3. செல்லமே!
எங்கோ கேட்ட சிறு ஓசையில் அம்மாவை இறுக்கக் கட்டிக்கொண்டாள் வைதேகி. ப்ரீத்திக்கும் அந்த மெல்லிய ஓசை கேட்கத்தான் செய்திருந்தது. அவளுக்கும் அந்த இளங்காலைப் பொழுதிலேயே தூக்கம் கலைந்துவிட்டது. இன்னும் ஓரிரு மணி நேரங்கள் தூங்கலாம் தான். ஆனால் அது ஆழ்ந்த உறக்கமாக இருக்காது; வேண்டாத கனவுகளைக் கொண்டு வரும்.
வைதேகியைத் தானும் அணைத்து நன்றாக தூங்க செய்துவிட்டு எழுந்து ஜன்னல் புறமாகச் சென்றாள் ப்ரீத்தி. இந்தியா வந்த இந்த ஆறு நாட்களில் அவர்கள் தங்கும் மூன்றாவது ஹோட்டல் இது. ஒரு முறை பார்வையை ஜன்னலுக்கு வெளியே சுழற்றி திருப்திப் பட்டுக்கொண்டு காலைக் கடன்களைக் கழிக்கச் சென்றாள். நல்ல ஹோட்டல் தான், பாதுகாப்பானது தான். இருந்தாலும் இரண்டு நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் தங்குவதில்லை என்பது ஏற்கனவே அவள் எடுத்திருந்த முடிவு. சென்ற முறை வந்தபோது போலல்லாமல் இந்த முறை இலகுவாக நடமாட முடிகிறது. எனினும் தன்னை யாரோ பின்தொடர்கிறார்களோ என்ற ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருந்தது.
வந்த வேலை 50 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் அதன்பின் அம்மா ஆசைப்படி அவர்களது பூர்வீக கிராமத்திற்குச் செல்ல வேண்டும், அந்தக் கோவிலில் வைதேகிக்கு பூமுடி கொடுக்க வேண்டும்.. முடிந்தால் தான் இங்கிருக்கும் பொழுதே சொத்துக்களை விற்று ரிஜிஸ்ட்ரேஷனை முடித்து விட வேண்டும், இல்லையேல் தியாகராஜனுக்கு பவர் எழுதிக் கொடுத்துவிட்டுப் போகலாம்.. இப்படிப் பலவாறாக சிந்தனை ஓட, தன் ஆர்கனைசரில் அன்றைய தினத்திற்கான வேலைகளைப் பட்டியலிட்டு வைத்துக்கொண்டாள் ப்ரீத்தி.
ஜெயந்தி காலையிலேயே மெசேஜ் அனுப்பியிருந்தாள், 'பிரேக் பாஸ்ட்க்கு இங்கே வந்துடு' என்று. ப்ரீத்திக்கு ஆசையாகத்தான் இருந்தது. இன்னும் ஜெயந்தியிடம் அமர்ந்து சற்று பேசிக் கொண்டிருக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒருநாள் மாலை வரையாவது அவளது குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று. இப்போது தன்னுடைய வருகை அவளுக்கு ஏதேனும் தொந்தரவைக் கொடுக்குமா என்று யோசித்துப் பார்த்தாள். அவ்வளவாக இருக்காது என்று தோன்றியது.
சென்ற முறை அவளால் ஜெயந்தி வீட்டினர் பட்ட பாடுகள் கொஞ்சமா.. நஞ்சமா அதைச் சொன்னால், "அது ஆச்சு எட்டு வருஷம்.. அதை எதுக்கு இப்ப பேசிகிட்டு இருக்க" என்பாள் ஜெயந்தி. தியாகராஜனும், "ஏம்மா நீ மட்டும்தான் எங்களுக்கு கிளையண்ட்னு நெனச்சியா.. நானும் ஓரளவுக்கு பிஸியான அட்வகேட் தான்மா... உன்னை மாதிரியே நிறைய கிளைன்ட்ஸ் வருவாங்க.. அவங்களால நிறைய பிரச்சனையும் வரும்.. எல்லாத்தையும் சால்வ் பண்றதுக்கு வழி வச்சிருப்பேன்.. போம்மா அதெல்லாம் கடந்து போய்க்கிட்டே இருக்கணும்.. இப்ப யாரையாவது என்கிட்ட வம்பு பண்ணச் சொல்லு பாப்போம்.. இந்த தெருவிலேயே தண்ணி குழாய் அடைச்சாக் கூட தோண்டுறதுக்கு அவ்வளவு பயம் பயப்படுறாங்க இப்பல்லாம்" என்று ஆறுதல் கூறுவது போல ஆரம்பித்து சுய பெருமை பேசுவதுபோல் முடித்துவிடுவார். அவரது டெக்னிக்கைப் புரியாதவள் இல்லையே ப்ரீத்தி.. காலம் தான் அவளுக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்து.. பல்வேறு மனிதர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறதே..
