கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நாட்கள் - அத்தியாயம் 43

Nuha Maryam

Member
சாரி சாரி சாரி சாரி மக்களே... யூடி தர ரொம்ப லேட் பண்ணிட்டேன்... கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்... அதனால தான் யூடி ஒழுங்கா தர முடியல... கொஞ்சம் நாளைக்கு இப்படி தான் இருக்கும் மக்களே... சாரி 🙄🙄🙄

❤️❤️❤️❤️❤️

கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி பூமாதேவியை அணைத்துக் கொள்ள மெல்ல துயில் கலைந்தாள் நித்ய யுவனி.

விழி திறக்காமல் தன்னவனின் உடற் சூட்டை உணர தலையை அங்குமிங்கும் வைத்துப் பார்க்க ஏதோ ஒரு மென்மையை மட்டுமே அவளால் உணர முடிந்தது.

குழப்பத்துடன் விழி திறந்து பார்க்க அங்கு அவளவனுக்கு பதிலாக தலையணையே இருந்தது.

அவசரமாக எழுந்து அமர்ந்தவள் சுற்றி முற்றி தன் பார்வையைத் தவழ விட அறையில் எங்கும் சஜீவ் தென்படவில்லை.

கட்டிலை விட்டு மெதுவாக இறங்கிய நித்ய யுவனி கீழே சென்று சமையலறையில் இருந்த வசந்தியிடம், "மா... சஜு எங்கம்மா..." எனக் கேட்கவும் அவளைப் பொய்யாக முறைத்த வசந்தி,

"வேற எங்க இருப்பாரு... மாப்பிள்ளை அவர் வீட்டுல தான் இருப்பாரு... அவர் தான் நேத்து நம்ம கூட வரலயே..." என்றார்.

"நான் கனவு ஏதாவது கண்டுட்டேனா... இல்லையே... நைட்டு நம்ம கூட தானே இருந்தான்... எங்க போயிருப்பான்..." என நித்ய யுவனி தனக்குள்ளே பேசிக் கொள்ள,

இன்னும் அவ்விடத்திலேயே ஏதோ யோசனையில் நின்ற நித்ய யுவனியைக் கண்ட வசந்தி, "என்னாச்சு யுவனி... மாப்பிள்ளை ஞாபகமா இருக்கா... அவர் தான் வர்க் முடிச்சிட்டு நேரா இங்க வந்து உன்ன பார்க்குறதா சொன்னாரே... நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா..." என்கவும் சரி எனத் தலையசைத்த நித்ய யுவனி யோசனையுடனே தன் அறைக்குச் சென்றாள்.

நித்ய யுவனி தன் மொபைலை எடுத்து சஜீவ்விற்கு அழைக்கப் பார்க்க அவள் பார்வையில் பட்டது டேபிள் மீது காற்றுக்கு அசைந்து கொண்டிருந்த காகிதத் துண்டொன்று.

அதனைக் கையில் எடுத்துப் பார்க்க அதில்,

"எழுந்திட்டியா யுவி... சாரிடா.. நீ நல்லா தூங்கிட்டு இருந்த... அதான் உன்ன டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு வந்த வழியே போய்ட்டேன்... நான் வந்தது பத்தி அத்த மாமா கிட்ட சொல்லாதே... ஈவ்னிங் உன்ன வந்து பார்க்குறேன்... லவ் யூ என்ட் மிஸ் யூ யுவி..." என்று இருந்தது.

சஜீவ் எழுதி வைத்திருந்த நோட்டைப் பார்த்ததும் நித்ய யுவனியின் முகத்தில் தானாக புன்னகை ஒட்டிக் கொண்டது.

