அத்தியாயம் 5
“என்னடா ஆச்சு? ஏன் இப்படி கத்தற?” என்று கேட்க கூட முடியாமல் தங்கள் முன்னால் நொறுங்கி கிடந்த வண்டியை கண் சிமிட்டாமல் பார்த்தார்கள்
“யாசி நீ இந்த பக்கம் வா. நான் இனி வண்டி ஓட்டிக்கறேன்” என்று அவளிடம் கேட்டுக்கொண்டே இறங்கி இருக்கையை மாற்றினான்.
அவர்களை எதுவும் பேசவிடவில்லை. கேட்க நினைத்தாலும் முயன்றாலும் அமைதியை மட்டுமே அவர்களுக்கு பதிலாக கொடுத்தான்.
இரவுகள் நீளமாக சாலையில் யாரும் இல்லாத வேளையிலும் வண்டி மெதுவாக பயணம் செய்தது.
அங்கங்கே வானில் தெரியும் நட்சத்திரங்களை அவ்வப்போது ரசித்தபடி தன் மனதில் தோன்றிய குழப்பங்களை தேடினான்.
அதிகாலை சென்னை வந்து சேரவும். வீட்டில் குட்டி தூக்கம் கட்டி இழுத்தது அனைவரையும்.
ஆதியின் களைப்பை உணர்ந்த வித்யா இன்று அவனை எழ சொல்லி கட்டாயப்படுத்தவில்லை.
அவர் எப்போதும் தன் அலுவலகம் செல்ல, நேரம் 8ஐ தாண்டி செல்ல லேசாக கண் விழித்தான்.
கண்ணாடி முன்பு நின்றவன், “நான் யாரு? எதுக்கு இந்த குரல்கள் என்னை தொடர்ந்து வருது. நான் ஏன் பழி தீர்க்கனும். அம்மா கிட்ட சொல்லியும் புலம்ப முடியாது. இதுக்கு தீர்வு தான் என்னன்னு எப்படி கண்டுபுடிக்கறது?” என யோசித்து கொண்ட நகர அவன் சிந்தனையில் உதித்தவன் ராகேஷ்.
அவன் பள்ளிகால தோழன். தற்போது சைக்கார்டிஸ்டாக சென்னையில் பணிபுரிகிறான். இரண்டு ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் இருந்தவன் இங்கு மருத்துவமனை ஆரம்பித்தது அப்போது தான் ஆதிக்கு ஞாபகம் வந்தது.
தன் போனை எடுத்தவன் அவனுக்கு அழைப்பு கொடுக்க, “நீயெல்லாம் இன்னும் உயிரோட தான் இருக்கியா? செத்துட்டனு நினைச்சேனேடா.” என்ற ராகேஷின் பதிலை கேட்டவன்,
“உன்னையெல்லாம் கொல்லாம எப்படிடா நான் சாவேன். உன்ன சாவடிக்க நேரம் வேணும். எப்ப வரனும்னு சொல்லு.” என்று கேட்டான்.
“என்கிட்ட நோயாளிங்க வர தான் அப்பாயின்மெண்ட் வாங்கனும். நீ என்ன அட்மிட் ஆக வைக்கிறவன். வந்து தொல எப்ப வேணும்னாலும்.” என்று கூற,
“நான் நோயாளியா தான் வரேன். மதியம் 1 மணிக்கு பேசலாம்.” என்று தன் போனை துண்டித்தான் ஆதி.
ஆதி தனது ஆபிஸ்க்கு விடுமுறை சொல்லிவிட்டு தனது நண்பனின் மருத்துவமனைக்கு சென்றான். அதன் வாசற்படி ஏறும்போது, “உள்ளே செல்ல வேண்டாம் ஆதித்யா. உனக்கு எந்த பதிலும் கிடைக்காது. வீண் வேலை செய்யாதே.” ஆணின் குரல் கேட்கவும் ஸ்தம்பித்து நின்றான்.
அந்நேரத்தில் எதார்த்தமாக வெளியே வந்த ராகேஷ், “சார்க்கு நான் உள்ள வந்து ஆராத்தி எடுத்தா தான் வர முடியுமோ? உள்ள வர்றியா இல்ல இப்போ வந்து கால வெட்டிடவா?” சூழ்நிலை தெரியாமல் பேசினான்.