வைதேகியை எழுப்பி, கிளப்பி ஒரு கால் டாக்ஸி புக் செய்து கொண்டு ஜெயந்தியின் வீட்டை நோக்கிப் பயணமானாள் ப்ரீத்தி. இடங்கள் மாறுவதில்லை; மனிதர்களும் சூழ்நிலைகளும் தான் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் என்று தோன்றியது. சென்றமுறை பால் குடிக்கும் பிள்ளையைத் தொலைத்துவிட்டு கதிகலங்க இவள் இங்கிலாந்திலிருந்து வந்து இறங்கியபோது ஜெயந்திதான் அரவணைத்துக் கொண்டாள். கொடுமையான நாட்கள் அவை. ஒன்றரை நாட்களுக்கும் மேலாக குழந்தைக்குப் பால் புகட்டாததால் பால் கட்டிக்கொண்டு மார்பில் வலியும், குளிர் காய்ச்சலும் அவளைப் படுத்தியது இன்றும் நினைவில் இருக்கிறது. இப்போதும் ஏதேனும் குழந்தை அழுவதைப் பார்த்தால் மார்புகளில் சுருக்கென்று இருக்கும். பால் கட்டிக் கொண்டதா என்று அனிச்சையாகத் தடவிப் பார்க்கச் சொல்லும்.
பின், தான் இருப்பது பொது இடம்; குழந்தை வளர்ந்து விட்டது இனிமேல் பால் கட்ட வாய்ப்பில்லை என்பதெல்லாம் புத்திக்கு உறைக்க, கையை இறக்கிக் கொள்வாள். அருகில் யாரேனும் வினோதமாகப் பார்த்தால், இருமுவது போலவோ தும்மல் போடுவது போலவோ ஒரு பாவனை வேறு செய்ய வேண்டியதிருக்கும். பழைய சம்பவங்கள் தந்த வலியால், வைதேகி பால் குடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் கழித்த பின்பு கூட இன்னும் பால் கட்டிக் கொள்வது போன்ற உணர்வு ப்ரீத்திக்கு ஏற்படும்.
ஒரு காலகட்டத்தில் தினமும் இரவு விழித்து வைதேகியைத் தூக்கி மடியில் போட்டுக்கொண்டு அவளுக்கு அமுதுஊட்ட முனைவாள் ப்ரீத்தி. சில நிமிடங்கள் கழித்தே நிலைமை புரிந்து குழந்தையைக் கீழே படுக்க வைப்பாள். பின் விடிய விடிய விழித்துக்கொண்டே அமர்ந்திருப்பாள். இந்த பிரச்சனைக்காக மனநல ஆலோசகரைப் போய் பார்க்கக் கூட பயமாக இருந்தது. பைத்தியம் என்று முத்திரை விழுந்து விடுமோ என்ற அச்சம் தான். பயண ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கிய முந்தைய வாரத்தில் கூட ஆழ்ந்த உறக்கத்தின் ஊடாக, எட்டு வயது மகளை எடுத்து மடியில் போட முற்பட்டாள் ப்ரீத்தி.
வைதேகி, "அம்மா தூங்குறேன்மா.." என்ற பின்தான் சுய நினைவுக்கு வந்தாள். இதுவும் வாடிக்கையான ஒன்று தான்.. இப்படி நடந்து விட்டால் மணிக்கணக்காக மீண்டும் விழித்துக் கிடப்பாள்.
