கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

த்விஜாவந்தி - ஆரோஹனம் 19 (இறுதி பாகம் )

த்விஜாவந்தி – ஆரோஹனம் 19



காலையில் இருவரும் குளித்து கிளம்பினர். த்விஜா சோர்வாக இருந்தாள்.

“ ராகா ..இன்னைக்கு போக வேணாம். தலை ரொம்ப வலிக்குது “

“ போலாம் ஜா. வெளிய ஃப்ரெஷ் ஏர் கிடைச்சதும் சரி ஆகிடுவ நீ . வா போலாம் “ என இழுத்து சென்றான். ஓரு வேளை அவள் கூறியது போல் ரூமிலேயே இருந்திருந்தால்..!



சாப்பிட்டு விட்டு, தாஜ் மஹாலை பார்க்க விரைந்தனர். வெள்ளை மார்பிள் கல்லில் கட்டப்பட்டிருந்ததை பார்த்து இருவருக்கும், மனதுக்குள் இதம் பரவியது. சற்று நேரம் அங்கிருந்துவிட்டு, கிளம்பினர். ஓர் உணவகத்தை பார்த்து சாப்பிட அமர்ந்தனர். உணவு ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர். ராகனின் ஃபோன் மீண்டும் அடித்தது.

“ ஹலொ.. ஹலோ “ என்றான்.

“ இரு. வெளிய வரேன். ஒன்னும் கேக்கல “ என வெளியே சென்றான்.

வெளியே வந்தவன்.” சொல்லு ராகுல் “ என்றான்.

“ ஆர் யூ சூர் ? “

“ ஓகே டா. ரொம்ப தேங்க்ஸ் “ என இணைப்பை துண்டித்துவிட்டு உள்ளே சென்றான்.

அங்கு த்விஜா டேபிளில் இல்லை. எங்காவது வாஷ்ரூம் போயிருப்பாள் என நினைத்தான்.

மனம் சதோஷத்தில் குத்தாட்டம் போட்டது. தான் நினைத்தது போலவே அந்த விஷயம் உண்மையென தெரிந்து, மனம் நிறைந்தது. அதை பற்றியே நினைத்துக்கொண்டு இருந்தவன், வெகு நேரமாகியதை கவனிக்கவில்லை. த்விஜாவும் டேபிளுக்கு வரவில்லை. ராகனின் ஃபோன் மீண்டும் அடித்தது.

“ ஹலோ “

“ என்ன மிஸ்டர் ராகன். பொண்டாட்டி இவ்ளோ நேரமா கூட இல்லாதது கூட தெரியாத அளவு என்ன யோசனை அப்டி ? “

“ ஏய் . யார் நீ ? “

“ நானா.. உன் மாமனார் “

“ என்ன ? “

“ ஆமா… த்விஜா எங்கூடதான் இருக்கா “

“ என்ன உளறிட்டு இருக்க? என்ன வேணும் உனக்கு ? “

“ பரவால்லயே.. பிசினஸ் மேன்ல . அதான் ஸ்ட் ரயிட்டா பாயின்ட்கு வந்துட்ட “

“…”

“ எனக்கு தேவையெல்லாம் ஒரே ஒரு கையெழுத்து . அத போட்டுட்டா நா ஏன் உங்கள அப்றம் தொந்தரவு செய்ய போறேன் சொல்லு “



ராகனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. எதோ மனதில் தோன்ற

“த்விஜா உங்கிட்ட தான் இருக்கான்னு நா எப்டி நம்பறது ? “

“ அதான. .. இரு உன் பொண்டாட்டி கிட்ட ஃபோன குடுக்கறேன் “ என ஃபோன் கை மாறியது.

“ ராகா “ கூறியவளின் குரலில் பதட்டம்.

“ ஜா.. ஜா.. நீ எங்க இருக்க ? “

“ தெரீல ராகா. நீ வா.இந்த பாழா போன சொத்து நமக்கு வேணாம். “

“ சரி நீ பயப்படாம இரு. நா வந்துடறேன் “

“ ம்ம்ம் சீக்கிரம் வந்துடு ராகா “ என கூறி கொண்டிருந்தவளிடமிருந்து ஃபோன் பறிக்கப்பட்டது.

