கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நாட்கள் - அத்தியாயம் 4

Nuha Maryam

Member
திருமணத்துக்கு வெறும் ரெண்டு நாட்களே இருக்க முதல் நாளான இன்று மெஹேந்தி பங்ஷன் எனவும் திருமணத்துக்கு முந்தைய நாள் மற்ற சம்பிரதாயங்கள் என முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டன.

மண்டபம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க, ஆண்கள் ஒரு பக்கம் பெண்கள் ஒரு பக்கம் என பிரித்து வைக்கப்பட்டிருந்தது.

இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற, ரோஜாப்பூ அலங்காரத்துடன் கூடிய லெஹேங்காவில் தோழிகள் கரம் பற்றி மேடையை அடைந்தாள் ஜனனி.

மணமகனுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ப்ரேமின் கண்களோ அவளை விட்டு அகல மறுத்தது.

தன்னவனை நிமிர்ந்து பார்த்த ஜனனி வெட்கத்தில் முகம் சிவக்க சிரம் தாழ்த்தினாள்.

ப்ரேமிற்கு அத்தை முறை பெண்மணி ஒருவர், "எல்லாம் தயாராயிடுச்சின்னா பொண்ணுக்கு மருதாணி வைக்க ஆரம்பிச்சிருங்க.." என்க,

பார்லரிலிருந்து ஜனனிக்கு அலங்காரம் செய்ய வந்தவர்களில் ஒருவர் மெஹேந்தி வைக்க வர,

"கொஞ்சம் இருங்க.. நித்து.. இங்க வா.. எனக்கு நீ தான் இன்னிக்கி மெஹேந்தி வெச்சி விடனும்.." என கூற மறுப்பாக தலையசைத்த நித்யா,

"நான் எதுக்கு ஜெனி.. அது தான் பார்லரிலிருந்து ஆளுங்க வந்திருக்காங்களே.." என்க ஜனனி,

"அதெல்லாம் எனக்கு தெரியாது.. நீ வெச்சி விடலன்னா நானும் மெஹேந்தி வெச்சிக்க மாட்டேன்.." எனக் கூற ப்ரேமின் தாய் ஜானகியும்,

"அம்மாடி யுவனி.. மருமக அவ்வளவு ஆசையா சொல்றாலே.. நீயே வெச்சி விட்டுரும்மா.." என்க அனைவரும் அதற்கு ஒத்து ஊத மறுக்க இடமின்றி புன்னகைத்தவாறே மேடை ஏறினாள் நித்யா.

மஞ்சளும் வெள்ளையும் கலந்த லெஹேங்காவில் சாதாரண ஒப்பனையில் ஜனனிக்கு ஈடாக வந்தமர்ந்தவள் மீதே சஜீவ்வின் பார்வை பதிந்திருந்தது.

இவற்றை ஒரு ஜோடிக்கண்கள் சந்தேகத்துடனும் இன்னொரு ஜோடிக்கண்கள் வெறுப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தது.

நித்யா ஜனனிக்கு மெஹேந்தி வைக்க ஆரம்பிக்க சட்டென மண்டபத்தினுள் ஒளி மங்கலாகியது.

ஒரு நிமிடம் அனைவரும் அதிர அடுத்த செக்கனே மணமகனும் மணமகளும் அமர்ந்திருந்த இடங்கள் மாத்திரம் ஒளியேற்றப்பட்டது.

தொடர்ந்து காற்று வெளியிடை பட BGM ஒலிக்க DJ இடமிருந்து மைக்கை வாங்கிய அஞ்சலி மேடைக்கு முன் வந்து BGM இற்கேற்ப பாடியவாறு ஆடத் தொடங்கினாள்.

தொடர்ந்து மற்ற தோழர் தோழிகளும் மேடைக்கு முன் வர, அனைவர் முகத்திலும் புன்னகை படர கைத்தட்டல்களுடன் மெஹேந்தி பங்ஷன் இனிதே ஆரம்பமானது.

அஞ்சலி,
"சரட்டு வண்டில சிரட்டொலியில
ஓரம் தெரிஞ்சது உன் முகம்...
உள்ளம் கிள்ளும்
அந்த கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது என் முகம்..."

மியுசிக்.....

திவ்யா,
"சரட்டு வண்டில சிரட்டொலியில
ஓரம் தெரிஞ்சது உன் முகம்...
உள்ளம் கிள்ளும்
அந்த கள்ளச் சிரிப்புல

மெல்லச் சிவந்தது என் முகம்..."

ஹரிஷ்,
"அடி வெத்தல போட்ட ஒதட்ட
எனக்கு பத்திரம் பண்ணிக்கொடு...
நான் கொடுத்த கடனத் திருப்பி
கொடுக்க சத்தியம் பண்ணிக்கொடு...
என் ரத்தம் சூடு கொள்ள

பத்து நிமிசம் தான் ராசாத்தி..."

ப்ரியா,
"ஆணுக்கோ பத்து நிமிசம் ஹ..
பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம் ஹ..
பொதுவா சண்டித்தனம்
பண்ணும் ஆம்பளைய

பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா..."

ஆரவ்,
"சேலைக்கே சாயம் போகும் மட்டும்
ஒன்ன நான் வெளுக்க வேணுமடி..
பாடுபட்டு விடியும் பொழுதும்
வெளியில் சொல்ல
பொய்கள் வேணுமடி
புது பொண்ணே...

அது தான் டி தமிழ் நாட்டு பானி..."

அஞ்சலி,
"சரட்டு வண்டில சிரட்டொலியில
ஓரம் தெரிஞ்சது உன் முகம்...
உள்ளம் கிள்ளும்
அந்த கள்ளச் சிரிப்புல

மெல்லச் சிவந்தது என் முகம்..."

அஞ்சலி,திவ்யா & ப்ரியா,
"சரட்டு வண்டில சிரட்டொலியில
ஓரம் தெரிஞ்சது உன் முகம்...
உள்ளம் கிள்ளும்
அந்த கள்ளச் சிரிப்புல

மெல்லச் சிவந்தது என் முகம்..."

மியுசிக்.....

ஹரிஷ் & ஆரவ்,
"ஏக்கத்தையே கொழச்சி கொழச்சி
குங்குமம் பூசிக்கோ டி...
ஆசையுள்ள வேர்வையைப்

போல் வாசம் ஏதடி..."

ப்ரியா & ஆரவ்,
"ஏ பூங்கொடி.. வந்து தேன் குடி..
அவ கைகளில் உடையட்டும்

கண்ணே கண்ணாடி..."

அஞ்சலி,
"கத்தாழங் காட்டுக்குள்
முத்தாளங் கேக்குது
சுத்தானை ரெண்டுக்கு
கொண்டாட்டம்...
குத்தாலச் சாரலே
முத்தானப் பன்னீரே

வித்தாரக்கல்லித் துள்ளாட்டம்..."

சித்தார்த்,
"அவன் மன்மதக்காட்டு
சந்தனம் எடுத்து
மார்பில் அப்பிக்கிட்டான்...
இவ குரங்குக் கழுத்து
குட்டியப் போல

தோளில் ஒட்டிக்கிட்டா..."

அஞ்சலி,
"இனி ஊட்டிக் கலங்குற
முத்தம் கொடுத்திடு ராசாவே..."

சித்தார்த் & அஞ்சலி,
"ஒன்னுத்தான் ரத்தனக்கட்டி ஹ..
மாப்பிள வெத்தலப்பொட்டி..
எடுத்து சந்தனக்கட்டிய
வெத்தலப்பொட்டியும்
மூடச்சொல்லுங்கடி...
முதலில் மாவ மாத்துங்கடி..
பிறகு மால மாத்திங்கடி..
கட்டில் விட்டு காலையிலே

கசங்கி வந்தா சேல மாத்துங்கடி..."

திவ்யா,
"மகராணி.....
அது தான் டி தமிழ் நாட்டு பானி..."

அஞ்சலி,திவ்யா & ப்ரியா,
"கத்தாழங் காட்டுக்குள்
முத்தாளங் கேக்குது
சுத்தானை ரெண்டுக்கு
கொண்டாட்டம்...
குத்தாலச் சாரலே
முத்தானப் பன்னீரே

வித்தாரக்கல்லித் துள்ளாட்டம்..."

சித்தார்த்,ஆரவ் & ஹரிஷ்,
"ஹே..ஹே....ஹோ......."

அஞ்சலி,திவ்யா & ப்ரியா,
"கத்தாழங் காட்டுக்குள்
முத்தாளங் கேக்குது
சுத்தானை ரெண்டுக்கு
கொண்டாட்டம்...
குத்தாலச் சாரலே
முத்தானப் பன்னீரே
வித்தாரக்கல்லித் துள்ளாட்டம்...

கத்தாழங் காட்டுக்குள்
முத்தாளங் கேக்குது
சுத்தானை ரெண்டுக்கு
கொண்டாட்டம்...
குத்தாலச் சாரலே
முத்தானப் பன்னீரே

வித்தாரக்கல்லித் துள்ளாட்டம்..."

மியுசிக்......

பாடல் முடிய மண்டபம் முழுவதும் மீண்டும் ஒளியேற்றப்பட்டது.

கைத்தட்டல்கள் பலமாய் ஒலிக்க அதுவரை நித்யாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த சஜீவ் சுயநினைவுக்கு வந்தான்.

இவர்கள் பாடி முடிக்க ஜனனியின் ஒரு கைக்கு மெஹேந்தி வைத்து முடித்து எழுந்தாள் நித்யா.

பார்லர் பெண்மணிகள் ஜனனியின் மற்றைய கைக்கும் கால்களுக்கும் மெஹேந்தி வைத்தனர்.

அனைவரும் மகிழ்ச்சியில் திழைக்க அஞ்சலியின் காதில் இரகசியமாக ஜனனி ஏதோ கூற அங்கிருந்து வெளியே செல்லக் கிளம்பிய நித்யாவை தடுத்த அஞ்சலி,

"ஹேய் நித்தி.. அதுக்குள்ள எங்க கிளம்பிட்ட..." என வினவ நித்யா,

"இல்ல அஞ்சு பேங்களூர்ல இருந்து த்ரூவா மண்டபத்துக்கே வந்துட்டேன்.. வீட்டுல கொஞ்சம் திங்ஸ் இருக்கு அதெல்லாம் எடுத்துட்டு சீக்கிரம் வந்துட்ரேன்.." என்க,
"அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.. இப்போ நீ வா என் கூட.. ஜனனி சொல்லிட்டா நீ இன்னெக்கி கண்டிப்பா அவளுக்காக பாடனும்னு.." என நித்யாவை இழுத்துச் செல்ல அவள் எவ்வளவோ மறுத்தும் மேடைக்கு முன்னே நித்யாவை நிறுத்திய பின்னே கைகளை விட்டாள் அஞ்சலி.

அனைவரின் பார்வையும் அவள் பக்கம் திரும்ப மிகவும் சங்கடமாக உணர்ந்தாள்.

அஞ்சலி அவள் கையில் மைக்கை திணித்து விட்டு,"உன்ன சுத்தி இருக்குற எல்லாத்தையும் மறந்துடு.. இன்னெக்கி உன்னோட பெஸ்டீக்கு ரொம்ப முக்கியமான நாள்.. சோ இது உன்னோட ஜெனிக்காகன்னு நினைச்சிட்டு பாடு.." என்று விட்டு சென்றாள்.

சஜீவ் மிகுந்த ஆர்வத்துடன் இரசனை மிகுந்த பார்வையுடன் அவளை நோக்கினான்.

மேடைக்கு முன் மீண்டும் ஒளி மங்கலாக்கப்பட்டது.

நித்யா கண்களை மூடியவாறு பாட ஆரம்பித்தாள்.

மியுசிக்.....

"ரயிலாராரோ... ரயிலாராரோ...
என கூவாதோ உன்.. பெயரைச்சொன்னால்...

ரயிலாராரோ... ரயிலாராரோ...
இசை பாடாதோ உன்.. காதல் சொன்னால்...

நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே...
ஓராயிரம் வானொலி உள்ளே கேட்குமே...

தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா...
உரு மாறிப் போச்சே ஊஞ்சல் கட்டிலா...
அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா...
மனம் காயுதே ஆசையில் வத்தலா...

ரயிலாராரோ... ஹஹஹஹஹஹஹா...
ரயிலாராரோ... ஹஹஹஹஹஹஹா...
என கூவாதோ உன்.. பெயரைச்சொன்னால்...

ரயிலாராரோ... ரயிலாராரோ...
இசை பாடாதோ உன்.. காதல் சொன்னால்...

மியுசிக்....

வளையல் கொலுசு சிணுங்கிடுதே...
அதிலே இதயம் பிதுங்கிடுதே...
எளிதான தேவதை...
அறியாயோ நீ அதை...

கனவில் இமைகள் கசங்கிடுதே...
அதிலே உறக்கம் நசுங்கிடுதே...
அழகாக நோவதை...
எழுதாயோ ஓர் கதை...

எங்கே என்று.. சில நாளாக நான் என்னை..
காணாமல் தேடித்தான் வந்தேன் உன்னுள்ளே...

உள்ளே வந்தும்.. உனைத் தேடாமல் நீ என்னை..
ஆராயப் போகத்தான் வெட்கம் என்னுள்ளே...

எந்த இடம் உன்னில் அழகு...
சொல்லிட நீயும் இன்னும் பழகு...
பொங்கி வழிகிறதே.. ஆசைப்பாகு...

ரயிலாராரோ... ரயிலாராரோ...
இசை பாடாதோ உன்.. காதல் சொன்னால்...

மியுசிக்.....

இரவும் பகலும் குறும்புகளே...
எனை நீ தொடரும் நொடிகளிலே...
இறகாக நெஞ்சமே.. சுழலாதோ எங்குமே...

ஹோ...மழையும் வெயிலும் உலகினிலே...
இணைந்தே வரும் உன் மொழிகளிலே...
கடலாகும் சங்குமே.. பணியாதோ சிங்கமே...

ஐயோ உன் போல்.. ஒரு ஆள் ஏது மண் மீது...
ஆகாயம் நீயென்றே பார்த்தேன் அண்ணாந்து...

பொய்யே இல்லை..உனை சேர்ந்தேனே இப்போது...
கண்ணே நீ இல்லாமல் போவேன் மல்லாந்து...

நித்தமுமே பித்து பிடித்து...
எங்கும் எனை குத்தி எடுத்து...
சுத்தி அடிக்கிறதே.. காதல் காத்து...

ரயிலாராரோ... ரயிலாராரோ...
என கூவாதோ உன்.. பெயரைச்சொன்னால்...

நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே...
ஓராயிரம் வானொலி உள்ளே கேட்குமே...

தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா...
உரு மாறிப் போச்சே ஊஞ்சல் கட்டிலா...
அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா...
மனம் காயுதே ஆசையில் வத்தலா...

ரயிலாராரோ... ரயிலாராரோ...

என கூவாதோ உன்.. பெயரைச்சொன்னால்...."

நித்யா பாடி முடித்து கண்களைத் திறக்க கரகோச ஒலி அம் மண்டபத்தையே கிழித்தது.

சஜீவ்வின் கண்கள் கலங்கியிருந்தது.

இப்பாடல் பல நினைவுகளை இருவருக்குள்ளும் உயிர்த்தெழச் செய்து விட்டது.

ஆனால் நித்யாவோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் காணப்பட்டாள்.

ஜனனி மேடையிலிருந்து இறங்கி வந்து அவளைக் கட்டி அணைத்து, "சுப்பர்ப் டி... யூ மேட் மை டே பியூடிஃபுள்.. " என்க பதிலுக்கு ஒரு புன்னகையை மாத்திரம் உதிர்த்தாள் நித்யா.

தொடர்ந்து அனைவரும் பங்ஷனில் ஆர்வமாக இருக்க நித்யா வேகமாக அங்கிருந்து நகர்ந்து காரை எடுத்துக் கொண்டு எங்கோ கிளம்பினாள்.

ஒரு ஜோடிக்கண்கள் மாத்திரம் அதனைக் கவனித்து அவளைப் பின் தொடர்ந்தது.

❤️❤️❤️❤️❤️

மக்களே!!! ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன்... உங்க சப்போர்ட் இருந்தா தான் என்னால இன்னும் நல்லா எழுத முடியும்.. Vote & Comments பண்ணுங்க... நன்றி...

- Nuha Maryam -
 
Top