கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துணையாக நான் வருவேன்-17

Akila vaikundam

Moderator
Staff member
17



ஏதோ ஒரு வேகத்தில் வேதா ரயில் நிலையம் வந்து விட்டாள் ஆனால் எப்படி செல்வது என்று தெரியவில்லை….




யாரிடமாவது கேட்கலாம் என்று பார்த்தால் ஒருவர் கூட நின்று பதில் சொல்பவர்கள் போல இல்லை…




டிக்கெட் எப்படி எடுப்பது...எந்த ட்ரெயினில் ஏறுவது என எதுவுமே புரியவில்லை.




முதல் முறையாக அவளின் பெற்றோர்களின் மீது கோபம் வந்திருந்தது என்னை ஒரு கிணற்றுத் தவளையாக வளர்த்து விட்டார்களே கொஞ்சமாவது வெளியுலகம் தெரிவதுபோல் வளர்த்திருக்கலாம் ஒரு ரயில் கூட ஏற தெரியாதா முட்டாளாக இருந்திருக்கிறேனே….என்று வேதனைப்பட்டாள்.




இந்த சென்னைப் பட்டினத்தில் இன்னும் எவ்வளவு நேரம் தவிக்க போகிறேனோ கடவுளே யாரையாவது உதவிக்கு அனுப்பு என்று மனதுக்குள் வேண்டியபடி கலக்கத்துடன் அங்கும் இங்கும் சற்றுநேரம் அலை மோதினாள்.





அவளின் வேண்டுதல் கடவுளின் காதுகளில் கேட்டது போல அவளுக்கு உதவுபவன் போல மாறன் அங்கு வந்து சேர்ந்தான்.



மாறனைக் கண்டதும் அவன் கண்ணில் சிக்காதவாறு மறைவிடத்தில் ஒளிந்து கொள்ள இடம் தேடி அவள் ஓளியவும் மாறன் அவளை கண்டு கொண்டான்.



அவளைக் கண்டதும் தான் அவனுக்கு உயிரே வந்தது அவள் வீட்டை விட்டு வெளியே வந்ததுமே கனகா உடனடியாக மாறனை அழைத்திருந்தார்...உணனே மின்னல் வேகத்தில் காப்பகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் பொழுது நேரம் கடந்து விட்டது.



அதன் பிறகு அவள் எங்கே செல்வாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும் அவளின் பிறந்த வீட்டிற்கு தான் செல்லாள்...ஆனால் எப்படி செல்வாள் என்று தெரிந்து கொள்வதில் தான் பிரச்சினை.




கார் இல்லை என்றால் பஸ் இல்லை ரயில் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை தான் அவள் தேர்ந்தெடுத்து இருப்பாள்..




அவள் பஸ் நிலையத்திற்கோ இல்லையென்றால் காரிலோ சென்றிருந்தாள் இவன் நேராக திருநெல்வேலி தான் செல்ல வேண்டும்.




ஒருவேளை ட்ரெயின் என்றால் அது எந்த நேரம் புறப்படும் என்று ஆன்லைனில் செக் செய்ய ரயில் கிளம்ப கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை இருந்தது.



அவனுள் சிறு நம்பிக்கை ஒருவேளை அவள் ரெயிலில் செல்வதை தேர்ந்தெடுத்து இருப்பாளோ என்று.




அதை உறுதிப்படுத்தும் விதமாக வீட்டு காவலுக்கு இருப்பவரை விசாரிக்க அவள் சென்ற ஆட்டோ நம்பரை கூறியவர் அதை ஓட்டும் நபர் தனக்கு தெரிந்தவர் தான் என்று உடனடியாக அவரை தொடர்பு கொண்டு பேசினார்.




அவரும் ரயில் நிலையத்தில்தான் வேதாவை விட்டதாக கூறவும் உடனடியாக அங்கிருந்து ரயில் நிலையத்திற்கு வந்து விட்டான்.




அவனுக்கு கண்டிப்பாக தெரியும் எப்படியும் ரயில் நிலையத்தில் வேதா சற்று தடுமாறி கொண்டு தான் இருப்பாள் ஒரு வேலை அவள் செல்லும் ரெயில் பெட்டியே அவளின் முன்பு வந்து நின்றால் கூட இது திருநெல்வேலிக்குச் செல்லும் ரயில் என்று அவளுக்குத் தெரியாது.




எப்படியும் அவளை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் சற்று சாவகாசமாக வந்தான் அவன் கணிப்பு தவறவில்லை ரயில் பயணத்தை பற்றி எந்த ஒரு விஷயம் தெரியாததால் அவ்வளவு பெரிய ரயில் நிலையத்தில் தனித்து காணப்பட்டாள்.




அவள் ஒளிந்திருக்கும் இடத்தைப் பார்த்து மனதிற்குள்ளாக சிரித்தவன் அவளுக்கு எதிர்புறமாக வந்து நின்றான் தனக்குப் பின்னால் வருகிறானா என்று திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தவள் முன்பு வந்து நின்ற மாறனை கவனிக்கவில்லை.




திடீரென்று தனக்கு முன்னால் ஒரு உருவம் வந்து நிற்பதைக் கண்டு பயந்து கத்துவதற்காக வாயைத் திறக்கும் வேளையில் அவள் வாயின் மீது கைவைத்தவன் ஷ்ஷ்...கத்தாத என்று அவளை அடக்கினான்.



மலங்க மலங்க விழித்தது அவன் கைகளை எடுத்து விட்டபடி எதுக்காக இங்க வந்தீங்க எல்லாம் கண்டுபிடிச்சிட்டேன் வெளிய யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு என்னையும் அந்த சீதாவை போல ஏதாவது செய்ய போறீங்களா என்று கேட்டாள்.



நிஜமாவே நீ பேசுறதை பாத்தா கன்னத்தில் ஓங்கி ஒன்னு விட்டுடலாம்னு தோணுது ஆனால் ஏதோ ஒன்னு உன்ன அப்படி பண்ண கூடாதுன்னு தடுக்குது அதுதான் இந்தளவு வாய்ப் பேசிகிட்டு இருக்க என்று கோபத்தில் பற்களை கடித்துக் கொண்டு வார்த்தைகளை துப்பினான்.




செய்விங்க கண்டிப்பா கன்னத்தில மட்டும் கொடுக்க மாட்டிங்க என் உயிரையே வேணாலும் எடுப்பீங்க நீங்க அந்த மாதிரி ஒரு ஆள் தானே இல்லனா கல்யாணம் ஆன பெண்ணோட தொடர்பு வைச்சி அவ மூலமா ஒரு குழந்தை வந்ததும் அவளையும் ஏதோ பண்ணிட்டு இப்போ நல்லவர் மாதிரி குழந்தையை தத்து எடுக்கறதா நாடகம் போடுவீங்களா என்று கூறவும் கோபத்தில் அவனை பாய்ந்து விட்டான்.





பிறகு சுற்றும் முற்றும் பார்த்தவன் என் பொறுமையை சோதிக்காம பேசாம வீட்டுக்கு வா என்று கூறியபடி அவள் கையில் இருந்த பெட்டியை பிடிங்கிக் கொண்டு நடந்தான்.




பின்னாலே வந்து வேதா இப்போ பெட்டியை கொடுக்க போறீங்களா இல்லையா கொடுக்கலைன்னா நான் கத்துவேன் என்று கூறினாள்.




குடுக்க முடியாது...என்ன செய்வ...கத்துவியா….கத்து...யாரு வர்றானு நானும் பாக்கறேன் கத்துடி... கத்துனு சொல்றேன்ல... என்று சத்தமாக பேசவும் நடந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் மாறனையும் வேதாவையும் தான் பார்த்தார்கள் .




அவர்கள் பார்ப்பதை பார்த்து கூச்சப்பட்ட வேதா எதற்காக இப்படி கத்துறீங்க என்று சமாதானத்திற்கு வந்தாள்.




அவனுக்கு புரிந்துவிட்டது கண்டிப்பாக வேதா இது போல் பொது இடத்தில் அவனை எதிர்த்து எதுவும் செய்யப்போவதில்லை அதனால் இது போன்ற இடத்தில் தான் அவனைப்பற்றி கூறி அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என நினைத்தவன்…




ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிக்குள்ளாகவே புகுந்து புகுந்து நடந்தான் பின்னால் அவள் வருகிறாளா என்று கவனிக்கவும் தவரவில்லை.




