16
காரில் செல்ல செல்லவே அவளிடத்தில் ஒரு கேள்வியும் பிறந்தது.
ஒருவேளை இதைச் சொல்வதற்காக தான் மாறன் தன்னிடம் டெல்லியில் பீடிகை மேல் பீடிகையாக போட்டு கொண்டு வந்தானோ…?
நான்தான் அதை காது கொடுத்துக் கேட்க வில்லையோ என்றெல்லாம் கூட தோன்றியது.
எது எப்படியோ கிளம்பி வந்தாகி விட்டது என்ன என்று தெரிந்து கொண்டே செல்லலாம் என்று நினைத்தாள்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேர பயணத்திற்குப் பிறகு காப்பக வாசலில் காரை நிறுத்தினார் டிரைவர் .
அவரை வெளியே சிறிது நேரம் காத்திருக்கும் படி பணிந்து விட்டு துணிந்து உள்ளே சென்றாள்.
முதல் வாயிலில் அவளை அனுமதித்த காவலாளி இரண்டாம் வாயிலில் காத்திருக்க வைத்தனர்.
அந்த காப்பகத்தின் பாதுகாப்பை பார்த்து சற்று மிரண்டு தான் விட்டாள்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த இடத்தில் சில ஏக்கர்களை வளைத்து போட்டு சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைத்து பல மரங்களுக்கு நடுவில் அமைதியாக இருந்தது அந்த காப்பகம் .
அதைப் பார்க்கும் பொழுது அவளுக்குச் சற்று ஆச்சரியம் தான் இதுபோல் இடத்தை வளைத்துப் போட்டு காப்பகம் நடப்பதெல்லாம் சாதாரண காரியமில்லை கண்டிப்பாக வெறும் அனாதை குழந்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய காப்பகத்தை நடத்துவது என்பது சற்று கடினம் தான் என்று புரிந்து கொண்டாள்.
இரண்டாம் வாயிலில் இவளிடம் யார் என விசாரிக்கவும் மாறனின் பெயரைச் சொன்னாள்.
சொன்னதுமே உடனடியாக அவளை உள்ளே அனுப்பி வைத்தார்கள் உள்ளே செல்லவுமே பாதி வழியில் வந்து ஒருவர் அவளை அழைத்து சென்று காப்பக நிர்வாகியின் முன்பு நிறுத்தினார்.
அவரும் அவளை கனிவுடன் வரவேற்று அமர வைத்தார்.
காப்பக நிர்வாகியான தேவகி அம்மாவிற்கு வயது அறுபதிற்கு மேல் இருக்கலாம்..
அமைதிபாங்கான முகம் அவரின் முகத்தை பார்த்ததுமே கேட்க எண்ணிய எந்த கேள்வியும் வேதாவிற்கு நியாபகம் வரவில்லை.
சொல்லுங்க மிஸஸ் வெற்றி மாறன்...எதுக்காக என்னை பாக்கனும்னு வந்தீங்க…
என் பெயர் எப்படி உங்களுக்கு…?என்று கேள்வியாய் இழுத்தாள்.
மென் நகை புரிந்தவர் எங்களுக்கு மாறன் சாரை பத்தி தெரியும் போது அவரோட மனைவி உங்களை பத்தி தெரியாதா என்று கேட்டவர் உங்களோட திருமண வாழ்க்கை நல்லா போய்கிட்டு இருக்கா என்று கேட்க நன்றாக போகிறது என்பது போல் தலையசைத்தாள்.
குட் என்று கூறியவர் என்ன விஷயமா இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாமா என்று கேட்டார்.
உடனே தயங்கியபடி விஷாகா…. என்று இழுக்க.
ஓஒஒ….விஷாகாவை பார்க்க வந்தீங்களா ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க என்றவர் உதவியாளரை அழைத்து விஷாகாவை அழைத்து வரும்படி பணித்தார்.
அந்த இடைப்பட்ட நேரத்தில் அவரிடம் கேட்க அவளிடம் பல கேள்விகள் இருந்தாலும் முக்கியமான சிலவற்றை கேட்டுத் தெளிவு பெற்றுவிடலாம் என்று நினைத்தாள்.
மேடம் உங்க கிட்ட சில விஷயங்கள் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன் உதவமுடியுமா ப்ளீஸ் என்று கண்கலங்கியபடி கையெடுத்துக் கும்பிட்டு அவளைப் பார்த்ததும் பதறி எழுந்தவர் என்ன ஆச்சு சொல்லுங்க என்றார் .
அறையைச் சுற்றிப் பார்த்த வேதா இங்க வேண்டாமே மேடம் கொஞ்சம் காத்தோட்டமா வெளியே போலாமே சில விஷயங்கள் என் மனச அறுத்துக்கிட்டே இருக்கு.
உங்கள என்னோட அம்மாவா நெனச்சுக்கிட்டு கேக்கறேன் சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க மேடம் ப்ளீஸ் .
நான் இங்கே வந்ததும் உங்க கிட்ட பேசினது இது எதுவும் என் கணவருக்கும் தெரியக்கூடாது உங்களை கையெடுத்து கும்பிடுறேன் என்று கேட்டு முடிக்கவும் யோசனையாக தலையசைத்தார்.
பொதுவா யார்கிட்டயும் நாங்க இந்த காப்பகத்தை பற்றின விஷயங்களையோ பேசிக்கொள்வதில்லை ஆனா மாறன் சார் இந்த காப்பகத்துக்கு செய்யற உதவி ரொம்ப பெரிசு அதனால அவருக்காக நீங்க கேக்கறதை முடிஞ்சா சொல்லறேன் என்றவர் வேதாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்து இருந்தார்.
சொல்லுங்க மிஸஸ் மாறன் உங்களுக்கு இந்த காப்பகத்தை பற்றி என்ன தெரிஞ்சுக்கணும் என்று நேரடியாகவே கேட்டார்.
சற்றும் யோசிக்காத வேதா காப்பகத்தை பத்தி கேட்கல மேடம் விஷாகாவை பத்தி தெரிஞ்சுக்கணும் அதுக்காக தான் வந்தேன் என்று உள்ளத்தை மறையாது கூறினாள்.
விஷாக பத்தி என்ன தெரிஞ்சுக்கணும்
நீங்க விஷாகாவை சட்ட ரீதியா தத்தெடுக்கறதை பத்தி ஒரு லெட்டர் அனுப்பி இருந்தீங்க அதான் என்னன்னு விவரமா தெரிஞ்சிட்டு போறதுக்காக வந்திருக்கேன்…
ஓ அதுவா அப்படின்னா நான் முழு விபரத்தையும் உங்க கிட்ட சொல்லிடறேன் ஏற்கனவே மிஸ்டர் வெற்றிமாறன் சொல்லி இருப்பார்னு நினைக்கிறேன் இருந்தாலும் நாங்களும் எங்களோட கடமைக்காக ஒருமுறை சொல்லிக்கறேன் என்றவர் கூற தொடங்கினார்.