ஜெயந்தி இருக்கும் தெருவுக்குள் கால்டாக்ஸி நுழைய, ஓலா ஆப்பில் எவ்வளவு சார்ஜ் காட்டுகிறது என்பதைப் பார்ப்பதற்காக ஃபோனை எடுக்க, 'வெயிட்டிங் ஃபார் யுவர் பாஸிட்டிவ் ரிப்ளை' என்று வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வந்து குதித்தது. கூடவே அந்த மெசேஜை அனுப்பியவனும் தன் வசீகரப் புன்னகையுடன் டிபியில் ப்ரீத்தியைப் பார்த்துச் சிரித்தான்.
"அம்மா! டிரைவர் அங்கிள் ஜி பே வா, கேஷான்னு கேக்குறார்" என்று வைதேகி அவளை உலுக்க, வேகமாக அந்த மெசேஜை அழித்தவள் டிரைவருக்கு செட்டில் செய்து விட்டு கீழே இறங்கினாள். பார்வை தன்னையுமறியாமல் ஜெயந்தியின் வீட்டு மாடிக்கும் பின் வாசலுக்கும் பாய்ந்து மீண்டது.
அம்மா கடைசியாக வாழ்ந்த வீடு. பல போராட்டங்களை இங்கிருந்தபடிக்கே அம்மா சந்தித்திருந்தாலும் இறுதிக் காலத்தில் நிம்மதியாகத் தான் போயிருப்பாள் என்பது உறுதி. அந்த நம்பிக்கையைத் தந்ததற்காக ஜெயந்திக்கும் தியாகராஜனுக்கும் அவள் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. தினமும் பாத பூஜை செய்தாலும் தகும்.
"வாங்க வாங்க! அப்புறமா ஃபீலிங்ஸைக் காட்டலாம்.. டைம் ஆகுது.. நானும் உனக்காக சாப்பிடாம வெயிட் பண்றேன் வா!" என்று வாசலுக்கு வரவேற்க வந்த ஜெயந்தி, ப்ரீத்தியையும் வைதேகியையும் அழைத்துச் சென்றாள்.
வாசலில் நின்றிருந்த நாய் அவர்களைப் பார்த்து வாலை ஆட்டியது. அதைப் போய் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று வைதேகிக்கு அவ்வளவு ஆசை.
"சாப்பிட்டுட்டு வந்து விளையாடு.. வா! அண்ணனும் அக்காவும் ஷட்டில் விளையாட போயிருக்காங்க. இதோ அவங்களும் வந்துடுவாங்க" என்று ஜெயந்தி கூற மூவரும் உணவுக்காக உள்ளே சென்றனர்.
முந்தைய நாள் ஹோட்டலில் பார்த்தபோதும் சாக்லேட்டுகள் பரிசுப் பொருட்கள் என்று நிறைய கொடுத்திருந்தாள் ப்ரீத்தி. இன்றும் அவள் தின்பண்டங்கள் அடங்கிய ஒரு கவரை ஜெயந்தியிடம் நீட்ட,
"எதுக்கு இதெல்லாம்.. நேத்துதானே அவ்வளவு வாங்கித் தந்தே நீ?" என்று கடிந்து கொண்டாள் ஜெயந்தி.
"என்னோட மன திருப்திக்காக வாங்கிக்கோ.. நீ மட்டும் இல்லேன்னா இந்நேரம் நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்" என்று ப்ரீத்தி கண்கலங்க,
"அம்மாவும் பொண்ணும் தர்மசங்கடத்தில் என்னை சிக்க வைக்கிறதுன்னே இருக்கீங்க.. உங்க அம்மா கடைசிக் காலத்துல அவங்க கழுத்தில் இருந்த செயினைக் கழட்டி எனக்குப் போட்டுட்டு, அம்மா கொடுத்தா பொண்ணு வாங்கிக்க மாட்டாளா? கட்டாயம் வாங்கிக்கம்மா. அப்பதான் என் ஆத்மா சாந்தி அடையும்னு சொல்லிட்டாங்க.. அவங்க மொத்தமா தந்தாங்க.. நீ இன்ஸ்டால்மென்ட்ல பண்ற!" என்ற ஜெயந்தி,
"ஒண்ணு தெரியுமா? உன்னால நாங்களும் நிறைய வளர்ந்திருக்கோம்.. இந்த உலகமே இப்படிப்பட்ட symbiosis ப்ராசஸ்ல தான் இயங்கிகிட்டு இருக்கு.. உனக்கு உதவுறதுக்கு நான் வர்றதும் எனக்கு உதவ நீ வர்றதும் இந்த ப்ராசஸ் தான் நம்ம எல்லாத்தையுமே பிழைச்சிருக்க வைக்குது.. இதுல யாரும் யாருக்கும் நல்லது பண்ணினதாவோ தியாகம் பண்ணினதாவோ அர்த்தமில்லை.. புரிஞ்சுதா?" என்று ஜெயந்தி சற்று கடினமாகவே கூறினாள்.
"இது உன்னோட நல்ல மனசைக் காட்டுது ஜெயந்தி! அதை கொஞ்சமாவது நான் ரெசிப்ராகேட் பண்ண வேண்டாமா? இப்ப நீ வாங்கிக்கலைன்னா என்ன? நெக்ஸ்ட் இயர் லண்டனுக்கு நீங்க டூர் வரதா சொல்லி இருக்கீங்க.. அப்ப உங்களை மாஞ்சு மாஞ்சு கவனிச்சுக்க மாட்டேனா? எப்படியும் நான் கொடுக்கிறதை உன்னால தடுக்கவே முடியாது.." என்று அழகான புன்னகையுடன் சொன்னாள் ப்ரீத்தி.
ஒரு கணம், இந்தப் புன்னகையை உடனிருந்து பார்க்க அந்தக் கடன்காரனுக்குக் கொடுத்து வைக்கவில்லையே.. சீக்கிரமாக இவளுக்கு ஒரு நல்ல வழி பிறந்தால் நல்லது. அப்படி என்ன வயதாகிவிட்டது இவளுக்கு? மீண்டும் திருமணம், பாதுகாப்பான குடும்பம் என்றொரு வட்டத்தை இவளுக்கு உருவாக்கு, யாராவது ஒரு நல்லவனைக் காட்டு கடவுளே!" என்று மனதார வேண்டிக் கொண்டாள் ஜெயந்தி.
"நான்தான் வந்துட்டேனே, நீங்க கவலைப்படாதீங்க" என்று சொல்வதைப்போல் ப்ரீத்தியின் மொபைலுக்கு அழகான மலர்கள் நிரம்பிய புகைப்படம் ஒன்றை அனுப்பி, 'டேக் யுவர் ஓன் டைம்!' என்று ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தான் அந்தப் புன்னகை மன்னன்.
சாய் பிரகாஷும் சின்ட்ரெல்லாவும் வந்திருக்க அவர்களுடன் சேர்ந்து வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வைதேகி. சுற்றிச் சுற்றி ஓடுவதும் குதிப்பதுமாக அவர்கள் இருக்க, தியாகராஜனுடன் அவரது ஆஃபீஸில் அமர்ந்து அன்று செய்ய வேண்டியவற்றைப் பற்றிப் பேசி விட்டுத் திரும்பிய ப்ரீத்தி, "வைதேகி! வா போகலாம்" என்று அவளை அழைத்தாள்.
ஜெயந்தி, தியாகராஜன், ப்ரீத்தி மூவரும் ப்ரீத்தியின் சொத்து பண விஷயமாக செல்வதாக திட்டமிட்டிருக்க, "பாப்பா இங்கே இருக்கட்டுமே.. குட்டீஸ்க்கு லீவு தான்.. ஜாலியாக இருக்குமே" என்றாள் ஜெயந்தி.
"வேண்டாம் அவளுக்கும் எல்லா விஷயங்களும் தெரிஞ்சிக்கணும் தானே.. நம்ம கூட வரட்டும்" என்று ப்ரீத்தி கூற, வைதேகியையும் அழைத்துச் சென்றனர்.
