கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தேன் மழையிலே - டீசர்

SudhaSri

Moderator
Staff member
தேன் மழையிலே

ஆர்த்தி ரவி

இனிய வணக்கம்!

எப்படி இருக்கீங்க? இந்தத் தளம் என் கதைக்குப் புதிது. ஆனால், இங்குள்ள பல எழுத்தாளர்களும் வாசகர்களும் நான் அறிந்தவர்களே. உங்களைச் சந்தித்துப் பழக என்னுடைய புதுக்கதையுடன் வந்திருக்கிறேன். வரவேற்று என்னுடன் பயணிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!

கதையின் தலைப்பு : 🎈🎈தேன் மழையிலே 🎈🎈
காதலர் தினம் - நாளை முதல் பதிவு. வாசிக்க ரெடியா? வாசித்துவிட்டு அப்படியே உங்க கருத்துகளையும் ஷேர் பண்ணனும். ஓகே?

Welcome 🙏🏻 on board dear readers! 💐💐💐

அன்புடன்,
ஆர்த்தி ரவி

ஒரு குட்டி டீஸர்:

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!

மார்கழி மாதம், இருள் பிரியாத அதிகாலை நேரம். தேன்மொழியின் இனிய குரல் மெலிதாகப் பாசுரத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தது.

&&&&&&&

‘தேனுன்னா இனிப்புச் செல்லம். என் செல்லம் எப்போதும் ஸ்வீட்டா இருக்கணும். சிரிடி தேன் மிட்டாய். ப்ளீஸ்!’

‘என் தேனுக்கு இந்தச் சிரிப்பு ஆண்டவன் கொடுத்திருக்கும் பெரிய பரிசு. அதை எப்பவும் விட்டுடாத. ம்ம்…’

‘எந்தச் சூழ்நிலையிலும் உன் மனசை விட்டுடாத தேனம்மா. இனி இந்த சூர்யாவின் தைரியமும் உன் கூடவே வரும். வரணும். இதையும் ஞாபகத்தில் வச்சிக்கோ.’

‘சிரிப்பும் தைரியமும் என் செல்லத்தின் சொந்தம். உன் இனிமையை எப்போதும் கைவிட்டுடக் கூடாது. புரிஞ்சுதா?’

காதோரம் அக்குரல் இன்னும் ஒலிப்பதாகவே அவளுக்குப்பட்டது. தோளில் வலிய கரம் ஒன்று அழுத்தம் கொடுப்பதாக உள் உணர்வு சொன்னது!

&&&&&&&

“ஸ்ஸ் ப்பா என்ன இந்த வருசம் இப்படிக் குளிருது…” சொன்னபடி கைகள் இரண்டையும் தேய்த்துவிட்டுக் கொண்டார்.

அவருடைய குரலைக் கேட்டுச் சமையலறையிலிருந்து வெளியே வந்தார் வனிதா. வெற்றிமாறனின் மனைவி.

“ஆமா நம்ம இருக்கிறது ஊட்டி பாருங்க. அப்படித்தான் குளிரடிக்கும்!”

நக்கலாகச் சொன்ன மனைவியை முறைத்துப் பார்த்தார்.

“பின்ன என்னங்க… சென்னைல குளிருதுன்னு சொன்னா சிரிப்பால்ல இருக்கு.”

&&&&&&&

வெற்றிமாறன் மகளிடம் சொல்லிக்கொண்டு நடைபயிற்சிக்குச் செல்ல, அவள் நின்று நிதானமாக அக்கோலத்தை உள்வாங்கினாள்.

அப்போது, ‘சூப்பரா இருக்குடி! இந்தக் கோலம் போட்ட விரல் ஒவ்வொன்னுக்கும் பரிசு கொடுக்கணுமே. இப்படி ஓரமா வாயேன்.’ என்று அவளை இழுத்துச் சென்ற சூர்யாவின் நினைவுகள் அவளுக்குள் பேரலையாக எழுந்து ஆட்டம் போட்டன.

இன்னுமே அந்த இளம் விரல்களில் சூர்யா தந்த முத்தங்களின் ஈரம்!

சில நிமிடங்களில் அமைதியடைந்தவளின் காதோரம் கரகரத்தது அவனின் குரல்.

‘சந்தோஷம் தேனு. இப்படி உன்னைப் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு.’

&&&&&&&

ஹெல்மெட்டை கழற்றியவனின் உதடுகளில் இளம் புன்னகை வந்திருந்தது. அவனின் அடர்ந்த கேசத்தை விரல்களைக் கொண்டு கோதி சரி செய்தவன் தன் உடைமைகளுடன் அந்த அதி நவீன மருத்துவமனையை நோக்கி நடந்தான்.

வேக எட்டுக்களுக்கு அவசியமின்றி நெடு நெடுவென வளர்ந்திருந்தவனின் நடையே துரிதமாகத் தான் இருந்தது.

இதோ, இப்போதும் மூன்றாம் தளத்தில் சிறப்பாக அமைந்திருக்கும் மருத்துவர்களுக்கான பிரத்தியேக வாகன நிறுத்தத்திலிருந்து அந்தத் தனிப்பட்ட நுழைவு வாயிலை நிமிடத்தில் எட்டியிருந்தான்.

கீ கார்டை உபயோகித்து உள்ளே சென்றவன், தன் வருகையைப் பதிவு செய்யும் பொருட்டு அதற்குரிய மருத்துவமனை கணினியை நாடினான்.

‘சேவா ஹாஸ்பிடல்’ என அழைக்கப்படும் அந்தப் பல்நோக்கு மருத்துவமனையில் அனைத்துமே நவீனம். மருத்துவமனை மிகவும் நவீனமயமாக்கப்பட்டிருந்தாலும், செயல்பாடுகள் யாவும் மிக எளிமையாய் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தன.

ஹரி கிருஷ்ணன் அங்குப் பணியாற்றும் குழந்தைகள் இருதய சிகிச்சை நிபுணர் (Pediatric cardiologist).

காலை வணக்கம், புன்னகை, தலையசைப்பு எனப் பணி செய்யப் போய்க் கொண்டிருந்தவனைத் தடுப்பது போல வந்தது பெண் புயலொன்று. திடீரெனப் பாதை வளைவில் வந்து ஹரியின் மீது மோதி நின்றாள் திலோத்தமா குமார்.

ஒரு நொடி தடுமாறிய ஹரி, பின் உடனே விலகி நின்றான்.

“டாக்டர் குமார்! கவனத்தை இங்கே வச்சு நடங்க.”

குரலை உயர்த்தாமல் கடிந்தான்.

“சாரி ஹரி! அவசரமாக வந்ததுல கவனிக்கலை. உங்களைப் பார்க்காமல் வந்து இடிச்சிட்டேன். பை தி வே, கால் மீ திலோ.”

&&&&&&&
 
Top