இந்தக் காப்பகம் இரண்டு விதமான குழந்தைகளை பராமரிச்சி கிட்டு வருது முதலாவது அனாதை குழந்தைகள்... அவங்களை சிலபேர் பிறந்ததும் கொண்டு வந்தது இங்க போட்டுட்டு போவாங்க அப்படி இல்லனா பெற்றோர்கள் இல்லாமல் உறவினர்கள் யாராவது இங்க வந்து விட்டுட்டு போவாங்க…
அவங்களோட படிப்பு பராமரிப்பு செலவு எல்லாத்தையுமே நாங்கதான் பார்த்துக்கணும் மாறன் மாதிரி சில நல்ல உள்ளங்களும் அள்ளி அள்ளி கொடுப்பாங்க அதை வைத்து அந்த குழந்தைகளை வளர்த்து படிப்பு முடிஞ்சு வேலையில சேர்ந்ததும் அனுப்பி வச்சிடுவோம்…
இரண்டாவது வகையான குழந்தைகள் விஷாகா மாதிரியான குழந்தைகள் சொல்லப்போனால் அவங்கதான் இந்த காப்பகம் நடத்தவே உதவறவங்க…
இவங்களுக்கு பெற்றோர்கள் இருப்பாங்க அவங்களுக்கு அம்மா, அப்பா,இல்ல பாட்டி, தாத்தானு யாராவது விட்டுட்டு போன சொத்துக்கள் நிறைய இருக்கும்.
அவங்களுக்கு காடியன்னு ஒருத்தர் இருப்பாங்க... எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு காரணத்துக்காக இங்க கொண்டு வந்து விட்டுட்டு போவாங்க .
அவங்களோட பராமரிப்பு செலவு படிப்பு செலவு எல்லாமே அவங்களோட கார்டியனைத் தான் சேரும் அதுமட்டுமில்லாம அந்த மாதிரி குழந்தைகளோட பெற்றோர்கள் இந்த காப்பகத்திற்கு பணத்தை வாரி இறைப்பாங்க அவங்க குழந்தைகளை நாங்க நல்லா பாத்துக்கணும்னு….
அவங்க விரும்புற பள்ளியிலேயே படிப்பு ...அவங்க விருப்பம் போல இருக்கிற மாதிரி அவங்களுக்கு தனியா ஒரு பில்டிங்கே இருக்கும்.
தினமும் காப்பகத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்படற வாகனத்தில ஸ்கூலுக்கு போயிட்டு பத்திரமா இங்க வந்துருவாங்க அவங்களோட பாதுகாப்பு முழுக்க முழுக்க எங்களை சேர்ந்தது அதனால அந்த குழந்தைகள் மேல எப்பவுமே நாங்க ஸ்பெஷலா ஒரு கேர் வைத்திருப்போம் என்று கூறும் பொழுதே
வேதாவிற்கு தெளிவாக புரிந்தது... காப்பகம் எப்படி நடத்தப்படுகிறது என்று பல செல்வந்தர்கள், நடிக,நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் திரைமறைவு வாழ்க்கையில் உருவாகும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் காப்பகம் என்பது…
ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் தேவகியின் பேச்சை கவனித்தாள்.
அவரும் கர்ம சிரத்தையாக குழந்தையை பற்றி கூற ஆரம்பித்தார்.
விஷாகா இங்க வரும்போது மூணு வயசு குழந்தை ... விஷாகாவோட அம்மா சீதாவும் மாறனும் தான் கொண்டு வந்து விட்டாங்க...ஆனா ரெண்டு கார்டியன்ல சீதா மட்டும் தான் கையெழுத்து போட்டாங்க...ஏனோ அப்போ மாறன் சார் போடல...சில காரணங்களால குழந்தை கொஞ்ச நாள் இங்கேயே இருக்கட்டும் சொல்லிட்டு போங்க.
ஆனா அதுக்கப்புறம் சீதா வரவே இல்ல மாறன் மட்டும் அப்பப்போ வந்து பார்ப்பார் திடீர்னு ஒருநாள் சீதா இறந்துட்டதா மாறன் சொன்னாங்க அதோட இல்லாம குழந்தையை தன்னோட அழைச்சிட்டு போறதாவும் சொன்னாரு….
இந்தக் காப்பகத்தில் ரூல்ஸ் இங்கே யாருமே இல்லாம அனாதையா வந்தாலும் சரி பெற்றவவங்களோட பாதுகாப்பு இருக்குன்னு சொல்லி கொண்டு வந்து விட்டாலும் சரி யாரு கார்டியனா கையெழுத்து போடுவாங்களா அவங்க கூட மட்டும் தான் எதிர்காலத்துல குழந்தையை அனுப்புவோம்.
ஒருத்தர் விதி வசத்தால போனாங்கன்னா இன்னொருத்தர் பின்னாடி அனுப்பி வைப்போம் அப்படி இல்லேன்னா ரெண்டு பேரும் சேர்ந்து வந்தா மட்டும் தான் கொடுத்தோம் இதுதான் இந்த காப்பகத்தோட சட்டதிட்டம்.
அதுக்கு சம்மதிச்சா மட்டும்தான் குழந்தைகளை நாங்க உள்ளேயே எடுத்துக்குவோம் சீதா விஷாகாவை கொண்டு வந்து சேர்க்கும் போது இது பத்தி தெளிவா அவங்க கிட்ட சொல்லி கையெழுத்து வாங்கிட்டு தான் விஷாகாவை உள்ளயே எடுத்துக்கொண்டோம்
ஆனா ரெண்டு பேருமே அதை காதுல போட்டுகிட்ட மாதிரி தெரியல சீதா தவறவுமே மாறன் குழந்தையை அழைச்சிட்டு போறேன்னு வந்தாங்க…
என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே பணியாளர் ஒருவர் விஷாகா என்னும் அச்சிறுமியை அழைத்துக்கொண்டு வந்தார்.
அத்தோடு பேச்சி தடைபட குழந்தை முன்பு எதுவும் பேசாமல் தேவகி அம்மா மௌனம் காக்க குழந்தையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் வேதா தேவகி அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் விஷாகா இவளின் அருகில் வர தேகவி அம்மா அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
எட்டுவயது நம்ப முடியாதது போல் தோற்றம் விஷாகாவிற்கு.
கிட்டத்தட்ட வேதாவின் உயரத்திற்கு இருந்தாள். அவளை பார்க்கும்போதே தெரிந்தது இந்த காப்பகத்தில் எந்தளவுக்கு குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார்கள் என்று.
ஹாஸ்டல் சிறையில் இருக்கிறோம் என்று சிறிதும் கவலையில்லாமல் துள்ளிக் குதித்தபடி ஓடி வந்தவள் விசாவை கட்டி அணைத்துக் கொண்டவள் அவளின் முகம் பார்த்து.
