கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தித்திக்கும் தீ நீ!-3

Nilaa

Moderator
Staff member
3
என்றோ தொலைந்து போனேன்
உன்னில்!
அறியாது போனாயே
கண்ணே!
பொருளற்றுப் போனதோ
என் காதல்?

டும் வெயில் நேரத்தில்,
திடீரென்று காற்று பலமாக
வீசி,வெயிலின் உக்கிரத்தைத்
தணித்தது.

மதுராவைத் தொடர்ந்து
கொண்டிருந்த மதிவதனன்,
அவள் கார் ஒரு சிறிய
உணவகத்தின் முன் நிற்கக்
கண்டு,தானும் காரை
நிறுத்தி விட்டு இறங்கினான்.

மனதில் கோபம் எழுந்தாலும்,
அதை மறைத்துக் கொண்டு,
மதுராவுடன் காரில் இருந்து
இறங்கிய மகேந்திரன் பார்வை
சுற்றிலும் சுழன்று அலசியது.

“எதுக்குக் காரை நிறுத்த
சொன்னே பேபி.காபி
வேணுமா”

“காபியா?எனக்குப்
பசிக்குது மகேன்”

“இன்னும் கொஞ்சம் தூரம்
தான்.வீட்டுக்குப் போய்
சாப்பிட்டுக்கலாம் டியர்”

“என்னால பசி தாங்க
முடியாது மகேன்.காலையில
அவசரத்துல சரியாவே
சாப்பிடலை.எனக்கு
மயக்கம் வருது”

“சரி சாப்பிடலாம்.வா”
என்று வேண்டா வெறுப்பாக
அவளுடன் உணவகத்தினுள்
சென்றான் மகேந்திரன்.

என் இடம் செல்லும் வரை,
இவள் சொல்வதைக்
கேட்டாக வேண்டும்!

எதிரெதிர் இருக்கையில்
அமர்ந்த மதுராவும்,
மகேந்திரனும் கூட்டமின்றி
இருந்ததால்,உடனே
கவனிக்கப்பட்டு,உணவும்
வந்தது.

பதினொன்றை தான்
ஆகிறது!அதற்குள் இவளுக்கு
சாப்பிட வேண்டுமா என்று
மனதிற்குள் மதுராவைத்
திட்டித் தீர்த்தான் மகேந்திரன்.
எவர் கண்ணிலும் படாமல்
சீக்கிரம் சென்று விட
வேண்டும்!

“சாப்பிடுங்க மகேன்”

“சாப்பிடறேன்.உன்
வீட்டில என்ன சொல்லிட்டு
வந்தேடா”

“பிரெண்ட் பர்த்டேன்னு
சொன்னேன் மகேன்”

“தேங்க்ஸ்டா.எனக்காக
வந்ததுக்கு.என் மேல
உயிரையே வைக்கிற
காதலி கிடைப்பான்னு
நான் நினைச்சதே இல்லை.
இவ்வளவு பேரழகியான
பொண்ணு என்னைக்
காதலிப்பான்னு நான்
கனவுல கூட
நினைச்சதில்லை”

“...........”

“நீ எனக்குக் கிடைச்சது,
என்னோட அதிர்ஷ்டம்
தான் டார்லிங்”

“பேசாம சாப்பிடுங்க
மகேன்”

“உன் வீட்டில என்னை
ஏத்துக்குவாங்களா?
என்னால நீ இல்லாம
வாழ முடியாது டியர்”

“இதெல்லாம் நாம
வீட்டுக்குப் போய்
பேசிக்கலாம் மகேன்”

“இதை மட்டும்
சொல்லிடறேன்டா.நீ
எனக்குக் கிடைக்கலைன்னா...
நான் உயிரோடவே
இருக்க மாட்டேன்”

“என்ன மகேன் இ...”காதில்
கேட்ட பழக்கப்பட்ட அந்தப்
பாடலில்,சட்டென்று திரும்பிப்
பார்த்த மதுராவின் விழிகள்
வியப்பில் விரிந்தது.

“மதி”என அவள் உதடுகள்
முணுமுணுத்தது.

இது மதி தான்!கடவுளே!
இவன் இங்கு எப்படி?

மதுரா யோசிக்கையில்,
அவள் பின்னால் இருந்த
இருக்கையில் அமர்ந்திருந்த
மதிவதனனும் போனை
அணைத்து விட்டுத் திரும்பி
அவளைப் பார்த்தான்.

“மதீ...நீ இங்க...”மதுராவின்
முகத்தில் பதட்டம்
தென்பட்டது.

“இந்தப் பக்கம் ஒரு
வேலையா வந்தேன் மது”

கடவுளே!மதி மகேன்
பேசியதைக் கேட்டிருப்பானா?

“பயப் படாதே.உன் அம்மா
கிட்ட சொல்ல மாட்டேன்”

இந்த லூசு யாரிடம்
பேசுகிறது?யார் இவன்?
இது என்ன புதுத்
தொல்லை!எங்கிருந்து
வந்து தொலைந்தான்
இவன்?

