6. நீதிக்குத் தலை வணங்கு
அஸ்வினின் எண்ணிலிருந்து அழைப்பு வந்ததும், தொடர்ந்து அங்கு சண்டை நடப்பதற்கான அறிகுறிகள் கேட்டதும் ஜெயந்திக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அதன்பின் அழைப்பு துண்டிக்கப்பட, 'இப்ப என்ன பண்ணி சண்டை இழுத்து வச்சிருக்கானோ தெரியலையே.. அதை நம்ம கிட்ட வேற போட்டு காட்டுறான்.. வீட்டில் இருக்கும் போது முடிஞ்சளவு ஃப்ரெண்ட்ஸ்க்கு போன் பண்ணாதே.. குடும்பத்துக்கு தான் நீ முதலிடம் குடுக்குறேன்னு அவங்க நம்பணும் அப்படின்னு படிச்சுப் படிச்சு சொல்றேன்.. கேக்குறானா' என்று எண்ணியபடி தன் வேலையைத் தொடர்ந்தாள்.
இன்றைய சண்டைக்குக் காரணம் ப்ரீத்தியாக இருக்கும் என்று ஜெயந்தி கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. அஸ்வின் வீட்டில் தன்னையும் போட்டு இந்நேரம் வாணலியில் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவள் யோசிக்கவில்லை. அன்றைய தினத்திற்கான பணிகளுக்குள் ஜெயந்தி மூழ்கியிருந்தாள். தென்தமிழகத்தில் இருந்து அதிகாலையில் வந்த ரயிலில் உறவினர்கள் வந்திருந்தனர். ப்ரீத்தியின் அம்மா வந்து தங்கத் துவங்கியதிலிருந்து அவர்களது வீட்டு மாடி ஒரு வேடந்தாங்கலாகவே ஆகிவிட்டது. பெரும்பாலான நபர்கள் வழக்கு தொடர்பாக தியாகராஜனை சந்திக்க வந்திருப்பார்கள். அல்லது, தேர்வு, வேலை, இன்டர்வியூ போன்ற காரணங்களுக்காக தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வருபவர்களாக இருப்பார்கள்.
'இப்படியா வீட்டை சத்திரம் சாவடி மாதிரி எல்லாருக்கும் திறந்து விடுறது?' என்று பல நெருங்கிய உறவினர்கள் கடிந்து கொள்வதுண்டு. ஜெயந்தியின் பெற்றோருமே, 'இப்படி யார் என்னன்னு தெரியாதவங்களை எல்லாம் வீட்டில் கொண்டு வந்து தங்க வைக்காதே ஜெயந்தி.. பொம்பளப் புள்ள வேற வச்சிருக்க.. எல்லாரும் நல்ல மனசோட வருவாங்கன்னு சொல்லமுடியாது இல்ல.. நோட்டம் பாத்துட்டு அதுக்கப்புறம் நாலு பேரைக் கூட்டிட்டு நீ தனியா இருக்கும்போது வந்துட்டா ஆபத்து தானே?' என்றெல்லாம் பயங் காட்டுவார்கள்.
எல்லாரின் அறிவுரையும் ஜெயந்தியிடம்தான். தியாகராஜனிடம் சொல்வதற்கு ஒருவருக்கும் வாய் வராது. "சொன்னா கேக்கற ஆளா அம்மா, உங்க மாப்பிள்ளை? நீங்க வேணா சொல்லிப் பாருங்க.. எனக்கும் வந்து போறவங்களை கவனிக்கிறது சங்கடமாத் தான் இருக்கு" என்று ஜெயந்தி சொல்வாள். "நாங்க சொன்னா மாப்பிள்ளை கேட்பாராக்கும்.. என்னமோ உன் நல்லதுக்குச் சொன்னேன்.. பார்த்துக்கோ" என்று அறிவுரை கூறியவர்கள் விலகி விடுவார்கள். தியாகராஜனின் சொந்தங்கள் தான் என்றில்லை, ஜெயந்தியின் நட்புக்கள், சொந்தங்கள், அவர்களுக்குத் தெரிந்தவர்கள் இப்படிப் பலரும் வந்து ஓரிரு நாட்கள் தங்கித் தான் சென்றிருக்கிறார்கள்.