வேதாம்மா எப்படி இருக்கீங்க இப்போ தான் என்னை பாக்கணும்னு உங்களுக்கு தோணுச்சா என்று நெடுநாள் பழகிய குழந்தைபோல் இவளைப் பார்த்து கேட்கவும் அதிர்ச்சியில் விஷாகாவின் முகத்தை பார்த்தவள் .
நான்தான் உனக்கு வேதானு எப்படி தெரியும் என்று கேட்டாள்.
தெரியும் ….
அதான் எப்படினு கேட்டேன் விஷாகா…
நேத்து டாடி வந்தாங்கல்ல அப்போ தான் உங்க போட்டோவை காமிச்சாங்க இவங்க தான் உன்னோட அம்மானு என்று கூறியவள்.
என்னை கூட்டிட்டு போறதுக்காக தான் வந்திருக்கீங்களா ப்ளீஸ் வேதாமா சீக்கிரமா என்னை கூட்டிட்டு போங்க எனக்கு ரொம்ப போர் அடிக்குது டாடி கிட்ட எத்தனை நாளா கேட்டுக்கிட்டு இருக்கேன் தெரியுமா…?. எப்ப என்ன கூட்டிட்டு போறீங்க…. எப்போ என்ன கூட்டிட்டு போறீங்கன்னு….
இப்போ தான் ஒரு வழியா சம்மதிச்சு இருக்காங்க நேத்து தான் பர்ஸ்ட் டைம் சொல்லிருக்காங்க அடுத்த முறை கண்டிப்பா நானும் மம்மியும் வந்து கூட்டிட்டு போறேன்னு.
நேத்து இருந்து நான் தூங்கவே இல்லை தெரியுமா டாடி என்ன வந்து சீக்கிரமா கூட்டிட்டு போவாங்க பார்த்தா இன்னைக்கு உங்கள அனுப்பி வச்சிருக்காங்க என்று அக்குழந்தை சற்று குரல் தழுதழுக்க அவளை அணைத்தவாறே பேசிக்கொண்டிருக்க வேதாவிற்கு முற்றிலும் புரிந்து விட்டது.
மாறன் முழுக்க முழுக்க சுயநலத்திற்காக மட்டுமே தன்னை அவனுடனே வைத்திருக்கிறான் …. சட்டரீதியாக ஒரு மகள் தனக்கு இருப்பதை உலகத்திற்கு காட்டிக்கொள்ளவே மனைவி என்னும் ஒரு அந்தஸ்தை தனக்கு கொடுத்திருக்கிறான் என்று புரிய அந்த சமயத்தில் அக்குழந்தையிடம் எதுவுமே கூறிக் கொள்ள முடியாமல் தவித்தவள்.
பிறகு குழந்தையை தன்னிடமிருந்து பிரித்து எடுத்தாள் இருகைகளாலும் குழந்தையின் முகத்தை கைகளில் ஏந்தி அவளின் கண்களைப் பார்த்து எதையுமே ரொம்ப எதிர்பார்த்து காத்திருக்க கூடாது விஷாகா என்று கூறியவள் அவளின் நெற்றியின் மீது முத்தம் வைத்து தலையில் தனது கைகளை வைத்து ஆசிர்வதிப்பது போல் அவளின் சிகையை சற்று கோதிவிட்டபடி அங்கிருந்து வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
தேவகியம்மா விஷாகா அங்கிருக்கும் பணியாளர்கள் அனைவருக்குமே சற்று அதிர்ச்சிதான் என்ன இது பேசிக்கொண்டிருக்கும் பொழுது அப்படியே பாதியில் விட்டுவிட்டு செல்கிறாளே என்று.
பணியாளர் வந்து தேவகியிடம் மேடம் மாறனுக்கு சாருக்கு வேணா ஃபோன் பண்ணலாமா என்று கேட்க .
இல்லல்ல... இவங்க வந்து உடனே சொல்லிட்டாங்க மிஸ்டர் மாறனுக்கு வந்த விஷயம் தெரிய கூடாதுன்னு அனேகமா அவங்க ரெண்டு பேர்க்குள்ளயும் ஏதோ பிரச்சனைனு நினைக்கிறேன் மிஸ்டர் மாறன் குழந்தையை பார்க்க வந்தா என் பர்மிஷன் இல்லாம விஷாகாவை காமிக்க வேண்டாம்.
முதல்ல விஷாகாவிற்கும் மாறனுக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சுதுக்கு அப்புறம் தான் இனிமே குழந்தையை அவரோடு அனுப்புவதை பத்தி நாம யோசிக்கணும் என்று கூறிய தேவகி அம்மாவிற்கு பல குழப்பங்கள் வந்திருந்தது.
வேதாவிற்கு தன்னை பிடிக்கவில்லை என்னை அவளுடன் அழைத்துச் செல்ல மாட்டாள் என்று புரிந்த விஷாகா அழ ஆரம்பித்தாள்.
அவனை சமாதானப்படுத்தி பணியாளர் அவளின் அறைக்கு அழைத்துச் செல்ல வேகமாக வெளியில் வந்து காரில் ஏறி அமர்ந்த வேதா வீட்டுக்கு போங்க என்று கூறியபடி கண்களை மூடி சாய்ந்து கொண்டாள்.
மனம் எங்கிலும் வேதனை... வலி மட்டுமே மிச்சமிருந்தது.
மாறன் ஏன் இத்தனை நாள் திருமணம் வேண்டாம் என்று கூறிக் கொண்டிருந்தான் என்பது இப்பொழுது அவருக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.
ஏற்கனவே திருமணமாகி ஒரு இருட்டு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான் அதற்கு அடையாளமாக அவனுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது அந்தக் குழந்தை ஊர் உலகத்திற்கும் முன்பு காட்ட பயந்தபடி திருமணம் வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்து இருக்கிறான்.
தற்சமயம் அக்குழந்தையை அவனுடன் அழைத்துச் செல்ல ஏதோ ஒரு நிர்பந்தம் ஏற்பட்டிருக்க அதற்கு மனைவி எனும் ஒரு பெண் தேவைப்பட அதற்காக மட்டுமே தன்னைக் வைத்திருக்கிறான்.
அவனுக்குத் தன்னை பிடிக்காவிட்டாலும் காப்பகத்திற்கு காட்ட ஒரு பெண் தேவைபடவே சகித்துக் கொண்டு உடன் வைத்துள்ளான்.
அவனுக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று உண்மையைச் சொன்னால் நான் அவனை விட்டுவிட்டு சென்று விடுவேனோ என பயந்து டெல்லி வரை அழைத்து சென்று அவனுடன் வாழ்க்கையை ஆரம்பிக்க வைத்திருக்கிறான்.
