கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தித்திக்கும் தீ நீ!-13

Nilaa

Moderator
Staff member
13
கண்ணே!
உன் பாதையில்
முட்கள் இருந்தால்
என் கைகள்
உன்னை ஏந்திக் கொள்ளும்!
பூவே உன் புன்னகையில்
என் வலிகள் மாயமாகும்!

ரபரப்பான காலை
நேரம் கடந்து போயிருந்தது.

மதுராவிற்கு ஏனோ நேரம்
நகராமல் நிற்பது போல்
தோன்றியது.

மதி என்ன செய்து
கொண்டிருப்பான்?அவனைப்
போய்ப் பார்க்கலாமா?
ம்ஹூம்!எந்த முகத்தை
வைத்துக் கொண்டு
அவனைப் பார்ப்பது?

மதி என்னைப் பற்றி
என்ன நினைக்கிறான்
என்று தெரியவில்லையே!
பாவம்!என்னிடம் காதல்
சொல்ல ஆவலும்,
ஆசையுமாய்
இருந்திருப்பான்.நான்
அவன் மனதை
நோகடித்து விட்டேன்.

அந்த அயோக்கியன்,
அவன் என் மதி முன்
நிற்கும் தகுதி கூட
இல்லாதவன்.அவனிடம்
உன்னை அடி வாங்க
விட்டு விட்டேனே.
உன் மதுவை மன்னித்து
விடு மதி.

மதுராவின் கைபேசி
சிணுங்க,அவசரமாக
எடுத்துக் காதில்
வைத்து,“ஹலோ மதி”
என்றாள் குரலில்
தவிப்புடன்.

“எதுக்குடா அவ்வளவு
தடவை கூப்பிட்டிருக்கே?
சாரிம்மா.டேப்லட்
போட்டனாலயோ
என்னவோ எட்டு
மணிக்கே தூங்கிட்டேன்.
எதாவது முக்கியமா
பேசணுமா”

“இல்லை மதி.சும்மா
தான்...நீ எப்படி
இருக்கேன்னு கேட்கலாம்னு
கூப்பிட்டேன்”

“நான் நல்லா இருக்கேன்
மது.கை வலி குறைஞ்சிருக்கு.
கால் வலிக்கவே இல்லை”

“மது,மது”மகளை
அழைத்தபடி ராதா வர.

“அம்மா கூப்பிடறாங்க மதி”

“சரிடா.நாம அப்புறம்
பேசலாம்.பை”

எந்நேரமும் யாரிடம் தான்
பேசுகிறாளோ என்று
மகளை முறைத்தார் ராதா.
என்னிடமே இவள்
வேலையைக் காட்டுகிறாளோ?

“உன்னைப் பார்க்க
புஷ்பவதின்னு ஒரு அம்மா
வந்திருக்காங்க மது.யார்
அவங்க”

“என் பிரெண்டோட அம்மா
தான்மா.இந்தப் பக்கம்
வந்திருப்பாங்க.என்
ஞாபகம் வந்திருக்கும்.
ஒரு ஹாய் சொல்லிட்டுப்
போகலாம்னு
வந்திருப்பாங்க”

முன்னறைக்கு விரைந்த
மதுரா,சோபாவில்
அமர்ந்திருந்தவரைப்
பார்த்தப் பார்வையில்
சங்கடமே தெரிந்தது.

“நீங்க பேசிட்டு இருங்க.
நான் ஜூஸ் கொண்டு
வர்றேன்.வெயிலுக்கு
இதமாயிருக்கும்”

தாய் உள்ளே சென்றதும்,
“மேடம்,நீங்க எதுக்கு இங்க
வந்தீங்க”என வினவினாள்
மதுரா,பதட்டத்தைக்
காட்டாத குரலில்.

“உன்னைப் பார்த்து
நன்றி சொல்லணும்னு
தோணுச்சு மது”

“நான் என் வேலையைத்
தான் செஞ்சிருக்கேன்
மேம்.நீங்க நன்றி எல்லாம்
எதுவும் சொல்ல
வேண்டாம்”என்றாள்
உள்ளறையில் இருந்த
தாயின் மீது பார்வை
பதித்தபடி.

“தப்பா நினைச்சுக்காதீங்க.
அம்மாவுக்கு இந்த
விஷயமெல்லாம் தெரிய
வேண்டாம்னு நினைக்கிறேன்”

“புரியுது மது.இதைக்
கொடுக்கத் தான் நான்
வந்தேன்”என்று மதுராவின்
கை பிடித்து செக்
ஒன்றைக் கொடுத்தார்
புஷ்பவதி.

“நான் உன் பாஸ் கிட்டப்
பேசிட்டேன்.வாங்கிக்கோ.
நீயும்,அந்தப் பசங்களும்
வைச்சுக்கங்க.நீ செஞ்ச
உதவியை நான் எப்பவும்
மறக்க மாட்டேன்.உனக்கு
எப்பவாவது எதாவது
தேவைப்பட்டா நீ தாராளமா
என்னைக் கூப்பிடலாம்.
நான் கிளம்பறேன்.உன்
வீட்டில என்னால குழப்பம்
வர்றதை நான் விரும்பலை”

“ஒரு நிமிஷம்,உங்க
பொண்ணு கிட்டப் பழைய
விஷயங்களைப் பேசாதீங்க.
அவ கடந்த காலத்தை
மறக்க உதவி பண்ணுங்க.
அவளுக்கு நல்ல வாழ்க்கை
அமைச்சுக் கொடுங்க”

“சரி மது.நீ என் குடும்பம்
அழியாமக் காப்பாத்தி
இருக்கே.இந்த உதவியை
நான் எப்பவும் மறக்க
மாட்டேன்.நீ நல்லா
இருக்கணும்”சொல்லி
விட்டு வெளியேறிய
புஷ்பவதி பின்னால்
தானும் சென்று,அவர்
காரில் ஏறிச் செல்வதைப்
பார்த்தாள் மதுரா.

“மதூ...அந்தம்மா ஏன்
இப்படி அவசரமா
போறாங்க”சமையலறையில்
இருந்து வந்த ராதா
வினவ.

“அவங்களுக்கு எதோ
போன் வந்துச்சும்மா.
உடனே கிளம்பிட்டாங்க.
ஜூஸ்ஸைக் கொடுங்க.
நான் குடிக்கறேன்”

பழச்சாறைப் பருகி
விட்டு,மேலேறிச் சென்ற
மதுரா,தன் சட்டைப்
பையில் வைத்த செக்கை
எடுத்துத் தன் கைப்பையில்
வைத்தாள்.

வசந்தனிடம் சொல்ல
வேண்டும்.அவன் மதியிடம்
எங்களைப் பற்றிப்
பேசியிருப்பானா?மதி
எதாவது விசாரித்து
இருப்பானா?

இல்லை.மதி என்னிடம்
தான் கேட்பான்.
வசந்தனும் நானே
சொல்லட்டும் என்று
நினைத்திருப்பான்.

என் மதியின் சட்டை
முழுவதுமே ரத்தத்தால்
நனைந்திருந்தது.எத்தனை
வலித்திருக்கும்?என்
மதியின் மனதையும்,
உடலையும் நானே
காயப் படுத்துவேன்
என்று நான் கனவிலும்
நினைத்ததில்லை.

ஒரு பெண்ணின் வாழ்வைக்
காத்து விட்டோம் என்ற
மன நிறைவு இருந்தாலும்,
மதிவதனனைக் காயப்படுத்தி
விட்டோமென்றத் தவிப்பு
மதுராவின் மன அமைதியைக்
குலைத்துக் கொண்டிருந்தது.

சாரதா இல்லம்.

மதுராவைப் போலவே
மதிவதனன் சிந்தையும் தன்
மனம் கொண்டவளையே
சுற்றி வந்து கொண்டிருந்தது.

உன் எதிர்காலத்தைப் பற்றி,
உன் குடும்பத்தைப் பற்றி
நீ எண்ணவே இல்லையா மது?

நான் இப்போது என்ன
செய்வேன் கிருஷ்ணா?
எனக்கு என்ன
செய்வதென்று ஒன்றும்
புரியவில்லையே!

“அண்ணா,எதுக்குக்
கூப்பிட்டே”மதிவதனன்
சிந்தனைக்குத் தடையாக
வந்தாள் மயூரி.

“சொல்லு பிரதர்”தமையன்
அருகில் அமர்ந்து,
கன்னத்திற்குக் கை
கொடுத்து கதை கேட்கத்
தயாரானாள் மயூரி.

