அத்தியாயம் 13
தமிழ்ச்செல்வனுக்கு அந்தத் தனிமையும் தேவையாகத்தான் இருந்தது. தன்னைக் குறித்துத் தானே ஒரு சுய அலசல் செய்துகொண்டான். அலுவலகம் சென்று பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு பெண்ணின் மீது வந்த ஈர்ப்பும் இதுவும் ஒன்றா என்று அவனே கேட்டுக்கொண்டான்.
கல்லூரிக் காலத்தை அவன் வளர்ச்சி அடைந்த பருவமாக என்றுமே கருதியதில்லை. அப்போது அழகான பெண்கள் யாரையாவது பார்த்தால், கூட ஒரு தடவை திரும்பிப் பார்ப்பான், அவ்வளவுதான். 'நானே ஒரு சின்னப் பையன். எனக்கு இதெல்லாம் தேவையில்லை' என்று ஒதுங்கி விடுவான். சமூக சேவைகளுக்காக சில அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும்போது ஒரு பெண் ஆர்வமாக அடிக்கடி வந்து பேசுவாள். அப்போது கூட இவன் நாசூக்காக விலகி விட்டிருந்தான். இப்போது அப்படி விலகிவிட மனம் இருக்கிறதா? பார்கவி அவளே நெருங்கி வருவாளா? அவளிடம் தனக்குப் பிடித்தது என்ன? தன்னிடம் அவளை ஈர்ப்பதற்கு ஏதாவது நல்ல விஷயம் இருக்கிறதா? இப்படி எல்லா விதங்களிலும் கேள்வி கேட்டுக் கொண்டான்.
"டேய்! பெரிய தத்துவ ஞானி மாதிரி யோசிக்கிறடா!" என்றது அவனது மனசாட்சி. சும்மாக் கிடப்பதால் தான் இப்படி எல்லாம் கேள்விகள் தோன்றுகின்றன என்ற முடிவுக்கு வந்தவன் தன் பழைய அலுவலக நண்பர்களுக்கு ஃபோனில் அழைத்தான். 'யாருக்காவது ஏதும் ஹெல்ப் தேவைன்னா பண்ணிக் குடுக்கலாமே' என்று தோன்றியது. சமீபத்தில் குழந்தை பெற்று விடுப்புக்குப் பின் வேலைக்கு வந்திருந்தாள் அவனது அலுவலகத் தோழி ஒருத்தி.
"குழந்தையோட பிஸியா இருப்பீங்க. எதுவும் ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க. ஃப்ரீயாத் தான் இருக்கேன். செஞ்சு தரேன்" என்று அவளிடம் கூற,
"தமிழ்! நீங்க கிரேட். வேலைய விட்டுட்டுப் போன பிறகு யாராவது அந்தக் கம்பெனிக்கு உதவி பண்ணனும்னு நினைப்பாங்களா? திரும்பிக்கூட பார்க்கமாட்டாங்க.. கிரேட் தமிழ்! ரியலி கிரேட்!" என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினாள். அவள் தமிழ்ச்செல்வனின் அணியில் அவனுக்குக் கீழ் பணி புரிந்தவள். நல்ல திறமையானவள், உழைப்பாளி.
"ஆஹா! உங்களுக்குத் தானே ஹெல்ப் பண்றேன். கம்பெனிக்குப் பண்ணலையே... சும்மா இருந்தா போர் அடிக்குது. டிவி, மொபைல் எதைப் பாத்தாலும் கொரோனா பத்தி நெகட்டிவ் நியூஸாப் போட்டு கன்ஃப்யூஸ் பண்றாங்க. அதான் பழகின வேலைன்னா ஈசியா செஞ்சுடலாம்னு ஒரு ஐடியா. இன்ஃபேக்ட் நீங்கதான் எனக்கு ஒர்க் குடுத்து என் ஸ்ட்ரெஸ்ஸை ரிலீவ் பண்றீங்க"
"தமிழ்! நீங்க மாறவே இல்ல. அநியாயத்துக்கு நல்லவரா இருக்காதீங்க"
"ரொம்ப ஐஸ் வைக்காதீங்க மேடம்! கொஞ்சம் தான் உதவப் போறேன். ரெண்டு மூணு நாள்ல ஊருக்குப் போனாலும் போயிடுவேன். அதுக்கப்புறம் முடியாது" என்று சொல்லி அவளது வேலையை ஏற்றுக் கொண்டான். ஆனால், 'என்ன ஊருக்குப் போகிறாயா? நீங்கள் போடும் எந்தத் திட்டத்திற்கும் நான் அப்ரூவல் தர மாட்டேன்' என்றது கொரோனா.
தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த வீட்டின் அருகில் ஒருவருக்குத் தொற்று இருப்பதாக உறுதி ஆகி விட, அந்தத் தெரு இரண்டு புறமும் தட்டி வைத்து அடைக்கப்பட்டது. அந்த நபர் குணமாகி வீட்டுக்கு வந்து, அதன்பின் தெருவில் வேறு யாருக்கும் தொற்று இல்லை என்றால் தான் திறப்பார்களாம். வீடு வீடாகப் பரிசோதனை செய்ய ஆரம்பித்திருந்தார்கள். 'இன்னும் மூணு வாரத்துக்குக் கொறஞ்சு கிளம்ப முடியாது போலவே' என்று வருந்திய தமிழ்ச்செல்வன் விஸ்வநாதனிடம் விஷயத்தைக் கூறி, "பாஸ்! நீங்க வேணா கிளம்பி எங்க ஊருக்கு போயிடுங்க.. நான் அப்புறமா வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்" என்றான்.
"நீங்க வராம நான் எப்படி.. வெயிட் பண்றேன், சேர்ந்தே போயிடலாமே" என்றான் விஸ்வநாதன். "சொன்னாக் கேளுங்க விஸ்வா! அப்புறம் உங்க பக்கத்துல யாருக்காவது கோவிட் பாசிட்டிவ்னு வந்தால் திரும்பி இதே நிலைதான். அதுக்குள்ள பெரிய பிரச்சனை ஏதாவது வந்துடப் போகுது. எனக்கு மேட்டர் ஆஃப் ஃப்யூ வீக்ஸ், உங்களுக்கு மேட்டர் ஆஃப் லைஃப்.. கிளம்புங்க" என்று அவனை வற்புறுத்தி அனுப்பி வைத்தான். மீண்டும் போலீஸ் விசாரணை, ஏதோ தெரியாத எண்ணிலிருந்து மிரட்டல் என்று அங்கும் ஏதோ நடந்திருந்தது போல.. விஸ்வநாதனும் சற்று பயந்துதான் போயிருந்தான்.
"எங்க ஊர்ல தங்குறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். நல்லாப் பாத்துப்பாங்க. சும்மா தங்குறதுக்கு உங்களுக்கு கில்டியா இருந்தா ஹோட்டல் வேலையில ஹெல்ப் பண்ணுங்க. நான் செய்ய வேண்டிய வேலையைச் செய்ங்க! பிராப்ளம் சால்வ்ட்!" என்று தமிழ்ச்செல்வன் கூறவும் தனக்கு மட்டும் இ பாஸ் விண்ணப்பித்து மகாதேவபுரத்துக்குக் கிளம்பிவிட்டான் விஸ்வநாதன்.
அலுவலக வேலைகள் தமிழ்ச்செல்வனைச் சற்றே உள்ளிழுத்துக் கொண்டன. குழப்பமாக இருக்கும் போது அஷோக் கூறியதைப் போல அவனுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் போட்டு வைத்தான். மெசேஜைப் பார்த்த நேரம் என்ன மனநிலையில் இருந்தானோ அஷோக், "பேசாம நீயும் எங்க வீட்டுக்கு வந்துருக்கலாம். லூசு மாதிரி தனியா புலம்பிகிட்டு இருக்க.. சோறு தண்ணியில்லாம கிடக்கறதால பசியில் எதுவும் பினாத்திக்கிட்டு இருக்கியா?" என்று பதில் அனுப்ப, 'சே! இவங்கிட்ட இனிமே கருத்தே கேக்கக் கூடாதுப்பா.. நேரத்துக்கு ஒன்னு பேசுறான்' என்று நினைத்துக் கொண்டான் தமி்ழ்ச்செல்வன்.