இனி அவனின் தேன் தடவிய பேச்சாலும் நல்ல கணவன் என்று பெயர் பெற்றதும் மெதுவாக என்னிடம் சம்மதம் பெற்று விஷாகாவை அழைத்து வரலாம் என்பது அவனின் திட்டம் போல…
அவனின் திட்டத்திற்கும் நான் சம்மதிக்க போவதில்லை யாருடைய குழந்தைக்கு யார் அம்மாவாக இருப்பது.
இங்கு ஆயா வேலை பார்ப்பதற்காக தான் நான் வந்தேன்னா முடியாது இப்படி ஒரு வாழ்க்கையும் வேண்டாம் ஆயா என்னும் பதவியும் எனக்கு வேண்டாம் என்று முடிவெடுத்தாள்.
ஒருவழியாக வாகனம் வீட்டு வாசலில் வந்து நிறுத்தவும் யாரிடமும் பேசாமல் நேராக அறைக்குச் சென்றவள் அவளது உடமைகளை எல்லாவற்றையும் அடுக்க ஆரம்பித்திருந்தாள்.
உள்ளே வரும்போதே கலக்கத்துடன் கோபத்துடனும் வந்த வேதாவை பெண்கள் அனைவருமே கவனித்தனர்.
கனகா என்ன என்று விசாரிப்பதற்காக அறைக்குள் வர பெட்டியை எடுத்துக் கொண்டு வேதா வெளியே வரவும் சரியாக இருந்தது.
என்ன ஆச்சு வேதா எங்க கிளம்பிட்ட என்று ஆச்சரியமாக கேட்கவும்.
நான் எங்க இருக்கணுமோ அங்க கிளம்பிட்டேன் என்று மொட்டையாக கூறியபடி நடக்க ஆரம்பித்தாள் வேதா.
ராதிகா இடையில் வந்து தடுத்தபடி என்னாச்சு அக்கா பெட்டியை எடுத்துட்டு போற அளவுக்கு என்ன ஆச்சு ஆமா நீங்க எங்க போயிட்டு வந்திங்க என்று கேட்கவும்.
ராதிகா முதல்ல வழிவிடு இனிமே இந்த வீட்ல இருக்கிற யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லைனு நினைக்கிறேன் இந்த வீட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பொதுவாக கூறியவள்.
கனகாவை பார்த்து இனிமே உங்க புள்ளைக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர் வந்தா சொல்லிடுங்க…
ஆனாலும் ஒரு விஷயத்துக்காக உங்க அத்தனை பேரையும் பாராட்டியே ஆகனும்.எல்லாருமே எவ்ளோ அழகா நடிச்சி என் குடும்பத்தையே ஏமாத்திருக்கீங்க….
எதுக்காக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து என்னை கூட்டிட்டு வந்தீங்கனு பல நாள் நினைச்சிருக்கேன் அதற்கான விடை எல்லாமே எனக்கு கிடைச்சிருக்கு உங்க நடிப்பு கெல்லாம்
ஆஸ்கர் அவார்டு தான் கொடுக்கணும் இந்த அளவுக்கான நடிப்பை நான் இதுவரை எங்கேயுமே பார்த்ததில்லை என்று கூற.
கோபமடைந்த பாட்டி என்ன வேதா நீ போறதுன்னா தாராளமா இங்கிருந்து போகலாம் ஆனா அதுக்கு என்ன காரணம்னு சொல்லிவிட்டு போ.
அப்புறம் ஏதோ சொன்னியே ரொம்ப அழகா நடிக்கறோம்னு அப்படி என்ன எங்க நடிப்பைப் பார்த்து நீ ஏமார்ந்த என்று கோபமாகக் கேட்டார்.
உடனே பாட்டியை திரும்பிப் பார்த்த வேதா ஆஹா யாருக்கும் எதுவுமே தெரியாது இல்லையா சரி அப்படியே இருக்கட்டும் என்றவள் கனகாவிடம் திரும்பி.
என்னோட கேள்விகளுக்கு மட்டும் இப்போ பதில் சொல்லுங்க உங்க பையன் ஏன் இத்தனை வருஷமா கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருந்தாரு…?
பெரியவர் இருக்கும்போது ஏன் அவரோட தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க …?
இப்போ மட்டும் எதற்காக உங்க பையனுக்கு கல்யாணம் தேவைப்பட்டது…?
இந்த சென்னைல இல்லாத பொண்ணா...இங்க விட்டுட்டு எதுக்காக என்னை ஊரிலிருந்து இங்கு கூட்டிட்டு வந்தீங்க என்று அடுக்கடுக்காக கேள்விகளை அவர்களின் மேல் வைத்தாள்.
நீ கேக்குறதுக்கு எதுவுமே எங்களுக்கு சுத்தமா புரியல வேதா... அவனுக்கு ஏனோ கல்யாணத்துல விருப்பமில்லை அவனுக்காக வந்த ஜாதகம்தான் ராதிகாவோடது…
அந்த சமயத்தில் மாறன் பிடிவாதமா இருந்ததால ராதிகாகும் செழியனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கட்டாயம்...இல்லானா நாங்க கண்டிப்பா செழியனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருக்க மாட்டோம்.
அப்புறமா எதுக்காக எளிமையான வீட்டிலிருந்து உன்னை கூட்டிட்டு வந்தோம்னு நீ கேக்கறதே தப்புமா உன்னோட ஜாதகம் எதேச்சையாய் என் கைக்கு கிடைத்தது போட்டோவை பார்த்ததுமே எனக்கு உன்ன ரொம்ப புடிச்சு போச்சு அந்த சமயத்துல மாறனும் கல்யாணத்துக்கு கொஞ்சம் ஒத்துக்கறது போல இருந்ததால உடனே உன்னை பாக்க வந்துட்டோம்.
பொண்ணு ஏழையா இருந்தா என்ன வசதியா இருந்தா என்ன கிராமமா இருந்தா என்ன பட்டணமா இருந்தா என்ன…. உன்னை கல்யாணம் பண்ணி வைக்க வந்தோம் மத்தபடி எங்களுக்கு நடிக்கலாம் தெரியாது மா நீ எதோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசிகிட்டு இருக்க .
நான் சரியாதான் புரிஞ்சுக்கிட்டு பேசுறேன்... நீங்க எல்லாரும் தான் இன்னுமே உங்க மனசுல இருக்குறத வெளிப்படையா சொல்ல மாட்டேங்கறீங்க உங்ககிட்ட என்னால வாதாட முடியாது நான் முதல்ல இங்கிருந்து கிளம்பறேன் என்று கூறியபடி பெட்டியை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே செல்ல முற்பட்டாள்.
வாசல்படியை தாண்டும் முன்னே அவளின் கையை பிடித்து தடுத்த கனகா உன் கால்ல வேணா விழுறேன் தயவுசெஞ்சு முதல்ல உள்ளே வா... மாறன் வந்ததும் என்னனு பேசிக்கலாம் அவனையே வேணாலும் உன்னை கொண்டு போய் உன் வீட்டில் விட சொல்றேன் இப்படி நீ தனியா போறது சரி கிடையாது அவன் வர்ற வரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு என்று கெஞ்சினார்.