வேதாவிற்கு அவனின் மேல் மேலும் எரிச்சல்தான் உன்டாயிற்று இப்படி பொது ஜனங்கள் அதிகம் இருக்கும் இடத்தில் இவன் ஏன் இது போலெல்லாம் நடந்துகொள்கிறான் தனியாக இருக்கும் இடத்தில் என்றால் நடப்பதே வேறு அவள் மனதில் இருக்கும் ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்து விடலாம் ஆனால் எதற்கும் வழிவகை செய்யாமல் அவன் இப்படி நடப்பதில் ஏதோ திட்டம் இருப்பதாக எண்ணினாள்.




அதனால் அவளின் பின்னே ஓடாமல் சற்று மந்த நிலையில் நடக்கத் தொடங்கினாள்.




அவளின் நடை சற்று மட்டு படவுமே வேதாவின் எண்ண ஓட்டம் உடனடியாக மாறனுக்கு புரிந்து விட்டது.



இனி இவளை இப்படி இழுத்துச் செல்ல முடியாது என்று யோசித்தவன் சற்று மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தான் ஆளில்லாத பகுதியை நோக்கி அவன் செல்வதை கண்டவள் இப்பொழுது அவன் பின்பு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.




மாறனோ வேகமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து எதிர்ப்புறம் தெரிந்த ஒரு ரெஸ்டாரண்டில் நுழைந்தான்.



அவனை பின்தொடர்ந்து வந்த வேதாவும் அந்த ரெஸ்டாரண்ட்க்குள் நுழைந்தாள்.




அவள் வருவதை அறிந்து கொண்டவன் அவள் தன்னை சற்று நெருங்கும் நேரத்தில் குடும்பத்தாருடன் அமர்ந்து உண்ணும் வகையில் இருந்த ஒரு அறைக்குள் சட்டென்று புகுந்துகொள்ள வேதாவும் சற்றும் யோசிக்காமல் அந்த அறைக்குள் நுழைந்தாள்.





அவள் உள்ளே நுழைந்ததும் தான் புரிந்தது இருவரும் தனிமையில் இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோல் செய்து இருக்கிறான் என்று.





சாவகாசமாக ஒரு இருக்கையில் மாறன் அமர்ந்து இருப்பதை கண்டதும் சுற்றும் முற்றும் பார்த்தாள் .




அது குடும்பமாக அமர்ந்து உண்ணும் அறை கண்டிப்பாக யாரும் வந்து அவர்களை தொந்தரவு செய்யப்போவதில்லை திட்டம் போட்டுத்தான் தன்னை இங்கே வரவழைத்திருக்கிறான் என்று உணர்ந்தவள் அங்கிருந்து வெளியே செல்ல எத்தனித்தாள்.




அவளை வெளியே விடாதவாறு கைகளைப் பிடித்து தடுத்தவன் கத்தும் அவளை கத்தாதே என்பது போல உதட்டின் மேல் விரல் வைத்து...ஷ்ஷ்...ஒழுங்கா கத்தாம இப்படி உக்காரு... ஏதாவது வம்பு பண்ணினா நீ சொன்னியே சீதாவை ஏதோ செஞ்சேன்னு அதே மாதிரி இந்த இடத்திலேயே உன்னையும் செஞ்சிடுவேன் என்று மிரட்டவும் பயந்தபடி எதிரில் அமர்ந்தாள்.




என்னை எதுக்காக இப்படி சித்ரவதை செய்யறீங்க என்னை விடுங்க நான் போகனும் என்றவளைப் பார்த்து





இப்போ எதுக்காக வீட்டை விட்டு வெளிய வந்த அதை மட்டும் சொல்லிட்டு நீ எங்க வேணாலும் போ யாரும் உன்னை தடுக்க போறதில்லை என்றான்.



உங்களுக்கு தெரியாதா நான் ஏன் வெளிய வந்தேன்னு….



எனக்கெப்படி தெரியும் வேதா நீ வந்ததுக்கான காரணம்…. நீதான் சொல்லனும் என்றான் விடாபிடியாக.




நீங்க என்னை ஏமாத்திட்டீங்க என்னை நம்ப வைச்சி கழுத்தறுத்துட்டிங்க நீங்க ஒரு நல்ல மனுஷனே கிடையாது பிராடு பொம்பள விஷயத்துல ரொம்ப பவீக் என்று வாய்க்கு வந்தபடி உளறிக் கொண்டிருந்தாள்.



ஒரு கையை டேபிளில் வைத்து கேட்டுக்கொண்டிருந்தவன் பொறுமையாக அவளின் பக்கமாக தண்ணீர் டம்ளரை நகர்த்தி வைத்தான்.




இதை குடிச்சிட்டு பொறுமையாய் இன்னும் என்னென்ன இருக்குன்னு சொல்லு என்றான்.




கோபத்தில் தண்ணீரை எடுத்து அவளது முகத்தில் விசியவள் அதன் பிறகுதான் அவளின் தவறை உணர்ந்தாள்.



பிறகு அவன் ஏதாவது செய்து விடுவானே என்று பயந்து சுற்றுமுற்றும் பார்க்க மாறன் ஸஎந்த ஒரு உணர்வையும் காட்டாமல் பொறுமையாக அப்படியே அமர்ந்திருந்தான்.




வேகமாக எழுந்தவள் சாரிங்க கோபத்துல ஏதோ என்று கூறியபடி அவளது புடவை முந்தானையை எடுத்து அவனது முகத்தை துடைக்க வர வேண்டாம் என்பது போல் கை நீட்டி தடுத்தவன் அவனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து முகத்தை துடைத்தான்.




பிறகு கோவம் போயிடுச்சா இப்போ நான் பேசலாமா என்று கேட்டான்.



உடனே அவனருகில் அமர்ந்தவள் அவனின் சட்டையை கொத்தாக பிடித்தபடி என்னை ஏங்க ஏமாத்தினீங்க.




நான் உங்களுக்கு என்ன பாவம் செஞ்சேன் கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு அதை உங்க கூட வச்சிக்க தான் என்னை கல்யாணம் பண்ணறேனு சொன்னா நான் என்ன பண்ணிருக்க போறேன் சொல்லுங்க அதை விட்டுவிட்டு எதற்காக இத்தனை நாடகம்.





என்கிட்ட சொன்னா ஒத்துக்க மாட்டேன்னு நீங்களே கற்பனை பண்ணி கிட்டு டெல்லி வரை கூட்டிட்டு போய் என் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு என்று அதற்கு மேல் கூற பிடிக்காமல் அவன் நெஞ்சிலே விழுந்து கதற ஆரம்பித்தாள்.




அவள் அழுது முடிக்கும் வரை பொறுமை காத்தவன் அவளின் முதுகை நீவி விட்டான் அப்பொழுது ஹோட்டல் பணியாளர் வந்து ஆர்டர் எடுக்க வரவும் இருவருக்கும் சற்று தாமதமாக வருவது போல் இருக்கும் உணவை ஆர்டர் செய்தவன் மீண்டும் அவளிடம் பேச ஆரம்பித்தான்.



இங்கப்பாரு வேதா நான் இப்போ சொல்றது எல்லாமே சத்தியமான உண்மை நான் சொல்றதை பொறுமையா கேளு அதுக்கு அப்புறமா என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுபடறேன் என்று கூறவும்.



நீங்க எனக்கு எதுவுமே சொல்ல வேண்டாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லுங்க...சீதா யாரு…?

விஷாகா உங்க குழந்தையா…? உங்களுக்கும் சீதாவுக்கு பிறந்த குழந்தையா…? அப்படின்னா உங்களோட வாழ்க்கையில நான் யார் ..? அந்த குழந்தையை பாத்துக்க வந்த ஆயாவா…? அப்படின்னா அதை என்கிட்ட முன்னமே சொல்லி இருக்கலாமே…? எதுக்காக என் மனசுல ஆசையை வளத்துனீங்க….




