அத்தியாயம் 16
மழை பெய்த நேரத்தில் மூவரும் அங்கிருந்து பாறைகளின் இடையில் மறைந்து கொண்டார்கள். மழை நின்ற நேரம் நள்ளிரவு 11.30. பெய்த பேய் மழையில் தர்மசீலன் அங்கிருந்து மறைந்து போனார்.
“ஆதி சாபம் என்னன்னு தெரிஞ்சிடுச்சு. ஆனா இத சரிசெய்ய முடியும்னு உனக்கு தோணுதா?”
“இல்லை யாசி. இந்த அளவுக்கு நடந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கல. தெய்வானையோடு கோபமும் சரியானதுதான். அந்த நேரத்துல அவளால அத மட்டும் தான் செய்ய முடியும்.’’
ராகேஷ், “ஆதி அன்னைக்கி குலசேகரன் செஞ்ச தப்புக்கு அவனுடைய வம்சம் என்ன செய்யும்? உங்களுக்கு ஏன் இந்த தண்டனை?”
ஆதி, “ராக்கி இதைப் பற்றி நான் நிறைய படிச்சேன். வர்க்க சாபம், வர்க்க தோஷம், முன்னோர் சாபம்னு நிறைய படிச்சேன். இது டிஎன்ஏ மூலமா பரவர ஒரு விசயம் தான்.”
“சரி மணி 12க்கு மேல ஆச்சு. இருக்கிற ஸ்னாக்ஸ் சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கிட்டு காலைல எந்திரிச்சு போலாம்” என்றான்.
“இல்லனா மட்டும் திரும்பிப் போக முடியுமா? பகல்ல வந்தாலே வழி கண்டுபிடிக்கிறது சிரமம். வேறு வழியில்லை. கடவுள் மேல் பாரத்தைப் போட்டு தூங்க வேண்டியது தான்.” என்றாள் யாசிகா.
“யாசி நம்ம கருப்பணசாமி துணைக்கு கூட்டிட்டு வந்து இருக்கோம். அதனால அவள கட்டாயம் கொண்டு போய் வந்த இடத்திலேயே சேர்த்துடுவாரு. நம்பி தூங்கலாம்.” என்று கூற, அன்றைய இரவு அவர்களுக்கு அங்கேயே கழிந்தது.
மறுநாள் காலையில் மூவரும் அந்த வழியிலேயே திரும்பி சென்றார்கள். ராகேஷ் செடிகளை உடைத்து வைத்தது அவர்கள் வேகமாகச் செல்லவும் உதவியாக இருந்தது.
ஆதி பொன்னாத்தாவிடம், “பாட்டி நம்ம வம்சத்தோட சாபம் எப்படி வந்துச்சுன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். இனி அது எப்படி சரி செய்வது என்று எனக்கு சொல்லுங்க பாட்டி.”
“ஆதித்யா நீ அறிய வேண்டிய உண்மைகள் இன்னும் நிறைய உள்ளது. அதற்கு முன் நீ செய்ய வேண்டிய விசயம் உக்கிரவீரமாத்திக்கு கும்பம் எடுத்து பூஜை செய்ய வேண்டும். இத்தனை வருஷமா வம்சத்தோட பூஜை இல்லாம ஆத்தா உக்கிரமா இருக்கா. நீ பூஜை பண்ணனும்.” என்றார்
ராகேஷ், “என்னது இன்னும் தெரிஞ்சுக்கணுமா? அப்போ அந்த பேய் பாதிதான் சொல்லுச்சா?”
“ஏய் சும்மா இருடா. பேய்னு சொல்லாத. எங்க வம்சம் தழைக்கனும்னு உயிர விட்டவருடா!”
“சரிடா சரிடா. யூ கண்டினியூவ்.” என்றான்.
“ஆதித்யா வர்ற திங்கட்கிழமையில் இருந்து விரதம் இருக்க ஆரம்பிக்கணும். மொத்தம் 48 நாள் விரதம். 45 ஆவது நாள் நீ இங்கேயே இருக்கணும். அதுக்கு இடையில நாற்பதாவது நாள் மகாமுனி முப்பூசை செய்யணும். அதுக்கு நீ வரணும்.” என்றார் பொன்னாத்தா.