அவரின் கைகளை தட்டி விட்ட வேதா போதும் அத்தை இதுக்கு மேல நீங்க நடிக்காதீங்க உங்களோட நடிப்பை பார்க்கும் பொழுது எனக்கு அவ்வளவு கோபம் வருது தயவு செஞ்சு என்னை போக விடுங்க என்று கூறினாள்.
உடனே கோபம் கொண்ட பாட்டி சும்மா நடிக்கறோம் நடிகறோம்னு சொல்லாத நாங்க எதுக்காக நடிக்கனும் அத முதல்ல தெளிவா சொல்லு என்று கேட்டார்.
ஆங்காரத்துடன் பெட்டியைக் கீழே எரிந்தவள் பாட்டியிடம் வந்து உங்க பேரனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்கு அவருக்கு எட்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு இந்த விஷயம் உங்களுக்கு எல்லாம் தெரியாதுனு சொல்லுங்க பார்க்கலாம் என்று கேட்க அனைவரும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
என்ன உளர்ற….என்று கனகா கண்களை உருட்டியபடி மிரட்டினார்.
அவருக்கு சீதாங்கற பொண்ணோட ஏற்கனவே கல்யாணம் ஆகி எட்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு... ஏதோ ஒரு காரணத்தால இப்போ சீதா இல்ல. இப்போ அவங்களோட குழந்தை பிரைவேட் ஆப்னேஜ்ல வளருது...இது உங்க யாருக்கும் தெரியாது என்று மீண்டும் இவள் அவர்களை பார்த்து கேட்டாள்.
அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் கனகாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…
உடனே கனகா ஏதோ கூற வர இடைமறித்த பாட்டி நான் கூறுகிறேன் என்பது போல் வேதாவிடம் வந்தவர் இதுதான் உன் பிரச்சனையா ...சீதா பல வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டுல வேலை செஞ்ச மணிமேகலையோட பொண்ணு வேதா…
அவளுக்கு கல்யாணமாகி பத்து வருஷம் ஆச்சு...உனக்கு இப்படி சொன்னா புரியாது ஆரம்பத்துல இருந்து சொல்றோம் அப்போதான் உனக்கு புரியும் என்றவர் மாறனின் கடந்த காலத்தை கூறத் தொடங்கினார்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு மாறன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தந்தைக்கு துணையாக அவர்களது கடையின் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது செழியன் கல்லூரி ஆரம்பக்கட்டத்தில் இருந்தான்.
ரத்தினமும் அவரது தந்தை ராஜனும் தான் கடையில் எல்லா முக்கிய பொறுப்பு களையும் பார்த்துக் கொண்டிருநதனர்.
மாறனின் தாத்தாவான ராஜன் பழங்காலத்தில் உரியவர் அவர் சில விஷயங்களில் எல்லாம் மிகவும் கட்டுக்கோப்பாக இருப்பார்.
ஜாதி மட்டும் அந்தஸ்து அவரின் ரத்தத்திலேயே ஊறி இருந்தது அந்த மாதிரியான ஒரு சமயத்தில்தான் வீட்டில் வேலை செய்யும் மணிமேகலை தனது மகளுக்கு வேலை கொடுக்கும்படி கனகாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
மணிமேகலை திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே கணவனை இழந்தவள் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே அந்தக் குழந்தையின் பெயர் தான் சீதா.
மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தவர் அவள் படிப்பு முடித்து வேலைக்கு செல்ல ஆயத்தமாகவும் வெளிய வேலைக்கு அனுப்ப பயந்துகொண்டு கனகாவிடம் சிபாரிசுக்கு வந்தார்.
கனகா தனது மாமனாரிடம் கணவரிடமும் சீதாவிற்கு ஒரு வேலை கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார் .
சீதா பி.காம் வரை படித்திருந்ததால் அவளுக்கு கடையில் அக்கவுண்ட்ஸ் பார்க்கும் வேலையை கொடுத்தனர்.
அப்பொழுது அங்கு தாத்தாவிற்கும் தந்தைக்கு உதவியாக இருந்த மாறனின் பார்வை சீதாவின் மேல் பட சீதாவின் பார்வையும் மாறனை சுவாரசியமாக பார்க்க இருவருக்குமே காதல் தீ பற்றிக்கொண்டது.
இருவரும் அங்கிருந்தவர்களின் கண்களை மறைத்துக் கொண்டு காதலை வளர்த்துக் கொண்டிருக்க ஒரு நாள் படிக்கட்டு மறைவில் சீதாவிடம் மிக நெருக்கமாக மாறன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த தாத்தா உடனடியாக அந்த விஷயத்தை கனகாவின் காதுகளுக்கு எடுத்து வந்தார்.
இங்கப்பாரு கனகா நீ சொன்னங்கற ஒரே காரணத்துக்காக தான் நம்ம வீட்டுல வேலை செய்யறவளோட பொண்ணுன்னு கூட பார்க்காம கடையில ஒரு கவுரவமான வேலை போட்டுக்கொடுத்தேன்.
ஆனா அந்த பொண்ணு வேலைக்காரிங்ற நினைப்பை மறந்து போய் கடை முதலாளி ஆகணும்னு ஆசை வந்திடுச்சு…
நான் மாறன் கிட்ட பேசினா பிரச்சனை வேற மாதிரி போயிடும் அதனால உன் கிட்ட சொல்றேன் நீ என்ன பண்ணுவேனு தெரியாது ரெண்டு பேரும் இனி பேசிக்க கூடாது….
அவ அம்மா கிட்ட சொல்லி அந்த பொண்ணை அடக்கி வைக்க சொல்லு இல்லனா நான் மனுசனா இருக்க மாட்டேன் என்று கூறியபடி சென்றுவிட்டார் .
மாமனாரின் கோபத்திற்கு பயந்த கனகாவும் மணிமேகலை இடம் வந்து கோபமாகப் பேசினார்.
இங்க பாரு மணி ஏதோ பத்து வருஷத்துக்கு மேல இந்த வீட்ல வேலை செய்றேன்னு பாவம் பார்த்து உன் பொண்ணுக்கு கடையில வேலை வாங்கி கொடுத்தா உன் பொண்ணுக்கு இந்த வீட்டுக்கு முதலாளியா வரணும்னு ஆசை வந்திருச்சு போல.
இதுதான் நீ பொண்ணை வளர்த்து இருக்கற லட்சணமா…?
அப்பா இல்லாத பொண்ணு இப்படித்தான் தரம் கெட்டு போய் வளரும்ங்கறதுக்கு உன் பொண்ணு தான் நல்ல உதாரணம்.
