Hi all,
Thank you for your likes and comments! Keep reading & share your thoughts with me.
Anbudan…
தேன் மழையிலே
ஆர்த்தி ரவி
அத்தியாயம் 10:
மஹா கணபதிம்
மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி
மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி
மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி
மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி
வசிஷ்ட வாம தேவாதி வந்தித
மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி
வசிஷ்ட வாம தேவாதி வந்தித
மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி…
ஹரியின் அபார்ட்மெண்ட் முழுவதும் மெல்லிய ஒலியில் இனிமையான குரலில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. சென்டரலைஸ்ட் ஸ்பீக்கர் சிஸ்டத்தில் பாடலை ஒலிக்கவிட்டு ஹரி தன் காலை வேலைகளில் ஈடுபட்டிருந்தான்.
இரண்டு நாட்களாகப் பணி நிமித்தம் இரவும் பகலும் மருத்துவமனையிலேயே அவனுக்கு நேரம் கழிந்திருந்தது. முந்தைய நாள் மதியத்துக்கு மேல் வீட்டிற்கு வந்தவன், மாலையிலேயே உறங்கியிருந்தான்.
அவ்வளவு நல்ல உறக்கம்… நீண்ட நாட்களுக்குப் பின்னான நிம்மதியான உறக்கம் என்றும் கூட அதனைச் சொல்லலாம்.
சீக்கிரம் உறங்கியதால் அதிகாலையிலேயே விழித்துவிட்டான். காலைக் கடன்கள் முடிந்ததும், அந்நேரத்திலேயே தன் வொர்க் அவுட்டை முடித்துவிட்டும் வந்திருந்தான்.
வந்ததும் சில நிமிடங்கள் டிம்பிளை வெளியே இட்டுச் சென்று வந்தான். அப்படியே குளித்து முடித்து, பசிக்கவும் பிரேக் ஃபாஸ்ட் செய்தான்.
ஆடம்பரமாக எதுவுமில்லை. இரண்டு கோதுமை பிரெட் டோஸ்ட். ஒன்றில் வெண்ணெய்யைப் பரப்பிக் கொண்டான். மற்றொன்றில் ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி ஸ்பிரெட்டை பரப்பினான்.
ஒரு வெள்ளரிக்காயைத் துண்டுகளாக்கிக் கொண்டான். ஓர் ஆரஞ்சு பழத்தைத் தோலுடனே ஆறாக வெட்டி வைத்தான். ஒரு பதினாறு அவுன்ஸ் கண்ணாடி கிளாஸ் நிறையக் குளிர்ந்த பாலை ஊற்றி எடுத்துக் கொண்டு சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து உண்டான்.
தன் உணவு தயாரிப்புக்கும் சாப்பாட்டுக்கும் ஊடே இசையைச் செவிக்குக் கொடுத்திருந்தான்.
பாடல்களின் இனிமை மனதைக் கவர்ந்தாலும் அதை உள்வாங்கி இரசிக்கும் மனநிலையில் அவனில்லை. ஒரு விதமான பரபரப்பில் இருந்தான்.
சாப்பிட்டு முடித்ததும் ஒரு ப்ளாக் காஃபி வித் கருப்பட்டியுடன் உட்கார்ந்தான். மடியில் கணினி. அவனருகே டிம்பிள்.
டிம்பிள் தன்னுடைய சின்ன மெத்தை விரிப்பில் சுகமாகப் புரண்டு புரண்டு, ‘அங்க்…’ என்கிற முனங்கலுடன் விட்டத் தூக்கத்தைத் தொடர முயன்று கொண்டிருந்தது.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் கிடைத்திருக்கும் ஹரியுடனான நேரத்தையும் அனுபவிக்க வேண்டும். தூக்கமும் வேண்டும். கண்ணை மூடினால் எங்கே அவன் ‘எஸ்’ ஆகிடுவானோ என்று பயந்து வேறு வந்தது போல்!
டிம்பிளின் அமைதியற்ற தன்மையைக் கண்ணுற்ற ஹரி, “உஷ்… தூங்குடீ! நான் எங்கேயும் போகலை. இன்னைக்கு ஃபுல்லா உன் கூடவே இருக்கப் போறேன். ராகவி கிட்ட உன்னைக் கோர்த்துவிட்டுட மாட்டேன். போதுமா?”
பொறுமையுடன் பேசி முதுகை வருடிக் கொடுத்தான்.
ஹரியின் பாசமழையில் குளிர்ந்து கொண்டு சுகமாகக் கண்களை மூடியபடி படுத்திருந்த டிம்பிள், அந்த ராகவி பெயரைக் கேட்டதும், படக்கென்று கண்களை விரித்து, காதுகளை அசைத்து உடனே அலெர்ட் மோடுக்கு போனது!
டிம்பிளின் செய்கைகளைக் கவனித்த ஹரி சத்தமாகச் சிரித்துவிட்டான்.
“முறைக்காதேடி! இப்ப ராகவி இங்க வரலை. சும்மா புரளாம அமைதியா படு. ஆமா டிம்பிள், உனக்கு அவங்களை ஏன் பிடிக்க மாட்டேங்குது?”