“பாட்டி என்ன விரதம்? எப்படி பண்றது? இதை பற்றி எதுவுமே தெரியாது எனக்கு?”
“நான் சொன்னேன்னு வள்ளியம்மாகிட்ட சொல்லு. அவ பார்த்துப்பா.” என்று நெற்றியில் திருநீறு பூசி அனுப்பி வைத்தார்.
அடிக்கடி யாசிகாவிடம் தெய்வானை “அவனை கொன்று விடு! அவனைக் கொல்வதே உனது இந்தப் பிறப்பின் ரகசியம். உன் கையால் அவன் இறக்க பிறந்தவன்.” என்றாள்.
அதில் மனமுடைந்த யாசிகா வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே அழுது கொண்டிருந்தாள். வீட்டிற்கு வந்தவுடன் பொன்னாத்தா சொன்னதை சொன்னவுடன் வள்ளியம்மா விரதத்தை ஆரம்பித்தார்.
ஆதியும் விரத முறைகளை சரியாக கடைபிடித்தான். ஊருக்குள் திருவிழா நடத்த தேவையான அனைத்து விஷயங்களையும் தயார் செய்து வைத்திருந்தார் பொன்னாத்தா. நாற்பதாவது நாள் ஆதி அங்கு வந்து சேர்ந்தான்.
மகாமுனிக்கு பன்றி, ஆடு, சேவல் அறுத்து ரத்தம் சிந்தி திருவிழா தடையில்லாமல் நடக்க வேண்டும் என்று முப்பூசை செய்தார்கள். கருப்பண்ணசாமிக்கும் கிடா வெட்டினார்கள்.
46வது திருவிழா ஆரம்பித்தது. ஊரின் வடக்கே உள்ள கிணற்றில் நீரை எடுத்து கும்பத்தில் ஊற்றி வீரமாத்தி போல அலங்காரம் செய்து தலையில் சுமந்து கொண்டு கையில் வாளுடன் நடந்து வந்தான் ஆதி.
கோவில் சுற்றி உள்ள வந்தவன் வாளை உக்கிரவீரமாத்தி முன் வைத்துவிட்டு பழைய பூசாரி சொல்லிகொடுக்க பூஜைகள் செய்தான். உக்கிரவீரமாத்தியோ மகிழ்ச்சி அடைந்து மீண்டும் சக்தி அடைந்தாள்.
48ம் வரை பூஜைகளை செய்து வந்தவன் வாளை கையில் வைத்துக்கொண்டு வாக்கு சொல்ல ஆரம்பித்தான். பத்து ஆண்டுகளாக வாக்கு கேட்காத மக்கள் அப்போது கேட்டனர். அப்போது வித்யாவும் அவன் காலில் விழுந்து கேட்டார்.
“அடுத்த மாசம் மிருகசீரிஷம் நட்சத்திரம் வர்ற அன்னைக்கு உன் மகனுக்கு என் இடத்தில கல்யாணம் பண்ணி வை. அவனுக்கு வர ஆபத்தெல்லாம் பொடியாக போக நான் இருக்கேன். நீ எதுக்கும் கவலப்படாத.” என்றான்.
“மச்சா ஆதி பாருடா எவ்வளவு நேக்கா அம்மாகிட்ட சீக்கிரம் கல்யாணம் பண்ணி வையுங்கனு சொல்றான் பாரு.”
“அதற்கெல்லாம் தனித்திறமை வேண்டும் மச்சி. அவனுக்கு பொண்ணும் ரெடி. உன்னைய மாதிரி சிங்குள்னு நினைச்சியா?” செல்வா சொல்ல,
“கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஓவரா சீன் போடுறியா? இருடா அந்த மலைகாட்டுல அந்த பேய் கிட்ட புடிச்சு தர்றேன்.” என்று கேலி பேச்சுகள் நண்பர்கள் மத்தியில் நடந்தது.
மூன்று நாள் திருவிழாவை சிறப்பாக நடத்தி கும்பத்தை மீண்டும் கிணற்றில் போட்டுவிட்டு வாளை உறையில் வைத்துவிட்டு ஒவ்வொரு தெய்வத்திற்கு பூஜை செய்து முடித்தான்.
ஆதிக்கும் யாசிகாவிற்கும் திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன. வித்யாவின் சொந்தங்கள் பழையவற்றை மறந்து பொன்னாத்தா சொன்னபடி எல்லாம் செய்தார்கள்.
தெய்வானையோ யாசிகாவிடம் ஆதியை கொல்ல சொல்லிக்கொண்டே இருந்தாள். இது அவளுக்குள் மாற்றத்தை கொடுத்தது. திருமணம் செய்தால் ஆதிக்கு ஏதாவது நடந்து விடுமோ என்று பயம் கொண்டாள்.
சொன்ன தேதியில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த பின்னர் பொன்னாத்தா, “ஆதித்யா நீ செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளது. அதுக்கு அப்புறம் தான் நீங்க வாழ்க்கைய ஆரம்பிக்கணும்.” என்றார். இது கேட்ட மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தாலும் இருவருக்கும் பிரச்சனையின் வீரியம் நன்றாக தெரியும் என்பதால் சம்மதித்தனர்.
பொன்னாத்தா சாமியின் கையில் இருந்த வாளை எடுத்து”ஆதித்யா உன்னோட நண்பர்களோடு இந்த வாளை எடுத்துக்கொண்டு விடாரபுரத்துக்கு போ. தர்மசீலர் உனக்கு தேவையான தகவலை தருவாரு. மறக்காம கருப்பணையும் ஆத்தாவையும் துணைக்கு அழைச்சிட்டு போ.” என்றார்
ராகேஷ் செல்வாவோடு அந்த காட்டுக்குள் மீண்டும் நடக்க ஆரம்பித்தான் ஆதி. கூடவே ஒரு நாயும் அவர்களோடு சென்றது.
சூரியன் தனது வேலையை முடித்துவிட்டு மறைய தொடங்கியிருந்தான். கைகளில் இருந்த டார்ச் லைட் மூலம் அந்த நிலபரப்பை அடைந்தார்கள். நாய் இவர்களுக்கு வழி சொல்ல ஒரு பெரிய பாறைக்கு அருகே வந்து அமர்ந்தார்கள்.
“மச்சானுக்கு இன்னைக்கு பர்ஸ்ட் நைட். அவன் தலையெழுத்து இன்னைக்கு இந்த நேரத்தில உன் பக்கத்தில உக்காரனும்னு.” என்று ராகேஷை பார்த்து செல்வா கூறினான்.
“ஏன்டா உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஆணவத்தில ஆடுறியா? இருடா போய் சாரா கிட்ட உனக்கு எக்ஸ் இருக்கு. அவள மறக்கமுடியல. அவள நினைச்சு தான் நீ வாழுறேன்னு சொல்லி டைவர்ஸ் வாங்கி தரேன். தனியா படுத்தா தான் உனக்கு புத்தி வரும்.” என்றான் செல்வாவை பார்த்து.
“வேணாம்டா சாமி. உனக்கு புண்ணியமா போகும். நீ வேற சைக்கார்டிஸ்ட். அப்படியே நம்பிடுவா. என் வாழ்க்கையில விளையாடிறாதடா.” என்றதும் அவர்கள் இருந்த இடம் சிரிப்பொலியால் அதிர்ந்தது. யாரும் இல்லாத அமைதியான சூழல் என்பதால் அந்த சத்தம் அதிக தூரம் பரவியது.
திடீரென நாய் குரைக்க மூவரும் அந்த திசையில் திரும்பினார்கள். அவர்களின் கண்களுக்கு சில அகோர உருவங்கள் தெரிய ஆரம்பித்தது. ராகேஷ் மட்டும், “இதெல்லாம் ஒன்னும் இல்ல. நம்ம மனசு இந்த சூழலல பாத்து பயப்படுது. பயப்படாம இருந்தாலே ஒன்னும் ஆகாது.” என்று இருவரின் கையையும் இறுக்கி பிடித்துக்கொண்டான்.
நாயும் தொடர்ந்து குலைத்துகொண்டு இருக்க பல உருவங்கள் கடந்து சென்றது. சில அவர்களை பயமுறுத்தியும் சென்றது.
நாய் சட்டென்று வாளை பார்த்து குறைக்க, புரிந்துகொண்ட ஆதி உறையில் இருந்து எடுத்தான். அதன் பளபளப்பு அங்கே ஒரு வெளிச்சத்தை தர அனைத்து ஆவிகளும் தள்ளி நின்றது. அதே நேரத்தில் அந்த வாளிலிருந்து ரத்தவாடை வீச தொடங்கியது.
அப்போது குதிரையின் கணத்தலும் கால் குளம்பு சப்தமும் அங்கே கேட்க தொடங்கியது. அவர்களின் அருகே தர்மசீலன் வரவும் ஆவிகள் அனைத்தும் மறைந்து சென்றது.
“ஆதி என்னடா இத எடுத்த உடனே இப்படி ஸ்மெல் வருது. ஒருமாதிரி உமட்டுதுடா.” செல்வா சொல்ல,
“பல உயிர்களை காவு வாங்கிய வீரவாள். இரக்கம் இல்லாமல் களத்தில் விளையாடிய உறைவாள். எத்தனை போர்கள். எத்தனை உயிர்கள். இறுதியில் சுழற்றியவனையே காவு வாங்கிய வாள்.” என்றான் தர்மசீலன்.
“அப்படின்னா இது?”
“என்னுடைய வீரவாள். இதே மண்ணில் நான் சபதம் எடுத்து என்னுயிரை வாங்கிக்கொண்ட என் வாள். அரசர் குலசேகரனின் வம்சம் காக்க என் உயிரை பறித்த என்னுடைய வாள். என் இறப்பிற்கு பிறகு உக்கிரவீரமாத்தியின் பாதத்தில் வைக்கப்பட்டது இந்த வாள். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது பார்க்கிறேன் இதை. இப்போதும் அதே ரத்தவாடை!”
“இவ்ளோ நேரம் எங்கிட்ட இருந்துச்சு. ஆனா ரத்தவாடை வரலயே?” ராகேஷ் கேட்க,
“இந்த வாள் இந்த மண்ணில் தான் புனிதம் கொண்டு சபிக்கப்பட்டது. இங்கே நீங்கள் காண்கின்ற பல கற்கள் கற்கள் கிடையாது. ரத்தக் கட்டிகளே. உன் காலடியில் எத்தனையோ பிணங்களின் கூடுகள் இருக்கிறது. அதனால் தான் ரத்தவாடை. இன்று உன்னை நோக்கி பல ஆத்மாக்கள் வர காரணமும் இந்த வாள் தான்.” என்றான் தர்மசீலன்.
“எனக்கு உதவி செய்யுங்க. சாபத்த எப்படி நீக்குறது?”
“அதற்கு நீ நான்கு மலைகளிலும் அரசரால் கட்டப்பட்ட காவல் தெய்வங்களை கட்டவிழ்த்து சாந்தி செய்ய வேண்டும். இத்தனை தலைமுறைகளாக அடைபட்டு கிடக்கும் தெய்வத்தின் உக்கிரம் அதிகமாக இருக்கும். மேலும் அது அவ்வளவு சுலபம் அல்ல. ஏனெனில் எந்த மாதிரியான கட்டு என்பதை அரசர் மட்டுமே அறிவார்”
“அப்படின்னா அவரு எனக்கு சொல்லலாமே. நான் அதை பண்ணிடுவேன். பிரச்சினை முடிஞ்சது.” ஆதி சொல்ல,
“அது அவ்வளவு சுலபம் அல்ல ஆதித்யா. அரசர் குலசேகரனின் குரலால் அதை சொல்ல முடியாது. அவர் ஆன்மா மேலும் சபிக்கப்படும். அதை அவர் ஓலையில் எழுதி வைத்துவிட்டே இறந்துள்ளார். அது எங்குள்ளது என்பதை அறிய வேண்டும்!"என்றான் தர்மசீலன்.
