Malini Sundar
Member
த்விஜாவந்தி – ஆரோஹனம்- 16
காத்திருந்த த்விஜாவை ஏமாற்றாமல் வந்து சேர்ந்தான் ராகன் , போதையுடன். ராகனை அவ்வாறு பார்த்தவளின் மனம் உடைந்தது.
“ ராகா . என்ன இதெல்லாம் ?”
“ எதூஊ…” என தள்ளாடினான்.
“ இதென்ன பழக்கம் ?’
சுறுசுறுவென கோவம் தலைக்கேறியது அவனுக்கு, பரபரவென வந்தவன் அவள் தாடையை கையால் பிடித்தான்.தாடையை அழுத்திக்கொண்டே அவளை நகர்த்தியவன் நின்றான். அவள் எங்கோ போய் முட்டிக்கொண்டு நின்றதால். தாடையை அவன் அழுத்த, குவிந்த அவளின் உதட்டினை நோக்கி குனிந்தான், தன் மதுவாடை வரும் வாயோடு. நெருங்கி வந்தவனின் மீது வந்த வாடையில் அவளுக்கு உமட்டிக்கொண்டு வந்தது. மேலும் குனிதவனின் உதடு அவளை தொடும் முன்னர் , அவள் விழிகளில் இருந்த மிரட்சியை கண்டவனுக்கு எதோ உறைக்க , அவளை விடுத்து நகர்ந்தான்.
“ நில்லு.” என்ற அவளின் குரலில் நின்றான்.
“ என்ன இது ? கோவம்னா பேசி தீக்கணும் . இதென்ன புதுசா ?”
பதில் கூறும் நிலைமையில் அவன் இல்லை என புரிந்து கொண்டவள்
“ வா எங்கூட “ என் இழுத்து சென்றாள். பாத்ரூமில் நிற்க வைத்து பச்சை தண்ணீரை தலையில் ஊற்ற நடுங்கிப்போனான்.கீழே ஓடிய தண்ணீருடன் போதையும் சற்று விடை பெற்றது.
“ சீக்கிரம் தொடச்சிகிட்டு வா “ என வெளியேறினாள்.
அவள் சென்றதும் ஈர உடையிலிருந்து, , வேறு உடை மாற்றி வந்தவனை முறைத்துக்கொண்டு இருந்தாள் த்விஜா. அமைதியாக வந்தான் அவளை பார்க்காமல்.
“ எப்டி இனி என்ன பாக்காமலே ஓட்டிடுவியா நீ வாழ்க்கைய ?”
அமைதியாக இருந்தான்.கையில் நைட் லேம்ப்பின் டேபிளில் இருந்த ஸ்மைலி பால் வந்தது. அவள் ஏதேதோ சொல்லிக்கொண்டே போக, அவன் பாலை அழுத்திக்கொண்டு இருந்தான்.
“ உன்ன தான் கேக்கறேன் “ என அவளின் வார்த்தைகள் கடைசியாய் விழ, முழித்தான் , அவள் கேட்டது தெரியாததால்.
பேந்த பேந்த முழித்தவனை மீண்டும் பார்த்தாள்.
“ நீ என்ன பேசினன்னு நா காதுல வாங்கல “
“ ம்ம்ம் “
“ எனக்கு ஒன்னே ஒன்னு தான் தெரியும் ஜா “
“ என்ன ?”
“ நா உன்ன லவ் பண்ணிட்டு இருக்கேன்..”
“ உஃப்ஃப்ஃப்ஃப் “
“ நீயும் என்ன லவ் பண்ணது கொஞ்சமாச்சும் இருந்தா. என்னை நம்பு. “
அமைதியாக இருந்தாள்.
“ ஒருத்தன, ஒன்னு முழுசா நம்பணும். இல்ல நம்பவே கூடாது. இந்த அரைகுறையா நம்பி எதுக்கு கொழப்பிக்கற நீ ?”
அவன் கேட்டது அவளுக்கு மனதை வதைத்தது.
“ இங்க பாரு ராகா. உன்ன லவ் பண்ணினது உண்மை தான். ஆனா, அதுக்கு அப்றம் நடந்த எத்தனையோ விஷயங்கள் யாரையும் இதுக்கு மேல் நம்பகூடாதுன்னு நினைக்கற அளவு ஆகிடுச்சு “ என்பவளின் கண்கள் மீண்டும் கலங்கின.
ஜா அருகில் வந்தான் ராகன்.
“ ஜா ப்ளீஸ். நா கடைசியா கேக்கறேன். ஒரு வாட்டி எனக்கு சான்ஸ் குடு, நா உண்மையா இருந்தேன்னு உனக்கு நா புரிய வெக்கறேன் . அதே மாதிரி, நீ அனுபவிக்கற கஷ்டம் எல்லாதையும் , முழுசா சால்வ் பண்ண முடியலன்னாலும், அத நானும் ஷேர் பண்ணிக்கறேன் டீ “
அவனின் கெஞ்சல் தொனி அவளை என்னவோ செய்தது. உண்மையை கூறும் அவன் கண்களை பார்த்தாள். மீண்டும் அதில் தொலைந்து போக எண்ணியது மனம்.
“ சரி “ என்றாள்.ராகனுக்கு விளங்கவில்லை.
“ என்ன சரி ?”
“ நம்பறேன் “
அவனுக்கு அதுவே பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. அடுத்ததையும் இப்போதே கேட்க தோன்றியது. அவள் மறுப்பாளோ என்ற எண்ணம் வர, வாயை மூடிக்கொண்டான்.
“ ம்ம்ம் “ என மெல்லியதாய் சிரித்துவிட்டு நகர்ந்தவனை
“ டெல்லிக்கு டிக்கெட் போடு. “ என்ற அவளின் வார்த்தை மேலும் அதிர்ச்சியாக்கியது.
மனதில் எழுந்த பூரிப்பாய் முகத்தில் காட்டாமல்
“ம்ம்ம் சரி “ என தன்னிடத்தில் படுத்துக்கொண்டான்.
த்விஜாவும் த்வானியின் மறுபக்கம் படுத்துக்கொள்ள, ஏனோ அவள் மனம் லேசானதாக தோன்றியது. பல வருடங்களாக மனதில் ஏறியிருக்கும் பாரத்தை, ராகனிடம் இறக்கி வைக்க வேண்டும் என மனம் கூறியதை அவளால் சம்மதிக்காமல் இருக்க முடியவில்லை.
கூறியபடி, காலையில் இருவரும் டிக்கெட் புக் செய்தான்.இரண்டு நாளில் கிளம்புவதாக இருந்தது. கல்பனாவிடம் கூற, அவரும் த்வானியை தான் பார்த்துக்கொள்வதாக கூறவே, அவனுக்கும் அது சரி என்றே தோன்றியது.
அதன் படி, மீட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு , கிளம்பினர் ராகனும் , த்விஜாவும். த்வானியை தனியே விட்டுச்செல்ல தான் அவளுக்கு மனம் வரவில்லை. கல்பனா அழுத்தமாக தான் பார்த்துக்கொள்வதாக கூற, அரை மனதுடன் கிளம்பினாள் த்விஜா.
ஃப்லைட் பிடித்து வந்தவர்களை, இந்தியாவின் தலை நகரம் அன்புடன் வரவேற்றது. தான் புக் செய்திருந்த டீல்க்ஸ் ஸ்வீட் ரூமின் கீயை வாங்கிக்கொண்டு த்விஜாவை அழைத்து சென்றான்.
ரூம் சர்வீஸ் வந்து பெட்டிகளை இறக்கிவிட்டு செல்ல,கதவை மூடிவிட்டு வந்தான் ராகன்.வந்த களைப்பில் இருவருக்கும் காஃபி ஆர்டர் செய்தான்.
“ காஃபி வந்தா வாங்கி வை. ரெஃப்ர்ச்ஷ் பண்ணீட்டு வரேன் “ என துண்டை எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி நடந்தான் ராகன்.
ஆளை உள்வாங்கும் அந்த படுக்கையில் அமர்ந்தவள்,லேசாக தலையை ஹெட் போர்டில் சாய்க்க, பயண களைப்பில் அப்படியே உறங்கிப்போனாள்.
நெடு நேரமாக , காலிங் பெல்லின் சத்தம் கேட்பதை உணர்ந்தான். முகம் கழுவு வத ராகன், வ்னதவன் பாத்ததோ உறங்கி கொண்டிருந்த த்விஜாவை. கதவை திறந்து காஃபிகளை வாங்கியவன், மீண்டும் உள்ளே வந்து தன் பங்கை அறுந்திவிட்டு நகர்ந்தான். ஹெர்ட் போரட்டில் தலையை சாய்த்து தூங்கியவளைக , சரியா படுக்க வைத்துவிட்டு, நெற்றியில் முத்தமிட்டு, தானும் புதை மெத்தையில் புதைந்து போக, படுத்துக்கொண்டான்.
டெல்லி பயணம் அவர்கள் வாழ்வில் திருப்பங்களை கொணருமா???
( இசைக்கும்…)