“வ்வொஃப் வ்வொஃப்…”
“சரி விடு! ஏனோ உனக்குப் பிடிக்கலை. எனக்கும் இதுவரைக்கும் வேற ஆப்ஷன் இல்லியே டிம்பிள் செல்லம். நம்ம குமரன் வரலைன்னா ராகவிட்ட தானே உன்னைப் பார்த்துக்கச் சொல்ல முடியும்? வீட்டுக்குப் பக்கத்திலே, அதுவும் நம்ம ஃப்ளோரிலேயே இப்படியொரு அருமையான பெட் சிட்டர் கிடைச்சது நம்ம நல்ல நேரம் பேபி!”
“வ்வூஃப் வ்வூஃப்…” விடாமல் குலைத்துச் சண்டைக்கு நின்றது டிம்பிள்.
“என்னடீ கோவம்? ராகவி அருமையான சிட்டர் இல்லைன்னு சொல்லுறேயா? இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ! உனக்கும் எனக்கும் ஒரு புது சிட்டர் கிடைச்சிடுவாங்க.”
மென்மையாகப் பேசி, இதமாகப் புன்னகைத்தான். அப்படியே குனிந்து டிம்பிளின் கன்னத்துடன் கன்னம் வைத்து, முகத்தை உரசிக் கொஞ்சினான்.
‘தேன்மொழி உங்க ரெண்டு பேருக்கும் சிட்டரா? இது டூ மச் இல்லை டூ டூ மச்! நீ ரொம்ப ஓவரா போயிட்டிருக்க ஹரி!’
அவனுக்கே சொல்லிக் கொண்டான் ஹரி. நேற்று மாலை தான் இறுதியான முடிவு எடுத்திருந்தான். உடனே மேட்ரிமோனியல் இணைய வழியில் தேன்மொழி ப்ரொஃபைலுடன் தொடர்பையும் ஏற்படுத்தி இருந்தான்.
அதன் பிறகே அவனுக்கு அத்தனை நிம்மதி! நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஹரியால் நன்றாகத் தூங்க முடிந்தது!
எழுந்ததுமே அந்தப் பக்கமிருந்து பதில் வந்திருக்கிறதா என்று பார்த்தான். வரவில்லை. உள்ளுக்குள்ளே ஒரு பதற்றம் வந்து ஒட்டிக் கொண்டது.
அன்று பாட்டி சொன்னது போல் தேன்மொழிக்கு வேறு அலையன்ஸ் முடிவாகிவிட்டதா? நெஞ்சில் ஒரு விதமான உணர்வு ஆட் கொண்டது. அப்படி இருக்காது! இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டான்.
அதுவும் அடுத்த வினாடியில் சுயநலமாகப்பட்டது.
“அப்படி வேறு மாப்பிள்ளைக்கு முடிவாகி இருந்தால், என்ன செய்ய முடியும்? அவங்க எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்! சந்தோஷமான வாழ்க்கை வாழட்டும்னு வேண்டிக்கப் போறேன்.”
‘எங்கிருந்தாலும் நீ வாழ்கன்னு பாடப் போறியா ஹரி?’ எனக் கேட்டு அவன் மனசாட்சி சிரிக்க,
“எனக்குத் தேன்மொழி தான் லைஃப் பார்ட்னரா வரணும்னு ஒரு அமைப்பு இருந்தால் கண்டிப்பா நடக்கும். ஐ’ம் பாஸிடிவ்!” என்று நேர்மறையாகவே சொல்லிக் கொண்டான்.
அன்றும் அவன் பாட்டியிடம் அப்படித்தான் சொல்லியிருந்தான்.
நான்கைந்து நாட்களுக்கு முன்னர்… கடந்த ஞாயிறன்றே ஹரி அவனுக்குத் தேன்மொழியைப் பார்க்க அம்மாவை ஒப்புதல் தர வைத்திருந்தான்.
பானுமதிக்கு அப்போதும் மனசே இல்லை தான்.
முழு மனதாக அவர் சம்மதம் சொல்லவில்லை என்பதை அவருடைய பேச்சிலும் நடவடிக்கைகளிலும் ஹரிக்கு உணர்த்திவிட, அவன் முகமே அப்போது விழுந்துவிட்டது.
தனக்காக முதன் முதலில் தன் பெற்றோரிடம் ஒன்றை விரும்பிக் கேட்க, அதை நிறைவேற்றித் தருவதற்கு அவர்களுக்கு மனமில்லை என்பதை அவனால் ஜீரணிக்க முடியாமல் தவித்தான்.
“இந்த வாரம் நான் கடலூருக்கு வந்ததே எனக்கு நீங்க என்ன முடிவு சொல்லப் போறீங்கன்னு தெரிஞ்சிட்டுப் போகணும்னு தான்! இப்படி வகை வகையா உங்க சமையலைச் சாப்பிட வேலை மெனக்கெட்டுக் கிளம்பி வந்தேன்னு நினைச்சீங்களாம்மா?
இந்தச் சொஜ்ஜி அப்பத்தை உள்ளே கொண்டு போங்க. உங்க டீயாவது ஒன்னாவது… எனக்கு எதுவும் வேண்டாம்! போங்க!”
