கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தித்திக்கும் தீ நீ!-21

Nilaa

Moderator
Staff member
21
என்னோடு
நாடகம் ஏனோ?
உனக்காக
வாழும் இதயம்
நொறுங்காதோ?
காலைப் பொழுதை நெட்டித்
தள்ளிக் கொண்டிருந்தான்
மதிவதனன்.

அலுவலகம் செல்லலாம்
என்றால்,அப்பா வரவே
கூடாது என்கிறார். வீட்டில்
இருந்து என்ன செய்வது?நேரம்
நகர்வேனா என்கிறது.

“மதிணா,ஜூஸ் குடிச்சுட்டு,
கனவைக் கண்டினியூ பண்ணு”

“மயூ,நீ ஜூஸ் கொண்டு
வந்திருக்கே.அம்மா எங்கே?”

“அம்மா ஆபிஸ்சுக்குப்
போயிருக்காங்க பிரதர்.
உன்கிட்ட சொல்லலையா?
உடனே வந்துடுவாங்களா
இருக்கும்.நீ ஜூஸ்ஸைப் பிடி”

நேற்று மது வந்து
சென்றதில் இருந்தே,
அண்ணன் சிரிப்புடன்
இருக்கிறான்.வசந்த்
சொன்னது போல் ஊடல்
தானா?எப்படியோ
மகிழ்ச்சியாக இருந்தால் சரி.

“முகில் என்ன பண்றான் மயூ”

“அவன் அம்மா கூடவே
ஆபிஸ்சுக்குப் போயிட்டான்
மதிணா”

“என்ன அதிசயமாயிருக்கு?
ரெண்டு மணி தானே
அவனோட ஆபிஸ் டைம்?”

“நான் தான் அண்ணன்
ரெஸ்ட் எடுக்கட்டும்னு
அட்வைஸ் பண்ணி
அனுப்பி வைச்சேன் மதிணா”

“அவன் சின்னப் பையன்
மயூ.ஜாலியா இருந்துட்டுப்
போறான்”

“ஆமாம்.பப்பா.பீடிங்
பாட்டில் வாங்கிக் கொடு.
ஏன் மதிணா,அவனுக்கும்
பொறுப்பு வரட்டும்.
நீயே தான் எல்லா
வேலையும் செய்யணுமா?
ஆபிஸ் போய் பழகட்டும் மதிணா”

“என் தங்கச்சியா பேசறது”

“நானே தான்”

“வசந்த் எங்கே?இருக்காரா
வெளியில கிளம்பிட்டாரா?”

“காலையில நேரத்திலயே
கிளம்பிப் போயிட்டார்ணா.
அவர் பிரெண்டு யாரையோ
வழியனுப்பப் போறதா
சொன்னார் மதிணா.
நான் கிச்சன்ல வேலை
நடக்குதான்னு பார்த்துட்டு
வர்றேன்ணா”

வசந்தனைப் பற்றிக்
கேட்டு விடுவேன் என்று
ஓடுகிறாள்.

அநேகமாக வசந்தன்
தினுவை அனுப்பி வைக்கச்
சென்றிருக்க வேண்டும்.நான்
உறங்கிக் கொண்டிருந்ததால்,
தொந்தரவு செய்ய
வேண்டாமென்று சொல்லாமலே
சென்றிருப்பான்.பரவாயில்லை.
அது தான் எந்தப் பிரச்சனையும்
இல்லை என்று ஆகி விட்டதே.

மதுவிற்கு எப்படி ரெஜீஸ்ஸைத்
தெரியும்?மது அங்கு சென்றது..
சிடியை எடுக்கவென்றால்...
யாருடையது?போலீஸ்...அவர்கள்
எப்படி மதுவிற்கு
ஒத்துழைக்கிறார்கள்?யாருக்காக
இந்த அபாயகரமான
நாடகத்தை ஆடினாள்?

மது எப்போதுமே தைரியசாலி
தான்!தற்காப்புக் கலைகளில்
தேர்ச்சி பெற்றவள் வேறு!
தற்போது துப்பாக்கி சுடுவதிலும்
தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.
பத்திரிக்கையில் வேலை
செய்தது வேறு அவள்
துணிச்சலை அதிகப்படுத்தி
இருக்கும்.

ஆபத்தென்று அறிந்தே
துணிச்சலாகக் காதல் நாடகம்
ஆடியிருக்கிறாள்.அதில்
வெற்றியும் பெற்றிருக்கிறாள்.

குறுஞ்செய்தி வந்ததை
கைபேசி அறிவிக்க,
என்னவென்று பார்த்தான்
மதிவதனன்.

பவி தான் அனுப்பி
இருக்கிறான்.அத்தை
வெளியில் சென்று விட்டார்கள்.

ரெஜீஸ் விஷயத்தைப்
பேசி முடித்தால் தான்
என்னால் நிம்மதியாக
இருக்க முடியும்.பவிக்கு
நிச்சயம் தன் அக்காவின்
ரகசியங்கள் தெரிந்திருக்கும்.
பார்ப்போம்.

டுத்த பத்து நிமிடங்களில்,
மதுரா வீட்டில் இருந்தான்
மதிவதனன்.

என்ன கதவு திறந்திருக்கிறது?
அக்காவும்,தம்பியும் கதவைத்
திறந்து வைத்து விட்டு,
உள்ளே என்ன செய்கிறார்கள்?

“மது,பவி”

என்ன இது?பதிலே இல்லை!
மேல் தளத்தில் இருக்கிறார்களா?

முன்கதவைச் சாத்தித்
தாழிட்டு விட்டு மேல்
தளத்திற்குச் சென்றான் மதிவதனன்.

மது ரூம் திறந்திருக்கிறது.
மது இல்லை போலிருக்கிறதே!

“பவி பவி”அருகிருந்த
பவித்திரனின் அறைக்
கதவைத் தட்டினான் மதிவதனன்.

கதவைத் திறந்த பவித்திரன்,
“மாமா...வாங்க”
என்றான் தன் கைபேசியை
அணைத்து சட்டைப்பையில்
வைத்தபடி.

“நல்லாயிருக்கு.திருடனுக்கு
நீயே கதவைத் திறந்து
வைச்சிருக்கியா? என்ன பவி
இது?கதவைத் திறந்து வைச்சுட்டு
நீ இங்க உட்கார்ந்து போன்
பேசிட்டு இருக்கே?காலம்
எவ்வளவு கெட்டுக் கிடக்குது”

“சாரி மாமா.அக்கா வெளியில
கிளம்பினா..அவளை அனுப்பிட்டு...
போன் அடிச்சனால...
சாத்தாமயே வந்திருப்பேன்னு
நினைக்கிறேன்”

“இனிமேல் ஜாக்கிரதையா
இரு பவி.மது எங்க போயிருக்கா?”

“திடீர்னு ஏடிஎம் வரைக்கும்
போயிட்டு வந்துடறேன்னு
சொல்லிட்டுக் கிளம்பிட்டா
மாமா.இப்ப வந்துடுவா மாமா”

“சரி.நான் வெயிட் பண்றேன்”

“நீங்க அக்கா ரூம்ல
உட்காருங்க மாமா.நான்
சாப்பிட எதாவது கொண்டு
வர்றேன்”

“வேண்டாம் பவி.நான்
கீழ வெயிட் பண்றேன்.
மது இல்லாதப்ப அ..”

“அதெல்லாம் அக்கா
ஒண்ணும் சொல்ல மாட்டா
மாமா.நீங்க வாங்க”

மதிவதனன் கைப் பிடித்து
அழைத்துச் சென்று மதுரா
அறையில் அமர வைத்தான்
பவித்திரன்.

“இங்கயே இருங்க.நான்
ஜூஸ் போட்டுக் கொண்டு
வர்றேன்”

“அதெல்லாம் வேண்டாம் பவி”

“அவ்வளவு தான்.வீட்டுக்கு
வந்த மாப்பிள்ளையை
கவனிக்கலைன்னு என்னை
அடி பின்னிடுவாங்க மாமா”

பவித்திரன் சென்று விட,
அவ்வறையைச் சுற்றி வந்தது
மதிவதனனின் பார்வை.அன்று
சரியாகவே பார்க்கவில்லை.

மதுவிற்கு லைட் கலர்ஸ்
தான் விருப்பமா?தினமும் இந்த
ராதாகிருஷ்ணன் பெயிண்டிங்கில்
தான் கண் விழிப்பாளோ?

அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடி
அவனை ஈர்க்க,எழுந்து அதன்
முன் சென்று நின்றான் மதிவதனன்.

மேக்கப் ஐட்டங்கள் குவிந்து
கிடக்கிறது.ஆனால் மதுவைப்
பார்த்தால் மேக்கப்
போட்டிருப்பதே தெரிவதில்லை.

ஷெல்ப் அருகே நகர்ந்த
மதிவதனன்,ஒரு வரிசையில்
இருந்த நான்கைந்து மாத
பத்திரிக்கைகளை எடுத்துச்
சென்று அமர்ந்து புரட்டத்
தொடங்கினான்.

மது பத்திரிக்கை
வேலையை விட்டாலும்,
இன்னும் பத்திரிக்கைகளில்
எழுதிக் கொண்டு தான்
இருக்கிறாள்.

எடுத்தவற்றை அதே
இடத்தில் வைத்து விட்டு,
அருகில் இருந்த பெரிய
ஆல்பத்தை எடுத்து,
அங்கேயே நின்று கொண்டு
புகைப்படங்களைப்
பார்க்கலானான் மதிவதனன்.

மதுவின் குடும்பம் பெரிது.
எப்போதும் ஏதேனும் ஒரு
விசேஷம்,கொண்டாட்டத்திற்குக்
குறைவே இருக்காது.

பாதி பக்கங்கள்
குடும்பத்தினரால் நிறைந்திருக்க,
மீதியை மதுராவின்
நண்பர்கள் அலங்கரிக்கத்
தொடங்கினர்.

ஆண்களும்,பெண்களுமாக
இத்தனை பேர்...
மதுவுடன் கல்லூரியில்
பயின்றவர்களா?

இந்தப் பெண்கள்...மதுவின்
நெருங்கிய தோழிகளோ?

இதூ...வசந்தன்!அப்போது
ஒல்லியாக இருக்கிறான்.
இப்போது ஆளே மாறி
விட்டான்.இது வசந்தன்
குடும்பத்தினரோ?

இந்தப் படம்...மதுவுடன்
பணியாற்றியவர்களாக
இருக்க வேண்டும்.

ஒவ்வொரு புகைப்படமாகப்
பார்த்து,தனக்குத் தானே
விளக்கம் சொல்லிக்
கொண்டு வந்த மதிவதனன்,
அப்புகைப்படத்தைப்
பார்த்து யாராக
இருக்குமென்று யோசித்தான்.

மதுவையும்,வசந்தனையும்
தோளோடு அணைத்துக்
கொண்டு நடுவில் நிற்கும்
இந்த மனிதர் யார்?

புகைப்படத்தை ஊன்றிப்
பார்த்த மதிவதனனுக்கு
உண்மை புலப்பட்டது.
புலப்பட்ட உண்மையில்
அவன் கைகள் தானாக
ஆல்பத்தை மூடி வைத்தது.

மெல்லச் சென்று சோபாவில்
அமர்ந்து கண்களை மூடினான்
மதிவதனன்.

அவன் மனதில் இருந்த
கேள்விகளுக்கு எல்லாம்
அவனுக்கு எளிதாகப்
பதில் கிடைத்தது.

வருத்தமான முறுவல்
ஒன்று மதிவதனன்
உதட்டோரம் தோன்றியது.
நெஞ்சத்தில் கனம் ஏறியது.


தித்திக்கும்❤️❤️❤️
 
Top