அனைவரும் சொல்வது போல் ஜெயந்திக்கும் புதிய நபர்களை அனுமதிப்பதில் ஆரம்பத்தில் பயம் இருந்ததுண்டு. நாளாவட்டத்தில் அது சரியாகி விட்டது. தியாகராஜனிடம் தங்கள் வழக்குக்காக வருபவர்கள் நியாயவாதிகளாகவே இருந்தார்கள். நேர்மை இல்லாதவர்களின் வழக்கை தியாகராஜன் எடுப்பதில்லை. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்கிறவர்கள் யாரும் இதுவரை வந்ததில்லை.
கிராமப் புறங்களில் இருந்து வருபவர்கள் பிரியத்துடன் சேர்த்து ஏதாவது ஒரு பொருளையும் கொண்டு வந்தார்கள். அவர்களால் முடிந்த அளவிற்கு, 'நல்ல கருப்பட்டி கிடைச்சுச்சு', 'நம்ம வயல்ல உள்ள கடலை', 'நயம் தேங்காய் எண்ணெய் பக்கத்துல தயாரிக்கிறாங்க' என்று வாங்க மறுத்தும் கேளாமல் அவர்கள் கொண்டு வந்து கொட்டிய போது, அந்தப் பாசத்தில் ஜெயந்தியின் குடும்பத்தினர் மூழ்கிப் போனார்கள். பின் உதவி செய்வதே ஒரு போதையாகவும் ஆகிவிட்டது. எப்படியும் வாரத்தில் மூன்று நாட்களாவது அவர்கள் வீட்டில் ஆள் மாற்றி ஆள் இருப்பார்கள்.
அன்றைய விருந்தினர்களை கவனித்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி என்று பரபரப்பாக இயங்கி விட்டு, ஜெயந்தி ஆசுவாசமாகக் காலை உணவை உண்ண அமரும்பொழுது மணி பத்தரை ஆகி விட்டது. 'ரொம்ப நேரமா மொபைலைத் தொடலையே.. என்ன ஆச்சுன்னு பார்ப்போம்' என்று பார்க்க, பத்துக்கும் மேற்பட்ட தவறவிட்ட அழைப்புகள்.
அவளது கல்லூரித் தோழமைகள் பலர் அடுத்தடுத்து அழைத்திருந்தார்கள். 'எதுக்கு இத்தனை பேர் கூப்பிட்டிருக்காங்க.. எதுவும் ஆபத்தா? யாராச்சும் இறந்துட்டாங்களா?" என்று பதறிப்போய் வாட்ஸ்அப்பையும் முகநூலையும் பார்த்தாள். ராஜலட்சுமியிடமிருந்து வந்திருந்த ஒரு காணொளியைச் சொடுக்கிப் பார்க்க அது அந்த behind doors வீடியோவாக இருந்தது. 'அடப்பாவிகளா!' என்று மலைத்துப் போனாள். ஒரு கணம் வாயில் போட்ட இட்லியை விழுங்க முடியவில்லை.
இவள் காணொளியைப் பார்த்து விட்டதை இரட்டை ஊதா டிக்குகள் வழியாகக் கண்டுபிடித்த ராஜி, உடனே அழைத்து விட்டாள், "ஜெயந்தி, வீடியோ பார்த்தியா?" என்றபடி.
"என்ன ராஜி இது? என்னென்னவோ நான்சென்ஸ் எல்லாம் சொல்லி இருக்கான்? அஸ்வினுக்கு ப்ரீத்தி வரப் போறது தெரியாது.. ப்ரீத்திக்கு அஸ்வின் வரப் போறது தெரியாது.. ரெண்டு பேரும் ஒண்ணு ரெண்டு வார்த்தைக்கு மேல பேசிக்கக் கூட இல்லை?"
"அது தெரியும்.. ரெண்டு பேரும் அதுக்கு செட்டாக மாட்டாங்க.. அதே மாதிரி கோர்த்து விடற வேலைக்கு நீயும் செட்டாக மாட்டே.. அது இருக்கட்டும்..அஸ்வின் வீட்ல பெரிய சண்டையா என்ன? அவனும் உன் ஹப்பி மூலமா டைவர்ஸ், கீவர்ஸ்னு எதுவும் கேஸ் ஃபைல் பண்ணி இருக்கானா என்ன?" என்று கேட்டாள்.
இப்படி அவள் பட்டென்று கேட்டது எப்போதும்போல் ஜெயந்திக்கு எரிச்சலைத் தந்தது. 'இங்கிதமே கிடையாது இவளுக்கு.. எத்தனை வருஷம் ஆனாலும் மாற மாட்டா' என்று நினைத்தவள், "சேச்சே! அப்படியெல்லாம் இல்ல.. ரெண்டு பேருக்கும் இடையில சின்னச் சின்ன பிரச்சினை வரும்.. பெரிய அளவுக்கு எல்லாம் ஒன்னும் கிடையாது" என்றாள் மறுப்பாக.