எனக்கு எதுவானாலும் என் கணவன் துணையிருக்கார்னு நம்பிக்கையை ஏன் கொடுத்தீங்க என்மேல் ஏன் அவ்வளவு பாசம் இருக்கறது போல நடிச்சீங்க... அட்லீஸ்ட் டெல்லியில நீங்க என்கிட்ட நடந்துகிட்டது மட்டுமாவது உண்மைனு சொல்லுங்க.




அந்த ஒரு நிகழ்வு போதும் என் வாழ்க்கை முழுக்க வாழறதுக்கு அந்த நினைவை நினைச்சுக்கிட்டே நீங்க இல்லாம காலம்பூரா தனியாக வாழ்ந்திடுவேன் என்று யாசகம் கேட்பது போல் அவனது கண்களைப் பார்த்து கேட்டாள்.




அவளை தனது நெஞ்சினில் சாய்த்துக்கொண்டவன் நீ இந்தளவு எல்லாம் யோசிக்க வேண்டாமே வேதா.




நீ நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல என்றவன் அவளின் முகத்தை பார்த்து ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கனு என்னை பார்த்து எத்தனை கேள்விகளை கேட்கற நீ என்று சிரித்தவன்.



நான் முழுசா என்னைபற்றி எல்லா விஷயங்களையும் உன் கிட்ட சொல்றேன் அதுக்கப்புறம் நீயே என் மேல எந்த தப்பும் இல்லனு புரிஞ்சிப்ப ‌…

என்றவன் அவனின் கடந்த காலத்தை சொல்ல தொடங்கினான்.




நான் காலேஜ் முடிச்சதுமே அப்பாவுக்கு உதவியா எங்களோட கடையை பாத்துக்க போனேன் அங்க போன கொஞ்ச நாள்ல தான் சீதா வேலைக்கு வந்தா….





சீதாவைப் பற்றி எனக்கு அதிகம் எதுவும் தெரியாது எங்க வீட்டைப் பொறுத்தவரைக்கும் வீட்ல யார் வேலை செய்றாங்க அப்படிங்கறத பார்க்கிறது என்னோட அம்மா தான்.



சீதா வீட்ல வேலை செய்ற மணிமேகலை அக்காவோட பொண்ணுங்கற விஷயம் எனக்கு சுத்தமா தெரியாது ஒருவேளை தெரிஞ்சிருந்தா ஆரம்பித்திலேயே அவ கிட்ட ஒதுக்கத்தை காமிச்சு இருப்பேன்.



ஏன்னா என் தாத்தாவை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் அவரை மீறி இந்த வீட்ல யாரும் எதுவும் பண்ண மாட்டோம்.





அப்படி இருந்தும் சீதா மேலே நான் காதல்ல விழுந்தேன் என்னோட தப்பு தான் நான் எவ்வளவு விலகி விலகிப் போனாலும் கூட சீதா என்னை விடாம விரட்டி விரட்டி காதலிக்க ஆரம்பிச்சா... அதுக்கப்புறமா நானும் அவளைக் காதலிக்க ஆரம்பிச்சேன்.




வேலை விஷயமா நாங்க ரெண்டு பேருமே அடிக்கடி பேசிக்க வேண்டியது வரும் அதுவும் எங்க காதுல வளர்த்த ரொம்ப உபயோகமாக இருந்தது.




இப்படி இருக்கும் போது ஏதோ ஒரு சமயத்தில அவளுக்கு நான் முதலாளியோட பையன்ங்கற விஷயம் தெரிஞ்சிருக்கு….





தெரிஞ்ஞதுமே என் கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சா அதுக்கு அப்புறம் அவளை சமாதானப்படுத்தி என் வழிக்கு கொண்டுவர நான் ரொம்பவே போராட வேண்டியது இருந்தது அந்த மாதிரி சமயத்தில்தான் ஒரு நாள் அவளோட நான் தனியா பேசிக்கிட்டு இருக்கும்போது என்னோட தாத்தா பாத்துட்டார் போல.





அதுக்கு அப்புறமா உடனே என்னோட அம்மா கிட்ட சொல்ல அவங்களும் மணிமேகலை அக்காகிட்ட கோவமா பேச போய் அவங்க உடனே ரோச பட்டு கிட்டு பொண்ணுக்கு கிடைச்ச ஒரு அயோக்கியனை கட்டி வச்சிட்டாங்க.




இது எனக்கு தெரிய வரும் போது சீதாவும் இந்த ஊர்ல இல்ல மணிமேகலை அக்காவும் இந்த ஊர்ல இல்ல .




பைத்தியம் புடிச்ச மாதிரி கொஞ்ச நாள் சுத்திகிட்டு இருந்தேன் சீதா மேல எனக்கு அவ்வளவு கோபம் இருந்தது.




பொண்ணுகளையே வெறுக்க ஆரம்பிச்சேன் என் வேலை உண்டு நான் உண்டுனு மறுபடியும் என் கவனத்தை பிஸினஸ் பக்கமாக திசை திருப்பின சமயத்தில்தான் சீதா என்னை விட்டு பிரிந்து போவதற்கு முக்கியமான காரணம் என்னோட அம்மாவும் தாத்தாவும் என்கிற விஷயம் தெரிஞ்சது.




அதுக்கு அப்புறம் அவங்களோட பேசுவதையே நான் குறைச்சி கிட்டேன் எப்படியோ சீதா நல்லா இருக்கா அது போதும்ங்ன்கிற சந்தோஷத்தோட என்னோட வாழ்க்கையை நான் வாழ்ந்துகிட்டு இருக்கும் பொழுதுதான் கிட்டத்தட்ட மூணு வருஷம் கழிச்சு ஒருநாள் சீதாவை என்னோட கஸ்டமர் வீட்ல சந்திச்சேன்.




வயசான ஒரு தம்பதி அவங்க வீட்டுக்கு எல்லாம் புதுசா ஆர்டர் பண்ணி இருந்தாங்க அவங்களோட பையன் ஃபாரீன்ல இருந்து இந்தியா வர்றதால வீட்டுக்கு தேவையான பர்னிச்சர் .. அப்ளைன்சன்ஸ், கிச்சன் ஐட்டம் எல்லாமே புதுசா வேணும்னு கேட்டதோட இல்லாம எங்களையே கொண்டு வந்து பிட்டிங்கும் செய்து கொடுக்க சொன்னாங்க.




பெரிய ஆர்டர் அப்படிங்கிறதால அவர் கேட்ட பொருட்களை எல்லாம் எடுத்துட்டு அந்த வீட்டுக்கு நான் போனேன்.




அங்க போகும் போது தான் அந்த வீட்டல சீதா கைக்குழந்தையோட வேலைக்காரியா இருக்கிற விஷயம் எனக்கு தெரிஞ்சது.




முதல்ல அந்த வீட்டு மருமகனு நினைச்சு தான் நான் அவ கிட்ட பேசினது ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ அந்த வீட்டுல வேலை செய்யறாங்கற விஷயம் அந்த வீட்டு பெரியவங்க அவ கிட்ட நடந்துகிட்டது மூலமாக தெரிஞ்சுகிட்டேன்.




அதுக்கு அப்புறம் அங்க எதுவும் பேசாமல் சீதா கிட்ட என் போன் நம்பர் மட்டும் கொடுத்துட்டு வந்துட்டேன்.




சீதாவும் என்னை கூப்பிடல எனக்குதான் அவ கல்யாணம் பண்ணி ரொம்ப நல்லா இருக்கானு நினைச்சா ஒரு குழந்தையோட யாரோ ஒருத்தர் வீட்டுல கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது என் மனசுல நிம்மதியே இல்லாம போச்சி... கோபத்தை அம்மா கிட்டயும் தாத்தா கிட்டயும்தான் காட்டினேன்.



ஏற்கனவே பேச்சை குறைச்சி கிட்ட நான் இதுக்கப்புறமா சுத்தமா பேசுவதையே நிறுத்தினேன்.



அப்போ இருந்தே எனக்கு பொண்ணு பாப்பாங்க எந்த பொண்ணையும் பாக்கறதுக்கு முன்னாடியே வேண்டாம்னு சொல்லிடுவேன்.




என்னை பொருத்தவரை அம்மா தாத்தா ரெண்டு பேரும் நிம்மதிய இழக்கனும் அவமானப்படனும் அது மட்டுமே என்னோட டார்கெட் இருந்தது.



