18
கண்ணே!
உன் வலியை
எங்ஙனம் சகிப்பேனடி?
உன் மீது
காற்று மோதிட
கலங்கிடும் காதலன்
நானடி!
கண்ணே!
உன் வலியை
எங்ஙனம் சகிப்பேனடி?
உன் மீது
காற்று மோதிட
கலங்கிடும் காதலன்
நானடி!
தன்னை அணைத்து நின்ற
மதிவதனன் முதுகை,
ஆதரவாக நீவினாள் மதுரா.
மதிவதனன் முடிவிற்கான
காரணத்தை யூகித்த மதுரா
முகத்தில் சிரிப்பு மீண்டிருந்தது.
“மதீ..”
“என் பேச்சைக் கேட்கறேன்னு
சொல்லு மது”
“கேட்கறேன் கேட்கறேன்.
என் மதி பேச்சு தான்,
என்னோட உயிர் மூச்சு”
மதுராவிடம் இருந்து விலகி
அவள் முகம் பார்த்தான்
மதிவதனன்.
மதுராவின் முகம்
எப்போதும் போல
மலர்ந்திருக்கக் கண்டு,
காரணம் புரியாமல்
விழித்தான் மதிவதனன்.
“இது உன்னோட ஆபிஸ்
ரூம்மா மதி?நீட்டா இருக்கு”
“தேங்க்ஸ் மது”
சற்று முன் வாடியிருந்த
முகத்தில்,எப்படி இத்தனை
மலர்ச்சி?எதற்காக இந்த
சிரிப்பு?
அங்கிருந்த சோபாவில்
அருகருகே அமர்ந்த
மதிவதனனும்,மதுராவும்,
பேச்சைத் தொடங்காமல்,
ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்தபடி இருந்தனர்.
“சொல்லு மதி.என்னால
தான் நீ வெளிநாடு
போகணும்கிற முடிவுக்கு
வந்தயா”பார்வையால்
பேசுவதை விடுத்து
வாய் திறந்தாள் மதுரா.
“.........”
நீ செய்த கொலை தான்
காரணம் என்று என்னிடம்
சொல்லக் கூட என்
மதியால் முடியவில்லை.
“தயங்காம சொல்லு மதி”
“மதூ..ரெஜீஸ்ஸையும்,
அவன் பிரெண்ட்ஸ்ஸையும்...
நீயும் வசந்த்தும்...பிரென்ச்
வின்டோ வழியா...
தோட்டத்துக்கு இழுத்துட்டு
வந்ததை...நான் பார்த்தேன்
மது”சொல்லி
முடிப்பதற்குள்ளாகவே
மதிவதனன் இதயத் துடிப்பு
எகிறியது.
“ரெஜீஸ் அயோக்கியன்
தான்,மோசமானவன் தான்,
எதை செய்யவும்
தயங்காதவன் தான்.
அதுக்காக நீ அவனைத்
தண்டிக்கலாமா?உன்
வாழ்க்கையை நீயே
அழிச்சுக் கிட்டயே மது”
வேதனை படிந்த மதிவதனன்
முகத்தையே இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரா.
“மதூ...நீயும்,வசந்த்தும்
உண்மையை மறைச்சுட்டாலும்...
ஒரு நாள் உண்மை வெளி
வந்துட்டா...நீ..நீ...ஜெயிலுக்குப்
போறதை... என்னால பார்க்க
முடியாது மது.உன்னை இந்த
உலகம் குற்றவாளின்னு
சொல்றதை என்னால
கேட்க முடியாது மது.
உன்னைப் பத்திக்
கண்டபடி கதை எழுதறதை
என்னால தாங்கிக்க
முடியாது மது”
“........”
“உனக்கு ஒரு சின்ன
வலின்னா கூட,உன்
மதியால தாங்க முடியாது
மது.நீ ஜெயிலுக்குப் போய்க்
கஷ்டப் படறதை...என்னால
எப்படித் தாங்கிக்க முடியும்
மது?”
“........”
“உனக்கு எதிரா எந்த
சாட்சியும் இருக்கக்
கூடாதுன்னுதான்...நான்...
அப்ப என் காயத்தைக்
கூடக் காட்டலை.
வசந்த்னால எதாவது
பிரச்சனை வந்துடுமோன்னு
தான்...நான் அவனை வீட்டுக்கே
கூப்பிட்டேன்.அதே மாதிரி
உன்கிட்டப் போன்ல
பேசவும் பயந்தேன்...”
“........”
“எனக்கு...என் மதுவுக்கு
எந்தக் கஷ்டமும் வரக்
கூடாது.அவ எந்த
வேதனையையும்
அனுபவிக்கக் கூடாது.
இந்த உலகம் அவளைப்
பத்தி அபாண்டமா
பேசக் கூடாது.சிறைக்
கம்பிகளுக்குப் பின்னாடி
அவ வாழ்க்கை முடிஞ்சு
போயிடக் கூடாது.என்
மது சிறகொடிஞ்சு
தவிக்கக் கூடாது”
“........”
“உனக்கு எந்தப்
பிரச்சனையும் வரக்
கூடாது,நீ சந்தோஷமா,
நிம்மதியா வாழணும்னு தான்...
இந்த நாட்டில இருந்து
ரொம்ப தூரத்துக்குப்
போயிடணும்னு முடிவு
பண்ணேன் மது”
“மதீ...மதீ...”இதழ்களில்
சிரிப்பும்,கண்களில்
கண்ணீருமாய்,மதிவதனன்
முகமெங்கும் முத்தமிட்ட
மதுரா,அப்படியே அவனை
அணைத்துக் கொண்டாள்.
வெகு நேரம் வரை,மதுரா
தன் கைகளை விலக்கவே
இல்லை!
உலகம் இப்படியே நின்று
போய் விடக் கூடாதா என்று
ஏங்கினான் மதிவதனன்.
நீண்ட பல நிமிடங்களுக்குப்
பிறகு,தன் கைகளை விலக்கி,
மதிவதனன் முகத்தை
அளவில்லாத காதலுடன்
பார்த்தாள் மதுரா.
“கண் காணாமப்
போயிட்டா மட்டும் போலீஸ்
என்னை வி்ட்டுடுமா?
என்னைத் தேடி வராதா”
“நான் உன் அடையாளத்தை
மாத்திடுவேன் மது.
போலீஸ்னால உன்னைக்
கண்டு பிடிக்க முடியாது”
“ஒரு வேளை...கண்டு பிடிச்சுட்டா...”
“என் பணம் பேசும் மது”
“பணத்துக்கு விலை
போகாதவங்களா இருந்தா...”
“உனக்குப் பதிலா நான்
ஜெயிலுக்குப் போவேன் மது”
மதிவதனன் முகத்தைத்
தன் கைகளில் ஏந்தி
ஆசையுடன் பார்த்தாள் மதுரா.
“உன்னை மாதிரி ஒரு
காதலன்..யாருக்கும் கிடைக்க
மாட்டாங்க மதி.கொலைப்
பழியை ஏத்துக்கிட்டு...
ஜெயிலுக்குப் போற அளவுக்கு
எல்லாம்...யாருக்கும்
மனசு வராது மதி.
காதலிக்கிறப் பொண்ணுக்காக
உன் வாழ்க்கையை
அழிச்சுக்கவும் தயாரா
இருக்கிறயே.எப்படி மதீ...”
“நான் பொய்யான காதலைப்
பார்த்துப் பார்த்து மனசு
வெறுத்துப் போயிருந்தேன்.
உண்மையான காதலே இந்த
உலகத்தில இல்லைன்னு
நினைச்சேன்.அது தப்பு!
உண்மையான காதல் என்
மதி ரூபத்தில,இந்த
உலகத்துல வாழ்ந்துட்டுத்தான்
இருக்கு.அந்த உண்மையான
காதல்...எனக்கு சொந்தங்கிறதை
நினைக்கறப்ப ...சந்தோஷமா,
பெருமையா,கர்வமா இருக்கு
மதி.ஐ லவ் யூ மதி.ஐ லவ்
யூ ஸோமச்...”
மதிவதனன் முகத்தின் மீது
மதுரா தொடுத்த முத்தச்சரம்
நீண்டு கொண்டே சென்றது.
இதழ்களுக்கு ஓய்வளிக்க
எண்ணினாளோ மதுரா?தன்
முத்தத்தை நிறுத்தி வி்ட்டுத்
தன் காதலனை இறுகத்
தழுவிக் கொண்டாள்.
காற்றும் இடை வர
விரும்பாத அணைப்பு.
இருவர் ஒருவராய் நின்ற
அணைப்பு.
“மதூ..மதூ..”மதிவதனன்
கரங்களும் இடைவெளியை
விரும்பாமல் அவளைத்
தழுவிக் கொண்டது.
என் மதி இதற்கு மேலும்
வேதனைப் பட,நான் விட
மாட்டேன்.நான் தவறு
செய்து விட்டேன்.
என்னை மன்னித்து விடு மதி.
“மதீ...”மதுரா விலக முயற்சிக்க.
“ம்ஹூம்”
“நான் உடனே திரும்பி
வந்துடுவேன்.என்னைப்
போக விடு மதி”
“சரி”மனமே இல்லாமல்
மதிவதனன் விலக,
கதவைத் திறந்து கொண்டு
மடமடவென்று
வெளியேறினாள் மதுரா.
மது எங்கு செல்கிறாள்?
உடனே வருவதாகச்
சொன்னாளே!வரட்டும்,
தெரிந்து கொள்வோம்.
கண் மூடி அமர்ந்த
மதிவதனன்,சில
நிமிடங்களிலேயே
பொறுமை இழந்து,
அறையில் இருந்து வெளி
வந்து படிகளில்
இறங்கினான்.
மது ஏன் இன்னும்
வரவில்லை?பத்து
நிமிடங்கள் ஆகி இருக்குமே.
ஹாலில் இறைந்து கிடந்த
குஷன்களை எடுத்து வைத்துக்
கொண்டிருந்த வசந்தனைக்
கண்டு அவன் கால்கள்
தேங்கி நின்றது.
மயூவும்,முகியும் எங்கு
சென்றார்கள்?சண்டை
முடிந்தால் எடுத்து
வைக்கிறார்கள்.வசந்த்
ஏன் இதையெல்லாம்
செய்ய வேண்டும்?
“வசு...என்ன பண்றே?
போன் பேசிட்டு வர்றேன்னு
ரூம்முக்குப் போனே?உன்னை
யாரு எடுத்து வைக்கச்
சொன்னது?இந்தப் பொடியன்
பின்னாடி ஓடி டயர்ட்
ஆயிட்டேன் வசந்த்.காபி
குடிச்சுட்டு எடுத்து
வைக்கலாம்னு நினைச்சேன்”
“இப்ப தான் வந்தேன் மயூ.
யாராவது திடீர்னு வந்தா
நல்லாயிருக்காதே மயூ.
அதான் எடுத்து வைச்சேன்”
“சமர்த்து,காபி எடுத்துக்கோ”
“தேங்க்ஸ் மயூ”
மயூரியும்,வசந்தனும்
காபியைக் கொஞ்சம்
பருகி விட்டு,கோப்பைகளை
மாற்றிக் கொள்வதைக் கண்ட
மதிவதனன் சத்தமின்றித்
திரும்பித் தன்னறைக்குச் சென்றான்.
என்ன நடக்கிறது இங்கு?
மயூவும்,வசந்தனும் இப்படி...
இது எப்போது தொடங்கிய
கதை?
மயூ வசந்தன் வரும்
போதெல்லாம் மது வீட்டில்
இருப்பது...தற்செயல்
இல்லையா?மதுவிற்கு
இவர்களைப் பற்றித் தெரியுமா?
என் செல்ல மயூ
காதலிக்கிறாள்.நானோ
மயூவைக் குழந்தை என்று
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
மதி!மயூவுக்கு இருபத்தைந்து
வயது ஆகி விட்டது.நீ இந்நேரம்
அவள் திருமணத்தை
முடித்திருக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு அவள்
குறும்புகளை ரசித்துக் கொண்டு,
அவளைக் குழந்தை குழந்தை
என்று கூறிக் கொண்டிருக்கிறாய்.
வசந்தன் நல்லவன்.அதில்
ஐயமில்லை.மயூவை நன்றாகப்
பார்த்துக் கொள்வான்.ஆனால்...
ரெஜீஸ்?
மதுவிற்காக மட்டுமின்றி
இனி என் தங்கைக்காகவும்
நான் வசந்தனைக் காக்க வேண்டும்.
ஆனால்...நான் பேசிய
பிறகும் மது முகத்தில் தெரிந்த
மலர்ச்சி..! அதிர்ச்சியோ…
கலக்கமோ...எதுவும் மதுவிடம்
தென்படவில்லையே!
அப்படியென்றால்...நான்
தவறாகப் புரிந்து
கொண்டிருக்கிறேனா?ம்ம்...
அதே சமயம் மது
மறுக்கவும் இல்லையே!
“காதல் உன் கண்ணைக்
கட்டி இருக்கிறது மதி”என்று
கேலி பேசுவது போல்
இருந்தது,ஓவியத்தில் சிரித்த
மாயக்கண்ணனின் புன்னகை!
தித்திக்கும்