_______________________________________________

"அம்மு.... ப்ளீஸ்... நிதுவோட ஃபங்க்ஷன்ல கூட உன் பக்கத்துல வர விடவே இல்ல யாராவது பார்த்துடுவாங்கன்னு... இன்னைக்காவது தனியா மீட் பண்ணலாம்டி..." என சித்தார்த் மொபைலில் கெஞ்ச,

மறுபக்கம் அழைப்பில் இருந்தவளோ சித்தார்த்தின் கெஞ்சலைக் கண்டு கொள்ளாமல், "முடியாது சித்து... யாராவது பார்த்துட்டாங்கன்னா பிரச்சினை ஆகிடும்... எங்க வீட்டுல முதல்ல நம்ம விஷயத்த பத்தி பேசணும்... அவங்கள கன்வின்ஸ் பண்ணி சம்மதிக்க வெச்சதுக்கு அப்புறம் தாராளமா மீட் பண்ணலாம்... அது வரைக்கும் நம்மள பத்தி யாருக்கும் தெரிய வேணாம்... ப்ளீஸ்பா... என் செல்லம் தானே..." என்க,

சித்தார்த், "ஹ்க்கும்... ஏதாவது சொல்லி என் வாய அடச்சிரு... எப்படியும் எல்லாருக்கும் தெரிய தானே போகுது... அது இப்பதே தெரிஞ்சா என்ன... நீ எப்போ உங்க வீட்டுல பேசி அதுக்கப்புறம் நாங்க மீட் பண்றது... என்னையும் பேச விட மாட்டேங்குற... " என்றான் கடுப்பாக.

"சரி சரி கோவிச்சிக்காதே சித்து... நான் இன்னைக்கே எங்க வீட்டுல பேசுறேன்... சந்தோஷமா இப்போ..." என்க,

சித்தார்த், "நிஜமா தான் சொல்றியா..." எனக் கேட்டான் சந்தேகமாக.

"ஆமா... நான் பேசிட்டு உன் கிட்ட சொல்றேன்... அது வரைக்கும் வெய்ட் பண்ணு.. ஓக்கேயா..." என்கவும் சித்தார்த்தின் முகம் மலர்ந்தது.

_______________________________________________

நாட்கள் வேகமாக சென்று நித்ய யுவனியின் பிரசவ நாளும் நெருங்கியது.

தினமும் மாலை வேலை முடிந்து வந்து நித்ய யுவனியுடன் நேரம் செலவழிப்பான் சஜீவ்.

இரவு நித்ய யுவனி உறங்கிய பின்னர் தான் வீடு தன் வீட்டிற்கே செல்வான்.

பிரசவ நாள் நெருங்க நெருங்க நித்ய யுவனியை விட அதிகம் பதட்டமாக இருந்தான் சஜீவ்.

வேலையில் விடுப்பு எடுத்து விட்டு பிரசவத்துக்கு ஒரு வாரம் முன்னரே வந்து நித்ய யுவனியுடன் தங்கிக் கொண்டான்.

அன்றும் அவ்வாறே நித்ய யுவனி கட்டிலில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்திருக்க சஜீவ் மெதுவாக அவள் விரல்களை பிடித்து விட்டான்.

நித்ய யுவனி புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க சஜீவ், "என்னாச்சு யுவி... ஏன் அப்படி பார்க்குற..." எனப் புன்னகையுடன் கேட்க,

"இன்னெக்கி நீ ரொம்ப கியுட்டா தெரியுறாய் சஜு..." என்றாள் நித்ய யுவனி.

அதற்கு வெட்கப்பட்டவன் உடனே ஒற்றைப் புருவம் உயர்த்தி, "ஹேய்... உண்மைய சொல்லு யுவி... எதுக்காக இப்போ எனக்கு ஐஸ் வைக்கிறாய்... என்ன வேணும்.." என சஜீவ் சந்தேகமாகக் கேட்கவும் கீழே குனிந்து கொண்ட நித்ய யுவனி,

"ஐயோ கண்டு பிடிச்சிட்டானே... இப்போ என்ன சொல்லலாம்..." என யோசித்தவள் சஜீவ்வைப் பார்த்து இளித்து வைத்தாள்.

சஜீவ் இன்னும் அதே போல் நித்ய யுவனியை சந்தேகமாகப் பார்த்து, "என்ன.." என்க,

"அது... சஜு... எனக்கு.... லாங் ட்ரைவ் போகணும்... இப்போவே..." என்றாள் நித்ய யுவனி.

சஜீவ்வின் பதிலை எதிர்ப்பார்த்து முகத்தை பதட்டமாக வைத்துக் கொண்டிருந்த நித்ய யுவனியை ஆழப் பார்த்த சஜீவ் புன்னகைத்தவன், "சரி வா போலாம் யுவி..." என்கவும் நித்ய யுவனியால் நம்பவே முடியவில்லை.

பிரசவ நாள் நெருங்கியிருப்பதால் சஜீவ் நித்ய யுவனிக்கு பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தான்.

ஏதாவது என்றால் நித்ய யுவனி கெஞ்சினால் மட்டும் தான் பாவம் பார்த்து செய்வான்.

தன்னவளுக்கும் குழந்தைக்கும் ஒரு பிரச்சினையும் வரக் கூடாது என்பதில் அவ்வளவு கவனமாக இருந்தான் சஜீவ்.

சஜீவ் டேபிள் மீதிருந்த கார் சாவியைக் கையில் எடுக்கவும் நித்ய யுவனி, "கார்ல இல்ல பைக்ல..." என்றாள் அவசரமாக.

நித்ய யுவனியை முறைத்த சஜீவ், "ரொம்ப ஆசைப்பட்டு கேட்டியேன்னு தான் ஓக்கே சொன்னேன் யுவி... அதுக்காக பைக்ல எல்லாம் இந்த சமயத்துல போக முடியாது... டேன்ஜர்... என்னால அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க முடியாது யுவி..." என்கவும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டாள் நித்ய யுவனி.

நித்ய யுவனியைப் பார்த்து புன்னகைத்த சஜீவ் அவளே எதிர்ப்பார்க்காத நேரம் அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொள்ளவும் அதிர்ந்தாள் நித்ய யுவனி.

நித்ய யுவனி, "சஜு... என்ன பண்ற... கீழே இறக்கி விடு..." எனத் துள்ள அவள் இதழில் லேசாக தன் இதழ் ஒற்றி எடுத்து அவள் பேச்சை நிறுத்திய சஜீவ்,

"என் பொண்டாட்டி ஆசைய நிறைவேத்த போறேன்... ஆனா நானும் பாவம் தானே யுவி... கொஞ்சம் எனக்காகவும் பாரு ப்ளீஸ்... என்னால நீ இருக்குற நிலமைல அவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியாதுடி... ப்ளீஸ்..." எனக் கண்களை சுருக்கிக் கெஞ்சவும் புன்னகைத்த நித்ய யுவனி அவன் கழுத்தை சுற்றி தன் கைகளை மாலையாகப் போட்டுக் கொண்டாள்.

சஜீவ் நித்ய யுவனியை அழைத்துக் கொண்டு காரில் மிதமான வேகத்தில் செல்ல தலையில் கை வைத்த நித்ய யுவனி, "இதுக்கு நாம நடந்தே போயிருக்கலாம் சஜு... இவ்வளவு ஸ்லோவா போற... " என சலித்துக் கொள்ளவும் அவள் நெற்றியில் வலிக்காதவாறு சுண்டி விட்ட சஜீவ்,

"ஏதாவது சொல்லிட்டே இருக்காய் நீ... இந்த ஃபாஸ்ட் நல்லா போதும்... நாம வந்துட்டோம் பாரு பீச்சுக்கு..." எனக் காரை நிறுத்தினான்.

கடலலைகளின் ஓசை கேட்கவும் உற்சாகமடைந்த நித்ய யுவனி தான் இருக்கும் நிலையைக் கூட யோசிக்காது வேகமாக காரை விட்டு இறங்கிச் செல்ல பதறிய சஜீவ், "ஏய் யுவி.. பாத்து..." எனக் கத்திக் கொண்டு சென்று அவளைப் பிடித்துக் கொண்டான்.

நித்ய யுவனியின் கரத்தைப் பற்றிய சஜீவ், "அப்படி என்ன அவசரம் யுவி... நான் வரும் வரை கொஞ்சம் வெய்ட் பண்ணலாம்ல..." எனக் கடிந்து கொள்ளவும் அவனைப் பார்த்து இளித்து வைத்தாள் நித்ய யுவனி.

முதலில் இருவரும் சேர்ந்து கடலில் கால் நனைத்தவர்கள் கடற்கரையில் கை கோர்த்து நடந்தனர்.

சஜீவ்வின் தோளில் சாய்ந்தபடி அவன் கரத்துடன் தன் கரம் கோர்த்து கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகளை பேசிக் கொண்டு வந்தவள் திடீரென தன் நடையை நிறுத்தினாள்.

நித்ய யுவனியின் முகம் சுருங்கி இருப்பதை அவதானித்த சஜீவ் பயந்து, "என்னாச்சு யுவி..." எனப் பதட்டமாகக் கேட்க,

"டென்ஷன் ஆகாதே சஜு... ஜஸ்ட் கால் வலி தான்... நடக்க முடியல..." என நித்ய யுவனி கூறவும் மறு நொடியே அவள் சஜீவ்வின் கரங்களில் இருந்தாள்.

நித்ய யுவனியைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டு சஜீவ் நடக்க சற்று தூரம் வந்ததும் நித்ய யுவனி, "சஜு.... பசிக்கிது...." என்றாள் உதட்டை வளைத்தபடி.

சஜீவ், "சரி யுவி... அப்போ நாம வீட்டுக்கு போலாம்..." என்கவும் மறுப்பாகத் தலையசைத்த நித்ய யுவனி,

"எனக்கு தெரிஞ்ச ஒரு ரோட்டுக் கடை இருக்கு சஜு... அது திறந்து இருக்கும்னு நினைக்கிறேன்... அங்க டிஷஸ் எல்லாம் சூப்பரா இருக்கும்... அதுலயும் அந்த மினி இட்லி இருக்கே சஜு..." எனக் கண்களை மூடி அதனை ரசித்தபடி கூறவும் சிரித்த சஜீவ் காரை நோக்கி சென்றான்.

நித்ய யுவனி காட்டிய வழியில் அந்த ரோட்டுக் கடைக்குச் சென்றான் சஜீவ்.

நித்ய யுவனியைக் காரிலியே இருக்கக் கூறி விட்டு தான் மட்டும் இறங்கிச் சென்று அவளுக்கு விருப்பமான மினி இட்லியை வாங்கி வந்தான்.

நித்ய யுவனி ஆசையுடன் அதனை வாங்கி ஒரு வாய் உண்டவள் தன்னையே ரசித்துக் கொண்டிருக்கும் சஜீவ்வைப் பார்த்து, "நீ சாப்பிடலையா சஜு..." எனக் கேட்டாள்.

"எனக்கு வேணாம் யுவி... நீ சாப்பிடு..." என சஜீவ் கூறவும் ஒரு வாய் அவனுக்கும் ஊட்டி விட்டவள், "ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்..." என்றாள்.

இருவரும் மாற்றி மாற்றி ஊட்டி விட்டுக் கொண்டனர்.

உணவை முடித்ததும் சஜீவ் நித்ய யுவனியின் கைகளைக் கழுவி விட்டு அவள் வாயையும் துடைத்து விட்டான்.

நித்ய யுவனி அவனைப் பார்த்து புன்னகைக்கவும் அவள் நெற்றியில் முத்தமிட்டவன் காரை இயக்கினான்.

இருவரும் பேசிக் கொண்டே வீட்டை நோக்கி செல்ல திடீரென நித்ய யுவனி சஜீவ்வின் கையை இறுக்கமாக அழுத்தவும் அவசரமாக காரை நிறுத்தினான் சஜீவ்.

சஜீவ் பதறி, "என்னாச்சு யுவி... வலிக்கிதா..." என்க,

"வலி வந்திடுச்சுன்னு நினைக்கிறேன் சஜு..." என்றாள் வலியில் முகத்தை சுருக்கியபடி.

"எ...என்ன யுவி சொல்ற... சரி... சரி... நாம சீக்கிரம் ஹாஸ்பிடல் போயிடலாம்..." என்ற சஜீவ் காரை வேகமாக இயக்கினான்.

நித்ய யுவனி சஜீவ்வின் கரத்தை அழுத்தியபடி, "அம்மா...." என அலற சஜீவ், "கொஞ்சம் பொறுத்துக்கோடா... சீக்கிரம் போயிடலாம்..." என்றான் தவிப்பாக.

"முடியல சஜு... ஆஹ்..." என நித்ய யுவனி வலியில் அழ சஜீவ்விற்கு தான் பயத்தில் உயிர் போனது.

சஜீவ் காரின் வேகத்தை அதிகப்படுத்தியவன் ஒரு கையால் நித்ய யுவனியை ஆறுதலாகப் பிடித்து தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

நித்ய யுவனியின் பிடி இறுகிக் கொண்டே போக அதில் அவள் வலியை உணர்ந்த அவளவனின் கண்கள் கலங்கின.

சஜீவ் நித்ய யுவனியின் மடியில் கை வைத்து அவளைப் பிடித்துக் கொள்ள திடீரென அவன் கரம் ஈரமானது.

சஜீவ் அதிர்ந்து நித்ய யுவனியின் முகத்தை நோக்க நித்ய யுவனியும் வெளிறிய முகத்துடன் சஜீவ்வைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சஜீவ் அதிர்ச்சியில், "யுவி..." என்க, "பனிக்குடம் உடைஞ்சிடுச்சின்னு நினைக்கின்றேன் சஜு... எனக்கு பயமா இருக்கு..." என பயத்திலும் வலியிலும் அழ,

சஜீவ், "ஹாஸ்பிடல் நெருங்கிடுச்சு யுவி... கொஞ்சம் பொறுத்துக்கோ..." என்றவன் வேகத்தை அதிகப்படுத்தினான்.

ஹாஸ்பிடல் வந்ததும் காரை நிறுத்தி விட்டு இறங்கியவன் மறுபக்கம் வந்து கதவைத் திறந்து நித்ய யுவனியைக் கரங்களில் ஏந்தியவாறு உள்ளே ஓடினான்.

சஜீவ், "டாக்டர்... டாக்டர்..." எனக் கத்தவும் அங்கு வந்த மருத்துவர், "சிஸ்டர்... சீக்கிரம் ஸ்ட்ரெச்சர கொண்டு வாங்க... அவங்கள உடனே உள்ள கொண்டு போங்க.." என அவசரமாகக் கட்டளை இட்டார்.

நித்ய யுவனியை ஸ்ட்ரெச்சரில் வைத்ததும் அவள் சஜீவ்வின் கரத்தை விடாதிருக்க, மனமேயின்றி தன் கரத்தைப் பிரித்து அவளை லேபர் ரூமிற்கு அனுப்பி வைத்தான் சஜீவ்.

சஜீவ் உடனே ராஜாராமிற்கு அழைக்க வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் மொபைல் சத்தத்தில் அதனை எடுத்துப் பார்க்க இந் நேரத்தில் எதற்கு வீட்டிலிருந்து கொண்டே தனக்கு அழைக்கிறான் என்ற யோசனையோடே அழைப்பை ஏற்றார் ராஜாராம்.

அழைப்பு ஏற்கப்பட்டதும் சஜீவ், "மா... மாமா..." என திக்கித் திணறிப் பேசவும் பதட்டமான ராஜாராம், "என்னாச்சு மாப்பிள்ளை... எங்க இருக்கீங்க நீங்க... ஏன் இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கீங்க..." எனக் கேட்டார்.

கணவரின் பேச்சுச் சத்தத்தில் வசந்தியும் விழித்துக் கொள்ள மொபைலில் பதட்டமாக பேசிக் கொண்டிருந்தவரிடம் கண்களாலே என்னவெனக் கேட்க அவருக்கு அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார் ராஜாராம்.

சஜீவ், "மாமா... யுவிக்கு வலி வந்திடுச்சி மாமா... அவள ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன்... நீங்க அத்தைய கூட்டிட்டு உடனே வாங்க மாமா... எனக்கு என்ன செய்யுறதுன்னே புரியல..." என்கவும் அதிர்ந்த ராஜாராம்,

"என்ன மாப்பிள்ளை சொல்றீங்க... சரி நீங்க பதட்டப்படாதீங்க... நாங்க உடனே வரோம்... எந்த ஹாஸ்பிடல்ல இருக்கீங்க..." எனக் கேட்கவும் சஜீவ் ஹாஸ்பிடல் பெயரைக் கூறினான்.

அழைப்பு துண்டிக்கப்பட்டதும் மனைவியிடம் விஷயத்தை கூறியவர் நித்ய யுவனிக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு இருவரும் ஹாஸ்பிடல் புறப்பட்டனர்.

தன் வீட்டிற்கும் அழைத்து தகவல் கூறிய சஜீவ் சித்தார்த்திற்கும் அழைத்து தெரிவித்தான்.

உள்ளே நித்ய யுவனி வலியில் அலறிக் கொண்டிருக்க சஜீவ்வின் மனம் வேதனையில் துடித்தது.

ராஜாராம், வசந்தி, பிரபு, ஈஷ்வரி அனைவரும் ஹாஸ்பிடல் வந்தனர்.

லேபர் ரூமிற்கு வெளியே சஜீவ் தவிப்பாய் அமர்ந்திருக்க, "சர்வா.." என அழைத்தவாறு ஈஷ்வரி அவனிடம் செல்லவும், "அம்மா..." என அவரை அணைத்துக் கொண்டான் சஜீவ்.

பல நாட்கள் கழித்து தன் மகனின் பாசமான அழைப்பு ஒரு பக்கம் ஈஷ்வரிக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவனின் வேதனை அவருக்கு வலியைத் தந்தது.

"எனக்கு பயமா இருக்குமா... யுவி.. யுவிக்கு எதுவும் ஆகாதில்லமா... அவ இப்படி துடிச்சி நான் பார்த்ததே இல்லமா.." என சஜீவ் அழ,

ஈஷ்வரி, "நித்யாவுக்கு எதுவும் ஆகாதுப்பா... நீ தைரியமா இரு... பொண்ணுங்களா பொறந்தா இந்த கட்டத்த கண்டிப்பா தாண்டி தான் ஆகணும்... நீ அழாதப்பா.." என அவனை சமாதானம் செய்தார்.

சற்று நேரத்திலே நண்பர்களும் வந்து விட்டனர்.

உள்ளே நித்ய யுவனியின் அலறலைக் கேட்டு வசந்தியினதும் ராஜாராமினதும் கண்கள் கலங்கின.

பெற்ற மனம் அல்லவா....

சில மணி நேரத்திலே நித்ய யுவனியின், "அம்மா..." என்ற அலறலுடன் உள்ளிருந்து ஒரு குழந்தை வீரிட்டு அழும் சத்தம் கேட்கவும் சஜீவ்வின் முகத்தில் சந்தோஷப் புன்னகை.

அனைவரும் நர்ஸ் குழந்தையுடன் வெளி வரக் காத்திருக்க மீண்டும் நித்ய யுவனி வலியில் அலற அதனைத் தொடர்ந்து ஒரு குழந்தையின் அழு குரல் கேட்கவும் சஜீவ் அதிர்ச்சியில் உறைந்து விட்டான்.

அனைவருக்கும் அதே நிலை தான்.

சற்று நேரத்திலேயே நர்ஸ் கையில் இரண்டு குழந்தைகளுடன் வெளியே வந்தவர் சஜீவ்விடம், "கங்கிராட்ஸ் சார்... உங்களுக்கு ட்வின்ஸ் பொறந்திருக்கு... இரண்டுமே ஆண் குழந்தைங்க..." என்கவும் கைகள் நடுங்க தன் உதிரத்தில் உதித்த புதல்வர்களை வாங்கி அவர்களின் பிஞ்சுக் கைகளில் முத்தமிட்டான் சஜீவ்.

நர்ஸ் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு செல்லப் பார்க்க அவரை நிறுத்திய சஜீவ், "என் வைஃப் எப்படி இருக்கா சிஸ்டர்... அவ நல்லா இருக்கால்ல... நான் போய் பார்க்க முடியுமா..." எனத் தவிப்பாகக் கேட்கவும்,

நர்ஸ், "இன்னும் கொஞ்சம் நேரத்துல வார்ட்டுக்கு மாத்திடுவாங்க... அதுக்கப்புறம் நீங்க போய் பார்க்கலாம் சார்.." என்று விட்டு சென்றார்.

அனைவரும் குழந்தைகளை மாற்றி மாற்றி வாங்கி கொஞ்சிக் கொள்ள சஜீவ்விற்கோ எப்போது தன்னவளைப் பார்ப்போம் என்றிருந்தது.

நித்ய யுவனியை வார்ட்டுக்கு மாற்றியதும் குழந்தைகளைப் பெரியவர்களிடம் வழங்கி விட்டு சஜீவ் மட்டும் உள்ளே சென்றான்.

நித்ய யுவனி இன்னும் மயக்கத்திலேயே இருக்க அவள் அருகில் கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்த சஜீவ் நித்ய யுவனியின் ஒரு கரத்தை எடுத்து தன் கரத்துக்குள் வைத்து பிடித்துக் கொண்டான்.

நித்ய யுவனி சில நிமிடங்களில் கண் விழித்தவள் தன்னையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

நித்ய யுவனியின் முகத்தில் இன்னுமே வலியின் சாயல் அப்பட்டமாய்த் தெரிய எழுந்து அவள் நெற்றியில் முத்தமிட்ட சஜீவ், "தேங்க்ஸ்..." என்றான் கண் கலங்க.

அவன் கண்களைத் துடைத்து விட்ட நித்ய யுவனி, "எப்படி இருக்கு என் சர்ப்ரைஸ்..." என்றாள் புன்னகையுடன்.

சஜீவ், "அப்போ உனக்கு முன்னாடியே தெரியுமா யுவி.." என்க,

சிரித்த நித்ய யுவனி, "என்ன சஜு நீ... நான் கைனகாலஜிஸ்ட்... ஞாபகம் இருக்கா அது.." எனக் கேட்டாள் கேலியாக.

பதிலுக்கு சஜீவ்வும் சிரிக்க நித்ய யுவனி எழுந்து அமர முயற்சிக்கவும் அவளை கட்டிலில் சாய்த்து அமர வைத்தான்.

நித்ய யுவனி, "குழந்தைங்க..." என்கவும் வெளியே சென்று தன் குழந்தைகளை வாங்கிக் கொண்டு வந்தான் சஜீவ்.

சஜீவ் குழந்தைகளைக் கொண்டு வந்து நித்ய யுவனியிடம் காட்ட அவர்களைப் புன்னகையுடன் தன் கரங்களில் வாங்கி முத்தமிட்டாள் நித்ய யுவனி.

நித்ய யுவனி, "சஜு... ரொம்ப கியுட்டா இருக்காங்கல்ல... அப்படியே என் சஜு போல..." என்கவும், "ஆமா... என் யுவி போல அழகா இருக்காங்க..." என்றவன் தன் குழந்தைகளுடன் சேர்த்து நித்ய யுவனியை அணைத்துக் கொண்டான் சஜீவ்..

"ம்ஹ்ம்... உன்ன போல தான் இருக்காங்க சஜு.." என நித்ய யுவனி கூறவும் புன்னகைத்த சஜீவ், "சரி.. நம்ம ரெண்டு பேர் போலவும் இருக்காங்க.. ஓக்கேயா.." என்கவும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள் நித்ய யுவனி.

சற்று நேரத்தில் அனைவரும் அவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தனர்.

வசந்தி வந்து நித்ய யுவனியை அணைத்துக் கொள்ள அவள் தலையை வருடி விட்டார் ராஜாராம்.

நண்பர்கள் மாறி மாறி நலம் விசாரித்து முடித்ததும் ஈஷ்வரியைத் தன் அருகில் அழைத்தாள் நித்ய யுவனி.

அனைவரும் நித்ய யுவனியைப் பார்த்துக் கொண்டிருக்க ஈஷ்வரி தன் அருகில் வந்ததும், "மாமியாரே... நீங்க பண்ணின தப்புக்கு நான் இன்னும் உங்களுக்கு தண்டனையே தரலயே.. அதனால இப்போ உங்களுக்கு தண்டனை தரலாம்னு இருக்கேன்..." என்கவும் சஜீவ்வைத் தவிர அனைவரும் அதிர்ந்தனர்.

வசந்தி கோவமாக, "என்ன யுவனி நீ... அவங்க உன் அத்த... அவங்க கிட்ட போய் தண்டனை அது இதுன்னு பேசிட்டு இருக்க.." எனத் திட்ட அவரைத் தன் பார்வையால் அடக்கினார் ராஜாராம்.

பிரபுவோ என்ன செய்வது எனப் புரியாமல் நிற்க நண்பர்கள் அனைவரும் நித்ய யுவனியைக் கேள்வியாக நோக்கினர்.

ஈஷ்வரி, "நீ என்ன தண்டனை தந்தாலும் அதை ஏத்துக்க நான் தயாரா இருக்கேன் நித்யாம்மா... ஏன்னா நான் பண்ணின தப்பு அப்படி.." என அமைதியாகக் கூறவும் தன் கரங்களில் இருந்த குழந்தைகளை அவர்களை நோக்கி நீட்டினாள் நித்ய யுவனி.

நித்ய யுவனியைப் பார்த்து புரியாது முழித்த ஈஷ்வரி அவள் கைகளில் இருந்த தன் பேரக் குழந்தைகளை வாங்கிக் கொள்ள தன் அருகில் நின்ற சஜீவ்வின் தோளில் சாய்ந்த நித்ய யுவனி, "உங்களால நானும் சஜுவும் அஞ்சி வருஷத்துக்கு மேல பிரிஞ்சி இருந்துட்டோம் அத்த... எங்க வாழ்க்கையோட அழகான நேரங்கள கூட நாங்க ரெண்டு பேரும் இழந்துட்டோம்... அதனால இனிமே எங்க ரெண்டு குழந்தைங்களையும் பார்த்துக்குறது உங்க பொறுப்பு அத்த... நானும் சஜுவும் நாங்க தொலெச்ச நாட்களை மீட்க போறோம்... பார்த்துப்பீங்களா..." எனப் புன்னகையுடன் கேட்க அனைவரது முகத்திலும் புன்னகை.

சந்தோஷத்தில் கண்கள் கலங்க தலையை மேலும் கீழும் சம்மதமாக ஆட்டிய ஈஷ்வரி நித்ய யுவனியின் நெற்றியில் பாசமாக முத்தமிட்டு விட்டு தன் பேரக் குழந்தைகளையும் முத்தமிட்டவர், "மருமகளே... இந்த தண்டனைய நான் சந்தோஷமா ஏத்துக்குறேன்... என் பேரக் குழந்தைகளை பார்த்துக்குறத விட எனக்கு வேற என்ன வேலை இருக்கப் போகுது..." என்றார் புன்னகையுடன்.

அனைவரும் இனிய மன நிலையில் இருக்க சித்தார்த் அடிக்கடி மொபைலைப் பார்ப்பதைக் கண்ட நித்ய யுவனி புருவ முடிச்சுடன் சித்தார்த்தைப் பார்த்தாள்.

நித்ய யுவனி, "சித்..." என அழைக்கவும் பதட்டமானவன், "எ.. என்ன நிது.." என்றான் அவசரமாக.

நித்ய யுவனி, "சும்மா தான் என்னை உன் க்ளோஸ் ஃப்ரெண்ட்னு சொல்லிருக்க நீ... ஆனா இவ்வளவு பெரிய விஷயத்த என் கிட்ட இருந்து மறச்சிட்டேல்ல..." என்கவும் அனைவரும் சித்தார்த்தைக் குழப்பமாகப் பார்க்க,

அவனோ அவசரமாக, "ஐயோ நான் சொல்லலாம்னு தான் சொன்னேன் நிது... ஆனா இவ தான் இப்பவே வேணான்னு சொல்லிட்டா..." எனக் கை காட்டினான்.

சித்தார்த் கை காட்டிய திசையைப் பார்த்த அனைவரும் அதிர்ந்தனர்.

❤️❤️❤️❤️❤️

- Nuha Maryam -
 
Top