இடையில் ஒரு முறை பார்கவிக்கு ஒரு கடிதம் எழுதி மெயில் அனுப்பினால் என்ன என்று சட்டென்று தோன்ற, அன்புள்ள பார்கவி என்று ஆரம்பித்து தெருவை அடைத்த கதை, விஸ்வநாதன் மட்டும் கிளம்புவது, அங்கு சுமித்ராவால் வீட்டில் அம்மாவுக்கும் அண்ணனுக்கும் பிரமாதமாக நேரம் போவது, தான் அலுவலக வேலை பார்த்துக் கொண்டிருப்பது எல்லாவற்றையும் எழுதி முடித்தான். முடித்தபின் தான் தோன்றியது 'ஐயோ பார்கவியோட மெயில் ஐடி இல்லையே' என்று. அவளிடமே கேட்கலாம் என்று தோன்ற மெயில் ஐடி என்ன என்று கேட்டு மெசேஜ் அடிக்கப் போனான். எதற்கும் ஒரு தடவை எழுதிய கடிதத்தைப் படித்துப் பார்க்கலாம் என்று தோன்ற, முதலில் இருந்து தான் எழுதியதை மீண்டும் வாசித்துப் பார்த்தான்.
அவனது மனசாட்சி, "டேய்! நீ கடைசியா எப்ப லெட்டர் எழுதின?" என்று கேட்டது. "அது... பத்தோ பதினொன்னோ படிக்கையில சுற்றுலா சென்று வந்ததைப் பற்றி நண்பனுக்குக் கடிதம்னு பரிட்சையில எழுதச் சொன்னாங்க. அப்ப ஊட்டி போயிட்டு வந்தது பத்தி எழுதினேன்"
"இதுவும் அதே மாதிரி தான் டா இருக்கு, விளக்கெண்ணை!" என்று மனசாட்சி பதில் கூற, மெயிலை அனுப்பாமல் ட்ராஃப்டில் சேமித்து வைத்தான்.
வாட்ஸ் அப்பில் "மை ஸ்ட்ரீட் லாக்ட். விஸ்வநாதன் அலோன் ஸ்டார்டிங்" என்று பார்கவிக்கு ஒரு மெசேஜ் போட்டான். 'இது தந்தி மாதிரி இருக்கு' என்று மனசாட்சி குத்திக் காட்ட, 'தெரியாதவங்களுக்குத் தந்தி மாதிரி தான் அனுப்ப முடியும். உனக்கென்ன?' என்று மனசாட்சியிடம் பதிலுக்குச் சண்டையிட்டான்.
'தெரியாதவங்களா? நெஞ்சத் தொட்டுச் சொல்லு' என்று மனசாட்சி பாவமாகக் கேட்டது தமிழ்ச்செல்வனிடம்.
'நீ வர வர அஷோக் மாதிரியே பேசுற. நீ என்னோட மனசாட்சியா, இல்ல அஷோக்கோட மௌத்பீஸா?' என்று அதனிடம் சண்டையிட்டவன், 'பேசாமல் பார்கவிக்கு நிறைய மெயிலா எழுதி இப்படி ட்ராஃப்டா சேத்து வச்சா என்ன?' என்று யோசித்தான்.
பார்கவி அங்கு, 'கடவுளே! அம்மா அப்பா மனசுக்குள்ள இருந்து கல்யாண ஐடியாவை தூக்கிருப்பா' என்று இஷ்டதெய்வத்தை வேண்டிக்கொண்டே வேலையைத் தொடர, இங்கு தமிழ்ச்செல்வன் காலையில் என்ன சாப்பிட்டேன் என்பதிலிருந்து மாலையில் என்ன பாட்டு கேட்டேன் என்பதுவரை பார்கவிக்குக் கடிதங்களாக எழுதித் தள்ளிக்கொண்டிருந்தான். 'டெய்லி ரிப்போர்ட் மாதிரி இருக்கு' என்று வாய் பொத்தி சிரித்த மனசாட்சியைப் 'போ அந்தண்டை!' என்று தள்ளி விட்டான். ஆனாலும் அவனது மனசாட்சி கேட்டதெல்லாம் சரி தானோ என்றும் தோன்றியது.
'சாவித்திரி சிஸ்டர் லவ் மேரேஜ் தானே? அவங்க கிட்ட நாம சொல்றது, நினைக்கிறது எல்லாம் கரெக்டா? கேட்போம்' என்று நினைத்து அவருக்கு ஃபோன் அடித்தான்.
"சொல்லுங்க பாம்பே! எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் சிஸ்டர். நீங்க?"