முதலில் இரண்டு வங்கிகளுக்குச் சென்று அங்கு ப்ரீத்தியின் பெற்றோர் போட்டு வைத்திருந்த ஃபிக்ஸட் டெபாசிட்களை உடைத்து ப்ரீத்தியின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தனர். அங்குள்ள லாக்கரைத் திறந்து அம்மாவின் நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் என்று எடுத்துக்கொண்டாள் ப்ரீத்தி.. இப்படி ஒரு சூழலில் தன்னந்தனியே வந்து இவற்றை எடுத்துக் கொள்வோம் என்று ப்ரீத்தி கனவிலும் நினைத்ததில்லை. இன்று வேலைகள் கடகடவென்று முடிவதற்குக் காரணம் தியாகராஜன் அவரது ஜூனியர்களைக் கொண்டு முன்னமே பேப்பர் வேலைகளை முடித்தது தான்.
அதன்பின் அவர்கள் சென்றது பிரீத்தியின் தாய் தந்தை வாழ்ந்த வீட்டுக்கு. அண்ணா நகரில் காம்பவுண்ட்டுடன் கூடிய தனி வீடு. இன்று இப்படிப்பட்ட வீடு கட்டுவது என்றால் குறைந்தது இரண்டு கோடி ரூபாய் வேண்டும். தியாகராஜன் புண்ணியத்தில் பராமரிக்கப்பட்டு ஒரு ஆடிட்டர் அலுவலகத்திற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இப்போது அந்த ஆடிட்டரே தவணை முறையில் பணம் செலுத்தி வீட்டை வாங்கிக் கொள்வதாக கூறி இருந்தார்.
வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு அவரிடமும் பல விபரங்களைப் பேசிவிட்டுக் காத்திருக்க, ஆடிட்டரின் லீகல் அட்வைசரான ஒரு வழக்கறிஞர் அவர்களைப் பார்க்க வருவதாக ஆடிட்டர் கூறினார். சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பின் வந்த அவர், "வாவ்! வாட் எ சர்ப்ரைஸ்! தியாகராஜன்- எவ்வளவு பிசி அட்வகேட் நீங்க! உங்களை இந்த நேரம் வெளியே பார்க்க முடியுமா? ஆச்சரியமா இருக்கே!" என்று கை கொடுத்தார்.
"ப்ரீத்தி ரொம்ப கிளோஸ் ஃபேமிலி பிரெண்ட்.. அதனால நேரிலேயே இருந்து சில விஷயங்களை முடிச்சிடலாம்னு வந்தேன்.. நீங்க டாகுமென்ட்ஸ் எல்லாம் பாத்துட்டீங்கன்னா அடுத்து சீக்கிரமா ப்ரொசீட் பண்ணலாம்" என்று தியாகராஜன் கூற,
உடன் வந்திருந்த ஜெயந்தியையும் ப்ரீத்தியையும் பார்த்து ஒரு வணக்கம் வைத்த அந்த வழக்கறிஞர், "மேடம் நீங்க எப்ப மறுபடி அப்ராட் போகனும்?" என்று கேட்டார்.
"இன்னும் டென் டேஸ் இங்கே இருப்பேன். அதுக்குள்ள எல்லாம் முடிக்க முடிஞ்சா பரவாயில்லை சார்" என்றாள் ப்ரீத்தி.
"டாகுமெண்ட்ஸ் குடுங்க.. இப்பவே ஒரு கிளான்ஸ் பாத்துடறேன்.. அதுக்கப்புறமா டீடெய்லா பார்த்துட்டு நாளைக்கு ஃபைனல் பண்ணிடலாம்" என்று அவர் வீடு தொடர்பான பத்திரங்களை தியாகராஜன் கையிலிருந்து வாங்கிப் பார்வையை அதன்மேல் ஓட்டினார்.
தேவநாதன் என்ற பெயரில் அந்த வீடு இருந்தது. "தேவநாதன்.. நீங்க ப்ரீத்தி.. ப்ரீத்தி தேவநாதன்! அந்த சென்சேஷனல் கேஸ் உங்களோடது தானா? ஒரே கேஸ் உங்களை உச்சாணிக் கிளையில் கொண்டுபோய் வச்சுடுச்சே.. நேத்து கூட நான் லா காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்க்கு கெஸ்ட் லெக்சர் குடுக்கப் போனப்ப, இந்த கேஸைப் பத்தி டீடெயிலா சொல்லி இருக்கேன்.. எவ்வளவு ஃபாஸ்டா மூவ் பண்ணி அஞ்சு நாள்ல ஜட்ஜ்மெண்ட் வாங்கினீங்க? சிம்ப்ளி கிரேட் தியாகராஜன்! அந்த கஷ்டமான கேஸை உங்களுக்குக் கொடுத்து இவங்க பெரிய உதவி பண்ணி இருக்காங்கன்னு சொல்லணும்.. கடத்தப்பட்ட குழந்தையை அஞ்சே நாள்ல மீட்குறதுன்னா சும்மாவா? அதுவும் அவ்வளவு அரசியல் செல்வாக்கு எதிர் பார்ட்டிக்கு!" என்றவாறு தன் வேலையைத் தொடர்ந்தார் அந்த வழக்கறிஞர்.
