கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நாட்கள் - அத்தியாயம் 14

Nuha Maryam

Member
எல்லா இடங்களிலும் நித்யாவை அடுத்த நாள் வரை தேடித் தேடிக் களைத்துப் போன சஜீவ் இறுதியில் எப்போதும் தான் அதிகளவு சந்தோசமாக இருக்கும் பொழுதும் அதிகளவு கவலையாக இருக்கும் பொழுதும் செல்லும் பார்க்கிற்குச் சென்றான்.

விடியல் நேரம் நெருங்குவதால் சில பேரே இருக்க புற்றரையில் வானை வெறித்தவாறு படுத்த வண்ணம் அந்த தனிமையில் கண்களிலிருந்து கண்ணீர் வடிவது கூட உணராது நித்யாவுடன் கழித்த பொழுதுகளைப் பற்றி எண்ணத் தொடங்கினான்.

சஜீவ் இவ்வாறிருக்க நித்ய யுவனியின் வீட்டில் ராஜாராம் தனக்குத் தெரிந்தவர்களிடம் நித்யாவைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்க வசந்தியோ பூஜையறையே கதியெனக் கிடந்தார்.

முழுவதுமாக ஒரு நாள் ஆகியும் அவர்களுக்கு நித்யாவைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. காலை ஏழு மணி அளவில் வீட்டு அலைபேசி மணி அடிக்க ராஜாராம் அழைப்பை ஏற்றார்.

மறுமுனையிலிருந்து வந்த ஹலோ என்ற குரலைக் கேட்டதும் அவர், "அம்மாடி யுவனி.. எங்கம்மா இருக்காய்.. இப்படி யாருக் கிட்டேயும் சொல்லாம கொள்ளாம போய்ட்டாய்.. அப்படி நாங்க என்னம்மா தப்பு பண்ணோம்.." அவர் பேசிக் கொண்டிருக்க அங்கு வந்த வசந்தி அவரிடமிருந்து ரிசீவரை வாங்கி,

"நித்யா.. எங்க இருந்தாலும் இந்த அம்மாக்காக வாம்மா... நாங்க ஏதாச்சும் தப்பு பண்ணி இருந்தா எங்கள மன்னிச்சிருமா..." என்க நித்யா,

"ஐயோ அம்மா.. ரெண்டு பேரும் முதல்ல அமைதியாகுங்க... டென்ஷனாகாம நான் சொல்றத கேளுங்க.. ஸ்ப்பீக்கர ஆன் பண்ணுங்க அப்பாவும் கேக்கட்டும்... நீங்க யாரும் எந்த தப்பும் பண்ணலம்மா.. எனக்கு தான் கொஞ்சம் மனசு சரியில்ல.. அதனால தான் தனியா இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோணுச்சு.. நான் இப்ப பாதுகாப்பா தான் இருக்கேன்..." என்க ராஜாராம்,

"முதல்ல எங்க இருக்கன்னு சொல்லும்மா.. அப்பா வரேன் உன்ன கூட்டிட்டு போக.." என்க,

"இல்லப்பா நான் எங்க இருக்கேன்னு சொல்ல முடியாது.. எங்க இருந்தாலும் நான் பாதுகாப்பா தான் இருப்பேன்.. எனக்கு எந்த பிரச்சினையுமில்ல.. எனக்கு வரனும்னு தோணுறப்போ நான் கண்டிப்பா வருவேன்.. அது வரையும் யாரும் என்ன தேடாதீங்க ப்ளீஸ்.. நான் எங்க இருக்கேன்னு தெரிஞ்சிக்கவும் முயற்சி பண்ணாதீங்க.. ஜெனி கிட்டயும் என்ன தேட வேணான்னு சொல்லுங்க... நான் இப்போ கால் பண்ண விஷயத்த தயவு பண்ணி யாரு கிட்டயும் சொல்லிராதீங்க.. முடியுமானப்போ நானே உங்களுக்கு கால் பண்ணுறேன்.. கவனமா இருங்க.. வெச்சிட்றேன்..." இவர்கள் ஏதோ பேச வர அதற்கு முன் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

விமானம் தரை இறங்கியதும் அங்கிருந்த ஃபோன் பூத் மூலமே நித்யா அழைத்திருந்தாள்.

அதற்கான கட்டணத்தை செலுத்தி விட்டு சித்தார்த்துடன் டாக்ஸி பிடித்து அவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த ஃப்ளேட்டுக்கு சென்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸில் அது இரவு நேரம் என்பதால் விளக்கின் ஒளியில் ஜொலித்த அந் நகரின் அழகை கண்களால் பருகிய வண்ணமே அவர்கள் தங்க வேண்டிய குடியிருப்பை அடைந்தனர்.

அந்த ஐந்து மாடிக் குடியிருப்பில் நான்காம் மாடியிலே இவர்களுக்கான அறைகள் இருந்தன.

அடுத்தடுத்த அறைகள் தான் இருவருக்கும்.

தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு தனதறைக்குள் நுழைந்தவள் அதன் அழகில் மெய் மறந்து நின்றாள்.

அது ஒரு சிறிய வீடு போல் காட்சியளித்தது.

நுழையும் போதே சோஃபா போடப்பட்ட ஹோலோன்றுடன் கூடிய அறை. ஒரு பக்கம் குளியலறை மற்றும் 2
இரண்டு பேர் தூங்கக் கூடிய கட்டில் காணப்பட்டன.

மற்ற பக்கம் ஒரு ஆள் வேலை செய்யக் கூடியளவு சிறிய சமையலறை. எல்லாவற்றையும் பார்வையிட்டவாறு அப்படியே கட்டிலில் புரண்டாள்.

சஜீவ் அங்கு நித்யாவுடன் கழித்த பொழுதுகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க நித்யாவும் அவற்றில் மூழ்கினாள்.

ஆரம்பத்தில் சஜீவ் மெசேஜ் செய்யும் சமயங்களில் ஏதோ கடமைக்கு போலவே ஒற்றை வரியில் பதில் அனுப்புவாள்.

இவ்வாறிருக்க ஒருநாள் நித்யா மாலை வகுப்பு முடித்து வந்ததும் காதில் ஹெட்சேட் அடித்து சோஃபாவில் சாய்ந்து மொபைலில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.

முழு நாளும் வீட்டில் வேலை செய்து களைத்துப் போயிருந்த வசந்தியை தலைவலி வேறு வாட்ட நித்யா பாட்டு கேட்டுக் கொண்டிருப்பதைப் கண்டு கடுப்பாகி,

"ஏன் டி பொம்பளப் புள்ள தானே நீ.. இப்படி நடு ஹால்ல உக்காந்துக்கிட்டு பாட்டு கேட்டுட்டு இருக்காய்.. கொஞ்சம் வந்து அம்மாவுக்கு ஒத்தாசையா வேலை செஞ்சி தந்தா என்ன? " எனத் திட்டியும் பதிலின்றிப் போக நித்யாவைப் பார்க்க அவளோ இசைப் புயலின் குரலில் மூழ்கியிருந்தாள்.

வந்த கோபத்திற்கு செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு நேராக நித்யாவிடம் சென்று அவள் காதிலிருந்த ஹெட்செட்டைக் கழற்றி தூக்கி வீசினார்.

"ஏன்ம்மா இப்படி? நிம்மதியா ஒரு பாட்டு கூட கேட்க விட மாட்டியா? " என நித்யா கத்த,

"ஆமா இப்ப அது ஒன்னு தான் குறைச்சல்.. எப்ப பாரு அந்த மொபைல்ல தான் இருக்காய்.. அப்படி என்ன தான் இருக்கு அதுல... வீட்டுல ஏதாவது ஒரு வேலை செய்வியா... இப்படி எல்லாம் இருந்தா போற இடத்துல என்ன தான் குத்தம் சொல்லுவாங்க.. பொண்ணு வளத்து இருக்குற லட்சணத்த பாருன்னு.." என்றார் வசந்தி.

"நான் எதுக்கு வீட்டுல வேலை செய்யனும்.. நான் ஒன்னும் சும்மா இருக்கலயே... மார்னிங் ஸ்கூல்.. ஈவ்னிங் எக்ஸ்ட்ரா க்ளாஸ்.. எக்ஸேம்.. ஸ்டடீஸ் அது இதுன்னு எல்லாம் முடிச்சிட்டு வந்து கொஞ்சம் பாட்டு கேட்டன்னு சொல்லி என்ன ஆக போகுது.. என்னால எல்லா வீட்டு வேல எல்லாம் செய்ய முடியாது.." என பதிலுக்கு பேச கோபமுற்ற வசந்தி,

"அம்மா நான் இவ்வளவு சொல்றேன்.. எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்காய்..." என அடிக்கக் கை ஓங்கியவர் வாசலில் வசந்தி.... என உரக்க கேட்ட ராஜாராமின் குரலில் அமைதியாகினார்.

நித்யாவோ அழுது கொண்டே அறைக்குள் ஓடினாள்.

ராஜாராம், "வயசுக்கு வந்த பொண்ண இப்படி தான் அடிக்க கை ஓங்குவியா.. உனக்கு வேலை செய்ய கஷ்டம்னா சொல்லு நான் வீட்டு வேலைக்கு ஆள் வைக்கிறேன்.." என்க,

"ஆமா உங்க பொண்ண எதுவும் சொல்லிட கூடாதே.. நீங்க கொடுக்குற செல்லம் தான் இப்படி இருக்கா அவ... அப்பாவும் பொண்ணுமா ஏதோ செய்ங்க.." என்று விட்டு வசந்தி விட்ட வேலைகளை பார்க்கச் சென்றார்.

வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் இதுவரை யாரும் நித்யாவை திட்டியதோ அடித்ததோ இல்லை. வசந்தி கூட சில சமயம் அவள் செய்யும் குறும்புகளுக்கு இரண்டு மூன்று வார்த்தைகள் திட்டுவார்.

ஆனால் ராஜாராமிற்கோ நித்யா தான் உலகமே.

அவள் எது செய்தாலும் ஒரு வார்த்தை திட்ட மாட்டார்.

நித்யா தவறு செய்தால் கூட எங்காவது அழைத்துச் சென்று அன்பாகப் பேசி புரிய வைப்பார்.

நித்யாவுக்கும் அப்பா தான் எல்லாமே. சில சமயம் வசந்தியிடம் வம்பு பண்ணிவிட்டு ஓடி வந்து தப்பிக்க ராஜாராமிடம் அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு வசந்தியையே மாட்டி விடுவாள்.

இவ்வாறு செல்லமாகவே வளர்ந்தவளை இன்று அடிக்க கை ஓங்கியது தான் நித்யா இப்படி அழக் காரணம்.

அழுது கொண்டே அறைக்கு வந்த நித்யா கட்டிலில் புரண்டு மேலும் அழுது கொண்டே இருக்க மொபைல் நோட்டிபிகேஷன் ஒலியில் கண்ணீரைத் துடைத்து விட்டு எழுந்து அமர்ந்தாள்.

சஜீவ் தான் மெசேஜ் செய்திருந்தான்.

Sajeev : என்ன நித்யா மெசேஜ்க்கு ஒழுங்கா ரிப்ளை பண்ண மாட்டாய்.. ஏன் நான் மெசேஜ் பண்ணுறது பிடிக்கலயா...

Nithya : ஆமா.. என்ன தான் இங்க யாருக்குமே பிடிக்கல..

Sajeev : என்னாச்சு நித்யா.. ஏன் இப்படி சொல்றாய்...


சஜீவ் இவ்வாறு கேட்டதும் வீட்டில் நடந்த அனைத்தையும் கூற சஜீவோ சத்தமாக சிரித்து விட்டு

"ஐயோ என் யுவி இன்னும் சின்ன பொண்ணு போல நடந்துக்குறா.. அம்மா திட்டினத்துக்காக எல்லாம் இப்படியா.." என்று விட்டு அப்போதே என் யுவி என கூறியது உறைக்க,

"என்னது என் யுவியா.. இது என்ன சொல்றேன் நான்.. இது மட்டும் அவளுக்கு தெரிஞ்சிச்சு.. நான் அவ்ளோ தான்.. டியர் சொன்னாலே அந்த ஆட்டம் ஆடுவா... இப்போ இது வேற.. முதல்ல அவ பிரச்சினைய தீர்த்துட்டு இருக்கலாம்.." என்று விட்டு மீண்டும் மெசேஜ் செய்ய ஆரம்பித்தான்.

Sajeev : நித்யாம்மா.. இதுக்கெல்லாம் யாராச்சும் ஃபீல் பண்ணுவாங்கலா.. அம்மா திட்டினத்துக்கு எல்லாம் இப்படி நடந்துக்குறன்னா எங்க அப்பா அடிச்ச அடிக்கெல்லாம் நான் வீட்ட விட்டே போயிருக்கனும்...

Nithya : என்னது நீங்க வீட்டுல அடி வாங்கி இருங்கீங்கலா...

Sajeev : அதெல்லாம் தாராளமா வாங்கி இருக்கேன்..

Nithya : என்ன இது வரைக்கும் யாருமே அடிச்சதில்ல.. அதனால தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு.. உங்கள எதுக்கு அடிச்சாங்க.. ப்ளீஸ் சொல்லுங்களே..

Sajeev : ஹ்ம்ம் ஓக்கே நான் சொல்லுறேன்.. பட் வன் கன்டிஷன்..

Nithya : என்ன கன்டிஷன்னாலும் ஓக்கே.. நீங்க சொல்லுங்க.. நீங்க அடி வாங்கின கதைய கேக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்..

Sajeev : நல்லாப் பண்றம்மா நீ.. சரி நான் இப்போ கால் பண்ணுவேன்.. நீ அட்டன்ட் பண்ணனும்.. அப்போ தான் சொல்லுவேன்...

Nithya : ஐயோ சர்வேஷ்.. இதுக்கு தான் கன்டிஷன் அது இதுன்னு எல்லாம் சொன்னீங்கலா.. சரி நீங்க கால் பண்ணுங்க.. நான் அட்டன்ட் பண்ணுறேன்..


அதன் பின் சஜீவ் அழைத்ததும் முதலில் நித்யா தான் ஹலோ என்றாள். சஜீவ்விற்கோ இறக்கை கட்டிப் பறக்காத குறை.

பலமுறை அழைத்தும் எந்தப் பதிலுமின்றிப் போக,

Nithya : ஹலோ சர்வேஷ்.. என்ன ஏதும் பேச மாட்டேங்குறீங்க... மெசேஜ் எல்லா நல்லா பண்ணுறீங்க.. இப்போ கால் பண்ணிட்டு அமைதியா இருக்கீங்க...

Sajeev : அது வந்து யுவ்... ச்சீ இல்ல.. நித்யா.. ஃபர்ஸ்ட் டைம் பேசுறோமா அதான் கொஞ்சம் தயக்கம்..

Nithya : ஹஹா.. என்னங்க நீங்க.. இங்க எல்லாம் உல்ட்டாவா நடக்குது... நான் சொல்ல வேண்டிய டயலோக் எல்லாம் நீங்க சொல்றீங்க..

Sajeev : Ok Ok leave it.. anyways your voice is sweet.. just like child voice..

Nithya : என்னது... அப்போ என்ன பேபின்னு சொல்றீங்களா?

Sajeev : ஐயோ இல்லங்க.. பெரியவங்க வாய்ஸ் தான்..

Nithya : அப்போ எனக்கு வயசாயிடுச்சின்னு சொல்றீங்களா...

Sajeev : அச்சச்சோ இல்லங்க.. நான் எதுவுமே சொல்லல...

Nithya : ஹஹஹாஹா.. நான் சும்மா உங்கள கலாய்ச்சேன் சர்வேஷ்.. டேக் இட் ஈசி.

Sajeev : அதுக்குன்னு இப்படியாங்க.. நான் கூட ஃபர்ஸ்ட் டைம் பேச கிட்டே கோவப்படுத்திட்டேனோன்னு ஃபீல் பண்ணேன்..

Nithya : அப்படி எதுவும் இல்லங்க.. ஹ்ம்ம் ஓக்கே.. இப்போ நீங்க சொல்லுங்க நீங்க வீட்டுல அடி வாங்கின சரித்திரம் எல்லாம்...


அதன் பின் இருவரும் சாதாரணமாக தமது சிறு வயதில் நடந்த சம்பவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டனர்.

நித்யா செய்த குறும்புகளைக் கேட்டு ரசித்து சஜீவ்வும்,

சஜீவ் செய்த வீரதீர சாகசங்களைக் கேட்டு ரசித்து நித்யாவும் அந்த பொழுதுகளை இனிமையாக்கினர்.

இவ்வாறே நாட்கள் செல்ல இருவரும் நண்பர்களாக பேசிப் பழகி சாதாரணமாக செல்ல தாம் அறியாமலே ஒருவருக்கொருவர் மனதில் ஆழப் பதிந்தனர்.

வெறும் மொபைல் மூலம் முகம் கூட பார்க்காது குரல் மட்டும் கேட்டு தம் கஷ்டநஷ்டங்கள், சுக துக்கங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டு மனதளவில் நெருக்கமாயினர்.

சரியாக ஆறு மாதம் கழித்து சஜீவ் வேலை செய்யும் IT கம்பனியிலிருந்து அவனுக்கு யூ.எஸ். இல் வேலை வாய்ப்பும் கிட்டியது.

❤️❤️❤️❤️❤️

- Nuha Maryam -
 
Top