சுய நினைவுக்கு வந்தவன், “ஆமாடா. மாலை மரியாதை ஏதும் இல்ல போல. எல்லாம் தலையெழுத்து.” என்று உள்ளே சென்றார்கள்.
“ராக்கி எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்”
“என்னடா? ஏதோ நோயாளியா கேட்குறனு சொன்ன? என்ன விசயம் சொல்லு.” என்றான்.
தனக்கு நடந்த எல்லா விசயங்களையும் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தான்.
“ஆதி ஏதாவது இங்க்லீஷ் ப்ஃலிம், அமானுஷ்ய புக்ஸ், இல்ல வீடியோஸ் பாத்தியா?”
“இல்ல ராக்கி”
“தூங்கும் போது ஏதாவது பயம் இருக்கா? தட் மீன்ஸ் இருட்ட பாத்தா பயமா?”
“டேய் நான் தான் மிட் நைட் ரைடுன்னு பைக்ல போயி போஸ்ட் போடுவனேடா. அப்புறம் எப்படிடா ரூம்ல மட்டும் பயம் வரும்” என கேட்டான்.
“நீ அப்படி ரைடு போகும்போது அந்த இடத்தில் ஏதாவது அமானுஷ்ய சம்பவம் பற்றின விசயம், இல்ல பைக் நடுகாட்டுல நின்று போறது, இல்ல பேய் பிசாசுன்னு உருவம் மாதிரி பயந்து போன விசயம்” என்று துருவி துருவி கேட்டுக்கொண்டே இருந்தான்.
“இல்லடா. எனக்கு மூனு மாசம் முன்னாடி வரைக்கும் எதுலயுமே நம்பிக்கை கிடையாது. எனக்கு கடவுளும் பேயும் ஒன்னு தான். ஏன்னா ரெண்டுமே நான் கண்ணுல பாக்கல.” என்றான்.
மேலும் தொடர்ந்த ஆதி, “இந்த குரல்கள் என் வாழ்க்கையில வந்த அப்புறம் நான் நானா இல்ல. புரியலடா எதுவும். என்ன பண்றதுன்னு தெரியல. பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு” என்று தலைமுடியை பிடித்து இழுத்தான்.
“மச்சி மச்சி... பொறுடா.. ஏன்டா இப்படி... வா உள்ளே போலாம்” என்று தனது அறைக்குள் அழைத்து சென்றான்.
சுற்றியும் இருந்த பொருள்களையும் படங்களையும் பார்த்தவன் “மச்சி ஒன்னும் ஆகாதுல்ல” பயத்துடன் கேட்க,
“மச்சி நான் இருக்கேன். இது எல்லோரும் தைரியமா பண்ண கூடிய ட்டீரிட்மெண்ட் தான். நீ பயப்படாம உக்காரு.” அமர வைத்த ராகேஷ் மெல்ல அவனது கைகளுக்கும் கால்களுக்கும் நகர தடைவிதித்தான்.
மற்ற ஒளி விளக்குகளை அணைத்தவன் ஆதி முகத்திற்கு நேராக இருந்த விளக்கை மட்டும் ஒளிரவிட்டான்.
“ஆதி இத மட்டும் தொடர்ந்து பாரு... பாரு... பாரு... மெல்ல மனச அமைதிபடுத்து... அப்படியே கண்ண மூடு.” என்றதும் அதேபோல் செய்தான்.
“ஆதி இப்ப நான் பேசறது கேட்குதா? உன்னால இப்போ பேச முடியும். பேசு ஆதி”
“கேட்குது ராக்கி... என்னால உன்னோட குரல்ல தெளிவா கேட்க முடியுது”
ராகேஷ் எவ்வளவோ முயன்றும் அவனிடம் அவன் சொன்னதற்கு பதில் ஏதும் கிடைக்காமல் போனது. சுயநினைவுக்கு அவனை கொண்டு வந்து, “மச்சி உனக்கு எதுவும் பிரச்சினை இல்ல. ஏதோ வொர்க் டென்சன் தான். ரெண்டு நாள் கழிச்சு வா” என்று சொல்லி அனுப்பி வைத்தான் வீட்டுக்கு...
மறுநாள்...
