கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துணையாக நான் வருவேன்-8

Akila vaikundam

Moderator
Staff member
8


அதன் பிறகு அன்றைய நாள் வேகமாக நகரத் தொடங்கியது….



இந்து வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சீக்கிரமாகவே ஒட்டிக்கொண்டாள்.பாட்டி வீட்டில் இருந்ததால் மாறனுக்கும்‌ வேதாவிற்கும் ஏதோ சிறு சலசலப்பு இருக்கிறது என்று புரிந்துகொண்டார். பேரனைப் பற்றி அவருக்கு தெரியாதா என்ன..



விருப்பமே இல்லாமல் திருமணம் செய்து கூட்டி வந்திருக்கிறான் கண்டிப்பாக ஒரு நாள் கூட அவளை கூட வைத்திருக்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டு இருந்தவருக்கு இந்து வரவும்‌ சிறு நம்பிக்கை பிறந்தது…


மருமகள் கனகாவை அழைத்து இந்துவை கூட அழைத்து வருவது என்ற யோசனை யாருடையது என விசாரித்தார்.


சற்று பயந்த கனகா ஏன் கேக்குறீங்க அத்தை...அது நம்ம செழியன் தான் சின்ன பொண்ணு அழுகுதுனு கூட்டிட்டு வந்தான் என்று தயங்கியபடியே கூறினார்.


எதுக்கு கனகா இப்போ பயப்படுற... ரொம்ப நல்ல காரியம் பண்ணிருக்கான் உன் சின்ன மகன் அவன் மட்டும் அந்த சின்ன பொண்ண கூட்டிட்டு வராம இருந்திருந்தா உன் பெரிய பிள்ளை கல்யாணத்துக்கு நீ நட்டு வச்ச வாழை மரம்தை அவுக்கறதுக்கு முன்னாடி உன் மருமகளை அவ வீட்டுக்கு பெரியவன் அனுப்பி வைச்சிருப்பான்.


நல்லா கேட்டுக்கோ கனகா அந்த இந்து புள்ளைய இன்னும் கொஞ்சம் நாள் இங்கேயே புடிச்சு வைக்க பாரு அது மட்டும் இல்ல வேதாவோட அம்மா அப்பா இங்க வராத மாதிரியும் பார்த்துக்கோ இந்த இரண்டையுமே பண்ணினா இளையவன் மாதிரி பெரியவனும் குடும்பமா இருப்பான்…
பாத்துக்கோ...என்றவர் கண்கலங்கியபடி….


எப்படியும் இன்னும் ரெண்டு மாசத்துல செழியனோட புள்ளையை பாத்துடுவேன்….அப்படியே மாறனோட புள்ளையையும் கண்குளிர பாத்துட்டா என் கட்டை நிம்மதியா போகும்….




இதையெல்லாம் பாத்துட்டு தான் போவேனு தானோ என்னவோ உன் மாமனார் அவரோட உயிரை கையில புடிச்சுக்கிட்டு இருக்கிறாருனு நினைக்கிறேன் என்றவர் நிமிடத்தில் சுதாரித்துக் கொண்டு சொன்னது புரிஞ்சுக்கல கனகா...அந்த பொடுசு இந்துவை புடிச்சி வைக்கப்பாரு என்று கூறி அனுப்பினார் .




அதன் பிறகுதான் கனகாவும் கவனிக்க ஆரம்பித்தார்... ஆம் இந்து வந்த பிறகுதான் மாறன் எல்லோரிடமும் சிரித்துப் பேசுகிறான் சிறு பெண்ணின் முன்பு ஏன் முகத்தை காட்ட வேண்டும் என்று நினைக்கிறான் ஏதோ ஒரு வகையில் அந்த சிறு பெண்ணை தனது பெரிய மகனுக்கு பிடித்திருக்கிறது அந்தப் பெண்ணின் மனம் கோணக் கூடாது என்று சில விஷயங்களை பார்த்து செய்கிறான் என்பதை புரிந்து கொண்டவர் தனது மகனின் பிடி இப்பொழுது வேதாவின் தங்கை கையில் இருக்கிறது என்று தெரிந்ததுமே இந்துவின் மீது அளவுக்கு அதிகமான பாசம் வந்தது.



ஒரு வழியாக இரவு வரவும்…அணைவரும் நேரமாகவே உணவை உண்டனர்…..




அதன் பிறகு புதுமணத் தம்பதியினரின் அடுத்தக்கட்ட சம்பிரதாயமான முதலிரவிற்கான நேரம் பார்த்தனர் வீட்டின் பெரியவர்கள்...



அன்றைய தினமே நல்ல நாளாக இருப்பதால் அன்றே தம்பதியினரின் முதலிரவை வைத்துக் கொள்ளலாம் என குடும்ப ஜோசியர் நேரம் குறித்து கொடுக்க மாறனை எப்படி ஒத்துக் கொள்ள வைப்பது என கனகாவிற்கு புதிய கவலை வந்தது.



பாட்டிதான் கனகாவிடம் இங்க பாரு மருமகளே ஒரு சில விஷயங்களை நாம தான் முடிவெடுக்கனும் மாறனுக்கு பிடிக்குமோ…. பிடிக்காதோ... என்ன சொல்லுவானோனு பயந்து நாம ஒதுங்கிப்போனா மாறனை என்னைக்குமே நம்ம கட்டுக்குள்ள கொண்டுவர முடியாது.



அவன் கடைசி வரைக்கும் சந்நியாசியாவே வாழ்ந்துட்டு போயிடுவான் அதனால நான் சொல்றபடி கேளு வேதாவை அலங்காரம் பண்ணறதுக்கு என் ரூம்க்கு கூட்டிட்டு வா .



அப்படியே மாறனை அவன் ரூம்ல இருந்து வெளியே கிளப்பற வழியைப் பாரு….அதுக்கப்புறமா அவனுக்கு புடிச்சது போல அவனோட அறையை அலங்காரம் பண்ணச்சொல்லு….



