4
சம்மந்தி ஏதாவது பிரச்சினையா மாப்பிள்ளை ஏதோ கோபமா பேசிட்டு போறாரு என்று நேரடியாகவே பாக்கியா கனகாவிடம் கேட்டார்.
அதற்குள்ளாகவே வேதாவும் அருகில் வர மூவரிடமும் என்ன கூறுவது என தெரியாத கனகா.
அது வந்து...என்று இழுத்தவர் சட்டென சுதாரித்துக்கொண்டு பின்னென்ன அண்ணி நீங்களே சொல்லுங்க ஏதோ பெரிய ஆர்டர் வந்திருக்காம் விட்டா பல லட்ச ரூபாய் நஷ்ட ஆயிடுமாம் உடனே போகணும்னு சொல்றான்.
அது எப்படி அனுப்பி வைக்க முடியும் அதுதான் எத்தனை லட்ச ரூபாய் நஷ்டம் ஆனாலும் பரவால்ல உடனே எல்லாம் அனுப்பி வைக்க முடியாது இங்கிருந்து சடங்கு எல்லாம் முடிச்சுட்டு அப்புறமா போனு சொல்லி இருக்கேன்…
சரிதான நான் சொன்னது என்றவர் மேலும் என்ன ஒன்னு என் சின்ன மருமக வீட்டு ஆளுகளுக்கு இது தெரிஞ்சா தான் வம்பு...ஏற்கனவே அவளுக்கு தலைகணம் அதிகம் இதுல வேதா வந்த அன்னைக்கே பல லட்சம் நஷ்டம்னு தெரிஞ்சா அவ்ளோதான் இனி அவளை கையிலேயே புடிக்க முடியாது.
சரி எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன் நீங்க கவலை படாதீங்க வா வேதா நாம நம்ம ரூம்க்கு போகலாம் என்று அழைத்து செல்ல முற்பட்டார்.
இடை புகுந்த பாக்யா அண்ணி ஒரு நிமிஷம்...நீங்க இப்போவே மாப்பிள்ளையையும் வேதாவையும் சென்னைக்கு அனுப்பி வைங்க...இனி செய்யற சடங்கெல்லாம் உங்க வீட்ல போய் செஞ்சிக்கலாம்... இப்போதைக்கு மண்டபத்தில் சொந்தக்காரங்க போறவரைக்கும் நாம மட்டும் இருக்கலாம்..கேக்கறவங்களுக்கு நாம சொல்லிக்கலாம்.
முழுசா ஆயிரம் ரூபாய் பாக்கனும்னா இங்க ஒருவாரம் உழைக்கனும் ஆனா சாதாரணமா பல லட்சம் நஷ்டம்னு சொல்லறீங்க அதும் என் பொண்ணு வர்ற அன்னைக்கே எப்படி எங்களால ஏத்துக்க முடியும்.எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரத்துல வேதாவை அழைச்சிட்டு போகப்போறீங்க இப்போ கொஞ்சம் முன்னமே கூட்டிட்டு போறிங்க அவ்ளோ தான என்று கேட்டார்.
இவர்கள் பேசப்பேச நான் செல்லவில்லை என்பது போல் கண்கலங்கியபடி தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள் வேதா.
இதை கவனித்த கனகா எல்லாம் சரிதான் அண்ணி ஆனா வேதாவை பாருங்க...இன்னும் நம்பாத மாதிரியே பாக்கறா…அதுமில்லாம தேவையில்லாம எங்களை பாத்து பயப்படறா...அவளுக்கு முழுசம்மதம்னா மட்டும் போகட்டும் இல்லனா மெதுவாவே போய்க்கலாம்...அவ சஞ்சலத்தோட வரவேணாம் என்று சற்று கவலை தோய்ந்த குரலில் கூறினார்.
