கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துணையாக நான் வருவேன் 11

Akila vaikundam

Moderator
Staff member
‌11


வேதா கொஞ்சம் நில்லு


என்னங்


ஒரு கப் காஃபி கிடைக்கு


இருங்க கொண்டு வரச்சொல்லறே



இல்ல சர்வன்ட் போட வேணாம் உன் கையால எனக்கு ஒரு காஃபி கிடைக்குமா என்று கேட்கவும் சில வினாடிகள் என்ன பேசுகிறான் என்று புரியாமல் விழித்தா


புரிந்ததும் நெற்றியை சுருக்கி ஆச்சரியமாக என்ன இது புதுசா என்றா


இல்ல எப்படியிருந்தாலும் இன்னும் ரெண்டு நாள்ல இங்கிருந்து போயிடுவ அதான் ரயில் சினேகம் மாதிரி உன்னோட ஒரு கப் காஃபி குடிக்கணும்னு ஆசையா இருக்கு எனக்கு உனக்கும் சேர்த்து எடுத்துட்டு வர்றியா என்று கேட்டவனுக்கு மறுக்கத் தோன்றாமல் சமையலறைக்குச் சென்று அவனுக்கும் இவளுக்குமாக காஃபி எடுத்து வந்தா


அவனது அறையின் லாபியில் வேதாவை அமர வைத்தவன் ... இருவருக்கும் அவனே காஃபியை கலக்கி வேதாவின் கையில் ஒன்றை திணித்தா


பிறகு அவன் கையிலிருக்கும் காஃபியை பார்த்தபடியே பேசத் தொடங்கினா


கல்யாணத்துக்கு வந்த சொந்த காரங்க எல்லாருமே அம்மா கோவிலுக்கு போனதும் கிளம்பிட்டாங்க... எனக்குத் தெரிஞ்சு என்னோட வீடு என்னைக்குமே இவ்வளவு அமைதியா இருந்ததே கிடையாது தெரியுமா

எப்பவுமே யாராவது வந்துட்டும் போய்ட்டும் இருப்பாங்க அது மட்டுமில்லாம எங்க வீட்டு டைனிங் ஹாலில் எப்பவுமே யாராவது உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க ஆனா அது இந்த மூணு அது நாளா சுத்தமாகவே இல்லை எப்பவும் பரபரப்பா பாத்துட்டு இருந்த வீடு இப்படி அமைதியா இருக்கும் போது மனசு என்னவோ பண்ணுது வே




அதுமில்லாம பர்ஷனலா என் லைஃப் கடந்த ரெண்டு நாளா ரொம்ப போரிங்கா போகுது….வீட்ல யாரும் இல்லனதும் இங்க இருக்கவே பிடிக்கல…ஆஃபிஸ் போகலாம்னு பாத்தா அம்மா இன்னும் ரெண்டு நாளைக்கு போககூடாதுனு ஸ்ரிக்ட்டா சொல்லிட்டாங்க...எனக்கு ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப கம்மி...எல்லாருமே வேலைக்கு போறதால அவங்களையும் பாக்க முடியல... அதான் உன்னோட ப்ரண்ட் ஆகலாம்னு நினைக்கிறேன். இங்கிருந்து நீ போற வரைக்கும் உன்கிட்ட ஒரு நல்ல நட்போட பழகலாம்னு முடிவு பண்ணிட்டேன் என்று மாறன் கூறிய எல்லாவற்றையும் பொருமையாக கேட்ட வேதா அவளின் காஃபியை பருகியபடி


ஆனா எனக்கு உங்களோட நட்பு தேவை படலங்க என் வாழ்க்கையோட மிகப்பெரிய கசப்பே நம்ம கல்யாணம் தான் அது நடக்க காரணமாயிருந்தது இந்த குடும்பமும் நீங்களும் தா



என்ன தான் எனக்கு பிடிக்காம நடந்தது கட்டாயப்படுத்தி நடந்ததுனு சொன்னாலும் நீங்க இன்னும் குழந்தை கிடையாது முப்பது வயசு தாண்டின ஒரு ஆம்பள இந்த வயசுல கூட உங்களோட தனிப்பட்ட முடிவை சுயமா எடுக்க தெரியாத உங்களை காலத்துக்கும் என்னால மன்னிக்க முடியா



உங்க சுயநலத்துக்காக பலியானது என்னோட வாழ்க்கை…. பாதிக்கப்பட்டது நான்….அதை என்னைக்குமே மறந்திடாதீங்க….இங்கிருந்து போறதுக்குள்ள இதை உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் பரவால்ல இப்பவே சொல்ல வேண்டியதா ஆயிடுச்சு என்று கூறியபடி அவளின் காலி கோப்பையை வைத்துவிட்டு தாத்தாவின் அறையை நோக்கிச் சென்

அவளின் வார்த்தையில் நியாயம் இருந்ததால் அவளின் மீது கோபம் வரவில்லை... அவனின் மீது கோபமும் அவளின் மீது பரிதாபமும் வந்தது
இயலாமையில் செல்லும் அவளையே மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தான்