ஹரி தன் அம்மா எதுவும் சொல்லாமல் தன்னைக் கவனிப்பதை மட்டும் கடமையாக நினைத்து வளைய வருவதைக் கண்டு ரொம்பே கடுப்பாகி இருந்தான்.
அந்தக் கடுப்பில் சற்றுக் கோபமாக அவன் அம்மாவிடம் பேசிவிட, கோபாலகிருஷ்ணனும் சிவசங்கரியும் அங்குப் பார்வையாளராகி இருந்தனர். அம்மா மகனுக்கு இடையே அவர்கள் வரவில்லை.
“காலைல பூரியை நண்டு மசால் வச்சி சாப்பிட்டானே, அப்ப இங்க எதுக்கு வந்தான்னு ஞாபகம் இல்லையாமா? மத்தியானம் அந்த மீன் வறுவல் கூட மறதியில் வயித்துக்குள்ள போச்சுப் போல.”
பானுமதி கணவரிடம் சுட்டிக்காட்டி மகனை ஜாடை பேசினார்… நக்கலாக வேறு சிரித்து வைக்க, ஹரி மேலும் தன் பொறுமையை இழந்தான்.
“அம்மாஆ! நான் நேரா உங்க கிட்ட தானே பேசிட்டிருக்கேன். நீங்க என் கிட்ட பதிலுக்குப் பேசுங்க. வேற யாருகிட்டேயோ பேசுற மாதிரி இதென்ன டிராமா?”
தன் தாயைக் கண்டனத்துடன் கூர்மையாகப் பார்த்தபடி ஹரி அவர் எதிரே உட்கார்ந்திருந்தான்.
மாலையாகி விட்டது. இன்னும் சற்று நேரத்தில் அவன் சென்னைக்குத் திரும்ப வேண்டும். இதை அறிந்து இருந்தும் பானுமதி அவனையோ அவன் நேரத்தையோ மதிக்காததைப் போல நடந்து கொண்டார்.
கல்யாண விசயம் பற்றி எந்தப் பதிலையும் அந்நேரம் வரைக்கும் தராமல், அவனிடம் சாதாரணமாகக் கூடப் பேசவும் செய்யாமல் இருந்தால்? கடுப்பும் கோபமும் வராதா?
தன் பொறுமையை இழந்த ஹரி கிருஷ்ணனுக்கு மிகவும் ஆயாசமாக வந்தது!
‘கூல் கூல்’ என்று சொல்லிக்கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவன் சற்று நேரம் காற்றாட வெளி வாசலில் நின்று விட்டு வந்தான்.
மற்ற மூவரும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். யாரும் தேநீரை அருந்தவில்லை. அது அப்படியே அந்தக் குவளைகளிலே ஏடு கட்டி ஆறி அவலாகிப் போயிருந்தது.
சிவசங்கரி அந்த வீட்டின் மூத்தவராய் ஹரியின் திருமண விசயத்தை அணுக முடியும். பேரனுக்கு ஆதரவாக அவரால் பேசவும் முடியும். அவர் வாயும் துறு துறுவென்று தானிருந்தது. ஆனாலும் அதனை அப்படியே அடக்கிக் கொண்டார்.
இரண்டு விசயங்கள் அவரைப் பேச விடாமல் தடுத்தன. ஒன்று ஹரி அவரைத் தனக்காகத் தன் பெற்றோரிடம் பேசுமாறு சொல்லவில்லை. இரண்டு மருமகளே ஆனாலும், தன்னுடைய பேரன் தான் என்றாலும், தாய் மகனுக்கு இடையில் தான் மூன்றாம் நபர் எனும் நிதர்சனம் அவரை நிதானிக்க வைத்தது.
எவ்வளவு தூரம் தான் மருமகள் இழுத்துக் கொண்டு போவாள்? பேரன் என்ன செய்யப் போகிறான்? பார்க்கலாம் என்றிருந்தார்.
பேரனுக்கு முடியாத பட்சத்தில் தன் ஆதரவைக் காட்டி அவனுடைய கல்யாணத்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்து கண்டிப்பாக முடித்து வைக்கக் காத்திருந்தார்.
மௌனக் கூரையின் கீழ் நின்று கொண்டிருந்த பெற்றோர் இருவரையும் பிடித்து வெளியே இழுத்து அமர வைத்து, அவர்களின் காலடியில் ஹரியும் அமர்ந்து கொண்டான்.
“என்னம்மா பிரச்சனை உங்களுக்கு? ப்ளீஸ் ம்மா ஓகே சொல்லுங்க… நீங்க ஏம்ப்பா இப்படி ஆகிட்டீங்க? எனக்காகப் பேசக் கூடாதா?”
பாவம் போல முகத்தை வைத்து… சின்னக் குழந்தை போல் கெஞ்சிக் கொண்டிருந்த வளர்ந்த மகனைப் பார்த்து, அவனைப் பெற்றவர்களின் மனம் நெகிழ்ந்தது.
“எந்திரிப்பா ஹரி. இப்படி வந்து உட்காரு!” கோபாலகிருஷ்ணன் மகனை அழைத்து, தன்னருகே அமரும்படி சுட்டிக் காட்டினார்.
