அத்தியாயம் 17
முதியோருக்கு உணவு கொடுக்கும் பணி மகாதேவபுரத்தில் மிகவும் சிறப்பாகத் துவங்கி நடந்தது. ஆரம்பத்தில் வந்த ஒன்றிரண்டு சிறு தடுமாற்றங்கள் தவிர வேறு எதுவும் குறைவில்லை. பணிகள் வேகம் பிடித்து ஒரு ஒழுங்குக்கு வந்து ஒரு வாரம் ஆனபின் தமிழ்ச்செல்வனும் வந்து சேர்ந்து கொண்டான். கோவையில் அவன் இருந்த தெரு திறந்துவிடப்பட்ட, நாகராஜனே தன் டாக்ஸியில் கொண்டு வந்து மகாதேவபுரத்தில் விட்டுவிட்டுச் சென்றார். எல்லாருமாகச் சேர்ந்து சமைப்பது, பாத்திரங்களில் எடுத்து வைப்பது, பின் ஆட்டோவில் கொண்டு சென்று வீடு வீடாகக் கொடுப்பதுமாக மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
வழக்கமாக அஜய்யும் விஸ்வநாதனும் ஆட்டோவில் சென்று உணவு கொண்டு போய்க் கொடுக்கும் வேலைகளைச் செய்தார்கள். சுமித்ராவும் சில சமயம் 'நானும் வரேன், நானும் வரேன்' என்று அவர்களுடன் சேர்ந்து கொள்வாள். போகும் இடங்களில் உள்ள பெரியவர்களிடம் கலகலப்பாகப் பேசி அவர்களையும் சிரிக்க வைத்துவிடுவாள். ஒருமுறை மதிய உணவு கொடுக்க போகும் போது சாமுவேல் என்ற தாத்தா காலை கொடுத்த உணவில் பாதியை மீதம் வைத்திருந்தார். மதிய சாப்பாடு கொடுக்கும் போது காலையில் உள்ள கேரியரை திருப்பி எடுப்பது வழக்கம்.
"தாத்தா இந்தாங்க லன்ச். இன்னைக்கு உளுந்தஞ்சோறு, எள்ளுத் துவையல், தக்காளி பச்சடி. காலையில உள்ள கேரியரை எங்க?" என்று சுமித்ரா கேட்க,
"இரும்மா மிச்சம் இருக்கு.. கொட்டிட்டுத் தரேன்" என்றபடி தாத்தா எழுந்திருக்க,
"அச்சோ தாத்தா கொட்டாதீங்க. ரோட்டில் எத்தனை நாய், எத்தனை பன்னி சாப்பாடு இல்லாமக் கிடக்குது? அதுகள்ள ஒன்னுக்குப் போடலாம். இனி மிச்சம் இருந்தா அப்படியே டிபன் பாக்ஸ்லயே வச்சு அனுப்பிருங்க. நான் பார்த்துக்கிறேன்" என்றாள்.
"நான் கொஞ்சம் தான்மா சாப்பிடறேன். தினமும் இவ்வளவு மிச்சமாகுது" என்று தாத்தா சொல்ல,
"அப்ப நீங்களே ஒரு நாய் வளர்க்கலாமே தாத்தா. உங்களுக்குத் துணைக்குத் துணையும் ஆச்சு. பாதுகாப்புக்கு பாதுகாப்பும் ஆச்சு. இனிமே இப்படி சாப்பாடை வேஸ்ட் பண்ணாதீங்க. நான்ல்லாம் சின்ன வயசுல இருந்து சாப்பாடு கிடைக்காம அவ்வளவு கஷ்டப்பட்டுருக்கேன்.. எங்க அம்மா வீட்டுவேலை செய்ற வீடுகள்ல இருந்து இதே மாதிரி விழுற மிச்ச மீதியைத் தான் நாங்க சாப்பிட்டு வளந்தோம்" என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றாள்.
"எவ்வளவு கேஷுவலா சொல்லிடுச்சு இந்தப் பாப்பா? நானும் சின்ன வயசுல சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டவன் தான். வயசாகி, வசதியும் வந்தவுடனே அதை மறந்துட்டேனே" என்று வருத்தப்பட்டுக் கொண்டார் தாத்தா.
சுமித்ராவுக்கு வாழ்வில் இனிமேல் கஷ்டம் கிடையாது, இனி நன்றாகத் தான் இருப்பாள் என்பது போல மறுநாள் சில சம்பவங்கள் நடந்தன. மதிய உணவு கட்டிக் கொண்டிருக்கும்போது சுமித்ரா தன் ஊரில் வைத்திருக்கும் ஸ்லீப்பர் செல்லான சின்னமலையிடம் இருந்து சுமித்ராவுக்கு போன் வந்தது.
'அம்மாடியோ! கிட்டத்தட்ட ஒரு மாசம் கழிச்சு அடிக்கிறான்' என்று மகிழ்ச்சியாக இருந்தாலும் 'ஒருவேளை இது எதுவும் சதி வேலையா இருக்குமோ?' என்றும் ஒரு யோசனை ஓட, ஒரு விதமான மனநிலையுடன் ஃபோனை எடுத்தாள்.
"சொல்லு டா ஸ்மால் மௌன்ட்டைன்! என்னடா இவ்வளவு நாள் பேசவே இல்லை?" என்று சுமித்ரா கேட்கவும்,
"சுமி அக்கா! உங்க அம்மா பேசுறாங்க. ஃபோனைக் குடுக்குறேன்.." என்றபடி அவளது அம்மாவிடம் ஃபோனைக் கொடுத்தான் சின்னமலை.
அம்மாவா! அம்மாவிடம் பேசியே மாதக்கணக்காயிற்று. தன் காதல் விவகாரம் தெரிந்து கண்டிக்கத் தான் ஒரு முறை பேசினாள் அம்மா. அதன்பின் அவர்கள் நம்பரை சுமித்ரா ப்ளாக் செய்து விட்டாள். கொஞ்ச நாளில் இவள் நம்பரை மாற்றி, அடுத்த முறை ஊரையே மாற்றி, கிட்டத்தட்ட தொடர்பே இல்லாமல் இருந்தாள். 'அம்மா இப்போது என்ன பேசுவாள்? ஊருக்கு வா என்று கெஞ்சுவாளா? மிரட்டுவாளா?' பலவித யோசனைகளுடன் "ஹலோ!" என்றவளுக்கு அம்மாவின் அழுகுரல் தான் கேட்டது.
சுமித்ரா பதறினாள். "அம்மா! ஏம்மா அழுவுற?"
"ஒன்னுமில்ல சுமி! நீ பயப்படுற மாதிரி எதுவும் அம்மா சொல்ல மாட்டேன். நீ அந்தப் பையனையே கட்டிக்கோ. நம்ம ஊரு ரொம்ப கஷ்டப்பட்டுருச்சு. அதை விட முக்கியமாக நம்ம குடும்பம் ரொம்ப சங்கடப் பட்டுச்சு. செத்துப் பொழச்சோம்மா எல்லாரும்"
"என்னம்மா சொல்ற?"
"தம்பிக்குக் காதுகுத்து வச்சோம்ல?"
"ஆமா… சின்னமலை சொன்னான்"
"உள்ளடங்கின ஊர்ங்கிறதால போலீஸ் கீலிஸ் யாருக்கும் தெரியாம வச்சுட்டோம். ஊரடங்கு போட்டதுனால விசேஷம் வைக்கக்கூடாதுன்னு ரூல்ஸ் போட்டிருந்தாங்கள்ல? ஆனாலும் ஊரு முழுசும் வந்துருச்சு. அதுல யாரோ வெளியூர் போயிட்டு வந்த ஆளு இருந்திருக்கும் போல. காதுகுத்துக்கு வந்த ஜனங்கள் நிறைய பேருக்குக் கொரோனா வந்துருச்சு. வயசாளிக ரெண்டு மூணு பேரு திடீர் திடீர்னு மூச்சுமுட்டி செத்துட்டாங்க. அதுக்கு அப்புறம் நிறைய டாக்டரு, நர்ஸு எல்லாரும் வந்து ஊருக்கே டெஸ்ட் பண்ணி, 100, 150 பேருக்குக் கொரோனான்னு கண்டுபிடிச்சுட்டாங்க"
"அய்யய்யோ! அப்புறம்?"
"நம்ம வீட்ல எனக்கும் அப்பாவுக்கும் கூட வந்திருச்சு. சின்னமலைக்கும் இருக்குன்னாங்க.. எனக்கு லேசாத் தான். அப்பாவுக்கு நுரையீரல்ல பாதி பாதிச்சிருச்சாம். நேத்துதான் ஆஸ்பத்திரியில இருந்து அப்பா வந்தாங்க"
"என்னவெல்லாமோ சொல்றீங்களேம்மா? ஐயோ, என்னால பக்கத்துல இருக்க முடியாமப் போச்சே.. இப்ப பார்த்து நான் வேற ஓடி ஒளிஞ்சிகிட்டேனே?" என அழ ஆரம்பித்தாள் சுமித்ரா. இவ்வளவு நேரம் சிரிப்பும் விளையாட்டுமாக வேலை செய்து கொண்டிருந்த பெண் இப்போது ஏன் அழுகிறாள் என்று சுற்றியிருந்த தமிழ், அன்பு, கற்பகம், அஜய் எல்லாரும் பார்த்தனர்.
"நீ என்னம்மா செய்வ? எல்லாம் எங்க தப்புதான். கவர்மெண்ட்டு அவ்வளவு சொல்லியும் கேக்காம காதுகுத்து வச்சோம். இப்போ ஊரே சேர்ந்து எங்களை ஒதுக்குது. எங்களால தான் ஊரே கஷ்டப்பட்டுச்சாம். கொலைகாரக் குடும்பமாம். என்னென்னமோ பேசுறாங்க" அம்மா வருத்தப்பட்டுக் கண்ணீர் சிந்தினாள்.
"பேசுறத விடும்மா.. அதான் வருஷம் முழுசும் பேசுறாங்களே.. பேசிட்டுப் போறாங்க. அப்பாக்கு இப்ப எப்படி இருக்கு? தம்பி என்ன பண்றான்?"
"நான் ஒரு ஆஸ்பத்திரியிலயும் அப்பா இன்னொரு ஆஸ்பத்திரிலயுமா இருந்தோம். அவரை ஐசி வார்டுல (ஐசியூ) வச்சிருந்தாங்க. அங்க இருந்த பத்து நாளும் மூஞ்சில காத்து (ஆக்ஸிஜன்) வச்சுருந்தாங்க. ஒன்னுக்குப் போகக் கூட எந்திரிக்க முடியாது. கப்பு வச்சு பிடிச்சுத் தான் ஊத்தனும். இப்ப பரவால்ல, நடந்தா மட்டும் லேசா மூச்சு வாங்குது. இன்னும் ரெண்டு மாசத்துக்கு வேலைக்குப் போக முடியாதாம். என்னையும் வேலை செய்ற வீடுகள்ல வேலைக்கு வரவேண்டாம்னுட்டாங்க"
"நான் வேணா மணி ஆர்டர்ல பணம் அனுப்பட்டுமா? என்கிட்ட இருக்கு" இன்னும் அந்த ஊரில் மணி ஆர்டரில் பணம் அனுப்பும் பழக்கம் தான் இருந்தது.
"வேண்டாம் ராசாத்தி! காதுகுத்துல வந்த மொய்ப் பணம் இருக்கு. அத வச்சு சமாளிக்கிறேன். அப்புறம் அப்பா அன்னைக்கு உன்னை அடிச்சுட்டாங்களேன்னு கோவிச்சுக்காத சுமி. இந்தா அப்பா கிட்ட ரெண்டு வார்த்தை பேசு" என்றவாறு அப்பாவிடமும் ஃபோனைக் கொடுத்தாள்.
"சுமி! எப்படி இருக்கம்மா?" என்று அப்பா கேட்கும் போதே அவருக்கு லேசாக மூச்சு வாங்கியது. "சுமி, மனுஷங்க வேஷம் எல்லாம் இப்ப தான் எனக்கு நல்லாப் புரியுதுடா. யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்கன்னு பாத்துக்கிட்டேன். ஜாதி ஜாதின்னு பைத்தியம் புடிச்சு அலஞ்சேன். கீழ்சாதிக் காரனப் பாத்தா அவ்வளவு கேவலமா நடத்துனேன். இன்னைக்கி கொரோனான்னு நம்ம ஆளுக எல்லாம் ஒதுக்கி வைக்க, ஆஸ்பத்திரியில் என்னை பார்த்துக்கிட்டது யாரு தெரியுமா? நம்ம ஊருப் பையன் ஒருத்தன். அவனைக் கூட நான் கேவலமா நடத்திருக்கேன். அவன் அங்க கவர்மென்ட் ஆஸ்பத்திரியில தான் வேலை பாக்கான். அவன் தான் டாக்டர் கிட்ட சொல்லி, 'இவரு எங்க ஊரு தான். நல்லாப் பார்த்துக்கோங்க'ன்னு சொன்னான். மூச்சுத்திணறல் அதிகமாகும்போது ஒன்னுக்குக் கூட பிடிச்சு தூர ஊத்தினான். ஐசியூ ல பெட் காலி இல்ல. அவன் சொல்லித்தான் எக்ஸ்ட்ரா பெட் போட்டு டாக்டர் பார்த்துக்கிட்டாரு. என்னை மட்டும் இல்ல, அங்க இருந்த அவ்வளவு பேரையும் ஆளுக்குத் தகுந்த மாதிரி பேசி நல்லா பாத்துக்கிட்டாங்க. அங்க வச்சே நான் கண்ணீர் விட்டுட்டேன் மா. அதுபோக உன் தம்பி நம்ம வீட்ல தனியா நாய் படாத பாடு பட்டுட்டான்மா"
"என்னப்பா ஆச்சு. அவனுக்கு ஒண்ணுமில்லனு அம்மா சொல்லுச்சே?"
"நம்ம வீட்ல தான் ஆம்பளைகளுக்கு வெந்நீர் வைக்கக் கூட தெரியாதுல்ல. ஒத்தையில அவனை வீட்டுல விட்டுட்டோம். தெருவை ரெண்டு பக்கமும் தட்டி வச்சு அடச்சுட்டாங்க. பக்கத்து வீடுகள்ல பாத்துக்குவாங்கன்னு நினைச்சா ஒரு பய எட்டிப் பார்க்கல. அவனையும் கொரோனா பரப்புனவன்னு கேவலமா பேசிருக்காங்க. இவன் டீ வைக்கிறேன்னு அடுப்புல வெந்நீர் வைக்க, கைதவறி கால்ல போட்டுக்கிட்டான். அதுக்கும் யாரும் வரல. வாசல்ல மருந்து தெளிக்க வந்த அம்மாதான் மருந்து போட்டுவிட்டு சாப்பாடு குடுத்துருக்காங்க. அதுக்கப்புறம் தினமும் அவங்க வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு வந்து குடுத்துருக்காங்க. தனக்குக் கொரோனா வந்தாலும் பரவாயில்லை, பையன் பசியா இருக்கானேன்னு அவங்களுக்குத் தான் தோணி இருக்கு. அவங்களும் சாதியப் பாத்திருந்தா நாங்க எல்லாரும் செத்துப் போயிருப்போம்" நெகிழ்வான குரலில் கூறினார் சுமித்ராவின் அப்பா.
"ஆமாப்பா! இங்க தமிழ் அண்ணன் கூட சொல்றாரு, கொரோனா வந்தா பெத்தவங்க கூட கிட்ட வர பயப்படுறாங்க. நகராட்சி ஆளுங்கள்ல இருந்து, ஆஸ்பத்திரில டாக்டர், ஸ்டாஃப், சுடுகாட்டுல வெட்டியான் வரை தைரியமா பேஷண்ட் பக்கத்துல வந்து வேலை பார்க்குறாங்கன்னு சொன்னாங்கப்பா"
"அங்க யாரு வீட்டில இப்ப இருக்க தாயி. உன் ஃபிரெண்டு ஒரு பொம்பள பிள்ளை இருக்கே, அதைக் கூட நான் ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். நம்ம சொந்தக்காரங்கள விட்டு மிரட்டிருக்கேன்" என்று ரேணுகா வீட்டிற்கு இருவரை அனுப்பி மிரட்டியதைக் குறித்தும் குற்றவுணர்ச்சியுடன் கூறினார்.
"இங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்கப்பா. பாக்கிறீங்களா?" என்றவள் சின்னமலையிடம் வீடியோ கால் போடச்சொல்லி, தமிழ்ச்செல்வன் குடும்பத்தினர் அனைவரிடமும் பேசச் செய்தாள்.
"ரொம்ப நேரம் பேசிட்டீங்கப்பா. ரெஸ்ட் எடுங்க. நாளைக்குப் பேசுறேன்" என்றாள் சுமித்ரா.
"அந்தப் பையனை எங்கம்மா?"
"யாரு?"
"அதான்.. நீ விரும்புறியே, அவரு?"
"அவரு சாமான் வாங்க வெளியே போயிருக்காரு. நாளைக்கு பேசச் சொல்றேன்" என்றாள்.
மறுநாள் விஸ்வநாதன் வந்த நேரம் சின்னமலை வீடியோ கால் போட்டுக் கொடுக்க அவனிடமும் சுமித்ராவின் அம்மாவும் அப்பாவும் பேசி முடித்தனர். இறுதியாகத் தமிழ்ச்செல்வனிடம் போனை கொடுக்கச் சொல்லி, "கல்யாணம் ஆகாத பிள்ளையையும் பையனையும் எத்தனை நாள் வச்சு பராமரிப்பீங்க தம்பி? சீக்கிரம் கல்யாணம் வச்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என்றார் சுமித்ராவின் அப்பா.
"இந்த லாக்டௌன் முடிஞ்ச பிறகு உங்க ஊருக்கு அனுப்பி வைக்கட்டுமா? நீங்கதான் மனசார சம்மதிச்சுட்டீங்களே?" என்று தமிழ்ச்செல்வன் கேட்க,
"வேண்டாம் தம்பி! கொலைகாரப் பய ஊரு இது. நீங்களே பாத்து முடிச்சு வையுங்க. நாங்க அப்புறமா ஒரு நாள் வந்து பார்த்துக்கிறோம். சுத்தி நல்ல மனுஷங்க இருக்கீங்க. என் பிள்ளைக்கு ஒரு குறையும் வராது. சம்பந்தி வீட்டுக்காரங்க வந்து அவங்க ஆசீர்வாதத்தோட கல்யாணம் நடக்கட்டும். ஒரு தனி வீடு மட்டும் பார்த்து குடி வச்சுட்டீங்கன்னா அதுகளே பொழச்சுக்கிடும். பாவம், ரெண்டும் நல்லா உழைக்கிற பிள்ளைகள் தான். நானும் மாப்பிள்ளையப் பத்தி நல்லா விசாரிச்சுட்டேன் தம்பி!" என்றார்.
தமிழ்ச்செல்வன் இதையெல்லாம் சுமித்ராவிடம் கூற அவள், "அடேயப்பா! எங்க அப்பா தான் இப்படியெல்லாம் பேசுறதா? திடீர்னு ஞானம் வந்திருச்சு போல" என்று ஆச்சரியப்பட்டாள்
அஜய், "அக்கா, புத்தருக்கு போதி மரத்தடியில ஞானம் வந்த மாதிரி உங்க டாடிக்கு ஆஸ்பத்திரியில வந்துருக்கு. எப்படியோ உங்க காதல் சக்சஸ் ஆயிடுச்சு. கையக் குடுக்கா. கங்கிராட்ஸ்! லாக்டௌன் முடிஞ்ச உடனே நம்ம ஊர்ல தான் உங்க கல்யாணம். ஜாம் ஜாம்னு நடத்துவோம். யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங்ல உங்க அம்மா அப்பா மட்டுமில்ல, உலகத்தையே பார்க்க வச்சுடலாம்" என்றான்.
"அப்படியாடா? எங்க மில்லுல வேலை செய்றவங்க எல்லாரும் பார்க்கலாமா? எல்லாருக்கும் என் மேல அவ்வளவு பாசம்" என்று சுமித்ரா கேட்க,
"இருக்காதா பின்ன? நீங்க எல்லார்கிட்டயும் எவ்வளவு பிரியமா இருக்கீங்க? அப்ப அவங்களும் உங்க மேல அன்பா தானே இருப்பாங்க? ஸ்மார்ட் ஃபோனும் நெட்டும் இருந்தா எல்லாரும் உங்க கல்யாணத்துல பிரசெண்ட்!" என்று அஜய் உற்சாகமாக கூறினான்.
"அதெல்லாம் மில்லுல எல்லா பய பிள்ளைகளும் ஸ்மார்ட்போன் வச்சிருக்குதுக" என்று சுமித்ரா கூற, "அப்போ சூப்பர்!" என்று கைகுலுக்கினான் அஜய்.
தமிழ்ச்செல்வன், "என்னடா இப்ப நம்ம ஊரோட கொரோனா வர்றதுக்கு பிளான் போடுறீங்களாடா? சுமித்ரா வீட்டில் காதுகுத்து வச்சதால தானே அவ்வளவு பிரச்சனை வந்திருக்கு? இந்த நேரத்துல இன்னொரு ஃபங்ஷனா?" என்று கேட்க,
"லாக்டௌன் முடியட்டும், கேஸ் இல்லாதப்ப தானே கவர்மெண்ட் கல்யாணம் வைக்கிறதுக்கு அனுமதிப்பாங்க. கம்மியான ஆளுங்களத் தான் கூப்பிடனும். நாம இப்ப ஹோட்டல் வேலைக்கே பத்து பேரு சேர்ந்து தானே சுத்துறோம், அதை விட கூட பத்து பேர்.. அவ்வளவுதான். இதே மாதிரி சாப்பாடு பார்சல் பண்ணி மீதம் பேர் வீட்டுக்குக் குடுத்துரலாம். என்ன சொல்றீங்க?" என்று பலமாகத் திட்டமிட்டான் அஜய்.
அன்புச்செல்வன், "டேய்! அடங்குடா! கோடு போடறதுக்கு முன்னாடியே ரோடு போட்டு, அதுல பஸ், லாரி எல்லாம் விட்டுறப் போற. போகுற போக்கப் பாத்தா டோல்கேட் கூட வச்சிருவ போல. விஸ்வநாதனும் சுமித்ராவும் சேர்ந்து பேசட்டும், கொறஞ்சது விசுவநாதன் பேரன்ட்ஸாவது வரணும் இல்ல டா?" என்றான்.
"தேதி, நேரம்லாம் அப்படிப் பேசிப் பேசி முடிவு பண்ணுங்க. பிளான் ஆஃப் ஆக்ஷன் நான் சொல்றபடி தான். என் ஃபிரண்டு ஒருத்தர் போட்டோகிராஃபர் இருக்காரு, அவர் கிட்ட சொல்லி நான் கூட்டிட்டு வரேன். ஓகேவா?" என்றான் அஜய்.
சுமித்ராவுக்கு அம்மா அப்பாவைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியது. அவர்களது மனநிலை மாறியது குறித்து கொஞ்சம் மகிழ்ச்சி இருந்தாலும் அவர்களது உடல்நிலை பற்றி வருத்தமாக இருந்தது. கொஞ்ச நேரம் தனியாக அமர்ந்து யோசித்தவள் சின்னமலையிடம் மீண்டும் பேசினாள்.
"கவலப்படாத, அம்மா அப்பா இப்ப நல்லா இருக்காங்க. நான் பாத்துக்குறேன். உங்க தம்பியும் இப்ப அமைதியா இருக்காரு, வீட்டு வேலைக்கு உதவி பண்றாரு" சுமித்ராவின் தம்பியை விட சிறுவயதுக்காரன் என்றாலும் அவ்வளவு பொறுப்புடன் பேசினான் சின்னமலை. சுமித்ரா அதன் பின் தன் தம்பியிடமும் பேசினாள். அவளது தம்பியும் அப்பாவைப் போலவே ஆணாதிக்கவாதியாக வளர்த்தெடுக்கப்பட்ட ஒருவன். வீட்டில் ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போட மாட்டான். பெண்களிடம் கரிசனத்தோடு பேசுவதே தவறு என்று நினைப்பவன். அவனும் இப்போது பாசமாக பேசியதில் சுமித்ராவுக்குப் பெருமகிழ்ச்சி.
'கொரோனா வந்துவிட்டதே என்று வருத்தப்பட்டாலும் இத்தனை பேரின் குணநலன்கள் மாறி இருக்கிறதே, இது நிரந்தரமாக இருக்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்டாள். தன் மகிழ்ச்சியை ரேணுகாவிடவும் பார்கவியிடமும் உடனே பகிர்ந்து கொண்டாள். ரேணுகாவுக்கும் திருமணம் கூடி வந்திருக்கிறது என்று அறிந்து மேலும் மகிழ்ந்தவள்,
பார்கவியிடம், "அக்கா! நீங்களும் தமிழ் அண்ணனும் இல்லனா இப்படி நடந்திருக்குமா?" என்று மனதார நன்றி கூறினாள்.
"அப்புறம்... அங்க எல்லாரும் என்ன சொல்றாங்க?" என்றாள் பார்கவி. தமிழ்ச்செல்வன் கோவையிலிருந்து மகாதேவபுரத்துக்கு வந்து சேர்ந்த பின் இப்படித்தான் நடக்கிறது. பார்கவி பற்றி பேச்சு வந்தால் தமிழ்ச்செல்வன் எங்கோ ஓரிடத்தில் பார்வையை நிலைத்துப் பார்ப்பதும், பார்கவியிடம் சும்மா பேசினாலே 'அப்புறம்.. அங்க என்ன நிலவரம்?' என்று நூல் விடுவது போலப் பேசுவதும் நடந்தது. சுமித்ராவுக்கு லேசாக சந்தேகம் வந்தது. "சம்திங் ஃபிஷ்ஷி!" என்று சொல்லிக்கொண்டாள். 'அப்படித்தானே இங்கிலீஷ்ல சொல்லணும்னு நம்ம ஆத்துக்காரர், இங்கிலீஷ் வாத்தியார் சொல்லிருக்காரு?' என்று நினைத்தவள்,
"நான் என்ன சொல்றது இதுக்கு மேல, நான் சொன்னா எனக்கு வெட்கமா இருக்கு, நீங்களே தமிழ் அண்ணன் கிட்டப் பேசுங்க" என்றபடி தன் அலைபேசியைப் பக்கத்து அறையில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் கொண்டு போய்க் கொடுத்தாள், "பார்கவி அக்கா லைன்ல.." என்றபடி.
செம்பருத்திப்பூ பற்றி விசாரித்து, இ
வ்வளவு நாட்கள் கழிந்த பிறகு இப்போது தான் முதன்முறையாக பார்கவியிடம் பேசப் போகிறான். "ஹலோ!" என்றான் தமிழ்ச்செல்வன்.