10. ஹீரோ
பேசாதம்மா என்று அஸ்வினி சொல்லியும் ஈஸ்வரியின் வாய் மூடவில்லை. வாகனங்களைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தார். இவர்களது திருமணத்தின் போது அஸ்வினியின் அப்பா சீராக ஒரு விலை உயர்ந்த காரையே பரிசளித்திருந்தார். ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பாகவே பத்து லட்சத்தைத் தாண்டிய கார். ஐந்து வருடம் வரை நன்றாக ஓடியது. 'எவ்வளவு நல்ல காரா இருந்தாலும் மூணு வருஷத்துல மாத்திடனும் என்பது அஸ்வினின் அனுபவம் தந்த பாடம்.. அவனது துறையும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அதனைத் தொடர்ந்து வாகன உதிரி பாகங்கள் தொடர்பான சில மேற்படிப்புகள், வேலை அனுபவங்கள் எல்லாம் இருந்ததால் பிறரை விட வாகனங்கள் பற்றி அதிகம் தெரியும். இன்னும் நட்பு, உறவு வட்டத்தில் கார் வாங்குவதாகவோ மாற்றுவதாகவோ இருந்தால் அஸ்வினிடம் கருத்துக் கேட்டுத் தான் செய்வார்கள்.
மாமனார் வாங்கித் தந்த ஹோண்டா சிட்டி ஐந்து வருடங்கள் ஆனதும் மாதா மாதம் ஏதாவது ஒரு பழுதும் செலவும் வரவே, ஐந்தாம் வருட இறுதியில் அதை மாற்றி விட்டான். மாற்றிவிட்டு அப்போது சந்தையில் நல்ல தரமானதாக இருந்த ஸ்விஃப்ட் டிசையரை வாங்கினான். அது அப்போது ஏழு லட்சம் ரூபாய். 'பத்து லட்ச ரூபாய் காரைக் கொடுத்துட்டு பாடாவதி காரை வாங்கிட்டார்' என்று ஈஸ்வரி குத்தலாகப் பேசுவார்.
"அதுக்காக? யானையைக் கட்டி தீனி போடுற மாதிரி ஆயிடுச்சு அந்த கார்.. மாசத்துக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு செலவு வருது.. அதையே பிடிச்சுட்டு தொங்க சொல்றியா?" என்று அஸ்வினியிடம் கடிந்து கொள்வான். "இந்த கார் விஷயத்துல எனக்கு பெருசா எதுவும் தெரியாது. என்னமோ பண்ணுங்க" என்று ஒதுங்கி விடுவாள் அஸ்வினி. 'இது ஒண்ணுலயாவது என் முடிவுல விடுறாளே' என்று மகிழ்வான் அஸ்வின்.
அன்று சினிமாவுக்குப் போகும் வழி முழுவதும் பழைய கார் அப்படி, அதன் பெருமை அப்படி, இப்படி அதைக் கொடுத்திருக்க வேண்டாம், அப்புறம் அது ராசியான நம்பர் என்று ஈஸ்வரி பேசிக் கொண்டே வர, க்ருத்திக் விரும்பிக் கேட்ட பாடலை அவன் கேட்டதை விட சத்தமாகவே வைத்தான் அஸ்வின்.
"கமான் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு…" என்று பாட்டு வந்தவுடன் ஈஷா பாப்பாவும் அவள் அண்ணனுடன் சேர்ந்து கொண்டு அம்மாவின் மடியில் இருந்தபடியே தை தை என்று குதிக்க, அம்மா மேலிருந்த கோபத்தில் அஸ்வினி அவளை சப்பென்று ஒரு அடி வைத்தாள். பாப்பா ஓவென்று அழுத சத்தமும் பாட்டு சத்தமும் சேர்த்து ஈஸ்வரியைப் பேசவிடவில்லை. அன்று அவர்கள் பார்க்கப் போனது ஈஸ்வரியின் அபிமான நடிகரின் திரைப்படம். அஸ்வினுக்கும் அவரைப் பிடிக்கும். அந்தப் படத்தில் அவரும் புதுப் புது கார்கள், பைக்குகள் மீது ஆர்வம் உள்ளவராக ஹீரோ காட்டப்பட, 'ஐயோ! இப்ப மறுபடியும் ஆரம்பிக்குமே இந்த அம்மா' என்று நினைத்தான் அஸ்வின். நல்ல வேலையாக ஈஸ்வரியின் கவனம் அந்த விஷயத்தில் திரும்பவில்லை. படத்தைப் பார்த்து முடித்துவிட்டு வெளியே வரும் வரை வேறு எந்த சம்பவங்களும் நடக்கவில்லை.
