கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துணையாக நான் வருவேன்-12

Akila vaikundam

Moderator
Staff member
12

மாறன் ராதிகாவின் வீடு வரவும் அவளின் கதறல் சத்தம் வாசலை தாண்டி கேட்டுக்கொண்டிருந்தது.

சத்தத்தை கேட்கவும் மாறனின் கைகள் தானாக நடுங்க ஆரம்பித்தது.கண்கள் கலங்க ராதிகாவின் அறையை நோக்கி ஓட அங்கே அவள் கால்களை நீட்டி அமர்ந்த வாக்கிலே வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்.அருகில் அமர்ந்திருந்த லட்சுமி ராதிகாவின் கைகளைப்பிடித்தபடி அவரும் அழுது கொண்டிருந்தார்



ராதிகாவின் ஆடைகள் அனைத்தும் ஈரமாகி இருக்க அதிர்ச்சியில் லக்ஷ்மி அக்காவை பார்த்தான்.


அவர் பயந்தபடியே பனிக்குடம் உடைச்சிடுச்சு ஐயா என்று பயத்தில் நடுங்கிய படி கூறினார் .


அவனுக்கு இதுபற்றியெல்லாம் அதிக விவரம் தெரியாததால் …


அப்படின்னா... என்று குரல் நடுங்க கேட்டான்.


உடனே ஆஸ்பத்திரிக்கு போகலன்னா பிரசவம் கஷ்டம் ஆயிடுங்கய்யா... அதுமட்டுமல்லாம துடிப்பு வேற கொஞ்ச நேரமா இல்லைங்கறாங்க... என்று கூறவும்
சற்றும் தாமதிக்காமல் ராதிகாவை தனது இரு கைகளாலும் தூக்கியபடி காரை நோக்கி ஒடினான்.


வேதா வேகமாக சென்று காரின் பின் கதவை திறந்து வைத்தாள்.



ராதிகாவிற்கு மாறனையும் வேதாவையும் பார்த்ததும் தான் சற்று பயம் தெளிந்து தைரியம் பெற்றாள்.


அதுவரை கதறிக் கொண்டிருந்தவள்... சற்று அமைதியும் காக்க ஆரம்பித்தாள்.


ராதிகா மிகவும் பயந்து இருப்பது நன்றாகவே தெரிந்து அவளை தூக்கிச் செல்ல செல்லவே மாறன் அவளிடம் பயப்படாத ராதிகா நாங்க இருக்கோம் உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன் ...தைரியத்தை விட்டுடாத.. என்று அவளுக்கு தைரியம் சொல்லியபடி காரில் அமர வைத்தான்.


கண்களில் நீருடன் கையெடுத்து கும்பிட்டவளை பைத்தியம் கையை கீழ போடு...நீ எங்க வீட்டு தேவதை இது என்னோட கடமை என்று கூறியபடி வாகனத்தை வேகமாக மருத்துவமனை நோக்கி ஒட்டினான்.


சற்றி நேரத்திலே ராதிகா வலி தாங்காமல் கத்தியவள்
லட்சுமியிடம் அக்கா சுத்தமாவே துடிப்பு தெரியலக்கா எனக்கு ரொம்ப பயமாயிருக்கு….எப்படியாவது என் குழந்தையை காப்பாத்துங்க என்று அழத படி அப்படியே அமைதியானாள்.


ஆனால் ராதிகா அமைதியாக வில்லை கிட்ட தட்ட மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தாள்.


மாறன் வேதா இருவருக்குமே அதன் வீரியம் புரியவில்லை...எப்படியோ கத்தாமல் இருக்கிறாள் அது போதும் என தான் நினைத்தார்கள்.


ஆனால் லட்சுமி அக்கா ராதிகா கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்குச் செல்வதை அறிந்ததும் கத்த ஆரம்பித்துவிட்டார் .


அய்யா சின்னம்மா மயக்க நிலைக்கு போறாங்க இந்த மாதிரி நேரத்துல மயக்கத்துக்கு போனா ரொம்ப ஆபத்தாகிவிடும் ஏதாவது பண்ணுங்கய்யா என்று கத்தவும் தான் இருவருக்குமே விபரீதம் புரிந்தது…



ஏற்கனவே பயத்தில் இருந்த மாறனுக்கு மேலும் பயம் தொற்றிகொண்டது.கடவுளே ராதிகாவை காப்பாற்று என்று வாய்விட்டு வேண்டியவன் வாகனத்தை இயக்கியபடியே திருப்பிப் பார்க்காமல் வேதாவிடம் கோபத்தில் கத்தத் தொடங்கினான்.



