Malini Sundar
Member
முதலில் மயக்கத்திலிருந்து விழித்தாள் த்விஜா. த்வானியை பற்றி விசாரித்தாள். அவள் விழுந்த அதிர்ச்சியில் இன்னும் மயக்கத்தில் இருப்பதாகவும் மற்றபடி வேறு எதுவும் சீரியசாக இல்லை என மருத்துவர் கூறினார். த்விஜாவை பார்த்துக்கொண்டே இருந்தார் மருத்துவர்.
" நீங்க த்விஜாவந்தி தானே? "
இந்த கேள்வியை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளால் அவனை அடையாளம் காண முடியவில்லை.
" என்ன யோசிக்கிறீங்க? "
" ஆமா.. நீங்க யாருன்னு தெரியலையே! "
" நான் ராகுல். ஒன்னா ஸ்கூல்ல படிச்சோமே! "
சற்று நினைவு கூர்ந்த அவளுக்கு ஞாபகம் வந்தது.
" ரொம்ப வருஷம் ஆச்சு இல்ல. அதான் மறந்துட்டேன். சரி த்வானி எப்போ முழிப்பா? " என பேச்சை மாற்ற நினைத்தாள்.
" இன்னும் ஒரு அரை மணி நேரத்துல. ஆமா இது உன் குழந்தையா? "
" ஆ...ஆமா.. ஏன் கேக்குற? " பேச்சு தடுமாறியது.
" சும்மாதான். மேரேஜ் ஆன அறிகுறி எதுவும் இல்லையே! அதான்..." என இழுத்தான்.
குரங்கை நினைக்காத போது மாத்திரை சாப்பிட சொன்ன கதையாகிப் போனது. எதை நினைக்கக் கூடாது என நினைக்கிறாளோ, எதை மறக்க நினைக்கிறாளோ, அதையே அனைவரும் குத்தி கிளருவது த்விஜாவிற்கு பெரிய வருத்தம் ஆகிப்போனது.
அதிலிருந்து தப்பிக்க
"எக்ஸ்கியூஸ் மீ ..நான் ஒரு கால் பண்ணனும் " என வெளியேறினாள்.
அலுவலகத்திற்கு கால் செய்தாள். அலுவலகத்தை மூடும் நேரம் ஆனதால் செக்யூரிட்டி போனை எடுப்பார் என நினைத்த அவளுக்கு மீண்டும் இன்றும் ராகன் போனை எடுத்தது அதிர்ச்சியே!
" ஹலோ "
" ஹலோ நான் த்விஜா "
" சொல்லுங்க "
எப்படி சொல்வது என யோசித்தாள். எழுத்துக்களை கோர்த்து வார்த்தை ஆக்கினாள்.
" அது த்வானியோட லன்ச் பேக் அங்கேயே வச்சுட்டேன்.. விமலா வரும்போது..." என இழுத்த வண்ணம் நிறுத்தினாள்.
" அவங்க கிளம்பியாச்சு "
" சரி சார் நான் பார்த்துக்கிறேன்" என விடை பெற்றாள். ராகன் கிளம்ப ஆயத்தமானான்.
மருத்துவமனையில் பேசிவிட்டு த்வானியை பார்க்கச் சென்றாள். அப்பொழுதுதான் கண்டுவிழிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் த்வானி. டாக்டர் ராகுல் அங்கு அவளிடம் பேச்சுக் கொடுத்தார்.
" ஹாய் குட்டி "
குழந்தை கண்விழித்து தான் இருக்கும் இடத்தை நோட்டமிட்டது. புதிதாக இருக்கவே பயம் தொற்றிக்கொண்டது. கலங்கிய கண்களை கைகளால் துடைத்துக்கொண்டாள். த்விஜாவின் தைரியமான வார்த்தைகள் அவ்வப்போது காதுக்குள் பிரவேசித்தன. சுற்றி ஒரு முறை பார்த்துவிட்டு
"ஹலோ அங்கிள் " என பதில் வந்தது .
"உங்க அம்மா பெயர் என்ன? "
"த்விஜா.."