“அந்த ஓலைச்சுவடி எங்குள்ளது? அதை எப்படி கண்டுபிடிப்பது? சொல்லுங்க! சொல்லுங்க!” ஆதியின் கேள்விக்கு,
“அதை அறிய என் குருநாதர் கோரக்கரின் ஜீவசமாதிக்கு செல். அவர் வழி சொல்லுவார். இன்னொரு முக்கியமான விசயம். கட்டை உடைக்கும் வரை கட்டுப்பாடோடு இருக்கவேண்டும்.”
“புரியுது. உங்ககிட்ட இன்னொன்னு கேட்கனும். அடிக்கடி என் மனைவிகிட்ட தெய்வானை என்னை கொல்ல சொல்கிறாராம். ஏன் அது? இனி அது கேட்காம இருக்க என்ன பண்ணனும்.”
“ஆதித்யா அரசரின் நீட்சியாக நீ எப்படி இங்கு வந்து நிற்கிறாயோ அதேபோல் விடாரபுரத்தின் கடைசி உயிர் உன் மனைவி. இது விதியின் விளையாட்டு. அன்று இந்த நாட்டைவிட்டு வெளியே சென்றவர்களில் கடைசி உயிராக இன்று இருப்பவள் அவள் மட்டுமே. உன்னை பழிவாங்கும் எண்ணம் அவளுக்குள் விதைக்கபடுகிறது ஆதித்யா. விரதம் கொள். வீரியம் கிடைக்கும். வேரின் நீரில் விடுதலை கிடைக்கும். நெருப்பால் தனஞ்செயன் மறைவான்.” என்று சொல்லிவிட்டு குதிரையில் ஏறி பறந்தார் தர்மசீலன்.
உடனடியாக மறுநாள் காலையில் அங்கிருந்து கிளம்பியவன் கோரக்கர் ஜீவசமாதியை நோக்கி பயணித்தார்கள். அங்கே சென்றவுடன் மனதில் ஒரு பேரமைதி. அப்படியே அமர்ந்து கண்கள் மூடி தியானம் செய்தான். அப்போது ஒரு ஒளி உருவம் அவனிடம் “உனக்கான அனைத்தும் உன்னிடம் வந்து சேறும். உன் குலதெய்வ கோவிலில் அவை கிடைக்கும்.” என்று சொல்லி மறைந்தது.
சட்டென்று கண்விழித்து பார்த்தபோது கோர்க்கருக்கு தீபாராதனை நடைபெற்றது. அவரின் மேல் இருந்து வலதுபுறம் சில மலர்கள் விழுந்தன. மெய்சிலிர்த்து போன ஆதி அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் கோவிலுக்கு வந்து சேர்ந்தான்.
அமைதியாய் தன் குலதெய்வம் உக்கிரவீரமாத்தியிடம் அந்த ஓலைச்சுவடி வேண்டும் என்று வேண்டிக்கொண்டே இருந்தான். அப்போது அவன் முன்னே கருநாகப்பாம்பு ஒன்று இரண்டு மண்டலம் போட்டு நின்றது.
“உஷ்.... உஷ்.... உஷ்ஷ்ஷ்ஷ்....” என்ற அந்த சத்தங்கள் அவனுக்கு ஏதோ சொல்வது போல இருந்தது. பயம் இருந்தாலும் குழப்பமாக அதனை பார்க்கவும் பாம்பு செல்ல ஆரம்பித்தது. அந்த திசையில் நடக்க ஆரம்பித்தான்.
அருகே இருந்த மலையின் ஆரம்பத்தில் ஒற்றை உருண்டை பாறை ஒன்றின் அடியில் அந்த பாம்பு செல்ல அதை சுற்றி சுற்றி நடந்து வந்தான்.
ராகேஷ் செல்வா ஆதி மூவரும் சேர்ந்து அந்த பாறையை நகர்த்த முயற்சி செய்து தோற்று போனார்கள்.