பின்னாடி என்ன மண்ணு மாதிரி உட்கார்ந்து இருக்கிறியா...ஏதாவது பண்ணி அவளை எழுப்பி விடு ….படிச்சவ தான இது கூட உனக்கு தெரியாது…. இதெல்லாம் நான் சொல்லனுமா என்று பயத்தால் உண்டான பதட்டத்தில் வேதாவிடம் எரிந்து விழுந்தான்.



அவனின் கத்தல் ராதிகாவின் நிலமை இரண்டாலும் வேதாவிற்கு பயம் உண்டாயிற்று...என்ன செய்வதென்று புரியாமல் அழ ஆரம்பித்து விட்டாள்.



லட்சுமி ஒருபுறம் அழ….வேதா மறுபுறம் அழ...ராதிகா மயக்கத்திற்கு செல்ல மாறனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை... இதே மனநிலையில் இருந்தால் அவனால் கண்டிப்பாக வாகனத்தை இயக்க முடியாது என்று புரிந்து கொண்டவன் பயத்தை சிறிதளவு விட்டு விட்டு தைரியத்தை வரவழைத்து கொண்டான்.



பிறகு ஆழ மூச்சை இழுத்து விட்டவன் வேதாவிடமும் லட்சுமியிடம் ரெண்டு பேரும் ராதிகா கிட்ட. ஏதாவது பேச்சுக் கொடுத்துகிட்டே இருங்க ஹாஸ்பிடலுக்கு இன்னும் கொஞ்ச தூரம் தான் இருக்கு அங்க எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்கும் அதுவரைக்கும் ராதிகாவை நாம தான் பாத்துக்கனும் ஹாஸ்பிடல் போற வரைக்கும் அவளை கொஞ்சம் சுய நினைவுக்கு வர வைங்க ஏதாவது பேசுங்க ப்ளீஸ் என்று கண் கலங்க கூறினான் எவ்வளவு முயன்றும் அவனால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போனது.



மாறன் கண் கலங்குவதை கண்டு தாங்கிக்கொள்ள முடியாத வேதா அழுகையை நிறுத்தினாள் முகத்தை அழுத்தி துடைத்தவள் ராதிகாவிடம் பேச்சி கொடுக்க ஆரம்பித்தாள்.


ராதிகா கண்ணை திற…. கொஞ்ச நேரத்துல உனக்கு அழகான குழந்தை பிறக்கப் போகுது…. அதை நாம எல்லாருமே பாக்கணும் இப்படி நீ கண்ணை மூடிக்கிட்டா அது குழந்தையைப் பாதிக்காதா…


உனக்காகவும் உன் குழந்தைகாகவும் செழியம் அத்தான் கோவில் போயிருக்காங்க...அதனால உங்களுக்கு எதுவுமே ஆகாது... அத்தான் வரும் பொழுது நீங்க ரெண்டு பேரும் அவரை சந்தோஷமாக வரவேற்கணும் இப்படி நீ பொறுப்பில்லாமல் இருந்தா என்ன அர்த்தம் ராதிகா கண்ணை திற என்று கன்னத்தில் தட்டினாள்.


ராதிகா வேதாவின் குரலை கேட்டு கண்ணைத் திறக்க மிகவும் சிரமப்பட கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்துக்கொண்டிருந்தது

வேதா சற்றும் யோசிக்காமல் ராதிகாவின் வயிற்றின் அருகே குனிந்து குழந்தையிடம் பேச ஆரம்பித்தாள்.


குட்டிமா நான் உன்னோட பெரியம்மா பேசறேன் ... உன்னை பாக்க எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு…. உனக்கும் பெரியம்மாவைப் பார்க்க ஆசை இருக்குல்ல அப்படின்னா உன்னோட அம்மாவை எழுப்பி விடும்மா... நீயும் உன் அம்மா மாதிரி அமைதி ஆகாத... என்று கை நடுங்க ராதிகாவின் மணிவயிற்றை மென்மையாக வருடிக் கொடுக்க உள்ளிருக்கும் குழந்தைக்கு என்ன புரிந்ததோ...சற்றென்று ராதிகாவிற்கு உதை விட்டது.