"சரி சரி பாத்துக்கோ.. ப்ரீத்தி கூட சேராதன்னு சொன்னா நீ கேட்க மாட்டேங்கிற.. ஆனா அவ கூட சேர்ந்து உனக்கும் செலிபிரிட்டி ஸ்டேட்டஸ் வந்துடும் போலிருக்கே. நடத்து நடத்து" என்று மேலும் அவளைக் கடுப்பாகாகி விட்டே வைத்தாள் ராஜலட்சுமி.
'பிரீத்தியினுடைய பிரச்சனை தனி டிராக், அஸ்வினுடையது ஒரு தனி டிராக்.. இப்படி எவனோ ஒரு சேனல்காரன் பொய்யா புளுகி ரெண்டையும் சேர்த்து விடுறானே' என்று நினைத்த ஜெயந்தி நடந்தவற்றை மனதில் ஓட்டிப் பார்த்தாள். 'வைதேகி கூகிளைப் பார்த்து எல்லா விஷயமும் தெரிஞ்சுகிட்டா' என்று ப்ரீத்தி சொன்ன பின் அது குறித்து விபரமாகப் பேச இருவருக்கும் நேரம் இல்லை. அதற்குள் தியாகராஜனும் அந்த இன்னொரு வக்கீலும் உள்ளே அழைத்துவிட்டனர். வீடு விற்பனை பற்றிய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்திருந்தது. அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்தும் திருப்திகரமாக திட்டமிட்டாயிற்று. "நான் அப்படியே கிளம்புறேன் ஜெயந்தி.. ட்ரெயின்ல சொந்த கிராமத்துக்குப் போறோம்.. குலதெய்வம் கோயில் போயிட்டு வரோம்.. ஓலா புக் பண்ணிட்டேன்" என்று ப்ரீத்தி சொல்ல,
"ஏதோ கூகுள் பார்த்து பாப்பா தெரிஞ்சிகக்கிட்டான்னு சொன்னியே…?" என்று தயங்கியபடி கேட்டாள் ஜெயந்தி.
அனைவரின் பிரச்சனைகளுக்கும் தீர்வு தருபவள், சாய்வதற்கு தோள் கொடுக்கும் பரந்த மனது உடையவள் என்றாலும் யாரிடமும் ஜெயந்தியாகப் போய் சொந்த விபரங்கள் கேட்டதில்லை.
ப்ரீத்தி ஜெயந்தியின் அருகில் வந்து அவள் தோள்களில் கையைப் போட்டு அணைத்துக் கொண்டு, "என்கிட்ட ஹெசிட்டேட் பண்ணாம எதுவேணாலும் கேட்கலாம்.. வைதேகி அவ ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாடும் போது எல்லாரும் அவங்க அவங்க பேரு, அம்மா அப்பா பேரு எல்லாத்தையும் போட்டு கூகுள்ல போட்டு சர்ச் பண்ணி விளையாடிகிட்டு இருந்திருக்காங்க.. மத்தவங்க பேரன்ட்ஸ்க்கு எல்லாம் லிங்க்ட் இன் ப்ரோபைல், ஃபேஸ்புக் ப்ரொஃபைல், அவங்க பரீட்சை ரிசல்ட் இப்படியெல்லாம் வந்திருக்கு.. என் பெயரைப் போட்டவுடனே சட்டம் சம்பந்தமான நாலஞ்சு வெப்சைட்ல நம்மளோட கேஸ் சம்பந்தமான முழு டிடைல்ஸ் வந்திருக்கு.. அதைப் பார்த்து படிச்சுக்கிட்டு அவளே தெரிஞ்சுகிட்டா.. வாட் இஸ் திஸ் மம்மி? அப்படின்னு அவ வந்து என்கிட்ட மொபைலைக் காட்டிக் கேட்டவுடனே 'பக்'குன்னு தான் இருந்துச்சு.. ஏன்னா இங்கே நடக்கிற ஒவ்வொரு வழக்கும் அதோட தீர்ப்பு விவரத்தோட வெப்சைட்டில் அப்டேட் செய்வாங்கன்னு எனக்குத் தெரியாது.. அச்சோ எப்படி எடுத்துக்குவாளோ அப்படின்னு நான் பதறிப்போய் இருக்க, அவ என்னைக் கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்துட்டு, 'யூ ஆர் ஸோ சோ கிரேட் மம்மி! ஐ அம் பிரவுட் ஆஃப் யூ!' அப்படின்னு சொன்னா.. அப்புறம் நானே அவளுக்குப் புரியிற மாதிரி விஷயங்களை விளக்கினேன்.. ரொம்ப சகஜமா எடுத்துகிட்டா. இப்ப எனக்கு சொந்தத்தில் யாரும் ஆதரவு இல்லைங்குற கவலையே போச்சு.. எனக்குப் பெரிய தூணா வைதேகி இருக்கா" என்று பெருமையுடன் கண்கலங்கக் கூறிவிட்டு ஓலாவில் ஏறியமர்ந்தாள் ப்ரீத்தி. எப்படி கலகலப்பாகக் குழந்தைத் தனத்துடன் இருந்த பெண்.. முகத்தில் இன்னும் குழந்தைத்தனம் மிச்சம் இருக்கிறது. ஆனால் அந்தக் கண்கள் அவள் சந்தித்த வலியையும் நமக்குச் சொல்கின்றன என்று தோன்றியது ஜெயந்திக்கு.
வைதேகி குதித்துக்கொண்டு, "பை ஜெயந்தி ஆன்ட்டி! வில்லேஜ்க்குப் போறோம்.. ஃபோர் டேஸ் கழிச்சு வர்றோம்.." என்று சொல்லி விட்டுப் போனாள். இந்த சிறுமிக்கு தான் எவ்வளவு பொறுப்புணர்வு? எவ்வளவு மனதிடம்? வெளிநாட்டில் வாழும் குழந்தைகளுக்கு இது சகஜமாக வந்துவிடுமோ என்றும் எண்ணினாள். முன்பே ப்ரீத்தி சொல்லி இருந்தாள், வைதேகியின் வகுப்பில் முக்கால்வாசிப் பேர் சிங்கிள் பேரண்ட்ஸ் தான். மீதி கால்வாசி பேரிலும் மறுமணம் செய்து கொண்டவர்கள் நிறைய.. பல குழந்தைகள் வார நாட்களில் தாய் வீட்டிலும் வார இறுதிகளில் தந்தையுடனும் இருப்பவர்கள்தான் என்று. அதனால் இது பெரிதாகத் தோன்றியிருக்காது என்று நினைத்தாள்.
அன்றைய இரவு அவளும் ப்ரீத்தி தேவராஜன் என்று கூகுளில் தட்டிப் பார்க்க இவர்கள் கடந்து வந்த பாதை தெள்ளத்தெளிவாக போடப்பட்டிருந்தது.
ப்ரீத்தி தேவராஜன் வெர்சஸ் ஆனந்த் மணிவாசகம் என்று போட்டு 2014 ஆம் ஆண்டு நடந்த வழக்கின் முழு விபரங்களும் அதில் இருந்தன. ப்ரீத்திக்கு இங்கிலாந்தில் குடியுரிமை இருந்தது, அவள் கணவனுடன் விவாகரத்து என்பதில் தொடங்கி, வைதேகி என்ற பால்குடி மாறாத குழந்தையைத் தவறவிட்டு தேடி இந்தியாவுக்கு வந்தது முதல் எல்லாம் விலாவாரியாக இருந்தன. ப்ரீத்தி இங்கிலாந்து சிட்டிசன் என்பதால் அவளால் இந்தியாவில் வழக்குப் பதிய முடியவில்லை. தன் பேத்தியைக் கண்டுபிடித்துத் தரக் கோரி ப்ரீத்தியின் அம்மா ஆயிஷா பீவி தான் வழக்குத் தொடர்ந்தார். ஆம், அவளது தந்தை தேவராஜன் ஹிந்துவாகப் பிறந்தும் சீர்திருத்த முறையில் அவர் மணமுடித்துக் கொண்டது ஒரு இஸ்லாமியப் பெண்ணை. இரண்டு பேரும் அவரவர் மதத்தை இறுதிவரை பின்பற்றியவர்கள். தன் இரு பிள்ளைகளையும் எந்த மதம் சார்ந்தும் அவர் வளர்க்கவில்லை. அவரவர் வாழ்வு அவரவர் இஷ்டம் என்று விட்டுவிட்டார். இதுபோல் இன்னும் பல முற்போக்குக் கொள்கைகளை உடையவர். அரசியலில் இருந்தார். சிறந்த பேச்சாளரான அவரை கருவேப்பிலை போல் தேவைக்கு மட்டும் கட்சி பயன்படுத்திக் கொண்டது. ஒரு முக்கியமான தருணத்தில் அந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டிய வேட்பாளர் ஒரு வழக்கில் சிறை சென்று விட, இவரை வேட்பாளர் ஆக்கும் சூழல் வந்தது. அப்போது தனக்குத்தான் சீட் வேண்டும் என்று நினைத்த கட்சியின் இன்னொரு பெருந்தலை மணிவாசகம், தேவராஜனிடம் நைச்சியமாகப் பேசி ப்ரீத்தியைத் தன் மகனுக்கு மணம் முடித்து விட்டார். சம்மந்தி ஆகி விட்டால் சீட்டை விட்டுக் கொடுத்து விடுவார் என்று மணிவாசகம் கணித்தது போலவே நடந்தது.
அந்தச் சமயம் ஆனந்த் வெளிநாட்டில் இருந்ததால் தேவராஜனுக்கு அவனைப்பற்றி அதிகம் தெரியவில்லை. ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது போல் எல்லா விஷயங்களிலும் யோசித்து செயல்படுபவர், மகளின் திருமண விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டார். கல்லூரி முடித்துவிட்டு ஒரு கம்பெனியில் பொறியாளராகச் சேர்ந்திருந்த ப்ரீத்தி, பெரிதாக விவரம் தெரிந்திராத வயதில் அப்பா சொன்னதற்கு தலையாட்டி, ஆனந்த்தைத் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டிற்குப் பறந்தாள்.
இருவரது குணத்திற்கும் சுத்தமாக ஒத்துவரவில்லை என்று தெரிந்தும் கஷ்டப்பட்டு மூன்று வருடங்கள் அவனுடன் குடும்பம் நடத்தினாள். சில சமயங்களில் இயல்பானவன் போலவும், பல சமயங்களில் மனநலம் பிறழ்ந்தவன் போலவும் நடந்து கொள்வான் ஆனந்த். ப்ரீத்தி கருவுற்ற செய்தி கேட்ட சில நாட்களில் அவள் அப்பா தேவராஜன் கண்ணை மூட, அவர் மரணத்திற்குக் கூட ப்ரீத்தியால் வரமுடியவில்லை. வைதேகியைப் பிரசவித்த நேரத்தில் பிரச்சனை மிகப் பெரிதாகி, பிரியும் முடிவை எடுத்தாள் ப்ரீத்தி. பிரசவத்துக்காக முன்கூட்டியே வந்திருந்த அவளது அம்மாவும், மகள் பட்ட கஷ்டங்களைப் பார்த்து விட்டு அவளது முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
குழந்தை பிறந்த ஆறாவது மாதம் மணவிலக்குக் கோரினாள். அதுவும் எளிதாகவே கிடைத்தது. நம்நாட்டில் என்றால் தாமதமாகி இருக்கக்கூடும். அப்போது பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்காத ஆனந்த், பிரிந்து சென்ற பின் பலவகைகளில் தொல்லை கொடுத்தான். ஓரிருமுறை தொல்லை தாங்காமல் பிரீத்தி போலீசில் புகார் கொடுத்தாள். ப்ரீத்தியின் தம்பி சென்னையில் அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தான். 'நீ வந்து ஒரு வருஷம் ஆகப்போகுதேம்மா.. தம்பியைப் போய் கவனி.. அவனும் பாவம் தானே" என்று பிரீத்தி கூற, அவனுக்காக ஆயிஷா இந்தியா வந்த நேரம், குழந்தை பறிபோனது.
மருமகள் அயல்நாட்டில் கஷ்டப்பட்ட போதெல்லாம் உதவாத மணிவாசகத்தின் கரங்கள் மகனுக்காக நீண்டன. வழக்குப் போட்ட ஆயிஷாவுக்கு எத்தனையோ இடைஞ்சல்களைக் கொடுத்தார்கள். இந்தியாவில் வழக்கு உச்சத்தில் இருந்த நேரம் ப்ரீத்தியின் தம்பியை ஆனந்தின் ஆட்கள் வசமாக மிரட்ட, அவன் இந்தச் சுழலில் சிக்க பயந்து வடநாட்டில் வேலைக்குச் சென்றுவிட்டான். தேவராஜனின் மறைவு, ப்ரீத்தியின் போராட்டங்கள், இவற்றுடன் மகனின் பாராமுகமும் ஆயிஷாவை மொத்தமாக முடக்கிப் போட்டன.
