5
ஏர்போர்ட் வரவுமே வேகமாக இறங்கிய மாறன் ஒரு நிமிடம் தயங்கி நின்றபடி பின்புற இருக்கையை பார்த்தான்.
வேதா நன்றாக சாய்ந்தபடி அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள் எப்படி எழுப்புவது என யோசித்தவன் கோபத்தில் கை முஷ்டியால் காரின் மீது ஒரு குத்து விட்டான் அந்த அதிர்வில் கண்விழித்த வேதா எந்த இடம் என தெரிந்துகொள்ள உள்ளிருந்த படியே வெளியில் தேடினாள்.
அதைக்கண்டு கோபம் கொண்ட மாறன் பிளைட்க்கு டைம் ஆச்சு சீக்கிரமாக இறங்கு என்று எரிந்து விழ பதில் கூறாமல் காரின் கதவை திறக்கத் தெரியாமல் போராடிக் கொண்டிருந்தாள்.
கவனித்த செழியன் அவளின் பக்கம் வருவதற்குள் மாறன் கோபமாக அவளின் பக்க கதவை திறந்துவிட்டான் ஏற்கனவே இருவருக்கும் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்ததால் மொபைலில் ஒரு தடவை அது சரி பார்த்தவன் அவனின் பயணபையை தூக்கிக் கொண்டு நேராக விமான நிலையத்திற்குள் சென்றான்.
என்ன செய்வது என்று புரியாத வேதா காரைவிட்டு இறங்கி செல்லும் மாறனையும் நிற்கும் செழியனையும் மாறி மாறி பார்த்தாள்.
செழியனுக்கு வேதாவை பார்க்க மிகவும் சங்கடமாக இருந்தது.
திருமணம் முடிந்து முழுதாக ஐந்து மணி நேரம் கூட ஆகவில்லை ஆனால் மாறன் வேதாவிடம் நடந்துகொள்வது எரிச்சலை ஏற்படுத்தியது.
செழியனுக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது அண்ணனுக்கு இத்திருமணத்தில் துளிகூட விருப்பம் இல்லை தாய் ஆடிய விளையாட்டில் தேவையில்லாமல் வேதா வந்து மாட்டிக் கொண்டாள்.
இனி அவளின் வாழ்க்கையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
என்று நினைத்தவன் வேதாவிடம் வந்து அண்ணி பயப்படாதீங்க அண்ணா நீங்க நினைக்கறது போல பொல்லாத ஆள் எல்லாம் இல்ல…
ரொம்ப நல்லவர் தான் ஏனோ அவருக்கு மூட் சரியில்ல போல அதான் இப்படி எரிஞ்சி விழுறாரு
நீங்க இந்த ஃப்ளைட்ல போங்க நாங்க பின்னாடியே அடுத்த ஃப்ளைட்ல வர்றோம்...ஊர்ல வீடு பெருசு உங்களுக்கு பிடிச்ச ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க நாங்க அதுககுள்ள வந்திருந்தோம்.
அங்க வேலைகாரங்க இருப்பாங்க எதாவது வேணும்னா கேளுங்க செஞ்சி தருவாங்க என்று கர்ம சிரத்தையாக அவளுக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருந்தான்.
இதையெல்லாம் ஏன் வேதாவிடம் செழியன் கூறிக் கொண்டிருக்கிறான் என்பது அவனுக்கே தெரியாது அண்ணன் அண்ணியை கையோடு அழைத்துச் சென்றிருந்தால் இது போலெல்லாம் அவன் சொல்ல வேண்டியதே கிடையாது .
ஆனால் அவன் அவளை தனியாக விட்டு விட்டு உள்ளே சென்று விட்டான் முதல் நாளே இவ்வளவு பயத்தை கொடுத்தால் அவளின் வாழ்க்கை நரகமாகிவிடும் அதனால் தான் இவ்வளவு பொறுமையாக அவளுக்கு புரியும்படி கூறிக் கொண்டிருக்கிறான்.
புரியும் என்று நினைக்கிறான் ஆனால் வேதாவிற்கு செழியன் சொன்ன எதுவும் காதில் விழவே இல்லை.
காலை திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே தனியாக விட்டுவிட்டு உணவருந்த சென்றுவிட்டான் இப்பொழுதும் தெரியாத இடத்தில் விட்டுவிட்டு சென்று விட்டான்.
