11. நேரம்
"கடைசியா ஒரு கிளையன்ட் கூட மீட்டிங்னு சொல்லிட்டு எஸ்கேப்பாகி வந்தேன் ப்ரீத்தி!" தன் தொணதொணா விருந்தினரைப் பற்றி ஜெயந்தி கூற ப்ரீத்திக்கு சிரிப்பு.
"இங்கேயே இருந்திருந்தா எங்க வீடும் ஃப்ரண்ட்ஸ் ரிலேட்டிவ்ஸ்ன்னு கலகலன்னு இருந்திருக்கும்.. அங்க லண்டன் ல வீக் என்ட்ஸ்ல தனியா இருக்கும் பொழுது தொந்தரவு பண்றதுக்காவது யாராவது வாங்களேன் அப்படின்னு மனசுக்கு தோணும்… முன்னெல்லாம் சென்னை வீடு கலகலன்னு இருக்கும்.. என்னோட பிரச்சனைக்கு அப்புறம் பெரிய இடத்து விவகாரம் நமக்கு ஏன் வம்பு அப்படின்னு யாருமே நெருங்குறதே இல்லை.. ஃபேமிலி வாட்ஸ் அப் குரூப் இருக்கு.. அதுல கூட ஒன்னும் பெருசா பேசிக்கிறது இல்ல யாரும்.. இப்ப பாரு, வீடு விக்கிறதுக்கு வந்துட்டு கோவில் போறதுக்குக் கூட ஹோட்டல்ல தங்கிட்டு இருக்கேன்.. அதுவும் ஒரு நாளைக்கு ஒரு ஹோட்டல்னு.." ப்ரீத்தி தன் வருத்தங்களைக் கொட்டினாள். இருவரும் ப்ரீத்தியின் ஹோட்டல் அறையில் அமர்ந்திருக்க, வைதேகி வெளியில் விளையாடப் போயிருந்தாள்.
ப்ரீத்தியை சமாதானம் செய்யும் விதமாக ஜெயந்தி வாயைத் திறக்கும் முன், "ஓகே.. இனிமே எல்லாம் சரியாயிடும்.. மறுபடியும் பேமிலி செட்டப்பை கிரியேட் பண்ணினா சரியாப் போச்சு" என்றாள் ப்ரீத்தி.
"தட்ஸ் குட்! அப்படித்தான் பாசிட்டிவா பேசணும்" என்ற ஜெயந்தி அவள் கூற வருவதை ஒரு முறை சரியாக புரிந்து கொண்டு, "வாவ்.. எதுவும் விசேஷமா? ஏதாவது ப்ரோபோசல் வந்திருக்கா? ஓகே சொல்லிட்டியா?" என்றாள் ஆர்வத்துடன்.
நீச்சல் குளத்திற்குச் சென்றிருந்த வைதேகி உள்ளே வர, "என்னடா அதுக்குள்ள வந்துட்டே? ஸ்விம்மிங் போனா சாதாரணமா வந்துக்க மாட்டிய என்னாச்சு?" என்று ப்ரீத்தி கேட்டாள். சற்று முன் தான் அறையிலிருந்து ஜன்னல் வழியே அந்த நீச்சல் குளத்தைப் பார்த்திருந்தாள் ப்ரீத்தி. வைதேகி மகிழ்வுடன் தான் நீந்திக் கொண்டிருந்தாள். சிறுமிகள் நீந்திக் கொண்டிருக்க, அருகில் ஒன்றிரண்டு தாய்மார்களும் நீச்சல் குளத்தின் கரையில் அமர்ந்திருந்தனர்.
"போர் அடிச்சுச்சு மம்மி. அதான் வந்துட்டேன்"
வைதேகிக்கு உடல் துடைத்து விட்டு, "இல்லையே பாப்பா ஃபேஸ் டல்லா இருக்கே.. என்ன விஷயம்" என்று கேட்க,
"அங்க ரெண்டு பேரோட டாடி வந்துட்டாங்க" என்று கூறிவிட்டு தன் மாற்றுடையை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நகர்ந்தாள் வைதேகி.