“நான் காரில வைச்சிருந்த
கிப்ட் பார்சலையும்,
பொக்கேவையும் காணோம்”

“அது சேர வேண்டிய
இடத்துல சேர்ந்துடுச்சு
பிரதர்”

“விளையாடாதே மயூ”

“பிராமிஸ்ஸா பிரதர்.
கிப்ட் என் கண்ணுல
பட்டுச்சா, அண்ணனுக்கு
ஹெல்ப் பண்ணலாம்னு
நான் தான் மது கிட்டக்
கொண்டு போய்க்
கொடுத்து,என்
அண்ணன் நல்லவன்,
வல்லவன்,அவன் காதலை
ஏத்துக்கோன்னு கெஞ்சிக்
கேட்டு வந்திருக்கேன்
மதிணா”

“நீ கெஞ்சிக் கேட்கறே?
எப்ப இதெல்லாம் நடந்துச்சு”

“நேத்து அஞ்சு மணிக்கு
வெளியில போகலாம்னு
உன் காரை எடுத்தனா,
நேரா மது வீட்டுக்குப்
போயிட்டேன்”

“உன் காருக்கு என்ன”

“கொஞ்சம் உடம்பு
சரியில்லை பிரதர்.
நாளைக்கு சரியாயிடும்”

“அதை விடு.நேத்து
அம்மா கிட்ட என்ன
சொல்லிட்டு இருந்தே?
நீ என்ன செய்யறேன்னே
வரவர எனக்குப் புரிய
மாட்டீங்குது மயூ”

“அது ஒண்ணும் இல்லை
மதிணா.அம்மா மது தான்
தன்னோட மருமகங்கிற
முடிவுல உறுதியா
இருக்காங்களான்னு
தெரிஞ்சுக்கப் பேசிட்டு
இருந்தேன்”

“ஏன் மயூ?என்னை விட
அம்மாவுக்குத் தான்
மதுவை அதிகம் பிடிக்கும்.
உனக்குத் தெரியாதா?”

“தெரியும் பிரதர்.
இருந்தாலும்...நடுவுல
யாராவது புகுந்து...
அம்மா மனசு குழம்பி...
மதுவை வேண்டாம்னு
சொல்லிட்டா...நீ என்ன
செய்வே பிரதர்?மின்னலே
நீ வந்ததேனடின்னு எப்பப்
பார்த்தாலும் ஒரு
பாட்டைக் கேட்டுட்டு
இருப்பியே.அதை நீயே
பாட ஆரம்பிச்சுடுவியா?”

“நான் அதெல்லாம்
பாட மாட்டேன்.ஏன்னா
நம்ம அம்மா யார்
பேச்சையும் கேட்க
மாட்டாங்க”

“கேட்க மாட்டாங்க
தான்.அவங்க அப்பாவிப்
பையனோட வாழ்க்கை
விஷயமாச்சே.காது
தானா கேட்குமே”

“மயூ,யாராவது
வீட்டுக்கு வந்திருந்தாங்களா?
மதுவைப் பத்தி
எதாவது சொன்னாங்களா”
மனதில் தோன்றிய படபடப்பை
மறைத்துக் கொண்டு
கேட்டான் மதிவதனன்.

“மதுவைப் பத்தி யார்
என்ன சொல்றது?அம்மா
கேட்டுக்குவாங்க?கொஞ்சம்
பொறுமையா கேளு மதிணா”

“சரி சொல்லு”

“என் பிரெண்ட் சுஜி
தெரியும் இல்லே உனக்கு?
அவளோட அப்பா நாலு
நாள் முன்னாடி நம்ம
வீட்டுக்கு வந்திருந்தார்
மதிணா.என்னைப்
பத்தி தான் வத்தி
வைக்கிறாரோன்னு என்
காதைக் கதவுல ஒட்டி
வைச்சேன் மதிணா”

“ம்”

“வேட்டு எனக்கில்லை.உனக்கு”

“எனக்கா?”

“எஸ் பிரதர்.உனக்கும்,
சுஜிக்கும் கல்யாணம்
பண்ணலாம்னு தன்
ஆசையை சொல்லி,உன்
ஆசைக்கு வேட்டு
வைச்சுட்டார் மதிணா.
வேட்டு வைச்சுட்டார்”

“அப்பா என்ன சொன்னார்
மயூ”

“தந்தை சொல் தட்டாத
தனயனே,பதறாதே!கூல்
கூல்”

“விளையாடாம அப்பா
என்ன சொன்னாருன்னு
சொல்லு மயூ”

“சுஜி நல்ல பொண்ணு.
சாரு கிட்டயும்,மதி
கிட்டயும் பேசிட்டு
முடிவை சொல்றேன்னு
வேட்டு வெடிக்காமப்
பண்ணிட்டார் நம்ம
டாடி”

“அப்பா சம்மதம்
சொல்லிட்டாரோன்னு
நான் பயந்தே
போயிட்டேன் மயூ”

“எனக்கு என்ன பயம்னா
பிரதர்,என்ன தான்
மதுவைப் பிடிச்சிருந்தாலும்,
சுஜியைப் பார்த்து,
தன்னோட சாதுப்
பையனுக்கு,சாதுவான
சுஜிதான் ஒத்து வருவான்னு
அம்மா மனசுல
தோணிடுச்சுன்னா...
அதான் சாருவை டெஸ்ட்
பண்ணிட்டு இருந்தேன்.
சாரு பையன் விருப்பம்
தான் முக்கியம்னு
சொல்லி,என் பயத்தைப்
போக்கிட்டாங்க”