கொஞ்ச நாள் போனதும் சீதா எப்படி இருக்கானு தெரிஞ்சுக்க மறுபடியும் எனக்கு ஆர்வம் வந்துச்சு பொருட்களை சர்வீஸ் பண்ணுவது போல அந்த வீட்டுக்கு போய் சீதாவைப் பற்றி விசாரிக்கும்போது சீதா அந்த வீட்ல இல்லனு சொல்லவும் எங்க போயிருக்கானு மறுபடியும் தேட ஆரம்பிச்சேன் ஒரு வழியா கடைசியில் வேறு ஒரு வயசானவங்க வீட்ல வேலை செய்யுறதை கண்டுபிடிச்சேன்.



அவகிட்ட பேச முயற்சி செஞ்சேன் ஆனா அவ என்னை திரும்பி கூட பாக்கல கடைசியில் ஒரு நாள் அவளே என்னை தேடி வந்தா .




தயவு செஞ்சு இப்படி என் முன்னாடி வந்து நிற்காத நான் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கனும்னு நெனச்சா இனிமே நான் எங்க இருந்தாலும் என்னை தேடி வராதனு பேசிக்கிட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு ஆள் வந்து அவ முடிய பிடிச்சு நடு ரோட்டிலேயே போட்டு கண்டபடி அடிக்க ஆரம்பிச்சான்.




கோபத்தில் நானும் அவனை அடிச்சு சீதாவை அவன்கிட்ட இருந்து பிரிச்சி எடுக்கும் பொதுதான் தெரிந்தது அந்த ஆளுதான் சீதாவோட கணவன்னு.




என் இதயமே நொறுங்கி போச்சு எப்படி இருந்த பொண்ணு அவளைப்போய் நடு ரோட்டில் நாயை அடிக்கற மாதிரி அடிக்கிறானேனு கோபம் ஆனா சீதா எல்லாத்தையும் பொருத்து கிட்டு அவனோடவே போயிட்டா.



அன்னைக்கு அவ வாங்கின ஒவ்வொரு அடிக்கும் காரணமும் நான் தான் தெரியும் போது என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும் சொல்லு.



கல்யாணம் ஆனதும் முத ராத்திரியில என்னை காதலிச்ச விஷயத்தை அவ புருஷன் கிட்ட சொல்லி இருக்கா அவன ரொம்ப யோக்கியம் மாதிரி பொறுமையா கேட்டுக்கிட்டு மறுநாள்ல இருந்து தினமும் அவளை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திகிட்டு இருந்திருக்கான்.




அதுமட்டுமில்ல அவளோட யார் நின்னு பேசினாலும் அவங்களோட சீதா தொடர்பு வைச்சிருக்கறது போல பேசி அந்த இடத்திலேயே போட்டு அடிப்பானாம்.




என் கிட்ட பேசும் போதும் அப்படித்தான் நினைச்சி அவளை அடிச்சிருக்கான்.

ஆனா அவனுக்கு நான் தான் அவளோட முன்னாள் காதலன்னு தெரியல ஒருவேளை தெரிஞ்சிருந்தா அன்னைக்கு சீதாவை கொன்னு போட்டாலும் போட்டிருப்பான்.




அது மட்டுமில்லாம அந்தக் குழந்தையும் அவனுக்கு பிறக்கலனு சொல்லி ஒரு நாள் கூட அந்த குழந்தையை தூக்கி அவன் கொஞ்சினது இல்லை போல இது எல்லாம் சுத்தி நின்னு வேடிக்கை பார்த்து கிட்டு இருந்த ஒரு சிலர் என்கிட்ட சொல்லும் போது

என்னால ஏத்துக்கவே முடியலை சீதாவோட வாழ்க்கை இப்படி ஆனதுக்கு நானும் ஒரு காரணம்னு நினைக்கும் போது ஒரு வாய் சாப்பாடு கூட உள்ள இறங்கல…




அவ அடி வாங்கறதை பார்த்தா அன்னைக்கு தான் புதுசா அடிவாங்கறது போல தெரியல தினம் தினம் அந்த அடிக்கு அவ உடம்பு பழகினது போல இருந்தது.

அதை நேர்ல பாக்கும் போது என் இதயத்தில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பிச்சது அவளுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு நினைச்சி மறுபடியும் அவ வேலை செய்யற வீட்டுக்குப் போனேன்.




அந்த வீட்டிலிருந்து பெரியவங்க ரொம்ப நல்ல மாதிரி சீதாவை பத்தின எல்லா விவரமும் தெரியும் போல அவ புருஷன் அவளை கொடுமைப்படுத்துவது தெரியறதால ரொம்ப ஆறுதலா இருந்திருக்காங்க.




அவளை நான் பார்க்கணும்னு சொன்னதுமே பின்னாடி வேலை செஞ்சுட்டு இருக்கா போய் பாருனு அனுமதி கொடுத்து அனுப்பி வச்சாங்க.




அப்போ விஷாகாவுக்கு ரெண்டுல இருந்து மூனு வயசுக்குள்ள இருக்கும் தனியா பொம்மை வைச்சி விளையாடி கிட்டிருந்தா…



இந்தப்பக்கம் சீதா தூணி துவைச்சிகிட்டு இருந்தா அதைப் பார்க்கும் போதே நான் செத்துட்டேன் ஒருவேளை அவ என்னை காதலிக்காம இருந்திருந்தா கூட அவ வாழ்க்கை நல்லா இருந்திருக்குமோனு எனக்கு தோணுச்சு .




எல்லாத்தையும் மறைச்சிட்டு அவகிட்ட சாதாரண பேச்சு கொடுக்கும் போது என்னை இந்த முறை விரட்டி விடாம சாதாரணமா பேச ஆரம்பிச்சா…



என்ன மாறன் சார் என்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க அதும் ரொம்ப நாள் கழிச்சு என்று இயல்பாக பேசிய சீதாவை ஆச்சரியத்துடன் பார்த்தவன்.




எப்படி இருக்க சீதா என்று கேட்டான்.



எனக்கென்ன துவைக்கற கல்லுமா... பாத்திரம் கழுவுற பைப்புமா ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று கூறும் பொழுதே அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது .




அதை பார்த்தவன் மனம் கேளாமல் ஆமா உன் அம்மா எங்கே…?




ம்கூம் என்று சலித்துக்கொண்டவள் ஊர்ல இல்லாத மகராசனுக்கு பொண்ணை கட்டிக் கொடுத்துட்டோம்ங்கற சந்தோஷத்திலேயே போய் சேர்ந்துட்டாங்க என்று கூறும்பொழுது தெரிந்தது மகளின் துயரம் தாங்காமல் அந்த பெண்மணி உயிரையே மாய்த்துக் கொண்டு விட்டார் என்று .




எல்லாமே உனக்கு விளையாட்டுதான் இல்லையா என்று மாறன் கேட்க.




பின்னே என்ன சார் வாழ்க்கையே விளையாட்டா போகும்போது நாமளும் விளையாட்டா தானே எடுத்துக்கிடனும் எனக்காக இல்லனாலும் இந்த குழந்தைக்காகவாவது வாழ்ந்தாகனுமே என்றாள்.




அப்பொழுதுதான் விஷாகாவை நன்கு கவனித்தான் ஒரு வேலைக்காரியின் வீட்டுக் குழந்தை போலவே இல்லை ஏதோ பெரிய இடத்துப் பெண் பிள்ளை போல அப்படி ஒரு அழகு அப்படி ஒரு கம்பீரம் அக்குழந்தையை தூக்கி கொஞ்சியபடி குழந்தைக்கு பேரு என்ன வச்சிருக்க….




தொடப்பத்துக்கு பேரு பட்டு குஞ்சம்னு சொல்லுவாங்கல்ல அது போல அவ பேரு விஷாகா என்று கூறி முடித்தாள்.



என்ன சீதா இது எல்லாத்துக்கும் ஒரு குதர்க்கமான பதில் என்று சலித்துக் கொண்டவன்.



மெதுவாக அவளின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி சுற்றிவளைத்து கேட்க துவைக்கும் துணியை பாதியிலேயே விட்டுவிட்டு அவன் அமர்ந்திருந்த படிக்கட்டிலேயே சற்று தள்ளி அமர்ந்தவள் .




