Malini Sundar
Member
கடிகாரத்தில் நொடி முள் ஒவ்வொரு அடியாக நொண்டி அடித்துக்கொண்டு இருந்தது. பெரிய முள் கடிகாரத்தின் உச்சாணியை சுட்டிக்கொண்டு இருந்தது.சின்ன முள்ளோ தத்தி தத்தி சோம்பேரியாய் கோணலாக இருந்தது.
" த்வானி. ரைம்ஸ் பாத்தது போதும். மணி பத்தாச்சு. வா தூங்கலாம்" என்று தன்
நாலு வயது மகளை டிவியின் முன்னிருந்து எழுப்பிக்கொண்டு இருந்தாள்.
" மா.மா... இந்த ஒரே ஒரு ரைம்ஸ் மா..ப்ளீஸ் மா.." என குழந்தை கேட்ட தொனி மறுப்புக்கு மறுப்பு தெரிவித்து விட்டது! அந்த ஒரு ரைமை பார்த்துவிட்டு இருவரும் தூங்க சென்றனர்.
"பாப்பா..சுச்சு போனியா?"
" இல்ல மா.. ஏன் டெய்லி தூங்குறதுக்கு முன்னாடி சுச்சு போக சொல்ற?" கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பித்தது குழந்தை.
" அதான் நல்லது "
" ஏன்..? "
" தூங்கும்போது அப்றம் வந்தா என்ன செய்வ? "
" எழுந்து போகணும்.. அப்றம் தூக்கம் கலஞ்சிடும்.அப்றம் உன்ன எழுப்பணும்..அதானே"
சிரித்துக்கொண்டே " ஆமா..போய்ட்டு வா" என்றாள். ரெஸ்ட்ரூம் போய் வந்ததும் த்வானி
" மா.. மடில படுத்துக்குறேன்"
" த்வானி.. பிக் கேர்ள் ஆகறல, உன் தலைகாணில படுத்துக்கோ. நா தட்டறேன்..சரியா?? "
அரை மனதுடன் ஒப்புக்கொண்டது குழந்தை.ஐந்து நிமிடம் கடந்திருந்த நிலையில்
" மா.. மடியில படுத்துக்கறேன்.."
" சரி வா" என குழந்தையை பெட்டிலிருந்து மடிக்கு மாற்றினாள்.
" மா..விக்ஸ் தேய்ச்சி விடு "
" சும்மா சும்மா தேய்க்க கூடாது கோந்தே! சளி பிடிச்சா தானே அம்மா தேய்ச்சு விடுவேன்?? "
" ஆமா..ஆனா நீ ஏன் டைலி தைலம் தேய்ச்சிக்குற அப்றம்?? " என எதிர் கேள்வி கேட்டது.
" அம்மா வேலை அப்டிடா.. தலை வலிக்குது அம்மாக்கு அதான் தேய்ச்சிக்குறேன்.குட்டி பாப்பாலாம் அத செய்ய கூடாது"
"ஏன் செஞ்சா என்ன? "
" செய்ய கூடாது. அவ்ளோ தான்.நீ தூங்கு இப்போ.."
" அதான் ஏன்.. ரீஸன் சொல்லு!! "
" அப்றம் சொல்றேன்.இப்போ தூங்கு.கண்ண மூடு. டைம் ஆகிடுச்சு பாரு " என்றவளின் கை அனிச்சையாக குழந்தையின் தலையை கோதியது.வாய் பாட்டு ஒன்றை பாடியது.
" ஆராரோ ஆரிராரோ
யாரடிச்சு நீ அழற.." என்பவளை இடைமறித்தது குழந்தை
" மா..."
" என்ன டீ.. நீ இன்னும் தூங்கலியா? "
" ஏன் இந்த பாட்டு பாடற? "
" ஏன்..இதுக்கு என்ன? "
" நா அழவே இல்லயே இப்போ, அப்றம் ஏன் இந்த பாட்டு. அதுல ஏன் அழறன்னு வருதுல்ல! "
" அம்மா.. தாயே.. தூங்கறியா..? "
" ம்ம்ம்ம்" என குழந்தை அமைதியானதே தவிர, கண்ணை மூடவில்லை. அவள் பாட்டை தொடர்ந்தாள்
" ஆராரோ ஆரொராரோ
யாரடிச்சு நீ அழற..
அடிச்சார சொல்லி அழு
அன்னமே என் தாராவே.."
கைகள் தலையை கோதியவண்ணம் அவ்வப்போது குழந்தையின் கண்களையும் மறைத்தது.
"அத்தை அடிச்சாளோ
அரளிப்பூ செண்டாலே
மாமி அடிச்சாளோ
மல்லிகைப்பூ செண்டாலே
அடிச்சார சொல்லி அழு
அன்னமே என் தாராவே"
பாட்டுக்கேட்டுக்கொண்டே அம்மாவின் விரல் இடுக்கு வழியே, ரூமை நோட்டம் விட்டது. அந்த இருட்டான அறையை லேசாக வெளிச்சம் போட்டு காட்டியது நைட் லேம்ப். சுவற்றை ஒட்டிய படுக்கையிலிருந்து பார்த்து கொண்டிருந்தது குழந்தை .பக்கத்தில் அவள் ஏறி விளையாடும் ஜன்னல், அதை தாண்டி சிறிய கப்போர்ட்,கதவுடன்.படுக்கைக்கு இடப்பக்கம் பாத்ரூம், அதை தாண்டி கதவு. கதவு பக்கத்தில் சுவற்றில் ஸ்விட்ச் போர்ட். அதிலிருந்த ப்ளக்கில் சொறுகப்பட்டிருந்த நைட் லேம்ப். சொறுகியிருந்த விளக்கை பார்த்துக்கொண்டே இருந்த குழந்தையின் கண்களும் சொறுகின.
" பாட்டி அடிச்சாளோ
பால் வார்க்கும் சங்காலே
சித்தி அடிச்சாளோ
சீராட்டும் கையாலே
ஆராரோ ஆரிராரோ
யாரடிச்சு நீ அழற
அடிச்சார சொல்லி அழு
அன்னமே என் தாராவே"
பாடி அவள் முடித்திருக்க,குழந்தையும் அவளுள் புதைந்து தூங்கியிருந்தது. த்வானியை மடியில் இருந்து படுக்கையில் கிடத்திவிட்டு, நெற்றியில் முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு, தானும் படுத்துறங்கினாள் அவள்.!
(இசைக்கும்...)