" எந்த கிளாஸ் படிக்கிறீங்க?"
" எல் கே ஜி "
" வெரிகுட். கிளம்பறீங்களா , இல்லை இன்னும் கொஞ்ச நேரம் அங்கிள் கூட இருக்கீங்களா "
ஆட்காட்டி விரலை நெற்றிப்பொட்டில் தட்டி தட்டி யோசித்தது. பின்
" இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன்" என்று கூறிவிட்டு திரும்பி
"ஓகேயாம்மா " என்றது த்விஜாவிடம். அவள் தலையை ஆட்டவும்
" சரி சொல்லு" என தொணப்பியது.
" சரிமா " என முடித்தாள்.
" இவ என்ன பிளட் குரூப் ?" என ராகுல் வினவ த்விஜா முழித்தாள். ராகுலுக்கு சந்தேகமாக இருந்தது. அம்மாவிற்கு குழந்தையின் ரத்த வகை தெரியாமல் இருக்குமா என்று. அவள் முழிக்கவும் அவன் அடுத்த யோசனையை செய்தான்.
" சரி இதெல்லாம் தெரிந்து வைச்சுக்கறது நல்லது.. செக் பண்ணிக்கலாம் "
" சரி " என அவளும் ஒப்புக்கொள்ள, செவிலியிடம் த்வானியின் ரத்த வகையை பரிசோதிக்க கூறினான் ராகுல். இது ஒரு வகையில் தேவைதான் என்றாலும் ராகுல் தனது எண்ணத்தைச் செயலாக்க தேவையான நேரத்தை உருவாக்க நினைத்ததும் ஒரு காரணம். செவிலியை பரிசோதிக்க சொல்லிவிட்டு
" எக்ஸ்க்யூஸ் மீ " என வெளியேறினான். வெளியேறியவன் தன் போனை எடுத்தான். லாக் ஸ்கிரீனை அன்லாக் செய்தான். தான் பேச நினைத்த நபரின் நம்பரை டயல் செய்து காத்திருந்தான்.
" ஹலோ " என்றது எதிர்முனையில் கட்டைக் குரல் ஆளுமையுடன்.
" நான் ராகுல் "
" சொல்லு ராகுல் "
" ஸ்கூல்ல நீ லவ் பண்ண பொண்ணு.. அந்த த்விஜாவந்தி இப்போ நான் வேலை செய்ற ஹாஸ்பிடல்ல இருக்கா "
" என்ன!! என்ன சொல்ற? " குரலில் பதட்டம் ஆச்சரியம் தொற்றிக்கொண்டது.
" ஆமா கூட ஒரு குழந்தை வேற இருக்கு. அது அவ குழந்தையான்னு எனக்கு டவுட்.. எனிவே நீ வந்தா.." என நிறுத்தினான்.
" வரேன். கிளம்பிட்டேன்!! " என மருத்துவமனை நோக்கி கிளம்பினான் அவன்.
போனை வைத்த ராகுல் மனதினுள் " ஒருத்தன் உங்கள லவ் பண்ணா தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருப்பீங்களா டி?" என நினைத்தான். தன் நண்பன் வர காத்திருந்தான்.
இங்கு த்வானியுடன் ரிப்போர்ட் வர காத்திருந்தாள், வரப்போறவனை எதிர்பார்க்காமல்.
தன் வண்டியில் அந்த மருத்துவமனையில் வந்து இறங்கினான் அவன்.ராகுலின் அறையை கேட்டு அங்கு சென்றான். விவரங்களை கேட்டுக்கொண்டான். கிளம்பும் தருவாயில் வந்தது அந்த ரிப்போர்ட்.
" எக்ஸ்க்யூஸ் மீ டாக்டர் "
"எஸ் கம் இன் "
" ரிப்போர்ட் வந்தாச்சு "
" என்ன குரூப் ? "
" ஓ நெகட்டிவ் "
" ஓகே " என செவிலிய அனுப்பினான் ராகுல்.
ராகுல் எதிரே இருந்த அவனுக்கோ " ஓ நெகடிவ் " என்பதே காதில் எதிரொலித்தது. ராகுலிடம் மேலும் ஒன்றைக் கூறி விட்டு விடை பெற்றான் அவன். போகும் பொழுது த்வானி இருந்த அறைக்கு வெளியே நின்று த்விஜாவை பார்த்தவனின் கண்களில் கோபம் வழிந்தோடியது.
ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு த்வானியை அழைத்துக் கொண்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தாள். அடிபட்ட வலியால் இரவு ஆக ஆக இருவரும் தவித்தனர்.
" அம்மா வலிக்குதும்மா " என்றது குழந்தை.
" சரியாகிடும் செல்லம்..தூங்கு " என குழந்தையை பாடுபட்டு தூங்க வைத்தாள்.
காலையில் வலியில் அழுததால் பள்ளிக்கு விடுப்பு கூறிவிட்டு அலுவலகம் அழைத்துச் சென்றாள். அவர்கள் வரவும் ராகனும் வந்தான்.
த்வானி அவனை பார்த்ததும்
"ஹாய் பிரண்ட் " என்றது .
" ஹலோ பிரண்ட் " என கூறிய அவன் இருவரின் கை கால்களில் இருந்த கட்டுகளை பார்த்துவிட்டு பதறினான்.
" என்ன ஆச்சு? உங்க வண்டி எங்கே? என கேட்க நேற்று நடந்தவற்றை கூறினாள் த்விஜா.
கேட்டு முடித்தவன்
" அப்போ நேத்து ஹாஸ்பிட்டல்ல இருந்துதான் போன் பண்ணிங்க? "
" ஆமாம் " என்றதும் மறு வார்த்தை எதுவும் பேசாமல் த்வானியை அழைத்து சென்றான்.
மதிய இடைவேளையின்போது த்வானி சாப்பிட்டு சற்று தூங்க ஆரம்பித்தது.
"த்விஜா " என ராகன் அழைக்கவும்
" சொல்லுங்க சார் "
" நான் நாளைக்கு வேலை விஷயமா வெளியூர் போறேன். வர டூ வீக்ஸ் ஆகும் "
" ஓகே சார் நான் பார்த்துகிறேன் " என்றாள்.
அதன்படி அடுத்த நாள் ராகன் வெளியூர் கிளம்பினான். எப்பொழுதும் போல் அலுவலகத்தை கவனித்துக் கொண்டாள், த்விஜா. த்வானி தான் இவனை தேடினாள். அவனை மிஸ் செய்வதாக த்விஜாவிடம் கூறினாள். அங்கிள் எப்போ வருவார் என கேட்டு நச்சரித்து விட்டாள்.
இரண்டு வாரம் மூன்று வாரம் ஆனது. ஞாயிறு முடிந்து திங்களன்று த்வானியை எப்பொழுதும் போல் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் வந்தாள். என்றுமில்லாமல் அவளுக்கு முன்பே வந்திருந்தான் ராகன்.
" குட் மார்னிங் சார் "
" குட் மார்னிங் "
டேபிளுக்கு முதுகை காட்டி தன் கப்போர்டில் பேக்கை வைத்தாள். திரும்பி இருந்தாலும் தன்னை கவனிக்கும் ராகனின் பார்வையை அவள் அறியாமல் இல்லை. சங்கோஜமாக இருந்தது. சுடிதார் டாப்பை இழுத்து விட்டுக்கொண்டாள். அதுவரை அனாவசியமாக அவள் பக்கம் திரும்பியது கூட இல்லை. பொறுமை இழந்த அவள்
" என்ன விஷயம். சொல்லுங்க சார். ரொம்ப நேரமா இங்கேயே பார்த்துட்டு இருக்கீங்களே! " என்றாள், அடுத்து வரும் பதில் தன் வாயை அடைக்க போகிறது என அறியாமல்.
ராகன் தன் பார்வையை தாழ்த்தினான். மூச்சை இழுத்து விட்டான். பதில் கூறினான்.
" த்விஜா... என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? "
( இசைக்கும்....)