கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

த்விஜாவந்தி - ஆரோஹனம் 12

த்விஜா கேட்ட கேள்விகளுக்கு விடை தன்னிடம் இல்லை என்பது ராகனுக்கு புரிந்தது. அந்த வாய்ஸ் மெசேஜ்ஜை தான் அனுப்பவில்லை என்பது மட்டும் அவனறிந்த உண்மை.

“ ஜா இத நா அனுப்பல. யாரு அனுப்பினாங்கன்னும் எனக்கு தெரியாது. “

“ என் கெஸ்ஸிங் சரியா இருந்தா அவரு தான் அனுப்பிருக்கணும் . அவர் தான் பல குரல் மன்னனாச்சே “ சொன்னவளின் குரலில் வெறுப்பு வழிந்தோடியது.

“ யார சொல்ற. “

“ எல்லாம் உன் ஃப்ரெண்ட தான் “

“ ஏய்.. என்ன நானும் அப்போலேந்து பாக்கறேன். நீ அவன குறை சொல்லிட்டே இருக்க.. நீ அவ தான லவ் பண்ண.? அவன தான் கல்யாணமும் பண்ணிகிட்ட ?” வார்த்தைகள் ஈட்டியாய் பாய்த்தது.

ராகனை எறித்துவிடுவது போல் பார்த்துக்கொண்டிருந்தாள் த்விஜா.

“ என்ன சொன்ன? நா அவன லவ் பண்ணிணேனா? இத சொல்ல உனக்கு வெக்கமா இல்ல ? “

அவள் கேட்டதில் ராகனும் சற்று தடுமாறித்தான் போனான். பெருமூச்சை ஒன்று விட்டாள் த்விஜா.

“ அன்னைக்கு என்ன ஆச்சு ஹாஸ்ப்பிட்டல்ல? “

“ அது எதுக்கு இப்போ ?”

“ சொல்லு “

ராகன் அன்றைய நினைவிற்கு சென்றான். ஹாஸ்பிட்டலில் வந்தனாவை காப்பாற்றி இருந்தனர். அவள் கண் விழித்ததும் உள்ளே நுழைந்தான் ராகன்

“ வண்டூ “

கண்கள் சோர்வாக இருந்தன. கையில் ஊசி வழியாக ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது.

“மாமா..” என்றாள்.

இதென்ன புதிதாக மாமா என நினைத்தான்.

“ என்ன வண்டூ இதெல்லாம் “

“ உனக்கு என்ன பிடிக்கலயா?’

“ அப்டி இல்ல வண்டூ. நா போய் எப்டி உன்ன கல்யாணம் பண்ணிக்க ?”

“ ஏன் மாமா.. நா பொண்ணு மாறி இல்லயா..?”

“ வண்டு. உனக்கு எப்டி புரிய வெக்க! “ என குழம்பினான்.

“ நீ ஒண்ணும் புரிய வைக்க வேணாம். ஒன்னு கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கோ, இல்ல, என்ன இங்கயே கொன்னுடு “

சூழ்நிலை கைதியானான் ராகன். வீட்டில் தன் காதலை கூறி, சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொள்ளும் முடிவுடன் வந்தவன், இங்கு வேறு வழி தெரியாது , சம்மதமும் சொல்லாமலும் இருந்தான்.

அப்போது தான் தன் கடிதம் வந்தது. கடிதத்தை படித்தவன் , நொந்து போனான். எதற்காக ஆசையாக வந்தானோ, எதற்காக இன்னும் வந்தனாவிற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறானோ, அதுவே இல்லை என்றான பிறகு , மொத்தமாக உடைந்து போனான்.

அந்த கடிதத்தை ஒரு நூறு முறை படித்திருப்பான். மனம் அதை நம்ப மறுத்தது. அவளா… இருக்காது என ஒரு புறம் தோன்றினாலும் , பிறகு இது என்ன என்றும் தோன்றியது.

ராகன் இப்படி இருப்பதை பார்த்த கல்பனா, அவனிடம் பேசியும் ஒன்றும் பயனில்லை. அப்படியே தான் இருந்தான். தான் ஆசைபட்டது தான் கிடைக்கவில்லை , தன் வண்டுவின் ஆசையாவது நிறைவேறட்டும் என திருமணத்திற்கு சம்மதித்தான்.

திருமணமும் விமரிசையாக நடத்தப்பட்டது. ராகனின் முகத்தில் தான் எந்த வித உணர்ச்சியும் இல்லாது போனது. கோவம், ஏமாற்றம் , என பல உணர்ச்சிகளின் சங்கமமாக இருந்தான். வந்தனாவிற்கோ, தான் நினைத்ததை சாதித்துவிட்ட, சந்தோஷம். மனம் கவர்ந்தவனே, மணாளனாக அமைவது, எல்லா பெண்களுக்கும் அமைந்துவிடுமா என்ன! அப்படி அமைந்து விட்டால், அப்பெண்ணின் மனம் தான் பூரிப்பில் திளைக்காதா.

இது பெண்களுக்கு மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் பொருந்துமே !



திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்து அடுத்த சம்ப்ரதாயத்திற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. வந்தனாவிற்கோ, வெட்கம் , படபடப்பு என்றிருக்க, ராகனுக்கோ அதில் சிறிதும் நாட்டமில்லை. முதலில் தன் மனதை வந்தனாவிற்கு புரிய வைக்க நினைத்தான்.



“ மாமா..” குரலில் ஸ்ருதி மாறியிருந்தது.

“ வந்தனா. நா சொல்றத மொதல்ல கேளூ ப்ளீஸ்”

“ சொல்லுங்க மாமா “

“ ப்ளீஸ் . இந்த மாமாவ மொதல்ல நிறுத்தேன். இதென்ன புதுசா. ?”

“ ஏன் பிடிக்கலயா..?”

“ அப்டி இல்ல .. ப்ளீஸ். நீ இயல்பா இரு. இது எதோ வித்தியாசமா இருக்கு “

“ சரி.”

“ இங்க பாரு. நா இங்க வந்து என்னனவோ செய்ய ப்ளான் வெச்சுருந்தேன். இப்டி அதுக்குள்ள கல்யாணத்துக்கு நான் தயார் ஆகல. அதுனால..”

“ அதுனால..”

“ எனக்கு கொஞ்சம் டைம் குடு ப்ளீஸ் “

ராகன் எதையும் முழு மனதோடு செய்ய விரும்புபவன் என்பதை வந்தனா நன்கு அறிவாள். இருப்பினும் ஆசை கொண்ட மனம் ஆயிற்றே. சற்று கடுப்பாகத்தான் இருந்தது. அவனை கட்டாயப்படுத்துவதை விட, அவன் மனமுவந்து தன்னோடு தங்கள் வாழ்க்கையை துவங்க வேண்டும் என நினைத்தவள்



“ சரி… நா வெய்ட் பண்றேன் “ என சிறிய புன்னகையை உதிர்த்துவிட்டு, படுத்துறங்கினாள். நாட்கள் நகர, காதலை மறந்து, இல்லை இல்லை, பின்னுக்கு தள்ளிவிட்டு, வந்தனாவை நேசிக்க தொடங்கினான் மனைவியாக….!



(இசைக்கும்…)
 
Top