ஆனாலும் அவளை இந்த மனநிலமையில் அவளின் வீட்டிற்கு அனுப்ப அவனின் மனம் இடம் கொடுக்க வில்லை... எப்படியாவது அவளின் மனதை சற்றேனும் சாந்தப்படுத்தி ஏதாவது ஒரு நல்ல நிகழ்வினை எடுத்துச் செல்லும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்


மீண்டும் மதிய வாக்கில் அவளிடம் சாதாரணமாக சென்று உனக்கு சென்னையில் ஏதாவது இடம் பாக்கணும்னு ஆசை இருக்கா நான் உன்னை கூட்டிட்டு போகவா என்று கேட்டா

இது போல என்கிட்ட பேசி நீங்க செஞ்ச தப்பை சரி செய்யலாம்னு பாக்குறீங்களா…?அது என்னைக்குமே சரி ஆகாது... தெரியாம செஞ்ச தப்பை தான் சரி செய்யமுடியும்


தெரிஞ்சே பண்றதை என்னைக்குமே சரி செய்ய முடியாது நீங்க செஞ்ச தப்பை சரி பண்ணிக்கனும்னு நினைச்சீங்கன்னா காலம் முழுக்க என்ன சகிச்சிகிட்டு என்னோட குடும்பம் நடத்த வேண்டியது வரு


நீங்க என்னை சகிச்சிக்க தயாரா இருந்தா கூட என்னால உங்களை என்னைக்குமே சகிச்சிக்க முடியாது என்னை பிடிக்காதுனு சொன்ன ஒருத்தரை எப்பவுமே எனக்கும் பிடிக்காது அதனால இந்த மாதிரி எல்லாம் உங்களோட ஈகோவை விட்டுட்டு என் கிட்ட வந்து கேட்கணும்னு அவசியமில்லை என்று கூறி முடித்தா



சற்று சிரித்த மாறன் நல்லா பேசற... கண்டிப்பா உன் அளவுக்கு எனக்குத் பேச வராது...அதை நான் ஒத்துகிட்டே ஆக


எனக்கு தெரிஞ்சதெல்லாம் ரெண்டே விஷயம் தான் ஒன்னு கோபபடறது...அடுத்தது எல்லாத்துக்கும் கத்தறது... உன் அளவு பக்குவம் எனக்கிருந்தா என் வாழ்க்கை ரொம்ப அமைதியா இருந்திருக்கும்னு நினைக்கறேன்….சரி விடு இனி நீ இங்கிருந்து போற வரை உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணல…அப்புறம் முக்கியமான விஷய


என்னோட தப்பை சரி செய்றதுக்காக நான் உன் கிட்ட வந்து பேசல... இந்த ரெண்டு நாளா நீ என்னோட தாத்தாவை கவனிச்சுக்கறதை பக்கத்திலிருந்து நான் பாத்துட்டு இருக்கேன் சொந்த பேரனான நானே தாத்தாவை இந்தளவு கவனிச்சுக்கிட்டது கிடையா



ஆனா நீ எங்கிருந்தோ வந்து எந்த சம்மந்தமும் இல்லாம…. அதுவும் இந்த வீடு இந்த மனிஷங்களை விட்டு பிரியறது தெரிஞ்சும் சேவை பண்ற பாத்தியா அந்த மனிதாபிமானமும் நல்ல குணமும் தான் என்னை உன்கிட்ட பேச வைக்கிற அதுக்கு பிராயச்சித்தமா ஏதாவது பண்ணனும்னு நினைக்கிறேன் வேற எதுவும் இல்லை என்று கூறியபடி அவன் திரும்பவும் அவனின் பேச்சி அதை சொன்ன விதம் எல்லாமே வேதாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்


அவனை அதிகப்படியாக காயப்படுத்தி விட்டோமோ என்று கூட தோன்றியது அவன் எப்படி தன்னை காயப்படுத்த கூடாது என்று இந்த நாள் முழுவதும் பார்த்துப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறானோ அதில் ஒரு பங்காவது நாமும் பேசி நடந்து கொள்ளலாமே என்று யோசித்தவ



மெதுவான குரலில் அத்தை போகும்போது தாத்தாவை கவனிச்சிக்க சொல்லிட்டு போனாங்க எனக்கு மத்தவங்க மாதிரி பொறுப்புல இருந்து பாதில கழன்டுக்க தெரியா
அவங்க குடுத்துட்டு போன வேலையை எல்லாரும் வர்ற வரைக்கும் சரியா செய்வேன்...என்று கூறவும் அது மாறனின் மனதை வெகுவாக தைத்தது


மனதின் வலி உடனடியாக முகத்திற்கு வர சரி என்பது போல் தலை அசைத்தவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தா


மூன்று நாட்களுக்கு முன் இதே போல் யாராவது அவனின் முன்பு நின்று முகத்தில் அடிப்பது போல் பேசி இருந்தால் கண்டிப்பாக அவனின் கை தான் பேசி இருக்கும்...ஆனால் இன்று வாயால் கூட பேச முடியாத அளவிற்கு மனதில் காயம் பட்டு செல்கிறா



