17
தவமின்றிக் கிடைத்த
வரம் நீ!
காதலாகி
உன் வாழ்வை
சோலையாக்கி
வாழ்ந்திருப்பேன் அன்பே!
தவமின்றிக் கிடைத்த
வரம் நீ!
காதலாகி
உன் வாழ்வை
சோலையாக்கி
வாழ்ந்திருப்பேன் அன்பே!
சிறு வயது முதலே,தன்
மீது ப்ரியம் காட்டிய
சாரதாவிற்குத் தன் மனதில்
உயர்ந்த இடத்தை
அளித்திருந்தாள் மதுரா.
இன்று அச்சாரதா உகுத்தக்
கண்ணீர் மதுராவை
வெகுவாகத் தாக்கியது.
இந்தக் கண்ணீருக்குக்
காரணம் நானா?இவர்
பேச்சின் பொருள் என்ன?
“அத்தை,அழுகாதீங்க.
ப்ளீஸ்..”சாரதாவின்
கண்ணீரை அவசரமாகத்
துடைத்து விட்டாள் மதுரா.
“என்ன விஷயம்னு
பொறுமையா என்கிட்ட
சொல்லுங்க அத்தை.நான்
எப்பவுமே மதியை
உங்க கிட்ட இருந்து
பிரிக்கணும்னு
நினைச்சதில்லை.நான்
அப்படி எல்லாம் யோசிச்சது
கூட இல்லை.நீங்க ஏன்
இப்படிப் பேசறீங்கன்னு
எனக்கு சுத்தமா புரியலை.
நாம எல்லாரும் ஒண்ணா,
சந்தோஷமா வாழணும்னு
தான் நான் நினைச்சுட்டு
இருக்கேன் அத்தை.
அதை தான் மதி கிட்டயும்
சொல்லுவேன்”
“மதூ...உன்னை மதிக்கு
மட்டும் இல்லை.எங்க
எல்லாருக்குமே பிடிக்கும்.
நீ வந்தா எங்க சந்தோஷம்
அதிகமாகும்னு நான்
நம்பிட்டு இருந்தேன்.
ஆனா..அந்த நம்பிக்கை
கொஞ்ச நேரம் முன்னாடி
உடைஞ்சு போயிடுச்சு மதூ..”
“...........”
“மதி என் கிட்ட...
“கல்யாணத்துக்கு அப்புறம்
நான் வெளிநாட்டில போய்
செட்டில் ஆயிடலாம்னு
முடிவு பண்ணி
இருக்கேம்மான்னு”சொல்லி...
ஏதோ வாயில வராத
நாட்டுப் பேர் சொன்னான்
மது”
வெளிநாட்டில் செட்டில்
ஆவதா?இந்த மதிக்கு
என்னவாயிற்று?
“மதூ..நீங்க எப்ப
வேணாலும்,எந்த நாட்டுக்கு
வேணாலும் போங்க.
எவ்வளவு நாள் வேணாலும்
தங்கிட்டு வாங்க.
நானோ,மதியோட
அப்பாவோ எதுவும்
சொல்ல மாட்டோம்.
அங்கயே போய்
இருக்கிறதெல்லாம்
வேண்டாம் மது”
இவர் நான் வெளிநாடு
செல்ல ஆசைப் படுவதாக
நினைத்து விட்டாரா?மதி
என்னிடம் எதுவும்
பேசவில்லையே!என்னைக்
கேட்காமல்,எப்படி இவன்
முடிவெடுத்தான்?அதைத்
தன் தாயிடம் வேறு
சொல்லி இருக்கிறான்.
இவனை...
“மதூ..”
“மதி உங்களை விட்டு
எங்கயும் போக மாட்டார்
அத்தை.என்னை நம்புங்க.
நான் அவர் கிட்ட இப்பவே
பேசறேன்.நீங்க கவலைப்
படாம இருங்க.உங்க வீடு
எப்பவும் உயிர்ப்போட
இருக்கும்”
மதுரா காரில் இருந்து
இறங்கிக் கொள்ள,தான்
மதுவிடம் சொன்னது சரி
தானா எனக் கவலையுடன்
மதுராவைப் பார்த்தார்
சாரதா.அவரைத் தேற்றும்
விதமாகப் புன்னகைத்தாள்
மதுரா.
ஓட்டுனர் வந்து காரில்
ஏறிக் கொள்ள,கார் கிளம்பியது.
மதிவதனன் வீடு நோக்கி
நடக்கத் தொடங்கிய
மதுராவின் கால்கள்
வேகம் கொண்டிருந்தது.
மதி இதற்குத்தான் என்னிடம்
சத்தியம் வாங்கினானா?என்
நன்மை கருதிக் கேட்கிறான்
என்று நினைத்தேனே!
இரு குடும்பத்தைப் பற்றியும்
இவன் யோசிக்கவில்லையா?
திடீரென்று இவனுக்கு
என்னவானது?இப்படி ஒரு
முடிவிற்கு என்ன காரணம்?
ஹாலில் அமர்ந்து அரட்டை
அடித்துக் கொண்டிருந்த
மயூரியும்,முகிலனும் வேக
நடையுடன் வரும்
மதுராவைக் கண்டு,
தங்களுக்குள் ரகசியப்
பார்வையைப் பரிமாறிக்
கொண்டனர்.
காலணியை விட்டு விட்டு,
வீட்டினுள் அடி எடுத்து
வைக்க இருந்த மதுராவை,
“உள்ள வராதே மது”என்ற
மயூரியின் குரல் தடுத்து
நிறுத்தியது.
மதியின் முடிவு அனைவருக்கும்
தெரியுமா?இவர்கள் என் மீது
கடும் கோபத்தில் இருப்பார்கள்.
“ரெடி!ஸ்டார்ட்!ஒன்,டூ,த்ரீ”
இந்த மயூ என்ன செய்கிறாள்
என்று மதுரா யோசிக்கையில்,
“மது மணமகளே!திருமகளே!
வா வா!உன் வலது காலை
எடுத்து வைத்து வா வா!”
என்று கோரஸ் பாடினர்
மயூரியும், முகிலனும்.
மனதில் தோன்றிய
கலக்கம் மறைய,சிரிப்புடன்
வீட்டினுள் சென்றாள் மதுரா.
“பொண்ணு எதுக்கு இங்க
வந்திருக்கு பையா”
“மாப்பிள்ளையைப் பார்க்க
வந்திருக்கு தாயி”
“இந்த ஜக்கம்மா உத்தரவு
இல்லாமப் பார்க்க
முடியாதுன்னு சொல்லு பையா”
“கேட்டுச்சா பொண்ணு”
“ஜக்கம்மா உத்தரவு
கொடுக்க என்ன தட்சணை
கொடுக்கணும்”
“கரெக்டா பாயிண்டைப்
புடிச்சுட்டியே பொண்ணு!
சபாஷ்!குடுகுடுன்னு ஓடிப்
போய் கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல
காஜூ கத்திலி ஒரு நாலு
கிலோ வாங்கிட்டு வந்து
படைச்சு,இந்த ஜக்கம்மா
உத்தரவை வாங்கிக்கோ
பொண்ணு”
“நாலு கிலோ போதுமா
தாயி?உன் சிஷ்யப்
பிள்ளைக்கே அது பத்தாதே!”
“இது என்ன சிஷ்யா?ஏதோ
வாகனச் சத்தம் கேட்கிறது!
ஜக்கம்மா மலை ஏறப் போறா.
டாட்டா டாட்டா.யாரு வர்றது...
அட நம்ம வசந்தகுமாரனா”
“ஜக்கம்மா இப்படியா பயப்படறது”
“ஏய் பொண்ணு,இந்த
ஜக்கம்மாவைப் பார்த்து
பயமான்னு கேட்டுட்டியே!
உனக்கு உத்தரவு
கிடையாது.கிளம்பு
கிளம்பு”
“மதூ...நீ இங்க”உள்ளே
வந்த வசந்தன் ஆச்சர்யப்பட.
“அண்ணி மதி அண்ணாவைப்
பார்க்க வந்திருக்காங்க
வசந்த்.எங்க கிட்ட நின்னு
டைம் வேஸ்ட் பண்ணிட்டு
இருக்காங்க.வா மது”மதுராவின்
தோளைப் பிடித்துச் சென்று
படியருகே கொண்டு
நிறுத்தினாள் மயூரி.
மயூரியின் கன்னத்தைப்
பிடித்துக் கிள்ளி விட்டு
மேலேறிச் சென்றாள் மதுரா.
“மது விஜயம் எதுக்குன்னு
நான் போய் ஒட்டுக்
கேட்டுட்டு வர்றேன் முகிலா”
“மயூக்கா,நீ கண்டிப்பா
ஒரு நாள் அண்ணன் கிட்ட
அடி வாங்குவே பாரு”
“ஏன்டா?நான் நல்ல
எண்ணத்தில தான் ஒட்டுக்
கேட்கறேன்னு சொன்னேன்.
பொடிப் பையா!உனக்கு
அதெல்லாம் புரியாது”
“யாரு பொடிப் பையன்?”
சோபாவில் இருந்த குஷனை
எடுத்து மயூரி மீது
வீசினான் முகிலன்.
“பொடியா!பொடியா!
க்யூட் பொடியா!”என்று
ராகம் போட்டுக் கொண்டு,
தானும் ஒரு குஷனை
எடுத்துத் தம்பி மீது
வீசினாள் மயூரி.
சில நொடிகளிலேயே,
ஒருவரை ஒருவர் தாக்கிக்
கொண்டு,அங்கிருந்த
அத்தனை குஷன்களையும்
வீசி எறிந்து ஹாலை
அலங்கோலப் படுத்தினர்
மயூரியும்,முகிலனும்.
சோபாவில் அமர்ந்து
அவர்கள் சண்டையை
சுவாரஸ்சியமாகப் பார்த்துக்
கொண்டிருந்தாலும்,வசந்தன்
மனதில்,மது ஏன் திடீரென்று
இருட்டாகும் நேரத்தில்
வந்திருக்கிறாள் என்ற
கேள்வி ஓடியது.
எதாவது முக்கியக்
காரணமிருக்கும்.எப்படியோ
மதுவின் வருகை மதியின்
பிரச்சனையைத் தீர்த்து
அவன் வாட்டத்தைப்
போக்கி விடும்.மயூவும்
தன் கவலையை விட்டு
விடுவாள் என நிம்மதி
கொண்டான் வசந்தன்.
தன் மடிகணினியில்
மூழ்கி இருந்த மதிவதனன்,
கதவு தட்டப் படவும்,
தலை நிமிராமலே,
“வா மயூ”என்றான்.
பதில் வராததில் நிமிர்ந்த
மதிவதனன்,கதவருகே
கைகளைக் கட்டிக்
கொண்டு நின்ற
மதுராவைக் கண்டு
முகம் மலர்ந்தான்.
படுக்கையில் இருந்து
இறங்கி அவளருகே
சென்றான்.
“உள்ள வா மது”
“வேலையா இருக்கியா
மதி?சாரி.அப்புறம் செய்.
உன்கிட்ட முக்கியமான
விஷயம் பேசணும்”
“சொல்லுடா.என்னால
நம்பவே முடியலை.எப்படி
மது வந்தே? வீட்டில..”
“எல்லாரும் ஊருக்குப்
போயிட்டாங்க மதி.
நிச்சயத்துக்கு நாலு
நாள் முன்னாடி தான்
வருவாங்க”
“உட்காரு மது”மதுராவிற்கு
சோபாவைக் காட்டி விட்டுத்
தானும் அமர்ந்தான் மதிவதனன்.
மதுரா கட்டியிருந்த
சில்க்காட்டன் புடவையை
ரசனையுடன் பார்த்த
மதிவதனன்,அவள்
கைகளில் இருந்த தங்க
வளையல்களைக் கண்டு
புன்னகை பூத்தான்.
இந்த வளையல்கள்
எங்களுக்குள்
உண்டாகவிருக்கும்
பந்தத்தை நிச்சயப்
படுத்தி விட்டது.இனி
மது என்னுடையவள்!
“இன்னைக்குத் தான்
உன்னை முதல் முறையா
புடவையில பார்த்திருக்கேன்
மது.ரொம்ப அழகா இருந்தே.
இந்தப் புடவையும்
உனக்கு அழகாயிருக்கு”
மதுரா பதில் ஏதும்
சொல்லாமல் அவன்
முகத்தைப் பார்க்க,அவள்
முகத்தின் வாட்டத்தை
அப்போதே கவனித்தான்
மதிவதனன்.
“என்னடா...”
“நீ எதுக்காக வெளிநாடு
போகணும்னு நினைக்கறே
மதி?ஏன் இந்த திடீர் முடிவு?
நீ உன் குடும்பத்தை
எவ்வளவு நேசிக்கறேன்னு
எனக்குத் தெரியும் மதி.
உன்னால உன்
குடும்பத்தைப் பார்க்காம
ஒரு நாள் கூட இருக்க
முடியாது.இதுவும் எனக்குத்
தெரியும்.உன்னோட
உயிரான குடும்பத்தை
விட்டு,கண் காணாத
தூரத்துக்குப் போகணும்கிற
உன்னோட முடிவு உன்னை
எவ்வளவு வேதனைப்
படுத்தும்னும் எனக்குத்
தெரியும்.இப்படி ஒரு
முடிவுக்கு என்ன காரணம்?
