Malini Sundar
Member
" குழந்தைய அங்க விட்டுட்டு இங்க என்ன பண்றீங்க ரெண்டு பேரும் " என ராகன் கேள்வி எழுப்பினான்.
" அது ஒன்னும் இல்லப்பா..சும்மா தா பேசிட்டு இருந்தோம் "
" சரி வாங்க நம்ம மட்டும் தான் சாப்டனும் "
" சரி " என நால்வரும் கீழே சென்றனர். வந்தவர்கள் அனைவரும் கிளம்பியிருக்க, வீடு ஜிலோ வென இருந்தது.
" வாம்மா " என த்விஜாவையும், த்வானியையும் டைனிங் டேபிளுக்கு அழைத்தார் கல்பனா.
நால்வரும் மேஜையில் அமர எத்தனிக்க, த்விஜா நின்று கொண்டாள். மற்றவர்களை அமர சொல்லிவிட்டு, தான் பரிமாறத்துவங்கினாள். ராகன் யாருக்கோ கால் செய்தான் , சாப்பிட்டுக்கொண்டே
" ஹலோ.. ரெடியா? "
" சரி.கொண்டு வாங்க " என துண்டித்தான்.
ராகன் பக்கத்தில் த்வானி சமத்தாக சாப்பிட்டாள். அந்த டூட்டூ ஃப்ராக்கில் அழகாய் இருந்தாள்.சற்று நேரத்தில் காலிங் பெல் அடித்தது.
"த்விஜா யாருன்னு பாக்கறியா மா? " என கல்பனா கேட்க, போய் கதவை திறந்தாள். அங்கே மெக்ரனட் பேக்கரி ஆளொருவன் நின்றிருந்தான்.கையில் ஒரு பேக் இருந்தது.
" மேம். சார் கேக் ஆர்டர் பண்ணிருந்தாரு "
" ஓ" என வாங்கிக்கொண்டாலும், ஏற்கனவே தான் கேக் வெட்டியாயிற்றே என மனம் யோசித்தது.
வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.
" என்ன அது ? " கல்பனா கேட்டார்
" கேக். சார் ஆர்டர் பண்ணிருந்தாராம் "
" ஓ!! ராகன் எதுக்குப்பா? " கேள்வி ராகனை நோக்கியது.
" வெட்டதான் மா " என ராகன் த்விஜாவை பார்த்தான். அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கேக்கை டேபிளில் வைத்தாள்.
" பிரி. ஆனா அதுக்கு முன்னாடி. நா கேட்டதுக்கு இன்னும் பதில் நீ சொல்லல "
" நா பதில அப்பவே சொல்லிட்டேன் "
" என்னப்பா கேட்ட? " கல்பனா வினவ, ராகன் த்விஜாவை பார்த்தான்.
" நீங்க கேட்டத தான் அவரும் கேட்டாரு "
கல்பனாவிற்கோ ஆச்சரியம் கலந்த சந்தோஷம்.
" என்னது!! கல்யாணம் பண்ணிக்க சொன்னானா? "
" ஆமா மா "
" நீ என்ன மா சொல்ற ? "
" எனக்கு கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இல்லம்மா. நா இப்டியே இருந்துடறேனே " குரல் கெஞ்சியது.
" உனக்காக இல்லைன்னாலும் உன் குழந்தைய நினைச்சிப்பாரும்மா "
த்வானியை பற்றி மனம் என்னன்னவோ நினைத்தது. அன்று இருவர் அலுவகலகத்தில் வந்து போன பிறகும், மூன்று முறை அவளை வந்து மிரட்டியது,த்வானியை தூக்கிவிடுவதாக சொன்னது, என மனம் அனைத்தையும் அசை போட்டது.
" எனக்கு கொஞ்சம் டைம் வேணும் " என ராகனை பார்த்தாள்.
" சரி.எவ்ளோ நாள்? "
" இதென்னப்பா அவள இப்டி அவசர படுத்தற " என கல்பனா சப்போர்ட்டிற்கு வந்தாள்.
" சரி. சீக்கிரமா சொல்லு " என மீதி உணவை முடித்தனர்.
" த்வானி குட்டி " என ராகன் அழைக்க,
" சொல்லுங்க அங்கிள் "
" இன்னொரு வாட்டி கேக் வெட்டலாமா? "
" ஹை சூப்பர் "
" வா..பிரி "
த்வானி ஆசையாய் அந்த கேக் வந்த பேக்கை பிரித்தாள். கேக்கை ராகன் வெளியே எடுத்தான். அந்த ப்ளாக் ஃபாரெஸ்ட் கேக்கின் மேல் அழகாய் எழுதியிருந்தது " ஹாப்பி பர்த்டே த்விஜா " என. பார்த்த நால்வரில் இருவருக்கு ஆச்சரியம்.
" உனக்கும் இன்னைக்கு பிறந்த நாளா மா ?" கல்பனா கேட்டார்.
" ம்ம்ம " என அமைதியாக கூறினாள்.
" வாம்மா " என கல்பனா அழைக்க, மறுக்க முடியாமல் கேக்கை வெட்டினாள்.
" நல்லா இரும்மா "
" தேங்க்ஸ்மா "
அனைத்தையும் ராகனும் த்வானியும் பார்த்து கொண்டு இருந்தனர்.
" நாங்க இங்க இருக்கோம் " கூறியது த்வானி. அங்கே எழுந்தது ஒரு சிரிப்பலை.
" ஹாப்பி பர்த்டே த்விஜா " என ராகன் கைகொடுத்தான்.
" தேங்க்ஸ் . உங்களுக்கும் ஹாப்பி பர்த்டே " என நான்கு விரல்கள் மட்டும் படும்படி கைகுலுக்கினாள்.
" ம்ம்ம் தேங்க்ஸ் "
" அப்ப நாங்க கிளம்பறோம். ரொம்ப டைம் ஆய்டுச்சு " என த்விஜா கூற
" அவங்கள ட்ராப் பண்ணிட்டு வா தம்பி " என கல்பனா அனுப்பி வைத்தார். அவர்களை அனுப்பியவர், தன்னுள் நினைவுகளை அசைபோட்டார்.
ராகன் கல்லூரி முடித்து வந்த நாட்கள் அவை. வந்தனாவிற்கும் ராகனுக்கும் திருமண ஏற்பாடுகள் வெகு ஜோராக நடந்து கொண்டிருந்தன.
ராகன் வந்ததிலிருந்தே யாரிடமும் சரியாக பேசவில்லை.எதையோ இழந்தது போலவே சுற்றி வந்தான்.அன்னை அறியாததா! ராகனிடம் பேசினார்.
" தம்பி.."
" என்னம்மா "
" என்னப்பா.உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லயா? "
" தெரிஞ்சிகிட்டே ஏன் கேக்கறீங்க! "
" அம்மாட்ட சொல்லுப்பா.. வந்தனாவ பிடிக்கலயா? "
" வண்டுவ பிடிக்காம இருக்குமாம்மா..பிடிக்கும் ஆனா அவள மனைவியா!!? "
" ம்ம்ம் "
அதோடு பேச்சு முடித்தது, அப்போதைக்கு! வந்தனாவிற்கோ, ராகன் ஒரு வேளை கல்லூரியில் யாரையாவது விரும்பியிருப்பாரோ என ஐயம் எழுந்தது. அதை கல்பனாவிடம் கூறினாள். மறுபடியும் ராகனிடம் பேச நினைத்தார். கேட்கவும் செய்தார்.
" அம்மா ஒன்னு கேட்டா உண்மையா சொல்றியாப்பா? "
" ம்ம்ம்ம் "
" காலேஜ்ல யாரையாச்சும் லவ் பண்ணியா? "
கல்பனாவிடம் இக்கேள்வியை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கண்கள் விரிந்தன.விரிந்த கண்களில் சோகம் குடியேறியது.
" அது முடிஞ்சி போச்சு. அத பத்தி எப்போ என்ன..விடுங்க " என பேச்சை முடித்தான்.
காலிங் பெல் ஓசையில் அசை போடுவதை நிறுத்தியவர், எழுந்து சென்று கதவை திறந்தார். ராகன் நின்றுகொண்டிருந்தான். அவன் உள்ளே வந்ததும், கதவை சாற்றிவிட்டு அவரவர் அறைக்கு உறங்க சென்றனர். சற்று நேரத்திற்கெல்லாம் இருவரும் நித்திரையில் ஆழ்ந்தனர்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ராகனை, அவனின் மொபைல் எழுப்பியது. எழுந்தவன்,ஃபோனை எடுத்தான்.
" ஹலோ." குரல் கரகரத்தது.
" ராகா... நா நா..த்வ்..த்விஜா.. அவங்க..அன்னைக்கு ஆஃபீஸ் வந்தவங்க, இன்னும் நாலு பேரோட, வீட்டுக்குள்ள....ஆ........" என லைன் துண்டித்தது.
" த்விஜா.. த்விஜா " என அவசரமாய் எழுந்தான். கிடைத்த ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான்.கார் வேகமாக சாலையில் சீறி பாய்ந்தது. த்விஜாவின் வீட்டை அடைந்தவன், காரை நிறுத்தி இறங்கினான். காரின் சத்தம் கேட்டதும், இருளில் ஆட்கள் ஓடும் நிழல் தெரிந்தது. வீட்டின் கதவை அடைந்து தட்டியவன் காத்திருந்தான். கதவு திறக்கப்படாமல் போனது. கதவை திறக்க முயற்சித்தவன், அது திறந்திருப்பதை பார்த்து, உள்ளே சென்றான்
" த்விஜா..த்விஜா..த்வானி " என பல முறை அழைத்தும் பதில் இல்லை
படுக்கையறைக்கு சென்றான். த்வானி தூங்கிக்கொண்டு இருந்தாள். அவளருகில் கீழே மயங்கியபடி கிடந்தாள் த்விஜா.கையில் கத்திக்கீரல். பார்த்தவனுக்கோ, கண்களில் சிவப்பேறியது. இருவரையும் காரில் தூக்கி ஏற்றிக்கொண்டு வீடு வந்தான்.
கல்பனாவை எழுப்பி, த்விஜாவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, தங்கள் ஃபேமிலி டாக்டருக்கு ஃபோனை செய்து வரச்சொன்னான்.
" ஹலோ டாக்டர் வாங்க "
" என்ன டா..ராகா..என்ன ஆச்சு? "
" இவங்க..தெரிஞ்சவங்க.கொஞ்சம் பாருங்க "
த்விஜாவை பரிசோத்தித்த டாக்டர்
" கைல கட் டீப்பா இருக்கு..மத்தபடி ஒன்னும் ப்ராப்லம் இல்ல. ஒன் வீக் நல்லா க்லீன் பண்ணி ட்ரெச்சிங் பண்ணா சரி ஆகிடும்.முக்கியமா தண்ணியே படகூடாது " என அறிவுறைகளை வழங்கிவிட்டு கிளம்பினார்.
கல்பனாவை த்விஜாவுடன் இருக்க சொல்லி விட்டு, தனதறைக்கு உறங்க சென்றான்.
காலை எப்போதும் போல் கண்விழித்தாள் த்விஜா. கையில் கட்டுடன் தான் புது இடத்தில் இருப்பது அப்போதே உறைத்தது.மனம் உடனே த்வானியை தேடியது.
" த்வானி...த்வானி " என அவள் கத்தியதில் ராகனும் கல்பனாவும் ஓடி வந்தனர்.
முகம் முழுக்க வேர்வையுடன், கத்தி கொண்டிருந்த அவளை பார்க்கவே பாவமா இருந்தது கல்பனாவிற்கு.ராகனுக்கோ கோவம் தலைக்கேறியது.
" இதுக்கு தான் அப்போவே சொன்னேன்.உங்க நல்லதுக்கு தா சொல்றேன். கல்யாணம் பண்ணிக்கலாம்னு "
அமைதியாக இருந்தாள் த்விஜா.அழ மட்டுமே முடிந்தது.
" சரி..எதுக்கு அவங்க உங்கள திரும்ப திரும்ப வந்து டார்சர் பண்றாங்க? "
பதில் இல்லை.
" உன்ன தா கேக்கறேன் " கத்தியதில் த்விஜாவிற்கு தூக்கி போட்டது.
" யாருக்காக வராங்க? "
பதில் இல்லை. பெருமூச்சு ஒன்றை விட்டான். அவளருகில் சென்று அமர்ந்தான்.
" இங்க பாரு. நீ எதா வாய தொறந்தா தான் என்ன செய்யலாம்னு யோசிக்க முடியும்.என்னை நம்பு த்விஜா " என்றான்.அவன் கண்களில் இருந்த உண்மை அவளை பேச வைத்தது!
" அவங்க த்வானி எங்கூட இருக்க கூடாதுன்னு அப்டி செய்யறாங்க "
" ஏன் ? "
" சொத்து மேல ஆசை "
" சரி அது த்வானிக்கு போறதுல என்ன ப்ரச்சனை? "
இந்த கேள்வி..இந்த கேள்விக்கான விடையைத்தான், அவள் பல வருடமாக மறைத்து வருகிறாள்.இனியும் மறைக்க முடியும் என தோன்றவில்லை அவளுக்கு!
கண்களை மூடினாள்.தலை கவிழ்ந்தது. உதடு துடித்தது.நெஞ்சம் அடைத்தது.குரல் கம்மியது.
" த்வானி என் பொண்ணு இல்ல! "
" என்ன!? " என்றார் கல்பனா.
" யார் பொண்ணு ? " கேட்டான் ராகன்.
" தெரியாது " என அடுத்த குண்டை எறிந்தாள் த்விஜா!
( இசைக்கும்....)