அதை நன்கு உணர்ந்த வேதா குழந்தை அசையுது….குழந்தை இப்போ உதைச்சது...என்று சந்தோஷத்தில் கத்த...குழந்தையில் உதையில் ஆஆஆ என்று கத்தியபடி ராதிகா கண் விழித்தாள்.



அவளின் குழந்தை உதைத்ததை உணர்ந்ததுமே ராதிகா அழுகையோடு கத்த ஆரம்பித்தாள் அத்தான் என் குழந்தை இப்போ உதைப்பது... லட்சுமிகா குழந்தைக்கு இப்போ துடிப்பு இருக்கு….என்று கூறியவள் வேதாவை பார்த்து அக்கா தொட்டு பாருங்ககா என்று வேதாவின் கையை இழுத்து வயிற்றின் மீது வைக்க குழந்தையின் அசைவு அங்கிருந்த மூன்று பெண்களுக்கும் ஒருவித பரவசத்தை கொடுக்க மூவருமே ஒருவரையொருவர் கட்டியணைத்தபடி சந்தோசத்தில் கத்தி அழ ஆரம்பித்தார்கள்.


அவர்களின் சந்தோஷமே மாறனுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்க வேகமாக மருத்துவமனை வாசலில் வாகனத்தை கொண்டு வந்து நிறுத்தினான்.



மருத்துவமனைக்கு வரும் பொழுதே தகவல் சொல்லப்பட்டிருந்ததால் வாசலிலேயே வழக்கமாக அவளை பரிசோதிக்கும் மருத்துவரும் ஊழியரும் ஸ்டெச்சருடன் காத்திருந்தனர்.


உடனடியாக அவளை பிரசவ வார்டுக்கு அழைத்துச் சென்றவர்கள் சில நிமிடங்களிலேயே அவசரமாக மருத்துவர் மட்டும் வெளியே வந்தார்.



மிஸ்டர் மாறன் உடனே சிசேரியன் பண்ண குழந்தையை வெளியே எடுக்கனும் இல்லனா ரெண்டு பேருக்குமே ஆபத்து...ராதிகாவோட ஹஸ்பண்டை உடனே வரச்சொல்லுங்க அவர் சைன் பண்ணினாதான் நாங்க சர்ஜரி செய்ய முடியும் என்று கூறினார்.


டாக்டர் என் தம்பி ஊர்ல இல்ல...இப்போ ஃகால் பண்ணினா கூட அவனால உடனே வர முடியாது என்று குரல் கம்ம கூறினான்.



அப்படினா ராதிகாவோட பேரன்ட்ஸை வர சொல்லுங்க... ஒன்னு பேரன்ட்ஸ் கையெழுத்து போடணும் இல்லனா பேஷண்டோட ஹஸ்பண்ட் கையெழுத்துப் போடணும் இவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தரோட கையெழுத்து இல்லனா எங்களால சர்ஜரி பண்ண முடியாது…


டாக்டர் ப்ளீஸ் முதல்ல சர்ஜரி ஸ்டார்ட் பண்ணுங்க நான் போய் ராதிகாவோட அம்மா,அப்பாவை கூட்டிட்டு வரேன்…



இல்ல மாறன் அவங்க கையெழுத்து இல்லனா எங்களால சர்ஜரி பண்ண முடியாது…சீக்கிரமா யாரையாவது வரச்சொல்லுங்க..நாளைக்கு ஏதாவது பிரச்சனை ஆயிடுச்சுனா நாங்க தான் பதில் சொல்லணும் என்று கூறினார்.


உடனே லட்சுமியை பார்த்து ராதிகாவோட அம்மா அப்பா எங்கே என்று கேட்டான்.


நேத்து ஏதோ பிஸினெஸ் பார்ட்டி வைக்கறதா சின்னம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க….யாரோ முக்கியமானவங்க வராங்களாம்...அதனால நிறைய லாபம் கிடைக்கும்…. பார்ட்டி பெருசுங்கறதால கவனிச்ச வேலைகாரங்கள கூட்டிட்டு போறதா சொன்னாங்க...


சின்னம்மாவோட அம்மா போக மாட்டேன்னு தான் சொன்னாங்க ராதிகாம்மா தான் நீங்க வைக்கிற பார்ட்டியில நீங்களே இல்லன்னா எப்படி போய்ட்டு வாங்க இங்க தான் லட்சுமி அக்கா இருக்காங்களே ஏதாவது ஒண்ணுன்னா உங்களுக்கு கூப்பிடறோம்னு சொல்லி அவங்களை பார்ட்டிக்கு அனுப்பி வெச்சாங்க.



ஆனா நைட் போனவங்க காலையில வரல... அம்மா கீழே விழுந்ததும் மொதல்ல அவங்களுக்கு தான் கூப்பிட சொல்லி போனை என்கிட்ட கொடுத்தாங்க…
ஆனா அவங்களோட ஃபோன் எடுக்கல... அப்புறமா ஆம்புலன்ஸ்க்கு கூப்பிட்டு பார்த்தேன் அதுலயும் ஏதேதோ கேட்டாங்க எனக்கு பதில் சொல்ல தெரியல அதுக்கப்புறம் தான் பயந்து உங்களுக்கு கூப்பிட்டேன் என்று அழுதபடியே கூறினார்


ராதிகாவின் பெற்றோர்களைப் பற்றி கேட்டதும் தலையில் அடித்து கொண்டபடியே நல்ல அம்மா அப்பா அங்களை நம்பி ராதிகாவை அனுப்பி வைச்சி பெரிய தப்பு பண்ணிட்டோம் என்று கோபப்பட்டவன்….


கண்கலங்கிய படி மருத்துவரை பார்த்து டாக்டர் உங்களுக்கே தெரியும் எங்க குடும்பத்தை பத்தி…இப்போ ராதிகாவுக்காக நான் எத்தனை கையெழுத்து வேணாலும் எங்க வேணாலும் போடறேன்...தயவு செஞ்சி அவளையும் குழந்தையையும் காப்பாத்திக் குடுங்க...


நீங்க செய்யப்போற சர்ஜரியில் எந்த தப்பும் நடக்காது அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு…. உங்களுக்கும் இருக்கும் அப்படி இருக்கும் போது ஒரு குடும்பத்துல யார் கையெழுத்து போட்டா என்ன…?
இதோ நானும் என் மனைவியும் சேர்ந்து கையெழுத்து போட்டு தர்றோம் எங்க குடும்பத்தால உங்களுக்கும் உங்க மருத்துவமனைக்கு எந்த பிரச்சனையும் வராதுனு‌...ப்ளீஸ் டாக்டர் முடியாதுன்னு சொல்லாதீங்க….


என் தம்பி என்னை நம்பிதான் ராதிகாவை விட்டுட்டு ஊருக்கு போறதா சொன்னான்...அவன் திரும்பி வரும்போது அவன் குடும்பத்தை அவன் கையில ஒப்படைக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்க என்று கையெடுத்து கும்பிட்டவனின் பாசத்தை கண்டு வியந்த மருத்துவர்



சிஸ்டர் ஆப்பரேஷன் தியேட்டரை ரெடி பண்ணுங்க அப்படியே அனஷிஸியா டாக்டரை வரச்சொல்லுங்க என்று கூறியபடி உள்ளே சென்று விட்டார்.


அதன் பிறகுதான் குடும்ப உறுப்பினர்களுக்கு அழைக்கத் தொடங்கினான்.


யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை...டென்ஷனில் மீண்டும் மீண்டும் முயற்சிக்க அவனின் பதட்டத்தை கண்ட வேதா மாறனின் அருகில் வந்தவள்…


ஏங்க எல்லாரும் கோவிலுக்கு போய் இருக்காங்க ஒருவேளை கோயிலுக்குள்ள இருந்தாங்களா ஃபோனை எப்படிங்க எடுக்க முடியும் சில கோயிலுக்குள்ள நெட்வொர்க் கிடைக்காது தானே.


அதும் பெரிய கோயில்னா வாசலிலே ஃபோனை வாங்கி வச்சுக்குவாங்க தானே என்று அவனைப் பார்த்து கேட்க அப்போது தான் அவனுக்கு உறைத்தது.



ஆம் அவர்கள் திருப்பதி அல்லவா செல்கிறேன் என்று சொன்னார்கள் அங்கிருக்கும் கோவில்களின் வாசலிலேயே ஃபோனை வாங்கி வைத்திருப்பார்களே என்று உணர்ந்து கொண்டவன் மறுபடியும் ராதிகாவின் பெற்றோர்களுக்கு அழைக்க தொடங்கினான்.


நல்லவேளையாக அப்பொழுதுதான் ராதிகாவின் பெற்றோர்கள் அவர்களின் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.


அவர்களுக்கு முந்தைய இரவில் நடந்த பிஸினஸ் பார்ட்டி எல்லாம் புதிது கிடையாது எப்பொழுதுமே நடப்பதுதான்.


அவ்வப்போது பிஸினஸை டெவலப் செய்வதாற்காக அவர்களின் பண்ணை வீட்டில் நடத்துவார்கள் வேலை ஆட்கள் பத்தவில்லை என்றால் வீட்டில் இருக்கும் வேலை ஆட்களை அழைத்துச் செல்வார்கள்.


பார்ட்டி நடந்த முதல் நாள் இரவில் ராதிகாவின் தந்தை அளவுக்கதிகமாக மது அருந்தியதால் அங்கேயே தங்கும் படி ஆகிவிட்டது அவரை மட்டும் விட்டுவிட்டு எப்படி வருவது என்று நினைத்த ராதிகாவின் தாயாரும் உடனே தங்கி கொண்டார்.


காலை கணவர் தெளிந்து கண்விழிக்கவும் தான் வீடு வந்தார் வந்ததும் நிலைமை அறிந்ததவர் மகளை எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.



மாறனின் போனுக்காக தான் காத்துக் கொண்டிருந்தவர் அவன் அழைத்ததும் மாப்ளை என்னை மன்னிச்சிடுங்க இப்போ என் பொண்ணு எப்படி இருக்கறா…? எந்த ஹாஸ்பிடல் என்று கேட்டார்.


பதில் கூறாதவன் கோபத்தில் கத்துவதற்காக வாயைத் திறக்க அவன் கையிலிருந்து மொபைல் ஃபோனை புடுங்கிய வேதா ஆன்ட்டி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை ராதிகாவுக்கு சிசேரியன் பண்ணி தான் குழந்தையை வெளியே எடுக்கனும்னு சொல்லிட்டாங்க அதனால ஆப்பரேஷன் நடந்துட்டு இருக்கு நீங்க உடனே வந்தா கொஞ்சம் நல்லா இருக்கும் என்று மருத்துவமனையின் பெயரைக் கூறியவள் மொபைல் போனை அணைத்து அவளே வைத்துக் கொண்டாள்.


மாறன் கோபத்தில் மீண்டும் அவருக்கு ஃபோன் செய்து வம்பு வளர்த்தால் என்ன செய்வது என்று.


அந்த நேரத்தில் அவளின் பக்குவம் மாறனை வெகுவாக கவர்ந்தது.

கோபத்தில் ஏதாவது தவறான வார்த்தையை ராதிகாவின் பெற்றோரிடம் பேசி வைத்தால் நாளை மகள் மருமகன் என்று அவர்கள் சேர்ந்து கொள்ளும் பொழுது இங்கு மாறனை அல்லவா தள்ளி வைத்திருப்பார்கள் அந்த எண்ணம் அந்த சமயத்தில் மாறனுக்கு தோன்றவில்லை.


ஆனால் வேதாவிற்கு தோன்றியது அதனால் அந்தப் பிரச்சினையை மிக அழகாக கையாண்டு தீர்வு கண்டு விட்டாள்.


இங்கு கோவிலுக்கு சென்றவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோவில் என்று சென்றுவர முதல் நாள்தான் பாட்டி அனைவரையும் அழைத்து தெளிவாக கூறிவிட்டார்.


ஆண்டவன் வேதாவிற்கும் மாறனுக்கும் கெட்டியாக முடிச்சி போட்டிருந்தால் அவர்களே நினைத்தால்கூட பிரிந்து செல்ல முடியாது ஒருவேளை ஆண்டவன் அந்த முடிச்சை சரியாகப் போடவில்லை என்றால் படைத்தவனே சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்தால் கூட கண்டிப்பாக அவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள் அதனால் இப்படி தினம் தினம் ஒவ்வொரு கோவிலாக சுற்றுவதை விட்டுவிட்டு இன்று காளஹஸ்தியும் நாளை திருப்பதியும் சென்று விட்டு உடனே ஊர் செல்லலாம் என்று முடிவெடுத்து விட்டார்.