மாறனுக்கு ஆச்சரியம் எனக்கு என்னவாயிற்று கடந்த மூன்று நாட்களாக ஏன் என் மனம் வேதாவின் பக்கமாக செல்கிறது அவளை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று தானே நினைத்தேன்...ஆனால் காரணமே இல்லாமல் அவளின் மீது அன்பு உண்டாகிறதே… அப்படியென்றால் நான் எனது கடந்த காலத்தை மறக்க தொடங்கி விட்டே
அய்யோ நான் எவ்வளவு பெரிய சுயநலவாதி என்னை மன்னித்து விடு சீதா…. உனக்குக் கொடுத்த வாக்கிலிருந்து தவற ஆரம்பித்து விட்டேன் இனி இதுபோல ஒரு தவறு செய்யமாட்டேன் என்று வேகமாக அவனின் அறைக்குள் சென்று புகுந்துகொண்டான்



முகம் முழுவதும் வியர்த்து கொட்ட நேரடியாக குளியல் அறைக்குச் சென்றவன் ஷவரை திருகி விட்டு அதன் அடியில் நின்று கொண்டான் அவனின் மனதில் இருந்த குழப்பம் மெதுவாக குறைய தொடங்குவது போல் இருந்


எவ்வளவு நேரம் நின்றான் என்பது தெரியாது ... சற்று நேரம் கழித்து அவனின் மனம் சற்று சாந்திபட தொடங்கவும் தான் குளியலறையை விட்டு வெளியில் வந்தா


பிறகு மெதுவாக தலை துவட்டியவன் அவனின் அலுவலக அறைக்குள் சென்று அவனின் லேப்டாப்பை ஆன் செய்தான் அதில் முகப்பிலேயே எட்டு வயது மதிக்க தக்க ஒரு சிறுமியின் புகைப்ப


அதன் மேல் மிஸ் யூ டாட் என்ற வாசகம் இருக்க புகைப்படத்தை மிக மென்மையாகத் தடவிக் கொடுத்தவன் மீ டூ பேபி... என்றவன் சற்றும் யோசிக்காமல் அவனின் மொபைல் விருந்து ஒரு எண்ணிற்கு கால் செய்ய ஆரம்பித்தா


எதிர்முனையில் சொல்லுங்க மாறன் என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க நான் விஷாகா கிட்ட பேசனும் கொஞ்சம் போனை குடுங்க என்றா


அவரும் சரி என்று கொடுக்க... சில வினாடிகளிலேயே டாடி என்று குதூகலத்துடன் சிறுமியின் குரல் கேட்டது உடனே விசா என்று செல்லம் கொஞ்சியவன் அரை மணி நேரத்துக்கு மேலாக ஒருவர் மாற்றி ஒருவர் மொபைல் போனில் பேசிக் கொண்டனர் அதன் பிறகுதான் சற்று நிம்மதி வந்தது மொபைலை அனைத்து வைத்துவிட்டு தன்னை ஆசுவாசப் படுத்தினா



மாறன் செல்லவும் தான் வேதா கூறிய வார்த்தையின் அர்த்தம் உரைத்தது காயப்படுத்தக் கூடாது என நினைச்சுக்கிட்டு நேரடியா அவரோட நெஞ்சிலேயே குத்திட்டோமே


நான் சொன்னதோட அர்த்தம் அவர் பக்கம் இருந்து பார்த்தா ரொம்ப தப்பா வருமே உன்ன மாதிரி தாலிக்கட்டினதும் பாதியிலேயே கைவிட மாட்டேன்னு மறைமுகமா சொன்னது போல வருதே... கடவுளே இனி கொஞ்சம் யோசிச்சு பேசனும் என்று நிஜமாகவே வருந்தியவள் அவளின் தலையில் அவளை அடித்துக்கொண்டா



பிறகு எப்படியாவது அவனை சாந்தப்படுத்த வேண்டும் என்று உணர்ந்தவள் மீண்டும் அவனைத் தேடிச் சென்


இப்படி ஒருவருக்காக ஒருவர் மனதை காயப்படுத்தி கூட கூடாது என்று நினைக்க ஒருவரின் மனதில் மற்றொருவர் வந்து அமர்ந்திருக்கும் விஷயம் இருவருக்குமே தெரியவில்


இந்த அக்கறையும் இந்த கரிசனமும் தான் ஒரு கணவன் மனைவிக்குள் இருக்கும் ஆரம்பக்கட்ட உறவு இது கூட தெரியாமல் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டிருந்தன


வேதா மாறனை தேடி வரும் பொழுது மாறன் அறையில் இல்லை... சில நிமிடங்கள் அவனுக்காக காத்திருக்க குளியலறையிலிருந்து சத்தம் கேட்கவும் திரும்பி விட்டா


பிற்பாடு மீண்டும் ஒருமுறை வர அப்பொழுதும் அவன் இல்லை யோசனையுடன் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து வரும் பொழுது அறைக்குள் யாரிடமோ கொஞ்சிப் பேசிய படி அவனின் குரல் ஓசை கேட்க யோசனையுடன் அறைக்கதவை தட்டினா


அப்போது தான் பேசிவிட்டு மொபைல் போனை அணைத்து வைத்திருந்தவன் வேதாவின் குரல் கேட்டதும் துணுக்குற்றா