வழக்கு வெற்றிகரமாக முடிந்தது. ஆனந்த் செய்தது சட்ட விரோதம் என்று தீர்ப்பாகி, குழந்தையை கோர்ட்டில் வைத்தே ப்ரீத்தியிடம் ஒப்படைத்தார்கள். கண்ணீர் மல்கக் குழந்தையை வாங்கிக் கொண்டாள் ப்ரீத்தி. எத்தனையோ அரசியல் அழுத்தங்கள் இருந்தும் ஆனந்தின் செயலுக்கு அழுத்தமான ஒரு கண்டிப்பை உயர்நீதிமன்றம் பதிவு செய்யத் தவறவில்லை. அந்த நாட்களில் செய்தித்தாள்களில் முக்கிய இடத்தை இந்த வழக்குப் பிடித்தது.
ஆளுங்கட்சி எம்எல்ஏவின் குடும்பம் தொடர்பானது என்பதால் மணிவாசகத்தின் பெயர் வெளியே வரவில்லை. சில புலனாய்வுப் பத்திரிகைகள் மட்டும் அவரது பெயரையும் போகிற போக்கில் குறிப்பிட்டன. இந்த வழக்கு விவரங்களை சென்னை உயர்நீதிமன்றம், லண்டன் நீதிமன்றத்திற்கும் அனுப்பியதாக தியாகராஜன் கூறினார். அங்கு ஆனந்த் செய்த ஃபோர்ஜரி, தீர்ப்பை மீறிக் குழந்தையைக் கடத்தியது போன்ற செயல்களுக்காக இன்னமும் வழக்கு நடந்து வருகிறது.
சமீபமாக ஆனந்த் மறுமணம் செய்து கொண்டான் என்று தியாகராஜன் கூறினார். அதன் பின்புதான் அவனுடைய மிரட்டல் உருட்டலைக் கொஞ்சம் குறைத்திருக்கிறான். வழக்கு முடிந்த நேரத்தில் ஆயிஷா தனியே அவரது வீட்டில் இருந்தால் பாதுகாப்பில்லை என்பதை அனைவரும் உணர, ஆயிஷா ஜெயந்தியின் வீட்டு மாடிக்குக் குடிபெயர்ந்தார். ஓரிருமுறை வைதேகிக்காக இங்கிலாந்துக்குச் சென்று வந்தார். ஏற்கனவே அவருக்கு இருந்த ஆஸ்துமா தொந்தரவு அதிகமாகவே அவரால் இங்கிலாந்தில் இருக்க முடியவில்லை. ஜெயந்தியின் வீட்டில் இருந்து அவளது பிள்ளைகள் சாய், சின்ட்ரெல்லா இருவரையும் தன் பிள்ளைகள் போல் இரண்டு ஆண்டுகள் மனதார கவனித்துவிட்டு ஒருநாள் உறக்கத்திலேயே கண் மூடினார். அந்த நாட்களும் ப்ரீத்திக்கும் ஜெயந்தியின் குடும்பத்திற்கும் போராட்டமான நாட்கள்தான். ஆனந்த், 'இனிமே எப்ப இந்தியாவுக்குள்ள வந்தாலும் அவளை வெட்டுவேன்' என்று கூறியிருக்க, பிரீத்தியால் வர முடியாத நிலை. அதனால் இறுதிச் சடங்குகளை தியாகராஜனே பொறுப்பேற்றுச் செய்தார். ப்ரீத்தியின் தம்பி கடைசி நேரத்தில் மட்டும் வந்து கொஞ்ச நேரம் நின்று அஞ்சலி செலுத்தி விட்டுப் போனான்.
மகிழ்ச்சியான சிறு கூடாக இருந்த குடும்பத்தில் ப்ரீத்தி மட்டும் ஒற்றை ஆளாக நிற்க, எப்படியாவது அவளுக்கு மறுமணம் நடந்து, அவள் அனுபவித்த வேதனைகளுக்கெல்லாம் சேர்த்துவைத்து மகிழ்ச்சியை மட்டுமே அவள் பார்க்க வேண்டும் என்று ஜெயந்தியும் தியாகராஜனும் மனதார விரும்பினார்கள்.
'கண்ணின் மணி கண்ணின் மணி
நிஜம் கேளம்மா
கங்கை நதி வைகை நதி பெண்தானம்மா
மலை நதி என்பது கல்லில் முள்ளில் ஓடி வரும்
மங்கை நதி என்பது துன்பம் துயரம் தாண்டி வரும்'