இடைபுகுந்த பாக்யா அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை என் பொண்ணுக்கு நான் புத்தி சொல்லி இன்னும் அஞ்சு நிமிஷத்துல உங்களோட அனுப்பி வைக்கிறேன் நீங்க பொண்ணும் மாப்பிள்ளையும் இங்கிருந்து கிளம்பறதுக்கு ஏற்பாடுகளை செய்ங்க என்று கூறியவர் வேதாவை அவர்களின் அறைக்கு அழைத்துச் சென்றார்.
அம்மா நான் போகலமா ப்ளீஸ்மா எனக்கு யாரையுமே பிடிக்கல நான் இங்கேயே உங்களோடவே இருந்துக்கறேன்.
இந்த கல்யாணத்தை நான் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்திடறேன் என்னை அவங்களோட மட்டும் அனுப்பி விடாதீங்க என்று கதறி அழ ஆரம்பித்தாள்.
உடனே கோபம் அடைந்த பாக்யா அப்படியே வாயில ஒன்னு போட்டேனா பாரு இதுக்கு தான் இவ்ளோ கஷ்டப்பட்டு இத்தனை செலவு பண்ணி உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம்மா .
இங்கே பாரு வேதா எப்படி இருந்தாலும் மத்தியான சாப்பாடு முடிஞ்சதுமே மாப்பிள்ளை வீட்டுகாரங்க அவங்க தங்கி இருக்கிற ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகப் போறாங்க…
மறுபடியும் நாளைக்கு காலைல சம்பிரதாயத்துக்காக நம்ம வீட்டுக்கு வந்துட்டு அங்கிருந்து கோவிலுக்கு போயிட்டு அப்படியே ஊருக்கு கூட்டிட்டு போயிடு வாங்க... இதுதான் நிதர்சனம் இன்னக்கி மாப்பிள்ளையோட போகலைன்னா கூட நாளைக்கு நீ அவரோட போய் தான் ஆகணும் அதனால சந்தோஷமா அவரோட கிளம்பிப் போ…. கொஞ்சம் யோசிச்சு பாரு உன் தம்பி தங்கையை பத்தி நீ போகமாட்டேனு இங்க இருந்தா அவங்களோட வாழ்க்கை என்னாவறது…
அப்போ எனக்குனு தனியா கனவு ஆசை எதிவுமே இருக்க கூடாதா அம்மா…?
ஏன் வேதா இப்படி எல்லாம் பேசுற உன்னோட கனவு ஆசை எல்லாமே இனிமே உன் கணவரோட குடும்பம் தான் அதை மனசுல வெச்சுக்கிட்டு இங்கிருந்து கிளம்பி போ.
நம்ம வீட்டோட மூத்த பொண்ணு இன்னைக்கு நீ எடுக்கிற முடிவுல தான் நம்ம குடும்பத்தோட எதிர்காலமே அடங்கி இருக்கு அதனால தயவு செஞ்சு இப்படி அழுது கரையாத.
சந்தோஷமா நீ போனால்தான் நாங்க நிம்மதியா இருப்போம் இப்படி அழுதுகிட்டே போனா எங்களால நிம்மதியா இருக்க முடியாது நீ எனக்காகவும் உன் அப்பாவுக்காகவும் போக வேண்டாம்.
நீ ஆசையா தூக்கி வளர்த்த உன் தம்பி தங்கைக்காக போ உன் பிடிவாதம் ஆசை கனவுனு ஏதேதோ பேசி அவங்களோட எதிர்கால வாழ்க்கையே மண் அள்ளி போட்டுடாத.
கல்யாணம் முடிஞ்சதும் மாப்பிள்ளையோட போகமாட்டேன்னு நீ வம்பு பண்ணினா நாளைக்கு எப்படி உன் தங்கையை ஒருத்தன் வந்து பெண் கேட்டு கல்யாணம் பண்ணுவான் அதனால இப்போவே கிளம்பிபோ…
நாங்க எல்லாருமே நாளைக்கே உன்னை பாக்க வர்றோம் போ என்று கூறினார்.
அழுதபடியே கல்யாணம் ஆனதும் என்னை கை கழுவிட்டிங்கல்ல...இனி என்ன ஆனாலும் நான் உங்களை தேடி வரவும் மாட்டேன் அங்க ஏதாவது ஒன்னு நடந்தாலும் உங்க கிட்ட சொல்லமாட்டேன் நான் போறேன்மா நீ உன் சின்ன பொண்ணோடவும் பையனோடவும் சந்தோஷமா இரு என்று கூறியபடி கண்களை அழுத்தித் துடைத்தவள் மாப்பிள்ளையின் அறையை நோக்கி வேகமாக சென்றாள்.
மாறனின் அறையிலோ திருமண ஆடைகள் அனைத்தையும் களைந்து விட்டு விமானத்தில் பயணிப்பதற்கு இலகுவாக ஒரு ஜீன்ஸ் மற்றும் டிசர்ட்டினை எடுத்து மாட்டியவன் முக்கியம் என தேவைப்படும் பொருட்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.
வர்ஷினி அவனுக்கு உதவி புரிய சிரித்தபடியே வாங்கி அடுக்கிக்கொண்டிருந்தான்.அறையின் மூலையில் செழியனின் மனைவி வயிற்றை தாங்கிபிடித்தபடி அமர்ந்து கொண்டு நடப்பவை களை வேடிக்கை பார்த்தாள்.
மாறனின் செயல்களை செழியனும் ரகுவும் கோபம் கலந்த இயலாமையின் பார்க்க செல்வி தாயின் காதை கடித்துக் கொண்டிருந்தாள்.
அம்மா இவன் இப்போ இங்கிருந்து கிளம்பினதுக்கு அப்புறம் நமக்கென்ன வேலை நானும் கூட கிளம்பிக்கவா என்று…
செல்வியை முறைத்த கனகா அவன்தான் புத்தி கெட்டு போய் கிடக்கறானு பார்த்தா நீயும் அப்படியே இருக்கீயே...ஏதோ பொண்ணு வீட்டுக்காரங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கிறதால இவனோட ஆட்டத்தை எல்லாம் வேடிக்கை பாத்துட்டு இருக்கேன் இல்லனா நடக்குறதே வேற.
வேற ஒரு குடும்பமா இருந்தா இவன் காலையில இருந்து அடித்த கூத்துக்கு தாராளமா போப்பா போகும் போது நீ கட்டின தாலியை உன் கூடவே எடுத்துட்டு போனு…பொண்ணு கையாலையே தாலியை கழட்டி கொடுக்க வச்சிருப்பாங்க.
இங்க பாரு செல்வி இப்போ நம்ம வீட்டில வேலைக்காரங்க இருக்காங்க அதும் இல்லாம சென்னையில் இருக்கிற சொந்தக்காரங்க விட்டு இவங்களை வரவேற்க ஏற்பாடு பண்ணிட்டேன்.
இவன் வேதாவோட தனியாவே முன்னாடி போகட்டும்...அப்போதான் அவமேல கொஞ்சமாவது பாசம் வரும் நாம பொண்ணு வீட்டுக்காரங்க கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு அடுத்த ஃப்ளைட்ல போகலாம் நைட் அங்க போய் மீதி சம்பிரதாயம் செய்யனும்னு சொன்னா ஏத்துப்பாங்க...இப்போவேனா ஒத்துக்க மாட்டாங்க என்றார்.
தாய் கூறியவற்றில் இருந்த உண்மை உறைக்க செல்வி கணவனையும் மகளையும் அழைத்துக்கொண்டு வெளியேற
பொருட்களை அடுக்கி முடித்த மாறன் கனகாவைப் பார்த்து ம்மா உன்னோட மருமகன் வருவாளா மாட்டாளா எனக்கு நேரம் ஆச்சி இப்போ வரலனா நான் முதல்ல போறேன் நீ உன்னோட கூட்டிட்டு வா என்றான்.
கனகா செழியனை பார்த்து என்னாச்சுனு கொஞ்சம் பார்த்து விட்டு வா என்று ஜாடை செய்ய செழியன் வேகமாக வெளியே வந்து வேதாவை தேடினான்.
அதேநேரம் சரியாக வேதா இவர்களின் அறையை நோக்கி தனியாக வந்து கொண்டிருக்க மாறனின் கோபம் தெரிந்ததால் அண்ணி உள்ளே வரும் நேரம் அண்ணன் ஏதாவது கடுஞ்சொல்லை தன் முன்னால் வேதாவை பார்த்து கூறிவிட்டால் அது அவளுக்கு மிகப்பெரிய அவமானமாக தோன்றும் என்று நினைத்தவன் நேராக உள்ளே வந்து அவனின் மனைவியை பார்த்து வெளியே வா என ஜாடை செய்ய அவளும் பொறுமையாக அங்கிருந்து கிளம்பினாள்.
ம்மா உங்களைத்தான் கேட்கிறேன் என்று கோபமாக மாறன் கனகாவை பார்த்து திரும்ப வாசலில் வேதா வந்து நிற்கவும் அவளின் தோற்றம் கண்டு மேலும் கோபம் கொண்டான்.
திருமண ஆடை அணிகலன்கள்,ஒப்பனை என எதையும் கலைக்காமல் வந்து நின்ற வேதா மாறனின் கோபத்தைக் கண்டு கண் கலங்க ஆரம்பிக்க அவளின் கண்கள் கலங்குவதை கண்ட மாறன் மேலும் கோபம் கொண்டு அவனின் வலது உள்ளங்கையை எடுத்து முன் நெற்றியில் வேகமாக அடித்துக் கொண்டான்
எதுக்காக இப்போ இவங்க முகம் இப்படி போகுது என்று கனகாவை பார்த்து கேட்டவன் சைடாக வேதாவைப் பார்த்து ஒழுங்கா எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு ஒரு சுடிதார் போட்டுட்டு இன்னும் ரெண்டே நிமிஷத்துல இங்க வந்து நிக்கனும்.
பிளைட்ல போறேனா இல்லனா புதுப்பொண்ணை ஊர்வலம் அழைச்சிட்டு போறேனா... இன்னைக்கு எனக்கு கல்யாணம் ஆன விஷயம் நமக்கு மட்டும் தெரிஞ்சா போதும் பிளைட்ல என் கூட வர்ர எல்லாருக்கும் தெரியணும்ங்கற அவசியம் கிடையாது முதல்ல போய் அவளை துணி மாத்திட்டு வர சொல்லுங்க என்று கத்த
பயந்த வேதா நேராக அவளின் அறைக்குள் ஓடினாள் அவள் இதுவரை அதிகமாக சுடிதார் அணிந்தது கிடையாது அவளைக் எல்லோருமே குண்டு என்று கிண்டல் அடிப்பதால் சுடிதார் அவளுக்கு பொருந்தாத உடை என அவளே நினைத்துக்கொண்டு சுடிதார் அணிவதை நிறுத்திக் கொண்டாள்.
இப்பொழுது மாறன் சுடிதார் அணிந்து வா என்று துரத்துகிறான் எப்படி அணிந்து செல்வது என்று யோசித்தவள் அவசரமாக அவளின் ஒப்பனைகளை கலைக்க தொடங்கியிருந்தாள்.
அருகிலிருந்த பாக்யா என்ன ஆயிற்று என்று வேதாவிடம் விசாரிக்க திரும்பி முறைத்தவள் இனிமேல் நீங்க என்கிட்ட எதுவும் கேட்கக் கூடாது அது தான் என்னை கல்யாணம் பண்ணி கொடுத்து கைகழுவிட்டிங்களே அதுக்கப்புறம் எதுக்காக என்கிட்ட என்னாச்சுன்னு எதுவுமே நடக்காதது போல விசாரிக்கறீங்க என்ன வேணாலும் ஆகட்டும் அத உங்ககிட்ட சொல்லணும்னு அவசியம் எனக்கு கிடையாது என்று மாறன் இவளின் மீது காட்டிய கோபத்தை அப்படியே வேதா பாக்கியாவின் மீது காண்பித்தாள்.