ராதிகா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள்… தாத்தா முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார் நேற்று வந்த பெண் வீட்டில் தனியாக இருக்கிறாள் அதனால் அனைவருமே ஒரே மனதாக வீடு செல்லலாம்….என்றும் கூறினார்.


அவரின் எண்ணம் எங்கோ பிறந்த வேதாவையும் மாறனையும் திருமண பந்தத்தில் இணைத்த கடவுள் கண்டிப்பாக பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டார்... அதனால் இப்படி கோவில் கோவிலாக சுற்றி நேரத்தை விரயம் செய்யாமல் வரும் பிரச்சனையை நேருக்கு நேராக சந்தித்து மாறனுக்கு புத்தி கூறி வேதாவை அவனுடன் சேர்த்து வைக்கலாம் என்று நினைத்தார்.


அவர் கூறியதில் இருந்து உண்மையை அனைவருமே ஒத்துக் கொண்டதால் உடனடியாக அன்று நேராக காளகஸ்தி கோவிலுக்கு கிளம்பிச் சென்றார்கள் அன்றைய இரவு அங்கேயே தங்கியவர்கள் மறுநாள் அதிகாலையிலேயே நேரடியாக திருப்பதி ஆலயத்திற்குள் சென்று விட்டார்கள் .


அங்கு வாயிலேயே அனைவருடைய மொபைல் போன் மற்றும் அவர்களுடைய உடமைகளை வாங்கி வைத்ததால் இங்கு ராதிகாவிற்கு நடந்த அசம்பாவிதம் அவர்களுக்குத் தெரியவில்லை .


அவர்கள் மதிய வாக்கில் தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்து அவரவர் மொபைல் போனை ஆன் செய்யவும் ஒருவர் விடாமல் அனைவருக்குமே மாறன் அழைத்திருந்தது தெரிந்தது.



பெரியவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மாறனுக்கு அழைக்க பாட்டி தான் அனைவரையும் பார்த்து எல்லாரும் இப்படி ஒரே நேரத்தில் கூப்பிட்டா அவன் யாரோட ஃபோன் எடுப்பான் யாராவது ஒருத்தர் கூப்பிட்டு பேசுங்க என்று புத்தி கூறினார்.


அனுபவசாலி அல்லவா அவரின் அனுபவம் சிறியவர்களிடம் இல்லை பாட்டி ஒரு பிரச்சனையை நிதானமாக அணுக மற்றவர்கள் பதட்டத்தில் அணுகினார்கள்.


உடனே கனகா அவரின் ஃபோனில் மாறனுக்கு அழைத்து விசாரிக்க அப்பொழுதுதான் மருத்துவமனையில் ராதிகா அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றிருந்தாள்.


தாயும் சேயும் நலம் என்றும் சற்று முன்பு தான் ராதிகாவின் பெற்றோர்கள் மாறன் வேதா அனைவருமே குழந்தையை பார்த்துவிட்டு வந்த சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீரில் நின்று கொண்டிருந்தனர்.


சரியாக இவர்களின் அழைக்கவும் சந்தோஷத்தை பகிரவும் கோவிலில் இருந்த அனைவருக்குமே கொண்டாட்டம்தான் .


செழியனுக்கு சந்தோஷத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது தந்தையைப் பார்த்து அப்பா என்னால ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது உடனடியா ராதிகாவையும் குழந்தையும் பார்த்தே ஆகணும் என்னால வண்டியும் ஓட்ட முடியாது அதனால ப்ளீஸ் நீங்க ஓட்டுங்க... யாரெல்லாம் அப்பாவோட கார்ல வரீங்க என்று வருபவர்களை அழைத்துக்கொண்டு முதல் ஆளாக அங்கிருந்து கிளம்பினான்.



மருத்துவமனையில் மாலை வாக்கில் ராதிகாவை காண அனுமதிக்க முதல் ஆளாக வேதா தான் ஒடினாள்.


அவளைக் கண்டதும் ராதிகா அழுதே விட்டாள் அவள் மீது போட்டிருந்த மருத்துவ உபகரணங்களையும் மீறி எழுந்து உட்கார போனவளை தடுத்த வேதா ஒரு நிமிஷத்துல எங்க எல்லாரையும் பதற வச்சிட்டீங்க….ஆனா பாப்பாவ காமிச்சி எல்லாத்தையும் மறக்க வச்சிட்டீங்க என்று சிரித்தபடியே கூற.


நீங்க மட்டும் சரியான நேரத்துக்கு வரலன்னா இப்போ உங்களோட இப்படி பேசிட்டு இருக்க முடியாது...நீங்க ரொம்ப ஸ்வீட்...அதே சமயம் ப்ளசென்ட் ஆப் மைன்ட் கூட உங்களுக்கு என்று கூறினாள்.


என்னங்க ஏதேதோ சொல்லி என்னை கூச்சபட வைக்கறீங்க…


இல்ல வேதா நீங்க மட்டும் சரியான சமயத்துல குழந்தைகிட்ட பேசலனா குழந்தை அதோடு மூவ்மெண்ட்டை காமிச்சி இருக்காதுல்ல…. அது மூவ்மெண்ட்டை காமிச்சதால தானே நானும் மயக்கத்திலிருந்து எழுந்தேன்... என் வாழ்க்கையில கடவுளுக்கு நிகரா ஆகிட்டீங்க என்றாள்.


ராதிகா வேதாவிடம் பேச ஆரம்பிக்கும் பொழுதே உள்ளே வந்த மாறன் அனைத்தையுமே கேட்டுக்கொண்டிருந்தான்.


ராதிகா பட்ட கஷ்டங்களை கண்கூடாகக் கண்ட பிறகு அவனுக்கு பெண்களின் மேல் பல மடங்கு மரியாதை உண்டாயிற்று.


பெற்ற தாயின் மீது…
ராதிகாவின் மீது… பிரசவம் பார்த்த பெண் மருத்துவர் மீது …
வேதாவின் மீது…
லட்சுமி அக்காவின் மீது... என்று ஒவ்வொருவருமே அவனுக்கு வெவ்வேறு விதமான பெண் கடவுளாக தான் தோன்றினார்கள்.


அனைவரையுமே கையெடுத்து கும்பிட தோன்றியது….


பெண்கள் எவ்வளவு பெரிய சக்தி எவ்வளவு அசால்டாக அவர்களின் உயிரை துச்சமென மதித்து மற்றொரு உயிரை கொண்டுவருகிறார்கள்.


அவ்வளவு வலியையும் பொறுத்துக் கொண்டு என்னுடைய குழந்தையை காப்பாற்றுங்கள் என்று கேட்ட ராதிகா ஒரு தெய்வம் என்றால் அந்தக் குழந்தைக்கு துடிப்பு வரவேண்டும் என்று போராடிய வேதா மற்றொரு தெய்வமாக தெரிந்தாள் .


ராதிகாவின் கஷ்டத்தை அறிந்து அழுத லட்சுமி ஒரு பக்கம் தெய்வம் என்றால் பின்னால் தனக்கு பிரச்சினை வரும் என்று தெரிந்து தைரியமாக பிரசவம் மருத்துவர் மற்றொரு தெய்வமாக தெரிந்தார்.


அவன் மனதில் உடனடியாக ஒரு முடிவை எடுத்தான் நாளை வேதா இதுபோல் கருவுற்றால் அவளுக்கு குழந்தை பிறக்கும் வரை தான் எங்கும் செல்லக்கூடாது அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் ராதிகா பட்ட கஷ்டத்தை வேதாவிற்கு ஏற்படாத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு பிறகு தான் தோன்றியது.


வேதாவின் பெற்றோர்கள் வந்தவுடனே அவர்களின் பின் செல்ல போகிறவளின் வயிற்றில் எப்படி என்னுடைய கரு வளரும் வேதா அவர்களுடன் செல்ல மாட்டேன் என்று என்னுடனே இருந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏக்கத்துடன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் .


அவனுக்கு தெரியவில்லை வேதா அவனை விட்டுச் செல்கிறேன் என்று ஆரம்பத்தில் சொல்லவேயில்லை இவன் தான் அவளை அனுப்புகிறேன் என்றான் இவன் அனுப்புகிறேன் என்று சொன்னதால் மட்டுமே அவளும் செல்கிறேன் என்று கூறினாள்.


இவன் இப்பொழுது வேதாவிடம் செல்லாதே என்று கூறினால் கண்டிப்பாக அவள் செல்லப்போவதில்லை மாறன் அவனின் ஈகோவை விட்டு வேதாவிடன் கூறுவானா...இல்லை அவளின் பெற்றோர்களிடம் பேசி அவர்களுடன் அனுப்பி விடுவானா….? காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .


தொடரும்..
 
Top