“இருக்கட்டும் பா.” அவன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான் உனக்கும் சப்போர்ட் பண்ணலை. உங்கம்மாவுக்கும் சப்போர்ட் பண்ணலை. நீயே இவளை கன்வின்ஸ் பண்ணு. எனக்கு எந்த விதமான தடையுமில்லை. ஆனால், நாளைக்கு அந்தப் பொண்ணை உங்கம்மா சரியா கவனிக்கலை, பேசலை கொள்ளலைன்னு நீ வந்து வருத்தப்படக் கூடாது!
உன் மனைவிக்கும் உங்க அம்மாவுக்கும் இடையிலே நல்ல உறவு இருக்கணும்னு நீ ஆசைப்பட்டா, தென் தேன்மொழி இஸ் நாட் மை பெஸ்ட் சாய்ஸ் ஹரி!”
“அப்பாஆ!” கோபாலகிருஷ்ணனின் கடைசி வாக்கியத்தைக் கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டான் ஹரி.
“எனக்குத் தேன்மொழியை ரொம்ப பிடிச்சிருக்குப்பா. நான் வேற ஆப்ஷன் வச்சிக்கலை. ப்ளீஸ் ம்மா லெட் மீ ப்ரொஸீட் வித் திஸ் அலையன்ஸ்!”
ஏன் அப்பா அம்மா இருவருக்குமே ஒரே மாதிரியான எண்ணப்போக்கு? தேன்மொழி இவர்களின் பெஸ்ட் சாய்ஸ் இல்லையாமே?
இதயம் விண் விண்ணென்று வலித்தது போல்! அந்த இதய நிபுணன் தன் இடது மார்பு பக்கம் தடவிக் கொண்டான்.
மகனைப் பார்த்த பானுமதிக்கு, அவனை அப்படிக் கண்டது சகிக்கவில்லையோ… இல்லை அவனுடைய வாழ்க்கை அவன் இஷ்டம் என்று விட்டுத் தான் ஒதுங்கிவிட எண்ணினாரோ!
அப்போது தான் வாயைத் திறந்து பதில் சொன்னார்.
“என்னங்க… அவன்கிட்ட சொல்லுங்க. இந்தப் பொண்ணை எப்படி அவனே பார்த்தானோ, அதே மாதிரி மற்ற விசயங்களையும் அவனையே பார்த்துப் பேசிக்கச் சொல்லுங்க.
சம்பிரதாயங்களுக்கு நான் வந்து கண்டிப்பா நிக்கிறேன். சபையிலே மகனை விட்டுக் கொடுக்க மாட்டேன். ஆனால், வேலைகளை இழுத்துப் போட்டுக்கிட்டு, நானே முன்னெடுத்துச் செய்யணும்னா என்னாலே முடியாது!
என்ன… என்னை எதுக்கும் எதிர்பார்க்காம அவனே எல்லா ஏற்பாட்டையும் கவனிச்சிப்பானா? கேட்டுச் சொல்லுங்க. இதுக்கு அவன் ரெடின்னா, அந்த தேன்மொழி பொண்ணு நம்ம வீட்டு மருமகளா வர நான் சம்மதிக்கிறேன்.”
உறுதியாகச் சொன்ன பானுமதியை ஹரி இமைக்காமல் பார்த்தான். உள்ளுக்குள்ளே அவன் உள்ளம் நொறுங்கிப் போனது!
‘இது என் அம்மாவின் இயல்பா? ஏன் இந்த அடம்?’
ஹரிக்குப் புரியாமலில்லை. அம்மாவின் மனதின் விருப்பம் என்னவென்று. வாழப் போவது அவன் தானே? அவன் விருப்பத்தை ஆதரிக்காமல் எதற்கு இவ்வளவு ஒரு பிடிவாதம், கெடுபிடி?
தேன்மொழியை வித்தியாசமாக ஹரி எண்ணவில்லை. அவளும் ஒரு பெண். எல்லோரையும் போல் சராசரியான ஒரு குடும்ப வாழ்க்கையில் அவள் ஏன் நுழைய கூடாது? அவளுக்கேன் தனி முத்திரையைக் குத்தி வேறு வகையில் காண வேண்டும்?
அவளும் அன்பு செலுத்தப்பட வேண்டியவள் தானே? அவள் குற்றமென ஏதும் இல்லையே? நல்ல குடும்பத்துப் பெண். நல்ல படிப்புப் படித்தவள். நல்ல வேலையிலும் இருக்கிறாள். கூடவே சொல்லிக் கொள்ளும் படியான நிறையத் தகுதிகளைக் கொண்டிருக்கிறாள்.
திருமணப் பொதுச்சந்தையில் தன்னைப் போல் அவளுக்கு ஏன் இடமில்லை?
ஹரிக்கு மனதின் பொருமலைக் கொட்டிவிட்டால் நன்றாக இருக்கும் தான். ஆனால், அவன் அதைச் செய்யவில்லை. ஒரு பெரிய விவாதத்துடன் இந்தச் சம்மத்தத்தைப் பெற்று நல்ல காரியத்தைத் தொடங்க வேண்டுமா?