மக்களின் பேச்சு பாக்யா விற்கு சற்று சங்கடத்தை கொடுத்தாலும் மகள் புகுந்த வீட்டுடன் ஒன்றி வாழ்ந்தால் போதும் வேறு என்ன தனக்கு வேண்டும் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டார்.
வேதா அவசரமாக அவள் அணிந்திருந்த பட்டுப்புடவையை அவிழ்த்து விட்டு மாற்று புடவையை எடுத்து அணிந்தவள் வேகமாக மாறனின் அறைக்குள் ஓடினாள் அங்கு எல்லாமே தயாராக எடுத்து வைத்திருந்தவன் அவளைப் பார்த்ததும் புருவத்தை சுருக்கி பார்க்க வேகமாக என்கிட்ட சுடிதார் எதுவும் இல்லை நான் அதிகமா அதை போட்டுக்கறதும் இல்ல இப்போதைக்கு இந்த புடவைதான் மண்டபத்துல இருந்தது அதுதான்... என தொண்டை கமற பயந்தபடியே மாறனை பார்த்து கூறினாள்.
அவளின் குரலில் இருந்த கரகரப்பு அவனை ஏதோ செய்ய அதற்கு மேல் அவளிடம் கடிந்து கொள்ள தோன்றவில்லை சரி வா என்று கூறியபடி அவன் வேகமாக நடக்க …
தம்பி தங்கையிடம் கூட சொல்லத் தோன்றாமல் அவன் பின்னே ஓடத் தொடங்கினாள் வேதா.
அவன் செல்வதை பார்த்த செழியன் வேகமாக அண்ணனின் பின்னே வந்தவன் அண்ணா காரை ஏர்போர்ட் வரை நான் டிரைவ் செய்யறேன் நீங்க பின்னாடி அண்ணியோட உக்காருங்க என்றான்.
பதில் பேசாத மாறன் சாவியை தம்பிடம் கொடுத்து விட்டு ஓட்டுநரின் அருகில் இருக்கும் இருக்கையில் அமர அதிர்ச்சி அடைந்த செழியன் அண்ணா பின்னாடி அண்ணியோட உட்காருங்க என்று கூறினான்.
எல்லாம் எனக்கு தெரியும் ரோட்டை பார்த்து காரை ஓட்டு என்று முகத்தில் அடித்தபடி மாறன் தம்பியிடம் கூறினான்.
எதுவும் பேசாமல் செழியன் பின் இருக்கையில் வேதாவை அமர வைத்துவிட்டு முன் இருக்கைக்கு வந்து காரை இயக்கத் தொடங்கினான். சாதாரணமான ஒரு மணி நேரப் பயணம் மூவருக்குமே மிக நீண்ட தூர பயணமாக இருந்தது காரின் வாகனச் சத்தத்தைத் தவிர மௌனமே ஆட்சி செய்தது.
செழியன் ரோட்டைப் பார்த்து வாகனத்தை ஓட்ட வெற்றிமாறன் ஜன்னல் வழியே நகரும் மரங்களை வேடிக்கை பார்க்க வேதா நேற்று இரவிலிருந்து சரியான உறக்கம் இல்லை காலையில் இருந்து திருமண அசதி வேறு ….
எது எப்படி இருந்தாலும் நடந்தவற்றை மாற்றமுடியாது நடக்கப்போவதை அறிந்து கொள்ளவும் முடியாது என நிதர்சனத்தை புரிந்து கொண்டவள் கண்களை மூடி ஒரு குட்டித் தூக்கம் போட ஆரம்பித்தாள்.
தொடரும்..