Nuha Maryam
Member
அன்று நித்ய யுவனியின் செமஸ்டர் பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தன.
எப்போதும் முதல் மதிப்பெண் எடுப்பவள் அனைத்துப் பாடங்களிலும் பார்டர் பாஸ் பண்ணி இருந்தாள்.
ஆனால் அது அவளைப் பெரிதாக பாதிக்கவில்லை.
அந்த கோபத்தில் தான் ஜனனி அவளை அறைந்தாள்.
ஜனனி, "ஏன் நித்தி இப்படி இருக்காய்... எப்பவுமே ஃபர்ஸ்ட் மார்க் வாங்குவாய் நீ... ஆனா இந்த தடவ ஜஸ்ட் பார்டர் பாஸ் பண்ணி இருக்காய்... மிஸ் கூட உன்ன ஒரு மாதிரி பாத்துட்டு போறாங்க... அப்படி எதை தொலைச்சிட்டன்னு இப்படி நடந்துக்குறாய்..." எனக் கோவமாக கேட்க நித்ய யுவனி தலை குனிந்தபடி அமைதியாக இருந்தாள்.
அவள் இரு தோள்களையும் பற்றி உலுக்கிய ஜனனி, "ஏன்டி இப்படி இருக்காய்... ஏதாவது சொல்லு... அந்த சர்வேஷ் கூட பேச வேணாம்னு சொன்னதுக்காகவா இப்படி நடந்துக்குற... நீ எதுக்குடி அவன் கூட பேசலன்னு ஃபீல் பண்ணனும்... உனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல நித்தி... புரிஞ்சிக்கோ..." என்க,
"பிகாஸ் ஐ லவ் ஹிம்..." என்று அமைதியாக கூறினாள் நித்ய யுவனி.
ஜனனிக்கு அவள் கூறியதை நம்ப முடியவில்லை.
ஜனனி, "என்ன சொன்ன திருப்பி சொல்லு..." என்க,
நித்ய யுவனி, "ஆமா ஜெனி... நான் அவன லவ் பண்றேன்... ரொம்ப லவ் பண்றேன்... அவன் இல்லாம என்னால இருக்க முடியல... நீ அவன் கூட பேச வேணாம்னு சொல்லும் வர நானும் சஜீவ் கூட சாதாரணமா தான் பேசிக்கிட்டு இருந்தேன்... நீ சொன்னதும் நான் அவனுக்கு கால், மெசேஜ் பண்றத கூட நிறுத்திட்டேன்.... பட் அதுக்கப்புறம் கொஞ்ச நாள் போனதும் தான் புரிஞ்சது என்னால அவன் கூட பேசாம இருக்க முடியாது... ஏன்னா நான் சஜீவ்வ அந்த அளவு லவ் பண்றேன்... பட் என்னால உன்னயும் ஹர்ட் பண்ண முடியல ஜெனி... எனக்கு நீ ரொம்ப முக்கியம்..." என்றவள் ஜனனியின் தோளில் சாய்ந்து அழுதாள்.
நித்யாவை ஆறுதலாக அணைத்த ஜனனி, "நித்தி நீ அழாதே... சாரிம்மா... எனக்கு தெரியல நீ சர்வேஷ லவ் பண்ணுறன்னு... உன் லைஃப்ல எந்த ப்ராப்ளமும் வரக் கூடாதுன்னு தான் நான் அவன் கூட பேசாம இருக்க சொன்னேன்... பட் நான் சொன்னதே ரொம்ப லேட்டுன்னு இப்ப தான் புரியிது... நீ எனக்காக உன் காதல மறைக்கும் போது நான் மட்டும் என் நித்திய கஷ்டப்படுத்துவேணா... நீ இன்னெக்கே பேசு சர்வேஷ் கூட... பட் அவன் உன்ன வேணாம்னு சொன்ன அதையும் ஏத்துக்க நீ தயாரா இருக்கனும்... என்னோட பெஸ்ட்டி யாரு கிட்டயும் கீழிறங்கி போறது எனக்கு பிடிக்காது..." என்கவும்,
"நிஜமா தான் சொல்றியா ஜெனி..." என நித்யா புன்னகையுடன் கேட்க ஆம் என தலையசைத்தாள் ஜனனி.