ராகேஷ் ஏதோ தன்னிடம் மறைப்பதாக எண்ணிய ஆதி மாடியில் நின்று நிலவை பார்த்து கொண்டிருந்தான்.
“மாமா. உன்னோட பிரச்சினைக்கு எனக்கு தெரிஞ்ச ஜோசியர் ஒருத்தர் இருக்காரு. அவர்கிட்ட போன எல்லாம் சரியாகும். வாடா.” செல்வா அழைத்தான்.
“மச்சி எனக்கு ஜோசியத்தில நம்பிக்கை இல்ல. இதெல்லாம் ஒரு பிசினஸ்டா. ஏதோ ஒன்பது கிரகம். அங்க இருக்குது இங்க இருக்குது அந்த ராசி இந்த ராசின்னு கதை விட்டு காசு புடுங்குவானுக.”
“ஆதி அப்படிலாம் இல்லடா. இதெல்லாம் உண்மை. அன்னைக்கு நாம கேட்ட ஆடியோல இருந்து எது பொய்னு சொல்லு. என் ஜாதகம் சரியா சொன்னவரு. உனக்கும் சரியா சொல்வார் வா போலாம்” என்று அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக போனான் கும்பகோணத்திற்கு.
“இவர்கிட்ட அப்பாயிண்மென்ட் நேத்தே போட்டுட்டேன்” என்று வரிசையில் காத்திருக்க, ஆதியின் முறை அழைக்கப்பட்டது.
ஆதியின் ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுக்க, வாங்கி சில கணிதங்களை எழுதியவர்,
“தம்பி நீ வந்த நேரம் சரியில்ல. ஆருடமும் பிரசன்னமும் கூட சுபமா இல்ல. உன் ஜாதகத்தில் கிரக இணைவுகள் சரியில்ல. நீ ஆபத்தில இருக்க” என்றார்.
“சார் என்ன மாதிரியான ஆபத்து? என்ன நடக்கும் அடுத்து ?” செல்வா கேட்க,
“நிம்மதி இல்ல. தூக்கம் இல்ல. வாகனத்தில சுகம் இல்ல. ஒரு பொண்ணால பிரச்சினை இருக்கு. காத்திருக்குது ஒரு ஆபத்து. அது உன்னோட குடும்பத்தையும் விடாது” என்று சொன்னவுடன் ஆதிக்கு தூக்கி வாரி போட்டது
“ஆமா சார். கொஞ்ச நாளா இவனால சரியா தூங்க முடியல. ஏதோ கெட்ட கனவா வருதுன்னு சொல்றான். அமானுஷ்யம் சுத்தி இருக்கறதா நினைக்கறான். ஒரு தடவ ஆக்ஸிடென்ட் கூட ஆச்சு. சார் இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா. இவன் வீட்டுக்கு ஒரே பையன்” என்றதும்,
“இன்னைக்கு அமாவாசை திதியும் சதய நட்சத்திரமும் கூடிய நாள். இன்னைக்கு ராத்திரி ஒரு காலதேவ பூஜை ஒன்னு பண்ணனும். அதுக்கு காளி பூஜை பண்ணனும் பயம் போக. ஆயுள் பூஜை பண்ணினா அவனுக்கு ஒன்னும் ஆகாது” என்றார்.
“சார் இதுக்கு எவ்வளவு செலவாகும்?”
“ஒரு லட்சம் ஆகும். காளி தேவி பாதத்தில வச்சு 48 நாள் மந்திர உச்சாடனம் செய்து விபூதியால் அபிஷேகம் பண்ணி சக்தி உருவேற்றி வைத்திருக்கிற தாயத்தும் யந்திரமும் தரேன். அதுக்கு அப்புறம் அவன் எல்லா பிரச்சினைகளும் சரி ஆகிடும்” என்றார்.
“டேய் காசு ஆட்டய போட ப்ளான் பண்றான்டா அவன். வேணாம்டா. அம்மாக்கு தெரிஞ்சா கொன்றுவாங்க. இப்படியே போயிடலாம். போனா போகுது ஐயாயிரம் தானே ஃபீஸ்” என்று கிளம்ப எத்தனித்த வேளையில்,
“அதெல்லாம் அம்மா கிட்ட நான் சொல்கிறேன். சார் இன்னைக்கு நைட் பண்ணிக்கலாம். இப்ப காசோட வரேன்” என்று வெளியே வந்தார்கள்.