ஏற்கெனவே அம்மா தான் இப்போதே தேன்மொழிக்காகப் பேசுவதாக எண்ணிக் கொண்டிருக்கிறார். இன்னும் தான் ஏதாவது பேசப் போக, அவருக்கு அவள் மேல் தான் வெறுப்பு அதிகரிக்கும் என நினைத்து வாளாதிருந்தான்.
மேலும், இச்சமுதாயத்திலுள்ள பலரின் எண்ணப்போக்கு இப்படித்தானே இருக்கிறது? ஓர் ஆண் மறுமணம் செய்யும் போது இவ்வளவு பேச்சுக்கள் கிளம்புவதில்லையே!
பெண்ணுக்கு என்று வரும் போது ஒரு தனி மனப்பான்மையுடன் தான் பலர் செயல்படுகின்றனர்.
இதில் எத்தனை பேருக்கு எடுத்துச் சொல்வது? பெருநோக்குச் சிந்தனையற்ற சமுதாயம்!
அம்மாவும் இப்பலரைப் போலிருப்பது வேதனையே! என்றாலும் அவனுடைய வாழ்க்கையால் அவரின் எண்ணப்போக்கை மாற்ற முடியும் எனத் தோன்றியது.
ஒரு மாற்றம் உருவாக ஒவ்வொரு நபரும் சிந்தனை செய்து செயல்பட வேண்டும். ஒரு ஊரையோ நாட்டையோ ஒரு நபரால் திருத்துவது சுலபமல்ல!
ஆனால், ஒருவன் தன் வீட்டைத் திருத்தலாம். தன் வீட்டின் மூலம் சொந்தபந்தங்களுக்கும் மாற்றத்தை விதைக்கலாம்.
தன் வாழ்க்கை கண்டிப்பாகத் தன் சொந்தங்களுள் பேசும் பொருள் ஆகும்… ஆகட்டும்… அப்படிப் பேசுபவர்களே பிற்காலத்தில் இத்தகைய பேச்சுக்கள் அபத்தம் என்று சொல்ல வேண்டும் என்று ஹரி நினைத்தான்.
அத்தனை கோபம் அவனுக்குள்!
மருமகள் பேசப் பேச மனம் சுணங்கிப் போய்ப் பேரனின் முகமும் சுண்டிவிட, பார்த்துக் கொண்டிருந்த சிவசங்கரிக்கு மனம் தாளவில்லை. மருமகளை முறைத்தவர்,
“இது தான் நீ பெத்த ஒத்த ரத்தினத்துக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற பவிசா? நல்லாச் சம்மதம் சொன்ன போ.” வெடுக்கென்று கேட்டார்.
“அத்தே…” பானுமதி ஏதோ சொல்ல வர, மருமகளைப் பேச விடாமல் சிவசங்கரி பிடித்துக் கொண்டார்.
“என்ன லொத்தே? நானும் இருபது நாளா பார்த்திட்டுத் தானே இருக்கேன்? என் பேரனை இப்படிப் புருசனும் பொண்டாட்டியும் சேர்த்து இன்னும் எத்தனை அலைக்கழிப்பீங்க?”
மகனையும் மருமகளுடன் சேர்த்துப் பிடித்து வாங்கினார்.
“என்னம்மா நீங்க… ஒரு கல்யாணம் பண்ணுறது அவ்வளவு ஈஸியான விசயமா? நாலும் யோசிச்சு, நமக்கு எது ஒத்து வரும்… நம்ம குடும்பத்துக்குச் சரியா இருக்குமான்னு நாம பார்க்க வேண்டாமா?”
கோபாலகிருஷ்ணன் அம்மாவிடம் பதில் பேச,
“நல்லா யோசிச்சீங்க ரெண்டு பேரும். அப்பூ, உன் அப்பாவும் அம்மாவும் இந்த டிலே பண்ணினால், உன் ஹனியை அவள் அப்பா அம்மா வேற ஒருத்தன் கையிலே பிடிச்சுக் கொடுக்கப் போறாங்க. இந்நேரம் அந்தப் பொண்ணை வேற யாரும் சம்பந்தம் பேசி கூட முடிச்சிருக்க வாய்ப்பிருக்கப்பூ!”
சிரித்துக் கொண்டே சிவசங்கரி ஒரு பெரிய குண்டைப் போட்டார்.
“பாட்டீ! நீங்க வேற… ஏன் என்னை டென்ஷன் ஆகிட்டு இருக்கீங்க. அப்படி அவங்களுக்கு வேற இடம் முடிவாகி இருந்தால் இன்னும் எதுக்கு சைட்ல ப்ரொஃபைலை வச்சிருக்காங்க?
அப்படி இருக்காது பாட்டி. மே பீ வேற யாரும் கேட்டு எதுவும் ஒத்து வராமல் போயிருக்க வாய்ப்பிருக்கு!
எனக்குன்னு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகாது பாட்டி! உங்க பாடலீசுவரர் எனக்குத் துணையா இருந்து என் ஆசையை நிறைவேற்றி வைப்பார்.
யாரு என்ன நினைச்சு டிலே பண்ணினாலும், தேன்மொழி தான் எனக்கு மனைவியா வரணும்னு இருந்தால் அது கண்டிப்பா நடக்கும்!”