சுசித்ரா அன்று சஜீவ்வை விட்டு சென்ற பின் முதன் முறை குடிக்க ஆரம்பித்தான் சஜீவ்.
அதன் பின் தொடர்ந்து வந்த நாட்களில் வேலை விட்டு வந்ததும் சிகரெட் மது என இருப்பான்.
அங்கிருந்த அவன் நண்பர்கள் யார் சொல்லியும் சஜீவ் கேட்கவில்லை.
இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் வேலை விட்டு வந்தவன் எப்போதும் பல மதுவை நாட அவன் மொபைல் சத்தமிட்டது.
சஜீவ், "எவன்டா அது இந்த நேரத்துல டிஷ்டர்ப் பண்றது..." என சலிப்பாக மொபைலை எடுத்துப் பார்க்க நித்ய யுவனியிடமிருந்து ஹாய் என மெசேஜ் வந்திருந்தது.
அப்போது தான் அப்படி ஒருத்தி இருந்தாள் என்றதே சஜீவ்விற்கு ஞாபகம் வந்தது.
புருவ முடிச்சுடன் பதிலுக்கு ஹாய் எனத் தட்டி விட்டான்.
பின் க்ளாஸில் மதுவை ஊற்றி ஒரு வாய் குடிக்க மீண்டும் மெசேஜ் வந்தது.
"ஃப்ரீயா... உங்க கூட கொஞ்சம் பேசணும்..." என்று வந்திருந்தது.
ஆம் என பதிலளித்தவன் குடிக்க ஆரம்பித்தான்.
உடனே நித்ய யுவனியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்ற பின் இரு பக்கமும் அமைதி.
நித்ய யுவனியோ வெட்கத்திலும் தயக்கத்திலும் அமைதியாக இருக்க சஜீவ்வோ போதையில் அமைதியாக இருந்தான்.
முதலில் நித்ய யுவனியே அவ் அமைதியைக் கலைத்தாள்.
நித்யா, "எப்படி இருக்கீங்க சஜீவ்... " என்க அவனிடமிருந்து ஹ்ம்ம் என பதில் வந்தது.
"ஓஹ்... தூங்க போறீங்களா.. அங்க இப்ப நைட்டுல்ல..." என சஜீவ் தூக்கக் கலக்கத்தில் பேசுகிறான் என நினைத்துப் பேச,
"இல்ல.. சும்மா தான் இருக்கேன்... சொல்லு..." என்றான் சஜீவ்.
இன்னும் அவனுக்கு முழுவதுமாக போதை ஏறவில்லை.
அதனால் அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தான் அவன்.
சற்று நேரம் அமைதியாக இருந்த நித்யா பின்,
"அது..." என சொல்லத் தயங்கியவள் பின் தன்னை நிதானப் படுத்திக்கொண்டவள், "சஜீவ்... ஐ திங்க் ஐம் இன் லவ் வித் யூ..." என்கவும் இருந்த போதையும் இறங்கியது சஜீவ்விற்கு.
நித்யா கூறியதைக் கேட்டதும் அவனுக்கு சுசித்ரா கூறியவை தான் நினைவுக்கு வந்தது.
கையில் இருந்த மதுக் கோப்பையை நெருக்க அது சில்லு சில்லாக அவன் கைகளைப் பதம் பார்த்தது.
கையில் இரத்தம் வடிந்து கொண்டிருக்க அதை விட அவன் மனம் ரணமாக வலித்தது.
சஜீவ் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கவும் அவன் தன்னை தவறாக எண்ணி விட்டானோ என நினைத்த நித்யா,
"ஒரு பொண்ணே வந்து லவ் சொல்றன்னு ப்ளீஸ் என்ன தப்பா எடுத்துக்காதீங்க சஜீவ்... நான் நிஜமாலுமே உங்கள ரொம்ப லவ் பண்றேன்... நான் ஏன் இவ்வளவு நாள் உங்க கூட பேசாம இருந்தேன்னா..." என ஜனனி கூறியதிலிருந்து இன்று நடந்தது வரை கூறினாள்.
சஜீவ் மனதில், "இந்தப் பொண்ணுங்களையே நம்ப கூடாது... முதல்ல இப்படி சொல்லுவாங்க... அதுக்கப்புறம் வந்து நீ அழகில்ல... படிப்பில்ல ஏதாவது சொல்லி கழட்டி விட்டுருவாங்க... நிச்சயமா இவளும் என் சொத்துக்காக தான் என்ன விரும்புறேன்னு சொல்றாள்... இந்த தடவ யாராலையும் இந்த சஜீவ் சர்வேஷ ஏமாத்த முடியாது... எனக்கு ஒரு பொண்ணு தந்த வலிய இன்னொரு பொண்ணுக்கு நான் கொடுத்தா தான் என் மனசுல உள்ள ஆத்திரமும் வலியும் அடங்கும்..." என முடிவெடுத்தான்.
ஆனால் தனக்கே தற்போது தான் சுசித்ரா சொல்லி சொத்து விஷயம் தெரிய வந்தது... இன்று வரை பேசாமல் இருந்த நித்ய யுவனிக்கு தான் கூறாமல் அது பற்றி தெரிய வருமா என யோசிக்க தவறினான் சஜீவ்.
ஏதோ புதுத் தெம்பு வந்தது போல் மதுக் கிண்ணத்தை ஓரமாக்கியவன் மொபைலை எடுத்து காதில் வைத்து,
"நானும் உன்ன பாத்ததுல இருந்தே உன்ன லவ் பண்றேன் யுவி... ஆனா நீ என்ன நெனப்பியோன்னு தான் இது வரைக்கும் சொல்லல..." என்க,
நித்ய யுவனிக்கு வந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
நித்யா, "என்னால நம்பவே முடியல சஜு... எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு..." என்றாள்.
நித்யா மகிழ்ச்சியாக பேச சஜீவுக்கு மேலும் அவளிடம் பொய் கூற ஏதோ தடுத்தது.
இரு வேறு மனநிலையில் இருந்தான் சஜீவ்.
சஜீவ், "யுவி கொஞ்சம் டயர்டா இருக்கு... நாம நாளைக்கு பேசலாமே..." என்க அவளும் சரி என்று வைத்து விட்டாள்.
சஜீவுக்கு போதை வேறு தலைவலியைத் தந்தது.
மனம் நித்யாவை ஏமாற்ற வேண்டாம் எனக் கூற மூளையோ தன்னை மட்டும் அவள் காதல் என்ற பெயரில் ஏமாற்றலாமா என எதிர்க் கேள்வி கேட்டது.
தலையை அழுத்திப் பிடித்தவன், "ஆஹ்ஹ்ஹ்..." என்று கத்தி விட்டு, "இல்ல.. என் வலிய மறக்கனும்னா இதை பண்ணியே ஆகனும்..." என தனக்கே சமாதானப்படுத்திக் கொண்டான்.
யாரோ செய்த தவறுக்கு விதி நித்யாவின் வாழ்வில் சஜீவ் மூலமாக புயல் வீச ஆரம்பித்தது.
நித்யா உடனே ஜனனிக்கு அழைத்து கூற ஏனோ ஜனனியால் நம்ப முடியவில்லை.
சஜீவ் மறுப்பான் என நம்பித்தான் அவனுடன் நித்யாவுக்கு பேச கூறினாள்.
ஆனால் தான் இப்போது ஏதாவது கூறினால் நித்யாவின் மனம் புண்படும் என அமைதியாக இருந்தாள்.
அதன் பின் வந்த நாட்களில் நித்யா எப்போது பார்த்தாலும் ஃபோனும் கையுமாக இருக்க ராஜாராமும் அவளின் நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டு தான் இருந்தார்.
ஆனால் அவரால் தன் செல்ல மகளை சந்தேகிக்க முடியவில்லை.
ஒரு வேளை அவர் அப்போதே நித்யாவின் செயல்களைக் கண்டுபிடித்து அவளுக்கு புத்தி சொல்லி இருந்தால் தன் செல்ல மகளின் மனம் உடைவதையாவது தடுத்திருக்கலாம்.
நித்யாவுடன் பேசும் போது அவள் வார்த்தைக்கு வார்த்தை சஜு சஜு எனப் பேச சில சமயம் அவளை ஏமாற்றுகிறோம் என சஜீவ்வுக்கு குற்றவணர்ச்சியாக இருக்கும்.
அதன் பின் சில நாட்களுக்கு நித்யாவுடன் மெசேஜ் கால் எதுவும் இல்லாமல் காணாமல் போய் விடுவான்.
நித்யா அழைத்தாலும் எடுக்க மாட்டான்.
அந் நாட்களில் நித்யா ஜனனியிடம் கூறி கவலைப்படுவாள்.
ஜனனி, "நீ சொல்ற எதையும் என்னால நம்ப முடியல நித்தி... எனக்கு என்னமோ அவன் உன்ன ஏமாத்துறான்னு சந்தேகமா இருக்கு..." என்க,
நித்யா, "நீ ஆரம்பத்துல இருந்தே சஜுவ சந்தேகப்பட்டுட்டு இருக்காய் ஜெனி... அவன் அப்படிப்பட்டவன் இல்ல... எனக்கு அவன் மேல முழு நம்பிக்கை இருக்கு.." என்பாள்.
அதன் பின் ஜனனி எதுவும் பேச மாட்டாள்.
நித்யா தன்னை ஏமாற்றுகிறாள் என சஜீவ் தனக்கே கூறிக்கொண்டாலும் அதிக குற்றவுணர்வாக இருக்கும் போது,
"சாரி யுவி... நாம பிரிஞ்சிரலாம்.." என்று காரணம் கூட சொல்லாமல் அவளை ப்ளாக் செய்து விடுவான்.
நித்யாவோ காரணம் அறியாமல் தனியே அழுது தன்னை வறுத்திக் கொள்வாள்.
ஜனனியிடம் கூட எதுவும் கூற மாட்டாள்.
அவ்வளவு இருந்தும் சஜீவ் மீது ஒரு துளி சந்தேகம் கூட அவளுகக்உ வராது.
அவள் சஜீவ்வின் மீது பைத்தியமாக இருக்கிறாள் என்று கூட சொல்லலாம்.
சஜீவ்வோ இரண்டு மூன்று வாரத்தில் மீண்டும் அவளுக்கு, "சாரி யுவி... வர்க் டென்ஷன்ல அப்படி பேசிட்டேன்..." எனக் கூறுவான்.
நித்ய யுவனியும் அவனை நம்பி, எதுவும் கூறாமல் மீண்டும் பழையபடி பேசுவாள்.
பல முறை இவ்வாறு சஜீவ் காணாமல் போவான்.
காரணம் அறியாமல் நித்யாவும் துடித்துப் போவாள்.
ஆனால் அவன் திரும்பவும் வந்து அவளுடன் பேசும் போது அவனுடன் கோவமாகக் கூட பேச மாட்டாள்.
அந்த அளவு சஜீவ் மீது நம்பிக்கை வைத்திருந்தாள்.
ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டு இருக்க,
சஜீவ், "யுவி.. நான் இன்னும் வன் மன்த்ல வெகேஷன் வரலாம்னு இருக்கேன்..." என்க,
நித்யா, "ஹை... ஜாலி சஜு... என்னோட எய்டீன்த் பர்த்டே கூட வருது.." என்றாள்.
அப்போது தான் அவளின் வயதே அவன் அறிந்தான்.
"இன்னும் எய்ட்டீன் கூட ஆகல... என்ன விட ஃபைவ் யர்ஸ் சின்ன பொண்ணு... ஆனா என்னையே ஏமாத்த பாக்குறாளா..." என அதற்கும் நித்யாவையே குறை கூறி சந்தேகப்பட்டான் சஜீவ்.
ஆனால் இவை எதையும் அறியாமல் இருந்தாள் நித்ய யுவனி.
அன்று நித்யாவின் பதினெட்டாவது பிறந்தநாள்.
அன்று தான் சஜீவ் வருவதாக இருந்தது.
இந்தியா வந்ததும் நேராக நித்யாவைத் தான் சந்திக்க வருவதாக அவளிடம் கூறி இருந்தான்.
மாலையில் தந்தை பிறந்த நாளுக்கென வாங்கித் தந்த புத்தாடை அணிந்து ஷால்டர் பேக் போட்டு அழகாக தயாராகி சஜீவ்வைப் பார்க்க அவன் கூறியிருந்த பார்க் சென்றாள்.
பெற்றோரிடம் எக்ஸ்ட்ரா க்ளாஸ் எனக் கூறி இருந்தாள்.
இரு வருடங்களுக்கு முன் அவனைக் கண்டது.
அதுவும் முகம் கூட ஒழுங்காகப் பார்க்கவில்லை.
ஆனால் இன்று காதலிக்க ஆரம்பித்து முதல் தடவையாக சந்திக்க போகின்றாள்.
நித்யாவுக்கு அதைப் பற்றி நினைக்கும் போதே இனித்தது.
பார்க்கிலிருந்த கல் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து சஜீவை சந்திக்கும் கற்பனையில் இருந்தாள்.
அவளுக்கு எதிரான மனநிலையில் இருந்தான் சஜீவ்.
சொல்லப் போனால் அவன் அந்தப் பயணத்தையே விரும்பவில்லை.
நித்யா கெஞ்சினாள் என்பதற்காகவே வந்தான்.
அவளைக் கெஞ்ச விட்டு மகிழ்ச்சியடைய ஏனோ அவனால் முடியவில்லை.
இந்த சில நாட்களில் அவள் முகம் கொஞ்சம் சுருங்கினால் கூட அவன் மனம் வலிக்கும்.
அது ஏன் என்று தான் அவன் யோசிக்க மறந்தான்.
நித்யாவுக்காக கொஞ்சம் நேரம் மனம் உருகினால் அடுத்த நிமிடம் மீண்டும் பழைய பல்லவியைப் பாடுவான்.
அவனுக்கு இப்போது பெண்கள் என்றாலே ஒரு அலட்சியம் தோன்றும்.
விமான நிலையத்திலிருந்து டாக்சியில் வரும் போதே இதற்கு மேலும் நித்யாவிடம் பொய் கூறி ஏமாற்ற முடியாமல் அவளிடம் அனைத்து உண்மையையும் கூறி இதை இப்போதே நிறுத்தி விடுவோம் என அவன் முடிவெடுத்து விட்டான்.
டாக்சி பார்க்கை அடைந்ததும் நித்ய யுவனியின் பிறந்த நாளுக்கென வாங்கிய பரிசுடன் இறங்கினான்.
பார்க்கினுள்ளே சென்று நித்யா எங்கு இருக்கிறாள் என கேட்க நித்யாவுக்கு அழைப்பு விடுக்க அவனுக்கு அருகிலே மொபைல் ஒலிக்கும் சத்தம் கேட்டது.
அவனுக்கு முன்னால் இருந்த கல் பெஞ்ச்சில் மறுபுறம் திரும்பி அமர்ந்திருந்தாள் நித்ய யுவனி.
சஜீவ்விடமிருந்து அழைப்பு வந்ததும் ஏற்கப் பார்க்க அதற்குள் கட் ஆகி இருந்தது.
நித்யா மீண்டும் சஜீவ்வுக்கு அழைக்க எண்ண அதற்குள் யாரோ அவள் தோள் தொடவும் திடுக்கிட்டு திரும்பினாள்.
இருவரும் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தன.
இரண்டு வருடங்களுக்கு முன் இரட்டை ஜடை பிண்ணி சிறுமியாக தன் கண்களுக்குத் தெரிந்தவள் இன்றோ பெண்ணுக்கே உரித்தான அனைத்து குணத்தையும் கொண்டு நிற்கிறாள்.
நீல நிற சல்வார் அணிந்து, துப்பட்டாவை விரித்துப் போட்டு, விரித்து விட்ட கூந்தலை முன்னே போட்டு தேவதையாகத் தெரிந்தவளிடமிருந்து சஜீவ்வால் தன் கண்களை அகற்ற முடியவில்லை.
நித்யாவும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தன் காதல் கை கூடுமா என நினைத்துக் கொண்டிருந்தவளின் முன் அவள் காதலன் அவளுக்கே உரியவனாகி அவள் முன் நிற்கிறான்.
அதற்குள் சஜீவ்விற்கு சுசித்ரா கூறியவை நினைவு வர அவசரமாக நித்யாவிடமிருந்து தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
நித்யாவும் தன்னிலைக்கு வர சஜீவ் அவசரமாக அவன் கொண்டு வந்திருந்த பரிசை அவளிடம் வழங்க அவளும் வாங்கிக் கொண்டாள்.
இருவரும் அங்கிருந்த கல் பெஞ்ச்சில் அமர்ந்தனர்.
நித்யாவோ முதலில் என்ன பேச என அமைதியாக இருக்க சஜீவ்வோ எப்படி அவளிடம் உண்மையைக் கூற என யோசித்துக் கொண்டிருந்தான்.
என்ன நடந்தாலும் சரி இன்று கூறியே ஆக வேண்டும் என முடிவெடுத்தவன் அவள் பக்கம் திரும்பி யுவி என்கவும் நித்யா அவன் பக்கம் வேகமாக திரும்பினாள்.
இருவரின் முகமும் வெகு அருகில் இருந்தது.
நித்ய யுவனியின் முகத்தை அருகில் பார்த்தவனால் தான் கூற வந்ததைக் கூறி அவள் மனதை உடைக்க மனம் வரவில்லை.
நித்யாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் நெற்றியில் விழுந்த முடியை ஒரு விரலால் ஒதுக்க பின் அவன் பார்வை மெதுவாக கீழிறங்கி அவள் உதட்டில் நிலைத்தது.
சஜீவ்வின் பார்வை வீச்சு தாங்காது பெண்களுக்கே உரிய தயக்கத்தில் கண்களை மூட அவள் உதடுகள் துடித்தன.
அவள் உதடுகளில் பார்வை பதித்திருந்தவனின் செவியில் சுசித்ரா, "நீ சரியான சாமியார்..." எனக் கூறியது ஒலிக்க,
ஒரு கரத்தால் அவள் முடியைப் பற்றியவன் வேகமாக அவள் இதழ்களை சிறை பிடித்தான்.
நித்யா அதிர்ந்து விழி விரிக்க, கோவத்தில் அவள் இதழ்களைப் பற்றியவன் சற்று நேரத்தில் மென்மையாக அவள் இதழ்களை ஆட்சி செய்தான்.
இருவருக்கும் முதல் முத்தம்.
நித்ய யுவனிக்கோ என்ன செய்வது என்று புரியாது கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.
சற்று நேரத்தில் மெதுவாக அவள் இதழ்களை விடுவித்தான் சஜீவ்.
சஜீவ் விட்டதும் நித்யா கண்களைத் திறக்க,
சஜீவ் அவள் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அதில் அவன் தேடிய வெறுப்பு இல்லாமல் காதலால் நிரம்பி இருந்தது.
எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருந்தான் எனத் தெரியவில்லை.
நித்ய யுவனிக்கோ அவன் கண்களைப் பார்க்க தயக்கமாக இருந்தது.
அடிக்கடி இமை மூடித் திறந்தாள்.
சஜீவ்வால் அவள் விழிகளில் தெரிந்த காதலை நம்பாமல் இருக்க முடியவில்லை.
முதன் முறையாக தான் தவறு செய்து விட்டோம் என்ற எண்ணம் வந்தது.
நித்யா வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக்கொள்ள சஜீவ் மெதுவாக அவள் கையை எடுத்து தன் கை மீது வைத்தவன் இருவரின் கோர்த்திருந்த கைகளையும் சற்று நேரம் வெறித்தான்.
அவன் மனதில் பல குழப்பங்கள்.
சஜீவ், "யுவி... ஐம் சாரி..." என்க நித்யா அவன் ஏன் மன்னிப்பு கேட்கிறான் எனப் புரியாமல் முழித்தாள்.
நித்யா, "என்னாச்சு சஜு..." என்க அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,
"நாம அப்புறம் மீட் பண்ணலாம் யுவி... நீ பார்த்து பத்திரமா வீட்டுக்கு போய் சேரு..." என்கவும் சரி என தலையசைத்தாள்.
பின் இருவரும் எழுந்து கொள்ள சஜீவ் இன்னும் நித்யாவின் கையை விடாமல் இருக்க நித்யா மெதுவாக தன் கையை விடுவிக்கப் பார்க்கவும் இன்னும் அழுத்திப் பிடித்தவன்,
அவள் கண்களை நோக்கி, "ஐ லவ் யூ யுவி..." என்க அவனுக்கு புன்னகையை பதிலாக வழங்கினாள் நித்யா.
பின் இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

- Nuha Maryam -