“இவ்வளவு பெரிய பாறைய நம்மால சத்தியமா தள்ள முடியாது. ஜேசிபி வச்சு தள்ளலாம்னு பாத்தா அதுக்கும் வழியில்ல. இனி பத்து பதினஞ்சு பேர் வச்சு தான் உருட்டனும். அதலயும் நாம கூப்டா இங்க ஒருத்தனும் வரமாட்டான்.” என்றான் செல்வா.
“இல்ல செல்வா. இந்த பாறைக்கு அடியில ஓலைச்சுவடி இருக்கனும். இல்லன்னா அது எங்க இருங்குங்ற தகவல் இருக்கனும். அதனால எப்படியாவது எடுத்தே ஆகனும்.”
ராகேஷ், “ஆனா அவ்வளவு ஈசி இல்லையே. இப்ப நாம மூணு பேரும் தான் இருக்கோம். என்னடா பண்றது” என்று கேட்க,
“வேற வழியில்ல. ஆள் தான் கூட்டிட்டு வரனும். ராக்கி நீதான் அதுக்கு சரியான ஆளு. யார்கிட்ட எப்படி பேசி சமாளிக்கனும்னு உனக்கு தெரியும். ப்ளீஸ்டா!” என கேட்டான் ஆதி.
வேறு வழியின்றி ஊருக்குள் சென்று சில ஆட்களை அழைத்து வந்தான். ஊராருக்கு இவர்கள் மேல் சந்தேகமும் அதிகரித்து வந்தன.
கடப்பாரைகள், கயிறு கொண்டு இருபது பேர் அந்த பாறையை நகர்த்த முயற்சி செய்து தோற்று போயினர். உச்சி வெயில் அனைவருக்கும் மயக்கம் தர தொடங்கியது. வந்தவர்கள் திரும்பி செல்ல கோபத்தில் பாறையில் ஓங்கி குத்தினான். அப்போது அங்கிருந்த நுனியில் கை கிழித்து ரத்தம் வர அது பாறைகளில் அங்கங்கே சிந்தியது.
மந்திரகட்டுகளால் கட்டப்பட்டிருந்த பாறை நுண்ணிய மாற்றங்கள் தெரிந்தது. இப்போது மூவரும் தள்ள பாறை நகர்ந்தது.
செல்வா, “என்னடா இது? ஏதோ பேய் படம் பாக்குற மாதிரி இருக்கு. இதெல்லாம் பொய்னு நம்பிட்டு இருந்தேன்.” பாறையின் அடியில் சிறிய குழி ஒன்று தெரிய அதை சுற்றி பறித்து ஆழப்படுத்தினார்கள். லேசான சத்தம் வர உள்ளிருந்து வௌவால் கூட்டம் வேகமாக வெளியே ஓடி வந்தன.
தன் மொபைல் மூலம் டார்ச் அடித்துக்கொண்டு உள்ளே இறங்கியவுடன் கிழக்கு பக்கம் நோக்கி பெரிய சுரங்கம் ஒன்று தெரிந்தது. அவர்கள் உள்ளே சில தூரம் சென்ற பின்னே நான்கு பிரிவுகளாக வழிகள் சென்றது.
“இப்ப நாம எப்படி போறது. இங்கயே வாடை குமட்டுது. பாம்ப நம்பி உள்ள வந்தது தப்பா போச்சுடா. மூச்சுவிட வேற கஷ்டமா இருக்கு” என செல்வா சொல்ல அவர்களுக்கும் அது சரியெனபட்டது.
மூவரும் வெளியே வர அங்கேயே அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான் ஆதி. நடந்த ஒவ்வொன்றாக யோசிக்க ஆரம்பித்தான். சட்டென்று “ராக்கி உனக்கு ஞாபகம் இருக்கா? அபி அண்ணா டார்ச் வெளிச்சம் இருந்தும் பந்தம் கொளுத்திட்டு வந்தாரே”
“ஆமா ஆதி. நாம கூட அவர பைத்தியக்காரன்னு சொல்லிட்டு இருந்தோமே?” என்று இழுத்தவன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, “ஆக்ஸிஜன்!” என்றான்.