அவரின் தம்பி இருந்ததால் ஆயிற்று இல்லையென்றால் என்னாவது. இது போல் ஒருவனை நம்பி தனது குடும்பத்தாரும் அனுப்பி வைத்து விட்டார்களே என்று அவளின் பெற்றோர்கள் மீதுதான் கோபம் வந்தது.
கோபத்தில் அப்படியே அவளின் வீட்டிற்கே திரும்பி விடலாமா என்று கூட தோன்றியது ஆனால் தாயிடம் தான் சற்றுமுன் சண்டையிட்டு வந்திருக்கிறாள் என்ன ஆனாலும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று இப்பொழுது அவள் திரும்பி சென்றாள் அவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் தன்னுடைய சுயகௌரவம் என்னாவது என்று நினைத்தவள் அமைதியாக செழியனை பார்த்தபடி நின்றாள்.
அதேநேரம் சரியாக மாறனிடம் இருந்து செழியனின் அலைபேசிக்கு அழைப்பு வர வேதாவிடம் அனுமதி வாங்கியபடி சற்று தள்ளி சென்றான்.
பிறகு அண்ணா சொல்லுங்க என்று கூறி வாய்முடும் முன்பே என்னடா சொல்றது உள்ள வர்ற ஐடியா இருக்கா இல்ல அப்படியே அவளை திருப்பி கூட்டிட்டு போறியா எதா இருந்தாலும் சீக்கிரமா சொல்லு நான் போர்டிங் போகணும் என்று கத்த ஆரம்பித்திருந்தான் மாறன்.
உடனே தலையில் அடித்துக்கொண்ட செழியன் அண்ணா ஒரு ட்டூ மினுட்ஸ் வெயிட் பண்ணுங்க... நான் அண்ணியை அழைச்சிட்டு வர்றேன்...கரெக்டா எங்கே இருக்கீங்கன்னு சொல்லுங்க என்று கூறியவன் வேதாவை அழைத்தபடி அண்ணன் கூறிய இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
நடக்க ஆரம்பித்த சில நிமிடங்கள் கழித்து தான் செழியன் வேதாவை கவனித்தான் வேதாவின் கையில் எந்த ஒரு பேக்கும் இல்லாததை அண்ணி நீங்க பேக் எதும் எடுத்துக்கலையா என்று கேட்கவே வேதாவிற்கும் அப்போதுதான் நினைவு வந்தது தான் அவசரத்தில் கையில் எதுவும் எடுத்து வரவில்லை என்ற விஷயம்.
என்ன செய்வது என்பது போல் அவனை பார்க்க செழியன் தான் பிரச்சனை இல்ல நீங்க முன்னாடி போங்க உங்களுக்கு ஏதாவது தேவைபட்டா என் ரூம் எதுனு கேட்டு உள்ள போய் வேணுங்கறதை எடுத்துக்கோங்க…ராதிகாவோடது எல்லாமே முதல் வார்ட்ரோப்ல இருக்கும் எது எடுத்து கிட்டாலும் ராதிகா கண்டுக்க மாட்டா...நான் வரும் போது உங்க அம்மா கிட்ட கேட்டு உங்களோட திங்க்ஸ் எல்லாம் கொண்டுவரேன் என்று வேதாவை சமாதனம் செய்து மாறனின் அருகில் அமர வைத்தபடி மனமில்லாமல் வெளியே வந்தான்.
மனம் எங்கிலும் வேதாவை பற்றிய கவலை ஓங்கியிருந்தது அண்ணன் அவளை சென்னை கூட்டிச் செல்லும் வரை கொஞ்சம் கனிவோடு நடந்து கொண்டால் பரவாயில்லை சற்று முன் நடந்தது போல் எங்காவது விட்டு சென்று விட்டால் பாவம் கிராமத்தில் வளர்ந்த பெண் பட்டணம் அறியாத பெண் என்ன செய்வாள்.
ஏழை பெண் அவளின் குடும்பம் பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாததால் தானே பெண்ணை கட்டிக் கொடுத்தால் போதும் என நினைத்து தனது அண்ணன் திருமணம் செய்து கொடுத்து இருக்கிறார்கள் இல்லை என்றால் திருமணமான சில மணி நேரத்திலேயே அவனுடன் தனியாக அனுப்பி வைத்திருப்பார்களா என்று கவலையுடன் வாகனத்தை இயக்கினான்.