எதுவா இருந்தாலும் நேரடியாக கேளுங்க மாறன் சார் நீ எப்படி இருக்க உன் புருஷன் இப்போ உன்னை அடிக்கிறது இல்லையா…? நல்லா இருக்கிறியா…? இது மாதிரி தானே கேக்க போறீங்க உண்மையை சொல்லனும்னா நான் நல்லா இல்ல மாறன் சார்.




என் புருஷன் இப்பவும் குடிச்சிட்டு வந்தா என்ன அடிப்பாரு உதைப்பாரு சில சமயத்தில் சூடு வைப்பாரு…



அதுமட்டுமில்ல அவரோட ஃப்ரெண்ட்கள கூட்டிட்டு வந்து அவங்க முன்னாடியே என் குழந்தையும் என்னையும் தகாத வார்த்தையில் பேசுவாரு .




ஒரு கட்டத்தில் போதை முத்தி போனா அவங்க கூடவே படுக்க சொல்லி பச்சையான பேசுவார் .



இதையெல்லாம் தாங்கிக்கிட்டு தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன் என்று கூறவும்.



கோபத்தில் உள்ளங்கையை மடக்கியவன் எதுக்காக நீ இதுபோல கஷ்டத்தை தாங்கிக்கனும் நீதான் நல்லா படிச்சிருக்கல்ல அவனைப் போனு உதறித் தள்ளிட்டு உன் குழந்தையோட ஒரு ஹாஸ்டல்ல தங்கி ஒரு நல்ல ஆபீஸ்ல கவுரவமான வேலை பாத்துகிட்டு வாழலாமே என்று கேட்கவும்.




யாரு சார் அப்படி ஒரு கவுரவமான வாழ்க்கை கொடுப்பாங்க சொல்லுங்க சார் என்று அவனின் முகம் பார்த்து கேட்டவள்.




இதுக்கு முன்னாடி ஒருத்தர் வீட்ல வேலை செஞ்சேன்ல எதற்காக அங்க இருந்து வந்தேன்னு கேட்டீங்களா கேட்க மாட்டிங்க...ஏன்னா இப்படி இருந்திருக்குமோனு நினைச்சிங்கல்ல அதுதான் நடந்தது.



ஃபாரின்ல இருந்து வந்த அவங்க பையனுக்கு பகல் முழுக்க அவரோட பொண்டாட்டியும் குழந்தைகளும் தேவைப்பட்டது ராத்திரியில் நான் தேவைப்பட்டேன் இதை அந்த பெரியவங்க கிட்ட சொன்னப்போ அவங்க என் மேலயே திருட்டு பழிய தூக்கி போட்டு என்னையும் என் பிள்ளைகளையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டாங்க அது மட்டும் கிடையாது எந்த ஆபிசுக்கு வேலைக்கு போனாலும்

நான் இருக்கிற ஏரியாவும் என் புருஷனோட வெளி தோற்றமுமே காட்டிக்கொடுத்திடுது



புருஷனும் சரியில்லை வாழ்க்கையும் சரியில்லனு தெரிந்த அடுத்த நிமிஷமே என்னோட வர்றியானு கேட்கிறாங்க அதான் இப்படி என் அம்மா பாத்த வேலைக்கே வந்துட்டேன்...இவங்க அவங்க பொண்ணு மாதிரி பாத்துக்கிடறாங்கன்னு பொய் சொல்ல மாட்டேன் ஆனா ஒரு ரத்தமும் சதையும் உள்ள மனுஷியா பாக்கறாங்க என்று முடித்தாள்.



இப்போ உன் புருஷன் எங்க என்று கேட்க அவனைப் பார்த்தவள் ஏன் சார் உங்க ஸ்டைல்ல அவருக்கு புத்தி சொல்லப் போறீங்களா அப்படின்னா நீங்க பூழல் ஜெயிலுக்கு தான் போகணும் என்றவள் இப்பொழுது மீண்டும் துணிகளைத் துவைக்க ஆரம்பித்திருந்தாள்.




என்ன சொல்ற என்று கேட்கவும் போன வாரத்துல ஏரியால நடந்த ஒரு பிரச்சினைல என் புருஷனையும் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போயிட்டாங்க...இந்த முறை குண்டாஸ் போடறதா பேசிக்கறாங்க என்று எங்கோ பார்த்தபடி கூறினாள்.




கண்களைத் துடைத்துக்கொண்டவன் அவள் அருகில் வந்து கொஞ்சம் என்னைப் பாரு என்றான்…



என்ன சார் என்று வேலையை விட்டு விட்டு அவனைப் பார்க்க தூக்கி சொருகி இருந்த அவளின் புடவையை இறக்கி விட்டவன் அவளின் ஆடைகளை சரிப்படுத்திக்கொண்டே



நீ என்னோட வந்துடறீயா உன்னையும் உன் குழந்தையையும் நான் ரொம்ப நல்ல பார்த்துக்கிறேன் உன்னை நான் கல்யாணம் செஞ்சுகறேன் நீ இதுவரைக்கும் பட்டு எல்லா கஷ்டமும் போது என்னோட வீட்டுல மகாராணி மாதிரி வாழலாம்... என்று கூறவும் வாய் விட்டு கடகடவென்று சிரித்தாள் சீதா.




சிரிப்பை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் படிக்கட்டில் சென்று அமர்ந்தவள் சிரித்தபடியே காமெடி பண்ணாதீங்க…. போங்க சார் இந்த நாலு வருஷத்துல ஒரு நூறு பேராவது என்னை பார்த்து இப்படி ஒரு வார்த்தையை கேட்டிருப்பாங்க….



நான் போகணும் நினைச்சிருந்தா என்னைக்கோ போயிருக்கலாம் இத்தனை நாள் என் புருஷன் கிட்டே கஷ்டத்தை அனுபவிச்சி கிட்டு இந்த மாதிரி ஒரு வேலையை செஞ்சுகிட்டு இருக்க வேண்டிய அவசியமே எனக்கு கிடையாது…




எப்படி வேணும்னாலும் வாழலாம்னு நினைச்சி கிட்டு இருந்தா இத்தனை நாள் இப்படி வாழனும்னு அவசியம் எனக்கு இல்லை சார் இப்படித்தான் வாழனும்னு எனக்கு நானே ஒரு கோடு போட்டு வாழ்ந்துகிட்டு இருக்கேன்...







எப்படி வாழ்வும் சாவும் ஒரு தடவையோ அதைப்போலத்தான் சார் கல்யாணமும் எனக்கு.





இந்த கல்யாணம் எனக்கு நிறைய பாடத்தையும் படிப்பினையும் கொடுத்திருக்கு மறுபடியும் அதே மாதிரி ஒரு கல்யாணத்தை பண்ணி பாடத்தைக் கற்பிக்க விரும்பல கடைசி வரைக்கும் என் புருஷன் கூட இருந்தே மீதி பாடத்தை சந்தோஷமா கத்துக்கறேன்.




அவர் கெட்டவர் தான் சந்தேகப்படுவார் தான் ஆனாலும் என் புருஷன் சார்.




நீங்க கேக்கலாம் இந்த காலத்தில் இதெல்லாம் சரியா வருமானு எனக்கு இதுக்கு பதில் தெரியல சார் ‌




சரியில்லைன்னா தூக்கி போடுன்னு பல பேர் சொல்லறாங்க ஆனா ஏதோ ஒன்னு என்னைத் தடுக்குதே...அது இந்த மஞ்ச கயிறானு தெரியல என்று தூக்கி காண்பித்தவள் மீண்டும் அதை புடவைக்குள் மறைத்து பத்திரப்படுத்திக் கொண்டாள்



இது சரின்னு எனக்கு தோணுது என்கிட்ட காசு பணம் இல்ல சார் ஆனாலும் சீதா பேருக்கேத்த மாதிரிதான் இருக்கிறானு பேசிக்கிறாங்க அந்த ஒரு பேர் போதுமே சார்.



இப்ப நான் உங்களோட வந்துட்டேன்னா அன்னைக்கு உங்க அம்மா சொன்னது உண்மைனு ஆயிடுமே.




சீதா பணத்துக்காக புருஷனை விட்டுட்டு போயிட்டானானு ஊர் பேசும்போது என்னோட அம்மாவோட ஆன்மா எப்படி சாந்தி அடையும்.




