Malini Sundar
Member
" வைஃப்பா ??" என த்விஜா அதிர்ச்சியுடன் கேட்டாள்.
" ஆமா மா."
கண்கள் மீண்டும் அந்த ஃபோட்டோவிற்கு சென்றது. ராகனும் அந்த பெண்ணும் இருந்தனர். ராகன் சூட் அணிந்திருந்தான்.வந்தனா சிகப்பு நிறத்தில் ஜிகு ஜிகு என டாலடிக்கும் ஒரு டிசைனர் புடவை உடுத்தியிருந்தாள்.
ராகனின் முகம் இறுகியிருந்தது.அதற்கு அப்படியே நேர்மாறாக இருந்தது வந்தனாவின் முகம்.முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.
" வந்தனா, ராகன் அப்பாவோட தங்கை பொண்ணு தா "
" ஓ! " என்றாள் த்விஜா.
" அவங்க அப்பா அம்மா போன அப்றம் அவள நாங்க தா பாத்துக்கிட்டோம்."
" ம்ம்ம்"
" சின்ன வயசுலேந்து, ராகன்னா வந்தனாக்கு ரொம்ப இஷ்டம். அவன் முதல் வருஷம் காலேஜ் முடிஞ்சு வந்ததும் ராகன் அப்பா கல்யாண பேச்ச ஆரம்பிச்சாரு " என அந்நாளின் நினைவிற்கு சென்றார் கல்பனா.
ராகன் கல்லூரி படிப்பை டெல்லி ஐ ஐ டி யில் படித்தான். தன்னுடனே வளர்ந்த வந்தனாவை விட்டு வருவது வருத்தமாய் இருந்தது. வந்தனாவின் மனதில் தனக்கு வேறு இடம் இருந்தது என்பதை அவன் அறியவல்லை! அனைவரையும் போல் வீட்டில் உள்ளவர்களுக்கு விடை கொடுத்து அவனும் ஹாஸ்டலில் சேர்ந்தான். தன் முதல் நாள் காலேஜில் அடி எடுத்து வைத்தான்!
மெகேனிகல் இஞ்சினீரிங் துறையில் சேர்ந்திருந்தான். ராகனின் ரூம் மேட்டாக ஒரு வாரம் கழித்து சேர்ந்தான் அவன்.ஒரே துறை, ஒரே ரூம் என நட்பு பூத்தது.அடுத்தடுத்த ரோல் நம்பர் வேறு. அழகாய் கடந்தது முதல் வருடம். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தவனிடம் அவன் தந்தை
" ராகன்.."
" சொல்லுங்கப்பா! "
" தம்பி.. நம்ப வந்தனா பத்தி என்ன நினைக்குற ? "
" வண்டூக்கு என்ன..! "
" அவளுக்கு ஒன்னும் இல்ல.பொதுவா கேக்கறேன் "
" நல்ல பொண்ணு.. நம்ம வீட்டு பொண்ணு.என் குட்டி வாலு " என குதூகலமாக கூறினான். ராகனுக்கும் வந்தனாவிற்கும் இரண்டு வருட வித்தியாசம் தான். வந்தனாவை சிறு வயதிலிருந்து இவர்களே பார்த்து கொள்வதால், அவளை தன் வீட்டில் ஒருவளாக தனக்கு மிகவும் நெருக்கமானவளாக பாவித்தான் ராகன். எதுவானாலும் ராகனுக்கு வந்தனா தான் முதல். அவனுக்கு தெரியவில்லை, அதுவே தன்னை ஒரு நாள் சூழ்நிலை கைதியாக்கும் என!
" அவள நீ தா கல்யாணம் பண்ணிக்கணும்"
" என்ன?? " என குரலில் அதிர்ச்சி குடியேறியது.
" என்ன என்ன! இப்போ தான நல்ல பொண்ணுன்னு சொன்ன. அப்றம் கட்டிகறதுக்கு என்ன? "
" அப்பா...என்ன பேசறீங்க.. என் கல்யாணத்துக்கு இப்போ என்ன.. அப்டியேன்னாலும் அவள என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுப்பா " குரலில் கோவமும் எரிச்சலும் குழைந்திருந்தது.
" ஏன்? "
" முடியாது .அவ்ளோ தான் " .
எழுந்து சென்று விட்டான். ஒரு வாரம் லீவில் வந்தவன், இரண்டே நாட்களில் கிளம்பினான்.வந்தனாவிடமும் சரியாக பேசவில்லை. அது அவளை எவ்வாறு பாதிக்கும் என அப்போது அவன் அறியவில்லை.
இரண்டாம் வருடம் துவங்கியது.ராகனும் அவன் நண்பனும் எப்போதும் போல் தங்கள் வகுப்பிற்கு சென்றனர். விடுதியிலிருந்து இறங்கி நடந்தனர்.
அந்த கல்லூரி சாலையின் இருபுறமும் மரங்கள் நீண்டு வளர்ந்திருந்தன. மரங்களில் பூத்த நூற்றுக்கணக்கான பூக்களின் பாரம் தாங்காமல், பூக்களை கீழே வழியவிட்டிருந்தன மரங்கள். ஆங்காங்கே பூக்கள், நடப்போரின் கால்களில் உள்ள விதவிதமா காலணிகளிலும், ஓடும் வண்டிகளின் டையர்களிலும் பட்டு நசுங்கி இருந்தன!
அவற்றை பார்த்தபடி, பேசிக்கொண்டே வந்தனர், நண்பர்கள் இருவரும்.
" மச்சி... இன்னைக்கு ஜூனியர்ஸ்லாம் வருவாங்க! நம்ம டிபார்ட்மென்ட்கு தான் ஒரு பட்சியும் வராது. மத்த டிபார்ட்மென்ட்யாவது போய் பாக்கணும் டா " என்றான் ராகனின் நண்பன்.
ராகனோ, வீட்டில் நடந்ததை பற்றி யோசித்துக்கொண்டே வந்தான்.
அதை பார்த்தவன்
" என்ன ஆச்சு..? நானும் நேத்துலேந்தே பாக்கறேன். என்னவோ மாதிரி இருக்க! " என நண்பனின் கேள்விக்கு நடந்தவற்றை கூறினான்.
" டேய்... அதெல்லாம் விடு..நாள்பட சரி ஆகிடும் " என வகுப்பிற்கு சென்றனர். வருடத்தின் முதல் நாள் என்பதால், வகுப்புகள் நடத்தப்படவில்லை. அப்படியே முதல் வருட வகுப்பிற்குள் இருவரும் நுழைந்தனர். அங்கே ஆட் மேன் அவுட்டாக இருந்தாள் அவள்.
பார்த்தவர்களின் கண்கள் விரிந்தன. துளியும் படாடோபம் இல்லாத தோற்றம். கண்ணை உறுத்தாத மார்டன் உடை. ஆளுமையை பறைசாற்றும் உடல்மொழி.பார்த்த மாத்திரத்தில் யாரையும் நின்று பார்க்க வைக்கும் ஆளுமை தெரிந்தது அவளிடம்!
அந்த வார இறுதியில் கல்பனா ராகனுக்கு கால் செய்தார்.
" சொல்லுங்க மா "
" என்னப்பா. போய்ட்டு ஃபோனே பண்ணல! "
" மறந்துட்டேன் மா "
"ம்ம்ம் சாப்டியா பா " என அன்னையின் கரிசனம் துவங்கியது. அதற்கு பின் வந்த விடுமுறைகளிலும் அவன் வீட்டிற்கு செல்லாது விடுதியிலேயே தங்கினான். படிப்பின் இறுதி பரிட்ச்சைக்கு பின் அங்கு இருக்க இயலாதே! வீடு திரும்பினான் ராகன், பெரிய அதிர்ச்சியை எதிர்கொள்ள!
வீட்டிற்கு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஆட்டோவில் வந்திறங்கினான்.இறங்கியவனை வரவேற்றதோ, வீட்டில் தொங்கிய பெரிய பூட்டு! பக்கத்தில் விசாரிக்க சென்றான்.
" ஆன்டி.. வீட்ல யாரும் இல்லயே! எங்க போனாங்க? "
" உனக்கு தெரியாதா தம்பி.. வந்தனா விஷம் குடிச்சிட்டா " என இடியை இறக்கினார்.
" என்ன சொல்றீங்க! எப்போ..எந்த ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனாங்க? "
" நம்ம ஏ ஏ ஹாஸ்பிடல் தா தம்பி " என பக்கத்து வீட்டு ஆன்டி சொன்னது தான் தாமதம், ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தான். அங்கே கேஷுவாலிட்டியில் அவளை சேர்த்துவிட்டு, ராகனின் பெற்றோர் வெளியே கையை பிசைந்தபடி காத்திருந்தனர்.
ஓடிவந்தவன் கல்பனாவிடம் விவரம் கேட்டான். விவரத்தை கேட்கவிடாமல் விழுந்தது ஓர் அறை ராகனுக்கு! அடித்தது, அவனின் தந்தை.
" அப்பா!! " என்றான் கன்னத்தை தடவியபடி.
" அப்டி கூப்பிடாத! என் புள்ளய நா இப்டி வளக்கல.அடுத்தவங்க உணர்ச்சிகளுக்கு மதிப்பு குடுக்காதவன் தான் இங்க நிக்குற நீ! என் புள்ள இப்டி இல்ல! "
" அடுத்தவங்க உணர்ச்சிய புரிஞ்சிகாதவன்னு என்னை சொல்றீங்களே.. எனக்கு ஆசை, எதிர்பார்ப்பெல்லாம் இருக்காதா"
செவிலி வந்து
" சார்.உங்க சண்டைலாம் வெளிய வெச்சுகோங்க.. இது ஹாஸ்பிடல் " என கூறி சென்றாள்.
" அவ இப்போ இப்டி இருக்கறதுக்கு நீ தான் காரணம் " என குற்றம் சாட்டினார் ராகனின் தந்தை.
வாயடைத்து போனான் ராகன். தன் வண்டு, தன்னுடனே வளர்ந்த வண்டு இவ்வாறு செய்து கொள்ள தன்னை காரணமாக கூறியதில் மனமுடைந்தான் ராகன்!
நினைவிற்கு வந்தவ கல்பனா
" அன்னைக்கு அவங்க அப்பாகிட்ட பேசறத நிறுத்தினான் மா. அப்றம் பேசவே இல்ல! " என த்விஜாவிடம் வருந்தினாள்.
" ம்ம்ம். அப்றம் என்ன ஆச்சும்மா? "
" வந்தனாவ பாக்கணும்னு அவ கண் முழிச்சதும் மொத ஆளா உள்ள போனான் "
" ம்ம்ம்ம்..கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாரா ? "
அதற்குள் " அம்மா " என இரு குரல்கள் கேட்டன. அதை தொடர்ந்து ராகனும் த்வானியும் அறைகுள் நுழைந்தனர்.
( இசைக்கும்....)