ராத்திரி நேரத்துல ரெண்டு பேரையும் ஒரே ரூம்ல விட்டா நடக்குறது தானா நடக்கப்போகுது…. அதனால கண்டதை நினைச்சு குழம்பாம அடுத்து என்னனு யோசி... என்று கூறினார்.



கனகாவிற்கும் அதுதான் சரியென்று பட்டது உடனே வேதாவை அழைத்து பாட்டியின் அறைக்குள் அனுப்பி வைத்தவர் மாறனை எப்படி அறையை விட்டு வெளிக் கொண்டு வருவது என யோசித்துக் கொண்டிருந்தவர் ராதிகாவிடம் சென்று ஜோசியர் இன்றைய நாள் நல்லதாக இருப்பதால் இன்றே சாந்தி முகூர்த்தத்தை வைத்துக்கொள்ளலாம் என கூறுகிறார்.


எப்படியோ வேதாவை அலங்காரம் செய்வதற்கு பாட்டியின் அறையில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தாகிவிட்டது ஆனால் அறைக்குள் அடைந்து கிடக்கும் மாறனை எப்படி வெளிக்கொண்டு வருவது என்று தெரியவில்லை என்ன செய்யலாம் என்று கேட்டார்



ஒரு நிமிடம் யோசித்த ராதிகா இவ்வளவுதான அத்தை அத்தானை இப்போ அறையில் இருந்து வெளியே அனுப்பிட்டு அவர் ரூமை அலங்காரம் பண்ணும் இவ்வளவுதான இந்த வேலையை நான் பாத்துக்கறேன் என்று கூறியவள் உடனே சிறிய பெண்களான இந்துவையும் தர்ஷினியையும் அழைத்து மாறனின் அறைக்குள் சென்று ஏதாவது விளையாடுங்கள் என்று கூறினாள்.



இரு பெண்களுக்குமே கிட்டத்தட்ட சம வயது என்பதனால் அவர்கள் விமானத்திலேயே நன்கு ஒட்டிக் கொண்டனர். இங்கு வந்த நேரத்தில் இருந்து வேதாவையும் கூட அழைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றனர் ..



வேதா பாட்டியின் அறைக்கு சென்றதிலிருந்து இந்து சற்று வாடிய முகத்துடன் காணப்பட்டாள்.


திடீரென அக்காவை தொந்தரவு செய்யக்கூடாது என உள்ளே அழைத்துச் சென்று விட்டார்களே என்று கவலையில் இருக்க ராதிகா வந்து தர்ஷினியோடு சேர்ந்து மாறனின் அறைக்குள் சென்று விளையாடு என்று கூறவும் சரி என தலையாட்டியவள் சொன்னது போலவே அவனின் அறைக்குள் சென்று அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடிக்கொண்டு இருக்க மாறனுக்கு வேலையில் இடையூறு வர ஆரம்பித்தது.




அதனால் எதுவும் பேசாமல் லேப்டாப்பை தூக்கிக்கொண்டு மாடியில் இருந்த மற்றொரு அறைக்குச் செல்ல பின்னாலேயே செழியன் ரகு செல்வி ராதிகா என நால்வரும் மாறனின் அறைக்குள் சென்றனர்.


செழியனை பார்த்த ராதிகா கணவரிடமும் செல்வியின் கணவர் ரகுவிடவும் நான் கேட்கிறதெல்லாம் இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள வாங்கிட்டு வரணும் புரியுதா என்று கூறியபடி ஒரு மிகப்பெரிய லிஸ்ட்டை எழுதி அவர்கள் கையில் திணித்தாள் பெரிய அத்தானுக்கு தெரியாத மாதிரி சீக்கிரமா வாங்கிட்டு வாங்க என்று கூற சரி என தலையை ஆட்டியபடி அவர்கள் சென்று வாங்கி வந்து கொடுத்து விட்டு திருமணத்திற்கு வந்திருந்த மற்ற உறவினர்களை கவனிக்கச் சென்று விட்டனர்.


அதன்பிறகு
ராதிகாவின் தலைமையின் மாறனின் அறை அலங்கரிக்கப் பட்டுக்கொண்டிருந்தது.


வேதாவை அலங்காரம் செய்வதற்க்காக பாட்டியின் அறையில் அமர வைக்க அவளின் அடிவயிற்றில் பயப்பந்து உருண்டு கொண்டிருந்தது.
மாறனுக்கு தெரிந்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பான்…


சாயங்காலமே ஊருக்கு செல்கிறேன் என கிளம்பியவளை இந்து வந்து கெடுத்து விட்டாள்...இப்பொழுது முதலிரவுக்காக தன்னை அலங்கரிக்கிறார்கள்…
எப்படி அவனை ஒரே அறையில் எதிர்கொள்வது...அதுவும் இதுபோல் ஒரு சந்தர்ப்பத்தில் என்று நினைக்கும் போதே அவளுக்கு தலைசுற்றியது…


இவர்களிடம் வெளிப்படையாகக் கூற முடியவில்லை இந்துவிற்க்காக மட்டும் தான் நான் இப்பொழுது இங்கு தங்கி இருக்கிறேன் தாய் தந்தை வரும்பொழுது உடனே கிளம்பி விடுவேன் எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் என்று கேட்கலாம்.



ஆனால் வயது முதியவர்களான மாமியாரிடமும் அவரின் மாமியாரிடமும் எப்படி கேட்பது... எப்படி இருந்தாலும் மாறனின் அறைக்குள் செல்லும் போது அவனிடம் புரிய வைத்துவிடலாம்.



அவனது அறையில் தான் இரு அறைகள் உள்ளனவே அதில் ஒன்றில் ஒரு இரண்டு நாட்கள் மட்டும் தங்கி கொள்ளலாம் இல்லையென்றால் இந்துவை சாக்கு வைத்துக்கொண்டு மற்றொரு அறையில் தங்கையோடு தங்கிக் கொள்ளலாம் என்று அடுத்த திட்டத்தை மனதிற்குள்ளேயே வைத்திருந்தாள்.



லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த மாறன் சற்று நேரம் கழித்து தான் கவனித்தான் லேப்டாப்பில் சார்ஜர் குறைகிறது என்று.


சார்ஜரை அறையிலேயே விட்டுவிட்டது நினைவுக்கு வர யாரையாவது எடுத்து வர சொல்லலாம் என தேடினால் ஒருவரையும் காணவில்லை…


வீட்ல இருக்கிறவங்களுக்கு என்ன ஆச்சு வேலையாட்கள்ல இருந்து வீட்டு ஆளுக வரைக்கும் ஒருத்தர் கூட கண்ணுக்கு படவே மாட்டேங்கிறாங்க என்று யோசித்தபடியே அவனின் அறைக்கு வர

கட்டிலில் நடுவினில் தர்ஷினியும் இந்துவும் பூக்கோலம் போட்டுக் கொண்டிருக்க அவர்கள் சரியாகச் செய்கிறார்களா என்று ராதிகா இடுப்பில் கைவைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள்.



செல்வி மற்ற இடங்களில் எல்லாம் பூக்களைத் தொங்க விட்டுக் கொண்டிருக்க வேலையாட்கள் சிலரும் ஏதேதோ செய்து கொண்டிருந்தனர்.



அலங்காரம் எதற்கு என்று புரியவும் மாறனுக்கு முதலில் அதிர்ச்சியும் பிறகு கோபமும் வந்தது.


சத்தமாக ராதிகா இங்க என்ன நடக்குது எல்லாரும் இங்கிருந்து போங்க என்று கூறவும் விளையாட்டு செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அப்படியே சென்றார்கள்.


அவனின் சப்தத்தில் பயந்த ராதிகா திரும்பி விழிக்க அவளை கண்டுகொள்ளாதவன் நேராக வந்து சிறுமிகள் இருவரையும் அங்கிருந்து விரட்டினான்.


ஏய் தர்ஷினி உனக்கு படிக்க ஒன்னுமில்லையா…?டென்த் பப்ளிக் எக்ஸாம் நியாபகம் இருக்குல்ல…ஓடு…
இந்து நீயும் உன் அக்காகிட்ட போ…என்றவனிடம் செல்வி வந்து என்னடா இப்போ எதுக்கு எல்லாரையும் விரட்டி விடற….



சுய புத்தியோட தான் எல்லாமே பண்ணிக்கிட்டு இருக்கியா அக்கா இல்ல உன் புத்திக்கு ஏதாவது ஆயிடுச்சா என்று கோபமாகக் கேட்டான் .



பண்ற எல்லாத்தையும் என் சுய புத்தியோடு தான் பண்ணிட்டு இருக்கேன் செழியன் கல்யாணத்தன்னைக்கு ஒரு அக்காவா என்ன செஞ்சேனோ அதையே தான் இப்போ உனக்கும் செய்யறேன் போதுமா….


நல்லாவே தெரியுது நீ எந்த அளவு சுய புத்தியோட இருக்கிறனு இல்லனா குழந்தைகளை கூட்டிட்டு வந்து இந்தமாதிரி வேலையை பண்ணுவியா…என்றவன் ராதிகாவை பார்த்து அவதான் அறிவு இல்லாமல் இதெல்லாம் செய்றானா நீயும் கூட இருந்து ஜால்ரா போட்டுட்டு இருக்கிறியா ராதிகா .



இந்த மாதிரி நேரத்துல உன்னை யார் இதெல்லாம் வந்து செய்ய சொன்னது முதல்ல ரெண்டு பேரும் இதையெல்லாம் எடுத்துட்டு இப்போவே கிளம்புங்க….என்றவனிடம்




அண்ணியை திட்டாதீங்க அத்தான் பத்து மணிக்கு மேல நேரம் நல்லா இருக்குன்னு ஜோசியர் சொல்லிருக்காரு…. எல்லாம் முறைப்படி நடக்கனும்ல அதான் இதெல்லாம் செய்யறோம் நீங்க கொஞ்ச நேரம் வெளியே இருந்தீங்கன்னா உடனே டெக்ரெஷனை பினிஷ் பண்ணிடுவோம்….




அய்யோ ராதிகா தயவு செஞ்சு என்னை கத்த வைக்காம ரெண்டு பேரும் இங்கிருந்து கிளம்பி போங்க என்று கத்தவும்


பெண்கள் இருவரும் தலையை குனிந்தபடி வெளியே செல்லும் பொழுது அவனின் அக்காவை அழைத்தான். சந்தோஷமாக திரும்பிப் பார்த்த செல்வியை இதெல்லாம் எடுத்துட்டு போ என்று அங்கிருந்த பூக்கூடை ஸ்வீட் கவரை காண்பிக்க தலைகுனிந்தபடி வாய்க்குள் முனுமுனுத்தபடி எல்லாவற்றையும் எடுத்துச் சென்றார் செல்வி.



அவர்கள் சென்றதும் ஆழ மூச்சை இழுத்து விட்டவள் தலையை நன்கு கோதி விட்டு கொண்டு அங்கிருந்து அலங்காரங்களை எல்லாவற்றையும் கலைத்துப் போட ஆரம்பித்தான்.




அப்பொழுது மெதுவாக கதவை தட்டும் ஒலி கேட்கும் யாரென வந்து கதவைத் திறக்கவும் செழியனும் ராகுவும் நின்றுக் கொண்டிருந்தார்கள் நன்றாகவே புரிந்து விட்டது ராதிகாவும் செல்வியும் சென்று இவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்பது.




எதையும் வெளிக்காட்டதவாறு என்ன என்று அறைக்குள் விடாதவாறு மறுத்து நின்றபடி அவர்களை பார்த்து கேட்க செழியன் ரகுவை பார்த்து நீங்கள் கூறுங்கள் என்று ஜாடை செய்ய ரகு நீ சொல் என்பது போல் ஜாடை செய்தார்.




இருவரையும் மாறி மாறி பார்த்தவன் ரெண்டு பேரும் முதல்ல பேசி முடிவெடுங்க யார் சொல்றதுன்னு அதுக்கப்புறம் பொறுமையா கேக்கறேன் என்று அறைக்குள் செல்ல ரகு முந்திக்கொண்டு மாப்ள அது ஒன்னும் இல்ல ….அது வந்து என்னன்னா….என்று இழுக்க .



அது தான் ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டிங்கல்ல அப்புறம் என்ன..? என்று நக்கலாக மாறன் கேட்டான்.



செழியன் மெதுவாக வாய் திறந்து அண்ணா அது ஒன்னும் இல்லணா... மச்சான் என்ன சொல்ல வர்றார்ன்னா இன்னைக்குதான் உனக்கு கல்யாணம் ஆகியிருக்கு… அப்புறமா இன்னைக்கே பஸ்ட் நைட் வச்சிக்கலாம்னு என்று இழுத்தவன் அண்ணணின் முறைப்பைக் கண்டு மச்சான் நீங்க சொல்லுங்களேன் என்று ரகுவை முன்பு இழுத்து விட்டுக் கொண்டு அவரின் பின் செல்ல எரிச்சலடைந்த மாறன் இருவரையும் பார்த்து முறைக்க தொடங்கினான்.



தைரியத்தை வளர்த்துக் கொண்டு அது ஒன்னும் இல்ல மாப்பிள்ள தங்கச்சி கொஞ்சம் சின்ன பொண்ணு பார்த்து கொஞ்சம் பக்குவமா நடந்துக்கோ உன் கோபத்தையும் அவசரத்தையும் அதுகிட்ட காமிச்சிடாத... அத சொல்றதுக்காக தான் ரெண்டு பேரும் வந்தது என்று அசடு வழிந்தபடியே கூற.


கண் சிமிட்டாமல் இருவரையும் பார்த்தவன் பொறுமையாக ஒரு கையை எடுத்து நெற்றியைத் தேய்த்துக் கொண்டே ஏதாவது அசிங்கமா சொல்றதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் இங்கிருந்து கிளம்பிடுங்க…


இல்லனா மச்சான்னோ தம்பினோ பார்க்க மாட்டேன் ஏதாவது கெட்ட வார்த்தையில திட்டிடுவேன் என்றவன் அறைக்குள் செல்ல..


மீண்டும் கதவு தட்டும் ஒலி கேட்க யார் என கேட்டபடி கதவை திறக்க செழியன் தான் அவசரமாக ரொம்ப நேரமா ரூம் டெகரேஷன் பண்ணி இருக்காங்களாம் அதனால தயவு செஞ்சு கலைக்காம இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி மட்டும் விடறதாம்….அப்படினு நான் சொல்லல ராதிகா தான் சொல்ல சொன்னா என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடினான்.


செல்லும் அவனையே பார்க்க செழியனின் அறைக்குள் இருந்து ராதிகா எட்டிப் பார்த்தது தெரிந்தது இவன் பார்க்கிறான் என்று தெரிந்ததும் தலையை அவள் சட்டென்று உள்ளே இழுத்துக்கொள்ள அதைப்பார்த்து தலையிலடித்துக் கொண்டவன் மீண்டும் அறைக்குள் சென்று அலங்காரங்களை கலக்கத் தொடங்கினான்.



சிறிது நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்பட இவங்களுக்கு வேற வேலையே இல்ல போல என்று கோபமாக கூறியபடி கதவின் பக்கம் வந்தவன்... மறுபடியும் என்ன வேணும் என்று கேட்டபடியே கதவைத் திறக்க வாசலில் மலங்க மலங்க விழித்தபடி வேதா நின்றுகொண்டிருந்தாள்.



வெண்பட்டில் அரக்கு பார்டர் இருக்க... பார்டர் நிறத்திலேயே ரவிக்கை அணிந்திருந்தாள்...பட்டுக்கு மேட்ச்சாக வெள்ளை கற்களால் ரவிக்கை முழுவதும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
தலைநிறைய மல்லிப்பூ வைத்திருக்க உடல் முழுவதும் அவனின் குடும்ப நகைகள் இடம்பெற்றிருந்தது.


அவளின் கண்களுக்கு அடர்த்தியாக மை தீட்டியிருக்க உதட்டில் அடர் சிவப்பில் லிப்ஸ்டிக் போட்டிருந்தாள்
வேதாவின் அலங்காரத்தை பார்த்தவனுக்கு வினாடியில் உடல் முழுவதும் வியர்க்கத் தொடங்கியது.


ரசிக்கும் மன நிலைமையில் இருந்தால் பொறுமையாக ரசிக்கலாம் அவ்வளவு அழகாக அவளை செதுக்கி இருந்தார்கள்.


சரியான அளவில் முகத்தில் ஒப்பனை அவள் நிறத்திற்கு பொருந்துகின்ற ஆடை அணிகலன்கள்.



இன்னும் சற்று நேரம் அவளை ரசித்தால் அவள் அழகில் தடுமாறுவது நிச்சயம் என்று அவனுக்குத் தெரியவும் உடனடியாக முகத்தில் கோபத்தை பூசிக்கொண்டு என்ன என்று கேட்டான்.


பாட்டி தாத்தா கிட்ட ஆசீர்வாதம் வாங்குறதுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க…


கடவுளே... நீயும் ஏன் இப்படி படுத்துற அவங்கதான் புரியாம ஏதோ பண்றாங்கன்னா நீயும் கூட சேர்ந்து ஜால்ரா போடுறியா கொஞ்ச நேரம் முன்னாடி தான் ஊருக்கு போறேன்னு அவ்ளோ டிராமா போட்ட இப்போ என்னண்ணா இவ்ளோ மேக்கப் போட்டுக்கிட்டு என் முன்னாடி வந்து நிக்கிற…



இதை எல்லாம் பார்த்து நான் மயங்கிடுவேன்னு நினைச்சியா அந்த மாதிரி தப்பு கணக்கு எல்லாம் போட்டுக்கிட்டு இருக்காத.


ஒழுங்கா எல்லாத்தையும் கலைச்சிட்டு உன் தங்கையோட போய் தூங்கு….உன் அம்மா அப்பா எல்லாருமே டிரெயின் எறியாச்சாம் காலைல வந்திடுவாங்க...அவங்களோட கிளம்பற வழியைப்பாரு….என்று வாசலிலேயே நின்று பொறியத் தொடங்க…


வீட்டில் இருந்த அனைவருமே அவரவர் அறை வாசலில் நின்று இவன் வேதாவிடம் பேசிக்கொண்டிருப்பதை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


கனகாவின் பக்கம் நின்ற இந்துவிற்கு மட்டும் மாறனுக்கு தன்னுடைய அக்காவை பிடிக்கவில்லை என்பது நன்றாகப் புரியவும் அழுதுகொண்டே அக்காவின் அருகே ஓடி வந்தவள் ஏன் மாமா அக்காவை திட்டறீங்க….அக்காகு இது அழகா தான இருக்கு என்று கேட்டவள் வேதாவைப் பார்த்து வாக்கா நாம நம்ம வீட்டுக்கே போகலாம்...மாமாக்கு நம்மளை பிடிக்கல நாம இங்கிருக்க வேண்டாம் என்று கூறியபடி அழத் தொடங்கினாள்.


அப்பொழுதுதான் மாறன் அவனின் தவறை உணர்ந்தான் வாசலிலேயே நிற்க வைத்து இவ்வளவு நேரம் பேசி இருக்கிறான் என்று உணர்ந்தவன் சுற்றிலும் பார்க்க அனைவருமே இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் .



செழியன் இந்துவை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக நகர ராதிகா அவனின் கையைப் பிடித்து வேண்டாம் என்பது போல் தலையசைத்தவள் அவர்களின் அறைக்குள் சென்றாள் கோபமாக செழியனுன் பின் சென்றான்.



இங்கு கனகா இந்துவை அழைப்பதற்க்காக நகர அருகில் இருந்த பாட்டி வேண்டாம் என்று தடுத்தவர் அவரையும் அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றார்.


அனைவருமே அவர்களின் அறைக்குள் சென்று அடைய இங்கே இந்து வேதாவை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.


அவளின் அழுகையை பார்த்து தாங்கிக் கொள்ளாத வேதாவும் சேர்த்து அழ ஆரம்பித்தாள்.



ராதிகாவிடம் செழியன் கோபமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தான்…


என்ன ராதிகா இது கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அந்த சின்ன பொண்ணு அப்படியே அழவிட்டுட்டு உள்ள வந்துட்ட பத்தாவதுக்கு என்னையும் உள்ள கூப்பிட்டு கிட்ட... நீ செஞ்சது கொஞ்சம் கூட சரியில்லை…


உளறாதீங்க செழியன்... முதல்ல வீட்டுக்குள்ள என்ன நடந்துகிட்டிருக்குன்னு புரிஞ்சுக்கோங்க அதுக்கப்புறமா வாய்க்கு வந்ததெல்லாம் பேசுங்க கேட்டுக்கறேன்…


இன்னைக்கு அக்காவோட லக்கேஜ் எடுத்துட்டு வந்தோம்ல...அதை அக்கா இதுவரை ஒபன் பண்ணவேயில்லை.



அண்ணி ஓபன் பண்ண போனதுக்கு அதை கலைக்கவேணாம்னு சொல்லிருக்காங்க...அதுமட்டுமில்ல அடுத்த வாரம் வர்றதா சொன்ன அவங்க அம்மா அப்பாவை உடனே கிளம்பி வர சொல்லிருக்காங்க...இந்து கிட்ட அவங்க வந்ததும் உடனே நாம ஊருக்கு போகலாம்னு சொல்லிருக்காங்க... அப்படினா என்ன அர்த்தம்..


என்ன சொல்லற ராதிகா... ஒன்னும் புரியலையே…. அண்ணி நாளைக்கு ஊருக்கு போறதா சொன்னாங்களா...இந்து கிட்ட சொன்னதை நீ கேட்டியா... என்று யோசனையாக கேட்பவரிடன்.



இந்து கிட்ட சொன்னதை கேக்கல ஆனா இந்து தர்ஷினி கிட்ட சொன்னதை கேட்டேன்.


நாளைக்கு என்னோட அம்மா அப்பா வந்ததும் அக்காவோட ஊருக்கு போய்டுவேன் அதுக்கு அப்புறம் இங்க வரவே மாட்டோம் உனக்கு என்னை பாக்கனும்னு தோணினா நீ வேணா உங்க அம்மாவை கூப்பிட்டு கிட்டு எங்க ஊருக்கு வான்னு சொன்னதை…


என்ன ராதிகா இது புது குழப்பம் என்று கவலையாக கேட்டவனிடம் அருகில் வந்து தோளில் கைவைத்தவள் அதுக்காகத்தான் சொல்றேன்...எதையும் கண்டுக்காதீங்கனு….



அத்தானுக்கு இந்த கல்யாணத்தில் துளிகூட விருப்பம் இல்லனு உங்களுக்கு எனக்கு ஏன் எல்லாருக்குமே தெரியும் இருந்தும் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்.


ஆனா அவர் இந்த கல்யாணத்த பந்தத்தை ஒருநாள்கூட தொடர விரும்பல... அதை உடனே அத்துவிட நினைக்கிறாரு…


ஏதோ இந்து பொண்ணு வந்ததால கொஞ்ச நேரம் வேதாக்கா கிட்ட நல்லவிதமா பேசினாரு... அதைப் பார்த்து நாங்களும் ஃபஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு பண்ணினோம் அதும் இப்போ சொதப்பல்... இப்போ இந்துவோட அழுகையாவது அவர் மனசை மாத்தி அக்காவை அவர் ரூம் உள்ள விட வைக்கட்டும்னு பார்த்துட்டு இருந்தேன் ... ஆனா நீங்க அதையும் கெடுக்க போனா என்ன பண்ணறதாம் அதான் தடுத்தேன் என்றவளிடம்.



சாரி ராதிகா நான் உன்ன தப்பா புரிஞ்சுகிட்டேன் நீ நம்ம குடும்பத்துமேல எவ்ளோ பாசம் வச்சிருக்க அதை புரிஞ்சிக்காம உன்னை அவசரப்பட்டு திட்டிட்டேன் என்னை மன்னிச்சிடு என்றான்.


அதெல்லாம் இருக்கட்டும் மொதல்ல நாளைக்கு காலையில வேதாக்காவோட அம்மாவும் அப்பாவும் வராங்க உங்கண்ணன் கண்டிப்பா ஏதாவது ஒரு ட்ராமா பண்ணி வேதா அக்கா வாயாலேயே இந்த வீட்ல இருக்க மாட்டேன் நான் போறேன்னு சொல்ல வச்சுடுவாரு.



அப்படி எதுவும் நடக்கறதுக்கு முன்னாடி ஏதாவது செஞ்சு அதை தடுத்து நிறுத்த பாருங்க எனக்கு தூக்கம் வருது….நான் தூங்க போறேன் நீங்க உங்க அம்மாவோட பேசி சீக்கிரமா ஒரு முடிவெடுங்க என்று கூறிவிட்டு உறங்க ஆயத்தமானாள்.
கவலையுடன் செழியன் அவளருகே அமர்ந்தபடி யோசிக்க தொடங்கினான்.



அக்காவும் தங்கையும் கட்டிக்கொண்டு அழுதவதை பார்த்து மனம் கேளாதவன் இந்துவில் அருகில் வந்து


ப்ளீஸ் அழாத இப்போ எதுக்கு அழுற மாமா உன் அக்காவை எதுவுமே சொல்லலையே உனக்கு யார் இவ்வளோ அழகா அலங்காரம் பண்ணி விட்டது... ரொம்ப அழகா இருக்குன்னு தான் சொல்லிட்டு இருந்தேன்.



மாமாவோட முகம் எப்போதுமே கொஞ்சம் சிடுசிடுன்னு தான் இருக்கும் அதை தூரத்தில் இருந்து பார்த்ததால் நீ தப்பா புரிஞ்சுகிட்டனு நினைக்கிறேன் என்று சமாளிக்கும் பொருட்டு அவளிடம் கூறினான்.



அவளோ அதை பிடிவாதமாக மறுத்தாள் இல்லல்ல நான் அத்தை பக்கத்துல நின்னு பார்த்துக்கிட்டு தான் இருந்தேன் நீங்க அக்காவை திட்ட தான் செஞ்சீங்க அக்காவோட டிரஸ்ஸ பத்திதான் என்னமோ சொன்னீங்க என்று வேதாவின் நெஞ்சில் சாய்ந்தபடியே அழுதுகொண்டே பேசினாள்.


அந்த சிறு பெண்ணின் அழுகை மாறனின் இதயத்தை ஏதோ பண்ண பாவமாக வேதாவை பார்த்து நீயாவது அவளை சமாதானப்படுத்தேன் என்பது போல் பார்த்தான்.


வேதாவிற்கும் அவளின் தங்கை கதறுவது தாங்கிக் கொள்ள முடியவில்லை அதனால் பொறுமையாக அவள் தலையை வருடிய படி இந்து நீ தப்பா புரிஞ்சுகிட்ட மாமா என் கிட்ட இந்த ட்ரெஸ் அழகா இருக்கு யார் எனக்கு அலங்காரம் பண்ணி விட்டதுன்னு தான் கேட்டாரு.


அவர் சொன்னபடிதான் அவர் முகம் கொஞ்சம் சிடுசிடு இருக்கும் அதான் நீ துரத்துல இருந்து பாத்ததும் உனக்கு தப்பா தெரிஞ்சிருக்கு….



பாரு மாமா அக்காவை திட்டியிருந்தா இப்படி எல்லாரும் என்னை தனியா விட்டுட்டு போய் இருப்பாங்களா சொல்லு.



மாமா என்கிட்ட சாதாரணமா பேசினதால தான் எல்லாரும் அவங்கவங்க ரூமுக்கு போய்ட்டாங்க... நீயே பாரேன் என்று சுற்றி காண்பித்தாள்.



இல்லக்கா மாமா உன்னை திட்டதான் செஞ்சாங்க நான் பார்த்தேன் காலைல மண்டபத்துல கூட உன்ன விட்டுட்டு சாப்பிட போய்ட்டாரு ….நீ இவரோட இங்க வந்திருக்கவே வேணாம்...அங்கயே நம்ம வீட்ல இருக்கலாம்ல இருந்திருந்தா அவர் உன்னை இப்படி திட்டமாட்டார்ல என்று சிறுபிள்ளையாய் பிதற்றினாள்.


அய்யோ இந்து அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சுல்ல அப்புறம் எப்படி அக்கா நம்ம வீட்ல இருக்க முடியும்... மாமா வீட்ல தான இருக்க முடியும்….


காலைல மாமாக்கு பசி அதான் தனியா சாப்பிட போனாங்க அதும் என்கிட்ட சொல்லிட்டு தான் சாப்பிட போனாங்க நீ தான் எல்லாத்தையும் தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட …



நம்மளோட அப்பாவும் அம்மாவும் ஊர்ல இருந்து வந்துகிட்டு இருக்காங்க காலையில வந்ததும் நீயும் நானும் அவங்களோட கிளம்பிப் போய்விடலாம் அப்புறமா உன்னோட அக்கா எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன் எங்கேயும் போகமாட்டேன் மாமாவே வந்து கூப்பிட்டா கூட நான் இனிமே இங்க வர மாட்டேன் போதுமா என்று வேதனையுடன் இந்துவை சமாதானப்படுத்தினாள்.



வேதாவின் முகத்தை பார்த்த இந்து சத்தியமா காலையில அப்பா வந்ததும் என்னோட ஊருக்கு வந்திடுவல்ல என்று கேட்க.



சத்தியமா அம்மாவும் அப்பாவும் வந்ததும் நாம அவங்களோட ஊருக்கு கிளம்பிடலாம் அக்காவோட பெட்டியை கூட கலைக்கல தான உனக்கே தெரியுமே என்று கேட்கவும்.



ஆமாம் என்று தலையசைக்க…. சரி இப்போ நாம போய் தூங்கலாமா என்று கேட்டாள்.


சரி என்பதுபோல் இந்து தலையசைக்க எங்கு உறங்கச் செல்வது என்று மாறனை பார்த்தாள் வேதா.


அவசரமாக அறையை நன்கு திறந்து விட்டவன் இப்போதைக்கு ரெண்டு பேரும் என் ரூம்ல தூங்குங்க என்று கூறி விட்டு தந்தையை தேடி சென்றான்.


தங்கையை உள்ளே அழைத்து வந்து மடியில் படுக்க வைத்து தூங்க வைத்த வேதா அப்படியே கண் மூடி கட்டிலில் மூலையில் சாய்ந்தாள்.



நடப்பது எதையும் நம்ப முடியவில்லை இப்படி அவசர அவசரமாக திருமணம் செய்து ஒரே நாளில் அந்த பந்தம் முடியப்போகிறது என்பதை அவளின் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.


இதற்காகத்தான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேனா….


இதற்காகத்தான் இவனைக் கண்டதும் காதல் கொண்டேனா என்று பலவாறான எண்ணங்கள் மனதில் தோன்றத் தோன்ற மூடிய கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்ட தொடங்கியது அதை துடைக்க மனமில்லாமல் அப்படியே கட்டிலில் சாய்ந்த படி தங்கையின் தலையை வருடியபடி அமர்ந்திருந்தாள்.


மொட்டை மாடியில் உறவினர்களுடன் சிட்டுகட்டு விளையாடிக்கொண்டிருந்த தந்தையின் அருகில் சென்ற மாறன் அப்பா உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் என்று கூறினான்.


உறவினர்களிடம் அனுமதி கேட்டுக்கொண்டு சற்றுத்தள்ளி வந்தவர் என்ன மாறா அப்பாவைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்க அப்படி என்ன முக்கியமான விஷயம் என்று கேட்டார்.



அப்பா நான் சொல்லப் போற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம் மனசைத் திடப்படுத்திக்கோங்க எனக்கு சுத்தி வளைத்து பேச தெரியாது நேரடியா விஷயத்துக்கு வரேன் எனக்கு வேதாவை சுத்தமா பிடிக்கல.


கல்யாணத்துக்கு முன்னாடி அம்மாகிட்ட நான் எவ்வளவோ சொன்னேன் ஆனா அம்மா பிடிவாதமா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க அப்படி நான் கல்யாணம் பண்ணலனா அம்மா தற்கொலை பண்ணிக்கறதா என்னை மிரட்டினாங்க…



அதுக்கு பயந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம் ஆனா இப்போ யோசிச்சு பார்க்கும்போது என்னால ஒரு நிமிஷம் கூட அவளை சகிஞ்சிகிட்டு வாழ முடியாதுங்கறது புரிஞ்சுபோச்சு.



அம்மாவோட மிரட்டலுக்கு பயந்து தேவையில்லாம ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்க நான் விரும்பல அதனால இப்பவே நான் என்னோட முடிவை சொல்லிடறேன்.


வேதாவோட அம்மா அப்பாவை வர சொல்லி ஃபோன் பண்ணி இருக்கேன் அவங்க சாயங்காலமே ட்ரெயின் ஏறி வந்துகிட்டு இருக்காங்க காலையில் அவங்க வந்ததும் வேதாவை அவங்களோட அனுப்பி வைச்சிடுங்க….


வேதாவுக்கு நான் குடுக்கற காயத்துக்கு மருந்தா அவங்க எவ்வளவு பணம் கேட்டாலும் சரி எனக்கு சேர வேண்டிய ஒட்டு மொத்த சொத்தையே கேட்டாலும் அதை நான் அவளோட எதிர்காலத்துக்காக விட்டு தர தயாரா இருக்கேன்.



தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோங்க அம்மா கிட்ட சொன்னா கண்டிப்பா ஒத்துக்க போறது இல்ல அதனால தான் உங்கள தேடி வந்து இருக்கேன் தயவு செஞ்சு உங்க கால்ல விழுந்து கெஞ்சி கேட்கிறேன் வேதாகிட்ட இருந்து என்னை நிரந்தரமா பிருச்சி வைங்கப்பா இந்த திருமண பந்தத்தில் இருந்து எனக்கு விடுதலை கொடுங்க என்று கூறியபடி அனைவர் முன்னிலையிலும் தந்தையின் காலில் விழுந்து கெஞ்சினான்.

பதறியடித்து அவனை எழுப்பி விட்டவர் இந்த அளவுக்கு ஒரு பெண்ணை வெறுக்கிற உன்னால கண்டிப்பா காலம்பூரா அவளை சகிஞ்சி கிட்டு வாழ முடியாது நான் கண்டிப்பா உன் அம்மா கிட்ட பேசுறேன் என்று கூறியபடி வேகமாக கீழே சென்றார்.


நேராக கனகாவிடம் சென்ற ரத்தினம் மகன் கூறியவற்றை முழுமையாக கூறியவர் என்ன செய்யறது கனகா...எப்படியாவது அத்து விட்டுடுங்கனு என் கால்ல விழறான் என்ன சொல்லறதுன்னு தெரியாம நேரா இங்க ஒடி வந்துட்டேன் என்றார்.



அப்படியெல்லாம் அத்து விட முடியாதுனு உறுதியா சொல்லிட்டு வர வேண்டியதுதானே எதுக்காக இப்படி பயந்து ஓடி வரனும் என்று கடிந்துகொண்டார் அவரின் மனைவி.



என்னைப் புரிஞ்சுக்கோ கனகா….ஆசிர்வாதத்துக்கு கூட கால்ல விழாம கம்பீரமா சுத்தற நம்ம புள்ளை அத்தனை பேர் முன்னாடி என் கால்ல விழுந்து கெஞ்சும் பொது நான் எப்படி அவன் கிட்ட மறுத்து பேச முடியும் என் நிலைமையில இருந்து கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு….


புரியுதுங்க... உங்க நிலைமை எனக்கு ரொம்ப நல்லாவே புரியுது….என்று கண்கலங்கிய கனகா அவரைப் பார்த்து அதுக்காக அவனை அப்படியே விட முடியாது இல்லையா ….



என்னைக்கோ நான் செஞ்ச ஒரு சின்ன தப்பு அவனோட வாழ்க்கையை இந்தளவுக்கு புரட்டிப்போடும்னு நான் நினைக்கல….



நான் செஞ்சது தப்பை நானே சரி செய்யனும்னு நினைக்கிறேன்... அதனால தான் இவ்வளவு பிடிவாதமா அவனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சேன்.



ஆனா அந்த கல்யாணத்தோட ஆயுள் ஒரு நாள் கூட இல்லனு தெரியும் போது என்னால அதை ஏத்துக்க முடியலங்க... கண்டிப்பா என் புள்ளையோட கல்யாணத்தை ஒண்ணும் இல்லாம ஆக விடமாட்டேன் .



கண்டிப்பா ஒரு அம்மாவா கடைசி வரை போராடுவேன் அவனோட நல்லது மட்டும் தான் எனக்கு முக்கியம்…
கொஞ்ச நாள் வேதா இங்க தங்கினாலே போதும் அவளோட அன்பு என் பையனோட குணத்தை மாத்தி இயல்பான ஒரு குடும்ப வாழ்க்கையை வாழ வச்சிடும்...அவளை இங்கிருந்து நான் போக விடமாட்டேன்…

வேதா மாதிரி ஒரு பொண்ணால மட்டும் தான் மாறனை சகிச்சிகிட்டு கடைசி வரைக்கும் வாழ முடியும்.


அவனோட குணத்துக்கு ஏற்ற பொண்ணு வேதா மட்டும் என் மகனோட வாழ்க்கைக்காக என் உயிர் போனா கூட அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன் எப்பாடுபட்டாவது அவனோட திட்டத்தை முறியடித்தே தீருவேன் என்று கூறியவர் நேராக செழியனை தேடிச் சென்றார்.


தூங்கும் மனைவியை வாசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த செழியனின் அறைக்கதவு தட்டுப்படவும் வேகமாக எழுந்து வந்து கதவை திறக்க அவன் எதிர்பார்த்தது போல் தாயார்தான் நின்று கொண்டிருந்தார் பின்னால் தந்தையும் நிற்க ஏதோ முக்கியமான விஷயம் என்பது அவனுக்கு உடனே புரிந்தது .



உள்ளே வந்த கனகா செழியா உடனே போய் பாட்டியை கூப்பிட்டு கிட்டு வா என்று கூறவும் ஏனென்று கேட்காத செழியன் பாட்டியை அழைத்துவர வெளியே ஓடினான்.


சத்தம் கேட்டு விழித்த ராதிகாவை பார்த்த கனகா நீ தூங்குமா நாங்க வெளிய பொய் பேசுக்கறோம் என்று கூறியபடி வெளியே செல்ல... இடைமறித்த ராதிகா மெதுவாக எழுந்தபடி பரவால்லை அத்தை இங்கேயே பேசுங்க...என்றவளுக்கு சாய்வதற்கு ஏதுவாக ஒரு தலையணையை எடுத்து ரத்தினம் அவளின் முதுகுப் பக்கமாக வைக்க புன்னகையுடன் தேங்க்ஸ் மாமா என்று கூறியபடி நன்றாக கால்களை நீட்டியபடி அமர்ந்தாள்.


அவளின் கால்மாட்டில் கவலையுடன் அமர்ந்த கனகா இளைய மகனும் மாமியாரும் வருவதற்காக காத்திருக்க ஆரம்பித்தார்.


சற்று நேரத்திலேயே இருவரும் உள்ளே வர வேகமாகச் சென்று கதவை தாளிட்ட கனகா செழியனை பார்த்து உன் அப்பா ஏதேதோ சொல்றாரு டா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று கூறினார் .


உடனே பாட்டி என்ன ரத்தினம் அப்படி என்ன சொன்ன..
என் மருமகள் பீதியாகற அளவுக்கு என்று கேட்டார்.


ரத்தினம் நடந்தவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூற கவலையுடன் முதிய பெண்மணிகள் இருவரும் அருகருகே அமர்ந்து என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினர்.


பாட்டிதான் அவரின் மருமகளைப் பார்த்து எனக்கு ஒரு யோசனை இருக்கு கனகா ….ஆனா அது எந்த அளவு சரியா வரும்னு தெரியலை என்றார்…


என்ன அத்தை சொல்லுங்க எதுவாக இருந்தாலும் பரவால்ல….எனக்கு இப்போ அவங்க பிரிந்து போகக் கூடாது அது மட்டும் தான் வேணும்…


அப்படினா நான் சொல்ற யோசனை சரியா தான் வரும்னு தோணுது கனகா ஆனா அதுக்கு நாம மட்டும் இல்ல வேதாவோட அம்மாவும் அப்பாவும் நமக்கு துணையாய் இருக்கணும் அப்படி இருந்தா மட்டும்தான் இதை நம்மளால செய்ய முடியும் என்று கூற…. அம்மா நீங்க உங்க யோசனையை முதல்ல சொல்லுங்க அவங்களை நம்ம திட்டத்திற்கு ஒத்துக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்று கூற பாட்டி அவர் மனதில் உதித்த திட்டத்தை கூறத் தொடங்கினார் அனைவரும் ஆர்வமுடன் கேட்க தயாராகினர்.


தொடரும்..
 
Last edited:
Top