அவங்க டாடி வந்தா என்ன என்று கேட்க வாயை எடுத்த ஜெயந்திக்கு வைதேகி யின் மனநிலை புரிவதைப் போல் இருந்தது. "அப்பா என்கிற கேரக்டரை ரொம்ப மிஸ் பண்றாளோ?" என்று ஜெயந்தி கேட்க, "ம்ம்" என்று தலையாட்டினாள் ப்ரீத்தி. ரெண்டு முறை தாய் தந்தையருடன் வரும் சிறுவர்களை ஏக்கமாக வைதேகி பார்ப்பதை ப்ரீத்தியும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். இந்த சின்ன வயதிலேயே, அம்மாவிடம் அது பற்றி கேட்கக் கூடாது, கேட்டல் அம்மா கவலைப்படுவாள் என்று வைதேகிக்கு ஏதோ ஒரு புரிதல் இருந்திருக்கிறது. இதுவரை எதுவும் வாயை விட்டுக் கேட்டதில்லை. 'அவ கேட்டு அப்புறம் செய்றதுக்கு அம்மான்னு நான் இருக்கணுமா என்ன? குழந்தைக்கு என்ன வேணுன்னு கேட்காமலே செய்றது தானே அம்மாவோட ஸ்பெஷல்?' எப்போதையும் விட இந்த எண்ணம் இப்போது அதிகமாகத் தோன்றியது பிரீத்திக்கு.
முதலில் குழந்தைக்கு உரிமை கோருவதற்கான போராட்டம்.. பின் பிள்ளை தனக்கென வந்தவுடன், தன் வேலை, இருப்பிடம் மாற்றுவது என்று அதற்கு ஒரு போராட்டம். ஒற்றைப் பிள்ளையை வைத்துக் கொண்டு பொருளாதார ரீதியாக தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பின்னரே, இடைப்பட்ட காலத்தில் மகளின் மனநிலையை கவனிக்காமல் தவற விடுகிறேனா, இல்லை இதுதான் சரியான தருணமா என்றும் எண்ணங்கள் அவளுக்கு.
ஜெயந்தி அவளது மனப் போராட்டங்களை உணர்ந்து கொண்டவள் போல, "சான்ஸ் கிடைச்சா மூவ் ஆன் ஆகிடு ப்ரீத்தி.. எல்லாரும் ஆனந்த்தை மாதிரியே சைக்கோ வா இருக்க மாட்டாங்கள்ல.. உலகத்துல நல்லவங்களும் உண்டு தானே? வெஸ்ட்ல நம்ம நாட்டை விட பிராட் மைண்டடா தானே எல்லாரும் இருப்பாங்க? அப்படித் தான் கேள்விப்பட்டு இருக்கேன்" என்றாள்.
எதுவும் பேசாமல் இருந்தாள் ப்ரீத்தி. "மொபைல் தரீங்களா மம்மி? நானும் ஹுசைன் அங்கிளும் சேர்ந்து ஒரு கேம் விளையாடிட்டு இருக்கோமே.. அதுல ஒரு செடிக்கு தண்ணி ஊத்தி உரம் போட்டிருந்தோம்.. அதுல பூ வச்சுருச்சான்னு பாக்கணும்.." என்று வைதேகி வர,
மொபைலை எடுத்து வைதேகியிடம் நீட்டி விட்டு ஜெயந்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு தள்ளிப் போய் அமர்ந்தாள் ப்ரீத்தி. "அந்த கேம் விளையாடுற அங்கிள் தான் உன்னோட அவரா?" என்று அவள் அருகில் வந்தமர்ந்தாள் ஜெயந்தி. வெட்கமா தயக்கமா என்னவென்று சொல்ல முடியாத பாவனை ப்ரீத்தியிடம். 'ப்ரீத்திக் குட்டி!' என்று அவளது கன்னத்தைத் திருப்பினாள் ஜெயந்தி. கல்லூரிப் பருவத்திலும் குழந்தை போல் நடந்துகொள்ளும் ப்ரீத்தியை, 'ப்ரீத்தி குட்டி, ப்ரீத்தி குட்டி' என்பார்கள்.
அவளை கிண்டல் செய்யும் அனைவரும் குழந்தைத்தனமாக அவள் ஏதாவது சொன்னால் என்றால் அதைச் சொல்லித் தான் அவளைக் கூப்பிடுவார்கள். இப்படி பால் மணம் மாறாமல் இருக்கும் மனிதர்களை காலம் கொஞ்சம் அதிகமாகவே சோதிக்கிறதோ என்று நினைத்தாள் ஜெயந்தி.
"ஓஹோ! அப்ப அதுவே தானா?" என்று ஜெயந்தி மேலும் கேட்க, இப்போது நன்றாக வெட்கப்பட்டு தலை குனிந்தாள் ப்ரீத்தி. "சரி! ரைட்டு! அப்ப சீக்கிரம் பேசு.. மேரேஜ் எதுவும் பிளான் பண்றதா இருந்தா முதல்லேயே சொல்லிடு.. நாங்க எல்லாம் லண்டன் வர்றோம்.. இல்ல பேச யோசிச்சேன்னா சொல்லு.. அதுக்கும் ஒரு வாட்டி வந்து பேசிட்டா போச்சு.. ஏற்கனவே யூரோப் டூர் போகணும்னு சொல்லிக்கிட்டே இருக்கார் இவர்" என்றாள் ஜெயந்தி.