“ஆமா ராக்கி. ஆக்ஸிஜன் இல்லாம நெருப்பு எரியாது. அதனால தான் அன்னைக்கு அத பண்ணினாரு. தர்மசீலனும் நெருப்பால் தனஞ்செயன் மறைவான்னு சொன்னாரு.நாலு குகைக்குள்ளயும் போலாம். நெருப்பு அணைந்தால் திரும்பி வந்துடலாம்.” என்றான்.
“தனஞ்செயன்னா யாருடா? புரியல” செல்வா கேட்க,
“அது நம்ம உடம்புல இருக்குற வாயு அமைப்பு. நாம இறந்த அப்புறம் அது நம்ம உடம்பு முழுக்க பயணிக்கும். அதபத்தி தெளிவா அப்புறம் சொல்றேன்.”
மெழுகுவர்த்தியும் தீப்பெட்டியும் எடுத்துக்கொண்டு மூவரும் மீண்டும் அந்த சுரங்கத்தில் நடக்க ஆரம்பித்தார்கள்.
இடதுபுறத்தில் இருந்த சுரங்கத்திற்குள் செல்ல சில அடி தூரத்தில் மெழுகுவர்த்தி அணைந்தது. புரிந்துகொண்டு மீண்டும் வெளியே வந்து இரண்டாவது வழிக்குள் செல்ல அது சில மீட்டர் தூரத்தில் வழியின்றி நின்றது.
மூன்றாவது வழியில் பயணிக்க அங்கே மெல்லிய நறுமணம் வீச ஆரம்பித்தது. உள்ளே வழியும் மெல்ல மெல்ல குறுக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் படுத்து தவழ்ந்து தான் செல்ல வேண்டும் என்ற நிலையில் மூவரும் கஷ்டப்பட்டு கடந்து சென்றார்கள்.
அங்கே ஒரு பெரிய அறை இருந்தது. அதில் மூன்று அடுக்கு சிறிய தூண்களும் அதற்கு நடுவில் நட்சத்திர வடிவில் ஒரு சிறிய மேடும் இருந்தது. அதற்கு நடுவில் குடுவை போன்ற ஒரு பெட்டி இருந்தது.
சிலந்தி வலைகள் சுற்றிலும் இருக்க தேள்களும் பாம்புகளும் அந்த குடுவையை சுற்றி நிரம்பியிருந்தன.
பயம் இருந்தாலும் ஆதி மட்டும் தனியாக நடக்க ஆரம்பித்தான். பாம்புகள் அவனை வழிமறித்து எச்சரிக்கை செய்தாலும் அவன் கால்கள் தானாக செல்ல ஆரம்பித்தது. விச உயிரினங்கள் அனைத்தும் தள்ளி சென்றன. கையில் போட்டிருந்த கட்டை அவிழ்த்து ரத்த துளிகளை அதன்மேல குடுவை திறந்தது.
உள்ளே இருந்த ஓலைச்சுவடி கட்டை வெளியே எடுத்தவுடன் விபூதி குங்குமம் வாசம் அறையை நிரப்பியது. சுற்றியிருந்த விஷ ஜந்துக்கள் அங்கிருந்து வெளியேறின. அது மூவருக்குமே ஆச்சரியமாக இருந்தது.
அந்த சுரங்கத்திற்குள் இருந்து வெளியே வந்து அந்த ஓலைச்சுவடியை பிரித்து பார்த்தார்கள். அதில் உள்ள தமிழ் எழுத்துக்கள் புரியாததால் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள்.
“விடு ஆதி! நம்மகிட்ட ட்ரீட்மென்ட் பார்க்க ஒருத்தர் வருவார். அவரோட அப்பா ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர்கள். அவர் கிட்ட போனா கட்டாயம் படித்து சொல்லிடுவார்.” என்று அவனை அழைத்துக் கொண்டு அவரைப் பார்க்கப் புறப்பட்டார்கள்.