முதல் வேலையாக மண்டபத்திற்கு சென்றதுமே அங்கிருப்பவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு உடனடியாக ஊர் கிளம்ப வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டான். ஊரிலிருந்து வந்த வாகனத்தில் உறவினர்களை அனுப்பி வைக்க வேண்டியதுதான் தங்கள் குடும்பம் மட்டும் அடுத்த விமானத்தில் கிளம்ப வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டவன் வேகமாக மண்டபத்தை நோக்கி பயணித்தான்.
விமான நிலையத்தின் உள்ளே வேதா மிகவும் பயந்த படி மாறனின் அருகில் அமர்ந்திருந்தாள்.
தனது பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருப்பதே தெரியாது என்பது போல் மாறன் அவனின் மொபைல் போனை ஆராய்ந்தபடி அமர்ந்திருக்க பயணிகளுக்கான விமானம் தயாராக உள்ளது என அறிவிப்பு வரவும் வேகமாக அவனின் பேகை எடுத்து எழுந்தான்.
மாறன் எழுவதை பார்த்ததும் வேதாவும் உடனே எழுந்தாள். அப்போதுதான் மாறனும் வேதாவை கவனித்தான் அவளின் கையில் எந்த ஒரு பொருளும் இல்லை என்பதை.
யோசனையுடன் பேக் எதும் எடுத்துக்கலையா என்று கேட்க பயத்துடன் இல்லை என்று தலையை ஆட்டினாள்.
இது வேறையா… எதா இருந்தாலும் சென்னை போனதும் நீயே போய் வாங்கிக்கோ என்னை ஏதாவது வாங்கிட்டு வரச் சொல்லி கேட்டா நான் மனுசனா இருக்க மாட்டேன் என்று முகத்தில் அடித்த படி கூற
ரோஷம் கொண்ட வேதா பட்டென்று எனக்கு வேணும்ங்கற எல்லாமே என் வீட்ல இருக்கிறவங்க வாங்கி வச்சுட்டாங்க ….பேக் தான் மறந்துட்டேன்...அதும் அத்தை மாமா வரும்போது எடுத்துட்டு வருவாங்க நீங்க ஒன்னும் எனக்காக வாங்கி தர வேண்டாம் அப்படியே எனக்கு தேவைப்பட்டாலும் எனக்கு வேணும்ங்கறதை என் அம்மா அப்பா வாங்கி தருவாங்க என்று முகத்தில் அடித்த படி கூற…
அவளின் கோபத்தைக் கண்ட மாறன் ஒரு நிமிடம் நிதானித்து அவளை கவனித்தான்.
ஆம் இப்பொழுதுதான் முதல் முறையாக அவளை நன்றாக கவனிக்கிறான் தாலி கட்டும் பொழுது கூட ஏதோ என்று கண்ணை மூடிக்கொண்டு தாலியைக் கட்டி விட்டான்...இந்த நிமிடம் வரை அவளை ரசனையாக ஒருபார்வை பாக்க வில்லை…
அவளின் தோற்றத்தை நன்கு கவனித்தவன் அவனின் தோற்றத்தோட ஒப்பிட்டு பார்த்துவிட்டு வாய்க்குள்ளாகவே பட்டிக்காடு என்று முனுமுனுத்தான்.
இப்போ என்ன சொன்னீங்க…
ஃபிளைட் கிளம்பப் போகுது கூட வரியா இல்ல இப்படியே சண்டை போட்டுட்டு இருக்க போறியா.டோர் க்ளோஸ் பண்ணிடா அதுக்கப்புறம் ஃப்ளைட்ல ஏற முடியாது….
உங்க ஊருக்குள்ள வர்ற மினி பஸ் மாதிரி பாதில கைகாட்டி எல்லாம் நிறுத்த முடியாது அடுத்த ஃபிளைட் வரைக்கும் காத்துக்கிடக்கனும்….என்றவன் வேகமாக முன் சென்றான்.
செல்லும் அவனை கோபமாக முறைத்து பார்த்த வேதவல்லி பிறகு அவன் பின்னே ஓடத் தொடங்கினாள்.
ஒருவழியாக இருவரும் விமானத்திற்குள் வர முன்புறமும் இல்லாமல் கடைசியும் இல்லாமல் நடுவினில் அவரிகளின் இருக்கை இருந்தது.
மூன்று இருக்கைகளில் ஜன்னலோர இருக்கையும் அதற்கு அடுத்த இருக்கையும் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது விமானத்தில் ஏறியதுமே பிரமிப்புடன் விமானத்தை சுற்றிப் பார்த்தபடி தான் உள்ளே வந்தாள் .
அவள் இன்னும் சொகுசு பேருந்தில் கூட பயணம் செய்ததில்லை ஆனால் முதல் முறையாக விமானத்தில் ஏறுகிறாள் ஒருவித பயம் அப்பொழுதே அவளுக்கு தொற்றிக்கொண்டது.
ஜன்னலோர இருக்கையை அவளுக்கு கொடுத்த மாறன் அடுத்த இருக்கையில் அவன் அமர்ந்து கொண்டான்.
சற்று நேரத்திலேயே விமானம் புறப்படுவதற்காக ஆயத்தமாக சீட் பெல்ட்டினை போடும்படி பணிப்பெண் கேட்டுக்கொள்ள அனைவரும் சீட் பெல்ட்டினை போட ஆரம்பித்தனர்.
வேதாவிற்கு விமானப்பயணம் முதல் முறை என்பதால் எதுவும் தெரியாது என்பதை புரிந்து கொண்ட மாறன் அவளுக்கு சீட் பெல்ட்டினை போட்டுவிட்டான்.
போடும் பொழுது அவளின் இடுப்போடு சேர்ந்த வயிற்றுப் பகுதியில் அவனின் மென்கரம் சிறு வருடல் போல பட்டது….
உடல் சிலிர்க்க வயிற்றை உள்ளே இழுத்தபடி வேதா நிமிர்ந்து அமர அவனுக்கும் அது சற்று சங்கோஜம் தான் தலைகுனிந்த வண்ணம் சாரி எனக் கூறிவிட்டு கைகளை வேகமாக எடுத்தவன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
கணவனின் முதல் ஸ்பரிசம் பட உடல் சிலிர்ப்பு அடங்க வெகுநேரம் எடுத்துக்கொண்டது வேதாவிற்கு அரும்பாடுபட்டு கவனத்தை வெளிப் பக்கம் திருப்பினாள் ஆனாலும் மனதிற்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு இருந்து கொண்டே இருந்தது…அதை ரகசியமாக ரசிக்கவும் செய்தாள்.
கடைக்கண்ணால் கணவனைக் காண அவன் கர்ம சிரத்தையாக காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு கையில் ஏதோ ஒரு புத்தகத்தை வைத்த படித்துக் கொண்டிருக்க திடீரென விமானம் புறப்பட ஆரம்பிக்கவும் திடீரென அடிவயிற்றில் ஏற்பட்ட பயத்தால் கண்களை முடி கத்தியபடி கணவனின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
அவளின் கத்தல் விமான இரைச்சலோடு காற்றில் கலந்தது... சற்று நேரத்தில் விமானம் ஒரே சீராக இயங்க ஆரம்பிக்கவும் தான் உணர்ந்தாள்... கணவனின் ஒரு கை தன்னை அணைத்தபடி தலையை வருடிக் கொண்டிருப்பதை…
பயத்தில் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு அவனின் கை வளைவில் இருந்தவளை கண்டு அவனுக்கு கோபம் வரவில்லை அதற்கு பதிலாக ஒரு கரிசனம் தான் வந்திருந்தது.
அவள் பயத்தில் மாறனின் கையை பிடிக்கும் பொழுது கோபம் வந்தது என்னவோ உண்மை தான் ஆனால் அடுத்த வினாடி அவளின் நிலை கண்டு மாறனின் இயல்பான குணம் வெளிய வர அவளை சற்று அணைத்த படி வைத்துக்கொண்டு ரிலாக்ஸ் ரிலாக்ஸ் இன்று அவளை சாந்தப் படுத்தினான்.
அவளின் உடல் நடுக்கம் சற்றும் மட்டு பட அவள் மீது இருந்த கையை விலக்கியவன் மிக மெதுவாக இப்போ கண்ணை திற ...நல்லா சாய்ந்து உக்காரு என்று கூறியபடி அவளின் சீட்டின் புஷ்பேக்கை போட்டுவிட்டான்.
வேதா நன்றாக அவளின் சீட்டில் அமர்ந்து கொண்டு மெதுவாக விழித்திருந்து ஜன்னல் வழியே எட்டி பார்க்க உடனடியாக அவளுக்கு தலை சுற்றலும் வாந்தியும் வரத்தொடங்கியது.
வாந்தி வருகிறது என்பது போல் அவள் ஜாடை செய்ய உடனடியாகவே புரிந்து கொண்டவன் அவளை கைத்தாங்கலாக
லாவண்டரிக்கு அழைத்துச்சென்றான்.
ஒருமுறை வாந்தி எடுக்கவுமே அவளுக்கு உடல்நிலை சற்று தேறியது. முகத்தை நன்கு தண்ணீர் விட்டு அலம்பியவள் வெளியே வரும்பொழுது நன்கு தெளிந்திருந்தாள் தலைசுற்றல் பரவாயில்லை என்பது போல் இருக்க வாந்தி முற்றிலும் இல்லை.
வெளியே வரும்பொழுது அவளின் முகம் நன்கு தெளிந்திருக்க கண்கள் மட்டும் சற்று கலங்கி இருப்பது போல் மாறனுக்கு தோன்றியது.
எதுவும் பேசாமல் மீண்டும் அவளின் கைகளைப் பிடித்து அழைக்க இம்முறை அவள் நாசுக்காக அவனிடத்தில் இருந்து கைகளை விலக்கிக் கொண்டாள்.
தனியாகவே வருவேன் என்பது போல் இருந்தது அச்செயல் எதுவும் பேசாத மாறன் அவளை முன் விட்டு பின் மெதுவாக வந்தான்.
அவர்களின் இருக்கைக்கு வரும்பொழுது இருவருக்கும் அடுத்த இருக்கை காலியாக இருக்கவே கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு அவளுக்கு மீதமிருந்த இருக்கையில் சௌகரியமாக அமர வைத்தான்.
ஆனால் வேதா இருக்கைக்கு வந்ததும் மீண்டும் தலை சுற்றுவதுபோல் தோன்ற ஒரு இருக்கையில் கால்களை குறுக்கி மற்றொரு இருக்கையின் மூலையில் சாய்ந்தபடி கண்மூட தொடங்கினாள்.
அவளுக்கு பேருந்தில் நெடுந்தூரம் பயணம் செய்தாலே ஒத்துக்கொள்ளாது டிராவலிங் சிக் உண்டு.
இப்பொழுது முதல் முறை விமான பயணம் என்றால் சொல்லவே வேண்டாம் நன்கு பழகியவர்களுக்கே விமானம் சில சமயங்களில் தலை சுற்றலை கொடுக்கும் இவளோ முதல்முறை பிரயாணம் செய்யும் பெண் அவளுக்கு இல்லாமலா இருக்கும்... மாறனுக்கு இந்த விஷயம் நன்கு தெரிந்து இருந்ததால் அவளை தொல்லை செய்யவும் இல்லை...கோபத்தை காட்டவும் இல்லை...மிக அன்பாகவும் கனிவுடனும் நடந்து கொண்டான்.
இதுபோல பயண நேரத்தில் தலை சுற்றும் வாந்தியும் இருப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் தைரியம் சொன்னாலே அது ஓரளவுக்கு மட்டுப்பட்டு விடும்.
அது ஒரு வித மன பயத்தினால் உண்டாவது தனக்கு ஒன்றும் ஆகாது அப்படியே ஆனாலும் தன்னுடன் இருப்பவர் தன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வார் என்பது போல் பிரயாணம் செய்பவர்களின் மனதில் தோன்றினாலே போதும் அவர்களுக்கு அது போல டிராவலிங் சிக் ஏற்படாது.
அதை மாறன் புரிந்து கொண்டு அதை மறைமுகமாக அவளுக்கு தெரியபடுத்த வேதாவின் அடிமனதில் தனக்கு ஏதாவது ஒன்று ஆனாலும் கூட மாறன் தன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் தோன்றவும் உடல்நிலையில் மாற்றம் வந்து சென்னையை அடையும் பொழுது இயல்பாக ஆரம்பித்திருந்தாள்.
ஒரு வழியாக சென்னை ஏர்போர்ட் வந்து இறங்கவும் அவர்களை அழைத்துச் செல்ல அவர்களின் டிரைவர் காருடன் வெளியே காத்திருந்தார்.
வேதாவிற்கு ஆச்சரியம் இவனிடம் மொத்தம் எத்தனை கார் தான் உள்ளது. முதல் முறை ஒரு காரில் வந்தார்கள் திருமணத்திற்கு இரண்டு மூன்று கார்கள் வந்தது இங்கேயும் ஒரு கார் தங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறது…
அப்பா ஏதோ கடை வைத்திருப்பதாக தானே சொன்னார்... கடை வைத்திருப்பவர்களால் இத்தனை கார்களை வாங்க முடியுமா …?
அப்பாவும் கடை தானே வைத்திருக்கிறார் ...ஏன் அவரால் புதியதாக ஒரு டிவிஎஸ் பிப்டி கூட வாங்க முடியவில்லை என்று அவளுக்கு தோன்றியது.
ஒருவேளை இவன் இத்தனை வசதியாக இருப்பதால்தான் தனது தந்தை கண்ணை மூடிக்கொண்டு இவனுக்குத் திருமணம் செய்து வைத்தார்களோ...
இவனுக்கும் இத்தனை பணம் இருப்பதால் தான் யாரையும் மதிக்காமல் திமிருடன் நடந்து கொள்கிறானோ அப்படி என்ன வேலை செய்கிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிகவும் இருந்தது…. வேதாவின் மன நிலைமை இப்படி இருக்க மாறன் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்ததும் அவளின் பக்கம் கூட திரும்பவே இல்லை.
வழக்கம்போல டிரைவரின் அருகில் இருக்கும் சீட்டில் அமர்ந்து கொள்ள இம்முறையும் தனியாக பின்னால் வேதா அமர்ந்து கொண்டாள்.
சற்று நேரம் வரை ரோட்டை வேடிக்கை பார்த்தவள் உடல் ஓய்வுக்காக ஏங்க கொட்டாவி விட்டபடி கண்களை மூடி மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்.
சற்று தூரம் வாகனம் செல்லவும் மாறனுக்கு ஏதோ தோன்றவே திரும்பி வேதாவைப் பார்க்க நன்கு அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
அவ்வளவு ஆச்சரியம் அவனுக்கு எப்படி இவளால் நினைத்தவுடன் தூங்க முடிகிறது தனக்கு எப்போது இந்த மாதிரி நினைத்தவுடன் தூக்கம் வரும் என நினைத்தவனுக்கு தூங்கும் அவளை பார்க்க பொழுது பொறாமையாக இருந்தது.
ஒரு நிமிடம் கூட விழித்திருப்பதில்லை இடம் கிடைத்தால் உடனே நன்கு சாய்ந்து தூங்கி விடுகிறாள்... கொடுத்துவைத்தவள் ...தனக்கும் இதேபோல் நிம்மதியான உறக்கத்தை கொடு இறைவா என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டான்.
வீட்டின் அருகே வரவும் வீட்டில் இருந்த உறவினர்கள் அனைவருமே இவர்களை வரவேற்பதற்காக வாசலில் வந்து நின்றிருந்தனர்.
முதிய பெண்மணி ஒருவர் இருவருக்கும் ஆரத்தி எடுப்பதற்காக கரைத்து வைத்துக் கொண்டிருக்க அவர்களின் முன்பு தன்னுடைய பிரச்சினை தெரிய வேண்டாம் என்று நினைத்த மாறன் கார் நிற்க்கவும் பொறுமையாக இறங்கி வேதாவை எழுப்புவதற்காக வர…
இம்முறை வேதா முன்பாகவே கண் விழித்திருந்தாள் வாகனம் நிற்கவும் காரின் கதவை திறந்தபடி அவளே இறங்கினாள்.
மாறனுக்கு ஆச்சரியம் தான் ஒரு முறை தான் கார் கதவை திறப்பதை கவனித்தாள் அதற்க்குள் அவளாகவே கற்றுக் கொண்டாளே புத்திசாலி தான்...என்று மனதிற்குள் மெச்சிக் கொண்டான்.
கீழே இறங்கிய வேதா வீட்டின் சுற்றுச் சுவற்றையும் வீட்டில் முன் புறத்தோற்றத்தையும் கண்டு கண்களை விரித்து பார்த்தாள் இவ்வளவு பெரிய வீடா என்று…
அதிர்ச்சி விலகும் முன்பே முறைப்படி ஆரத்தி சுற்றி அவர்களை உள்ளே அழைத்துச் செல்ல வீட்டைப் பார்த்து வேதா மிரண்டு விட்டாள்.
பளீரென மின்னும் வெள்ளை நிற கிரானைட் கற்களால் தளம் இருக்க அதில் அவளின் முகம் பளிச்சென்று தெரிந்தது.அந்த அளவிற்கு அதை பளீரென துடைத்து வைத்திருந்தார்கள்.
வீட்டில் வேலை செய்பவர்கள் கூட காலில் செருப்பணிந்து இருக்க அவர்களின் காலணி கூட தரம் வாய்ந்ததாக பளீரென்றது.
இவளோ பயந்து தனது காலணியை பார்த்தாள். தன்னுடையது அவர்களின் அளவுக்காவது இருக்கிறதா என்று.
அவளின் செயல்களை பார்த்து வாய்க்குள் சிரித்த மாறன் அவனின் அறைக்குள் சென்று விட்டான்.
அவன் உள்ளே சென்றதும் வேதாவிற்குள் ஒரு பய பந்து உருண்டோடியது.
இவ்வளவு பெரிய வீட்டில் இருப்பவர்களா தனது வீட்டில் தரையில் பாய் போட்டு அமர்ந்தார்கள் எதற்காக தன்னை மாறனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
அவர்களிடத்தில் இத்தனை வசதி இருக்கிறது என்பதை எந்த இடத்திலும் ஏன் அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை.
ஓருவேளை ஏதாவது மிகப்பெரிய திட்டம் இருக்கிறதா... ராதிகாவின் அழகோடு ஒப்பிட்டால் நான் ஒரு பங்கு கூட கிடையாது... அழகை விடலாம் அது கண்களுக்கு கண்கள் மாறுபடும் வசதி என்று ஒன்று உள்ளதல்லவா…?
அதில் எனது குடும்பம் எதுவுமே இல்லையே ஏன் தேடி வந்து பெண் எடுத்தார்கள்….என்று பல கேள்விகள்.
அதற்குள்ளாக ஒரு பெண்மணி அவளை அமரச் சொல்ல சோஃபாவில் உயரத்தை கணக்கில் வைத்து சாதாரணமாக அமர அது சட்டென்று அவளின் மொத்த எடையையும் உள்வாங்க வீல் என கத்தினாள்.
சத்தம் கேட்டு பயந்து வெளியே மாறன் ஓடிவந்தவன் அவளின் நிலையறிந்து வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.
வேதா சோஃபாவில் சாதாரணமாக அமர அது முழுக்க முழுக்க ஃபோர்ம் ஆல் ஆனது இவள் அமரவும் உடல் எடை அதிகம் என்பதாலும் இதுவரை இதுபோல் உயர்ரக மெத்தையில் அமராததாலும் மெத்தென்று அமர அது ஒரு அடிவரை மெதுமெதுப்பாக கீழ் இறங்க இவள் பயந்து ஒரு பக்கமாக கத்தியபடி சாய்ந்து கிடந்தாள்.
சுதாரித்துக்கொண்டு எழ ஆரம்பித்தவள் இப்பொழுது அதனின் மெதுமெதுப்பை அனுபவித்தவள் அப்படியே சாய்ந்த வாக்கில் குதித்து பார்க்க அது அவளை தாலாட்டியது….
மாறன் வாய்விட்டு சிரித்ததை வேலையாட்கள் முதல் உறவினர்கள் வரை ஆச்சரியமாக பார்த்தனர்.
அவன் சிரிப்பதே அபூர்வம் அதுவும் இப்படி வாய்விட்டு நகைப்பது என்றால் யாராலும் நம்ப முடியவில்லை…
வேதாவின் இயல்பான குணம் இதுதான் எதையும் மீக தீவிரமாக யோசிக்க மாட்டாள்...யோசிக்கும் பொழுது இதுபோல் ஏதாவது அசம்பாவிதம் நடந்தாள் அதையும் ரசிப்பாள்
முந்தியதை மறந்துவிடுவாள் அதுதான் இப்பொழும் நடக்கிறது...சற்று முன்பு இருந்த பயம் மறைந்து சோஃபாவின் மென்மையை உணர்ந்து கொண்டிருக்கிறாள்.
இவளின் சந்தோஷத்தையும் மாறனின் புன்னகையையும் கண்டு ஆரத்தி எடுத்து வரவேற்ற அதே முதிய பெண்மணி வாய் நிறைய புன்னகையுடன்
வந்து சாய்ந்தபடி சோஃபாவில் குதித்துக்கொண்டிருந்த வேதாவை சரியாக எழுந்து அமர வைத்தார் பிறகு இரு கைகளாலும் அவளுக்கு நெட்டி முடித்தார்.
என் ராஜாத்தி என் பேரன் இப்படி வாய்விட்டு சிரித்து எவ்வளவு நாள் ஆவுது தெரியுமா...நீ தான் அவனை இப்படி மனசு விட்டு சிரிக்க வச்சிருக்க நீ தீர்க்க சுமங்கலி யா நல்லாயிருக்கனும் என்று வாழ்த்தினார்.
பாட்டி வேதாவிடம் பேசியதை கேட்டவன் சிரிப்பை தொலைத்தபடி மீண்டும் அவனின் அறைக்குள் சென்றான்.
வேதா ஆச்சர்யமாக அவரை பார்த்து நீங்க அவரோட பாட்டியா அப்போ ஏன் கல்யாணத்துக்கு வரல…
வயசாயிடுச்சி பிரயாணம் ஒத்துக்காது. தாத்தாக்கு முடியாம படுக்கைல கிடக்கறாங்க….அதுமில்லாம மாறன் கல்யாணம் பண்ணுவான்னு எனக்கு நம்பிக்கையே இல்ல...அவ்ளோ தூரம் வந்து கல்யாணம் நடக்கலனா என் மனசு தாங்காது அதான் நான் வரல அங்க வந்திருந்தா இந்த பய இப்படி சிரிக்கறதை பாக்கற பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்குமா…?
என்ன…? கல்யாணம் பண்ணுவானு நம்பிக்கையே இல்லனா என்ன அர்த்தம் பாட்டி அப்படினா இந்த கல்யாணம் அவர் விருப்பம் இல்லாம நடந்ததா...என்று நெற்றி சுருக்கியபடி வேதா கேட்க
சட்டென்று பாட்டியிடம் ஒரு இறுக்கம் வர அங்கிருந்த வேலையாள் ஒருவரை திட்டி வேலைவாங்குவது போல அங்கிருந்து கிளம்பினார்.
மீண்டும் குழப்பம் மேலோங்க வீட்டில் சுற்றி கண்களை மேய விட்டாள்...குடும்ப உறுப்பினர் அனைவரது புகைப்படமும் ஜோடியாக தனித்தனியா இருந்தது...தாத்தா,பாட்டியின் இளவயது புகைபடம் முதல் வர்ஷினி பெரிய மனுஷி ஆகும் போது எடுத்த புகைப்படம் வரை மிக பிரம்மாண்டமாக ஒவ்வொரு சுவற்றிலும் மாட்டப்பட்டிருந்தது.
முக்கியமாக செழியன் ராதிகாவின் திருமண புகைப்படத்தில் அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் அணிகலன்கள்,மேடை அலங்காரம்... இவையெல்லாம் சொல்லாமல் சொல்லியது திருமணம் எந்த அளவுக்கு பிரமாண்டமாக நடந்திருக்கும் என்ற கதையினை…
முதலில் எடுத்த மருமகள் இவ்வளவு வசதி வாய்ப்பாக எடுத்து விட்டு இரண்டாவது மருமகளை மட்டும் ஏன் ஏழ்மையான வீட்டில் இருந்து எடுத்தார்கள்…
அதுவும் பாட்டி சொல்வதை பார்த்தால் விருப்பமே இல்லாமல் தன்னை திருமணம் செய்திருப்பது போல் தோன்றுகிறதே..
என்ன நடக்கிறது இந்த வீட்டில் ஒவ்வொருவரும் புதிராகவே இருக்கிறார்களே எப்படி அறிந்து கொள்வது…
ஏழை வீட்டு பெண்ணைத் திருமணம் செய்வது போல் நடித்து அவளை வீட்டிற்கு அழைத்துச்சென்று சில நாட்கள் கழித்து உடல் உறுப்புகளை எல்லாவற்றையும் திருடிக்கொண்டு பெண் கடும்வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடியதாக என்றோ பத்திரிகையில் படித்தது போல் தன்னையும் செய்து விடுவார்களோ என உள்ளுக்குள் பயந்தவளுக்கு முகம் என்று வியர்க்கத் தொடங்கியது.
ஒருவேளை அப்படி எதுவும் நடந்து விட்டால் எப்படி எல்லோரிடத்திலும் தெரியப்படுத்துவது... முதலில் இந்த வீட்டில் இருப்பவர்களிடம் இருக்கும் ரகசியத்தை தெரிந்து கொள்ளும் வரை யாரிடம் ஒட்டி உறவாட கூடாது என்று நினைத்தவளுக்கு அதிகமாக யோசித்ததால் மூளை ஒய்வுக்கு ஏங்க உடலும் அதன் பேச்சைக் கேட்க அப்படியே சோபாவில் சாய்ந்தபடி உறங்க ஆரம்பித்தாள்.
தொடரும்..