அந்த பேர் எனக்கு வரக் கூடாதுன்னு தானே அவசர அவசரமா இப்படி ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சாங்க அவங்களோட ஆன்மாவுக்கு நான் அநியாயம் செய்யலாமா சொல்லுங்க….




அதுக்காக இன்னும் எத்தனை நாள் குடிகார புருஷனோடு கஷ்டப்பட போற சீதா உன் அம்மா உயிரோடு இருந்திருந்தா கூட இப்போ நான் சொல்றபடி தான் உனக்கு சொல்லுவாங்க…



ஆனா அவங்க தான் இப்போ உயிரோடு இல்லையே சார் ஒருவேளை அவங்க உயிரோடு இருந்து நீ உன் புருஷன் விட்டுட்டு வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னா அப்போ யோசிச்சு இருப்பேனோ என்னவோ….



அம்மா செஞ்ச இந்த வேலை இருக்கு சார் கடைசி வரைக்கும் இதை செஞ்சே நானும் என் குழந்தையும் வாழ்ந்திடுவோம்.




அப்போ முடிவா என்ன சொல்ற சீதா…




இங்க முடிவும் இல்லை முதலும் இல்லை சார் எப்பவுமே நான் நானா தான் இருப்பேன்.




ஒருவேளை நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட கடைசி வரைக்கும் என்னால சந்தோஷமா இருக்க முடியாது ஏதோ எனக்கு வாழ்க்கை கொடுத்த தியாகி போல தான் எனக்கு தோணும் .




உங்களுக்கு ஐயோ பாவம் அவ புருஷன் கிட்டே ரொம்ப கஷ்டப்பட்டுடா நாம அப்படி நடந்துக்க கூடாதுனு பாத்து பாத்து பேசுவீங்க இயல்புக்கு மீறி சாஃப்ட்டா இருப்பீங்க அப்போ எப்படி சார் நீங்களும் நானும் புருஷன் பொண்டாட்டியா சந்தோஷமா வாழ முடியும் சொல்லுங்க





நீங்க மட்டும் இல்ல வேற யார் வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் கேட்டாலும் நான் பண்ணிக்கப் போறது இல்ல சார் கடைசி வரைக்கும் சீதா சீதாவாவே வாழ்ந்துட்டு போகட்டும் சார் குழந்தைக்காக நானும் எனக்காக அவளும் மீதி வாழ்க்கையை வாழ்ந்திடுவோம்….



உண்மையிலேயே உங்களுக்கு எனக்கு ஏதாவது உதவி செய்யனும்னு தோணினா இந்த குழந்தையை ஒரு நல்ல இடத்தில படிக்க வைக்க உதவுங்க….




அவ படிப்புக்கு நான் இருக்கிற இடமும் நான் செய்கிற வேலையும் தடையா இருக்கு அவளை ஏதாவது ஒரு காப்பகத்தில சேர்த்து விடுங்க சார் என்னை மாதிரி என் அம்மா மாதிரி என் பொண்ணும் ஒரு வேலைக்காரியா ஆக வேணாம்.



அவளாவது படிச்சு ஒரு நல்ல இடத்துல வேலை செய்யட்டும் அந்தப் படிப்புக்கு எவ்வளவு செலவானாலும் பரவால்ல சார் என்னோட கடைசி சொட்டு ரத்தம் இருக்கற வரை அவளுக்காக உழைக்கத் தயாரா இருக்கேன்.



எனக்கு இந்த ஒரு உதவி மட்டும் பண்ணுங்க சார் என்று அவனைப் பார்த்து கைகூப்பினாள்.




எதுவுமே பேசாமல் அங்கிருந்து கிளம்பி வந்தவன் விஷாகாவிற்காக ஒரு நல்ல காப்பகத்தை தேட ஆரம்பித்தான்.



அப்போது தான் இந்த காப்பகம் அவனது கவனத்தில் பதிந்தது அங்கு எல்லாவிதமான குழந்தைகளும் சேர்த்துக் கொள்வதை அறிந்தவன் சீதாவையும் விஷாகாவையும் ஒருநாள் அழைத்துக்கொண்டு அங்கு சென்றான்.




காப்பகத்தின் சட்ட திட்டத்தை அப்பொழுது தேவகி அம்மா தெளிவாக கூறினார் பெற்றோர்கள் இருவருமே சேர்ந்து கையெழுத்திட்டால் இருவரும் சேர்ந்து வந்தால் மட்டுமே குழந்தையை திருப்பி கொடுப்போம் ‌




ஒருவேளை வீதி வசத்தால் ஒருவர் இறந்தால் மற்றொருவரிடம் அந்த குழந்தை ஒப்படைக்கப்படும் அப்படி இல்லை என்றால் அந்த குழந்தை அனாதையாக இங்கேயே மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று கூற எல்லாவற்றுக்கும் தலையசைத்து சீதா அவர்கள் கொடுத்த பாரத்தில் கையெழுத்து இட்டாள்.




அப்போதும் அவளுக்கு தோன்றவில்லை மாறனை கார்டியனாக போடலாம் என்று.



மாறனுக்கும் தோன்றவில்லை ஒருவேளை அவனுக்கு சீதா தன்னை விட்டு பாதியில் சென்று விடுவாள் என்று தெரிந்திருந்தால் கண்டிப்பாக கையெழுத்து போட்டிருப்பானோ என்னவோ.



நல்ல படியாக குழந்தையை காப்பகத்தில் சேர்த்து விட்டு வந்த பிறகுதான் சீதாவிற்கு நிம்மதி உண்டாயிற்று .



கணவர் சிறையில் இருந்து வருவது போல் தெரியவில்லை பெரியவர்களின் வீட்டிலேயே தங்கி கொண்டாள்.



அவர்கள் கொடுக்கும் மொத்த பணத்தையும் காப்பகத்திற்கு கொண்டு வந்து கொடுத்தாள் .



மாறன் அவ்வப்போது சென்று குழந்தையையும் பார்த்துச் கொண்டான்.




சீதாவின் வேலை பளுவின் காரணமாக அவளால் அடிக்கடி குழந்தையை வந்து காணமுடியவில்லை.




ஆனால் மாறன் குழந்தையை ஒரு முறை பார்த்தால் அடுத்த முறை வந்து சீதாவை நட்புடன் வந்து சந்திப்பான்.



அவளுக்கு வேண்டிய மளிகை பொருட்கள் எல்லாவற்றையும் அவன் தான் வாங்கிக் கொடுப்பது ஆனால் ஒத்த ரூபாய் பாக்கி இல்லாமல் சீதா அனைத்தையும் அவனிடத்தில் கொடுத்து விடுவாள்.





ஆரம்பத்தில் அவள் கொடுக்கும் பணத்தை வாங்க மறுத்தாலும் பிறகு அவளின் சுய கவுரவத்தை ஏன் கெடுப்பானேன் என்று புன்னகையுடன் பெற்றுக் கொள்வான்.




இப்படியாக இவர்களின் நட்பு சில நாட்களாக தொடர்ந்து இருக்க ஒரு நாள் வார இறுதியில் சந்தைக்கு அழைத்துச் சென்று அவளுக்கு வேண்டிய மளிகை பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்தவன் அவளுடன் பேசியபடி ரோட்டின் ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.



அப்பொழுது எதிர்புரமாக வந்த மினிடோர் வாகனம் மாறனை குறிவைத்து வருவது போல் சீதாவிற்கு தோன்றியது .




மாறன் அதனை கவனிக்கும் முன் வாகனம் நெருங்கி வர வேறு வழி தெரியாத சீதா மாறனை தள்ளிவிட அதற்குள் மினிடோர் சீதாவின் மீது மோதிவிட்டு வேகமாக கடந்து சென்றது .



அதிர்ச்சியில் ஓடிவந்து மாறன் அவளை தூக்கி மடியில் கிடத்தியபடி கதற ஆரம்பித்தான்.



மோதிய மினிடோர் சற்று தூரம் சென்று நின்று டிரைவர் எட்டிப்பார்க்க அது சீதாவின் கணவன் என்பது தெரிந்தது.



அவன் குறிவைத்தது மாறனை தான் சீதாவை இல்லை... அதற்குள் பொதுமக்கள் வாகனத்தை சுற்றி வளைக்க பயத்தில் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டான்.