எந்த அளவு உன்னை நம்பி நான் உனக்காக என் மாமனார் கிட்டயும் வீட்டுக்காரருக்கும் பேசி உன் பொண்ணுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தேன் அந்த நன்றி கொஞ்சமாவது உனக்கும் உன் பொண்ணுக்கு இருக்கா…?
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்றதை பத்தி கேள்விப்பட்டு இருக்கேன் இன்னைக்கு கண்ணு முன்னாடி பாத்துட்டேன்... இந்த மாதிரியெல்லாம் நீ பண்ணுவேனு நான் கனவுல கூட நினைச்சி பாக்கல….
பாவம் மாறன் சின்ன பையன் வேகுளி அத பயன்படுத்தி கிட்டு உன் பொண்ணு அவனை நல்லா வளைச்சு போட்டு கிட்டா…
இப்போ இதை போய் நான் என் பையன் கிட்ட கேட்க முடியுமா... அவன் சின்ன பையன் அவன பத்தி எங்க எல்லாருக்கும் நல்லாத் தெரியும் நீயும் உன் பொண்ணும்தான் நல்ல திட்டம் போட்டு என் பையன உங்க வலைல விழ வச்சிட்டீங்க …!
நல்ல பேரு வெச்சிருக்க உன் பொண்ணுக்கு சீதான்னு பேருக்கும் உன் பொண்ணு நடந்துக்கறதுக்கும் துளியாவது சம்பந்தம் இருக்கா...
சரி போகட்டும் விடு உன் பொண்ணு என் பையனை விட்டு போறதுக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லு…?
பணத்துக்காக தான என் புள்ளையோட பழக விட்ட என்று வார்த்தைகளை அள்ளி வீச கோபம் கொண்ட மணிமேகலை அன்றைய நாளிலே சீதா வீட்டுக்கு வரவும் சகட்டுமேனிக்கு அவளை அடித்தவர்
அதன் பிறகு கடைக்கு வேலைக்கு அனுப்ப வில்லை இவரும் வீட்டு வேலைக்கும் வரவில்லை... தொல்லை விட்டது என யாருமே அவர்களை தேடவும் இல்லை.
இங்கே அதே நேரத்தில் தாத்தா கடைக்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்று மாறனையும் வெளியூருக்கு அழைத்துச் சென்று விட அந்த இடைப்பட்ட நாளில் மணிமேகலை அவர்களின் சொந்தத்தில் ஒரு மாப்பிள்ளையை பிடித்து சீதாவிற்கு அவசர அவசரமாக கட்டாயக் கல்யாணம் செய்து வைத்தார்.
அதன்பிறகு மணிமேகலையும் ஊரை விட்டே விட்டுச் சென்றுவிட்டார்.
கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து வீட்டிற்கு வந்த மாறன் சீதா வேலைக்கு வரவில்லை என்று தெரிந்ததும் மிகவும் தவித்து போனான்.மணிமேகலை பற்றி தாயிடம் விசாரிக்க தெளிவான பதில் இல்லை…
எங்கயோ போறேன் இனிமேல் வேலைக்கு வர மாட்டேன்னு சொன்னா நானும் கணக்கு முடித்து அனுப்பி விட்டேன் என்று முடித்துக் கொண்டார்
பிறகு சீதா எங்கே என்று அவளைத் தேடி குடியிருந்த இடத்திற்கு சென்று விசாரிக்க அவளுக்கு திருமணமாகி விட்டது என்றும் மணிமேகலை ஊரை விட்டே சென்று விட்டார் என்பது தெரிந்ததும் மனதளவில் உடைந்து விட்டான்.
சீதாவின் மேல் அவனுக்கு அவ்வளவு கோபம் வந்தது எந்த அளவு தனது மனதில் நம்பிக்கையை விதைத்து இருந்தாள்.
வேண்டாம் என்று விலகி சென்றவனை வம்புக்கிழுத்து காதலிக்க வைத்ததும் அவள் தான் இன்று அவனை ஏமாற்றி விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டதும் அவள் தான் பெண்களின் மீதே அவனுக்கு வெறுப்பு வந்தது…
அதன்பிறகுதான் சில நாட்கள் கழித்து கடையில் வேலைக்கு இருந்த பெண்கள் அனைவரையுமே தாத்தா வேலையை விட்டு நிறுத்தவும் தான் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
அவனின் காதலுக்கு எதிராக அவனின் குடும்பமே இருந்தது தெரிய வரவும் குடும்பத்தாருடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டான்.
அதன் பிறகு வீட்டின் வேலையாட்கள் மூலம் நடந்தவற்றையெல்லாம் தெரிந்து கொண்டான்.
ஆனாலும் சீதாவிற்கு தானும் தனது குடும்பமும் பெரியதொரு அநியாயம் செய்து விட்டதாக மனதளவில் நம்பியவன் தனக்கு இனி திருமணமே வேண்டாம் என்று உறுதியாக இருந்து விட்டான்.
தாயாரிடம் இந்த நிமிடம் வரை அவன் சீதாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்டுக் கொண்டதே கிடையாது ஆனால் கனகா அப்படி இருக்கவில்லை சீதாவைப் பற்றிய விஷயங்களை அவ்வப்போது தெரிந்து கொண்டுதான் இருந்தார்.
பின்னொருநாள் சீதா அவள் கணவருடன் சந்தோஷமாக இருப்பதாகவும் அவளுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிந்த பிறகு கனகா அதைப் பற்றி யோசிக்கவில்லை.
சீதா கணவன் மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்வதை அறிந்துகொண்ட மாறனும் சீதாவைப் பற்றி யோசிப்பதை நிறுத்திக்கொண்டான்.
ஆனால் அவனது முடிவில் தெளிவாக இருந்தான் தன்னுடைய வாழ்க்கையில் இனி பெண்களுக்கு இடமில்லை என்று.
ஒரு வழியாக குடும்பத்தாரின் கட்டாயத்தின் பேரில் வேதாவைத் திருமணம் செய்து வைத்தனர் அதன்பிறகு நிதர்சனத்தை புரிந்து கொண்டு வேதாவிடம் ஒன்றி வாழ்வதாகவும் கனகா கூறி முடிக்க எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த வேதா மேலும் கோபம் கொண்டாள்.
ச்சே... ஏதோ ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு யாருக்கும் தெரியாம ரகசியமா வாழ்ந்துருக்காருன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன் இப்போ தான் தெரியுது இன்னொருத்தனோட பொண்டாட்டியோட உறவு வைச்சிக் கிட்டு அவ மூலமா ஒரு குழந்தையும் பெத்துகிட்டு இப்போ அந்த குழந்தையை அனாதை மாதிரி ஒரு காப்பகத்தில் வச்சி வளர்கறதை பார்க்கும் போது அருவருப்பா இருக்கு.