அங்கு ஒரு ஓரமாக அமர்ந்திருந்த வைதேகி இவர்கள் பேசுவதை ஆர்வமாகக் கவனிக்க, ஜெயந்திக்கு முகமே மாறியது. தியாகராஜனிடம் 'அவரோட பேச்சை கட் பண்ணுங்க' என்பதுபோல் பக்கவாட்டில் இருந்து சைகை காட்டினாள்.
அந்த வழக்கறிஞர் தடா புடா என்று பேசுகிற பேர்வழி தான். அவரது பேச்சில் தியாகராஜன் மேல் பொறாமையும் தொனித்தது. இருந்தாலும், 'இப்படிப் பேசாதீர்கள்' என்பது போல ஏதாவது சொன்னால் இன்னும் நிறைய பேசி குட்டையைக் குழப்புவார் என்று தெரிந்திருந்த தியாகராஜன், 'பேசிட்டுப் போறாரு விடேன்!' என்று சைகையில் சொன்னார்.
"வைதேகி! இங்கே வெளியே நிறைய மரங்கள் இருக்கு.. அதுல பேர்ட்ஸ் எதுவும் இருக்கான்னு பாப்போமா.. வரியா? அம்மா பேசிக்கிட்டு இருக்கட்டும்" என்று வைதேகியை வெளியே அழைத்துச் சென்றாள் ஜெயந்தி. கொஞ்ச நேரத்தில் ப்ரீத்தியும் வெளியே வர,
"சாரி ப்ரீத்தி! பாப்பா முன்னாடி வச்சு அவர் பேசிட்டார்.. எனக்கு கஷ்டமா போச்சு" என்று ஜெயந்தி கூற,
"இட்ஸ் ஓகே ஜெயந்தி! அதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. பாப்பாவுக்கு எல்லா விஷயமும் தெரியும்" என்றாள் ப்ரீத்தி.
"ஓ! சொல்லிட்டியா?"
"இல்லை.. அவளாவே தெரிஞ்சுகிட்டா"
"யாரு சொன்னாங்க? சொந்தக்காரங்களா.. இல்ல உன்னோட எக்ஸ் புருஷன் கான்டாக்ட் பண்ணினானா? எப்படித் தெரிஞ்சுது அவளுக்கு?" என்று ஜெயந்தி படபடப்பாகக் கேட்க,
ப்ரீத்தி ஒரு சோகம் கலந்த புன்னகையுடன் கைகட்டி நின்றாள். அவள் முகத்தில் சொல்லொணா வலி ஒன்று இருந்தது. ஆனால் அதைக் கடந்து வந்துவிட்டேன் பார்.. இன்னும் எவ்வளவு துன்பங்களை வேண்டுமானாலும் கொடு இயற்கையே.. நான் தாங்கிக் கொள்வேன், எதிர்த்துப் போராடுவேன் என்ற உறுதியும் அவள் முகத்தில் தெரிந்தது.
"கூகுளைப் பாத்து தெரிஞ்சுக்கிட்டா!" என்று ப்ரீத்தி கூற, ஜெயந்திக்குத் தான் ஆச்சரியமாகிப் போனது!
"மனிதன் மனிதன் எவன்தான் மனிதன்
வாழும்போது செத்து செத்து பிழைப்பவன் மனிதனா
வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா பிறருக்காகக் கண்ணீரும் பிறருக்காக செந்நீரும் சிந்தும் மனிதன்
எவனோ அவனே மனிதன் மனிதன்!"

Last edited: