பம் நடத்த ஆரம்பிச்சு, ரெண்டு மாசம் ஆச்சு..எனக்கு ,இப்போ என்ன டவுட்னா..நீ காட்டுன வெள்ளை பன்னி.. இது தெரிஞ்சா, என்னை கல்யாணம் பண்ணிக்குமா..??
மானம் ரோஷம் இருந்தா, பண்ணிக்காது..உன் மாமியார்க்கு சொந்தம் வேற..அதுனால, இதெல்லாம் எதிர் பார்க்க முடியாது..அதுனால, ஒத்துக்கும்ணு நெனைக்குறேன்..நீ என்ன சொல்லுற.??."
ஆர்த்தி, பதில் சொல்லும் நிலையில் இல்லை..
"அதை விடு.. செக் அப் போய்ட்டு வந்து, பொண்ணு பார்த்துக்கலாமா..இல்ல, அப்புறம் செக் அப் போலாமா..உனக்கு எது ஓகே..சொல்லு..??"
"……"
"ஆனாலும், இன்னொருத்தர் பிள்ளைக்கு அப்பாவா இருக்க..பெரிய மனசு வேணும்..அந்த வெள்ளை பன்னிக்கு, பெரிய மனசு தான், போ..வர்றவன் கிட்ட, உண்மையை சொல்லி தான் கல்யாணம் பண்ணிக்குவேன்..நீ என்ன சொல்லுற..??"
ஆர்த்தி பதட்டத்துடன்..அவ்விடம் விட்டு, சென்றாள்.
அவள் போன திசையை பார்த்து,ஏளனமாய் உதடு சுளித்து,
நக்கல் சிரிப்போடு,
"யாரு கிட்ட டி.. உன் வேலையை காட்டுற.. ??பூசணி பேச்சை கேட்டு, மறு பேச்சு பேசாத உனக்கே..இவ்ளோ இருந்தா, அதுக்கு மாத்திரை கொடுத்த எனக்கு, எவ்ளோ இருக்கும்..பார்க்கலாம் டி.. அந்த பூசணி ஜெயிக்கிதா,?? எங்க காதல் ஜெயிக்கிதானு??"