ஆதி எவ்வளவு முயன்றும் செல்வா விடவில்லை. ஒரு கட்டத்தில் அவனின் பேச்சில் இருந்த உண்மையும், அந்த ஜோதிடர் சொன்ன பலன்களும் ஒத்துப்போக ஒப்புக்கொண்டான்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து அவர்களிடம் கொடுக்க பூஜை ஏற்பாடுகள் தயாரானது.
இரவு 8.00 மணிக்கு பூஜை ஆரம்பித்தது. நட்சத்திர வடிவ அமைப்பில் போடப்பட்ட கோலத்தில் ஒவ்வொரு இணைப்பிலும் தீபங்கள் எரிந்தன. சில பொம்மைகளும் பொருட்களும் சுற்றியும் வைக்கப்பட்டிருந்தது.
அவன் ஜாதகத்தை ஒரு பொம்மையின் மீது வைத்து ஒரு வெள்ளை நூலை அதனோடு இணைத்து ஆதியின் கால் விரலோடு பிணைக்கப்பட்டது.
குங்குமமும் திருநீறும் மஞ்சளும் பூக்களும் அவன் முன்னே இருந்த மண் ஜாடியில் நிரப்பப்பட்டிருந்தது.
ஒவ்வொரு காவல் தெய்வத்தின் பெயரையும் அழைத்த ஜோதிடர் அங்கே வந்து அமர்ந்து அவனுக்கு உதவி செய்யுமாறு வேண்டினார்.
“ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸர்வ சத்ரு சம்ஹார சௌம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் க்லீம் க்லீம் ஹம்ம்...” என்று மற்றவர்களுக்கு புரியாத வார்த்தைகளை கூறிக்கொண்டே காளி தேவியின் உருவ சிலை மீது குங்குமம் மஞ்சள் தூவினார்.
“சொல்லு தம்பி... உனக்கு நடந்த எல்லாத்தையும் அம்மா கிட்ட சொல்லு. தாயி உனக்கு ஏற்பட்ட எல்லாத்தையும் சரி செய்வா.. ஹ்ம்ம் சொல்லு” என்று கத்தவும் அனைத்தையும் சொன்னான்.
“தாயே இந்த பாலகன் சொன்ன விசயத்தை கேட்டு இவனுக்கு நல்ல வழி ஒன்ன இந்த உருவம் மூலம் காட்டு தாயே... ர்ஹ்க்க்ம்ம்ம்” என்று அவ்வப்போது நாக்கை கடித்தும் உருமியும் ஆக்ரோஷமான முறையில் நடந்தார்...
சிறிது நேரம் கழித்து அக்னி வளர்த்தி ஹோமத்தில் சில பொம்மைகளையும் பொருட்களையும் போட்டார்.
அவன் காலோடு பிணைந்திருந்த பொம்மையின் மீது மந்திரம் சொல்லி பூக்களை வீசினார். பின்னர் கோழி ஒன்றை எடுத்து வர சொல்லி, அதனை ஆதியின் தலையை சுற்றினார்.
பிறகு அவன் காலில் கட்டியிருந்த நூலை எடுத்து கோழியின் கழுத்தில் சுற்றினார். அக்னியை மூன்று முறை சுற்றி அந்த பொம்மையின் மீதும் சுற்றினார். அவன் ஜாதகத்தை எடுத்து வைத்துவிட்டு தனது கையாலே கோழியின் கழுத்தை இழுத்து துண்டாக்கினார்.
வடிந்த ரத்தங்கள் அந்த பொம்மையின் மீது ஆதிக்கம் செலுத்தியது. பிறகு அந்த கோழியை தீயில் போட்டுவிட்டு மீண்டும் சில மந்திரங்களை கூறினார்.
இதெல்லாம் நடந்து முடிக்கும் போது இரவு மணி 1.00ஐ தாண்டி இருந்தது.
காளி தேவியின் காலடியில் இருந்த தாயத்தை ஆதியின் கையில் கட்டிவிட்டு, “தம்பி இந்த யந்திரத்தை உன்னோட தலைமாட்டில் வச்சுக்கோ. இனி எந்த தீய சக்தியும் நெருங்காது. இனி எந்த குரலும் உனக்கு கேட்காது. நிம்மதியா இரு” என்று யந்திரம் கொடுத்து அனுப்பி வைத்தார்.
“டேய் நான் சொன்னேன்ல. அவர் சொன்ன மந்திரத்தையும், பூஜை முறையும் பாத்தியா? எவ்வளவு பெருசா பண்ணினாரு. இப்போ நம்பறியா இதெல்லாம் உண்மைதான்னு” செல்வா கேட்க,
“ஆமாடா. இப்போ ஏதோ பெட்டரா ஃபீல் பண்றேன். அவர் பூஜை பண்ண பண்ண எனக்குள்ள ஏதோ ஆச்சுடா. யாரோ என்னைய விட்டு விலகி போற மாதிரி இருந்துச்சு” என்றான்.
“சரி வா... இப்பவே ஊருக்கு போயிடலாம். இங்க தங்க வேணாம்” என்று சென்னை நோக்கி புறப்பட்டு பயணிக்க ஆரம்பித்தது.
இருள் சூழ்ந்த அந்த சாலையில் காரின் வேகம் நூறை தாண்டி இருந்தது. செல்வா கண்ணயர்ந்து தூங்கி கொண்டு வந்தான். இளையராஜாவின் மெல்லிசைப் பாடல்கள் மெதுவா ஒலிர விட்டு காரை ஓட்டிக்கொண்டு வந்தான்.
அதிகாலை மணி 4.45...
தீடிரென யாரோ காரின் குறுக்க வந்தது போல இருந்தது. சடென் பிரேக் அடித்தான். கீச் என்று சக்கரங்களின் கருப்பு நிறம் சாலை நிறத்தை தாண்டி பதியும் அளவிற்கு வேகம்.
இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் தப்பித்தார்கள். ஆனால் அதில் இருவருமே பயத்து போனார்கள். செல்வாவிற்கு தூக்கம் கலைந்திருந்தது.
“என்னடா ஆச்சு? ஏன்டா?”
செல்வாவின் குரல் ஆதியின் காதில் விழவில்லை. வெளியே எழுந்து ஓடியவன் பிரேக் பிடித்த இடம் வரை சென்று பார்த்தான். அங்கு யாருமில்லை.
“டேய் என்னடா நடந்திச்சு... டேய் ஆதி... டேய் ஆதி...” அவன் கைகளை பிடித்து உலுக்கினான்.
“இல்லடா. யாரோ குறுக்க வந்த மாதிரி இருந்திச்சு” என்றான்.
“ஏதாவது அனிமல்ஸ்ஸா இருக்கும்டா. வா போலாம்” என அவன் கையை பிடித்து இழுக்க அவன் அங்கேயே நின்றான் திரும்பாமல்.
சாலையில் லேசான இருள் நீங்கிய வெளிச்சத்தில் அடர் சிவப்பு நிறத்தில் இரத்தம் ஓட ஆரம்பித்தது. சில நொடிகளில் அந்த ரத்தம் அங்கேயே உறைந்து கல்லாக மாறியது.
ஒரு குழந்தையின் சடலம் அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது.. “அய்யோ என் குழந்தைய கொன்னுட்டானே.. என் சாமி..” தலையில் அடித்து கொண்டு ஓடி வந்த தாய் அக்குழந்தை தொட்டு கதறினாள்.
அன்று அவன் கனவில் வந்த அனைத்தும் இன்று அவன் கண் முன்னே கண்டான்.
“ஆதித்யா... உன்னோட சாவு என் கையில தான். உன்ன கொல்ற வரைக்கும் என் ஆயுள் முடியாது” என்று அவனை நோக்கி ஓடி வந்த உருவம் அவர் மீது பட்டு கலைந்தது.
ஆனால் ஆதி அங்கேயே உறைந்து போனான். அதுவரை கனவில் வந்த அந்த உருவமும் அடிக்கடி கேட்ட அந்தப் பெண்ணின் குரலும் ஒருவர் தான் என்பதை அப்போது அறிந்து கொண்டான்.
“ஆதி.... ஆதி... வா....” என்று இழுத்துக்கொண்டு காரில் அமர வைத்த செல்வா தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தான்.
“ செல்வா அந்த ஜோசியர் நம்மள ஏமாத்திட்டான்டா. காசு ஆட்டய போட்டுட்டான். உடனே கார திருப்பு. அவன் இன்னைக்கு உண்டு இல்லைன்னு பண்ணிடறேன் பாரு” என்று கத்தினான்.
“பொறுடா. என்ன நடந்துச்சு? எதுக்கு இப்படி கத்துற? சொல்லுடா”
“இனிமேல் எந்த குரலும் கேட்காது. நிம்மதியா இருக்கலாம்னு சொன்னான். ஆனா இப்போ குரல் மட்டுமல்ல. உருவமும் தெரிய ஆரம்பிக்குதுடா. இதுல தாயத்து வேற” கலட்டி எறிந்தான்.
கார் மீண்டும் கும்பகோணம் நோக்கி அதே வேகத்தில் பயணிக்க ஆரம்பித்தது.
“ஆதி கொஞ்சம் பொறுமையா இரு. நான் பேசிக்கிறேன். நீ டென்சன் ஆகாத. புரிஞ்சுதா?” மீண்டும் மீண்டும் அவன் கோபத்தை கட்டுப்படுத்த பேசிக்கொண்டே வந்தான் செல்வா. காலை 7.55க்கு அவரின் வீட்டை அடைந்தார்கள். ஆனால் அவர் வீட்டின் முன் போலீஸூம் கூட்டமும் நின்று கொண்டிருந்தது.
“என்னைய மாதிரி ஏமாந்த எவனோ ஒருத்தன் போலீஸோட வந்துட்டான் மச்சி. இன்னைக்கு என்ன பண்றேன் பாரு” என்று கூட்டத்தை விலக்கி கொண்டு உள்ளே சென்றார்கள் இருவரும்.
அங்கே அவர் இறந்து கிடந்தார். உடல் முழுவதும் ரத்த கறை இருந்தது. அவர் மனைவியும் உறவுகளும் கதறிக்கொண்டு அழுதார்கள்.
“மேம் இவரு எப்படி இறந்தார் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்று போலீஸ்காரர் கேட்க,
அவரின் மனைவி, “காலையில 4.45 இருக்கும் சார். இருமிகிட்டே இருந்தாரு. நைட்டு லேட்டா தான் வந்தாரு பூஜை முடிச்சுட்டு. தண்ணி வேணும்னு கேட்டாரு... நானும் உள்ள போய் தண்ணி கொண்டு வந்து பாத்தப்போ!!” அப்படியே உறைந்து போனார்.
“மேம் பதட்டப்படாம சொல்லுங்க” என வலியில் இருந்தவரை மெல்ல துளைக்க ஆரம்பித்தது காவல்துறை.
“அவர் மூக்கு, வாய்ல இரத்தமா வடிஞ்சுது. என்னங்க! என்னங்கனு நான் ஓடி போய் புடிக்க போனேன். கிழக்க பாத்து கும்பிட்டாரு, ஏதோ மந்திரம் சொன்னாரு.அப்படியே முன்னாடி பாத்து விழுந்தாரு. எந்திரிக்கவே இல்ல!” என்று அவர் அழுத நொடியில் மொத்த கூட்டமும் ஸ்தம்பித்த போனது.
“மச்சி இங்க இருந்து போலாம் வா... நேத்து நைட்டு நாம தான் கடைசியா இருந்தோம்... வாடா... வா..” கையை இழுத்துக் கொண்டு காரில் ஏறினான் செல்வா.
“இரு செல்வா! ஏதோ சரியா படல. நாம இருப்போம்டா.” ஆதி கூற,
“போடா மெண்டல்.. நம்ம கூட நைட்டு அந்த ஆளு இருந்தாருன்னு தெரிஞ்சா நம்மள கம்பி என்ன விட்ருவாங்க... வாடா..” காரை வேகமாக சென்னை நோக்கி இயக்கினான்.
“மச்சி எனக்கு சந்தேகமாக இருக்குடா. திடீர்னு தெரிஞ்ச உருவம். ஜோசியர் சாவு. இதெல்லாம் ஏதோ ஒன்னு பெரிசா இருக்கற மாதிரி தோணுது.” என்று சொன்னதும்,
“டேய் நம்மள மாதிரி பலபேருக்கு இந்த ஆளு பூஜை பண்ணி இருப்பான். அதுவும் இல்லாம உடம்பு வளையாம உக்காந்தே பாக்குற வேலை அது. ஏதாவது உடம்புல பிரச்சினை இருந்திருக்கும்.” ஆறுதலாக பேச ஆரம்பித்தான்.
ஆனால் செல்வா மனதில் ஆதி சொன்ன விசயத்தை ஒப்புக்கொண்டான். மேலும் கேஸ் ஆகிவிடுமோ என்ற பயமும் அவனுள் அதிகமாக இருந்தது...
மதியம் 2.30 மணிக்கு அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் வந்து காரை நிறுத்தினான்.
“ஆதி ஒருவேள நம்மள போலீஸ் தேடி வந்தா என்ன செய்யறது? நாம இப்போ பெரிய பிரச்சினைல இருக்கோம்டா”
“அதைவிட பெரிய பிரச்சினைல இருக்கேன் நான். அம்மா கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்டா. நேரா வீட்டுக்கு போய் அம்மாகிட்ட எல்லா உண்மையும் சொல்லலாம்னு இருக்கேன்டா”
“மச்சி இது தேவை இல்லாத வேலை. அம்மா கிட்ட சொன்னா அவங்க ரொம்ப பயப்படுவாங்க. அதுவுமில்லாம இப்ப சூழ்நிலை சரியில்ல. வேணாம் மச்சி” செல்வா சொல்ல,
“நீ சொல்றது தான் கரெக்ட் ஆதி. அம்மா கிட்ட நீங்க எல்லாத்தையும் சொல்லணும். ஒருவேளை அவங்க உனக்கு உதவி செய்ய நேர்ந்தா?” என்ற குரல் வந்த திசையில் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.
“ராகேஷ் இங்க நாங்க இருக்குறது உனக்கு எப்படி தெரியும்?” செல்வா ஆச்சரியமாய் கேட்க,
“ஆதி தான் மெசேஜ் பண்ணி வர சொன்னான். செல்வா அவனுக்கு இருக்குற பிரச்சனையோட சீரியஸ்னஸ் உனக்கு புரியல. வா வீட்டுக்கு போலாம்” என அழைத்து சென்றான்.
வீட்டிற்குள் நுழைந்த தன் மகனை பார்த்த வித்யா, “என்னடா ஒரு மாதிரி இருக்க? என்ன ஆச்சு?” என வினவ,
“அம்மா இத்தனை நாளா நான் உன்கிட்ட ஒரு உண்மைய மறைச்சுட்டேன். நான் இப்ப சரியாவே இல்லம்மா. கொஞ்சநாளா நான் பைத்தியமா இருக்கேன்”
தன் மடியில் அவனை படுக்க வைத்து தலை கோதிவிட்டார். “என்ன ஆச்சு ஆதி. ஏன் இப்படி பேசுற?”
“இல்லம்மா. என்னால முடியல. எத்தனை நாளைக்கு தான் நானும் மறைப்பேன். ராகேஷ் கிட்ட ட்டீரிட்மெண்ட் கூட எடுத்துட்டு இருக்கேன்” என்றான்.
வித்யாவோ ராகேஷ் செல்வாவை நோக்கி புருவம் உயர்த்திய பார்வையை திருப்ப, என்ன பேசுவது என்று தெரியாமல் தலை குனிந்து நின்றார்கள்.
“அம்மா! ம்மா!” என்று தன் கண்களில் நீர் வழிய அனைத்தையும் ஆரம்பத்தில் இருந்து சொல்லி முடித்தான் ஆதி.
அவன் சொல்வதை அனைத்தையும் நம்புவதா? வேண்டாமா? என்ற சந்தேகம் அவர் கண்களில் ஏதும் இல்லை.
அவனை எழுப்பி அவன் கண்களை பார்த்தவர், “உனக்கு இவ்வளவு சீக்கிரம் இதெல்லாம் கனவுல வரும்னு நினைக்கல” என்றவரை பார்த்த ஆதி மட்டுமல்ல ராகேஷூம் செல்வாவும் கூட மிரண்டு போனார்கள்.
தொடரும்...