அது மட்டும் தான்
எனக்குத் தெரியலை”
அம்மாவிடம் இப்போது
தானே கூறினேன்?
அதற்குள் மதுவிடம்
சொல்லி விட்டார்களா?
“நாம எதுக்காக
வெளிநாடு போகணும் மதி?
உன் மதுவுக்குக் காரணம்
சொல்லு”
சில நிமிடங்கள்
மௌனமாக இருந்த
மதிவதனன்,எழுந்து
சென்று கதவைச் சாத்தித்
தாழிட்டான்.
நான் என்ன கேட்டுக்
கொண்டிருக்கிறேன்?இவன்
எதற்கு கதவைச்
சாத்துகிறான்?
தன்னையே பார்த்துக்
கொண்டிருந்த மதுராவின்
அருகில் சென்று,அவள் கை
பிடித்து எழுப்பினான்
மதிவதனன்.
“என்ன மதி”
“நாளைக்கு நம்ம கெஸ்ட்
ஹவுஸ்சுக்குப் போய்,எல்லா
விஷயத்தையும் பேசி
முடிச்சுடணும்னு நினைச்சேன்.
பரவாயில்லை.இங்கயே
பேசலாம்”
ரெஜீஸ்ஸைப் பற்றி எவரும்
அறியக் கூடாது என்று கெஸ்ட்
ஹவுஸ்சுக்கு அழைத்துச்
செல்ல நினைத்தானா?
மதுராவோடு அவ்வறையினுள்
இருந்த மற்றொரு கதவைத்
திறந்து உள் நுழைந்து,
அக்கதவையும் சாத்தித்
தாழிட்டான் மதிவதனன்.
“தப்பா நினைக்காதே மது.
நாம பேசறதை யாரும்
கேட்கக் கூடாதுன்னு தான்
கதவை சாத்தினேன்.நான்
காரணம் சொல்றேன் மது.
ஆனா முடிவை மாத்திக்க
மாட்டேன்”
“முதல் காரணத்தை
சொல்லு.முடிவை மாத்தறதா,
வேண்டாமான்னு அப்புறம்
பேசலாம்”
“நீ எனக்குப் பிராமிஸ்
பண்ணிக் கொடுத்திருக்கே மது”
“உனக்குத் தெரியுமா மதி?
இது வரைக்கும்,என் அம்மாவுக்கு
ஏகப்பட்டப் பிராமிஸ் பண்ணிக்
கொடுத்திருக்கேன்.ஆனா...
காப்பாத்தினதே இல்லை”
“இது தப்பு மது”
“நான் என் பிராமிஸ்ஸை
எப்பவும் மத்தவங்க
நல்லதுக்காகத் தான் மீறி
இருக்கேன்.அதனால
தப்பில்லை மதி”
மதுராவின் புன்னகையில்,
அவன் காதல் நெஞ்சத்தின்
வலி கூடியது.
இப்புன்னகையை நான் என்
கடைசி நொடி வரை
பார்த்திருக்க வேண்டும்.
“மதூ...”அருகில் நின்றவளை
இறுக அணைத்துக் கொண்டான்
மதிவதனன்.
“உன் மதிக்கு...நீ வேதனைப்
படறதைப் பார்க்க முடியாது.
உன்னைப் பிரிஞ்சு அவனால
வாழ முடியாது.நிச்சயம்
முடியாது மதூ..”
அவன் அணைப்பிலும்,
தவிப்பிலும் பேச்சிழந்து
சிலையென நின்றாள் மதுரா.
“நான் உன்னை இழக்க
மாட்டேன்.உன் மதி உன்னைக்
கஷ்டப்பட விட மாட்டேன்”
நான் நினைத்தது போலவே,
மதி எனக்காகத் தான்
இம்முடிவை எடுத்துள்ளான்.
ஆனால்...காரணம் என்ன?நான்
எதற்கு வேதனைப் படுகிறேன்?
கஷ்டப் பட விட மாட்டேன்
என்றால்...என்ன
சொல்கிறான் இவன்?
தன்னைக் காத்து நிற்பது
போலிருந்த மதிவதனன்
அணைப்பில் கட்டுண்டு
சிந்தனை வசப்பட்டு நின்ற
மதுராவின் மனதில்,
மின்னலாய் அந்த நாள்
வந்து போனது.
தித்திக்கும்