“ என்ன மாப்ள.. வந்துடறியா ? “

“ எங்க வரணும் ? “

“ உங்க வீட்டுக்கு தான். “ என பலமாக சிரித்தான்.

“ வீட்டுக்கா? “

“ ஆமா. மாப்ள. வா வா. அடுத்த ஃப்லைட்ட புடிச்சு வா. வீ வில் பீ வெயிட்டிங் ஃபார் யூ “ என லைன் கட்டானது.

அரக்கபறக்க கிளம்பியவன், நேரே ரூமிற்கு சென்று பெட்டிகளை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தை அடைந்தான். டட்கலில் டிக்கெட் புக் செய்து, தன் விமானத்திற்காக காத்திருந்தான் ராகன்.



விமானம் தரையை தொட, முதல் ஆளாய் இறங்கினான். கன்வேயர் பெல்ட்டில் சாய்ந்து கொண்டு வந்த தன் பெட்டிகளை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தான். டாக்சி ஒன்றை பிடித்து, வீட்டு ஏரியாவை கூறி ஏறிக்கொண்டான்.



வீட்டிற்கு வந்து இறங்கினான். அடித்துபிடித்து வீட்டிற்கு வந்தால், அங்கு த்வானி விளையாடிக்கொண்டு இருந்தாள். த்விஜா பயந்தபடி இருந்தாள். கல்பனாவோ, வீட்டிற்கு யாரோ புதிதாக வந்துள்ளனர் என உபசரித்துக்கொண்டு இருந்தாள். அதும் சம்பந்தி என அவன் கூறிவிட, கல்பனா பரபரப்பாகிவிட்டார்.

“ வாங்க மாப்ள “ என்றான் அவன்.

“… “

“ என்ன பதிலயே காணும் “

“ உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. மொதல்ல வெளிய போ “ என கத்தினான்.

“ ச்சு சு சு சு.. ரொம்ப தப்பு மாப்ள. இந்த மாதிரியெல்லாம் எங்கிட்ட பேசினன்னு வை.. இந்த கன் இருக்குல்ல கன்.. அத வெச்சு டமால்.. அவ்ளோ தான். அங்க விளையாடிட்டு இருக்காளே உன் பொண்ணு.. மர் கயா தான் டீ “ என்றான்.

அதுவரை அவனை உபசரித்துக்கொண்டிருந்த கல்பனாவிற்கு அவன் தடாலடியாக பேசியது ஒன்றும் விளங்கவில்லை.

“ தம்பி.. யாரு இவங்கல்லா ? “

“ த்விஜாவோட அப்பான்னு சொல்லிட்ட்டு திரியுறவன் “

“ ஓ.. “

அவனிடம் திரும்பியவன்.” உனக்கு இப்போ என்ன வேணும் “

“ இந்த பத்தரத்துல ஒரு கையெழுத்து அவ்ளோ தான் “ என நீட்டினான்.

அதை வாங்கி பார்த்தான் ராகன்.

“ இது செல்லுபடி ஆகாது “ என அவன் முகத்தில் விட்டெறிந்தான்.

“ ஏன் ? “

“ எங்க பேருல எந்த சொத்தும் இல்ல “

“ என்ன உளருற ? “

“ ஆமா. எல்லாம் என் பொண்ணு பேருக்கு மாத்தியாச்சு. இனி அவ தான் அத அனுபவிக்க முடியும். அதுவும் அவளுக்கு கல்யாணம் ஆன அப்றம் “ என அதிர்ச்சி அளித்தான்.

“ அது உன் சொத்து . அத பத்தி நா கேக்கல “

“ இல்ல. என் பொண்டாட்டி சொத்த பத்தி தான் சொல்றேன். நீ இப்டி எதாவது செய்வன்னு தெரியும். அதான் கல்யாணம் ரெஜிஸ்டர் பண்ணப்போவே இதையும் மாத்திட்டேன் “

அவனுக்கு கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது. கையில் வைத்திருந்த கன்னை த்வானியை நோக்கி குறி வைத்தான்.

த்விஜா துடித்து போனாள். ராகன் அசையாமல் அங்கேயே நின்றிருந்தான்.

ட்ரிகரை அவன் அழுத்த, த்விஜா மயங்கினாள். ட்ரைகரை அழுத்தினானே தவிர அதிலிருந்து தோட்டா வெளியே பாய்வதற்குள், டமால் என்ற சத்தத்துடன், தோட்டா அவனின் கையில் பாய்ந்திருந்தது. ராகுல் தன் போலீஸ் நண்பனுடன் நின்றிருந்தான்.

“ உஃப்ஃப்ஃப்ஃப்ஃப் “ என்று மூச்கு விட்டான் ராகன்.

“ தேங்க்ஸ் ராகுல் “ என்றான்.

வரும்பொழுதே ராகுலுக்கு கால் செய்து விவரம் கூறியிருந்தான். அவனும் தன் நண்பனை அழைத்துக்கொண்டு வந்தான்.

“ சார். இவர் மேல எதா கம்ப்ளைன்ட் குடுங்க. உள்ளயே வெச்சிடறேன். “ என்றார் போலீஸ்காரர்.

“ ஆமா கண்டிப்பா. என் வைஃப்வொட அம்மாவ கொலை பண்ணீருக்கான். இப்போ எங்களையும் கொல்ல வந்துருக்கான். எழுதிக்கோங்க சார் “ என்றான் கோவமாக. ராகன் கூறியதை நோட் செய்து கொண்டு அவனை கைது செய்து சென்றான்.

ராகுல் த்விஜாவை பரிசோதித்தான். பயத்தில் மயங்கியிருப்பதாக கூறினான்.

“ சரி நீ வெயிட் பண்ணு . அவ எழுந்ததும் உண்மைய சொல்லிட்டு கிளம்பு “ என்றான் ராகன்.

அதன்படி அவனும் அங்கேயே இருந்தான்.

சிறிது நேரம் கழித்து த்விஜா கண் முழித்தாள்.

“ஜா… “

“ ராகா… த்வானி ? “

“ த்வானிக்கு ஒன்னும் இல்ல. அந்தாள அரெஸ்ட் பண்ணியாச்சு “

“ அப்பாடா. நா ரொம்ப பயந்துட்டேன் “ என கண்கள் கலங்கின.

“ சரி வா. ராகுல் உன்ன பாக்க வெயிட் பண்ணிட்டு இருக்கான் “

“ ராகுலா ? எதுக்கு ? “

“ வா சொல்வான் “ என அழைத்துச்சென்றான்.



“ ஹே.. த்விஜா வா வா. “ என அழைத்தான் சோஃபாவில் அமர்ந்திருந்த ராகுல். கல்பனாவும் வந்தார்.

“ வாம்மா ..காஃபி தரவா “ என்றார்.

“குடுங்க மா…. “ என கூறியோவிட்டு ராகனிடம்

“த்வானி எங்க ? “ என்றாள்.

“ அவ இப்ப தான் தூங்கறா “

“ ஓ.. “

கல்பனா அனைவருக்கும் காஃபி எடுத்து வர,அனைவரும் அருந்தியபடி பேச ஆரம்பித்தனர்.

ராகன் த்விஜாவிடம்

“ஜா. த்வானி உனக்கு எப்டி கிடைச்சா ? “

அவனின் கேள்வியை எதிர்பார்க்காதவள் நேந்த பேந்த முழித்தாள். இனியும் மறைக்க முடியாது என நினைத்தவள்,

“ நா ஒரு ஹாஸ்டல்ல சேர்ந்தேன்னு சொன்னேன்ல. அங்க ஒரு வாட்டி அங்கிள் வந்திருந்தாரு “ என கூறத்தொடங்கினாள்.

அன்று அந்த விடுதியை ஏதோ ஃபன்ஷனுக்கு தயார் செய்துகொண்டு இருந்தனர். விருந்தினராக வந்திருந்தார் ராகனின் தந்தை. த்விஜாவை பார்த்த மாத்திரத்தில் பிடித்துவிட்டது. அவளின் துறுதுறுப்பும் , வேலை திரணும் அவரையே ஆச்சரியப்பட வைத்தது.

“ இங்க வாம்மா “

“ சொல்லுங்க சார் “

அருகில் வந்தவளின் தெளிச்சமான முகத்தில் , கண்களில் மட்டும் ஏதோ சோகம் குடியேறியிருந்ததை கணித்தார் .

“ உன் பேரு என்னம்மா ? “

“ த்விஜாவந்தி “

“ நல்ல பேரு மா . இங்க.. ? “ என இழுத்தார்.

தன் கதையை சுறுக்கமாக சொல்லி முடித்தவளை

“ என கம்பனியில வேலை செய்ய வரியா ? “

சற்று யோசித்தவள், “ சரி “ என்றாள்.



“ அங்கிள் தான் இங்க கூட்டிட்டு வந்தாரு.இங்க வந்து ஒரு வருஷம் அப்றம் த்வானியை ஆறு மாச குழந்தையா கொண்டு வந்தாரு. அவ யாருன்னு எனக்கு தெரியாது. அவள எங்கேந்து அவர் கொண்டு வந்தாருன்னும் எனக்கு தெரியாது. எனக்கும் லைஃப்ல ஒரு பிடிப்பு இல்லாததால வளக்க ஒத்துக்கிட்டேன் “ என்றாள்.

ஆக த்வானியை எங்கிருந்து வந்தாள் என்ற உண்மை ராகனின் தந்தையோடு புதைந்துபோனது. ரானுக்கும் கல்பனாவிற்குமே அது அதிர்ச்சியாய் இருந்தது.

“ சரி எதுக்கு இதெல்லாம் கேக்கறீங்க ? “

“ அது ஒன்னுமில்ல த்விஜா “ என ஆரம்பித்தான் ராகுல்.

எதிர்பார்ப்புடன் அவனை பார்த்துக்கொண்டு இருந்தாள் த்விஜா. அவளுக்கோ உள்ளே பயம் , எங்கே த்வானி என்னுடைய மகள் என்று எவரேனும் திடீரென வந்து சொந்தம் கொண்டாடி, அவளை தன்னிடமிருந்து பிரித்து விடுவரோ என. அதே பயத்தில் ராகுலை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“ த்விஜா.. த்வானி யாரோட பொண்ணுன்னு தெரிஞ்சிடுச்சு “

“ என்ன ? “

“ ஆமா த்விஜா “

“ என்ன. அவங்க கேக்கறாங்களா. நா தர மாட்டேன். த்வானி என் பொண்ணு. அவ என் கூட தான் இருப்பா “ என்று மூச்சு விடாமல் பேசத்தொடங்கினாள்.

“ ஹே ஹே .. ரிலாக்ஸ் ஜா “ என்றான் ராகன்.

“ எப்படி ரிலாக்ஸாக முடியும் ராகா “

“ த்வானி நம்மள விட்டு எங்கயும் போக மாட்டா. நா போக விட மாட்டேன் “

“ ம்ம்ம் “ என்றாலும் மனம் தவித்தது அவளுக்கு.

சற்று நேரத்தில் மீண்டும் த்விஜா ,

“ ஆமா. யாரு பொண்ணு அவ “ என்றாள்.

இந்த கேள்வியை முன்னமே எதிர்பார்த்த ராகனும் ராகுலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“ என்ன பதில் பேசாம இருக்கீங்க ? “

“ த்வானி … என் பொண்ணு தான் “ என்றான் ராகன்.

“ என்ன ???? “ என அதிர்ச்சியானாள்.

“ ஆமா. “ என ராகுலும் கூறினான்.

“ எப்டி கண்டுபிடிச்சீங்க ? “ என்றாள் ஆவலாய்.

“ டீ என் ஏ வெச்சு “ என்றான் ராகுல்.

“ ஓ…ஆனா த்வானியோட ப்ளட்ட எப்போ எடுத்தீங்க ? “

“ மொத வாட்டி உங்க ரெண்டு பேருக்கும் அடிபட்டபோ “

“ அப்போவா? “

“ ஆமா.. “

“ அப்பவே எப்டி ? “

“ த்வானிய பார்த்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. அதுக்குமேல, அவ மேனரிசம், முக்கியமா அவ கண்ணு அப்டியே வந்தனா மாதிரி இருக்கறதா தோனிச்சு. அன்னைக்கு நீங்க அடிபட்டு, ராகுல் வேலை செய்யற ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ, அவன் எனக்கு ஃபோன் பண்ணினான். நா வந்தேன். ஆனா நீ எங்கிட்ட வேலை பாக்குற விஷயம் அப்ப அவனுக்கு தெரியாது.”

“ ஓ..”

“ த்வானி பத்தி கேட்டதும் நீ பதில் சொல்ல முடியாம தடுமாறினத சொன்னான். எனக்கு ஏற்கனவே அவ வந்தனா மாதிரி இருக்கறதால அவன் கிட்ட சொல்லி வெச்சிருந்தேன். கல்யாணத்துக்கு முன்னாடி, நீயும் அவ யார் குழந்தைன்னு தெரியாதுன்னு சொன்னதும் , எனக்கு சாதகமா போய்டுச்சு “

“ ஓ.. ம்ம்ம் “ என்றாள் சுறத்தே இல்லாமல்.



“ ஓகே ராகா., நா அப்போ கிளம்பறேன் ..ட்யூட்டி இருக்கு “ என ராகுல் விடை பெற, த்விஜாவும் ஏதோ ஒரு யோசனையில் தங்களறைக்கு சென்றாள்.

இரவு உணவை அங்கு எடுத்து சென்றவன்

“ ஜா. என்ன அமைதியா வந்துட்ட.. த்வானி என் பொண்ணுங்கறதுல உனக்கு சந்தோஷம் இல்லயா ? “

“ ச ச. அப்டியெல்லாம் இல்ல “

“ அப்றம் ? “

அவள் முகம் போகும் கோணங்களை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது. அவளை இழுத்து தன் கை வளைவிற்குள் வைத்துக்கொண்டான்.அவனின் கண்களின் ஆழத்தில் அவள் மூழ்க தொடங்கிய நேரம்,

“ என் லூசு பொண்டாட்டி.. உன் தம்மாதுண்டு மூளையில இன்னேரம் என்னன யோசிச்சிருப்பன்னு எனக்கு தெரியும் “ என்றான்.

“ என்ன தெரியும் ? “ என்றாள் கண்களை பார்த்துக்கொண்டே .

“ என்னடா இது இவங்கள்லாம் ஒரு கூட்டா இருக்காங்க. நாம மட்டும் வெளியிலேந்து வந்த பறவையா இருக்கோமேன்னு கவிதையா எதாச்சும் தோனிருக்குமே “

லேசாக புன்னைகை அரும்பியது.

“ அதானே ? “

“….”

“ அப்டியெல்லாம் இல்லடீ லூசு. இவங்களாம் வரத்துக்கு முன்னடிலேந்து உன்ன லவ் பண்ணவன் டீ நானு “

“ ம்ம்ம் “

“ அதுனால என் செல்ல பொண்டாட்டி, தேவை இல்லததலாம் நினைக்காம இரு “

அமைதியாக அவனஒய் பார்த்தவள் சட்டென “ லவ் யூ ராகா “ என்றாள்.

அதை எதிர்பாராத ராகனுக்கு வானில் பறப்பது போல் இருந்தது.

“ என்ன சொன்ன? “

“ ம்ம்ம்ம் சுரைக்காய்ல உப்பு இல்லைன்னு சொன்னேன். ஒன்னு சொன்னா அதுக்கு பதில் சொல்லணும்னு தெரியாதா ? “ என்றாள்.

“ அது சரி “ என பதில் கூற வந்தவனை லவ் யூ டூ சொல்ல விடாமல் தன்னுள் சிறை செய்தாள் ராகனின் த்விஜா, அனைத்தும் சரியாக அமைந்துவிட்ட சந்தோஷத்தில்!!!



முற்றும்.
 
Top