வேகமாக வெளியே வந்தவன் முகத்தில் சிரிப்பு தொலைந்திருந்த


என்ன வேதா


இல்ல நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து கேட்டீங்க இல்லையா எங்காவது கூட்டிட்டு போகட்டுமானு அதான் சரின்னு சொல்லிட்டு போறதுக்காக வந்தே


இல்ல வேதா வேணாம் உனக்கு விருப்பம் இல்லாதது எதுவும் எனக்காக செய்ய வேண்டாம் என்று கூறியபடி அறைக்குள் செல்ல மீண்டும்



என்னங்க என்


இப்போ என்ன என்று சற்று சலித்துக் கொண்டவனிட


யார் கிட்ட பேசிட்டு இருந்தீங்க என்று கேட்டா



கொஞ்சம் உன்கிட்ட கரிசனையா பேசினதும் பொண்டாட்டி என்கிற உரிமையை எடுத்துக்க பாக்குறியா…? நான் யார் கிட்ட பேசினா உனக்கு என்ன முதல்ல இங்கிருந்து போ என்று கோபப் பட்டா



சரி நீங்க யார்கிட்ட வேணாலும் சிரிச்சி பேசலாம் ஆனா ஒரு மனுஷன் ரெண்டு மணி நேரத்துக்கும் மேல குளிப்பார்களா என்ன….? இந்த வீட்டுல இருக்குற சக மனுஷியாக கூட அதைப்பற்றி கேட்க கூடா


இந்த அளவு தண்ணியில நனஞ்சா உடம்பு என்னாகறது என்று நிஜமான அக்கறையில் கேட்டா


வேதாவின் ஒவ்வொரு அக்கறையும் அவனுக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது


இவளை விட்டு விலகலாம் என்று பார்த்தால் மேலும் மேலும் நெருங்கிக் கொண்டிருக்கிறா


இவளிடம் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு கூட என்னால் பேச முடியவில்லையே வந்த மூன்று நாட்களிலேயே விஷாவை மறக்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டாள் இன்னும் கொஞ்சநாள் போயிற்று என்றால் தன்னுடைய கடந்த காலத்தை சுத்தமாக மறக்க வைத்து விடுவாள்... அது ஒரு பொக்கிஷமான நினைவு அது இவளால் மறக்கடிக்கப் படக்கூடாது என்று நினைத்த



உன் அக்கறைக்கு ரொம்ப தேங்க்ஸ். ப்ளீஸ் முதல்ல நீ இங்கிருந்து போ என்று கூறினா


தலையசைத்தவள் எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள் ஆனால் அவள் காதுகள் பொய் கூறவில்லை சற்று முன்பு மாறன் யாரோ ஒருவரிடம் பேசினான் அந்த குரலில் அப்படி ஒரு சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்த



யாராக இருக்கும் குடும்ப உறுப்பினர்களிடம் கூட அவன் இந்த அளவுக்கு பேசியதில்லை என்று யோசித்தபடியே அங்கிருந்து நகர்ந்து சென்றா


மறு நாள் காலை வழக்கம் போல அதிகாலையில் எழுந்தவள் மாறன் நேற்று கேட்டுக் கொண்டபடி அவனுடன் விருந்துக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து இருந்தாள் அதனால் காலையிலேயே தாத்தாவிற்கு செய்யும் பணிவிடைகளை யெல்லாம் முடித்தவள் ஏழு மணி வாக்கில் மிக அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டு மாறனின் அறைக் கதவை தட்டிக் கொண்டிருந்தா



உள்ளே மாறனும் எப்படி இருந்தாலும் வேதா வரப்போவதில்லை பணியாளர்கள் அனைவருமே இவர்களின் வரவிற்க்காக விருந்து ஏற்பாடு செய்துவிட்டு காத்திருப்பார்கள் இப்போது இவனும் செல்லவில்லை என்றால் அது மிகவும் தப்பாகி வி


அதனால் அங்கு சென்ற பிறகு ஏதாவது ஒன்று பொய் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என்றபடி அவனும் கிளம்பிக் கொண்டிருந்தா


அவனின் அறை கதவு தட்டபடும் சத்தம் கேட்கவும் வேகமாக வந்து கதவை திறக்க வேதா அழகு பதுமையாக வந்து நின்றா


புருவ சுளிப்புடன் அவளை
மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் எங்க கிளம்பிட்ட ஊருக்கா...எல்லாரும் வந்துட்டாங்களா என்று சந்தோஷமாக கேட்ட படி வாசலின் வெளிப்பக்கம் எட்டிப்பார்க்க வேதாவின் முகம் நொடியில் வாடிவிட்டது


யாரும் ஊர்ல இருந்து வரலை...நேத்து கேட்டிங்கல்ல ஏதோ பார்ட்டிக்கு வர முடியுமானு அதான் கிளம்பி வந்தேன் சொல்லும் பொழுதே அவமானத்தில் தொண்டையடைத்து கண்கள் கலங்க ஆரம்பித்


மாறனுக்கு மிக நன்றாகவே தெரியும் வேதா எதற்காக இவ்வளவு மெனக்கெட்டு தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்திருக்கிறாள் என்று ஆனாலும் அவன் இடத்திலிருந்து அவளை தள்ளி வைக்க வேண்டு