அங்கே ஹுசைனுக்கும் குழப்பங்கள் இல்லாமல் இல்லை. இரண்டாம் திருமணத்துக்குத் தயாராகும் ஒவ்வொருவரும் இப்படித்தான் யோசிப்பார்களா என்றிருந்தது அவனுக்கு. அவனுடைய குணநலனின் படி எதையுமே அசால்ட்டாக எடுத்துக் கொள்பவன் தான். முதல் திருமணம், அதன் முறிவு இதையெல்லாம் வலியைத் தந்தது தான். அதைவிட இப்போது ப்ரீத்தி விஷயத்தில் ரொம்பவும் நிதானித்து காலடி எடுத்து வைப்பது போல அவனுக்குத் தோன்றியது. அவனைச் சார்ந்தவர்கள், 'ரொம்ப தான் யோசிக்கிறே நீ.. சட்டுபுட்டுன்னு சீக்கிரமா மேரேஜ் முடிக்கப் பாரு' என்றுதான் சொல்லி வந்தனர்.
அவனது குழப்பத்திற்கு காரணம் அவனுடைய வேலையும் கூட. அங்கொன்றும் இங்கொன்றுமாக சமூக அக்கறையுள்ள புகைப்படங்களை எடுப்பதும், செய்திகளைத் தருவதுமாக ஃப்ரீலான்ஸராக பல பத்திரிகைகளில் இருந்தவன், தற்போது பிரபல பத்திரிக்கை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து, சென்சிட்டிவான விஷயங்களை தொட ஆரம்பித்திருந்தான். தீவிரவாதிகள், அவர்களுடைய பதுங்கும் இடங்கள் என்று தற்போது அவனுக்கு வேலை கொடுக்கப்பட்டிருக்க அதை சவாலாகவும் எடுத்துச் செய்தான். ஆனால் கத்தி மேல் நடப்பது போலத்தான் இந்த வேலை. வெற்றிகரமாக முடிந்தால் பெருமை அதிகம். உலகம் முழுவதும் தெரியும் ஒரு முகமாகி விடுவான். சற்றுப் பிசகி விட்டாலோ தீவிரவாதிகள் அவனை துவைத்துத் தொங்கப் போட்டு விடுவார்கள். இப்படி ஒருவன் இருந்த சுவடு கூட தெரியாமல் செய்து விடுவார்கள். இந்த நிலையில் இன்னொரு குடும்பம், அதில் அவர்களையும் வருத்த வேண்டுமா என்றிருந்தது அவனுக்கு. ப்ரீத்தியைப் பார்த்தவுடன் அவ்வளவு பிடித்து போய்விட்டது அவனுக்கு. அவளைத் தவிர வேறு யோசிக்கவும் முடியவில்லை அவனது எண்ணங்கள் ப்ரீத்தியை சுற்றியே இருந்ததாலோ என்னவோ இயற்கையே அவனை ப்ரீத்தி இருக்கும் இந்தியாவிற்கு அழைத்து வந்தது.
அஸ்வினின் வீடு அன்று கலகலப்பாக இருந்தது. கிராமத்திலிருந்து அவனது அம்மா, அண்ணன், அண்ணி குழந்தைகள் வந்திருந்தனர். வீடே கலகலப்பாக இருக்க ஈஸ்வரி மட்டும் உர்ரென்று இருந்தார். அவர் சந்தோஷமாக இருந்தால் தான் ஆச்சரியம். எப்பொழுதும் எதையாவது குற்றம் கண்டுபிடித்து, எதற்காவது வருந்திக் கொண்டே இருக்கும் எதிர்மறை மனிதரிடம் வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்..
அஸ்வின் சென்னையில் நிரந்தரமாக தங்கத் துவங்கியிலிருந்து வெகு சில முறைகளே அவனது குடும்பத்தினர் வந்திருப்பார்கள். ஊரில் அவர்களுக்கு வேலை சரியாக இருக்கும் என்பது ஒரு பத்து சதவீத காரணம் என்றால் இங்கு கிடைக்கும் மரியாதை 90% எனலாம். அஸ்வினிக்கு ஆட்களுடன் இருப்பது மிகவும் பிடிக்கும். புகுந்த வீட்டு சொந்தங்களைப் பிடிக்காது என்றெல்லாம் இல்லை, திருமணமான புதிதில் அடிக்கடி வந்து போனால் அஸ்வினை அவர்கள் ஊருக்கு வரச் சொல்லி விடுவார்களோ என்று அடிமனதில் நிரந்தர பயமிருக்கும். அதனால் அவர்களை மனதார வரவேற்க மாட்டாள். அதன் பின் அஸ்வினின் கல்வித்தரம் உயர அவனுக்கு ஊர்ப்பக்கம் வேலையில்லை. பெரு நகரங்களில் தான் வேலை என்றானது. இனிமேல் சென்னையை விட்டு போக மாட்டோம் என்ற தைரியம் உறுதியாக வந்த பின்பு தான் அந்த மனத்தடை அவளுக்கு உடைந்தது.
மாமியார் கொண்டு வந்த தின்பண்டங்களை சுவைத்துக் கொண்டு ஓரகத்தியின் நீளமான தலைமுடியை தன் ஆசை தீர, விதவிதமாக பின்னல்களிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள் அஸ்வினி. பிள்ளைகளும் பெரிய அக்காக்கள் இரண்டு பேருடனே சுற்றி வந்தனர். அஸ்வினின் அண்ணன் மகள்கள் இவர்கள் இருவரையும் விட பெரியவர்களாகவும் பொறுப்பு மிக்கவர்களாகவும் இருந்தார்கள். அஸ்வின் அம்மாவுடன் சேர்ந்து சமையல்கட்டில் புகுந்திருந்தான். அம்மாவின் ஸ்பெஷலான கறி தோசையை அவன் அடுப்பில் வார்த்து எடுக்க, கொத்துக் கறியை அவனிடம் ஒப்படைத்து விட்டு, அவனது அம்மா அதற்குக் குழம்பு வைத்துக் கொண்டிருந்தார்.
'இது என்ன பழக்கம் புதுசா இவங்களெல்லாம் கூட்டிட்டு வந்து கூத்தடிக்கிறது' என்று முனகிக் கொண்டு அமர்ந்திருந்த ஈஸ்வரி, பின் தனக்கு மட்டும் அங்கு வேலையே இல்லாதது போல் தோன்ற, வாக்கிங் போறேன் என்று அப்பார்ட்மெண்டுக்கு கீழே இருக்கும் பார்க்குக்கு சென்று விட்டார். அஸ்வினிக்கு அம்மா போனது கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. தடைகள் இன்றி புகுந்த வீட்டினரிடம் பேச முடிந்தது. பெற்ற அம்மாவே எக்ஸ்ட்ரா லக்கேஜ் போல் தோன்றுகிறாரே.. இது அம்மாவின் தவறா என்னுடைய தவறா என்று நினைத்தாள் அஸ்வினி.
"பிள்ளைகளுக்கு சூடா தோசையைக் கொண்டு போய் குடு தாயி" என்று மாமியார் அழைக்க, சமையல் கட்டிற்கு வந்தவள் அஸ்வினைத் தேடினாள். சமையலறையை ஒட்டி உள்ள பால்கனியிலிருந்து அஸ்வின் யாரிடமோ ஃபோனில் பேசுவது கேட்டது.
"உனக்காக பில்டிங் மேலே இருந்து கூட குதிப்பேன். இது செய்ய மாட்டேனா? வரச் சொல்லு.. சிறப்பா செஞ்சுடுவோம். நல்ல கவனிச்சு அனுப்புறேன்.. நாளன்னிக்கு தான் கிளம்பறதா பிளான்.. அதுக்கு என்ன? நீ சொல்லிட்ட இல்ல? ஃப்ளெக்ஸிபிள் டிக்கெட் தான்.. ப்ளானை மாத்தி நாளைக்கு ஈவினிங்கே டங்குன்னு அங்க வந்து குதிச்சுடுறேன்.. உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறேன்" என்று கூறிக் கொண்டிருந்தான்.
'எவனோ பாடாவதி ஃப்ரண்டு போல.. டெல்லிக்கு வரானா இருக்கும்.. எவனுக்காகவோ இவர் ஏன் முன்னாடியே கிளம்பிப் போறார்.. கூட ஒரு நாள் இங்கே இருந்தால் தான் என்ன?' என்று அஸ்வினிக்குக் கோபம் வந்தது.
