4
பால் நிலா ஒன்று
புதைகுழியில்!
மீண்டிடுமோ?
உயிர் தேய்ந்திடுமோ?
கார் மீண்டும் ஓடத் பால் நிலா ஒன்று
புதைகுழியில்!
மீண்டிடுமோ?
உயிர் தேய்ந்திடுமோ?
தொடங்கி இருந்தது.
அத்தனை நேரமும்
உள்ளுக்குள் இருந்த
பதற்றம் மறைய,
நிம்மதியாக மூச்சு
விடத் தொடங்கினான்
மகேந்திரன்.
இன்னும் கொஞ்ச தூரம்
தான்.எப்படியோ எந்தப்
பிரச்சனையுமின்றி வந்து
சேர்ந்தாகி விட்டது.
“பாவம் அந்த மொபைலுக்குக்
கொஞ்சம் ரெஸ்ட் கொடுடா”
“பழகிடுச்சு மகேன்.அஞ்சு
நிமிஷத்துக்கு மேல
என்னால மொபைல்லைப்
பார்க்காம இருக்க முடியாது”
குனிந்த தலை நிமிராமல்
செல்லில் மூழ்கித்தான்,
உன் போன்ற பெண்கள்,
என்னைப் போன்றவர்களின்
வலையில் விழுகிறார்கள்!
கார் எங்கு செல்கிறது
என்று கூடக் கவனிக்காமல்...
இப்படியே இரு!அது
தான் எனக்கு நல்லது.
புதிதாக உருவாகிக்
கொண்டிருந்த குடியிருப்புப்
பகுதியில் அங்கொன்றும்
இங்கொன்றுமாக சில
வீடுகள் இருக்க,முழுக்க
முழுக்க முட்காடாய்
காட்சி அளித்த அந்தப்
பிரதேசத்தினுள் நுழைந்த
மகேந்திரன் கார்,ஒரு
பெரிய வீட்டின் முன்
சென்று நின்றது.
“இறங்கு,வீடு வந்தாச்சு”
மகேந்திரன் குரலில்
காரில் இருந்து இறங்கிய
மதுரா,அப்போதே
சுற்றுப்புறத்தைக்
கவனித்தாள்.
“என்ன மகேன் இது?
காடு மாதிரியிருக்கு”
“ம்.ரெண்டு மூணு
வருஷம் போனா
டெவலப் ஆயிடும்.வா,
உள்ள போய் பேசலாம்”
போர்டிகோவில்
பூந்தொட்டிகள் அழகுடன்
மிளிர,அதைக் கடந்து சென்று,
அழைப்புமணிக்கான
ஸ்விட்சை அழுத்தினான்
மகேந்திரன்.
கதவு திறக்க,“வந்துட்டியா
மகேன்,உள்ள வாங்க
சிஸ்டர்”என வரவேற்றான்
ஒருவன்.
“இவன் என் பிரெண்ட்
ரவி அஞ்சு”
“ஹாய்”
“ஹாய்”
“வலது காலை எடுத்து
வைச்சு உள்ள வாடா”
ம்க்கும்!இவன் நடிப்பிற்கு
அளவில்லாமல் போய்க்
கொண்டிருக்கிறது என
நினைத்தவனாய் மதுராவின்
மீது தன் பார்வையைப்
பதித்த ரவி,இம்முறை
தங்களுக்குப் பெரிய
அதிர்ஷ்டம் அடித்திருப்பதாய்
பேரானந்தம் கொண்டான்.
அலங்காரமாகத் தொங்க
விடப் பட்டிருந்த
பலூன்களையும்,நடுஹாலில்,
மேஜை மீது வைத்திருந்த
கேக்கையும் மதுரா
பார்க்க,அவளையே பார்த்த
ரவியின் பார்வையில்,
அவள் அழகினால் ஏற்பட்ட
பிரம்மிப்பும்,ஆவலும்
அப்பட்டமாகத் தெரிந்தது.
“இன்னொரு பிரெண்டும்
வந்ததும்,கேக் கட்
பண்ணலாம் பேபி”
வாட்ச்சைப் பார்த்த
மதுரா,“சரி மகேன்.
உங்க பிரெண்ட் வர்ற
வரைக்கும்,எனக்கு உங்க
வீட்டை சுத்திக்
காட்டறீங்களா”என்றாள்.
இவளோடு ஒரே
தொல்லையாகப் போய்
விட்டது.
“தாராளமா!இது நீ
வாழப் போற வீடு.
கண்டிப்பா பார்க்கணும்”
ஒரு சின்ன சிரிப்புடன்
தன் பார்வையைச் சுழல
விட்டாள் மதுரா.
ஹாலில் நிற்கையிலேயே
கிச்சன்,டைனிங் ரூம்மோடு,
மூன்று படுக்கை அறையும்
நன்றாகத் தெரிந்தது.
ஒவ்வொரு அறையின்
முன்னும்,கதவே தெரியாமல்
திரைச்சீலைகள் தொங்க
விடப் பட்டிருந்தது.
ஒவ்வொரு அறையாகக்
காட்டி விட்டு,மூன்றாவதாக
இருந்த படுக்கையறைக்கு
மதுராவை அழைத்துச்
சென்றான் மகேந்திரன்.
மற்ற அறைகள் போல
சிறிதாக இல்லாமல்,
அந்த அறை பெரிதாக
இருந்தது.நடுவில்
பெரிய கட்டிலும்,அதன்
வலதுபுறத்தில் சோபா
செட்டும் போடப்
பட்டிருந்தது.
“முகம் கழுவறதுன்னா
கழுவிக்கோ”என்றான்
குளியலறையைக் காட்டி.
“இல்லை.வேண்டாம்”
அறையை சுற்றிப் பார்த்துக்
கொண்டிருந்த மதுரா,
சோபா பின்னால் அசைந்த
திரைச்சீலை கண்டு
அங்கு சென்றாள்.
“இது என்ன ரூம் மகேன்”
“அது ஸ்டோர் ரூம்
டார்லிங்.பழைய பொருள்
எல்லாம் போட்டு
குப்பையா கிடக்குது.
கரப்பான்பூச்சி,எலி
எல்லாம் இருக்கும்...”
“ஐயே”என முகம் சுளித்து,
விலகிச் சென்று சோபாவில்
அமர்ந்தாள் மதுரா.
இவளை அதிக நேரம்
சுயநினைவோடு இருக்க
விடக் கூடாது!
“மகேன்,சிஸ்டர் ஜூஸ்
எடுத்துக்கங்க”என்று அவன்
கவலையைத் தீர்ப்பவன்
போல் வந்தான் ரவி.
ரவி கண் ஜாடை
காட்டியதில்,ஜூஸ்
டம்ளரை எடுத்து
மதுராவின் கையில்
கொடுத்தான் மகேந்திரன்.
“தேங்க்ஸ் மகேன்”
“ரவி,காரை உள்ள
கொண்டு வந்து
நிறுத்திடு”என அவனை
அனுப்பி விட்டு,மதுராவின்
அருகில் நெருங்கி
அமர்ந்தான் மகேந்திரன்.
“நம்ம பெட்ரூம்
பிடிச்சிருக்கா டார்லிங்”
“பிடிச்சிருக்கு மகேன்.
இந்த ரூம்முக்கு அழகே,
அதோ அந்த பிரென்ச்
வின்டோ தான்”என்று
விட்டு ஜூஸ்ஸைப் பருகப்
போன மதுரா,நினைவு
வந்தவளாக நிமிர்ந்தாள்.
“மறந்தே போயிட்டேன்
மகேன்.உங்க அப்பா,அம்மா
எங்கிருக்காங்க,எப்ப
வருவாங்கன்னு கேளுங்க
மகேன்”என்று சொல்லி
அவனைத் திடுக்கிடச்
செய்தாள் மதுரா.
“ஆங்..கேட்கறேன்...”தன்
சட்டைப்பையைத்
தடவியவன்,“போனை
எங்க வைச்சேன்...நீ
ஜூஸ் குடி பேபி.நான்
பேசிட்டு வர்றேன்”என
எழுந்து ஹாலிற்குச்
சென்றான்.
சில நிமிடங்களில்
திரும்பி வந்தவன்,“நாலு
தடவை கூப்பிட்டதுக்கு
அப்புறம் எடுக்கறாங்க.
லேட்டாகும்னு சொன்னாங்கடா.
அடுத்த தடவை வரும்
போது பார்த்துக்கலாம்.
கவலைப் படாதே”என்றான்
அவள் அருகில் அமர்ந்து.
“ம்”
மதுரா ஜூஸ்ஸைக்
குடித்து முடிக்க
இருப்பதைக் கண்டு,தன்
திட்டம் வெற்றி பெற்று
விட்டதாய் எண்ணி
மகிழ்ந்தான் மகேந்திரன்.
காலி டம்ளரை மதுராவின்
கையில் இருந்து
வாங்கியவன் முகமூடி
கலைந்து,அவன் பார்வை
மாறியது.
“நான் அந்த பிரென்ச்
வின்டோவைத் திறந்து
பார்க்கட்டுமா மகேன்”
“பாரு பேபி.கேட்கணுமா”
என்றான் வஞ்சகச்
சிரிப்புடன்.
மதுரா பிரென்ச்
வின்டோவைத் திறப்பதையும்,
தோட்டத்திற்குள் சென்று
பார்ப்பதையும்,சோபாவில்
அமர்ந்தபடியே
பார்த்திருந்தான் மகேந்திரன்.
தோட்டத்தில் இருந்து
உள்ளே வந்த மதுரா,
தலையைப் பிடித்துக்
கொண்டு சென்று,அதே
சோபாவில் அமர்ந்தாள்.
“என்னடா”என்றான்
ஒன்றும் அறியாதவன்
போல.
“தெரியலை மகேன்.
திடீர்னு என்னவோ
மாதிரியிருக்கு”
“கொஞ்ச நேரம் படுத்து
ரெஸ்ட் எடு.சரியாயிடும்.
வா”அவள் கையைப்
பிடித்தான் மகேந்திரன்.
“விடுங்க..நானே வர்றேன்”
மெல்லச் சென்று
படுக்கையில் அமர்ந்த
மதுரா,மகேந்திரன்
முகத்தைப் பார்க்க,அவன்
முகம் மெல்ல மெல்லத்
தெளிவற்றுப் போனது.
விழிகள் மூடத் துடிக்க,
படுக்கையில் சரிந்தாள்
மதுரா.
மதுராவின் அருகில்
அமர்ந்த மகேந்திரன்,அவள்
தோளில் இருந்த
கைப்பையைக் கழட்டி,
அருகே இருந்த சோபாவில்
விழும்படி வீசினான்.
அடுத்ததாய்,மதுரா தன்
கழுத்தைச் சுற்றிப்
போட்டிருந்த நீல நிற
ஸ்டோல்,மகேந்திரன்
கைக்கு இடம் மாறியது.
தித்திக்கும்



ஹாய் பிரெண்ட்ஸ்,
நான்காம் அத்தியாயம்
பதிந்து விட்டேன்.
வாசிப்பதோடு உங்கள்
கருத்தையும் பகிர்ந்து
கொள்ளுங்கள் தோழமைகளே.
மனமானது நிறைவு
கொள்ளும்.நன்றி


அன்புடன்,
நித்திலா