அப்படி வைக்க வேண்டுமென்றால் இது போல் கடினமான பேச்சுக்களை மிக இலகுவாக பயன்படுத்தினால் மட்டுமே அவள் உடைந்து போய் தன்னை விட்டு விலகிச் செல்வாள் இல்லை என்றால் அவளே போக நினைத்தால் கூட தன்னால் அவளை அனுப்பி வைக்க முடியாது என்று உண்மையை உணர்ந்திருந்ததால் தான் அவ்வாறு பேசினா




ஆனால் அவள் கண்கள் கலங்கவும் அவனின் மனமும் சேர்ந்து வாடத் தொடங்கி


வினாடியில் சுதாரித்துக்கொண்டவன் அவளிடம் சாரி நீ வர மாட்டேன்னு சொன்னல்ல அதனால நானும் அவங்க கிட்ட நீ வரமாட்டேன்னு சொல்லிட்டேன் அதனால நீ வரணும்னு அவசியம் இல்லை என்று



இவ்வளவு நேரம் தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்துக் கொண்டது வீண் ஆகிவிட்டதா என்று வேதாவிற்கு தோன்றி


அவள் மனதில் ஒரு சிறு நம்பிக்கை அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது ஏதாவது ஒரு விஷயம் அவனுக்குத் தன்னை பிடிப்பது போல் செய்து இந்த திருமண பந்தத்தை உறுதிப்படுத்த முடியாத என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறா


அதற்கான சந்தர்ப்பத்தை மனதளவில் தேடிக்கொண்டும் இருக்கிறாள் வெறும் பேச்சுக்காக மட்டுமே இங்கிருந்து செல்கிறேன் என்று கூறுகிறாளே தவிர அவளுக்கு இந்த திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள துளிகூட விருப்பம் கிடையா


குடும்பமே இவர்களின் உறவு நிலைத்திருக்க வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் பொழுது அதை தான் ஏன் தடுக்க வேண்டும் என்றுதான் அமைதியாக இருக்கிறா


ஆனால் மாறனின் நிலை அப்படி கிடையாது அவனுக்கு வேதாவை எப்பொழுதுமே மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவனின் கடந்த காலம் தான் வேதாவின் அருகில் செல்ல தயங்க வைக்கிறது


அவனைப் பற்றி அவளுக்குத் தெரிந்தால் கண்டிப்பாக அவளே அவனை விட்டு சென்று விடுவா


அப்படி இருக்கும் பொழுது எதற்காக ஒரு திருமணத்தை செய்து கொண்டு மனைவி தன்னை விட்டுச் சென்றுவிட்டால் என்று ஒரு அவப் பெயருடன் வாழ வேண்டும் என்று தான் அவளைப் பிடிக்கவில்லை வேறு எந்த பெண்ணை வேண்டுமானாலும் திருமணம் செய்கிறேன் இந்தப் பெண்ணை திருமணம் செய்ய முடியாது என்றெல்லாம் தாயாரிடம் மன்றாடிப் பார்த்தா


வேதா மட்டுமல்ல வேறு யாரை அவனின் தாய் கொண்டு வந்து நிறுத்தி இருந்தாலும் அவன் அந்த பாட்டைத் தான் பாடியிருப்பா

ஆனால் முதல் பார்வையிலேயே வேதாவை பார்த்ததுமே பிடிக்கவும் அவளின் வாழ்க்கை தன்னால் பால் படக்கூடாது என்று மிகவும் திருமணத்தை தடுத்து நிறுத்த போராடினா


ஆனால் அது தோல்வியில் முடிய அதன் பிறகாவது உடனடியாக அவளை அவளின் வீட்டிற்கு அனுப்பி விடவும் திட்டம் தீட்டினான் அதுவும் தோல்


இப்பொழுது கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஆகி விட்ட நிலையில் வேறு வழியில்லாமல் அவளோடு சகித்துக் கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்


இப்படி இருக்கும்போது கண்ணை பறிக்கும் அலங்காரத்துடன் முன்வந்து நிற்பவளே எப்படி அவனால் விட்டு வைக்க முடியும்...அவனின் சுயம் இழக்கக் கூடாதென்று அவளிடம் பேச அவளின் மனம் பாடத் தொடங்கியது அறிந்ததும் சட்டென மனதை மாற்றிக் கொண்டவன் சமாளிக்கும் விதமாக வாய்க்கு வந்ததையெல்லாம் உளற தொடங்கியிருந்தான் ஆனால் வேதா அவனின் சமாதானம் எதையும் கேட்டுக் கொள்ளாமல் அங்கேயே கதறி அழ ஆரம்பித்தா


அவளின் அழுகையை சமாளிக்க முடியாது என்று உணர்ந்து கொண்டவன் சரி நான் உன்னை இப்போ என்னோட கூட்டிட்டு போறேன் அதுக்காக இப்படி அழுது வைக்காத வீட்ல யாருமே இல்ல இப்போ நீ இப்படி அழுதா வேலை செய்றவங்க என்னை பத்தி என்ன நெனைப்பாங்க தயவு செஞ்சு அழாத என்று அவளின் முன்பு இரு கைகளையும் கூப்பியபடி கெஞ்சத் தொடங்கினா


அவனின் அச்செயல் அவளுக்கு சட்டென்று சிரிப்பை வரவழைக்க அழுகையுடன் சிரிக்கத் தொடங்கி இருந்தா


இப்போது தான் அவனுக்கு நிம்மதி பிறந்தது சரி முதல்ல போய் கொஞ்சம் டச்சப் பண்ணிட்டு வந்தேன்னா அப்படியே உன்னை கூட்டிட்டு போயிடுவேன் இப்படி அழுமூஞ்சியா உன்னை என்னால கூட்டிட்டு போக முடியாது என்று கூ


சரி என்று தலையை அசைத்தவள் வேகமாக அங்கிருந்து துள்ளிக் குதித்தபடி ஓடினா


அவளின் உருவத்திற்கும் செயலுக்கும் துளி கூட சம்பந்தமே கிடையாது இது வளர்ந்த குழந்தை போல... அவனுக்கு மீண்டும் ஒரு குழந்தை கிடைத்திருப்பதாக தோன்றி


எது எப்படியோ இனி வேதாவை இங்கிருந்து அனுப்புவதை பற்றி சற்று யோசிக்கத்தான் வேண்டு


அவனைப் பொருத்தவரை திருமணத்திற்கு முன்பு இருந்த மன நிலைமைக்கும் இப்பொழுது அவன் மனதில் இருக்கும் எண்ணங்களுக்கும் நிறையவே வேறுபாடு இருந்த


அப்பொழுது திருமணமே வேண்டாம் என்று இருந்தா


பிறகு வேதாவை பார்த்ததும் அவளைத் தவிர யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம் என்று நினைத்தா


ஆனால் இப்பொழுது அவளை தவிர வேறு யாரையுமே தன்னால் மனைவியாக கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும் நினைத்துக் கொண்டிருந்தா


ஒருவேளை அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று சென்றுவிட்டாலும் கூட அவனின் மனதில் வேதா எப்பொழுதும் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டுதான் இருப்பா


அவனின் வாழ்க்கையில் இனி முதலும் கடைசியுமாக வேதா மட்டுமே மனைவி என்று நினைத்தவன் அவளை அழைத்துக் கொண்டு அவர்களின் காம்ப்ளக்ஸை நோக்கிச் சென்றா


காலை வேளை என்பதால் ரோடே வெறிச்சோடி காணப்பட்டது அங்கங்கே சில டீக்கடைகளிலும் ஒரு சில மளிகை கடைகள் மட்டுமே திறந்து இருக்க இவர்களின் கார் சீரான வேகத்தில் சென்ற


செல்லும் வழியில் எங்கும் சென்னையில் இருந்த மிகப் பெரிய கட்டிடங்களை எல்லாம் வாய் திறந்தபடி பார்த்துக்கொண்டே வந்திருந்தாள் வே


அவளை மிக சாதாரணமாக பார்த்தவன் நான் உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நினைச்சேன் என்னோட நேத்து வர மாட்டேன்னு சொல்லிட்டு இன்னைக்கு காலையில எனக்கு முன்னாடியே கிளம்பி வந்துட்டியே என்ன காரணம் என்று கேட்டா



உடனே அவள் பட்டென்று எதையும் மறைக்காமல் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும் நினைச்சிட்டு இருந்தேன் கல்யாணமானதும் முதல்ல அதை மட்டும் தான் கேக்கனும்னு நினைச்சேன் ஆனா முடியாம போயிடுச்சு அதுதான் இப்போ நேரிலேயே பார்க்கலாம்னு கிளம்பிட்டேன் என்று ரோட்டை வேடிக்கை பார்த்தபடி கூறினா



நெற்றியை சுருக்கியவன் அப்படி என்ன அது என்று கேட்


அவள் சிரித்தபடி உங்க வீட்ல என்னை பொண்ணு பாக்க வர்றப்போ என் அம்மா என்ன சொன்னாங்கன்னா நீங்க ஏதோ கடை வச்சி இருக்கிறதா சொன்னாங்க...சரி ஏதோ எங்களை மாதிரி ஒரு குடும்பம்னு ஏதிர்பாத்தேன்...ஆனா உங்க வீட்ல எல்லாருமே கார்ல வந்து இருந்தாங்



அப்புறம் கல்யாணத்துக்கு கிட்டத்தட்ட ரெண்டு மூணு கார் எனக்கு ஒரே ஆச்சரியம் எங்க அப்பாவும் கடைதான் வச்சு இருக்காங்க ஆனா அவரால ஒரு டிவிஎஸ் பிப்டி கூட புதுசா வாங்க முடியல ஒரு செகண்ட் ஹேண்ட்ல தான் வாங்கி



நீங்களும் அதே மாதிரி கடை தானே வச்சிருக்கீங்க ஆனா இத்தனை கார் இவ்வளோ பெரிய வீடு எல்லாம் எப்படினு ஒரே யோசனை…. அதான் கடைல வேலை செய்யறவங்கலோட பார்ட்டின்னதும் அப்படியே கடையையும் பார்க்கலாமா கிளம்பிட்டேன்…. ரொம்ப பெரிய கடையா வச்சு இருக்கீங்களோ என்று அறியா பிள்ளையாய் அவனைப் பார்த்துக் கேட்டா


உடனே சிரித்தவன் உங்க எல்லாருக்கும் புரியற மாதிரி இருக்கனும்னு கடை சொல்லி இருப்பாங்க நாங்க வைச்சிருக்கறது கடை இல்ல அது ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கிட்டத்தட்ட நாலு அடுக்கு மா
அதுல மூனு ப்ளோர் நாங்க நடத்தறோம்
நம்ம கடையில இல்லாத ஐட்டம் எதுமே கிடையாது


பிறந்த குழந்தையிலிருந்து அறுபது வயசுகாரங்க வரைக்கும் இருக்கிற அத்தனை பேருக்கும் தேவையான எல்லாப் பொருளும் கிடைக்கும் துணிக் கடையில் இருந்த நகை கடை வரை. குண்டூசில இருந்து கடப்பாரையை வரை...மளிகைல இருந்து பாத்திரம் வரை...இப்படி எல்லா

அதுமட்டுமில்லாம எங்களுக்கு மூணு பிளாட் ரெண்டு தனி வீடுக அப்புறமா ஆறு ப்ளோர் இருக்கற அப்பார்ட்மென்ட் ஒன்னு இருக்கு எல்லாமே வாடைக்கு தான் விட்டிருக்கோமா


கடையை பொறுத்தவரைக்கும் அப்பா தான் ஆணிவேர்... முழுக்க முழுக்க அப்பா தாத்தாவோட உழைப்பு தான்...நாங்க அதை கொஞ்சம் விரிவு படுத்திருக்கோம்... வரவு, செலவு, கொடுக்கல், வாங்கல், கேஸ் கௌண்டர் கவனிக்கறது அப்பாவோட டிபார்ட்மெண்ட்



கஸ்டமர் கேர், ஒர்க்கர்ஸ் டீலிங் கடையோட சூப்பர்வைசர் சம்பளம் போனஸ் இது எல்லாமே செழிய


பர்சேஸ் பண்ணறது நான் என்னென்ன பொருள் வேணும் அதை எங்கெங்க வாங்கணும் அதுமாதிரி பாத்துக்கறது…இது இல்லாம ரகு அத்தான் அப்பப்போ நிறையா ஹெல்ப் பண்ணுவாங்
மொத்தத்தில் முழுக்க முழுக்க ஃபேமிலி பிஸினஸ்


நாங்க நாலு பேரும் தான் எங்க காம்ப்ளக்ஸோட தூண் ஒருத்தர் கொஞ்சம் நகர நான் நினைச்சா கூட அந்த நாலு மாடி கட்டிடமும் ஆட ஆரம்பிச்சிடும்... எல்லாருக்குமே சம்பளம் மாசம் மாசம் அவங்க அக்கவுண்ட்ல ஆட்டோமேட்டிக்கா கிரெடிட் ஆயிடும் ஆனா யாருக்குமே உபயோகம் இல்லாமல் அப்படியே தூங்குது...அப்பாவோடதை மட்டும் வீட்டு செலவுக்கு எடுத்து அம்மா உபயோகப் படுத்தறாங்


ம்ம்...அப்புறம் ஒரு ப்ளோர் வாடகைக்கு விட்டிருக்கோம்னு சொன்னேன்ல அதுல வர்ற வருமானம் எங்க வீட்டு மகாராணிகளோட செலவுக்காக குடுக்கறோம்…. இவ்வளவு நாள் மூன்று பங்காகப் பிரிந்தது இனி நாலு பங்கா பிரிய போகுது எப்படியோ நீங்க நாலு பேரும் சண்டை இல்லாமல் பிரிச்சி கிட்டா அது போதும் எங்களுக்கு


இதெல்லாம் சொன்னா பயந்து உங்க வீட்ல பொண்ணு கொடுக்க மாட்டாங்களோனு பயந்து எங்கம்மா கடைனு சொல்லி இருப்பாங்க என்று அவனின் வசதியை அலட்டலே இல்லாமல் கூறி முடித்தா





ஒரு பக்கம் எப்பொழுது உன் வீடு செல்கிறாய் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான் மற்றொரு பக்கம் அவனுடைய குடும்பத் தொழில் முதல் வருமானம் வரை நாம் என்று சேர்த்து வைத்து பேசுகி


என்ன மாதிரியான மனிதன்... இன்னும் சில நாட்களிலேயே எனது வீட்டில் விட்டு விடப் போகிறான் அதன் பிறகு எப்படி வரும் வருமானத்தில் மாமியார் மற்றும் நாத்தனார் உடன் பகிர்ந்து கொள்வது … பேச்சு வாக்கில் ஏதோ தெரியாமல் உளறுகிறான் என்றவள் மௌனம் காக்க கடைசியாக கூறியது அப்பொழுதுதான் மாறனுக்கும் புரிந்தது சட்டென்று நாக்கை கடித்துக்கொண்டா


கடவுளே எவ்வளவு முயன்றும் இவளை என்னிடந்தில் இருந்து தள்ளி வைக்க முடியவில்லையே இது என்ன புதுச் சோதனை என்று தனக்குத்தானே நொந்து கொண்டா


இப்படி இருவரும் மனதிற்குள்ளாக மாறிமாறி உழன்று கொண்டிருந்
அதற்குள்ளாக ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரவும் அப்பாடி எவ்வளவு பெரிய காம்ப்ளக்ஸ் என்று வாய் பிளந்தாள் வேதா



அதிகாலை என்பதால் எல்லாமே மூடிக் கிடந்தது மூடிக்கிடக்கும் போதே கடை இவ்வளவு பெரிய பிரம்மாண்டம் என்றால் திறந்து இருக்கும் பொழுது எப்படி இருக்கும் என்று நினைத்த படியே அவனின் பின்னே சென்றா


மேலே மொட்டை மாடியில் இவர்களுக்காக பிரத்தியேக அலங்காரங்களுடன் அந்த காலை வேளையிலேயே வேலை செய்யும் அத்தனை பணியாளர்களும் வந்திருந்தார்கள் மிகவும் தடபுடலாக தம்பதியினரை வரவேற்று ஆடல் பாடலுடன் நிகழ்ச்சியை தொடங்கி


மணி ஒன்பதை கடக்கவும் அனைவரும் உணவருந்த ஆயத்தமானார்கள் ஆனால் தொழிலாளர்கள் ஏற்பாடு செய்திருக்கும் உணவை முதலாளி சாப்பிடுவாரா என்று தயங்கியபடியே ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க புரிந்து கொண்ட மாறன் பணியாளர்களுடன் சேர்ந்து வேதாவுடன் சாப்பிட்டு அனைவரையும் சந்தோஷப் படுத்தினா


ஒரு வழியாக பத்து மணிவாக்கில் அனைவரும் பணிக்குச் செல்ல வேதாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்ப ஆரம்பித்தா


நீண்ட நாட்களுக்கு பிறகு ஏதோ ஒரு திருப்தி மனதில் ஏற்பட்டது அது தொழிலாளர்களுடன் கடந்த இரண்டு மணி நேரங்களாக இருந்ததா


இல்லை தன் அருகில் அமர்ந்து கொண்டு அவனின் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கும் வேதா... என்ன என்று தெரியவில்லை ஆனாலும் அவனின் மனது மிகவும் அமைதியாக இருந்


இருவரின் மனமும் ஒரே போல யோசிக்க மாறன் மௌனமாக வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தா


அப்பொழுது மாறனின் மொபைல் சிணுங்க தொடங்கிய


யார் என்று பார்க்க லட்சுமி அக்கா கூப்பிட்டிருந்தா


சற்று பதட்டமடைந்தவன் உடனடியாக ஃகாலை அட்டென்ட் செய்தா

எதிர்முனையில் பதட்டத்துடன் லட்சுமி அக்கா தான் பேசினார் ஐயா சின்னம்மா காலையில் பெட்டை விட்டு எந்திரிக்கும் போது கீழே விழுந்துட்டாங்க விழுந்ததில் இடுப்பு நல்ல அடிபட்டு வலிக்க ஆரம்பிச்சுடுச்சு



அவங்க வீட்டுல யாருமே இல்ல டிரைவர் கூட அவனோட வீட்டுக்கு போயிட்டானாம் ... சின்ன ஐயா, உங்க அம்மா, உங்க அப்பா எல்லாருக்கும் போன் பண்ணி பாத்துட்டேன் யாருமே போனை எடுக்கல எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை உடனே கொஞ்சம் வாங்க என்று அழுதபடியே கூறினா


பயம் தொற்றிக் கொள்ள வாகனத்தை வேகமாக ராதிகாவின் பிறந்த வீட்டிற்கு விரட்டினான் மா


செல்லும் வழியிலே நிலவரத்தை வேதாவிடம் கூற அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்தபடி அமர்ந்து விட்டா


அதன்பிறகு கண்களை மூடிக்கொண்டு கைகளைக் கூப்பியபடி இஷ்ட தெய்வத்திடம் வேண்ட ஆரம்பித்தா


கடவுளே தாயும் சேயும் நலமாக வேண்டும் அவர்களுக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் கொடுத்து விடாதே என்


வாகனத்தை ஓட்டிய படியே வேதாவைத் தான் பார்த்துக்கொண்டே வந்தான் மாறன்.அவனுக்கு மீண்டும் மீண்டும் வேதாவை பிடிக்கத் தொடங்கிய




தன்னைத் திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக படுக்கையில் இருக்கும் தன்னுடைய தாத்தாவை முகம் சுளிக்காமல் பார்த்துக்கொள்கிறாள் பாட்டி கூட அவரை விட்டுவிட்டு சென்றுவிட்


ஆனால் இவள் அருகில் இருந்து பார்த்துக் கொள்கிறாள் அதுமட்டுமின்றி இப்பொழுது தனது தம்பியின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும் அவளின் குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பு போல பதட்டம் அடைகிறாள் இந்தப் பெண்ணை எப்படி என்னை விட்டு விலக்கி வைப்பது இவளின் அன்பு என்னை செயலிழக்க வைக்கிறதே என்று அந்த நேரத்திலும் கலங்க ஆரம்பித்தான் மாறன்.


தொடரும்...
 
Top