“அப்புறம்,அப்பா நேத்து
நைட் டைனிங் டேபிள்ல,
சுஜி பேச்சை எடுத்தாரா,
நம்ம சாரு,“மது மங்கி
தான் எனக்கு மருமகளா
வரணும்னு”,டைனிங்
டேபிள்ல அடிச்சு அடிச்சு
உறுதியா சொல்லிட்டாங்க.
அப்பா உடனே சுஜியோட
அப்பா கிட்ட வேற
மாப்பிள்ளை பார்த்துக்கங்க.
உங்க சாதுப் பொண்ணு
இந்த வீட்டு வானரங்களைப்
பார்த்து பயந்துக்கும்னு
சொல்லிட்டார்”

மதிவதனன் முகத்தில்
சிரிப்பு எட்டிப் பார்க்க,
“நல்லா சிரிக்கணும்
மதிணா.இனி மது,
மதியோட டும்டும்டும்
எபிஸோட் ஆரம்பம்”
என்றாள் உற்சாகம் பொங்க.

தங்கையின் பேச்சு
மதிவதனன் புன்முறுவலை
அதிகரிக்க,அறைக்
கதவருகே நின்றிருந்த
வசந்தனும் புன்னகை
பூத்தான்.

இது எப்போது வந்தது?
இவன் பல்செட்டைப்
பார்ப்பதற்குத் தானே
நான் காத்துக்
கொண்டிருக்கிறேன்.

“நான் அப்புறம் வர்றேன்
மதிணா”

மயூரி சூடான
பார்வையோடு வெளியேற,
“எனக்குக் கொஞ்சம்
வேலையிருக்கு.போயிட்டு
வந்துடறேன் மதி”
என்றான் வசந்தன்.

“நேத்து மாதிரி எங்கயும்
போகலையே”

“இல்லை மதி”

“எப்பத் திரும்பி
வருவீங்க வசந்த்”

“நைட் எட்டு
மணிக்கெல்லாம்
வந்துடுவேன் மதி”

“சரி.ஜாக்கிரதையா
போயிட்டு வாங்க.பை”

வசந்தன் விடை
பெற்றுச் செல்ல,
படுக்கையில்
சாய்ந்தான் மதிவதனன்.

தங்கை பேச்சை
நினைத்துச் சிரித்த
மதிவதனனுக்கு,
அச்சிந்தனை உதித்தது.

நாளெல்லாம் யோசித்து,
உறுதியான முடிவொன்றை
எடுத்த மதிவதனன் மனது
கொஞ்சம் அமைதியுற்றது.

ள்ளிரவு.

தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டிருந்த வசந்தன்,
விழிகள் ஓய்விற்குக்
கெஞ்சியதில்,உறங்க
ஆயத்தமானான்.

படம் பார்த்ததில் நேரம்
போனதே தெரியவில்லை!

இரவு விளக்கை அணைத்து
விட்டுப் படுத்த வசந்தன்
விழிகள் களைப்புடன் மூடியது.

வசந்தன் அறை விளக்கு
அணைவதற்காகக்
காத்திருந்தது போல,
வெளிப்பட்டது அந்த
உருவம்.

முழு வீடும் இருளில்
மூழ்கி இருக்க,வசந்தன்
அறை முன் சென்று
நின்றது அந்த உருவம்.

தலை முதல் கால் வரை
போர்த்தி இருந்த
அந்த உருவம்,
சுற்றிலும் ஒரு முறை
பார்த்துக் கொண்டு,
சத்தமின்றி கதவைத்
திறந்து உள்ளே
சென்று தாழிட்டது.

அறையினுள் பாய்ந்த
முழு நிலவின் ஒளி
வெள்ளத்தில்,வசந்தன்
முகம் தெளிவாகத்
தெரிய,கட்டிலை
நோக்கி மெல்ல அடி
எடுத்து வைத்தது.

வசந்தன் நல்ல
உறக்கத்தில் இருக்க,
நேராக அவன்
கழுத்தைப் பிடித்தது
அந்த உருவம்.

தித்திக்கும்❤️❤️❤️

ஹாய் பிரெண்ட்ஸ்,

அத்தியாயம்-13 பதிந்து
விட்டேன்.உங்கள்
கருத்துக்களை
எதிர்பார்த்து ஆவலுடன்
காத்திருப்பேன்.
நன்றி🙏🙏

அன்புடன்,
நித்திலா:)
 
Top