இந்த மாதிரி ஒருத்தனோடவா கிட்டத்தட்ட ஒரு மாசம் வரைக்கும் நான் குடும்பம் நடத்தினேன் என் உடம்பை நெருப்பாய் கழுவினா கூட அந்த அசிங்கம் போகாது என்று வேதா முகத்தை சுளித்தபடி அருவருப்புடன் பேசவும் கனகா கோபம் கொண்டு வேதாவிற்கு ஓரு அறை விட்டிருந்தார்.
யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட என் பையன் தங்கம் தெரிஞ்சிக்கோ…அவன் வாழ்க்கைல ரெண்டே தப்பு தான் செஞ்சான் ஒன்னு அவன் தெரியாம செஞ்சது….
அவனோட விடலைப்பருவத்தில சீதாவை காதலிச்சது ….
ரெண்டாவது தெரிஞ்சே செஞ்ச தப்பு உன்ன கட்டிக்கிட்டது... உன்னை மாதிரி ஒரு பொண்ணை என் பேச்சை கேட்டு கல்யாணம் பண்ணிகிட்டது தான் அவன் செஞ்ச மிகப் பெரிய தப்பு .
எப்போ என் பையனை இவ்வளோ கேவலமா நினைச்சுக்கிட்டயோ அதுக்கு அப்புறமா உனக்கு இந்த வீட்ல இடம் கிடையாது மொதல்ல வெளியே போ என்று கோபமாக பேசி முடித்தார்.
உடனே வேதாவும் மேலும் கோபம் கொண்டு நீங்களே என்னை இங்க இருக்க சொன்னாலும் நான் இங்க இருக்கப் போறதில்லை இந்த மாதிரி ஒரு அசிங்கம் புடிச்ச குடும்பத்தோட இருக்கணும்னுங்கற தலையெழுத்து எனக்கு கிடையாது.
உண்மைய சொல்லுங்க அந்த சீதா அவளே செத்தாளா இல்ல உங்க குடும்ப கௌரவத்திற்காக நீங்க எல்லாரும் சேர்ந்து அவளை யாருக்கும் தெரியாம கொண்ணு புதைச்சிட்டீங்களா…?
இல்லீகலா பிறந்த குழந்தையை இப்போ என் மூலமா சட்டப்படி வீட்டுக்குள்ள கொண்டு வரலாம்னு பார்க்கிறீர்களா கண்டிப்பா நான் இருக்கிற வரைக்கும் அது நடக்காது.
முடிஞ்சா என்னை மாதிரி ஏழை பொண்ணா பார்த்து உங்க பையனுக்கு மூணாவதா ஒரு கல்யாணத்தை பண்ணி அதுக்கப்புறமா உங்களோட இல்லீகல் பேத்தியை லீகல் பேத்தியா இந்த வீட்டுக்குக் கொண்டு வந்துக்கோங்க என்று கூறியவள்.
யாருடைய பேச்சையும் கேட்காமல் நேராக விடுவிடுவென வெளியே வந்து ரோட்டில் சென்ற ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு ரயில் நிலையம் சென்றாள்.
வீட்டில் அனைவருமே திக்பிரமை பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்.
முதலில் வேதா இங்கிருந்து சென்றது அதிர்ச்சி என்றால் அங்கே மாறன் சீதாவின் குழந்தையை காப்பகத்தில் வைத்து வளர்ப்பது இரண்டாவது அதிர்ச்சி.
சீதா திருமணம் ஆகி சென்றுவிட்டாள் என்றுதான் இத்தனை ஆண்டு காலம் நிம்மதியாக இருந்தார்கள் ஆனால் திருமணம் செய்து கொண்டு போனவளுக்கு எப்படி மகனுடன் மீண்டும் பழக்கம் உண்டாயிற்று எப்படி அவளது குழந்தை மாறனிடம் வந்தது இப்படி பல பல கேள்விகள் கனகாவின் மனதில் எழுந்தது.
உடனடியாக மாறனுக்கு அழைக்க அங்கே மாறன் காப்பகத்தில் விஷாகாவை சமாதானப்படுத்தி கொண்டிருந்தான்.
வேதா வந்து சென்ற விஷயத்தை ஏற்கனவே தேவகி அம்மா கூறிவிட்டார்.
அவள் வந்து சென்றதிலிருந்து விஷாகா அழுது கொண்டிருப்பதாக கூறவும் எப்படி அங்கே வேதா சென்றாள் என்று யோசித்தவனுக்கு பிரோவில் இருந்து ஃபைலை எடுக்க சொன்னது ஞாபகம் வரவும் எல்லாம் புரிந்து விட்டது.
அவள் ஃபைலை எடுக்கும் பொழுது விஷாகா பற்றிய கோப்புகளைப் பார்த்து இருப்பாள் அதனால் தான் காப்பகம் வரை தேடிக் வந்திருக்கிறாள் என்று நினைத்தவன் வீட்டுக்குச் சென்றதும் வேதாவை சமாதானப்படுத்திக் கொள்ளலாம் முதலில் விஷாகாவை சமாதான படுத்தலாம் என நினைத்து காப்பகத்திற்கு வந்துவிட்டான்.
தேவகி அம்மாவிற்கு நிறையவே கேள்விகள் இருந்தது மாறனிடம் கேட்பதற்கு ஆனால் அவரால் வெளிப்படையாக மாறனிடம் எதுவும் கேட்க முடியாது.
காரணம் காப்பகம் நடத்துவதற்கு மிகப்பெரிய தொகையை மாதாமாதம் அள்ளிக் கொடுக்கிறான் அவனைப் பகைத்துக் கொண்டால் கண்டிப்பாக இவனைப் போல வேறொரு ஸ்பான்சர் பிடிப்பது மிகவும் கடினம்.
அதனால் அவனின் சொந்த வாழ்க்கையில் அவர் தலையிட விரும்பவில்லை அதேசமயம் விஷாகாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காப்பகத்தின் சட்ட திட்டத்தையும் மீற முடியாமல் தவித்தார்.
அவரின் கணிப்பு சரியாக இருந்தால் மாறனும் சீதாவும் கணவன்-மனைவி ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் குழந்தையை இங்கே விட்டு வளர்த்து வந்தார்கள் ஆனால் சீதா எதிர்பாராதவிதமாக தவறி விட இப்பொழுது மாறன் இடத்தில் தனிப்பட்ட முறையில் பெண் குழந்தையை அனுப்ப காப்பகத்தின் சட்ட திட்டங்கள் இடம் கொடுக்க வில்லை.
சில நாட்களாகவே மாறன் விஷாகாவை சட்டரீதியாக தத்தெடுத்து கொள்வதற்காக முயன்று கொண்டிருக்கிறான் ஆனால் தனிப்பட்ட ஒரு ஆணுடன் அனுப்ப நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை கோடிட்டுக் காட்டிய தேவகி அவனிடமிருந்து மறுத்துவிட்டார்.
ஒரு திருமணம் செய்து கணவன் மனைவியாக வாருங்கள் உங்களுக்கு நான் தத்து கொடுக்கிறேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார் .