"நாங்க நல்லாத் தான் இருக்கோம். வழக்கமா நான்தானே உங்களுக்கு ஃபோன் அடிப்பேன், இந்த க்ரூப்புக்கு டோனர் இருக்காங்களா, அந்த பிளட் க்ரூப் டோனர் இருக்காங்களான்னு கேப்பேன், என்ன விஷயம், இப்ப நீங்க கூப்பிட்ருக்கீங்க, அதுவும் ரொம்ப பிஸியா இருக்குற டைம்ல போய்?" 'பிஸியா' என்பதை அழுத்திச் சொன்னார் சாவித்திரி.
"என்ன சிஸ்டர்! கலாய்க்கிறீங்க? அஷோக் கிட்ட பேசினீங்களா?"
"ஹா ஹா! ஆமா! இருந்தாலும் ரொம்ப ஆழம் தான் உங்க நட்பு. கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே! அவர் சொல்லித்தான் நான் கலாய்க்கிறேன்னு. அப்புறம் குழப்பத்துல இருக்கீங்களாமே.. உங்க ஃப்ரெண்ட் சொன்னாப்ல"
"அதான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன் சிஸ்டர். இப்ப எனக்கு என்ன பிரச்சனைன்னா, இந்த உலகம் என்னை ஒரு சின்சியர் சிகாமணியாப் பாக்குது. தமிழ்ச்செல்வன்னா பொறுப்பானவன், நல்லவன், வல்லவன்னு பேசுது"
"சரி சரி! செல்ஃப் டப்பா போதும். அப்புறம்?"
"இப்ப நான் லவ் பண்றேன்னு என் அம்மாகிட்ட சொன்னாலோ, இல்ல ஒரு பொண்ணுகிட்ட சொன்னாலோ அதனால யாருக்காவது வருத்தமா ஆயிடுச்சின்னா?"
"ஓஹோ! உங்க இமேஜ் ஸ்பாயில் ஆயிடும்னு கவலையா?"
"அப்படியும் வச்சுக்கலாம். எப்பவுமே மத்தவங்க வருத்தத்துக்கு நான் காரணமாயிட்டா ரொம்ப கில்ட்டியா பீல் பண்ணுவேன். எங்க அண்ணனுக்கு வேற இன்னும் கல்யாணம் ஆகல. அம்மா இன்னும் அப்பா லாஸ்ல இருந்து மீண்டு வரல" என்று தமிழ்ச்செல்வன் பல காரணங்களை அடுக்கி யோசிக்க,
"ஒன்னு சொல்லட்டுமா பாம்பே? மனுஷ வாழ்க்கையில எப்பவுமே ஏதாவது பிரச்சினைகள் சுத்தி இருந்துக்கிட்டே தான் இருக்கும். அதுவும் உங்களை மாதிரி ஒரு கேரக்டருக்கு எப்பவுமே ரெஸ்பான்சிபிலிட்டிக்குப் பஞ்சமே இருக்காது. ஏதாவது ஒரு கடமை காத்துக்கிட்டே இருக்கும். என் பிளாஷ்பேக்கைக் கொஞ்சம் சொல்லவா? எனக்கு கல்யாணம் ஆகும் போது எனக்கு 35 வயசு, என் ஹஸ்பண்ட்க்கு 39. ரெண்டு பேருமே எங்க தம்பி தங்கச்சிங்களைப் படிக்க வெச்சு, கல்யாணம் பண்ணி செட்டில் பண்ண வேண்டிய பொறுப்பில் இருந்தோம். நான் முதல்ல கல்யாணமே வேண்டாம், எதுக்கு இந்த வயசுக்கு மேலன்னு யோசிச்சு விட்டுட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சுது. இந்த உலகம் ஒரு விதவையை, டைவர்சியை, முதிர்கன்னியை எல்லாரையும் ஒரே மாதிரிதான் பார்க்குது. எந்த தம்பி தங்கைக்காக நான் உழைச்சேனோ அவங்க நான் எங்க போறேன், வரேன், யார் கிட்ட பேசுறேன் எல்லாத்தையும் விமர்சிக்க ஆரம்பிச்சாங்க. சொல்லப் போனா எனக்கு கலாச்சாரக் காவலர்களா ஆக்ட் பண்ணினாங்க. நான் ஒரு நல்ல புடவை வாங்கினாக் கூட