"அப்பா. அந்த மாமா கார்லஸ் சொயிங் சொயிங் போனாங்க.. என்னப்பா? பறந்து பறந்து சண்டை போட்டாங்க" என்று க்ருத்திக் சினிமாவைப் பற்றிப் பேசிக் கொண்டே வர, "ஐயோ! இந்த ஸ்டண்ட் எல்லாம் இவன் வீட்ல போய் பண்ணி காட்டுவானே" என்று பெருமையாக அலுத்துக் கொண்டாள் அஸ்வினி. பாப்பா முக்கால்வாசி படத்திலிருந்தே தூங்கி வழிந்தாள்.
அங்கேயே உணவை முடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் மீண்டும் காரில் ஏறி காரை எடுக்கப் போன நேரம் அங்கு ஒரு சின்ன கசமுசா. இவர்களது வாகனத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு கார் ஒன்று ஏதோ தொழில்நுட்பக் கோளாறால் ஸ்டார்ட் ஆகவில்லை. வலது புறம், இடது புறம், பின்பக்கம் நிறுத்தி இருந்தவர்கள் எப்படியோ எடுத்து விட்டுப் போக, மிகச் சரியாக அஸ்வினின் கார் மட்டும் அந்த பளபள காருக்கு பின்னால் லாக் ஆகிவிட்டது. "இன்னிக்கு முழிச்ச மூஞ்சி சரியில்லை" என்றார் ஈஸ்வரி.
எப்பொழுதும் அஸ்வின் தான் அவர்கள் வீட்டில் முதலில் எழுவது. ஈஸ்வரி எழுந்து வரும்பொழுது அஸ்வின் மட்டும் தான் எழுந்திருந்தான். வீட்டையும் சுத்தம் செய்தபடி இருந்தான். என்ன இருந்தாலும் மருமகனை இப்படியா அவமானப்படுத்துவது? அஸ்வினிக்கு சுருக்கென்று இருந்தது.
"அம்மா, உன் வாயைத் தையல் போட்டு தான் வைக்கணும் போல.. இவ்வளவு நேரம் எப்படி சிரிச்சு சந்தோஷமா படம் பார்த்தே? எவனோ காரைக் கொண்டு வந்து நம்ம முன்னாடி நிறுத்தினதுக்கும் காலைல முழிச்ச முகத்துக்கும் என்னம்மா சம்பந்தம்? என்னங்க இனிமே நீங்களே சொன்னாலும் எங்க அம்மாவை நாம எங்கேயும் கூட்டிட்டு வர வேண்டாம்" என்றாள் அஸ்வினி அதிரடியாக. ஈஸ்வரி சப் என்று வாயை மூடிக்கொண்டார். "அப்பா! இன்னைக்கு படத்துல ஹீரோ அங்கிள் அப்படியே ஒரு காரை கையால தூக்கி தள்ளி வச்சார்ல அப்பா?" என்று மகன் கூற, மகன் தன்னிடமும் அதையே எதிர்பார்க்கிறான் என்று புரிந்தது அஸ்வினுக்கு. ஹீரோவுக்கு இணையாக மகன் தன்னை நினைப்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது.
கார் ஜன்னலை இறக்கி, "என்ன சார்? என்ன பிராப்ளம்?" என்று அங்கு கையைப் பிசைந்தபடி நின்ற செக்யூரிட்டியிடம் கேட்டான். "சாரி சார் இது ஒரு ஃபாரின் கார் போலத் தெரியுது.. திடீர்னு ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது.. என்ன பண்றதுன்னு ஓனருக்கும் தெரியல.. ரோட் சைட் அசிஸ்டன்ஸ் பக்கத்துல அவைலபிளா இல்லையாம். அதான் tow பண்ற வண்டியை வரச் சொல்லி இருக்கோம்.. ஒரு அரை மணி நேரம் ஆகும்னு நினைக்கிறேன்.. நாங்க வேணா கேப் புக் பண்ணித் தரட்டுமா சார்? உங்க கார் கீயைக் கொடுத்துட்டு போங்க.. அட்ரஸ் கொடுத்தீங்கன்னா காரை வீட்ல வந்து டிராப் பண்றோம்" என்றார் தன்மையாக.
"சேச்சே! அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல.. நேரம் தான் இருக்கே.. நாங்க வேணும்னா மால்ல போய் இன்னொரு அரை மணி நேரம் ஸ்பென்ட் பண்ணிட்டு வருவோம்.. ஆனா இந்தக் கார்ல என்னால எதுவும் பார்க்க முடியுமான்னு பார்க்கிறேன்.. நான் இந்த ஃபீல்டுல தான் இருக்கேன்" என்றபடி இறங்க முற்பட்டான் அஸ்வின்.
"சார்.. அது ஏதோ நாலு கோடி, அஞ்சு கோடி விலை உள்ள காராம்.. ஜெர்மன் மேக்காம்.." என்று செக்யூரிட்டி இழுக்க, "எங்க ஊர்ல ஒரு மெக்கானிக் இருந்தாரு.. கந்தன்னு பேரு.. எந்த வண்டியானாலும், எவ்வளவு சிக்கலான வேலைன்னாலும் ஒரு நிமிஷத்துல முடிச்சுருவாரு.. இத்தனைக்கும் ஒரு டிகிரி கூட படிக்காத ஆளு" என்றார் ஈஸ்வரி. அடுத்து அவர் வாயைத் திறக்கும் முன்பே அஸ்வின் இறங்கி அந்தக் காரின் அருகில் சென்றிருந்தான்.
அதை அவன் சுற்றி வந்து பார்க்க, "காரை சுத்துறதுக்கு வாசல்ல இருக்குற பிள்ளையாரை சுத்தினாலும் புண்ணியமாவது கிடைக்கும்" என்றார் ஈஸ்வரி. கடுப்பில் அவரைக் கிள்ளியே வைத்து விட்டாள் அஸ்வினி.
அருகில் வண்டியின் உரிமையாளர் யாரும் இல்லாததால், "ஓனர் யாருங்க? நான் வேணா ட்ரை பண்றேன்னு சொல்லுங்க" என்று செக்யூரிட்டியிடம் கேட்டான் அஸ்வின்.
"அவர் ஒரு வி. ஐ. பி.ங்க.. இங்கே இருந்தா கூட்டம் கூடிடும்.. அதான் ஆஃபீஸ் ரூம்ல வெயிட் பண்றார்.. சாவியும் அவர் கிட்ட தான் இருக்கு" என்றார் அங்கிருந்த இன்னொரு செக்யூரிட்டி.
"இந்தாங்க என்னோட கார்ட்.. நான் ஜெர்மனியில் இதே கார் தயார் பண்ற கம்பெனியில் இன்டர்ன்ஷிப் பண்ணி இருக்கேன்.. அவர் கிட்ட சொல்லி கார் கீயை வாங்கிட்டு வாங்க.. சின்ன டெக்னிக்கல் ப்ராப்ளமா தான் இருக்கும்.. நானே சரி பண்ணிடலாம்னு நினைக்கிறேன்" என்று கூறி அவனுடைய விசிட்டிங் கார்டை நீட்ட, அதில் அஸ்வின் என்ற பெயருக்குப் பின் போட்டு இருந்த டிகிரிகளின் வரிசையைப் பார்த்துவிட்டு அந்த செக்யூரிட்டி நம்பியும் நம்பாமலும் அலுவலக அறையில் காத்திருந்த விஐபியிடம் சென்று திரும்பினார்.
வரும்போது சாவியுடன் தான் வந்தார். அப்போதும் இரண்டு செக்யூரிட்டிகள் முகத்திலும் நம்பிக்கையின்மை தான் தெரிந்தது. காரைத் திறந்து உள்ளே அமர்ந்த அஸ்வின் ஏதேதோ செய்து முயலவும் ஐந்தே நிமிடத்தில் கார் வெற்றிகரமாக ஸ்டார்ட் ஆகிவிட்டது.
"உள்ளே லைட்டை ஆஃப் பண்ணாம போட்டுட்டே போயிட்டாங்க.. அதனால பேட்டரி டிஸ்சார்ஜ் ஆகி இருக்குது.. எல்லாத்தையும் ஆஃப் பண்ணி ரீசெட் பண்ணிட்டு ஸ்டார்ட் பண்ணினா இந்த மாதிரி ஹையர் எண்ட் கார்ஸ் சரி ஆயிடும்.. இப்போ ஆஃப் பண்ண வேண்டாம்.. சர்வீஸ் பர்சன் வந்தாங்கன்னா பேட்டரி லெவல் செக் பண்ண சொல்லுங்க" என்றான் ஆச்சரியத்துடன் பார்த்த செக்யூரிட்டியிடம்.
"சூப்பர் சார்!" என்றார் அவர்.
அதை நகர்த்தி தன் காருக்கு வழி விடுமாறு நிறுத்திவிட்டு இறங்கியவனிடம் முதல் செக்யூரிட்டி கை கொடுக்க, இரண்டாவது செக்யூரிட்டி விஐபியைக் கூப்பிடுவதற்காக ஓடினார். மீண்டும் வந்து அஸ்வின் தன் காரில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய, "எங்க அப்பாவும் ஹீரோ! எங்க அப்பாவும் ஹீரோ!" என்று க்ருத்திக் குதித்துக் கொண்டிருந்தான்.
அஸ்வினி அவனை ஒருவிதப் பெருமையுடன் பார்த்தாள். வாய் விட்டு அவனை புகழ்ந்து இதுவரை அவளுக்கு பழக்கம் இல்லை. அவன் கவனத்தைக் கவராமல், அந்த கார் விலை விவரம், தமிழகத்தில் யார் யாரிடம் அந்த கார் இருக்கிறது என்பது போன்ற தகவல்களை கூகிள் செய்து படித்துப் பார்த்து இன்னும் பெருமையடைந்த அஸ்வினி, வாட்ஸ்அப் முகப்புப் படமாக அந்தக் கார் படத்தை வைத்துவிட்டு கண் மூடிக்கொண்டாள். ஈஸ்வரியும் எதுவும் பேசவில்லை.
அஸ்வினியின் ஸ்டேட்டஸ் பார்த்து, "என்னவாம்? ஏதோ காஸ்ட்லி கார் படம் வச்சிருக்கா அஸ்வினி? இந்த காரை வாங்கப் போறாளா.. இல்லை இந்த கார் கம்பெனியை வாங்கப் போறாளா?" என்று அவளது குசும்பு நட்பு வட்டம் பேசிக் கொண்டிருக்க, "ஐ அம் இன் சினிமா" என்று அஸ்வின் அனுப்பிய குடும்ப செல்ஃபியைப் பார்த்து ஜெயந்தி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். 'அப்பாடி! இதுங்க சண்டையை முடிச்சுக்கிச்சுங்க போல.. நன்றி கடவுளே!' என்று கூறிக் கொண்டாள்.
அதற்கு மேல் அஸ்வினைப் பற்றி யோசிக்க நேரமில்லாமல் அவளது வேலைகள் அவளை இழுத்துக் கொண்டன. அவளின் மாடி அறையில் தங்குவதற்கு இன்னும் இரண்டு உறவினர்கள் வந்திருந்தார்கள். பார்த்துப் பார்த்து கவனிக்க வேண்டிய நபர்கள் அவர்கள். தியாகராஜனின் தங்கை அனுப்பியவர்கள். எல்லா பெண்களுக்கும் எவ்வளவு நல்ல புகுந்த வீடு அமைந்தாலும் தொண்டையில் சிக்கிய முள் போல் ஒன்றிரண்டு வில்லன்களும் (பெரும்பாலும் வில்லிகள்) அமைந்து விடுவார்கள் தானே.. அதில் ஒன்று தியாகராஜனின் தந்தை கவிதா. சமயத்தில் அண்ணனின் சொத்தை அழிக்க வந்தவள் ஜெயந்தி என்பது போல் பேசுவாள். சமயத்தில் 'இந்த விடியா மூஞ்சி இருக்கப் போய் தான் எங்க அண்ணன் இவ்வளவு லீடிங் லாயரா இருந்தாலும் காசு பணம் சம்பாதிக்காமல் இருக்கான்' என்பாள்.
இப்போது அவளுடைய உறவுகள் இரண்டு பேரை அனுப்பியிருந்தாள்.
அம்மாவும் மகனுமாக இரண்டு பேர் வந்திருந்தார்கள். மகனுக்கு ஏதோ இன்டர்வியூ போலும். "வளர்ந்து காலேஜ் முடிச்ச பையன் தானே.. வந்து பிரண்ட்ஸ் வீட்ல எதுவும் தங்கியிருந்து இன்டர்வியூ அட்டென்ட் பண்ண மாட்டானா? இதுக்கு அவங்க அம்மாவை இழுத்துகிட்டே வரணுமா?" என்று தியாகராஜன் முணுமுணுக்க, ஜெயந்தி வாயே திறக்கவில்லை. மற்றவர்களை விட ஒரு படி அதிகமாகவே விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.
அஸ்வின் திரைப்படத்திற்கு சென்று விட்டு வந்த அடுத்த நாள் காலை ஜெயந்தி பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்க உதவுகிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு அந்த பெண்மணியும் ஜெயந்தி பின்னாலே சுற்றி வந்தாள். வந்தவள், "நீங்க உண்மையிலேயே கிரேட்.. எப்படி வீட்டையும் பார்த்துகிட்டு, உங்க ஹஸ்பண்டுக்கும் ஹெல்ப் பண்ணிக்கிட்டு, வந்தவங்களையும் கவனிக்கிறீங்க? கவிதா உங்கள பத்தி அடிக்கடி பெருமையா சொல்லும்" என்றாள்.
'யாரு? கவிதா? என்னைய? நம்பிட்டேன்' என்று நினைத்த ஜெயந்தி ஈயென்று இளித்து வைத்தாள். "இதுல என்னங்க பெருசா இருக்கு? உங்க ஊருக்கு நாங்க வந்தா நீங்க இதைவிட அதிகமா செய்யப் போறீங்க" என்றாள்.
"அது இல்லைங்க.. எப்பவும் உங்க வீட்ல ஆட்கள் இருந்துகிட்டே இருப்பாங்களாமே? உங்க ஃப்ரண்டோட அம்மாவை ஒரு வருஷம் வரைக்கும் இங்கே வச்சிருந்தீங்களாமே? அது என்னால முடியாதுப்பா!" என்ற படியே சமையல்கட்டின் ஒரு ஓரமாக இருந்த அலமாரியைத் திறந்து அதில் இருந்த பொருட்களை ஆராய்ந்தாள்.
இந்தப் பெண்ணைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறாள் கவிதா. இங்குள்ளதை அங்கும், அங்குள்ளதை இங்கும் சொல்வதுதான் கவிதாவுக்குத் தலையாய கடமையே. ப்ரீத்தியின் அம்மா வெகு நாட்கள் இங்கு தங்கியிருந்ததை கவிதா புகுந்தவீட்டில் போய் குறையாகப் பேசி இருப்பாள். அதைத்தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சுட்டிக்காட்டுகிறாள் இவள். அந்த நேரத்தில் ப்ரீத்தியின் அம்மா எவ்வளவு உதவியாக இருந்தார் என்பது ஜெயந்திக்குத் தான் தெரியும். அவர் மறைவுக்கு பின் தன்னுடைய அம்மா அளவிற்கு அவர் இல்லாத குறையை உணர்ந்தாள் ஜெயந்தி.
ஒற்றைப் பெண்மணியாக தங்கி இருந்தாலும் அந்த வீட்டிற்கு பெரும்பாலான பலசரக்குப் பொருட்களை அவரே வாங்கிப் போடுவார். இருக்கிற இடம் தெரியாமல் இருப்பவர் துணிகளை மடிப்பது, பாத்திரங்களை அடுக்குவது, குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு கிளப்பி விடுவது அத்தனையிலும் அமைதியாக உதவி செய்வார். இந்தப் பெண்ணைப் போல ஆர்ப்பாட்டமாக சலசலத்துக் கொண்டு வீட்டுக்குள் அங்கும் இங்கும் நடந்து மற்றவர்களுக்குத் தொந்தரவாகவும் இருக்கவே மாட்டார். தான் தங்கி இருப்பது எந்த விதத்திலும் ஜெயந்திக்குத் தொந்தரவாக அமைந்து விடக்கூடாது, உதவியாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புவார். குழந்தைகள் கூட அவரது மறைவுக்கு பின் 'வைதேகியோட பாட்டியை ரொம்பவே மிஸ் பண்றோம்' என்று அடிக்கடி கூறுவார்கள்.
அவரைப் பற்றியும் ஏதோ கவிதா சிண்டு முடிந்திருக்கிறாள் என்று உணர்ந்து கொண்டாள் ஜெயந்தி. எதுவும் சொல்லாமல் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் சாதத்தை அடைக்கும் வேலையை அவள் தொடர, இது என்ன, அது என்ன என்று அலமாரியில் இருந்த பொருட்களை சுட்டிக்காட்டி கேட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். இவளுக்கு இதேதான் வேலை, விட்டால் பெட் ரூமுக்கும் வந்துவிடுவாள் என்று கவிதா சொல்லி இருக்கிறாள். போகும் இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது சிலருக்குத் தெரியவே தெரியாது, இப்படி செய்யாதே என்று எப்படி சொல்வது என்று ஒரு நிமிடம் யோசித்த ஜெயந்தி டைனிங் டேபிளில் உணவு வகைகளைப் பரப்பி விட்டு, "சாய்! சிந்து! சாப்பிட வாங்க! அக்கா நீங்களும் சாப்பிடுங்க.. தம்பி மெதுவா வரட்டும்" என்றார்.
அந்தப் பெண் குறிப்பைப் புரிந்து கொள்ளாமல், "எவ்வளவு அழகா அடுக்கி இருக்கீங்கன்னு பாத்துட்டு இருக்கேன்" என்று அந்த அலமாரியை விட்டுவிட்டு அடுத்ததைத் திறந்து குடைய ஆரம்பித்தாள். ஐயோ என்றிருந்தது ஜெயந்திக்கு. மாதாந்திர மாதவிடாய் தொந்தரவு வேறு அவளைப் படுத்தியது. பிள்ளைகளை அனுப்பிவிட்டு ஒரு அரை மணி நேரம் படுத்தால் போதும் என்றிருந்தது. இந்தப் பெண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வது, 'பேசாமல் பாத்ரூமுக்குள் போய் ஒரு சேரை போட்டு உட்கார்ந்துக்கணும்' என்று திட்டம் தீட்டிக்கொண்டே ஜெயந்தி சாப்பிட, ப்ரீத்தியிடம் இருந்து மெசேஜ் வந்து குதித்தது.
"பேக் ஃப்ரம் வில்லேஜ். ஷால் வீ மீட் டுடே?" என்று கேட்டிருந்தாள். இன்னும் ஆற அமர அவளுடன் அமர்ந்து பேச நேரம் வாய்க்கவில்லை. இந்த வேண்டாத விருந்தாளியை கழட்டி விட்டு விட்டு, ப்ரீத்தி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே சென்று கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்போம் என்று நினைத்தவள், பதினொரு மணிக்கு உன்னை உன் ஹோட்டலில் சந்திக்கிறேன் என்று பதில் அனுப்பினாள்.
அதுவரையிலும் படுக்கையை விட்டு எழுந்திராத ப்ரீத்தி அப்படியே தூங்கிக் கொண்டிருந்த தன் மகளைப் பார்த்துக் கொண்டே, தன் எதிர்கால வாழ்க்கையை குறித்து யோசிக்கலானாள். தனக்கும் தன் மகளுக்குமான வாழ்வில் ஹுசைன் வந்தால் பொருந்துவானா? இதே கட்டிலில், மறுபுறம் அவனைப் படுக்க வைத்து மனதுக்குள் காட்சியமைத்துப் பார்த்தாள். 'பக்காவாக பொருந்துவேன்!' என்று தனது ட்ரேட் மார்க் புன்னகையுடன் அவள் மனக்கண் முன் தோன்றிக் கூறினான் ஹுசைன். இவனாக அடுத்தடுத்துப் பேசினால் கூட ஓகே சொல்லி விட்டிருப்போம், இப்படி யோசித்துக் கொண்டிருக்க மாட்டோம். ஏன் அப்ளிகேஷன் போட்டு விட்டு அப்படியே இருக்கிறான்? மறுபடி மறுபடி உன் முடிவு என்ன என்று கேட்டால் தான் என்ன? என்று நினைத்தாள் ப்ரீத்தி. அடச்சீ ஸ்கூல் பொண்ணு மாதிரி இப்படி யோசிக்கிறியே என்று அவளே அவளைத் திட்டிக் கொண்டாள். இந்த குழப்பமான மனநிலையில் இருந்து மீள ஜெயந்தி தனக்கு ஒரு யோசனையை சொல்லக்கூடும் என்று ப்ரீத்திக்குத் தோன்றியது.
"கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக் கொண்டு ஏனின்னும் பேசவில்லை"