அம்மாவைத் தீர்க்கமாகப் பார்த்தபடி தீவிரமான குரலில் ஹரி சொன்னான்.
“ஒன்னே ஒன்னுன்னு ஒத்த முத்தா பெத்து வச்சிருக்கேன். யோசிக்க வேண்டாம்மாத்த? அவன் சாதாரணமா ஒரு பொண்ணை விரும்பறேன்னு வந்து நின்னா அது வேற கதை. ஆனா, ஒரு வித…”
“அம்மாஆ! இனி தேன்மொழியை அப்படி நீங்க சொல்லக் கூடாது! நீங்க சம்மதம் சொல்லிட்டீங்கல்ல, போதும் விடுங்க. இனி நான் பார்த்துக்கிறேன்.”
அம்மாவிடம் சொல்லிவிட்டு அப்பாவிடமும், “நீங்களும் இந்தப் பொண்ணைப் பார்த்துப் பேசி முடிக்கச் சம்மதிக்கிறீங்களாப்பா?” முடிவெடுக்கும் நிலையில் நின்ற ஹரி தீர்மானமாகக் கேட்டான்.
“எனக்கு ஓகே ஹரி.”
கோபாலகிருஷ்ணன் மகனுக்குப் பதில் சொல்ல, பானுமதி உம்மென்று உட்கார்ந்து இருந்தார்.
“அப்பாஆ! என்ன ஓகே? இப்படித்தான் நீங்க பேசுவீங்களா? என் வாழ்க்கைக்கு இது ரொம்ப முக்கியமான ஸ்டெப் ப்பா. நல்ல வார்த்தையிலே முழு மனசா சம்மதம் சொல்லுங்கப்பா. அம்மா நீங்களும் என் கிட்ட நேரிடையா ‘சம்மதம்’னு சொல்லுங்கம்மா!”
“சரிடா ஹரி. நீ பொண்ணு வீட்டுக்கு காண்டேக்ட் பண்ணு. எனக்குச் சம்மதம் தான்.”
அளவான புன்னகையைத் தேக்கி மகனின் தோளை அணைத்துத் தன் சம்மதத்தை கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பானுமதி வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை. அவருடைய கண்கள் கலங்கின. மகனின் கன்னத்தில் தட்டிவிட்டுத் தங்கள் படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டார்.
தாயின் பின்னோடு செல்ல எத்தனித்த மகனைக் கோபாலகிருஷ்ணன் தடுத்துவிட்டார்.
“நீ கிளம்புப்பா. இருட்டிடுச்சி. காரை பார்த்து ஓட்டிட்டுப் போ. உன் வீட்டுக்குப் போயி சேர்ந்ததும் ரீச் ஆகிட்டேன்னு மெசேஜ் பண்ணு. பாட்டிட்ட எதாவது பேக் பண்ணச் சொல்லி எடுத்திட்டுப் போ. குமரன் வயநாடு போயிருக்கான்னு சொன்னியே!
அம்மா, உங்க பேரனுக்குச் சாப்பாடு கட்டிக் கொடுத்தனுப்புங்க. ஹரி, பொண்ணு வீட்ல என்ன ரெஸ்பான்ஸ் வருதுன்னு ஃபோன்ல சொல்லு. மேற்கொண்டு என்ன செய்யணும்னு பேசிக்கலாம்.”
“சரிப்பா.” அப்பாவிடம் தலையசைப்புடன் விடைபெற்றவன், “தேங்க் யூ பாட்டி!” சிவசங்கரியை அணைத்து அவருடைய கன்னங்களில் முத்தங்களைப் பதித்தான்.
பேரனை உச்சி முகர்ந்து, முத்தம் ஒன்றைப் பதித்தவர், “என் பேத்திக்கு டன் கணக்குலே தேவைப்படும் அப்பூ. முத்தத்தை நீ இப்படித் தாரை வார்த்தால், அவளுக்குப் பத்தாமல் போகப் போகுது!” என்று கேலியாகப் பேரனை எச்சரித்தார்.
“அந்த நேரத்திலே வேணுங்கிற அளவு முத்த உற்பத்தியை அதிகரிச்சிக்குவேன் பாட்டி. யூ டோண்ட் வொரி!” என்று குறுப்பாகச் சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டு சென்னைக்குத் திரும்பி இருந்தான் ஹரி கிருஷ்ணன்.
பெற்றோர் ஓகே சொல்லிவிட்டாலும், ஹரி தேன்மொழி வீட்டினரை உடனே தொடர்பு கொள்ளவில்லை. சற்று நிதானித்தான்.
மனதில் மகிழ்ச்சிப் பூக்கள் பூத்து விரிந்திருந்தாலும், பானுமதியின் மனம் நிலையாக இருக்குமா? அவருடைய மனம் மாறிவிட்டால்?
அந்த யோசனை வந்ததும் பொறுமை காத்தான். அப்பாவிடம் இதனைப் பகிர்ந்து கொண்டு, “இன்னும் ரெண்டு மூணு நாள் வெயிட் பண்றேன் ப்பா. அம்மா என்ன நினைப்புல இருக்காங்கன்னு கன்ஃபர்ம் பண்ணுங்க. அப்புறம் நான் பார்த்துக்கறேன்.”
அதன்படி முன் தினம் அப்பா உறுதி செய்ததும், இவன் தேன்மொழி வீட்டினரைத் தொடர்பு கொண்டிருந்தான்.
அதே மாலை நேரத்திலே தேன்மொழி வீட்டில்…
“என்னங்க இது? தேவானந்த்ட்ட போயி மாப்பிள்ளை வீட்ல இப்படிச் சொல்லியிருக்காங்க! எனக்கு நேத்து நைட்ல இருந்து மனசே ஆறலைங்க. படபடன்னு வேற வருது!
சம்பந்தி வேற லண்டன்லே இருந்து மதியம் கூப்பிட்டு, எப்ப மாப்பிள்ளை சிங்கப்பூருக்குப் போறாருன்னு கேட்டாங்க. என்னன்னு பதில் சொல்லன்னு ஒரு நிமிசம் திண்டாடிப் போயிட்டேன். லஞ் பிரேக்ல இருந்ததாலே சமாளிச்சிட்டேன்.
விசயத்தைச் சொன்னதும் அவங்க ரெண்டு பேருமே வருத்தப்பட்டாங்க. உஷா அவங்களுக்குக் கண் கலங்கிப் போச்சு. அவங்க குணவதி! அவங்களைப் போல இனி நம்ம எங்க போயித் தேடிச் சம்பந்தம் பண்ணப் போறோம்?
தேனுக்கு அவங்க வீட்ல வாழக் கொடுப்பினை இல்லாம போச்சே!”
கர கரத்தக் குரலில் தழு தழுப்பாக வனிதா பேசிக் கொண்டிருக்க, மனைவியின் வருத்தம் வெற்றிமாறனையும் தாக்கியது. ஆனால், அதை வெளியே காட்டாமல், மனைவியிடம் சிடு சிடுத்தார்.
“சும்மா இதையே சொல்லிட்டிருப்பியா வனிதா? போனதை விடு. இனி அடுத்து என்னன்னு பார்க்கலாம். வந்திருந்த மூணு பேருல, இந்தப் பையன் அமரன் தான் நம்ம தேன்மொழிக்கு நல்ல மாட்சா தெரிஞ்சான்.
அந்த விடோயர் பையன் நல்ல மாதிரின்னாலும் ஜாதகம் பொருந்தாம போச்சு. இன்னும் ஒன்னு நாமளே வேண்டாம்னு சொல்லிட்டோம்.
ஒரு வாரமா நானும் மேட்ரிமோனியல் சைட்ல லாகின் பண்ணலை. இப்போ லாகின் பண்றேன். வேற யாராவது கேட்டிருக்காங்களான்னு பார்க்கிறேன்.
அந்த ஈமெயில் நோட்டிஃபிகேஷனை கூடச் சரியா கவனிக்காம விட்டுட்டேன். இந்த அமரன் சம்பந்தம் முடிவாறாப்புல இருந்ததே.”
வனிதாவிடம் பேச ஆரம்பித்த வெற்றிமாறன் தன் போக்கிலே பேசிக் கொண்டிருந்தார்.
மகளை எண்ணி இருவருமே வேதனையில் தத்தளித்தாலும், அடுத்து என்ன என்பதிலும் தெளிவாக இருந்தனர்.
வெற்றிமாறன் லாகின் செய்து பார்க்க, ஹரி கிருஷ்ணன் அணுகி இருப்பது தெரிந்தது. மட மடவென்று அவனுடைய விபரங்களை ஆராய்ந்தார்.
ஹரியின் புகைப்படமும் மற்ற விபரங்களும் அவருக்குப் பிடித்துப் போக, மனைவியிடம் காட்டி அவர் என்ன நினைக்கிறார் எனக் கேட்க, வனிதாவும் ஹரியையே அருமையாகப் பார்க்கலாம் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.
மறுநாள் அதிகாலையிலே மகளின் ஜாதகத்தை ஒரு பக்கம் பார்த்தார். மறுபக்கம் தெரிந்த நண்பர் ஒருவரின் மகள் மருத்துவராக இருப்பதால், அவர்களிடம் விசாரித்தார்.
ஹரியின் விபரங்கள் அவருக்கு வெகு திருப்தி! கூடவே ஒரு உறுத்தல்! அவன் ஒரு டாக்டர். குழந்தைகள் இருதயச் சிகிச்சை நிபுணர் (Pediatric cardiologist).
அதன் உயரமும் அருமையும் தெரியாதவரல்ல வெற்றிமாறன். ஏன் இப்படி வந்து ஒரு பெண்ணைப் பார்க்க நினைக்க வேண்டும்? லவ் பெயிலியர், குடும்பத்தில் ஏதேனும் குறை இப்படி இருக்குமோ எனச் சந்தேகம் கொண்டார்.
ஆனாலும் ஹரிக்குப் பதில் அனுப்பி வைத்து, அவனிடம் தொலைபேசியில் உரையாடக் கேட்டிருந்தார்.
தன் பிரேக் ஃபாஸ்டை முடித்துவிட்டுக் கருப்பட்டிக் காஃபியுடன் உட்கார்ந்த ஹரி கிருஷ்ணனுக்கு வெற்றியின் குறுஞ்செய்தி வரவும், மகிழ்ச்சியில் துள்ளினான்.
ஏற்கெனவே டிம்பிளால் மனம் லேசாகிவிட்டிருந்த ஹரிக்கு இந்த நற்செய்தியும் சேர்ந்து கொள்ள அவன் ‘ரொம்ப ஹாப்பி அண்ணாச்சி!’ ஆகிவிட்டான்.
அது அதற்கு ஒரு காலமும் நேரமும் கூடி வர வேண்டுமோ?
அந்த இரு குடும்பத்தினரும் இதனை நன்றாக உணர்ந்து கொள்ளும் நேரமும் வந்தது!
வெற்றிமாறனும் ஹரி கிருஷ்ணனும் அன்று மாலையே பேசிக் கொண்டனர். வெற்றிக்கு ஹரியை மிகவும் பிடித்துப் போனது. அவனிடம் தன் சந்தேகங்களை, கேள்விகளைக் கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டார்.
பேச்சின் முடிவில் அவனுடைய பெற்றோரின் எண்ணைக் கேட்டுக் குறித்துக் கொண்டார்.
தேவானந்திற்குச் செய்தி போக, அவன் யோசனையில் ஆழ்ந்தான். அப்பாவிடம் நிறையக் கேள்விகளை அடுக்கினான்.
வெற்றிமாறன் அவனுக்கு ஹரியின் எண்ணை அனுப்பி வைத்து, “நான் அவருக்கும் உன் நம்பரை அனுப்பி வைக்கிறேன். அப்புறமா கூப்பிட்டுப் பேசு ஆனந்த்.
நல்லாப் பேசுறார். ரொம்ப நல்ல மாதிரின்னு படுது. அவங்க வீட்டிலே பேசிட்டு எப்ப நேரிலே பார்க்கலாம்னு சொல்லுறேன்னு சொல்லியிருக்கார்.
என் மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு. அம்மாவுக்கும் பையனைப் பிடிச்சிருக்கு. தேனுக்கு இவர் ஃபோட்டோவை அனுப்பி வைக்கச் சொல்றா.” என்றார்.
வனிதா உஷாவைக் கூப்பிட்டுச் சொல்ல, அஜித் இம்முறை அவனும் டாக்டர். ஹரி கிருஷ்ணனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.
அந்த அமரன் அலையன்ஸ் அப்படித் தடைப்பட்டதில் அவர்கள் எல்லோரும் இனி எந்த வரனையும் மேலும் கவனத்துடன் கையாள நினைத்தனர்.
ஹரிக்கு இப்பின்னணி நிகழ்வுகளைப் பற்றி எதுவும் தெரிய வாய்ப்பில்லை. அப்படித் தெரிய வரும் போது எப்படி உணரப் போகிறானோ!
ஆதித்துக்கும் நீத்துவுக்கும் ஹரி இன்னும் தேன்மொழியைத் தனக்குப் பெண் பார்ப்பதைப் பற்றி ஹரி சொல்லவில்லை.
ரிஷிக்கு மட்டுமே தெரியும். ஹரி அவனை மட்டும் கூப்பிட்டுப் பேசினான். அவனிடம் தான் வெற்றியிடம் பேசியதைச் சொன்னான். அடுத்து இரண்டு குடும்பங்களும் சந்திக்கப் போகிறதைப் பகிர,
“ஹரி உனக்கு ஓகேன்னா நானும் அனுவும் சூர்யா வீட்ல பேசுறோம் டா.” என ரிஷி நண்பனுக்குத் துணை புரிய நினைத்துக் கேட்டான்.
“நோ ரிஷி! நான் பார்த்துக்கிறேன். சூர்யா பேமிலியோட இன்வால்மெண்ட் எனக்குச் சரி வராது டா. நான் ஹரி கிருஷ்ணன் ஐடண்டியோட மட்டுமே தேன்மொழி கிட்டேயும் அவங்க வீட்டு ஜனங்க கிட்டேயும் பேசிப் பழக விரும்புறேன். நான் சொல்ல வர்றதை நீ புரிஞ்சிப்பன்னு நினைக்கிறேன்.” என்று சொல்லி மறுத்து விட்டான்.
“புரியுதுடா. சரி நீ பார்த்துக்க. நாளைக்கு உங்க கல்யாணத்துக்காவது எங்களை இன்வைட் பண்ணுவியா? இல்லை சூர்யா பக்கத்து ஆளுங்கன்னு எங்களைத் தள்ளி வைச்சிடுவியா?”
விளையாட்டாக ரிஷி கேட்டான்.
“ம்ம்… இது வரைக்கும் அந்த மாதிரி நினைக்கலை. இப்ப நீ ஐடியா தந்திட்ட இல்லையா, யோசிச்சுச் சொல்லுறேன்.”
சிரிப்புடன் இருவரும் பேசி வைத்தனர். ஹரியும் சாதாரணப் பாவனையுடன் விளையாட்டாகப் பேசியிருந்தாலும், அவன் குரலில் என்ன தோன்றியதோ ரிஷி சிந்தனை வயப்பட்டிருந்தான்.

Last edited: