அத்தியாயம் 15
பார்கவியிடம் பேசியதற்குப் பிறகு தமிழ்ச்செல்வனின் மனதில் காதல் உணர்வுகள் தண்ணீர் ஊற்றாமல் தாறுமாறாக வளர்ந்தன. உதட்டில் உரைந்த புன்னகையோடு சுற்றிக் கொண்டிருந்தான். கண்ணாடியில் வழக்கத்தை விட அதிகமான நேரம் தன் முகத்தைப் பார்த்தான்.
'நல்லவேளை ஆபிஸ் வேலைய ஒத்துகிட்டேன். சும்மா இருந்தா முழு லூசா ஆயிருப்பேன். லவ் பண்றவங்க மூஞ்சில ஒரு அசட்டுக்களை வருமே, அது எனக்கும் வந்துடுச்சு போல' என்று கூறியபடி தன் தாடையை தடவிக் கொண்டே முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்துப் பேசினான்.
அவனது பழைய அலுவலக நண்பர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் கடந்த ஒரு மாதமாக ஒருவன் தினமும் இந்த சேலஞ்ச், அந்த சேலஞ்ச் என்று போட்டு மற்றவர்களையும் தொடரச் சொல்லி பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தான் 'அன்றைய தினம் எல்லாரும் அவங்கவங்க சாப்பிடப் போற லஞ்ச்சை ஃபோட்டோ எடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப்ல ப்ரொபைலா வைக்கணும்' என்று ஒரு சவாலை ஆரம்பித்து வைத்திருக்க, எல்லாருடைய ப்ரொஃபைல் படமும் கடகடவென உணவுத் தட்டுகளால் நிரம்பின.
தமிழ்ச்செல்வனும் பார்கவி கூறியதற்காகவென்றே கூட ஒரு காய் சமைக்கலாம் என்று நினைத்து வெண்டைக்காய்ப் பொரியல் செய்து வைத்திருந்தான். "ஐ! இன்னைக்கு ரெண்டு காய் இருக்கே!" என்று மகிழ்ந்த தமிழ் ஒரு தட்டில் அழகாக சாதத்தைக் குழம்பு ஊற்றிப் பரிமாறி அதைச் சுற்றிக் காய்கறிகளை அடுக்கிப் புகைப்படம் எடுத்து ப்ரொஃபைலில் வைக்க, பல லைக்குகள் விழுந்தன.
கும்மென்று சாப்பிட்டுவிட்டு உட்காரவும் ஜம்மென்று தூக்கம் வந்தது அவனுக்கு. முந்தைய இரவு நிறைய கனவுகள் வந்து தூக்கத்தைக் கொடுத்ததால் இன்று மதிய உறக்கம் சுகமாக வந்தது. தூங்கி எழுந்தவனுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்ப அதிர்ச்சி. பார்கவியிடமிருந்து 'டிபி சூப்பர்!' என்று ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. வாய் எல்லாம் பல்லாக 'தேங்க்யூ!' என்று தமிழ்ச்செல்வன் டைப் செய்ய, 'வெண்டைக்காய்ல வேற மாதிரி ஒரு பொரியல் செய்யலாம் தெரியுமா?' என்று கேட்டாள் பார்கவி.
'எப்படி?' என்று தமிழ்ச்செல்வன் கேட்க, வெண்டைக்காய் மசாலா செய்முறையைத் தன் குரலில் பதிந்து அதை ஒரு வாய்ஸ் மெசேஜாக அனுப்பி வைத்தாள். செய்முறையைக் கூர்மையாக கேட்டுவந்த தமிழ்ச்செல்வனுக்கு நடுநடுவே பார்கவி போட்ட தும்மல்களைக் கேட்டதும் திக்கென்றது.
'என்னங்க, தும்மல் போடறீங்க?' என்று பல கேள்விக்குறிகளுடன் கேள்வி கேட்க,
'ஒண்ணுமில்ல.. தூசி! வீட்டில மாடி கட்டுறோம். வேலை பாதியில நிக்கிது. மாடில வந்து நின்று பேசுறேன். அந்தத் தூசி தான். என்ன தமிழ் சார்? கொரோனாவோன்னு பயந்துட்டீங்களா?'
ஆமாம் என்று சொன்னால் ஒரு மாதிரி இருக்குமே, அதனால் பேச்சை மாற்றும் விதமாக, 'ஓஹோ! மாடி கட்டுறீங்களா?' என்று கேட்டான்.
'மாடி கட்டின பிறகு தான் கல்யாணம் வைக்கணும்னு அம்மாவும் அப்பாவும் பிடிவாதம் பிடிச்சாங்க. இப்ப வேலை பாதியிலேயே நிக்குது' என்று பதிலனுப்பினாள் பார்கவி.
'கல்யாணமா! யாருக்கு?' என்று தமிழ்ச்செல்வன் கேட்க,
'எனக்குத்தான்' என்று பதில் வந்ததும் அதிர்ந்து போனான். இதயம் ஒருகணம் ஒற்றைப் துடிப்பைத் தவறவிட்டது. சற்றும் யோசிக்காமல் வாட்ஸப்பில் அழைப்புப் பொத்தானை அழுத்தி விட்டான் தமிழ்ச்செல்வன்.
சாதாரண அழைப்பு என்றால், "இந்த முழு நாடும் கொரோனா வைரஸ் அல்லது covid-19டன் போராடுகிறது. ஆனால் நினைவில் கொள்ளுங்கள்… நாம் நோயுடன் போராட வேண்டும் நோயாளியுடன் அல்ல.." என்று ஒரு பாராயணம் பாடி இருக்கும். அதற்குள் சுதாரித்து அழைப்பைக் கட் செய்திருக்கலாம். இது வாட்ஸ் அப் அழைப்பு என்பதால் உடனே தொடர்பு ஏற்படுத்தப்பட்டு பார்கவியும் அழைப்பை ஏற்று விட்டாள்.
'ஐயோ ரொம்ப ஃபாஸ்ட்டா ரியாக்ட் பண்ணிட்டேனே! தப்பா நினைச்சுக்கப் போறா' என்று நினைத்தவன்,
"இல்ல.. தும்மல் போட்டீங்களே... அதான் என்னன்னு கேட்கலாம்னு…" என்றான்.
பார்கவியும் அதை இயல்பாகவே எடுத்துக்கொண்டாள். "நிஜமாவே தூசி தாங்க. குரல் நல்லா தான் இருக்கு.. பாருங்க" என்றாள்.
'ஓகே! வைக்கிறேன்' என்று கூறி அழைப்பைத் துண்டித்திருக்கலாம். ஆனால் உடனே வைத்து விட மனமில்லை தமிழ்ச்செல்வனுக்கு. பேசியதுதான் பேசினோம் அந்தக் கல்யாண மேட்டரைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தவன்,
"மாடில எத்தனை ரூம்ங்க?" என்று கேட்டான் பேச்சை வளர்க்கும் விதமாக. 'பின்றடா நீ!' என்றது அவன் மனசாட்சி.
"மூணு ரூம் தான். எங்க வீடு ரொம்பச் சின்னது. ஒரு சென்ட் தான் இடம். அதே அளவு தான் மாடிலயும்"
"எப்ப வேலை முடியும்?"
"வேலை ஆரம்பிச்சாச்சுன்னா மூணு மாசத்துல முடிஞ்சுடும். அம்மாதான் ஒரே புலம்பல். முடிச்சுட்டு மாப்பிள பாக்கணும்னு நெனச்சேனே, அதுக்குள்ளே பாழாப்போன கொரோனா வந்துருச்சேன்னு... கேட்டுக் கேட்டு காதுல ரத்தமே வருது" எந்த உறுத்தலும் இல்லாமல் அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்க,
"இனிதான் மாப்பிள்ளை பாக்கணுமா! அப்பாடி!" என்று பெருமூச்சு விட்ட தமிழ்ச்செல்வன், 'பேசாம என்ன மாதிரி மாப்பிள்ளை பாக்குறீங்க, எதிர்பார்ப்பு என்னன்னு கேக்கலாமா' என்று நினைத்தான்.
ரொம்ப நேரம் சத்தம் வராமல் போகவும் "ஹலோ!" என்றாள் பார்கவி. "லைன் கட்டாயிடுச்சோன்னு பாத்தேன். என்ன சத்தத்தையே காணும்?"
"இல்ல! அது... வந்து... எங்க அம்மா அண்ணனுக்கும் பொண்ணு பார்க்கணும்னு சொன்னாங்க. அதப் பத்தித் தான் யோசிச்சிட்டு இருந்தேன்" என்று சமாளித்தான்.
"சொந்தத்துல பொண்ணு எதுவும் இல்லையா?" என்று சற்றுக் கிண்டல் கலந்த தொனியில் பார்கவி கேட்க,
"இல்லையே.. ஏன் கேக்குறீங்க?"
"எங்க அம்மா, மாமா பசங்க ரெண்டு பேர்ல ஒருத்தரைக் கல்யாணம் பண்ணனும்ங்கிறாங்க. அப்பா, அத்தை பையனைப் பாக்கணும்னு சொல்றாரு. இந்த மூணு பேரையும் மனசுல வச்சுக்கிட்டு எங்க அம்மாவும் அப்பாவும் ஒருத்தர ஒருத்தர் மொறைச்சுக்கிட்டு இருக்காங்க. அதான் அப்படி எதுவும் இருக்கான்னு கேட்டேன்" கலகலவென்று சிரித்தபடி கூறினாள் பார்கவி.
'டேய் தமிழ்! உனக்கு மூணு வில்லன்களா?' என்று மனசாட்சி வில்லத்தனமான ஒரு சிரிப்பு சிரித்தது. மீண்டும் தமிழ்ச்செல்வனின் முனையிலிருந்து சத்தமே வராமல் இருக்கவும்,
"தமிழ் சார்…!" என்று கூப்பிட்டுப் பார்த்தாள் பார்கவி.
"இல்ல... சொந்தத்துல கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சொல்லுவாங்களே... பிறக்கிற குழந்தைக்கு நிறைய வியாதி வரும். அதுவும் உறவு முறை உள்ள கல்யாணம் பண்ணும் போது வேற ஏதாவது குடும்ப சச்சரவுகள், சண்டைகள் எல்லாம் வந்துருச்சுன்னா கஷ்டம். ஏற்கனவே உங்க அம்மாவுக்கு அப்பா வீட்டுக்காரங்க மேலயும் அப்பாவுக்கு அம்மா வீட்டுக்காரங்க மேலயும் கோபம் இருக்கிற மாதிரித் தெரியுது. தப்பா நினைச்சுக்காதீங்க, எனக்குத் தோணினதை சொல்றேன்" என்றான் தமிழ்ச்செல்வன்.
"இதைச் சொல்ல ஏன் சார் தயங்குறீங்க? நானே வேண்டாம்னு உறுதியா சொல்லிட்டேன். ரெண்டு பேரும் பகல் கனவு கண்டுக்கிட்டு இருக்காங்க. ரெண்டு வருஷத்துக்கு அந்தப் பேச்சே கிடையாதுன்னு சொல்லிட்டேன்"
'அப்பாடி! மனசுல பால வார்த்த என் ராசாத்தி! மலைபோல் வந்த துன்பமும் பனிபோல் விலகி விட்டது' என்று ஒரு மினி குத்தாட்டம் போட்டான் தமிழ்ச்செல்வன்.
அதற்குள், "சரிம்மா.. ஊத்திட்டு வரேன்" என்று சத்தமாக அவளது அம்மாவிடம் ஏதோ பேசினாள் பார்கவி.
பின்பு அலைபேசியில் "ஒன்னும் இல்ல தமிழ் சார்.. கொஞ்சம் செடி வச்சிருக்கோம். அம்மா அதுக்குத் தண்ணி ஊத்திட்டு வர சொல்றாங்க. அதான் சரின்னு சொன்னேன்" என்றாள் தமிழ்ச்செல்வனிடம் விளக்கும் விதமாக.
"ம்.. செம்பருத்திப் பூச் செடி கூட இருக்குல்ல.." என்று தமிழ்ச்செல்வன் கேட்க,
"செம்பருத்திச் செடி இருக்கிறது உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றாள் பார்கவி ஆச்சரியத்துடன்.
'சொதப்பிட்டடா தமிழ்!' என்று மனதினுள் கூறியவாறு ஒரே சமயத்தில் நாக்கையும் கடித்து தலையிலும் தட்டிக்கொண்டான்.. தமிழ்ச்செல்வன்.
இதற்குமேல் சமாளிக்க முடியாது என்று உணர்ந்தவன், "ஒரு நிமிஷம் யாரோ வாசல்ல கூப்பிடுறாங்க... வச்சிடறேன்" என்றவாறு பாய்ந்து அழைப்பைக் கட் செய்தான்.
சமீபத்திய வழக்கமாகி விட்ட பழக்கத்தின்படி அன்றைய கடிதத்தை எழுத உட்கார்ந்து தன் உரையாடல்களையும் தடுமாற்றங்களையும் அதில் வரிசைப்படுத்தினான். சொந்தத்தில் திருமணம் என்று கேட்டவுடன் வந்த அதிர்ச்சி, பின் இல்லை என்ற உடன் வந்த ஆசுவாசம், முறைப்பையன்கள் பற்றிக் கேட்டபோது வந்த எரிச்சல் எல்லாவற்றையும் விரிவாக எழுதினான். அன்று எழுதியது அவனுக்கு மனதிற்கு நெருக்கமாக இருப்பதாகத் தோன்றியது. 'கடைசியாக ஒரு கவிதை எழுதுவது தானே உன் ஸ்டைல்? அதையும் எழுதி முடி' என்று மனசாட்சி நினைவுபடுத்த,
"சந்தர்ப்பம் தெரியாமல்
பேசப்படும் வார்த்தைகளுக்குப் பின்
தட்டித் தட்டியே என்
தலை பள்ளமாகி விடுகிறது
கடித்துக் கடித்தே என் நாக்கு
தடித்து விடுகிறது!" என்று எழுதினான்.
"கவித கவித!" என்றது மனசாட்சி.
அலைபேசி விட்டுக் கீழே இறங்கி வந்த பார்கவியை வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அவளது அம்மா மற்றும் அப்பாவின் குரல்கள் வரவேற்றன.
"உங்க அண்ணனப் பத்தி மட்டும் பேசாத! பிள்ளையை ஏன் படிக்க வைக்கிறான்? விரலுக்குத் தகுந்த வீக்கம் வேணும். அப்புறம் படிப்புக்கேத்த மாப்ள கிடைக்கலைன்னு அலைவான். பொம்பளப் புள்ள நிறைய படிச்சா அதுக்குத் தகுந்த மாதிரி நிறைய நகை போடணும்' அப்படின்னு ஊருக்குள்ள என்னைப் பத்தி கேவலமா பேசி இருக்கான்" என்று அப்பா கோபமாகப் பேச,
"ஊர்ல நடக்கிறதத் தானே அவரு சொல்றாரு? பன்னெண்டு படிச்சா பத்து பவுனு, காலேஜ் படிச்சா இருபது பவுனு இன்ஜினியரிங் படிச்ச பிள்ளையை அம்பது பவுன் போட்டுக் கட்டிக் குடுக்க வேண்டியிருக்கு.. இப்படித்தான் கேக்குறாங்க.. பாத்து சூதானமாச் சேத்து வைங்கன்னு ஒரு பெரிய மனுஷன் சொல்றது தப்பா?" என்றாள் அம்மா சமாளிப்பாக.
"அத நேரடியா வந்து சொல்ற விதத்துல சொல்லனும். என் மகளை நான் படிக்க வைப்பேன். உனக்கு மட்டும் பிள்ளை படிச்சது சந்தோஷம் இல்லையா? அவரை பெரிய மனுஷன்னு மட்டும் சொல்லிராத. பேங்க் வட்டிக்குக் கடன் தரேன்னு சொல்றாரு. சொந்தத் தங்கச்சி கிட்ட வட்டி வாங்கித் தான் சாப்பிடப் போறாராக்கும்"
"அவருக்கும் செலவு இருக்கும்ல? வருமானத்தை எப்படி விடுவாரு? பேங்க்குக்குக் குடுக்குறதை எங்க அண்ணனுக்குக் குடுத்தா என்ன?"
"உனக்கும் சில விஷயம் பிடிக்காம இருந்தாலும் உங்க அண்ணன்களை வெளியே விட்டுக் குடுக்க மாட்டியே? அப்புறம், இது யாரு இப்படி முட்டாள்தனமாக உன்கிட்ட கணக்கு சொன்னது? என் தங்கச்சி மகளுக்கு 50 பவுன் போட்டாங்களே? அவ பத்தாப்பு தானே படிச்சிருக்கா?"
"போடுவா போடுவா.. அவ ஏன் போடமாட்டா? அவ நகை மட்டுமில்லாம உங்க அம்மா நகையையும் ஆட்டையைப் போட்டுப் போனவளாச்சே.. அதுவும் இல்லாம அவ பிள்ளைக்குக் காதுகுத்து, பொறந்தநாளு, சடங்கு, கல்யாணம் எல்லாத்துக்கும் நீங்களும் தான் தங்கமாய் எழச்சீங்கிளே? சம்பாதிக்கிறதுல பாதிய அங்க குடுத்துட்டா நான் பெத்த பிள்ளைக்கு என்னத்தைப் போடறது?"
"அதெல்லாம் தாய்மாமா செய்ய வேண்டிய முறைமை.. செஞ்சு தான் ஆகணும். நம்ம புள்ளைக்குப் போடாம யாருக்குப் போட போறேன்? கடைசியில இப்படிச் சொல்லிட்டேல்ல?"
அம்மா பார்கவிக்கு எதுவும் சேர்த்து வைக்கவில்லை என்பது போலக் கூறியவுடன் அப்பாவுக்கு குரல் உடைந்தது.
"நான் கல்யாணம் கட்டி வந்த புதுசுல என் நகையக் கொண்டு போய் ஆசாரி கிட்ட குடுத்து வெயிட் போட்டுப் பாத்தவளாச்சே உங்க தங்கச்சி? அப்ப நான் வருத்தப்பட்டது எல்லாம் உங்களுக்குத் தெரியல. இப்ப உங்கள ஒரு வார்த்தை சொன்னவுடனே கண்ணு கலங்குது" விடாமல் அம்மாவும் வாக்குவாதம் செய்தாள்.
"நிறுத்துறீங்களா ரெண்டு பேரும்? இப்படி வியாபாரம் மாதிரி பேரம் பேசி என்னை யாருக்கும் தள்ளி விட வேண்டாம். கணக்குப் பார்த்து நகையும் வாங்க வேண்டாம். பாட்டி வீட்டுல இருந்து வேலை பார்த்தப்ப கூட நிம்மதியா இருந்துச்சு. எப்படா நம்ம வீட்டுக்கு வருவேன், ஜாலியா இருக்கலாம்னு நினைச்சேன். தேவையில்லாம கல்யாணப் பேச்சைப் பேசிக்கிட்டு இருக்கீங்க. 22 வயசுதான் ஆச்சு எனக்கு. ஆசைக்கு வேணா நகை வாங்கலாம். இப்படி அளந்து பார்த்து சேர்த்து வைக்ககூடாது. அவசர ஆத்திரத்துக்கு தங்கம் உதவும்னுதான் அந்த காலத்துல தங்க நகையாக சேர்த்தாங்க. ஒழுங்கா தொழில் பண்ணி என்ன மாதிரி மாசச் சம்பளம் வாங்குறவங்களுக்குத் தங்கம் அதிகம் தேவைப்படாது. வேணும்கிறப்ப நானே வாங்கிக்குவேன். பேச்சை விடுங்க. முதல்ல யாரும் இப்ப பொண்ணு கேட்டுட்டு வந்து வரிசையில நிக்கல. உங்களுக்குள்ள சண்டை போடாதீங்க" என்று கூறி இருவரையும் வாயை மூட வைத்தாள்.
கவிதை எழுதி முடித்த கையோடு தமிழ்ச்செல்வன் ரிலாக்ஸ் ஆகி விட, பார்கவிக்குத் தான் மனதில் பல கேள்விகள் முளைத்து சரசரவென வளர்ந்தன. (இதுவும் தண்ணி ஊத்தாமத் தான்)
தமிழ் சார் பேசும் போது ஏன் நடுவுல நிறைய தடவை இடைவெளி விட்டார்? சொந்தத்துல கல்யாணம் பண்றது பத்தி ஏன் இவ்வளவு அட்வைஸ் பண்ணினார்? செம்பருத்திப் பூச் செடி இருக்கிறது எப்படித் தெரியும்?
முதல்ல ஃபோன் அடிச்சது எதுக்கு? நிஜமாகவே தும்மினதால தானா?
('இல்ல! கல்யாணம்னு சொன்னதால தான் போன் அடிச்சார். நீங்க பேசிக்கிட்ட மெசேஜ் எல்லாம் மறுபடியும் எடுத்துப் பார்' என்றது அவளது மனசாட்சி. அவனுக்கு மட்டும்தான் மனசாட்சி இருக்கா? நானும் இருக்கேன்ல, நாங்களும் கருத்து சொல்லுவோம்ல? என்றது பார்கவியின் மனசாட்சி)
அப்புறம் ஏன் அவசரமா போன கட் பண்ணிட்டார்? ரெண்டு பக்கமும் லாக் பண்ணின தெருவுல யார் வந்து கதவைத் தட்டப் போறாங்க? சிஐடி போலீஸ் போல தமிழ்ச்செல்வனின் பேச்சில் பல பொரு
ட் குற்றங்களைக் கண்டு பிடித்த பார்கவி யோசனைக்குள்ளானாள்.