“இவர் யாரு அஞ்சு?
உனக்குத் தெரிஞ்சவரா?”

“ஆமாம் மகேன்.எங்க
வீட்டுப் பக்கத்தில
தான் இவரோட வீடு
இருக்கு”

“ஹலோ சார்”என்ற
மகேந்திரன் புன்னகையை,
மதிவதனனால் சகிக்க
முடியவில்லை.

“ஹலோ!நீங்க சாப்பிடுங்க.
இன்னொரு நாள்
பேசலாம்.பை”

அங்கு நிற்கவே
பிடிக்காதவனாய் வெளியேறினான்
மதிவதனன்.

அப்பாடி!சென்று விட்டான்
என மகேந்திரனோடு,
மதுராவும் நிம்மதி
அடைந்தாள்.

“ஏன் இப்படி ஓடறார்?
நம்ம கூட உட்கார்ந்து
சாப்பிட்டுப் போயிருக்கலாம்”
என்று வெளியில் சொல்லி,
உள்ளூரக் குதூகலித்தான்
மகேந்திரன்.

“எதாவது முக்கியமான
வேலை இருக்கும் மகேன்.
போனா போகறார் விடுங்க”

“நீ கொஞ்சம் சீக்கிரம்
சாப்பிடு பேபி.
கிளம்பலாம்.என்
பிரெண்ட்ஸ் வெயிட்
பண்ணிட்டு இருப்பாங்க”

“ம்”

கடைசி நேரத்தில் அந்தப்
புதியவனால்,எங்கே என்
திட்டம் பாழானதோ என்று
பயந்து விட்டேன்.ஏழு
மாத கால காதல்
நாடகத்திற்கு,இன்று
பயன் கிடைத்து விடும்.

மதிவதனன் அப்படி உடனே
கிளம்பியதில்,ரெஜீஸ்
குதூகலிக்க,நிம்மதியோடு,
ஒரு வேதனையும்
மதுராவினுள் நிறைந்தது.

உணவகத்தில் இருந்து
வெளியேறி,மறைவாக
நிறுத்தப் பட்டிருந்த தன்
காரில் ஏறி அமர்ந்தான்
மதிவதனன்.

தன் உலகமே இருண்டு
போனதாய் உணர்ந்த
மதிவதனன் நெஞ்சம்
சொல்லொணாத வேதனை
கொண்டது.

கடவுளே!இது நிஜம்
தானா?கனவாக
இருக்கக் கூடாதா?

என் காதலைச் சொல்ல
நான் தாமதித்து விட்டேனா?

என் வாழ்க்கை
அர்த்தமற்றுப் போய்
விட்டதா?

என்னைப் பார்த்தவுடன்
உன் முகம் மலருமே!அது
எதனால்?உன் விழிகள்
என்னிடம் காதல்
சொல்வதாய் நான்
உணர்ந்ததெல்லாம்...
உன் மீது பித்தம்
கொண்டிருக்கும் என்
மனதின் கற்பனையா?

நமக்குள் இருப்பது...நட்பு
மட்டும் தானா?

மது!என் மது!நீ
என்னுடையவள் இல்லையா?

காரின் இருக்கையில்
தலை சாய்த்த
மதிவதனன்,மதுராவையும்,
மகேந்திரனையும்
நினைத்துப் பார்த்தான்.

ம்ஹூம்!கொஞ்சம் கூடப்
பொருத்தமில்லை!

இவனையா நீ
காதலிக்கிறாய் மது?

தோற்றத்தை விட்டு
விடலாம்.குணம்?
அதுவும் சரியில்லை
போலிருக்கிறதே!

அவனிடம் ஏதோ
தப்பிருப்பதாக எனக்கு
ஏன் தோன்றுகிறது?
பொறாமையினாலா?

மது புத்திசாலி!அவள்
தேர்வு சரியாகவே
இருக்கும்.சரியானதாகவே
இருக்கட்டும்.

காதல் ஈடேறாத
துன்பத்தை அவள்
அறிய வேண்டாம்!

தன் அருகில் இருக்கையில்
வைத்திருந்த கிப்ட்
பார்சலையும்,ரோஜா
பூங்கொத்தையும்
கையில் எடுத்துப்
பார்த்தான் மதிவதனன்.

வாடிய அவன் வதனத்தைக்
கண்டு பரிதாபம் கொண்டது,
அவன் மதுராவிற்காக
வாங்கி வந்திருந்த சிவப்பு
ரோஜாக்கள்!


தித்திக்கும்❤️❤️❤️



ஹாய் பிரெண்ட்ஸ்,

மூன்றாம் அத்தியாயம்
கொடுத்துள்ளேன்.வாசித்து
உங்கள் கருத்தைப் பகிர்ந்து
கொள்ளுங்கள்
தோழமைகளே.நன்றி🙏🙏

ப்ரியமுடன்,
நித்திலா:)

 
Top