அனாவசியம்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்பதான் தோணுச்சு. நமக்குன்னு ஒரு குடும்பம் வேணும். எந்த வயசானா என்ன, யார் என்ன சொன்னா என்னன்னு ஒரு அடக்க முடியாத கோபம். அப்புறம் நானே மேட்ரிமோனி ஆஃபிசுக்குப் போய் பதிஞ்சேன். விசாரிச்சேன். யாருக்கு மாப்ள பாக்கணும்? உங்க பொண்ணுக்கா, உங்க தங்கைக்கான்னு கேட்பாங்க. எனக்குத்தான் அப்படின்னு சொன்னா உடனே அதிர்ச்சி அடைவாங்க. அப்புறம் ஒரு ஃப்ரண்ட் சொல்லித் தெரிஞ்சதுதான் இவரு. ரெண்டு பேரும் பேசிப் பிடிச்சு, அப்புறம் கல்யாணம் பண்ணிகிட்டோம். அந்த முடிவுக்கு நான் என்னைக்குமே வருத்தப்பட்டது இல்ல. அத மாதிரி எப்பவும் நம்ம மனசு, நம்ம லைஃப்னு யோசிங்க போதும். உங்க மனசுக்கு எல்லாமே நல்லவிதமா நடக்கும். எனக்குத் தெரிஞ்சு இவ்வளவு பொறுப்பான பையனோட நியாயமான ஆசையை வேண்டாம்னா சொல்லிடுவாங்க? ஒரே ஒரு விஷயம். பொண்ணுக்குப் பிடிக்கலைன்னா மட்டும் ஃபோர்ஸ் பண்ணாதீங்க"
"கீ சிஸ்டர்! பாவம் நீங்க. எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கீங்க"
"சேச்சே! எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. இப்படி நடக்கலைன்னா எனக்கு இவர் கெடச்சிருக்க மாட்டாரே! என் லைஃப் ஸ்டோரியத் தள்ளி நின்னு வேற யாரோடதோ மாதிரி சொல்ற பக்குவத்துக்கு இப்ப வந்துட்டேன். அப்படி நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க. மனசுல நினைக்கிறத ஒரு லெட்டர் மாதிரி, டைரி மாதிரி எழுதலாமே. ஓல்ட் ஸ்டைல் தான், இருந்தாலும். அதுல நம்ம குழப்பங்களுக்கு ஒரு சொல்யூஷன் கிடைக்கும்"
"எழுதிட்டாப் போச்சு. ஏன் சிஸ்டர்? எழுதப்படுகிற டைரிகள், லெட்டர்ஸ் எல்லாம் ஒரு நாளைக்கு லவ்வர் கைல கிடைக்கும்கிற எதிர்பார்ப்பில எழுதணுமா?" ஜாலியான குரலில் கேட்டான் தமிழ்ச்செல்வன்.
"நல்லாப் பேசுறீங்க.. கவிதை மாதிரி வார்த்தைகள் பேச்சுல வருதே. அப்ப காதலும் வருதுனு அர்த்தம். லெட்டர் லவ்வர் கைல கிடைக்கணும் அப்படின்னு ஆசைப்பட்டீங்கன்னா அப்படிக் கிடைக்க வைக்கிறது உங்க சாமர்த்தியம்" சிஸ்டரும் ஜாலியாகவே பதில் சொன்னார்.
"ஏற்கனவே லெட்டர்ங்கிற பேர்ல ஏதோ எழுத ஆரம்பிச்சிருக்கேன். இப்ப நீங்க என்கரேஜ் பண்ணிட்டீங்களா, எழுதித் தள்றேன் பாருங்க" என்றவன் உடனடியாக லேப்டாப்பை எடுத்து மெயிலில் ட்ராஃப்ட் பகுதியில் அன்பு பார்கவிக்கு என்று துவங்கி, தன் வீட்டு நிலைமை மன நிலைமை என்று தோன்றியதை எல்லாம் எழுதினான்.
இறுதியில் 'எப்போதோ படித்த கவிதை' என்று தலைப்பிட்டு
"ஒவ்வொரு நொடியும்
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று நினை
ப்பதிலேயே
என்
ஒவ்வொரு நொடியும்
செலவாகிறது"
என்று எழுதி முடித்தான்.