அவனைப் பிடிப்பதற்காக மாறன் எழ அவனின் கைகளைப் பிடித்தவள் வேண்டாம் சார் அவரை விட்டுடுங்க அவருக்கு என்ன கல்யாணம் பண்ணின நிமிஷத்துல இருந்து சந்தேகம் மட்டும் தான் அந்த சந்தேகத்தோட தான் இத்தனை வருஷம் நிம்மதி இல்லாமல் வாழ்ந்திருக்காரு..



இனியாவது அவர் சந்தோஷமாக வாழ்ந்து விட்டுப் போகட்டும் அவரைப் பொறுத்தவரைக்கும் அவர் மனசுல அவருக்கு துரோகம் பண்ணின மனைவியை அவர் கையாலேயே கொன்னுட்டதா ஒரு சந்தோஷம் இருக்கும் அந்த சந்தோஷத்தை அவர் இனி அனுபவிக்கட்டும் என்றவளிடம் .




சரி விடு அவன் அப்படியே தொலைந்து போகட்டும் முதல்ல உன்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும் என்று போவோர் வருவோரிடம் உதவி கேட்டு கெஞ்ச ஆரம்பித்தான்.



அவளோ வேண்டாம் என்பது போல் தலையசைத்த படி போதும் சார் நான் ரொம்பவே ஓடிட்டேன் இனியாவது நான் நிம்மதியா உறங்கறேன் நான் உறங்க உங்க மடி கொடுங்களேன் என்றவள் அவளின் மடியிலே நன்றாக படுத்துக் கொண்டாள்.





பிறகு மாறனின் கைகளைப் பிடித்து நான் ஏற்கனவே உன்கிட்ட கேட்டது போல தான் என் மகளை மட்டும் அப்பப்போ போய் பாத்துக்கோங்க சார் ‌‌ அவ ஒரு அனாதைங்கறது என்னைக்கும் அவ மனசுல தோணாத அளவுக்கு பாத்துக்கோங்க சார் இது மட்டும் நீங்க எனக்கு செய்கிற உதவியாக இருக்கட்டும் என்று கூறியபடி அவனின் மடியிலேயே உயிரை விட்டாள்.




அதன்பிறகு சம்பிரதாயத்திற்காக சீதாவின் கணவர் மேல் ஒரு புகார் அளித்தவன் சகல மரியாதையுடன் சீதாவின் உடலை தனி ஒருவனாக நின்று தகனம் செய்தான்.




விஷாகாவிற்கு அதிகமாக தாய் முகம் ஞாபகத்திற்கு இல்லாததால் தாய் வெளிநாடு சென்றிருக்கிறாள் என்ற பொய்யை சுலபமாக நம்பினாள் ‌




மாறனைத்தான் அவள் தந்தை என்று நம்பினாள். மாறனும் அவளை அவ்வப்போது சென்று சந்தித்து வந்ததால் அவளும் மாறனை அடிக்கடி எதிர்பார்க்க தொடங்கினாள்.




அவன் காப்பகத்திற்கு கொடுக்கும் பணம் அங்கிருக்கும் பணியாளர்களை மேற்கொண்டு எந்த கேள்வியும் கேட்க விடவில்லை‌



இப்படியாக நாட்கள் கடந்து செல்லச் செல்ல ஒரு கட்டத்தில் விஷாகாவிற்காக மட்டுமே வாழ ஆரம்பித்திருந்தான்.



மாறனுக்கு இப்படி ஒரு திரைமறைவு வாழ்க்கை இருக்கிறது என்பதே அவனின் வீட்டில் யாருக்கும் தெரியாதவாறு பார்த்துக்கொண்டான்.




இந்த சமயத்தில்தான் கனகா மாறனுக்கு மாதம் ஒரு ஜாதகத்தை கொண்டு வந்து இந்த பெண்ணை திருமணம் செய்து கொள் என்று கட்டாயப் படுத்திக் கொண்டிருந்தார்.



ராதிகா ஜாதகம் வரும்பொழுதும் எப்படியோ தப்பித்துக் கொள்ள வேதா ஜாதகம் வரும்பொழுது அவனால் தப்பித்துக் கொள்ள முடியவில்லை எப்படியோ மண்டபத்தில் வைத்து திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று தான் ஊருக்கு சென்றது.




ஆனால் விதி தாயின் ரூபத்தில் வந்து விரட்டியது வேறு வழியில்லாமல் தாலி கட்டியவன் அவளை எப்படியாவது இங்கு வந்த பிறகாவது விரட்டி விடலாம் என்று ஏதேதோ திட்டம் தீட்ட எல்லாம் தோல்வியிலேயே முடிந்தது .



இந்த சமயத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இவர்கள் இருவரையும் தனித்து விட்டபடி திருப்பதிக்கு கிளம்பிச் செல்ல அந்த நேரம் தான் வேதாவின் நல்ல குணம் அவனின் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.




அப்பொழுது தான் முதல் தடவையாக யோசிக்க ஆரம்பித்து இருந்தான் ஏன் வேதாவிடம் விஷாகாவை பற்றி கூறி குழந்தையை தங்களுடனேயே அழைத்துக் கொள்ளலாமே என்று.



ஏற்கனவே பலமுறை காப்பகத்திற்கு சென்று கேட்டிருக்கிறான் தான் அப்போதெல்லாம் தேவகி அம்மா சுலபமாக கூறி முடித்து விடுவார்.




நீங்கள் அவளுடைய கார்டியனும் கிடையாது தந்தையும் கிடையாது வெறும் ஸ்பான்சர் மட்டுமே ஸ்பான்சர்களை நம்பி நாங்கள் குழந்தையை அனுப்புவது இல்லை ஒருவேளை உங்களுக்கு விஷாகா தேவைப்பட்டால் மனைவியுடன் வந்து சட்டப்படி தத்தெடுத்து கொள்ளுங்கள் என்று.




அவன் தான் திருமணமே வேண்டாம் என்று இருந்தானே அப்புறம் எங்கே போய் மனைவியுடன் சென்று குழந்தையை அழைத்து வருவது என அத்திட்டத்தை கை விட்டிருந்தான்.



இப்பொழுது அவனின் மனம் மாறத் தொடங்கி இருக்கும் வேளையில் தான் காப்பகத்தில் விஷாகாவிற்கும் ஒரு பிரச்சனை வந்திருந்தது.




அதாவது தத்து எடுப்பதற்காக காப்பகம் வந்த ஒரு தம்பதியினருக்கு எதேர்ச்சையாக விஷாகா கண்ணில் பட குழந்தையை நாங்கள் தத்து எடுத்துக் கொள்கிறோம் என்று கேட்கிறார்கள்.



ஆனால் மாறனை மனதில் வைத்திருந்த தேவகி அம்மா அவர்களுக்குச் சற்று கால அவகாசம் கொடுத்து விட்டு மாறனை அழைத்து விஷயத்தைக் கூறினார்.





மனைவியுடன் வந்து எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியவர் காப்பகத்தின் நடைமுறைப்படி உங்களுக்கு ஒரு லெட்டர் வரும் அந்த லெட்டர் வந்த உடனேயே அதை எடுத்துக்கொண்டு விஷாகாவை சட்டப்படி அழைத்துக் கொள்ளுங்கள் அப்படி இல்லை என்றால் விஷாகாவின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கொடுத்து விடுவோம் என்றும் மறைமுகமாக மிரட்டினார்.




தேவகி கூறியவற்றை கேட்டு ஸ பயம் கொண்டவன் வேதாவிடம் கூற ஒரு நல்ல நாள் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் ராதிகாவின் பிரசவமும் வந்தது.




அதே நாள் காலையில் தான் காப்பகம் அனுப்பிய கடிதமும் அவனது கையில் கிடைத்தது‌



என்ன ஆனாலும் அவளிடம் கூறி விட வேண்டும் என்று காத்திருக்கும் சமயத்தில் ராதிகாவின் பிரசவம் முடிந்த உடனே அவளது வீட்டிற்கு கிளம்பி விட்டாள் வேதா.



எப்படி அவளை தடுத்து நிறுத்துவது என்று திகைத்தவன் நேராக டெல்லி அழைத்து வந்துவிட்டான்.




அத்தோடு இல்லாமல் தினம் தினம் அவளை வெளியே அழைத்துச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் அவளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எல்லாம் தேவகி அம்மாவிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தான்.



நானும் மனைவியும் அன்யோன்யமாக இருக்கிறோம் ஹனிமூனுக்காக டெல்லி வந்திருப்பதால் அது முடிந்ததும் நாங்கள் விஷாகாவை அழைத்துக் கொள்கிறோம் அதுவரை நீங்கள் யாரிடமும் அனுப்பக் கூடாது என்ற தினமும் கூறிக் கொண்டிருந்தான்.




அவரும் சரி சரி என பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார் ஆனால் எதேச்சையாக எல்லா விஷயங்களும் வேதாவின் கண்களில் சிக்க நேரடியாக காப்பகத்திற்கு சென்று அவர்களின் முன்பு நானும் மாறனும் அன்யோன்ய தம்பதிகள் இல்லை விஷாகாவை அழைத்துச் செல்வதில் எனக்கு துளிகூட விருப்பம் இல்லை என்பது போல் நடந்து கொண்டாள்.





இப்பொழுது அவர்களுக்கு குழந்தையுடன் அனுப்பலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருக்கிறது என்று எல்லாக் கதையையும் மாறன் கூறி முடிக்கவும் கண்களில் கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்த வேதா சீதா ரொம்ப பாவம்ல என்றாள்.





ஆமாம் என்று கண்மூடி தலையசைத்தவன்….விஷாகாவை நம்மளோட அழைச்சிக்க உனக்கு

சம்மதமா வேதா ஏன்னா எனக்கு உன்னோட சம்மதம் ரொம்ப முக்கியம் என்றான்.



என் சம்மதம் இருக்கட்டும் அதுக்கு முன்னாடி உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் கேட்டுக்கனும் விஷாகாவுக்காக மட்டும்தான் என்னை டெல்லி கூட்டிட்டு போனீங்களா .




அங்க என் கிட்ட ரொம்ப பாசமா நடந்துகிட்டது அதெல்லாம் உண்மையா…? இல்லை நடிப்பா என்று சற்று கலக்கத்துடன் அவனை பார்த்து கேட்டாள்.



உடனே அவன் அது முழுக்க முழுக்க உன் மேல வச்சிருந்த காதல் மட்டும்தான் தயவு செஞ்சு அந்த நிகழ்வை கொச்சைப்படுத்தாத.



உன்னை ஆரம்பத்தில் எனக்கு பிடிக்காது தான் இல்லன்னு சொல்லல ஆனா அதுக்கு அப்புறம் நீ எங்க வீட்டுல நடந்துகொண்டது எல்லாம் பார்க்கும்போது தானாவே உன் மேல எனக்கு ஒரு காதல் பிறக்க ஆரம்பிச்சிடுச்சு.



விஷாகா ஒரு காரணம் தான் என்னோட காதல் தான் உன்னை என்னோட தங்க வச்சுக்கணும்னு போராடிச்சி போதுமா என்றவன்.




சரி இப்போ உன்னோட பதிலை சொல்லு என்று கேட்டான்.



அவளும் விஷாகாவை அழைச்சிட்டு வர எனக்கு என்ன பிரச்சனை இருக்கப் போகுது சீதா எப்படி எல்லாம் விஷாகாவை வளர்த்த ஆசைப்பட்டாலோ அதைவிட ஒரு படி மேலேயே நான் வளர்த்துவேன் என்று அவனைப் பார்த்து தலையை அசைத்தபடி கூறினாள் ‌




இது போதும் என்று அவன் கூறி முடிக்கவும் அவர்களுக்கான உணவு வந்து சேர்ந்தது.



சர்வர் வெளியே செல்லும் வரை பொறுமை காத்த வேதா மாறனை பார்த்து நீங்க என்னை மன்னிக்கணும் உங்கள நான் ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்ல…




அப்படிப் பார்த்தா நீயும் என்னை மன்னிக்கணும் வேதா நானும் தான் உன்னை மனசளவுல ரொம்ப கஷ்டப்படுத்தினேன் வந்த அன்னைக்கே உன்னை வீட்டைவிட்டு வெளியே போற மாதிரி எல்லாம் நடந்துகிட்டேன் நம்முடைய கடந்த காலத்தை நாம மறக்கலாம் இனிமே புதுசா ஒரு வாழ்க்கையை வாழலாம்.




ம்ம்...சரிங்க... ஆனாலும் உங்களுக்கும் சீதாவுக்கும் நடுவுல இருக்கிற உறவை புரிஞ்சுக்காம நான் தப்பா பேசி இருக்கக் கூடாது தான் அதுக்காக மறுபடியும் என்னை மன்னிச்சிக்கோங்க என்று குழந்தை போல் கொஞ்சியபடி அவனிடம் கேட்டாள்.



ம்ம்...மன்னிச்சிட்டேன் பொழைச்சி போ என்று கேலி செய்தவன் ஒரு வழியா இப்பவாவது என்னை புரிஞ்சிகிட்டியே அது போதும்.




நான் உங்களை புரிஞ்சுக்கிறது இருக்கட்டும் நீங்க என்னை புரிஞ்சுக்கிட்டிங்களா சொல்லுங்க…?

கல்யாணத்துக்கு முன்னாடி என்ன பார்த்து பயப்படாதீங்க சரி கல்யாணத்துக்கப்புறம் உங்களோட வீட்டுக்கு வந்த பிறகு கூடவா என்ன பத்தி நீங்க புரிஞ்சுக்கல‌




எல்லாத்தையும் விடுங்க டெல்லியில் நீங்களும் நானும் எவ்வளவு அன்யோன்யமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தோம் அந்த சமயத்திலயாவது உங்களை பத்தின விஷயங்களை சொல்லி இருந்தா இன்னைக்கு இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்திருக்காதுல்ல…




இப்போ நம்மளோட விஷாகாவும்ல இருந்திருப்பா என்று கூறவும் .




தப்புதான் வேதா உன்கிட்ட ஒவ்வொரு முறையும் சொல்லனும்னு வருவேன் ஆனா பயமும் சேர்ந்து வந்திடும் ஒருவேளை நீ விஷாகாவை ஏத்துக்க மாட்டியோனு பயந்து அப்படியே நகர்ந்திடுவேன் அதுவே எனக்கு எவ்வளவு பெரிய மன அழுத்தத்தை கொடுத்தது தெரியுமா.




ஆனால் எனக்கு உன் மேல கொஞ்சம் கோபம் தான் வேதா உன்னை ரொம்ப நல்ல பொண்ணுன்னு நெனச்சேன் ஆனா நீ என் அம்மா கிட்டயும் பாட்டி கிட்டயும் எப்படி எல்லாம் பேசிட்டு வந்திருக்க.



பெரியவங்ககிட்ட இப்படியா மரியாதை இல்லாமல் பேசறது வாய்க்கு வந்தபடி நீ பாட்டுக்கு எங்க அம்மா பாட்டி எல்லார் கிட்டயும் பேசிட்டு வந்துட்ட அவங்க மனசு எந்த அளவு பாதிக்கப்படும்னு கொஞ்சமாவது யோசிச்சியா என்றவனிடம்




சாரிங்க முத வேலையா வீட்டுக்குப் போய் அத்தை கிட்டயும் பாட்டி கிட்டயும் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் போதுமா எனக்கே அப்படி பேசினது ஒரு மாதிரியாதான் இருந்தது ஆனாலும் கோபத்துல வாய்க்கு வந்தபடி பேசிட்டேன் நீங்க என்னை மன்னிச்சிட்டிங்கல்ல என்று கேட்க.



உன் மேல எனக்கு எப்படி கோபம் வரும் வேதா நீ என்னோட ஆசை வேதவல்லி ஆச்சே என்றவன் நீ யாரோட கால்லயும் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை இனி இதுபோல வாய்க்கு வந்தபடி பேசாத பேசறதுக்கு முன்னாடி சில வினாடிகள் யோசிச்சிட்டு பேசு அதுவே போதும் என்று கூறவும் சரி என்பதுபோல் அவனது நெஞ்சினில் ஒன்றிக் கொண்டாள்.


தொடரும்...
 
Top