சில நாட்களுக்கு முன்பு தான் மாறன் சரி மனைவியுடன் வந்து விஷாகாவை சட்டரீதியாக அழைத்துச் செல்கிறேன் என்று கூறியிருந்தான்.
இவரும் ஆவலுடன் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருந்தால் முதலில் அவனின் மனைவி வந்து குழந்தையிடம் பேசி விட்டுச் செல்கிறார் பின்பாக குழந்தையை சமாதானப்படுத்த கணவன் ஓடி வந்திருக்கிறார்.
இப்பொழுது மிகப்பெரிய குழப்பம் அவருக்கு இருக்கிறது விருப்பமில்லாத கணவன் மனைவியுடன் எப்படி ஒரு பெண் குழந்தையை அனுப்பவது என்று.
இங்கு மாறன் விஷாகாவை சமாதானப் படுத்திக் கொண்டிருக்கும் பொழுது தாய் இடத்திலிருந்து போன் வந்தது.
உடனடியாக வீட்டுக்கு வா என்று கூறவும் அவர் குரலில் இருந்த கலக்கத்தை உணர்ந்து கொண்டவன் விஷாகாவை தேவகி இடத்தில் ஒப்படைத்தான்.
பிறகு எனக்கு கொஞ்ச நாள் அவகாசம் கொடுங்க என் பிரச்சினை எல்லாத்தையும் சரி செஞ்சு உங்க நம்பிக்கைக்கு பாத்திரமாகி விஷாகாவை சட்டபடி இங்கிருந்து அழைச்சிட்டு போறேன் என்று கூறியவன் அங்கிருந்து வீட்டிற்கு வந்தான்.
இங்கே வீட்டிற்கு வந்ததும் தாய் வேதா இங்கே சண்டையிட்டுக் கொண்டு தாய் வீடு சென்று விட்டாள் என்று கூற மாறன் தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்துவிட்டான்.
என்ன சண்டை என்று விசாரிக்கும் பொழுது தான் மாறனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாகவும் அவனுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் வேதா கூறியதால் கோபம் கொண்டு அவளை அனுப்பியதாக கனகா கூறினார்.
கடவுளே இதென்ன சோதனை... மனைவியிடத்தில் பொறுமையாக விஷாகாவை பற்றிக் கூறி அவளை முழு சம்மதத்துடன் அழைத்து வரலாம் என்று பார்த்தால் இப்பொழுது தன் மேல் தீராத ஒரு பழியைச் சுமத்தி விட்டு அவள் பாட்டுக்கு சென்று விட்டாளே எப்படி அவரை சமாதானப் படுத்துவது என்று யோசித்தவன் தனது தாயைப் பார்த்து அம்மா நான் இப்பவே வேதாவை கூப்பிட போறேன் என்று கிளம்பினான்.
ஒரு நிமிஷம் நில்லுப்பா என்று தடுத்த கனகா எனக்கு ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிட்டு போ என்றவர் நேரடியாகவே அவனைப் பார்த்துக் கேட்டார்.
உனக்கும் அந்த சீதாவிற்கும் என்ன சம்பந்தம் நீ அவளை ஆசைப்பட்ட விஷயம் எங்களுக்கு தெரியும்.
அது தெரிஞ்சு அவளை உன்கிட்ட இருந்து நான்தான் விலக்கி வைச்சேன்ங்கற விஷயமும் உனக்கு தெரியும் இந்த நிமிஷம் வரைக்கும் நீயும் அதை பத்தி கேட்டுக்கல நானும் அத பத்தி பேசினதில்லை ஆனா இன்னைக்கு நாம அதை பற்றிப் பேசியே ஆகணும் .
அவ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா... அவளுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது எங்க எல்லாருக்கும் தெரியும் ஆனா இப்போ அந்த குழந்தை உன்னோட பராமரிப்பில எப்படி வந்தது….
ஒருவேளை வேதா சொன்னபடி சீதாவிற்கும் உனக்கும் ஏதாவது தவறான தொடர்பு இருந்ததா…?இப்போ சீதா எங்க…?
அந்த குழந்தை உன்னோடதா…?என்று மகனைப் பார்த்து கேட்டார்.
அம்மா இதே கேள்வியை நீங்க வேதா வர்றதுக்கு முன்னாடி என் கிட்ட கேட்டு இருந்தா என் கிட்ட இருந்து ஒரு வார்த்தையை கூட வாங்கி இருக்க முடியாது ஆனா வேதா என் வாழ்க்கையில வந்ததுக்கப்புறம் எனக்குள்ள நிறைய மாற்றங்கள் அம்மா அதனால இப்போ உங்ககிட்ட சீதாவை பத்தி முத முறையா பேசுறேன் .
நான் உங்க புள்ளைமா என்னைக்கும் ஒழுக்கம் தவற மாட்டேன்.
சீதா மேல மேல ஆசைப்பட்டது உண்மை எப்போ அவ இன்னொருத்தனுக்கு மனைவியா போனாளோ அன்னைக்கே அவளை என் மனசுல இருந்து தூக்கிப் போட்டுட்டேன்.
ஒரு இக்கட்டான சூழ்நிலையில நான் மீண்டும் அவளை சந்திச்சேன் அவளுக்கு உதவி செய்யப் போய் விஷாகாவை பராமரிக்கிற பொறுப்பு என் கிட்ட வந்திருச்சு.
அவளுக்கு வாக்கு கொடுத்தபடி இந்த நிமிஷம் வரைக்கும் அந்த குழந்தையை நான் பாத்துட்டு இருக்கேன் இன்னும் எத்தனை நாளைக்கு ஒரு பெண் குழந்தையை காப்பகத்தில் வச்சுக்க முடியும் சொல்லுங்க அதனால என்னோடவே அழைச்சு வரனும்னு நினைச்சேன்.
அதான் வேதா கிட்ட சொல்லி ஒரு நல்ல நாள்ல விஷாகாவை தத்தெடுக்கலாம்னு நினைக்கிற சமயத்துல எல்லாமே முடிஞ்சு போச்சு என்று கூறியவன்.
என்னை நம்புங்க அம்மா நான் வேதா கிட்ட எல்லாத்தையும் புரிய வைத்து அவளை கூட்டிட்டு வந்ததுக்கு அப்புறமா உங்க கிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்றேன் என்றான்.
உடனே கனகா இல்லப்பா நான் தான் அவளை அனுப்பினேன் அதனால நானும் உன் கூட வரட்டுமா நான் வந்து கூப்பிட்டா உடனே அவ வந்துடுவா என்றார்.
இல்லம்மா நானே நேர்ல போய் அவளுக்கு புரிய வைத்து கூட்டிட்டு வரேன் அது வரைக்கும் எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருங்க என்றவன் வேதாவைத் தேடி சென்றான்.
தொடரும்...

Last edited: