வாசகர்களுக்கு,
வணக்கம்! நின்றன் காதலை எண்ணி என்ற என்னுடைய இந்த நாவல் சங்கமம் நாவல் இணையதளத்தில் நடத்தப்பட்ட காதல் சங்கமம் 2021 போட்டிக்காக எழுதப்பட்ட கதை. குறிப்பிட்ட காலத்திற்குள் தனித்தனி அத்தியாயங்களாகப் பதிவேற்ற வேண்டும், எழுதிய எழுத்தாளர் பெயரை ரகசியமாக வைக்க வேண்டும் என்ற விதிமுறைகளுடன் ஆரவாரமாகத் துவங்கியது போட்டி.
ரசிக்கும் படியான மீம்ஸ், விமர்சனங்கள், விவாதப் போட்டிகள் என்று பதிப்பாளர்களும் வாசகர்களும் போட்டியை ஒரு திருவிழாவாகவே நடத்தினார்கள். அந்தத் திருவிழாவில் 'நின்றன் காதலை எண்ணி' பரிசுபெற்றதில் பெருமகிழ்ச்சி.
கொரோனா பெருந்தொற்று காலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் இதில் நிறைவேறியது. இந்தக் கதை வாசகர்களைக் கவர்ந்தது போலவே நடுவர்களுக்கும் பிடித்ததில் பெருமகிழ்ச்சி. நாவலைப் புத்தகமாகக் கொண்டு வந்த பதிப்பகத்தினருக்கும், வாசகர்களுக்கும், சக எழுத்தாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். புதிய வாசகர்களுக்காக இதோ மீண்டும்...
அன்புடன்,
Dr. S. அகிலாண்ட பாரதி
---------------------------------------------------------
நின்றன் காதலை எண்ணி
வாவ்... ரொம்ப நாள் கழித்து நான் படிக்கும் இயல்பான காதல் கதை

தமிழ்- கதையின் நாயகன். யாரையும் திட்ட மாட்டாரு, அடிக்க மாட்டாரு, முடிந்த அளவு மற்றவருக்கு ஹெல்ப் பண்ணுவாரு.. the boy next door என்று சொல்வாங்களே.. அப்படியே இருக்காரு.
நம்ம தமிழ் பார்க்கும் இடமெல்லாம் இருக்கும் பார்கவி தான் நம் நாயகி- தெளிவான பொண்ணு. தனக்கு என்ன வேணும், எது வேண்டாம் என்று அழகாக முடிவெடுப்பாங்க; அதை அழகா சொல்லவும் செய்வாங்க..
மற்ற எல்லா கதாபாத்திரங்களுமே ரொம்பவும் இயல்பா இருந்தது. சுமித்ராவையும் அஜயையும் தனியா குறிப்பிடலைன்னா கோச்சிப்பாங்க.. தன்னைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்வையும் நம் கதையையும் கலகலப்பா ஆக்குற வேலையை அழகா செய்யுறாங்க.. தமிழ் அம்மா, அண்ணன், பார்கவி அப்பா, அம்மா, ரேணுகா, அவங்க அப்பா , அம்மா, விஸ்வநாதன், சுமித்ரா அப்பா, அம்மா என்று சில பாத்திரங்கள்தான். ஆனால் எல்லோருமே ஏதோ ஒரு வார்த்தை, ஒரு வாக்கியத்தின் மூலமாக நம் மனதில் நிற்கிறாங்க.. அப்புறம் மக்களின் அன்றாட வாழ்வில் கொரோனா காலத்தின் பாதிப்பு எந்த மேல்பூச்சும், மிகைப்படுத்தலும் இன்றி கதையெங்கும் விரவியிருப்பது இந்த கதையை இன்னும் மனதிற்கு நெருக்கமாக்குகிறது.
ஆசிரியர் பல இடத்துல இது பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைன்னு சொல்லியிருக்காங்க.. அப்படி சொல்லத் தேவை இல்லாமல், எங்கும் இது ஒரு கற்பனைக்கதை போலவே தோன்றவில்லை. படிச்சி முடிச்சதும், லாக்டவுன் முடிஞ்சதும், அன்புக்கு கல்யாணம் பண்ணிட்டு, தமிழும் பார்கவியும் கல்யாணம் பண்ணி அவங்க ஊர்ல சந்தோசமா இருப்பாங்க.. ஊர்ப்பக்கம் போனா, மகாதேவபுரத்திற்கும் போய் எல்லோரையும் பார்த்து அவங்க ஹோட்டல்ல சாப்பிடனும்னு தோன்றும் அளவுக்கு உயிர்ப்பான எழுத்துநடை..
கதை: இவ்வளவு அழகான பாத்திரப்படைப்புகளோடு என்ன கதை வேணும்னாலும் படிக்கலாம்.. படிச்சித் தெரிஞ்சிக்கோங்க..
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்..

இந்த கதையைப் பரிந்துரைத்த தோழிகளுக்கு நன்றிகள்

தமிழ் ஸ்டைல்ல கவிதைலயே முடிக்கலாமா..
இது ஒரு காதலன் காதலியின் காதல் கதையல்ல..
ஒரு நல்ல மனிதன் மனிதியின் தேடல் கதை..
- அனிதா செல்வம்.
நின்றன் காதலை எண்ணி
அத்தியாயம் 1
"தம்பி எங்க போறீங்க? லாக் டவுன் இருக்கு. தெரியும்ல?" செக் போஸ்டில் வந்து நின்ற ஆட்டோவை நிறுத்திக் கேட்டார் செக்போஸ்ட் டூட்டியில் இருந்த கான்ஸ்டபிள்.
"உங்களப் பாக்க தான் சார் வரேன்" என்றான் வண்டியை நிறுத்தி இறங்கிய இளைஞன். பின்புறம் அமர்ந்திருந்த சிறுவனும் இறங்கி வண்டியில் இருந்த பாத்திரங்களை இறக்கினான்.
"எந்த ஊருப்பா நீங்க? இங்க வந்து வியாபாரம் பண்ணிட்டு இருக்கீங்க?"
"வியாபாரம் இல்ல சார். எங்களுக்கு மஹாதேவபுரம்.. ஹோட்டல் வச்சிருக்கோம். ஒரு மாசமா கடை அடைச்சுக் கிடக்குது. தினமும் இருபது கிலோ அரிசி இட்லிக்கு போடுற கடை.. ஒரு மாசமா அடுப்பே பத்து வைக்கலயா.. மனசுக்கு வருத்தமா இருந்துச்சு. தொழில் சீதேவில்ல சார். அதான் ஒரு பத்து கிலோ ரவையைக் கிண்டி நாலஞ்சு ஊர்கள்ல செக்போஸ்ட், டிராபிக் டியூட்டில இருக்கிறவங்க, கவர்மென்ட் ஆஸ்பத்திரியில ட்யூட்டில இருக்குறவங்களுக்கு குடுத்துக்கிட்டே வர்ரோம் சார். பெர்மிஷன் வாங்கிருக்கேன். இந்த செக்போஸ்ட் தான் கடைசி. எங்கேயும் கடை இல்லைல்ல சார். எல்லாருக்கும் கஷ்டம் தானே?"
"நல்ல விஷயம் தான்பா.. உண்மையிலயே ஒரு மாசமா நாய் படாத பாடு தான் பட்டுக்கிட்டு இருக்கோம். ஆமா, மஹாதேவபுரம்னா எந்தக் கடை?" உங்க ஹோட்டல் பேர் என்ன?" செக்போஸ்ட் அருகில் சில நாற்காலிகள் போட்டிருக்க அவற்றில் ஒன்றில் அமர்ந்திருந்த சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.
"மங்கையர்க்கரசி மெஸ் சார்!"
"தெரியும், தெரியும். நான் அங்க ஒரு மூணு வருஷம் வேலை பார்த்தேன்.. அங்க தான் சாப்பிடுவேன். வாய்க்கு ருசியா இருக்கும், வயித்துக்கும் ஒண்ணும் பண்ணாது. அங்க கல்லாவுல இருப்பாரே ஒரு பெரியவர், நெத்தியில பெரிய பட்டை போட்டுக்கிட்டு..?"
"எங்க அப்பா தான் சார்.. இப்ப அவர் இல்ல"
"அப்படியா... நீ செய்றது நல்ல விஷயம்தான். குடுப்பா சாப்பிடுவோம். ஆனா காசு வாங்கிக்கிடணும் என்ன?" அந்தக் குழுவில் தாலுகா அலுவலகத்தின் சார்பாக பணியமர்த்தப் பட்டிருந்தனர் ரெவன்யு இன்ஸ்பெக்டர் கூறினார்.
"என்ன சார்! காசு வாங்கினாத் தான் செய்யறதுக்கு அர்த்தமே இல்லாமப் போயிடுமே.. வாங்கிக்கோங்க சார். ஒரு இருநூறு இட்லியும் போட்டுக் கொண்டு வந்தோம். அது காலியாயிடுச்சு.. ரவா கிச்சடி இருக்கு சார்" சிறிய ஃபாயில் டப்பாக்களில் போட்டு அழகாக பேக் பண்ணி வைத்திருந்தவற்றை ஆளுக்கொன்றாகக் கொடுத்தார்கள் இளைஞனும் சிறுவனும். முதலில் தயங்கிய கான்ஸ்டபிள் கூட இப்போது வாங்கிக்கொண்டார்.
"காலேஜுக்கு ஏழு மணிக்கே பார்சல் வந்துடுச்சு. இன்னக்கி புளிசாதம். அதுலதான் ஆளுக்கு ஒன்னா சாப்பிட்டோம். அது போன இடம் தெரியல. வயிறு கொஞ்சம் பசியாத் தான் இருக்கு. சாப்பிடுவோம்" என்றபடி பொட்டலத்தைப் பிரித்தனர்.
"இந்த காலேஜ்ல தான் இப்போ வெளியூர்க்காரங்களைத் தனிமைப்படுத்தி வச்சிருக்காங்களா சார்? எல்லாம் மெட்ராஸ்காரங்க தானா?"
"நம்ம திருநெல்வேலி பக்கத்துக்காரங்க தானே மெட்ராஸ்ல நிறைய பேரு வேலை பார்க்காங்க.. எல்லாரும் ஊரைப் பார்த்து கிளம்பி வந்துகிட்டு இருக்காங்க. முன்னாடி மெட்ராஸ் ஆளுங்க தான் முழுசா இருந்தாங்க. இப்ப கோயம்புத்தூர், திருப்பூர், பெங்களூர், மதுரைன்னு எல்லா ஊர்ல இருந்தும் வர ஆரம்பிச்சுட்டாங்க. தினமும் இங்கே வந்த எல்லாருக்கும் டெஸ்ட் எடுக்காங்க.. மூணு நாள் நாலு நாள் வரை ஆயிருது ரிசல்ட் வர்றதுக்கு..
அதனால கொஞ்சம் கூட்டம் ஜாஸ்தி தான். இந்த சென்டர்லயே எண்பது பேர் வரை இருக்காங்க" கல்லூரி கேட்டுக்கு வெளியில் அந்த செக்போஸ்ட் அமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட மாவட்ட எல்லையின் தொடக்கம் அங்கு தான் இருந்தது. டாக்சிகள், சொந்தக் கார்கள் என்று ரகம்ரகமான வாகனங்கள் நிறைய நின்றிருந்தன.
"நாங்களும் மத்தியானம் சாப்பிட்டது.. வரிசையா ஓடிக்கிட்டே இருக்கோம். திரும்பிப் போக ஒரு மணி நேரம் ஆயிடும் இங்கியே சாப்பிட்டுடுறோம்" என்றபடி இளைஞனும் சிறுவனும் ஆளுக்கு ஒரு பொட்டலத்தை பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.
"உட்காருங்க தம்பி" என்று அவர்களுக்காக வைத்திருந்த சேர்களில் ஒன்றைக் காட்டினார் ஆர்.ஐ.
"நேரம் ஆனாலும் நல்லா இருக்குப்பா.. பசியில இருக்கவனுக்கு சாப்பிட எது கிடைச்சாலும் அமிர்தமாத் தான் இருக்கும். ரவையை உப்புமா மாதிரிக் கிண்டியிருந்தா நேரம் ஆக ஆக விரைச்சுப் போயிருக்கும். காய் எல்லாம் போட்டுக் கொழுகொழுப்பா இருக்கப் போய் தான் நேரமானாலும் சாப்பிட முடியுது. உப்பும் உரப்புமா நல்லா இருக்குப்பா" முதலில் தயக்கத்துடன் வாங்கிய எஸ்.ஐ. கூட இப்போது சப்புக் கொட்டிக் கொண்டே சாப்பிட்டார்.
"இப்படித்தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்குப் போயிருந்தோம். கலவரம் வரும்னெல்லாம் தெரியாது. சும்மா பேரணிக்கு பந்தோபஸ்து ட்யூட்டின்னு முதல் நாளே வரச் சொல்லிட்டாங்க. என் டீம்ல எனக்குக் கீழ மூணு பேர். ரெண்டு ஜென்ட்ஸ், ஒரு உமன் போலீஸ். நாங்க ஜென்ட்ஸ் எல்லாம் ஒரு லாட்ஜுல தங்கியிருந்தோம். அதிகாலையில கிளம்பும்போதே பக்கத்துல இருந்த ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு கிளம்பிட்டோம். உமன் போலீஸை எல்லாம் ஒரு ஹாஸ்டல்ல தங்க வச்சிருந்தாங்க. அங்க காலையில் எதுவும் சாப்பாடு குடுக்கலையாம். எங்களுக்கு இட்லி பார்சல் கொடுத்திருந்தாங்க. அதை ஜீப்ல போட்டு வச்சிருந்தோம். ஒரு பதினோரு மணி போல கலவரம் பெருசாகுது ரொம்ப பிரச்சனை வருதுன்னு நியூஸ் வருது. அந்தப் புள்ள பசியில துடிக்குது 'சார் பீரியட் டைம் வேற சார்.. மயக்கமா வருது சார்' அப்படின்னு அழாத குறையா சொல்லுச்சு. 'எம்மா இதான் இருக்கு. சாப்பிடுறியா?' அப்படின்னு இட்லிப் பொட்டலத்தைக் காட்டிக் கேட்டேன். 'குடுங்க சார்'னு வாங்கிக்கிட்டு அவுக் அவுக்னு சாப்ட்டுச்சு. சட்னி எல்லாம் கூட நேரமாகி ஸ்மல் வர ஆரம்பிச்சிருச்சு. பாவமா இருந்துச்சு. நம்மள மாதிரி அரசு ஊழியருக்குக் கஷ்டம் தானே.. மக்கள் ஆனா என்ன நினைக்குறாங்க, 'இவங்களுக்கு என்ன? சம்பளத்துக்கு சம்பளம்; கிம்பளத்துக்குக் கிம்பளம்'னு பேசுறாங்க"
"அது தானே.. நாமெல்லாம் என்னத்தக் கிம்பளத்த வாங்கி நிரப்பியா வச்சுருக்கோம்.. அவனவன் கஷ்டம் அவனவனுக்கு" ஆர்.ஐ. ஆமோதித்தார்.
"இருந்தாலும் சார், என்ன கஷ்டப்பட்டாலும் நமக்கு முப்பதாம் தேதி அக்கவுண்ட்ல சம்பளம் ஏறிருதே.. இந்தக் கொரோனா காலத்துல மத்தவனெல்லாம் பாருங்க. தினக்கூலிக்காரனும் திணறுதான்.. பிரைவேட்ல வேலை பார்க்கவனும் கையைப் பிசைஞ்சிக்கிட்டு தான் இருக்கான்" அதுவரை பேச்சில் கலந்து கொள்ளாமல் கவனித்துக் கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் கூறினார்.
"அது என்னமோ சரிதான் சார்.."
"கஷ்டம்தான். சென்னை வெள்ளம் சமயத்தில் இதைவிட பெரிய பாடு. பணக்காரனும் வரிசையில நிற்கிறான்; ஏழையும் நிற்கிறான். கடையில விக்காம இருந்த ப்ரெட் பாக்கெட்டுகளை வாங்கிட்டுப் போனோம் சார். அதுக்கு அவ்வளவு அடிபுடி. பாவமா இருந்துச்சு" என்றான் இளைஞன்.
"தம்பி வெள்ளம் வந்து அஞ்சு வருஷம் இருக்குமேப்பா.. இப்பவே சின்ன வயசா இருக்கீங்க.. அப்பவும் அங்க போய் ஒர்க் பண்ணுனீங்களா"
"அப்ப அங்க தான் காலேஜ்ல படிச்சிட்டு இருந்தேன் சார்"
"என்ன படிச்சிருக்கீங்க?"
"எம்.ஈ. சார்!
"எம்.ஈ. படிச்சுட்டு ஹோட்டல் வச்சிருக்கீங்க?"
"அப்பாவும் அண்ணனும் தான் ஹோட்டலைப் பார்த்துக்கிட்டாங்க. ஒரு ஆக்ஸிடெண்ட்ல அப்பா திடீர்னு தவறிட்டாரு. அதிலேயே அண்ணனுக்கும் கால் ஃபிராக்சர். அதான் வேலையை விட்டுட்டு வந்துட்டேன் சார். அண்ணனுக்கு சரியாகிற வரை கடையை நான் தான் பார்த்துக்கனும்"
"சென்னைலயா வேலை பாத்தீங்க?"
"இல்ல சார்! படிச்சது தான் சென்னை. அப்புறம் வேலை கோயம்புத்தூர்ல.." சொல்லும் போதே அவனது அலைபேசி கூப்பிட்டது.
"நூறு ஆயுசு சார்! கோவையிலிருந்து என் ஃப்ரெண்டு தான் கூப்பிடறான். சொல்லு அசோக்! அப்படியா? பிரியங்காவுக்கா.. அச்சச்சோ இப்ப எப்படிப்பா வர்றது? கெடுபிடி அதிகமா இருக்கே? அங்க வந்தாலும் கொரோனாவுக்கு டெஸ்ட் எடுக்கச் சொல்லுவாங்களே.. லேட்டாயிடும். தங்குறதும் திரும்புறதும் கூட கஷ்டம். ம்... ஆமா.. ஹோட்டல் கிடையாதுதான். ஃப்ரீதான். இருந்தாலும்... இந்த நிலைமையில… சரி, பார்க்கிறேன். முடிஞ்ச அளவு ட்ரை பண்றேன்!" அலைபேசியை அணைத்தவன் சிந்தனையில் அமர்ந்து விட்டான்.
"என்ன தம்பி? என்ன சொன்னாங்க? எதுவும் பிரச்சனையா?" சாப்பிட்ட நேரத்துக்குள் உருவாகியிருந்த நெருக்கத்தில் ஆர்.ஐ. கேட்டார்.
"அங்க ஒரு குழந்தைக்கு ஒரு வித்தியாசமான நோய் சார்! ரத்தப் புற்றுநோய் மாதிரி. மூணு வாரத்துக்கு ஒரு தடவை இரத்தம் ஏத்தணும். நான் ரெகுலரா மூணு மாசத்துக்கு ஒரு தடவை குடுப்பேன். இப்ப ப்ளட் கிடைக்காம குழந்தை ஸிக்கா இருக்குதாம் சார். பிளட் ஏத்த வேண்டிய டேட் தாண்டி ஒரு வாரம் ஆச்சு"
"அச்சச்சோ பாவம். அப்படி ஒரு வியாதியா?" எஸ்.ஐ. வருத்தப்பட்டார்.
"ஆமா சார்! சர்ஜரிக்குப் பிளான் பண்ணிருந்தாங்க. அது பண்ணினா வியாதி முழுசா குணமாக வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க. கொரோனாவால அதுவும் தள்ளிப் போச்சு சார்"
"இந்த கொரோனா வந்து உலகத்தையே ஒரு ஆட்டு ஆட்டி வைக்குதுப்பா.. தம்பி, நிறைய நல்ல காரியம் பண்றீங்கப்பா.. அங்க யாரும் ரத்தம் குடுக்க ஏற்பாடு பண்ண முடியாதா.. இவ்வளவு தூரம் இங்கே இருந்து நீங்க தான் போகணுமா"
"இது அபூர்வமான பிளட் குரூப் சார். பாம்பே ஓ குரூப்ன்னு பேரு. தமிழ்நாட்டிலேயே டோனர் லிஸ்ட்ல 200 பேர் தான் இருக்கோம். எங்க அப்பாவும் இதே குரூப் தான். ஆக்சிடென்ட் அப்போ அவருக்கு ரத்தம் நிறையப் போயிடுச்சு. இங்கே டோனர் கிடைக்கல.. நான் கிளம்பி வர்றதுக்குள்ள உயிர் போயிடுச்சு" லேசாகக் கண் கலங்கினான்.
"நல்லவங்களுக்குத் தாம்பா இப்படி கஷ்டம் எல்லாம் வருது. ஒருவேளை இப்படி எல்லாம் நடக்குறதுனால தான் நாம நல்லவங்களாவே இருக்கோமோ என்னமோ" ஆர்.ஐ. வருத்தத்துடன் கூறினார்
"இருக்கலாம் சார். மனுஷ வாழ்க்கையில பல கஷ்டங்கள் வந்து வந்து சில மனுஷங்கள தங்கமாக்கிடுது போல.." என்று ஆமோதித்த எஸ்.ஐ., இளைஞனிடம், "தம்பி! உங்க பேர் என்னப்பா.. ஃபோன் நம்பரும்

[SIZE=6]சொல்லுங்க" என்றார்.
"என் பேர் தமிழ்ச்செல்வன் சார்" என்று கூறி தன் அலைபேசி எண்ணையும் கொடுத்தான். "சரிப்பா" என்றபடி அவனது எண்ணை சேமித்துக் கொண்டார் எஸ்.ஐ..
"தம்பிக்கு ஒரு ஐடியா சொல்லுங்க எஸ்.ஐ. சார். நான் எங்க தாசில்தார்கிட்ட பேசி ஏதும் வழி இருக்கான்னு கேட்கவா"
"உங்ககிட்ட கார் இருக்கா தம்பி? செக்போஸ்டுல விஷயத்தை சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருக்கலாம். எஸ்.பி.ட்ட ஒரு லெட்டர் வாங்கிரலாம்"
"கார் இல்லையே சார். இந்த ஆட்டோ ஒண்ணு தான் இருக்கு"
"எஸ். ஐ. சார்! ஒண்ணு செய்வோம். கோயம்புத்தூர்ல இருந்து மூணு பொம்பளப் பிள்ளைக வந்திருக்காங்க. இங்கே தான் தங்கியிருக்காங்க. அந்த டாக்சி டிரைவர் வயிறு சரியில்ல; ரெஸ்ட் எடுத்துட்டுக் காலையில போவோம்னு வண்டியில் தான் படுத்துருக்காரு.. அதுல வேணா ஏத்தி அனுப்பி விடுவோமா? ஏற்கனவே இ-பாஸ் வாங்கிட்டு வந்த வண்டி தான். அதோ அந்தா ஃபோன் பேசுதே அந்தப் பொண்ணு தான்" போலீஸ் கான்ஸ்டபிள் நல்லதாக ஒரு யோசனையைக் கூறினார்.
"நல்ல ஐடியா.. தம்பி, போய் ஒரு வார்த்தை அந்தப் பொண்ணு கிட்டயே கேளுங்க.."
"சரிங்க சார். தேங்க்ஸ்!"
சற்றுத் தள்ளி கட்டிடத்தின் முகப்பில் இரவு விளக்கின் அடியில் அங்குமிங்கும் நடந்தவாறே பச்சை சுடிதார் அணிந்த ஒரு பெண் ஃபோனில் பேசிக் கொண்டிருக்க, அவளை நோக்கி நடந்தான் தமிழ்ச்செல்வன்.
-தொடரும்[/SIZE]
Last edited: