14
இதழ் விருந்தொன்று
படைத்திடு!
விடை கொடுத்திட
மறுத்திடு!
இதழ்கள் பிரியாத
வரமொன்று கொடுத்திடு!
இதழ் விருந்தொன்று
படைத்திடு!
விடை கொடுத்திட
மறுத்திடு!
இதழ்கள் பிரியாத
வரமொன்று கொடுத்திடு!
எந்த அசைவுமின்றிப்
படுத்திருந்த வசந்தன்
கழுத்தில் இருந்து
கையை எடுத்து விட்டு,
எழுந்து நின்றது அவ்வுருவம்.
இவன் தூங்குகிறானா
இல்லை தூங்குவது போல்
நடிக்கிறானா என யோசித்த
உருவத்தின் கை பற்றி
இழுத்து,தன் மேல்
விழ வைத்தான் வசந்தன்.
“ஐய்....”சத்தம் வெளி
வராமல்,சிறைப்பட்டு
இருந்தது மயூரியின்
இதழ்கள்.
நீண்ட பல நொடிகளுக்குப்
பின்,தன் இதழ்ச்சிறையில்
இருந்து மயூரியை
விடுவித்து விட்டுச்
சிரித்தான் வசந்தன்.
“நீ ரொம்பபப கெட்டப்
பையன் வசு”என அவன்
மார்பில் குத்தினாள் மயூரி.
“என்னைத் தேடி
நடுராத்திரில வந்த
காதலிக்குப் பரிசு
கொடுத்தேன்.இது தப்பா?”
“ம்ஹூம்”என அவன்
மூக்கோடு,தன் மூக்கை
உரசினாள் மயூரி.
“எதுக்கு இவ்வளவு பெரிய
பொட்டு?எதுக்கு இப்படி
முடியை விரிச்சுப்
போட்டிருக்கே மயூ?எதுக்கு
இந்த பேய் கெட்டப்?”
“உன்னை பயமுறுத்த
தான்.நீ பயந்து
அலறுவேன்னு ஆசையா
வந்தேன்.நீ தூங்கிற
மாதிரி நடிச்சு,என்னை
ஏமாத்திட்டே.எப்படி
நான் தான்னு கண்டு
பிடிச்சே வசு?”
“போர்வையைப் பிடிச்சிருந்த
இந்த அழகான கை தானே,
என் கழுத்தையும்
பிடிச்சுது?இந்தப் பட்டுக்
கையை எனக்குத்
தெரியாமப் போயிடுமா?”
அவள் கை பிடித்து
மிருதுவாக முத்தமிட்டான்
வசந்தன்.
“எந்தக் காதலிக்கும் வராத
ஆசை உனக்கு எப்படிடா
வந்துச்சு?”
“நாலு மாசம் கழிச்சுப்
பார்க்கிற உன்னோட
ஆருயிர்க் காதலியை,
அழகு தேவதையை,
அப்படித்தான் யாரோ
மூணாவது மனுஷியைப்
பார்க்கிற மாதிரி பார்ப்பியா?”
“சாரி மயூ.நீ மதுவைப்
பத்திப் பேசிட்டிருந்ததைக்
கேட்டு...”
“ஐயாவுக்குக் கோபம்
வந்துடுச்சா?லூசு!நீ
இன்னும் என்னை
சரியாவே புரிஞ்சுக்கலை”
“சாரிடா.இனி இந்தத்
தப்பைப் பண்ண
மாட்டேன்.நீ என்ன
பேசினாலும்,மதி
மாதிரி எதாவது
காரணம் இருக்கும்னு
புரிஞ்சுக்கிட்டு,நானும்
எந்த ரியாக்ஷனும்
கொடுக்க மாட்டேன்.
சாரி ப்யூட்டி.இந்த ஒரு
தடவை என்னை
மன்னிச்சுடு”
“நீ என் வீட்டுக்கு
முதல் முறையா
வந்திருக்கே.அதுக்காக
உன்னை மன்னிக்கறேன்
வசந்தா”
“தேங்க்ஸ் மயூ”
“இனி ஒரு தடவை
என்னை முறைச்சு,
கோபமா,உர்ருன்னு
எல்லாம் பார்த்தே வசந்தா...
நான் டிராகுலா,கோட்சில்லா,
அனகொண்டாவா
மாறிடுவேன்.
சொல்லிட்டேன்"
“ஐய்யய்யோ!எனக்கு
டிராகுல்லானா ரொம்ம்ம்ப
பயம் மயூ”என அவளைத்
தன்னோடு இறுக
அணைத்தான் வசந்தன்.
“நீ இருக்கியே.சரியான
திருடன்.விடு வசு”
“கேட்கிறதைக் கொடுத்தா
விடுவேன்”
“நீ கேட்காமயே கொடுக்கறேன்”
அவன் இரு கன்னத்திலும்
முத்தம் வைத்தாள் மயூரி.
“இது ஒரு மாசத்துக்குத்
தாங்கும்.குட்நைட் மயூ”
வசந்தன் அவன் கைகளை
விலக்கவும்,அவன் மீதிருந்து
எழுந்த மயூரி,அவன்
போர்வையை நன்றாகக்
கழுத்து வரை இழுத்துப்
போர்த்தி விட்டாள்.
“குட்நைட்,ஸ்வீட் ட்ரீம்ஸ்
வசு”
வந்தது போலவே
போர்வையால் தன்னை
முழுவதுமாகப் போர்த்திக்
கொண்டு வெளியேறினாள்
மயூரி.
பொழுது புலர்ந்தது.
அன்று வெகு நேரம்
கழித்தே உறக்கம்
கலைந்து எழுந்தாள்
மதுரா.
என்ன அப்பாவின் குரல்
கேட்கிறது?இன்னும்
விடியவில்லையா? நான்
தான் அவசரப்பட்டு
எழுந்து விட்டேனா?
அடடா!மணி ஒன்பதாகப்
போகிறது.அப்பாவிற்கு
உடம்பு எதுவும்
சரியில்லையா? அது
தான் வீட்டில் இருக்கிறாரா?
அவசரமாகப் படுக்கையில்
இருந்து இறங்கி ஓடினாள்
மதுரா.
“குட்மார்னிங் மது குட்டி.
மெதுவா,எதுக்கு இப்படி
ஓடி வர்றே”ஹாலில்
அமர்ந்திருந்த கோவிந்தன்,
மகளைக் கண்டு எழுந்து
அவளருகில் சென்றார்.
“ஆபிஸ்சுக்குப்
போகலையாப்பா?
உங்களுக்கு உடம்பு எ...”
“இல்லை தங்கம்.அப்பா
நல்லாயிருக்கேன்.
முக்கியமான வேலைக்காக
லீவ் போட்டிருக்கேன்”
“சரிப்பா”
“நீ போய் குளிச்சுட்டு
வா கண்ணு.நாம மூணு
பேரும் சேர்ந்து டிபன்
சாப்பிடலாம்”தன்
செல்ல மகளின்
தலையை ஆசையுடன்
வருடினார் கோவிந்தன்.
கலகலப்பான சிற்றுண்டி
நேரத்திற்குப் பிறகு,
ராதாவும்,கோவிந்தனும்
வெளியில் கிளம்பிச்
சென்றனர்.
என்ன இது புதிய
பழக்கமாக இருக்கிறது?
எங்கு செல்கிறார்கள்
என்று ஏன் என்னிடம்
சொல்லவில்லை?இரவு
தான் திரும்புவார்கள்
என்றால்,தாத்தா
பாட்டியைக் காணச்
செல்கிறார்களோ?
இருக்காது.அப்படி
இருந்தால்,என்னையும்
அழைத்துச் சென்றிருப்பார்களே!
என்னை வேறு
வெளியில் செல்லக்
கூடாது என்று உத்தரவு
போட்டிருக்கிறார்கள்!
மதியைக் காணச்
செல்லலாம் என்று
நினைத்தேன்.அவனிடம்
நான் பேச வேண்டும்,
பேசியே ஆக வேண்டும்.
மதி வீட்டிற்குச் சென்று
விட்டு,நல்ல பிள்ளையாக
உடனே திரும்பி விடலாம்.
அம்மாவிடம் எதாவது
சொல்லி சமாளித்துக்
கொள்ளலாம்.
இல்லை இல்லை.மதி
வீட்டிற்குச் சென்றாலும்,
நான் பேச நினைத்ததைப்
பேச முடியாதே.அங்கு
மதியின் அம்மா
இருப்பார்கள். மயூவும்,
முகிலும் எப்போது
எங்கிருந்து குதிப்பார்கள்
என்று சொல்ல முடியாது.
போனில் பேசலாம்
என்றால்,இது போனில்
பேசக் கூடிய
விஷயமில்லையே!
அழைப்புமணி ஒலிக்க,
மதி வந்திருப்பானோ
என்று ஓடிச் சென்று
கதவைத் திறந்தாள்
மதுரா.
“பவீ!!நீ எப்படிடா
திடீர்னு வந்திருக்கே?நீ
குப்பை கொட்டற
ஐடி கம்பெனியை
இழுத்து மூடிட்டாங்களா”
“என்ன ஒரு
நல்லெண்ணம்கா உனக்கு.
நான் இன்னைக்கு வர்றதா
பத்து நாள் முன்னாடியே
சொல்லிட்டேன்.நீ தான்
மறந்துட்டே”
“சாரிடா.உள்ள வா”
“அம்மா எங்கக்கா?
வீட்டில இல்லையா?”
“அம்மாவும்,அப்பாவும்
வெளியில போயிருக்காங்க
பவி.நைட் தான் வருவாங்க”
“எங்கக்கா போயிருக்காங்க”
“என் கிட்ட சொல்லலை
பவி.தன் செல்லப் பையன்
வர்றப்ப,அம்மா எங்கயும்
நகர மாட்டாங்களே.என்ன
அதிசயமாயிருக்கு?
எனக்குத் தெரியாம
என்னவோ பண்றாங்க
பவி”
“என்னக்கா?உன் கிட்ட
இருந்து எதையாவது
மறைக்க முடியுமா?
நடக்கிற காரியமா அது”
என்று சிரித்தான் பவித்திரன்.
“சரி போய் குளிச்சுட்டு
வா.நான் டிபன் செய்யறேன்”
“வேண்டாம்கா.நான்
தூங்கறேன்.பன்னெண்டு
மணி ஆனதும் எழுப்பு.
லன்ச்சுக்கு வெளியில
போகலாம்”
பவித்திரன் அவனறைக்குச்
செல்ல,அன்று வந்த
அனைத்து தினசரிகளையும்
எடுத்துக் கொண்டு
தன்னறைக்குச் சென்றாள்
மதுரா.
மதுரா ஒவ்வொரு
தினசரியாகப் படித்து,
தேவையானவற்றை வெட்டி
வைத்துக் கொண்டிருந்த
போது,அவள் கைபேசி
ஒலிக்கத் தொடங்கியது.
“மதி,எப்படி இருக்கே?
கை வலி குறைஞ்சிருக்கா?
கால் வலிக்குதா?நல்லா
நடக்க முடியுதா?”
மதிவதனன் எப்போது
அழைத்தாலும்,மதுரா
கேட்கும் முதல் கேள்வி
இது தான்!
“வலி குறைஞ்சிருக்கு.
நல்லா நடக்கறேன் மது.
வலிக்கலை”
“மதீ..நான் உன் கிட்டப்
பேசணும்”
“நானும் தான் மது.
உன் கிட்ட நிறையப்
பேசணும்.என் வீட்டில
பேச முடியாது மது.
உன் வீட்டுக்கு வரட்டுமா?”
“அம்மாவும்,அப்பாவும்
வெளியில போயிட்டாங்க.
ஆனா பவி வந்திருக்கான்
மதி.வெளியில எங்கயாவது
போகலாமா”
“வேண்டாம் வேண்டாம்.
உன் வீட்டிலயோ,என்
வீட்டிலயோ பேச
முடிஞ்சா பேசலாம் மது”
“நம்மனால வீட்டில
பேச முடியாது மதி”
“வெளியில போய்
பேசறது நல்லதில்லையே
மது.யாராவது நாம
பேசறதைக் கேட்டுட்டா
பிரச்சனையாயிடும்”
அழைப்புமணி நீளமாக
ஒலித்தது.
“யாரோ வந்திருக்காங்க.
நான் அப்புறம் பேசறேன்
மதி.பை”
இந்தக் காலிங்பெல்லோடு
ஒரே தொல்லையாகப்
போய் விட்டது.இதைக்
கழட்டி வைத்தால் தான்
நிம்மதி.
“மதூ..மதூ..”
வைத்து விட்டாள்.தன்
கைபேசியை அருகில்
வைத்து விட்டு,
தலையணை ஒன்றை
எடுத்து மடியில் வைத்துக்
கொண்டான் மதிவதனன்.
உன்னிடம் எப்போது
தான் பேசுவது மது?யார்
வந்திருப்பார்கள்?
திறந்திருந்த அறைக்
கதவு,வசந்தன் வேக
நடையுடன் அவன்
அறையைக் கடந்து
செல்வதைக் காட்டியது.
இத்தனை அவசரமாக
எங்கு செல்கிறான்?
என்னிடம் சொல்லாமல்
வேறு செல்கிறான்.
கடவுளே!என் மதுவிற்கு
எந்தப் பிரச்சனையும் வரக்
கூடாது.
“வசந்த் வசந்த்”மதிவதனன்
குரல் எட்டாதபடி
விரைந்திருந்தான் வசந்தன்.
மதிவதனன் மெதுவாக
நடந்து அறையில் இருந்து
வெளி வந்து பார்க்கையில்,
படிகளில் இறங்கி ஹாலைக்
கடந்து வெளியேறி
இருந்தான் வசந்தன்.
மதிவதனன் வேகமாக
எட்டு வைத்ததில் வலி
ஏற்பட,வலியுடனே ஹாலை
அடைந்து வெளியேறிய
மதிவதனன்,சாலையில்
சென்று கொண்டிருந்த
வசந்தனைக் கண்டான்.
இவனுக்குத்தான் கார்
கொடுத்திருக்கிறேனே.
எதற்கு நடந்து செல்கிறான்?
ஒரு வேளை..மது வீட்டிற்குச்
செல்கிறானோ?அதற்கு
எதற்கு இப்படி ஓட
வேண்டும்?காரணமின்றி
இப்படி ஓட மாட்டான்.
“டிரைவர் அண்ணா,
காரை எடுங்க”என்று
குரல் கொடுத்தான்
மதிவதனன்.
கேட் திறந்து கார்
வெளி வந்ததும்,
முன்னால் ஏறி அமர்ந்து
கொண்ட மதிவதனன்,
மதுரா வீட்டிற்குச்
செல்லப் பணித்தான்.
சில நிமிடங்களில்,
மதுரா வீட்டை
அடைந்த மதிவதனன்,
கேட்டிற்கு வெளியில்
நிறுத்தி இருந்த
இருசக்கர வாகனம்
யாருடையது என
யோசித்தபடியே காரில்
அமர்ந்திருந்தான்.
வீடு எப்போதும்
போல் அமைதியாகத்
தான் இருக்கிறது.
யார் வந்திருப்பது?
என்னுடன் பேசும் போது
தானே காலிங்பெல்
அடித்தது?வசந்தன்
ஓடி வந்தானா?இல்லை...
என் பயந்த மனதின்
கற்பனையா?
உள்ளே செல்லலாமா?
மதுவின் உறவோ,
நட்போ யாராவது
வந்திருந்தால் என்ன
செய்வது?
பவி வந்திருக்கிறான்.
அவனைக் காண
யாராவது வந்திருக்கலாம்.
என் கற்பனைக்கு நான்
கடிவாளமிட வேண்டும்.
வசந்தன் சாதாரணமாக
மதுவைப் பார்க்க
வந்திருக்கலாம்.
மதிவதனன் தன்னுடனே
வாதிட்டுக் கொண்டிருக்கையில்,
கேட் திறந்து கொண்டு
வெளி வந்தவர்,பைக்கில்
ஏறி அமர்ந்தார்.அவர்
கைபேசி உடனே
சப்தமிடத் தொடங்கியது.
இவரைப் பார்த்தால்...
போலீஸ் போல் தெரிகிறதே!
“எஸ்!நான் வர ஒன்ஹவர்
ஆகும்.நேரா ஸ்பாட்டுக்கு
வந்துடறேன்.மீடியாவைப்
பக்கத்துல விட்டுடாதீங்க”
அந்தக் காவல்துறை
அதிகாரியின் பேச்சைக்
கேட்ட மதிவதனன்
நெஞ்சத்தில் குளிர் பரவியது.
கடவுளே!என் மதுவைத்
தேடிப் போலீஸ் வந்து
விட்டதா?
எந்தத் தடயத்தையும்
விட்டு வந்திருக்க மாட்டார்கள்
என்று நம்பினேனே!
இனி என்னவாகும்?
என் மது பட்டாம்பூச்சியாய்
சிறகடிக்க வேண்டியவள்.
அவள் தன் வண்ணங்களை
இழந்து சிறையில் வாடுவதா?
தித்திக்கும்



ஹாய் பிரெண்ட்ஸ்,
அத்தியாயம் 14 பதிந்து விட்டேன்.
உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
ஆவலுடன் காத்திருப்பேன்.
நன்றி


அன்புடன்,
நித்திலா