சட்டென்று மகிழ்வதும், திடீரென்று மனது மாறி கோபப்படுவதும் அவளால் மாற்றிக் கொள்ளவே முடியாத பழக்கமாக இருக்கிறது. உண்மையில் அஸ்வின் தன் திட்டத்தை மாற்றவெல்லாம் இல்லை. எப்படியும் மறுநாள் தான் அவன் கிளம்புவதாக இருந்தது. எதிர்முனையில் இருக்கும் நபரிடம் சும்மா பில்டப் செய்து கொண்டிருந்தான். அஸ்வினைத் தெரிந்தவர்களுக்கு இதுவும் தெரியும். பல சமயம் அளந்து விடுவான். பொய்யை உண்மை மாதிரியே பேசுவான். சில சமயம் முழு உண்மையையும் சொல்வான். எது பொய் எது உண்மை என்று கண்டுபிடிக்க முடியாது.
தன் கோபத்தை பாத்திரங்களின் மேல் காட்டினாள் அஸ்வினி. தட்டை தடாமுடா என்று எடுப்பதும், டம்ளரை டம் என்று வைப்பதுமாக ஒலி எழுப்பினாள். 'நல்லா தானே இருந்துச்சு இந்தப் பொண்ணு? திடீர்னு என்னாச்சு' என்று அஸ்வின் அம்மாவும் அண்ணியும் குழம்பினார்கள். அஸ்வின் அவள் கோபமாக இருக்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்கவே இல்லை. அவன் தன்னுடைய உலகத்தில் தன் பாட்டுக்கு இருந்தான். ப்ரீத்தி ஹுசைனைப் பற்றி ஜெயந்தியிடம் சொல்லி கருத்து கேட்கலாம் என்று நினைக்க, அதற்குள் ஜெயந்திக்கு தியாகராஜனிடமிருந்து அழைப்பு வந்தது.
"அந்த லேடியை இனிமே உள்ள விடக்கூடாது" என்றார் அவர்.
"என்ன ஆச்சு?" என்று ஜெயந்தி கேட்க, அவர்கள் வீட்டுக்கு வந்திருந்த விருந்தாளிப் பெண்தான் குழப்பியிருக்கிறாள்.
"என்னை மட்டும் வீட்ல விட்டுட்டுப் போயிட்டா.. நான் தான் வீட்டு வேலையை உட்கார்ந்து பார்த்துட்டு இருக்கேன்" என்று தியாகராஜன் தங்கையிடம் அவள் கொளுத்தி போட அவள் ஜெயந்திக்கு அழைத்துவிட்டு ஜெயந்தி எடுக்கவில்லை என்றவுடன் தியாகராஜனுக்கு ஃபோன் அடித்திருக்கிறாள். "என்னண்ணே? என் சொந்தக்காரங்களை அனுப்பிவிட்டா இப்படித்தான் அவமானப்படுத்துவீங்களா?" என்று அவள் கேட்க, சரியான வேலைப்பளுவில் இருந்த தியாகராஜனுக்கு கோபம் வந்திருக்கிறது.
"சரி சரி! இந்த அம்மா அடுத்து யாருகிட்டயாவது வத்தி வைக்க முன்னாடி நான் கிளம்புறேன்.. இந்த லேடிக்கு ரங்கநாதன் ஸ்ட்ரீட் போகணுமாம்.. நமக்கு அதெல்லாம் போரடிச்சுப் போச்சு.. அப்புறம் பேசுவோம்.. நீ இன்னும் ரெண்டு நாள் இருப்பே இல்ல? நாளைக் கழிச்சு ராஜி கூட வரேன்னு சொல்லி இருக்கா.. வாயேன்.. பேசிக்கிட்டு இருப்போம்" என்ற படி கிளம்பினாள். ராஜலட்சுமி ஒரு வேலையாக சென்னை வருவதாகக் கூறியிருக்க, ஜெயந்திக்கு அவளையும் ப்ரீத்தியையும் சந்திக்க வைக்கலாம் என்று ஆசை. பிரீத்திக்கோ பெரும் தயக்கம். ராஜலட்சுமி சுள்ளென்று எதுவும் சொல்லிவிட்டால் தாங்கிக் கொள்ள முடியாதே என்று.
"முடிஞ்சா வரேன், பக்கத்துல பீச் ரிசார்ட் எங்கேயாவது போயிட்டு வரலாமான்னு யோசிக்கிறேன்.. இல்ல டிக்கெட் அட்வான்ஸ் பண்ணிட்டு லண்டன் கூட போகப் பார்க்கிறேன்" என்றாள் ப்ரீத்தி. அவள் முன்பே செல்லப் பார்க்க, காலம் வேறு மாதிரியான கணக்கைப் போட்டு வைத்திருந்தது.
தொடரும்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை